யாயாவும் 10
“ஆரவ் தூங்குறான் பாத்துக்கோங்க நான் பால் பாக்கெட் மட்டும் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று பத்து தடவை கடைக்கு போக சொல்லியும் போகாத கணவனை கண்டு எரிச்சல் அடைந்த சுந்தரி தானாகவே கடைக்கு செல்ல.. இந்த தருணத்திற்காக தானே காத்திருந்தான் கோபாலும்.
“சரி சரி சீக்கிரம் போயிட்டு வா.. எனக்கு வேலை இருக்கு.. இவன் எந்திரிச்சு நீ இல்லைன்னு கத்தி வைக்க போறான்… சீக்கிரம் வந்துரு” என்று பேருக்கு சொல்லி வைத்தான் கோபால்.
அவர்கள் அப்பார்ட்மெண்ட்டை தாண்டி வெளியே செல்லவே ஒரு கிலோமீட்டர் ஆகும். வெளியில் சென்று பால் வாங்கி வர.. அதிலும் சற்று கனத்த சரீரம் கொண்ட சுந்தரி சென்றவர இன்னும் நேரமாகும் என்று கணக்கிட்டு தான் வீட்டில் இருந்த பால் பாக்கெட்டை இவன் ஒளித்து வைத்ததே..!
அவன் கணித்தது போல அனைத்தும் நடக்க.. அத்தனை சந்தோஷம். இப்போது பொறிக்குள் எலியாய் வந்து மாட்டிக் கொண்டாள் வெண்பா.
தனக்கு பின்னே கதவு அடைக்கும் சத்தத்தில் அவனைப் பார்த்து திடுக்கிட்டவள், அதை முகத்தில் காட்டாமல் “ஆரவ் எங்க?” என்றவள், “சுந்தரி அக்கா.. சுந்தரி அக்கா..” என்று இவள் மீண்டும் சத்தமாக அழைக்க..
“சுந்தரி வெளியில போயிருக்கா.. வர ரொம்ப நேரமாகும்..!” என்றவன் மெல்ல அவளை நெருங்கி வந்தான்.
வெண்பாவிற்கு வெளியில் யார் எத்தனை செய்தாலும் இப்படி தனியாக மாட்டிக் கொண்ட அனுபவம் எல்லாம் இல்லை. அவளது உடல் உதறியது. முதுகுத் தண்டு சில்லிட்டத் தொடங்கியது.
“நீ செய்றது கொஞ்சம் கூட நல்லா.. ஆரவ் எங்கனு சொல்லு..?” என்று அவள் தன் பயத்தை வெளி காட்டாமல் கேட்க..
தன் கையில் வைத்திருந்த சாவியை அவள் முன் ஆட்டியவன் “ஆரவ் ரூம்ல தான் தூங்குறான். அதான் அவனை தொந்தரவு செய்யக்கூடாதுனு பூட்டிட்டேன்” என்றதும் குழந்தையை வைத்து தன்னை மடக்கும் இந்த ஈன பிறவியை கண்டு அருவருத்து போனது வெண்பாவுக்கு.
வெறும் உடல் தேவைக்காக காம இச்சைக்காக என்னவெல்லாம் செய்கிறான் அதிலும் தங்கம் என மனைவி இருக்க..
“வேணாம் கோபால்..! என்ன பத்தி உனக்கு முழுசா தெரியாது.. வேணாம்..!” என்று அவள் மிரட்ட..
“அது தெரிஞ்சுக்க தானே நானும் கேட்கிறேன் வெண்பா.. முழுசா..” என்று அவனும் அவளை மேலிருந்து கீழ் வரை கண்களாலே நிர்வாணப்படுத்தி உள்ளே அவளை அறிய அத்தனை தவித்தான்.
“வேணாம் கோபால்.. சுந்தரி கா மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். அவங்களுக்காக தான் நான் பார்க்கிறேன். இல்ல..!” என்று வீட்டை நோட்டமிட்டாள். கையில் ஏதாவது கிடைத்தால் அதாலே அடித்து அவனை இன்று ஒரு வழியாக்கிவிடும் நினைப்பில்..
அவனோ அவளை நெருங்கிக் கொண்டே தன் உடலில் இருந்து ஒவ்வொரு ஆடைகளாக அவன் கழட்டி போட.. அவளுக்கு மொத்தமாய் அருவுறுத்து போனது ஆண்களின் இந்த ஈன குணம்.
வெண்பாவை அடித்து போட்டு அல்லது கட்டிப்போட்டு துன்புறுத்தோவோ கோபால் எண்ணம் கொள்ளவில்லை. அந்த அளவுக்கு அவன் உடலில் வலுவும் கிடையாது.
அதிலும் ‘அடித்து கிடித்து அவளுக்கு ஏதாவது ஒன்றாகி அதன் மூலம் போலீஸ் கேஸ் என்றானால்..??’ அந்த பயமும் கூட அவனுக்கு..!
அதனால் தான் தன் செய்கையாலும் பேச்சாலுமே அவளை வளைத்து போட முடிவு செய்து, இத்தனை நாட்களாக காய்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.
அவனின் அத்தனை நடவடிக்கைகளையும் கண்டாலும் கண்களாலேயே அவனை எரித்துவிட்டு ‘தள்ளியே நில்.!’ என்று எச்சரித்து நடக்கும் வெண்பாவை கண்டு அவனுக்கு வெறி ஏறியது.
“எப்படி ஒருத்தி இத்தனை ஆண்டுகளாக கணவனும் அருகில் இல்லாமல் தன் உணர்வுகளுக்கு வடிகாலின்றி இருக்க முடியும்? இல்லை கண்டிப்பாக ஏதாவது ஒரு தொடுப்பு வச்சிருப்பா.. அப்படி எவனையும் வச்சிருக்கிறவ ஏன் என்னையும் வைச்சிக்க கூடாது?” என்று மட்டரகமான புத்தி.
அப்படி எதுவுமே இல்லை என்றாலும் இத்தனை அழகையும் இப்படி வீணாக்குகிறாளே என்று ஆதங்கம் அவனுக்கு..!
“புரிஞ்சுக்கோ வெண்பா.. நீ எவ்வளவு அழகு தெரியுமா? இத்தனை அழகும் வீணா போகுது. இந்த உலகத்துல பூத்த எந்த மலரும் இறைவனுக்கு அர்ச்சிக்க படணும் இல்ல ஏதாவது ஒரு உபயோகத்துக்காவது இருக்கணும். இப்படி வீணா மலர்ந்து வாடி போவதுல என்ன லாபம் சொல்லு?” என்றவன் இப்பொழுது வெறும் பாக்ஸரோடு நின்று இருந்தான்.
அவனின் செய்கையும் கூடவே அவனின் பேச்சும் ஏதோ அசிங்கத்தை மிதித்து உணர்வை தந்தது வெண்பாவிற்கு.
இதில் காலையிலிருந்து ஜிஷ்ணு படுத்தின பாட்டால் அவள் உணவு கூட எடுக்கவில்லை. மகன் வந்திருப்பேனே தன்னை தேடி இருப்பானே என்று தவிப்போடு ஓடி வந்திருந்தாள்.
‘இந்த கிறுக்கு புடிச்சவனும் இப்படி கேவலமான செயலை செய்கிறானே? இவனுக்கு பேசி எல்லாம் புரிய வைக்க முடியாது. இவனை எல்லாம்..’ என்று அருகில் இருந்த அவனின் லேப்டாப்பை கையகப்படுத்தியவள்,
“ஒழுங்கு மரியாதையா கதவை திறந்து விடு கோபால்.. இல்ல நான் சத்தம் போட்டனா என்ன ஆகும் தெரியுமா? இதாலே உன் மண்டை அடிச்சு ஒடச்சிடுவேன்.!” என்று பயமுறுத்தினாள்.
“நீ சத்தம் போட்டாலும் யாரும் வர மாட்டாங்க..! இந்த ப்ளோர்ல இப்ப நம்ம ரெண்டு வீட்ல மட்டும் தான் ஆளுங்க இருக்கோம். அப்படியே என் பொண்டாட்டி வந்தா கூட நீ தான் என்னை கூப்பிட்டேன்னு சொல்வேன். என்னை முழுசா நம்புவா என் பொண்டாட்டி..” என்றதும் கையில் இருந்து மடிக்கணினியை கொஞ்சம் கூட யோசிக்காமல் கீழே போட்டு உடைத்தாள்.
“ஏய்.. ஏய்.. அது எவ்வளவு காசு தெரியுமாடி?” என்று அவன் கத்திக்கொண்டே வர..
மடிக்கணினியின் உடைந்த பாகத்தில் இருந்து ஒன்றை எடுத்து அவன் முன்னே நீட்டியவள் “நான் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் ஒரே சீவா சீவிடுவேன்..! நான் திருநெல்வேலி சீமைக்காரி.. ஒழுங்கு மரியாதையா என் பையன் இருக்கிற ரூம் சாவிய கொடு” என்று ரௌத்திரமாய் அவள் கையை நீட்ட…
அவளின் ரௌத்திரத்தை கண்டு அவனுக்கு பயம் பிடித்தது. ஆனாலும் அவளின் அழகு வனப்பு இளமை செழுமைகள் அவன் கண் முன்னே வர..
‘இவ்வளவுக்கும் மயங்க மாட்டேங்குறாளே..?’ யோசித்தவன் இப்பொழுது பசப்பு வார்த்தைகளை பேசலானான்.
“கொஞ்சம் யோசி வெண்பா.. நீ இவ்ளோ கஷ்டப்படணும்னு அவசியமே இல்லை எனக்கு ஊர்ல நிறைய சொத்து இருக்கு. இங்க வாங்குற நான் சம்பளம் எல்லாம் சேவிங்க்ஸ் தான் போகுது. புள்ளகுட்டியும் கிடையாது. நீ என்னை அனுசரிச்சு போ.. ஆரவ்வ என் பிள்ளையை நான் பார்த்துக்கிறேன். எனக்கென பிள்ளையை குட்டியா? மிச்சம் இருக்குற நாளையும் சந்தோசமாக நீ வீட்டில் இருந்தே உன் பிள்ளையோட என்னோட கழிக்கலாம்.. களிக்கலாம்..! என்ன சொல்ற?” என்றவன்,
“ஒருவேளை சுந்தரிக்கு நேரா நாம எப்படி ஒண்ணா இருக்கிறதுனு யோசிக்கிறியா? இங்க இருக்க பிடிக்கலைன்னா.. இதைவிட டாப் லெக்ஸரி அபார்ட்மெண்ட்ல உனக்கு வீடு வாங்கி தரேன்.. அங்கே சுகமாக சௌகரியமா இருக்கலாம்” என்றவனின் வார்த்தைகளை கண்டு கண்ணை மூடி தனது கோபத்தை கட்டுப்படுத்தியவள்,
அங்குள்ள பொருட்களை எல்லாம் கீழே போட்டு உடைத்து “ஏய் நாயே.. வாய மூடுடா..! என்னடா பெரிய பணம்? இந்த பணத்தை எல்லாம் வேணாம்னு தூக்கி போட்டுட்டு வந்த நான் தெரியுமா? ஒழுங்கு மரியாதையா சாவி கொடுக்க போறியா இல்லையா?” என்று அவள் உக்கிரமாய் நிற்க..
ஒரு மனது அவனோடு தைரியமாக எதிர்த்து நின்றாலும்.. மற்றொரு மனதோ உள்ளுக்குள் பூட்டி அறையில் மகன் என்ன பாடு படுகிறானோ? என்று தவியாய் தவித்தது.
‘அதைவிட இப்படி கேவலமானவன் நடத்தையை சுந்தரி அக்கா கண்டால் என்ன சொல்வார்கள்? ஒரு வேலை என் மீது சந்தேகப்பட்டார் பட்டால்.. பட்டால் பட்டு கொள்ளட்டும்..! இப்படி ஒரு கேவலமான ஜந்துவ நம்புனா அது அவங்க தலையெழுத்து..!’ என்று எண்ணங்கள் ஒருபுறமும் ஓடியது.
“சாவிய கொடுடா.. நாதாரி பயலே..!” என்று அவள் கத்த..
சட்டென்று தன் பாக்ஸரையும் கழட்டி அவள் முன் நிர்வாணமாக நின்றான் கோபால்.
அவளோ அதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டவள் இதயமோ அத்தனை துடித்தது. எகிறி வந்திடுமோ என்ற நிலை..!
“ச்சீ த்தூ.. நீ எல்லாம் மனுசனா? உன்னை நம்பி ஒரு பொண்டாட்டி இருக்காளே.. அடுத்த பொண்ணு முன்னால இப்படி நிக்க உனக்கு வெக்கமா இல்ல? நீ எல்லாம் நல்ல குடும்பத்துல தான் பொறந்தவனா?” என்று அவள் ஆசூசையாய் கத்த..
அவனோ “ஆசை மோகம் தாபம் எல்லாம் செக்ஸல தான் முடியுது வெண்பா. அதனை அடக்கி வைத்து என்ன செய்ய போற? வா.. வா டி..!” என்று அவன் நெருங்க கண்களை மூடி மூச்சை ஆழ்ந்து விட்டவள், அவனை திரும்பி தீர்க்கமாக பார்த்தாள்.
“பாரு.. நல்லா பாரு.. நான் உனக்காகத்தான்..!” எனும்படி அவன் மாடல் போல அவள் முன் நடந்து வர,
“உனக்கு ஏன் இத்தனை வருஷமா பிள்ளை இல்லைன்னு எனக்கு இப்பதான் தெரியுது..!” என்று அவனை பார்த்து அலட்சியமாக சிரித்தாள் வெண்பா.
அவனின் மர்ம உறுப்பை காட்டி “நல்ல டாக்டர் செக்கப் அப் போ.. இல்லைன்னா உன் பொண்டாட்டி உன்னை விட நல்ல ஆம்பளைய வெளியே எங்கயாவது தேட போக போறா?” என்றதும் அவனுக்கு செருப்பால் அடித்தது போல இருக்க..
“வெண்பா..!!” என்று சீறினான்.
“ம்மா.. ம்மமா..” என்று கதவுக்கு அந்தப்புறம் ஆரவ்வின் குரல் கேட்க..
இப்பொழுது அலட்சியமாக அவன் கையில் இருந்து சாவிய பிடுங்கி கதவை திறந்து மகனை அள்ளிக்கொண்டவள், வேகமாக தன் வீட்டிற்கு சென்று அதைவிட வேகமாக கதவை அடைத்து கதவிலேயே மடிந்து அமர்ந்து கதறி அழுதாள்.
“வெண்பா…!” என்று ஆக்ரோஷமாக கத்தியவன், அவள் பிள்ளையை தூக்கிக் கொண்டு சென்றதும்.. ஆத்திரம் தீராமல் வெளிவந்த கோபால், தான் நின்ற நிலையை மறந்து வேகமாக அவள் வீட்டு கதவு முன்னால் நின்றான்.
“ஏய்.. கதவை திறடி.. ஏன் தே**** யார பார்த்து என்ன வார்த்தை டி சொன்ன?” அவளே இவளே என்று அசிங்கமாக திட்டி கதவை வேகமாக தட்டிக் கொண்டு இருந்தான்.. விடாமல்..!
அந்நேரம் தான் சுந்தரி வந்தாள் “இங்கே தான் சார்.. எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் வெண்பாவோடது” என்றபடி ஜிஷ்ணுவினை அழைத்து வந்திருக்க..
இருவருமே கோபாலின் கோலத்தையும் அவன் வெண்பாவின் வீட்டை தட்டுவதையும் கண்டு திகைத்தனர்..!
கோபால் அவன் சுயநினைவிலேயே இல்லை. எப்படி அவள் என்னை அப்படி சொல்லலாம்? ஒரு பொம்பள அதுவும் புருஷன் இல்லாமல் தனியா இருக்கிறவ.. என்னை பார்த்து என்ன சொல்லிட்டா? அவளை என்ன பண்றேன் பாரு.. ஏய்.. கதவை திறடி என்னை என்ன சொன்ன நீனு? உன்னை என்ன பண்றேன் டி..! இனி உன்னை நான் விடுறதா இல்ல.. உன்ன தூக்கிட்டு போயாது வச்சு நான் செய்யல.. நான் ஆம்பளை இல்லடி…! என்னை ஆம்பள இல்லைன்னு சொன்ன இல்ல.. அத உனகிட்டேயே நிரூபிக்கிறேன் டி” என்று அவன் கத்திக் கொண்டிருக்க சுந்தரிக்கு தன் முன்னால் நடப்பதை நம்ப முடியாமல் தள்ளாடி சுவற்றை பிடித்துக் கொண்டு நின்றாள்.
சுத்தமாக கணவனிடம் இப்படியொரு மறுபக்கத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வப்போது தன் கணவனை தன் வீட்டுக்கு ஏன் வெண்பா வர வேண்டாம் என்று சொன்னாள் என்பது எப்பொழுது அவளுக்கு புரிவதாய்..!
கோபாலு தன்னிலை மறந்தவன் தன்னை சுற்றி இருப்பதை மட்டும் நினைக்கவா போகிறான்? அவனுக்கு அடங்கா ஆத்திரம்..!
“என்னை பார்த்து ஒரு பொட்டச்சி இப்படி பேசிட்டாளே.!” என்பதுதான்.
இவன் பேசிய வார்த்தைகள் எதுவுமே ஜிஷ்ணுவுக்கு புரியவில்லை. ஆனாலும் அவன் நின்ற நிலை.. வெண்பாவின் வீட்டை கதவை விடாமல் தட்டுவது.. இவை எல்லாம் வெண்பாவை இவன் ஏதோ செய்ய முயன்று இருக்கிறான். அவள் தப்பித்து உள்ளே சென்று விட்டாள் போல என்பது மட்டும் புரிய..
அடுத்த நிமிடம் பாய்ந்து வந்தவன் அவன் கையை பற்றி பின்னால் முறுக்கி விட்டான் ஒரு அறை அவன் செவிலில்.
ஜிஷ்ணுவின் அறையில் சுருண்டு விழுந்தவன் தலையை உலுக்கிக்கொண்ட மெல்ல பார்க்க அங்கே இரண்டு மூன்றாய் தெரிந்தான் ஜிஷ்ணு.
மீண்டும் கண்களை கசிக்கி கொண்டு ஆவேசமாக எழுந்து நின்றவன், “யாருடா நீ? ஏன்டா என்ன வந்து அடிக்கிற? ஓ அவளுக்கு நீ சப்போர்ட்டா.. அப்ப நீதான் அவளை வச்சிருக்கியா? அதுதான் அந்த சிறுக்கி என்ன வேண்டான்னு சொன்னாளா? என்ன பார்த்து ஆம்பளை இல்லன்னு வேற சொன்னா.. நீ ஆம்பளையோ?” என்று கண்டபடி பேச.. அவன் பேசிய எதுவுமே ஜிஷ்ணுவுக்கு விளங்கவில்லை. ஆனால் அதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவன் மனைவியோ மடங்கி அமர்ந்தவள் கண்களில் அத்தனை கண்ணீர்.
கோபாலுக்கோ எதிரே இருக்கும் ஜிஷ்ணு அந்த வெண்பாவிடம் தொடர்பில் இருக்கிறவன் போல.. கண்டவனெல்லாம் இப்படி அவளை தொட விட்டவள், என்னை தொடவிட மாட்டேங்கிறாளே?’ அத்தனை ஒத்துக்க அவனால் முடியவில்லை.
“இல்லை.. எனக்கு அவள் வேண்டும் எப்படியாவது அவள் வேண்டும்..! என்னை பார்த்து ஆம்பளையா நீனு கேட்டவளை நான் ஆம்பள தான்டினு அவளிடம் நிரூபித்துக் காட்ட வேண்டும்..!” என்று ஆங்காரம் வெறியேற்ற..
“ஏ வெண்பா கதவ தொறடி.. உன் கள்ள புருஷன் வந்து இருக்கான். இவன தான் இத்தனை நாளா நீ வைச்சிருந்தியா? இவனுக்காக தான் என்னை வேணாம்னு சொன்னீயா? பணத்தை பார்த்தால் தான் நீ மயங்குவியோ? படுக்க வருவியோ? என்கிட்ட நிறைய பணம் இருக்கு டி வா.. பணத்தாலேயை கட்டில் விரிக்கிறேன்.. பண குவியலால உன் உடம்ப அபிஷேகம் பண்றேன். வெளியில வாடி.. கதவத் தொறடி..!” என்று அவன் கதவை அத்தனை ஆவேசமாக தட்ட உள்ளுக்குள் ஆரவ்வோ அன்னையின் கழுத்தை இறுக்க கட்டிக்கொண்டு பயந்து வீறிட்டான்.
ஏற்கனவே அன்னையின் அழுகை அதுவும் தன்னை கட்டிக்கொண்டு எதற்கு அழுகிறாள் என்று தெரியாமல் தூக்க கலக்கத்தில் இருந்தவன், வெளியில் கேட்ட சத்தங்கள் எல்லாம் அவனை இன்னும் பயமுறுத்தி இருந்தது.
சிறு பாலகன் தானே? அவனால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது கதவு படார் படார் என்று தட்டப்பட அதை அண்டை கொடுத்து அமர்ந்திருக்கும் அன்னை அழுது கரைய.. இவனோ பயத்தில் வீறிட்டான்.
ஆரவ்வின் சத்தத்தை கேட்டு ஜிஷ்ணுவுக்கு இன்னும் ரௌத்திரம் பொங்க.. எப்பொழுது கோபாலின் கையைப் பிடித்து முறுக்கவெல்லாம் இல்லை. தன் பலத்தைக் கொண்டு ஒரே உடை தான்..!
அவன் ஆவென்று கத்தி கதற.. அவன் சத்தத்தில் திரும்பி பார்த்த அவள் மனைவி சுந்தரியின் கண்களிலோ கண்ணீர் சுத்தமாக இல்லை. வெறுமை குடிக் கொண்டிருக்க வெறுத்த பார்வையுடன் கணவன் அடி வாங்குவதை பார்த்து இருந்தாள்.
அடித்த உதைத்தவன் கீழே காரில் இருக்கும் தன் பவுன்சிலர்களை வர செய்து கூடவே செக்யூரிட்டிகளையும் வரவழைத்தான்.
ஓடிவந்த போன்ஸ்ர்களும் கீழிருந்த அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிகளும் கோபால் இருந்த நிலையில் அவனை ஜிஷ்ணு அடித்து உதைப்பதையும்.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மௌனியாக அமர்ந்திருக்கும் சுந்தரியும் கண்டு என்னை ஏது என்று குழம்பினர்.
ஜிஷ்ணு சிசிடிவி கேமராவை சுட்டிக்காட்ட அதற்குள் அந்த விஷயம் காட்டுத் தீயாக அந்த அப்பார்ட்மெண்ட் முழுவதும் பரவியது.
அதற்குள் அப்பார்ட்மெண்ட் செகரட்டரி இன்னும் சில நிர்வாகிகள் ஓடிவந்து என்னவென்று கேட்க.. சுந்தரி அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.
ஆனால் கோபால் தான் துள்ளிக் கொண்டு “இவன் வெண்பாவை வச்சிருக்கான்.. இவங்க ரெண்டு பேருக்கு இடையில் தப்பான உறவு.. களள்த்தொடர்பு இருக்கு. அதை நான் கண்டுபிடித்து கேட்டேன். என்னை அடிக்க வந்துட்டான்” என்று மாற்றி பேசினான்.
அதற்குள் ஜிஷ்ணுவின் பவுன்சரில் ஒருவன் சிசிடி ஃபுட்டேஜ் மிரட்டியை பென் டிரைவில் காபி செய்து வந்திருந்தவன் ஜிஷ்ணுவிடம் கொடுக்க அதை தன் போனில் போட்டு காட்டினான் அனைவரிடமும்..!
முதலில் அவன் வீட்டுக்கு வெண்பா சென்றதும் பின் கதவு சாற்றப்பட்டது. சிறிது நேரத்தில் வெண்பா குழந்தைகளோடு ஓடிவந்து தன் வீட்டு கதவை அடைத்துக் கொள்ள.. பின்னால் நிர்வாணமாக ஓடி வந்த கோபால், அவள் வீட்டை தட்டுவது அதன் பின்னே சுந்தரியும் ஜிஷ்ணுவும் அங்கே வருவது எல்லாம் தெரிய.. இப்பொழுது சுந்தரி அவர்கள் பார்க்க.. அவளோ அதே வெறுத்திப் பார்வையோடு அமர்ந்திருந்தாள் எதுவும் பேசாமல்..!
“இவனை மொதல்ல வீட்டை காலி பண்ண சொல்லுங்க..!” என்று நிர்வாகம் பேச..
“என்னது காலி பண்ண சொல்லனுமா? ஒரு பொண்ண ஹாரேஸ்மெண்ட் பண்ணி இருக்கான். இப்படி பப்ளிக் நியூஸ் கொடுத்திருக்கான். செ***** டார்ச்சர் பண்ணி இருக்கான். இவனை நீங்க வெறும் அபார்ட்மெண்ட் மட்டும் காலி பண்ண சொல்லுவீங்களா? நோ போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தேயாக வேண்டும்..!” என்றான் ஆத்திரம் குறையாமல்..!
அவர்களோ “சார் நீங்க யாருன்னு தெரியாது. அதுவுமில்லாமல் இது போலீஸ் கேஸ் ஆச்சுன்னா எங்க அப்பார்ட்மெண்ட் பேரும் இதுல கெட்டுப் போகும். கூடவே கணவன் இல்லாத பொண்ணு.. இரண்டு பேருக்கும் முன்னாடியே என்ன உறவு இருந்ததுன்னு யாராவது கேட்டா நாங்க என்ன சார் பதில் சொல்ல முடியும்? எங்களுக்கு உங்கள பத்தி எதுவுமே தெரியாது” என்று தங்கள் அபார்ட்மெண்ட்டுக்கு எந்த கெட்ட பேரும் வந்து விடக்கூடாது என்று தன் கண் முன்னால் நடக்கும் அநியாயத்தை கூட தட்டி கேட்க பயப்படும் அவர்களை அற்ப புழுவாக பார்த்தான் ஜிஷ்ணு.
“நீங்க எல்லாம் மனுஷங்களா? உங்க வீட்லயும் பொம்பளைங்க இருக்காங்க தானே? பொம்பள புள்ள உங்க வீட்லயும் வளர்றாங்க தானே? இப்படி ஒருத்தன் பப்ளிக்கா செய்கிறான்.. அவனை கொஞ்சம் கூட தண்டிக்காம ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்குறீங்க? நாளைக்கு இதே உங்க வீட்ல நடந்தா என்ன பண்ணுவீங்க? அப்பவும் இதே போல தான் வேடிக்க பார்ப்பீங்களா? உங்களுக்கெல்லாம் எதுக்குடா மீசை.. எதுக்கு ஆம்பளைன்னு பேண்ட் ஷர்ட் போட்டுகிட்டு சுத்துறீங்க?” என்று லெஃப்ட் அண்ட் ரேட் வாங்கினான். அதற்குள் சத்தம் கேட்டு மெல்ல கதவை திறந்து வந்தாள் வெண்பா.
அந்த அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகளோ “வெண்பா இங்க பாரு? இவரு யாரு என்னனு தெரியல.. போலீஸ் கம்ப்ளைன்ட் அது இது என்கிறாரு.. உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனைனா நீங்க தான் பாத்துக்கணும். இதுக்கு நாங்க எங்க சைடுல இருந்து எதுவும் பண்ண முடியாது” என்று அவர் பேச..
இது எல்லாம் கடந்து வந்தவள் தானே. விரக்தி சிரிப்போடு மெல்ல ஜிஷ்ணுவின் பக்கம் திரும்பினாள்.
அவளின் கழுத்தை இன்னும் விடாமல் கட்டிக் கொண்டிருந்தான் ஆரவ். அழுகை குறைந்து விசும்பல் இருந்தது.
“இவர் என் முதலாளி சார்” என்றதும் எப்பொழுது கொக்கரித்து சிரித்தான் கோபால்.
“கேட்டுக்கிட்டிங்களா? முதலாளியாம்? க்ஷ முதலாளி எந்த ஊர்ல தொழிலாளிய இப்படி தேடி வருவாரு.. அப்போ அங்க தேடல் இருக்குது தான் அர்த்தம்?” என்று அத்தனை அடி வாங்கியும் அவன் வாய் அடங்குவதாகவே இல்லை.
“நான் போலீஸ் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கல சார்..! நீங்க என்ன ஆக்சன் அவர் மேல எடுத்துக்கணுமோ தனிய எடுத்துக்கோங்க..” என்றதும் “வெண்பா.. ஆர் யூ மேட்?” என்று ஜிஷ்ணு பல்லை கடிக்க..
“ப்ளீஸ் சார்.. என்னால இதுக்கு மேல எல்லாம் கோர்ட்டு கேஸூனு அலைய முடியாது சார். அங்க வந்து அவனுங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது..! என்னவெல்லாம் கேட்பானுங்க தெரியுமா? ஒரு பொண்ணு தனியா இருந்தா அவள் வேசி ஆக்குவதற்கு எல்லாம் முயற்சி எல்லாரும் பண்ணும் போது.. இல்ல நான் கற்புடையவ எவ்வளவு நாள் கத்தி கத்தி என்னால தனியா போராட முடியும்? ரொம்ப ஓஞ்சி போயிட்டேன் சார்..! எனக்கு என் பிள்ளை அவனோட லைஃப் ரொம்ப முக்கியம் சார்..!” என்று கேவி கேவி அழுகையோடு அவள் பேச..
சட்டென்று ஆரவ்வை தூக்கி கொண்டான் ஜிஷ்ணு.
முதலில் அன்னையிடமிருந்து யாரோ தன்னை பிடுங்குகிறார்களே என்று வீறிட்டு அழுதவன் ஜிஷ்ணுவை கண்டதும் உதட்டு பிதுக்கி இன்னும் அவனை வாகாக் கட்டிக் கொண்டு அழுக..
“ஒன்னுமில்ல டா கண்ணா.. ஒன்னுமில்ல..! நான் இருக்கேன்ல..! ஆல் ஆஸ் வெல்..!” என்ற முதுகை தடவி ஆறுதல் படுத்தியவன் “நீ வா..!” என்று வெண்பாவின் கை பிடிக்க..
“நான் வரல சார்..! எதா இருந்தாலும் இங்க இருந்தே நான் போராடுறேன். இந்த பரந்து விரிந்த உலகத்துல இவனை போல் எத்தனையோ பேர் இருக்கானுங்க.. எங்கேயும் இதே பேச்சு தான்..! சோ.. ப்ளீஸ் இதோட விட்டுருங்க..” என்று கை கூப்பியவள், காலையிலிருந்து சாப்பிடாதது இத்தனை மன உளைச்சல் அனைத்தும் சேர்ந்து கொள்ள மயங்கி சரிந்தாள்.
“கைஸ்..!” என்று கத்தி அழைத்து அவனது பவுன்சர்களிடம் ஆர்வ்வை ஒப்படைத்துவிட்டு அவளை வாரி அள்ளிக் கொண்டவன், செல்லும் முன் கோபாலை உக்கிரமாக பார்த்து சென்றான்.
அவனின் பார்வையை படித்த அவன் பவுன்சர்கள் “புரிஞ்சுது பாஸ்” என்றனர்.
தொடரும்..
Super episode 👌👌
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis