அத்தியாயம் 1
சென்னை மாநகரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர் ரக பங்களா அது எப்போதும் போல் இல்லாமல் இன்று பளபளப்பாக ஜோலிப்புடன் காணப்பட்டது 20-30 பேர் சேர்ந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தனர்.
தமிழ்நாட்டின் மிக முக்கிய தொழிலதிபரான ரகுநந்தனின் ஒற்றை வாரிசான அனுநந்தனின் பதினெட்டாவது பிறந்ததாள் இன்று
லண்டனில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்க்காக சேர்ந்திருக்கிறாள் முதல் முறையாக இன்று தான் இந்தியா வருகிறாள்.
அதுமட்டுமல்ல ரகுநந்தன் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் அதிபதியாக தன் ஒற்றை மகளை இன்று தான் அறிவிக்க போகிறார் அதனால் பாதுக்காப்பு ஏற்பாடுகளும் பலமாக
இருந்தது உலகில் உள்ள அத்தனை கோடீஸ்வரர்களும் இன்று அவரின் பங்களாவுக்கு விஜயம் செய்ய விருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலமாக இருந்தது நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது
முதலமைச்சரும் இன்று அங்கே வரவிருப்பதால் கொஞ்சம் கெடுபிடியாக தான் இருந்தது.
இன்னொரு பக்கம் விழாவில் சமைப்பதற்க்காக தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இருந்தும் வந்த புகழ் பெற்ற சமையல்காரர்கள் விருந்தினர்களுக்கு ஏற்ப சமைத்து கொண்டு இருந்தனர்.
மற்றொரு பக்கம் இசை கச்சேரிகள் மேள தாங்களும் முழங்கி கொண்டு இருந்தன
வரிசையாக ஒவ்வொரு விஐபியின் கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
விழாவுக்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் அனுநந்தன் இன்று எப்படி கிளம்பி வர போகிறாள் என்று ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர்.
ரகுநந்தன் மதுரை பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று தமிழ்நாட்டின் முதல் பத்து முக்கிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார் அவரின் மனைவி ஹேமா பத்து வருடத்துக்கு முன்பே இறந்துவிட அவர் தன் மகளை படிக்க லண்டன் அனுப்பிவிட்டார்
அவளுடன் கணவரை இழந்த அவரின் அக்கா பத்மாவையும் அனுப்பி வைத்தார்
பத்மாவிற்க்கு ஒரு மகன் இருக்கிறான் பிரதிப் ரகுவுடன் சேர்ந்து பிஸ்னசை கவனித்து கொண்டு இருக்கிறான்.
பிரதிப்புக்கு அனுவை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது
ஆனால் ரகுநந்தனுக்கு தன் மகளை தன்னை விட ஒரு கோடீஸ்வரனுக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்.
அனைவரும் அனுவை எதிர்ப்பார்த்து காத்திருக்க அவர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் பொய்யாக்காமல் அங்கு வந்து சேர்ந்தாள் அனு.
அனு நடந்து வந்து மேடையில் நிற்க கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏனெனில் அவள் இந்த உடை அணிந்து வருவாள் அந்த உடை அணிந்து வருவாள் என்று தங்களுக்குள் அனைவரும் பேசிக் கொண்டு இருக்க அவள் ஒரு துளி அளவு கூட சம்மந்தம் இல்லாமல் புடவை அணிந்து வந்திருந்தாள்.
அனு என்ன தான் லண்டனில் படித்து கொண்டு இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தின் மிகுந்த பற்று கொண்டவள் தன் அத்தை பத்மாவின் வளர்ப்பில் வளர்ந்ததாலோ என்னவோ மிகவும் பண்பாடோடு நற்குணங்களை கொண்டு வளர்ந்திருந்தாள் ஐந்தடி உயர அப்சரசு சிற்பம் நல்ல பால் வண்ண நிறம் கூரான நாசி பட்டை தீட்டிய புருவங்கள் அரக்கு நிற மெல்லிய சில்க் காட்டன் புடவையில்
தங்க ஜிமிக்கி அணிந்து அதற்க்கு தோதாக சிம்பிளான அணிகலன்கள் அணிந்து இருந்தாள்
நீண்ட நாகத்தை போன்ற தலைமுடியை பின்னி அதற்க்கு ஏற்றார் போன்று மல்லி சரம் சூடி இருந்தாள்.
அனைவரும் அவளை வித்தியாசமாக பார்க்க அவள் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தன் தந்தையுடன் நின்றிருந்தாள் அவளின் பின்னே இரண்டு கருப்பு நிற கோர்ட் போட்ட பாடிகார்ட்ஸ் நின்றிருந்தனர் அவள் எங்கு போனாலும் அவளின் பாதுகாப்புக்காக அவர்கள் இருவரும் உடன் இருப்பர்.
இனிதாக விழா ஆரம்பமானது முதலாவதாக அனு மெழுகுவர்த்தியை தன் ரோஜா இதழ்களால் ஊதி அணைத்தாள் சுற்றி இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்ப
சிரித்த முகமாக கேக்கில் ஒரு துண்டை வெட்டி தன் தந்தைக்கு ஊட்டினாள்
ரகுவும் “ஹப்பி பர்த் டே மை ஏன்ஜல்” என்று கூறிக் கொண்டே அவளுக்கும் ஒரு துண்டு கேக்கை ஊட்டினார்.
அடுத்ததாக தன் அத்தைக்கும் கேக்கை ஊட்டினாள் பத்மா அவளின் கன்னத்தில் முத்தமிட்டு “நல்லா இரு டா அனு மா” என்று கூறிவிட்டு கேக்கை தானும் சாப்பிட ஆரம்பித்தார்.
பிரதிப்பின் கண்கள் அவளை விடாமல் வட்டமடித்து கொண்டு இருந்தது.
அடுத்ததாக அவர்களின் குடும்ப வக்கீல் ஒருவர் மேடைக்கு வந்தார் அவர் கையில் இருந்த பத்திரத்தை ரகுநந்தனிடம் கொடுத்துவிட்டு செல்ல
அவரும் சிரித்த முகமாக அந்த பத்திரத்தை வாங்கி கொண்டார்.
ரகுநந்தன் தன் மைக்கை எடுத்து பேச ஆரம்பித்தார் “ஹாய் ஆல் நீங்க எல்லாரும் இந்த பங்ஷனுக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் இன்னைக்கு எங்க வீட்டு இளவரசியோட பிறந்தநாள் அதுமட்டுமல்ல இன்னையில் இருந்து என்னோட மொத்த சொத்துக்களுக்கும் என் மகள் சட்டப்பூர்வமா அதிபதியா ஆக போறாங்க அதுக்கான அறிவிப்புக்காக தான் உங்க எல்லாரையும் அழைச்சு இருந்தேன் அதுக்கான பத்திரம் இதோ” என்று தன் மகள் அனுவிடம் கொடுத்தார்.
அவளும் அதை சிரித்த முகமாக வாங்கி கொண்டாள் இன்னொரு பாத்திரத்தையும் அவருடைய வக்கீல் அவரிடம் நீட்ட “என்னோட 15% ஷேர்சை அனாதை குழந்தைகளுக்காக கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டு அவரின் பக்கத்தில் நின்ற அனாதை இல்ல தலைவர் ஒருவரிடம் கொடுத்தார்.
இதையெல்லாம் பார்த்து கொண்டே கீழே அமர்ந்திருந்த விருந்தினர்கள் “ரகு சார் எவ்வளவு நல்லவரு இல்லை பல கோடி ரூபா சேர்ஸ்சை தூக்கி கொடுத்துட்டாரே” என்று பேசிக் கொண்டு இருந்தனர்.
“எல்லாரும் கண்டிப்பா சாப்பிட்டு தான் இங்கே இருந்து போகனும்” என்று ரகுநந்தன் கூறினார்.
அதன் பின் அவரும் கீழே சென்று வந்திருந்த விருந்தினர்களை கவனிக்க சென்றார்.
அப்போது தமிழக முதலமைச்சர் அங்கே வர அவரையும் கைக் குலுக்கி வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றார் ரகுநந்தன் அவரும் அனுவுக்கு வாழ்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
அதன் பின் ஒவ்வொரு விருந்தினராக மேலே வந்து அனுவுக்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு புகைப்படம் எடுத்து சென்றனர்.
ஒரு மணி நேரம் இப்படியே கழிய அனு மிகவும் சோர்வுடன் இருப்பதை பார்த்த பத்மா “அனு மா நீ வா சாப்பிட போலாம்” என்று டைனிங் ஹாலுக்கு அவளை அழைத்து சென்றார்.
அனு பத்மா இருவரும் சாப்பிட அமர அங்கே பரிமாறிக் கொண்டு இருந்த ஒருவனின் கண்கள் இவர்களையே வட்டமிடித்தது ஒவ்வொருவராக வந்து பரிமாற அவனும் தண்ணீரை எடுத்து வந்தான் யாரும் பார்க்காத வண்ணம் ஏதோ ஒரு பொடி ஒன்றை அதில் கலந்து அனு சாப்பிடும் இலை பக்கத்தில் அந்த கிளாசை வைத்துவிட்டு சென்றான்.
அனுவும் பத்மாவும் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்
அனு தண்ணீரை குடிக்கும் வரை நின்று பதட்டத்துடன் பார்த்து கொண்டிருந்த அந்த வெயிட்டர் அவள் குடித்து முடித்தவுடன் தான் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.
முதலில் அனு அந்த தண்ணீரை குடிக்கும் போது லேசாக ஏதோ உவர்ப்பதை போல் அவளுக்கு தோன்றியது பின் எதுவும் இருக்காது என்று நினைத்து முழுதாக குடித்து முடித்தாள்.
அந்த வெயிட்டர் தன் போனை எடுத்து கொண்டு ஒரு மூலைக்கு சென்றவன் யாருடனோ ஏதோ பேசிவிட்டு வந்து மீண்டும் சாதாரணமாக வந்து நின்று கொண்டான்.
அனுவுக்கு சாப்பிட்டு முடித்தவுடன் தலை வலிப்பதை போல் இருக்க
“அத்தை எனக்கு லேசா தலை வலிக்குது நான் ரூம்க்கு போறேன் நீங்க இங்கே இருந்து பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அனுவின் பாடிகார்டஸ்ம் அவளின் பின்னே வந்தனர் அவள் அறையின் உள்ளே சென்று தாழிட இருவரும் அந்த அறையின் வெளியே காவலுக்காக நின்று கொண்டனர்.
கண்மணிக்கு நேரம் செல்ல செல்ல தலை இன்னும் வலிப்பதை போல் இருந்தது தான் அணிந்திருந்த அணிகலன்களை கழட்டியவள்
புடவையுடன் கழிவறைக்கு சென்று முகத்தை கழுவினால் அப்போதும் அவளுக்கு சோர்வாக இருக்க குளிக்கலாம் என்று ஆடையை கலைய ஆரம்பித்தாள்.
முதலில் புடவையை கழட்டி எறிந்தவள் அடுத்ததாக தன் மேலாடையை கழட்ட கொக்கியில் கை வைத்து கழட்டி கொண்டு இருந்தவள் ஏதோ தோன்றி கண்ணாடியை நிமிர்ந்து பார்க்க அவள் எதிரே இருந்த கண்ணாடியில் யாரோ ஒருவன் நின்றிருப்பதை பார்த்தவள் பயத்துடனே திரும்பி பார்த்தாள் அவனோ ஆறடிக்கு மேல் நல்ல உயரத்துடன் கருப்பாக மாமிச மலையை போன்ற உடல்வாகுடன் தலையில் ஜடா முடி சட்டையில்லாமல் முறுக்கு மீசை தாடியுடன் வேஷ்டி அணிந்து கழுத்தில் மணியுடன் கோர்த்த கயிறு அணிந்து ஏதோ காட்டுவாசி போல் இருந்தான்.
அவனை பார்த்து பயந்தவள் கண்களில் பயத்துடன் உடலில் தோன்றிய நடுக்கத்துடனே “யார் நீ” என்று கேட்டது தான் தாமதம்
அந்த நெடியவன் அவளின் வெற்றிடையில் கை நுழைத்து அவள் வாயை பொத்தினான் அவளோ அவனிடம் இருந்து போராட முயற்சி செய்தவளால் பாவம் அவனை விலக்க கூட முடியவில்லை “ம்ம்ம்” என்று போராடி கொண்டு இருந்தவளின் கண்கள் சிறிது நேரத்தில் இருட்ட ஆரம்பித்தது அப்படியே அவன் தோளில் மயங்கி சரிந்தாள்.
அந்த நெடியவனோ அவளை தூக்கி தன் தோளில் போட்டவன் அறையை ஒட்டி இருந்த மரத்தில் தாவி ஏறி அவளை பின் பக்கமாக தூக்கி சென்றான்.
விழா நடக்கும் இடத்தில் யாரோ ஒரு விஐபி ஒருவர் அனுவை பார்க்க வேண்டும் என்று கேட்க ரகுநந்தன் தன் அக்காவை அழைத்தவர் “அக்கா அனுவை அழைச்சிட்டு வா” என்றார்.
பத்மா “சரி டா தம்பி” என்று கூறிவிட்டு அவளின் அறைக்கு சென்றார்.
வெளியே இரு பாடிகார்டஸ்ம் நின்றிருக்க உள்ளே அறை தாழிடப்பட்டு இருந்தது “அனு மா அனு மா” என்று அழைக்க மறுபக்கத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை மீண்டும் மீண்டும் அழைக்க கதவு திறக்கப்படவே இல்லை.
அவளின் ஐபோன் எண்ணிற்க்கு அழைக்க அதையும் அவள் எடுக்கவில்லை என்றவுடன் பத்மாவுக்கு பயம் தொற்றி கொண்டது.
பின் இரு பாடிகார்டஸ்சின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்க்க அனு அங்கே எங்கேயும் இல்லை அவளின் ஆடை மற்றும் நகைகள் விலையுயர்ந்த பொருட்கள் அத்தனையும் அங்கேயே இருந்தது.
பத்மா பதட்டத்துடன் வெளியே ஓடியவர் “ரகு அனுவை காணும் டா” என்றார் அழுது கொண்டே
“அக்கா அங்கே தான் இருப்பா நல்லா தேடி பாரு” என்றார்.
“டேய் தம்பி அவள் எங்கே தேடியும் இல்லை டா” என்று பதட்டத்துடன் மீண்டும் அழுக ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று பயந்த ரகு அவரின் ஆட்கள் காவலர்கள் என அனைவரையும் அனுப்பி அனுவை தேட ஆரம்பித்தனர்.
Arambamey kalakkal sis
👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰👌
super sis
Ahhha vanga vanga bro ungaluku dha waiting 👀 ❤️