யாயாவும் 9
வெண்பா அமைதியாக ஜிஷ்ணுவை சிறிதுநேரம் பார்த்து நின்றவள் பின் விடு விடு என்று கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள். அவளது கலங்கிய கண்களும் கசங்கிய வதனமும் மற்றவர்களுக்கு வெண்பா நன்றாக வாங்கி இருக்கிறாள் என்று புரிந்தது.
அடுத்து நவீனை அழைத்தவன், முதலில் விட்டான் ஒரு அறை, உதடு கிழிந்து இரத்தம் வந்தது.
“சார்.. “ என்று நவீன் ஆரம்பிக்க.. நவீன ஆங்கில கெட்ட வார்த்தையால் அவனை வருத்தெடுத்தான் ஜிஷ்ணு.
“இனி ஒரு முறை உன் கண்கள் பெண்கள் பக்கம் போச்சு.. அந்த ரெண்டு கண்ணுலேயும் அசீட் ஊத்திடுவேன். அப்புறம்..” என்றவன் அவனின் மர்ம உறுப்பை கொடூரமாக பார்த்து கையால் கத்தரிப்பது போல சைகை காட்ட, வெலவெலத்து போனான் நவீன்.
பார்க்கும் பெண்ணிடம் எல்லாம் பாயும் கெட்டவன் அல்ல நவீன். ‘வெண்பா ஒரு டைவர்ஸியாச்சே மடங்குவாளா? ட்ரை பண்ணி பார்ப்போமே’ என்று பிட் போட்டு பார்க்க.. நவீன் பார்த்த பிட்டு படத்தை கொண்டு ருத்ர தாண்டவம் ஆடி விட்டான் ஜிஷ்ணு..!
உதட்டை கிழித்தவனே அதைத் துடைக்க டிஸ்யூ பேப்பரையும் கொடுத்து அனுப்ப.. துடைத்துக் கொண்டே வெளியில் வந்தவனை மற்றவர்கள் என்னாச்சு என்று கண்களாலே விசாரிக்க.. அவனும் தன் தவறை மறைத்து வெண்பாவையும் ஜிஷ்ணுவின் மூடிய அறையையும் கண்களால் காட்டி பின் உதட்டை பிதுக்கி தலையாட்ட.. மற்றவர்களோ ஓ.. ஓஓஓ என்று தலையாட்டி சென்றனர்.
அந்த வாரம் அப்படியே சென்றது எதற்கெடுத்தாலும் இவள் வேறு வழியின்றி ஜிஷ்ணுவை தான் நாட வேண்டி இருந்தது. அவனும் சலிக்காமல் அவள் சந்தேகங்களை நிவர்த்தி செய்தான். புரியதாவற்றை சொல்லிக் கொடுத்தான் தான்.
ஆனாலும்.. அவளுக்கு ரெண்டு கொட்டு கொட்டி “இதெல்லாம் உன்னோட வேலை. எங்கிட்டே கேட்டேனா.. அப்புறம் நீ என்ன வேலை செய்வ?” என்று படுத்தி எடுத்தான் அந்த ஒரு வாரமும் அவளை..!
எதற்கு திட்டுகிறான்? எதற்கு இப்படி பாய்கிறான்? என்று புரியாமல் அவனின் இந்த தொந்தரவுகளை தாங்கிக் கொண்டாள் வெண்பா..!!
சில சமயம் இவன் திட்டும் போது.. வார்த்தைகளால் கடித்து குதறும் போது.. “போடா நீயும் ஆச்சு.. உன் வேலையும் ஆச்சு..!” என்று கையில் வைத்திருந்த பேப்பர்களை அவன் முகத்தில் விட்டெறிந்து விட்டு வீரநடை போட்டு சிங்க பெண்ணாக செல்லத்தான் ஆசை..! ஆனால் சிங்கிள் மதராக போய்விட்டாளே..!!
மகன், அவனின் நல்வாழ்க்கை.. நல்ல கல்வி.. இப்படியாக அடுத்தடுத்த தேவைகள் அவள் கண் முன்னால் வரிசைக்கட்டி நிற்க சிங்கமாய் சீறும் மனம், பின் சுண்டெலியாய் சுருங்கிக் கொள்ளும்.
நிதர்சன உலகில் பெரும்பாலான நடுத்தர மக்களின் நிலை இதுதானே. அதில் வெண்பா மட்டும் விதிவிலக்கா என்ன?
ஒவ்வொரு முறையும் தன் அறையை தள்ளிக் கொண்டு கட்டு பேப்பர்களை அள்ளி வரும் அவளிடம் மீண்டும் ஒரு மாறுதலை சொல்லி அனுப்புவான் வேண்டுமென்றே ஜிஷ்ணு..!
வெண்பாவும் ஒரு பெருமூச்சை விட்டு மீண்டும் அதில் மாறுதல் செய்ய கிளம்புவாள்.
அப்படி அவளை அவளாகவே தன்னிடம் வந்து தினமும் தரிசனம் செய்ய வைக்கும் வேலையை செவ்வனே அவன் செய்கிறான் என்று பாவம் அறியவில்லை பாவை..!
மீண்டும் மீண்டும் அவள் பேசும் போது அவள் இதழ்களின் அசைவும், கண்களின் ஜாலமும்.. அழகாக சாய்த்து அவள் தலையாட்டும் விதமும்.. விரிந்து சுருங்கி பல கதைகள் பேசும் நயனங்களும் அவனை திக்கு முக்காட வைக்கிறது என்றால்.. அவளின் பட்டு கன்னத்தை தொட்டு தொட்டு முத்தாடும் ஜிமிக்கி அவனுக்கு அதி கோபத்தை வர செய்கிறது..!
அவனிடம் புதிய பிராடக்டுக்கான சில வரைபடங்களை காட்டி அதில் செய்த மாற்றங்களையும் கூறிக்கொண்டு கையில் வைத்திருந்த பென்சிலால் காது முடியை அவள் காதோரும் ஒதுக்கிவிட.. இப்பொழுது பளிச்சென்ற சிவந்த காதும்.. அதில் தொங்கிய ஜிமிக்கியும் அவள் கன்னத்தை அப்பொழுது தொட்டு தொட்டு மீண்டதை கண்டான்.. சற்றே ரசினையாய்..! மிக எரிச்சலாய்..!
“ஓகேவா சார் ஏதும் சேஞ்சஸ் பண்ணனுமா?” என்று அவள் பொறுமை இழுத்து பிடித்து கேட்டாள்.
“எஸ்..!” என்று நிதானமாக அவளை பார்வையிட்டு சொன்னவன் “நாளைக்கு வரும்போது இந்த ஜிமிக்கிய சேஞ்ச் பண்ணிட்டு வந்துரு வெண்பா” என்றவனை அவள் அதிர்ந்து பார்க்க..
தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் அவளை கன்னத்தை தொட்டு காட்டி “நான் கிஸ் பண்ணி இடத்த எவ்வளவு தைரியம் இருந்த இந்த ஜிமிக்கி எனக்கு முன்னாடியே அத்தனை தடவை கிஸ் பண்ணனும்? ஐ ஹேட் திஸ்..! ஐ டோன்ட் லைக் திஸ்..! சோ.. நாளைக்கு சேஞ்ச் பண்ணிட்டு வந்திடு வெண்பா” என்றவனை அவள் விழி விரிய பார்க்க..
“பை வெண்பா” என்றவன், தன் கோட்டை எடுத்து தோள் மீது போட்டுக்கொண்டு இரண்டு விரலை நெற்றியில் வைத்து அவளுக்கு பை சொன்னபடி வெளியேறினான் ஜிஷ்ணு..!
“என்ன சொன்னான் இப்பொழுது?” என்று புரியவே இல்லை. மெல்ல புரிய தன் காதை தொட்டு பார்த்தாள்.
ஜிமிக்கி..! சிறியது தான்..! அவள் மனதின் நெருக்கமானவர்கள் அவளுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு. வெகு ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருக்கிறாள் அணியாமல்..!
கடந்த வாரம் அவர்கள் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் தன் மகளின் ரிசப்ஷனுக்கு அழைத்திருந்தார் அவளை.
எப்பொழுதும் காதோடு இருக்கும் பொட்டு தங்கத்தோடு போக பிடிக்காமல், சிறிய கரை வைத்த பட்டு புடவை.. சிறிய ஜிமிக்கி கழுத்தோடு ஒட்டிய ஒரு நெக்லஸ் அதற்கு கீழே டாலர் பதித்த செயின் என்று சிம்பிளாக தான் சென்றிருந்தாள்.
தனக்கு சிம்பிளாக இருந்தாலும் மகனுக்கு உடை விஷயத்தில் ஒரு குறைய வைக்க மாட்டாள். அத்தனை அழகாக அவனையும் தயார்படுத்தி அழைத்து சென்றாள். அவள் சக்திக்கு உட்பட்ட பரிசு பொருளினை கொடுத்துவிட்டு வந்திருந்தாள்.
ஆரவ் “மா இந்த தோடு பேர் என்ன?” என்று கேட்டான்.
அவள் ஜிமிக்கி என்றதும் அதை ஆசையாக தொட்டுப் பார்த்தவன் “இட்ஸ் சோ பியூட்டிஃபுல் மா. கலட்டாத இதே போட்டுக்கோ மாம்” என்று அவன் அதனை வருடி வருடி சொன்ன விதத்தில்.. அதனை பரிச்சளித்தவரே சொன்னது போல உள்ளம் உவகையில் துள்ள.. இப்போது அருகில் இல்லாத அந்நபரின் நினைவுகள் அவளை ரணமாய் கொல்ல.. மகனை ஆரத் தழுவிக் கொண்டவள், “சரிடா கண்ணா.. அஸ் யுவர் விஷ்” என்றாள் தன் கண்ணீரை மறைத்து.
மகன் அவ்வளவு ஆசையாக போட்டுக்க சொல்லி இருக்கிறான். இவன் என்னமோ வேண்டாம் என்கிறானே.. “போடா.. போ.. நான் கழட்ட மாட்டேன்” என்று வீம்பாக உரைத்தாலும்.. வீரம் பேசனாலும்.. மகன் உறங்கியதும் கண்ணாடி முன் தான் அமர்ந்து இருந்தாள், அந்த ஜிமிக்கியை தன் உருவத்தை பார்த்துக்கொண்டு..!
“ஏய் வெண்பா.. கழட்ட போறியா? வேணாமே..! அழகா இருக்கு டி..! போட்டுக்கோ” என்று அவள் தாடையை பிடித்து கொஞ்சிய நாட்கள் நினைவு வர, வேக வேகமாக கழட்டி வைத்தாள்.
எப்போதும் போல ஒற்றைக் கல் வைத்த கண்களுக்கு உறுத்தாத தோட்டை மாட்டிக் கொண்டாள்.
மறுநாள் இவளாக சென்று ஜிஷ்ணுவிடம் எதையும் பேசவில்லை. இதையும் கேட்கவில்லை. அமைதியாக மீண்டும் சிரத்தையாக் கொண்டு தன் வேலையிலேயே அவள் மூழ்கி இருந்தாள்.
இவன் படுத்திய பாட்டில் இப்பொழுதெல்லாம் இவள் ஜிஷ்ணுவின் அறைக்கு சென்றாலை அதை அலுவலகத்தில் இருக்கும் அனைத்து கண்களும் ஒட்டுமொத்தமாக அவள் பின்னால் தான் சென்றது.
இவள் சென்ற கதவை அடைத்ததும் அனைவரும் முகத்திலும் ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்பு. அத்தோடு இவள் வெளிவரும் வரை மூடிய கதவையும் அந்த அலுவலகத்தில் இருக்கும் பெரிய டிஜிட்டல் கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருக்கும் அங்கிருக்கும் அத்தனை கண்களும்..!
முதலில் அது அவளுக்கு புரியவில்லை. ஆனாலும் அனைவரும் தன்னையே குறுகுறுப்பாய் பார்ப்பது போலவே தோன்ற.. இப்பொழுதெல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவது கூட இல்லை அலுவலகத்தில்..!
‘ச்ச.. வீக்லி த்ரீ டேஸ் தான் ஆஃபிஸ் வொர்க்குனு சொன்னான். இப்போ என்னடான்னா.. ஆறு நாளும் வர சொல்றான். பாவி.. பாவி..!’ என்று மனதில் அவனை கரித்துக் கொட்டிக் கொண்டே அவள் வேலையை பார்க்க..
அப்போது அந்த அலுவலகமே திரும்பி பார்க்க.. “வெண்பா..!” என்று சத்தமாக அழைத்தான் ஜிஷ்ணு.
அவள் அதிர்ந்து எழுந்து பார்க்க..
“கம் டு மை கேபின்..!” என்று வழக்கம் போல கூறிவிட்டு அவன் செல்ல..
“ஆண்டவா.. ஆரம்பிச்சிட்டானே..!” என்று நொந்தவள் காலையில் அவள் செய்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு செல்ல, இப்பொழுது அலுவலகமே அவளை தான் பார்த்தது. அவளை மட்டும் தான் பார்த்தது..!
“எம்டி காலையிலேயே ஆரம்பிச்சிட்டார்” என்று கேலி சிரிப்பு அவர்கள் முகத்தில்.
அஸ்வத் கடந்த இரண்டு வாரமாக தொழிற்சாலையில் புதிய ப்ராடெக்ட் உற்பத்தி வேலை நடக்க, அதனை கவனிக்க சென்றிருக்கிறான். அதனால் அலுவலகத்தில் நடக்கும் இந்த பேச்சு வார்த்தைகள் அவனுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் ஜிஷ்ணுவை விட இவன் பேய் ஆட்டம் ஆடி அவர்களை எல்லாம் ஒரு வழி ஆக்கியிருப்பான்.
தன் கேபினுள் நுழைந்தவளை உற்று பார்த்தான் ஜிஷ்ணு. முடியை இன்று ஃப்ரீ ஹேரில் விட்டு இருந்தாள் வெண்பா.
அதனால் அவள் காதை காண வழியில்லை. அவளின் காலை முகமண்-ஐ ஏற்றுக் கொண்டவன், எதிரே இருந்த இருக்கையை காட்ட, நன்றி கூறி அமர்ந்தவள் காலையில் செய்த வேலையை அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல அவள் நயனங்களின் அபிநயங்களையும்.. இதழ்களின் அசைவுகளையும்.. அசைவின்றி கன்னத்தில் கை வைத்து தாங்கி அமர்ந்திருந்தான் ஜிஷ்ணு.
பெண்களின் கண்கள் பல இரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு மர்ம பெட்டகம் போல..
பல ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த ஒரு விடயம். அந்த கண்களுக்கு பின்னால் இருக்கும் இரகசியங்களை புரிந்து கொள்ள முடியாமல் ஆண்கள் பித்துப் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எவ்வளவு நிதர்சனம்..!
அந்த பால்விழிகளில் நீந்தும் கருவிழிகள்.. அப்பப்பா.. சாதாரணமானவை அல்ல..! அவை ஆண்களின் ஆன்மா திருடும் புதைகுழிகள்..!!
ஒருவேளை அந்த கருவிழிகள் தான் பெண்களில் ஆழ்மனதில் என்ன இருக்கின்றது என்று தெரிந்து கொள்ள உதவும் வழியாக இருக்குமோ?
பெண்களின் ஆழ் மனதிலும்.. கடலின் ஆழத்திலும் என்ன இருக்கின்றது என ஆராய்ச்சி செய்ய சென்ற ஆண்கள் அனைவரும் அந்த ஆழத்திலே ஆன்மாவாக அழைந்து கொண்டிருக்கின்றார்கள்.. அந்தோ பாவம்..!!
இப்படியாக தான் ஜிஷ்ணுவின் எண்ண போக்கு சென்றது. அங்கே வெண்பாவோ காலையில் தான் செய்த மாறுதல்களை எல்லாம் வெகு சிரத்தையாகக் காட்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் ஜிஷ்ணுவோ அவளின் விழிகளை கண்டது முதல் தன் எண்ண போக்கில் சுற்று சுழன்று கொண்டிருக்கிறான்..!
“சார்.. இந்த சேஞ்சஸ் ஓகே வா?” ‘பாவி.. மறுபடியும் சரி செய்து கொண்டு வர சொல்லிவிடாதடா.!’ என்று கண்களில் ஒருவித பயத்தையும் எதிர்பார்ப்பையும் தேக்கியப் படி அவள் பார்க்க இன்னும் இன்னும் அதில் அமிழ்ந்து போனவனோ..
“நீ இன்னும் காட்டவேயில்லையே வெண்பா..!” என்று ஏக்க குரலில் கேட்டான்.
“வாட் யூ மீன் சார்?” என்று அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க..
“ம்ம்ம்.. வஜ்ரமீன்..! நான் நேத்து உன்கிட்ட என்ன சொன்னேன்” என்று அவன் கேட்க..
‘நிறைய சேஞ்சஸ் சொன்னானே எதை இப்போது எதை கேட்கிறான்?’ என்று புரியாமல் அவள் விழிக்க..
அவள் கையில் இருந்த பென்சிலை வாங்கி அதனால் அவளது முடிக்கற்றைகளை அவளது காதோரம் ஒதுக்கி பார்த்தான். செக்க சிவந்த காதில் ஒற்றை கல் தோடு அவனை பார்த்து கண் சிமிட்டியது.
“குட்..! வெரி குட்..!” என்றவன், “உன்னை யாரு ஃப்ரீ ஹேர் விட சொன்னா.. அதவும் பாரு கன்னத்த தொட்டு தொட்டு வருது. ரியலீ ஐ டோண்ட் லைக்.. ஹேர் பேண்ட் போடு” என்றவனை அவள் ஆன மட்டும் முறைக்க..
“ஹேய்.. இட்ஸ் ரியலி டிஸ்டர்பிங் மீ வெண்பா..! அப்புறம் எப்படி நான் கான்சேன்ட்ரேட் பண்ணுவேன்? திரும்ப திரும்ப உன்னை திருத்தி வரத் தான் சொல்லுவேன்” என்று சிறு பிள்ளை போல அவன் பேச்சில் ஆரவ்வின் அடத்தை அவள் காண.. பேசற்று விக்கித்து போனாள் பாவை.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்..!” என்றவள் வேக வேகமாக ஓடியவளோ சென்று நின்றது ஓய்வறையில் தான்.
“டிசைன் டிசைனாக என்னை படுத்துறானே.. ஜிமிக்கி கிஸ் பண்ணுச்சாம்.. இப்போ என் ஹேர் கிஸ் பண்ணுச்சாம். எங்கிருந்து தான் யோசிப்பானோ?” என்று ஹேர்பேண்ட் எடுத்து மொத்த கூந்தலையும் இறுக்கி கட்டி கொண்டவள், அவன் முன்வந்து அமர..
“ம்ம்.. குட்.. குட்..! இப்போ தான் ப்ளஸெண்ட் ஃபீல் வருது..! இனி எதுவும் டிஸ்டர்ப் செய்யாதுனு நம்புவோம். யூ கண்ட்னியூ..!” என்றவன், அதன்பின், பொறுப்பாக அவள் சொல்வதைக் கேட்டு இம்முறை சில மாற்றங்கள் மட்டுமே செய்து அவள் செய்தவற்றை ஓகே செய்தான்.
புது பிராண்டுக்கான வடிவமைப்புகளை அப்படியே அவனது வெப்சைட்டில் அவள் கொண்டு வந்தாள். மேலும் “லாஞ்சிங் டைம் நெருங்கிட்டு இருக்கு. அதனால உனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தியா இருக்கும்” என்று ஏற்கனவே அவன் சொல்லி விட்டதால் அடிக்கடி அவனிடம் அதை கலந்து கொண்டு வரவும் போகவும்.. இடையே அவனிடம் பர்மிஷன் கேட்டுக்கொண்டு மகனை சென்று பார்த்தாள்.
“இந்த ஒரு வாரம் மட்டும் கொஞ்சம் ஈவ்னிங் பார்த்துக்கோங்க கா” சுந்தரியிடம் மாலையில் மட்டும் மகனை பார்த்துக்க சொல்லிவிட்டு வந்தாள்.
அவள் அடிக்கடி ஜிஷ்ணு அறைக்கு செல்வதும் வருவதும்.. அதன் பின் பர்மிஷன் என்கிற பெயரில் வெளியே சென்று வருவதும்.. அவ்வப்போது கம்பெனி காரில் அவள் செல்வதை கண்டு, அவளையும் ஜிஷ்ணுவையும் பற்றிய பேச்சுக்கள் அங்கே அலைமோதின..! அலைக்கற்றைகள் இல்லாமலேயே பரவாலாயின..!
ஒரு ஆணும் பெணும் பழகினாலே.. அவர்கள் உறவினர்கள் இல்லாதபட்சத்தில்.. நம் சமூகத்தின் பார்வைக்கு தப்பான உறவாகத் தான் தெரியும்..! “உள்ளே ஒன்றுமில்லாமல் புகையாது’’ என் சித்திரிப்பார்கள் சில வயிற்றெரிச்சல் நபர்கள்..!
அதில் ஜிஷ்ணுவும் வெண்பாவும் மட்டும் விதிவிலக்கா என்ன??
ஜிஷ்ணு தன் பர்சனல் விஷயங்களை இதுவரை பகிர்ந்து கொண்டதில்லை அவளிடம். ஆனால் வெண்பா அவனுக்கு மிக முக்கியமான நபர் என்று அலுவலகத்துக்கே தெரிந்தது, அவளிடம் அவன் பேசும் தோரணையில்.. நடக்கும் விதத்தில்..!
அப்புறம் என்ன? வெளிப்பார்வைக்கு நன்றாக பேசுபவர்கள்.. பின்னால் அவளின் நடத்தையை ஒழுக்கத்தையை கேவலப்படுத்தினார்கள்..!
அவளிடம் சாதாரணமாக பேசும் பேச்சுக்களில் கூட “உனக்கு என்ன மா ஆஃபிஸூக்கு வந்தாலும் வரலைன்னாலும் உனக்கு எல்லாமே வந்துடும்..” என்றாள் திவ்யா.
“புரியல..” வெண்பா விழிக்க
“அதான் நீ வொர்க் ஃப்ரம் ஹோம் பண்றத சொல்றா திவ்யா? இல்ல திவ்யா???” என்று ஆர்த்தி கேட்க, திவ்யாவும் தலையசைத்து கொள்வாள் கேலி சிரிப்போடு..!
அன்று மாலை நேரம் காஃபி குடிக்க கேஃபேட்டேரியா பக்கம் சென்றாள்.. “இவ டைவர்ஸியாம்? ஒரு பையன் வேற இருக்கானாம்..!” என்று ஒருவன் சொல்ல..
“இப்படி ஈஸியா மடிவானு தெரிஞ்சா.. வந்த அன்னைக்கே நான் பிட்டு போட்டு, இந்நேரம் கரெக்ட் பண்ணி இருப்பேன்..”
“அடேய்.. அவ பணத்துக்கு தான் மடங்குவா. உன்னை போல மாச சம்பளக்காரன் இல்ல”
“அவனும் ஆம்பிள.. நானும் ஆம்பிள தானே டா” என்று அவர்களை கடந்து செல்லும் வெண்பாவை பார்த்து மேடை ரகசியம் பேசிக் கொள்வார்கள்.
இம்மாதரி புறம் பேசுபவர்களை கண்டு அவளுக்கு பற்றி எரியும். வார்த்தைகளால் விலாச துடிப்பாள்
“ஆமா டா.. நான் அப்படி தான்..! நான் எவன் கூட படுத்தா உனக்கென்ன? இல்லை கூத்தடித்தால் தான் என்ன?” என்று கேட்க.. நாக்கு துடிக்கும்.. ஆனால் அவர்களை அலட்சியமாக கடந்து விடுவாள்.
‘நீயெல்லாம் எனக்கு ஒரு டேஸூம் இல்ல.!’ என்று செயலில் காட்டுவாள் வெண்பா. தன் வேலையில் வெகு நேரத்தி அவள்.
என் கற்பு.. என் ஒழுக்கம் பற்றி பேச புறம் பேசும் எவனுக்கும் அருகதை இல்லை என்று நிமிர்ந்து நின்று அவர்களை பார்ப்பாள்.
அவளின் நிமிர்வை கூட “அவ திமிர பாரு.. தப்பு செஞ்சாலும் இப்படி திரிய ஒரு தைரியம் வேணும்..” என்று அதற்கும் பேசுபவர்கள் தான் அதிகம்.
“நான் பழைய வெண்பா இல்லை..! உங்கள் கற்பனையை என்னில் புகுத்தி என்னை இழிவுபப்டுத்தி பேசினால்.. விடாமல் கண்ணீரில் கரைந்து என்னை தொலைக்க.. நான் ஆரவ்வின் அம்மா..! திடமானவள்.. நிமிரனாவள்..!” என்று அமைதியாய் அனைத்தையும் இப்போது கடக்க பழகி கொண்டாள்.
ஆனாலும் இன்று அவர்களின் வார்த்தைகள் அவ்வளவு வலித்தது..!
ஒருபெண் தனியாக வாழ்ந்தால்.. சுயமாக சம்பாதித்தால்.. வேலை செய்யும் இடத்தில் ஆண்களோடு பேசினால்.. சுயமரியாதையாக நின்றால்.. அவளுக்கு இந்த மட்டரக மனம் படைத்தவர்கள் வைக்கும் பெயர் ‘ஒழுக்கம் கெட்டவள்..! கற்பு நெறி தவறியவள்..!’
நேராக பேசிய ஆண்களின் முன்னால் வந்து அவள் அமர.. முதுகு பின் பேசியவர்களுக்கு முகத்திற்கு முன்னால் பேச பயம்..!
“என்ன ராகவன் சார்.. உங்க வொஃய்பும் வொர்க்கிங் விமன் தானே?” என்று ஒருத்தனை கேட்டவள், மற்றவனை பார்த்து “உங்க வொய்ப்ப சூப்பர் பஜாருல பார்த்தேன் லாஸ்ட் வீக். எவ்வரி வீக் அவங்க அங்க வருவாங்க போல..” என்றதும் இருவரும் ஒருவரை பார்த்து எச்சில் விழுங்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
இருவரையும் மனதில் அர்ச்சித்து விட்டு வேலை பாக்கியை முடித்துக் கொண்டு.. அவள் ஜிஷ்ணு அறையில் எட்டி பார்க்க.. அவனோ ஃபாரின் க்ளைண்ட்ஸோடு பேசிக் கொண்டிருந்தவன் அவளைக் கண்டு கையசைத்து போக சொன்னான்.
“அப்பாடா.. விட்டுட்டான் மகராசன்..!” அவள் வீட்டுக்கு செல்லும்போதே ஏழு மணிக்கு மேலானது.
“சுந்தரி கா.. சுந்தரி கா” என்று அவள் எதிரில் வீட்டில் நுழைய,
“அவ வெளியில் போய் இருக்கா..!” என்றப்படி கதவை தாழிட்டான் கோபாலன் கோணலான சிரிப்போடு..!
வெண்பாவுக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது..!
தொடரும்..
👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis