ATM Tamil Romantic Novels

ராவணன் தேடிய சீதை 3

அத்தியாயம் 3

 

அவள் முன் ஒட்டு துணியில்லாமல் அவன் நிற்க அனு தடுமாறி சங்கடத்துடன் திரும்பி நின்று கொண்டாள்.

 

அனு என்ன தான் வெளிநாட்டில் படித்து வளர்ந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முடிவில் அவள் உறுதியாக இருந்தாள் வாழ்கையில் முதல் முறையாக இப்படி ஒரு நிலையில் ஒரு ஆண்மகன் தன் முன்னால் அவளால் பார்க்க முடியாமல் திரும்பி கொண்டாள். 

 

அவன் உடை மாற்ற முடிக்க அவள் அந்த பக்கமாக திரும்பி நிற்பதை பார்த்தவன் “ஏய் இப்படி திரும்பி நின்னா ராவுக்கு என் கூட எப்படி படு***” என்றவன் அவளின் தோளை பிடித்து இழுக்க அவன் இழுத்த வேகத்தில் அவள் தோளே வலிக்க ஆரம்பித்தது. 

 

அனுவின் கண்கள் கலங்கி இருந்தது “பிளீஸ் என்னை விட்ரு நான் என் அப்பா கிட்ட போகனும் என்னை ஏன் இங்கே கடத்தி வச்சிருக்க நான் உன்னை முன்னே பின்னே இதுவரை பார்த்தது கூட இல்லை நீ யாருன்னு கூட எனக்கு தெரியல” என்று கையெடுத்து கும்பிட்டு அழ 

“எனக்கு கூட தான் உன்னை சுத்தமா பிடிக்கல நாம ஒன்னா இருக்கனும்ன்னு விதி வேற வழியில்லை இந்த ஜென்மத்துல உன்னை தொடுற உரிமை என் ஒருத்தனுக்கு மட்டும் தான் இருக்கு  ஒழுங்கா உடுப்ப மாத்திட்டு வெளியே வா” என்று கூறிவிட்டு சென்றான். 

 

கண்மணி அழுது கொண்டே நின்றிருந்தவள் இவன் யார் எதற்காக என்னை கடத்தினான் முன்பு எப்போதாவது இவனை பார்த்திருக்கிறோமா என்று மனதில் நினைத்து குழம்பி கொண்டே நின்றிருந்தாள். 

 

அப்போது அந்த குடிசையின் கதவை திறந்து கொண்டு அவள் வயது பெண் ஒருத்தி வந்தாள் “உங்களை வர சொல்றாங்க சீக்கிரமா வெளியே வாங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போக அனு அவளின் கையை பிடித்து கொண்டாள். 

 

அந்த பெண் என்ன என்பதை போல் இவளை பார்க்க “பிளீஸ் இங்கே இருந்து தப்பிச்சு போக எனக்கு உதவி பண்றியா” என்று அவளிடம் கேட்க அவளோ அனுவின் கையை தட்டிவிட்டு வெளியே சென்றாள். 

 

அவள் அழுது கொண்டே அங்கேயே நின்றிருக்க வெளியே ஏதோ சங்கு முழங்கும் சத்தம் கேட்டது அடுத்த நிமிடம் அந்த ஓலை கதவை திறந்து கொண்டு அவன் வந்தான் அனுவின் முடியை தலை முடியை கொத்தாக பிடித்து தரதரவென இழுத்து கொண்டே வெளியே வர அங்கே ஒரு கூட்டமே இவளுக்காக காத்திருந்தது. 

 

அவளை தரதரவென இழுத்து வந்து ஊரின் மத்தியில் நிற்க வைத்தான்

அனு சுற்றி இருந்தவர்களை பயத்துடனே பார்க்க ஆரம்பித்தாள் அங்கிருந்த ஆண்கள் மேல் சட்டையில்லாமல் வேட்டி அணிந்து மணிகளை அணிகலன்களாக அணிந்து கொண்டு இருந்தனர் பெண்கள் இவளை போன்று புடவையை உடுத்தி உள்ளாடை இல்லாமல் சேலை மட்டும் அணிந்து கொண்டு இருந்தனர். 

 

அங்கிருந்த ஆண்கள் அனைவரும் கையில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு நின்றிருக்க அவர்கள் அனைவரையும் பயத்துடனே பார்த்தாள். 

 

மேள தாளங்கள் அனைத்தும் முழங்க ஆரம்பித்தது பெண்கள் அனைவரும் ஏதோ வித்தியாசமான ஒலி எழுப்பிக்  கொண்டே இருந்தனர் சிறிது நேரத்திற்க்கு பின் ஒலி எழுப்புவதை நிறுத்தி விட. 

 

பெரிய பொட்டு வைத்த தலைவிரி கோலமாக அங்கே வந்த வயதான பெண்மணி ஒருவர் “வில்லாளா அந்த பெண்ணு கழுத்தில் இதை கட்டு” என்று ஏதோ ஒரு கருப்பு மணி போல் ஒன்றை கொடுக்க அவனும் அவள் கழுத்தில் கட்டினான் அதன் பின் மஞ்சள் குங்குமத்தை அவன் கையில் கொடுக்க அவள் நெற்றியில் பூசினான். 

 

அனுவின் மனதில் ‘இது கல்யாணமா இருக்குமோ அய்யோ இந்த காட்டுமிராண்டி கூட்டத்தை பார்த்தாளே எனக்கு பயமா இருக்கே அப்பா நீங்க எங்கே இருக்கிங்க பிளீஸ் என்னை வந்து காப்பாத்துங்க’ என்று மனதில் நினைத்து கொண்டே நின்றிருந்தாள். 

 

அதன் நெருப்புச் சேர்ந்தல் விழா நடைப்பெற்றது. 

 

கிராமத்தின் மையத்தில் பெரிய நெருப்பு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது அதில் நெப்பு எரிந்து கொண்டு இருந்தது

அனுவின் கண்கள் அந்த நெருப்பை பார்த்து பயத்தில் விரிந்தன அவளாள் இந்த திருமணத்தை ஏற்க கூட முடியவில்லை ஆனால், அவளின் எதிர்ப்பை யாரும் இங்கு கண்டுகொள்ளவில்லை. 

 

பழங்குடியின் மூத்தோர், நாட்டி(பாட்டி) உள்பட அனைவரும் சுற்றி நின்று புனித மந்திரங்கள் பாடினர் அவர்கள் வழக்கப்படி மணமகள் மற்றும் மணமகன் கைகளை ஒன்று சேர்த்துக்கொண்டு அந்த நெருப்பை கடக்க வேண்டும்.

 

அனு அதையெல்லாம் பார்த்து கொண்டே பயந்துடன் நிற்க 

அவளின் பயத்தை பார்த்த வில்லாளனுக்கு கோபம் வந்தது

“நீ என் வாழ்க்கையில வந்துட்ட, இனி நீயே நினைச்சாலும் என்னை விட்டு போக முடியாது” எனக் கடினமாக முகத்தை வைத்து கொண்டே கூறினான் வில்லாளன், அவளது மென்மையான கரங்களை தன் வலுவான உள்ளங்கையால் பற்றிக்கொண்டான்.

 

“நான்… இதை செய்ய முடியாது!” அவள் வில்லாளனிடம் கூறிவிட்டு ஒரு அடி பின்னே சென்றாள்.

 

வில்லாளன் அவளை உடனே முறைத்துப் பார்த்தான் “நீ இதை பண்ணலன்னா உன்னை இங்கே இருந்து இந்த மக்கள் துரத்திடுவாங்க நீ காட்டுக்குள்ள போய் வழி தெரியாம புலி சிங்கத்துக்கு தான் இரையாகனும்?” என்றான். 

 

அதை கேட்ட அவளது இதயம் வேகமாக துடித்தது கிராம மக்கள் புதிய மருமகள் எப்படியும் துணிவாக தான் இருப்பாள் என்று எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர் ஆனால், அவளுக்கு இது எல்லாமே புதிது அவன் கரங்களை இன்னும் கெட்டியாக பிடித்து கொண்டாள் உள்ளங்கையில் வியர்வை வடிந்து ஜில்லென்று இருந்தது அவளின் கைகள், ‘வெளியே போய் புலி சிங்கத்துக்கு இரையாகுறதுக்கு பதில் இது எவ்வளவோ பரவாயில்லை’ என்று மனதில் நினைத்தவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். 

 

நெருப்பு வேறு அவர்களின் முன்னால் பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது “காக்க காக்க கனகவேல் காக்க” என்று கூறிக் கொண்டே கண்கள் கலங்க நின்றிருந்தாள் அனு.

 

வில்லாளன் ஒரு நிமிடம் அவளை திரும்பி பார்த்தான் அவனது பார்வையில் கோபம் இருந்தது, ஆனால் அதற்குள் ஏதோ வேறு ஒன்றும் மறைந்திருந்தது ஒரு ஆழமான, அவனும் புரியாத உணர்வு.

 

அவள் நெருப்பை நெருங்கும் சமயம் திடீரென அவன் கையை தன்னிடமிருந்து அவள் விலக்க முயன்றாள் ஆனால் வில்லாளன் அவளது கையை இறுகப் பிடித்து கொண்டான்.

 

“இந்த நெருப்பைக் கடக்க நீயும், நானும் ஒன்னா தான் இருக்கனும்  நானே உன்னை வலுக்கட்டாயமா இழுத்துக் கொண்டு போக விரும்பல ஆனால், இது என் பழங்குடியின் மக்களோட விதி” என்றான். 

 

அனு சற்றே இன்னும் அவனை நெருங்கி நின்று கொண்டாள்

ஒரு நிமிட மௌனத்துக்குப் பிறகு, வில்லாளன் தன் கரத்தை மெதுவாக அவளின் கரத்தில் இறுக்கமாகப் பிடித்து கொண்டான் அவள் துடிக்க, அவன் அவளின் காதில் நெருங்கி 

தன் மீசை முடி குத்த

“உன் கால்களை தூக்கி வைச்சு நடந்து என் கூட வா” என்றான். 

 

அவன் குரலில் தைரியம் வந்தவர்கள் அவனுடன் நடக்க ஆரம்பித்தாள் இருவரும் அந்த புனித நெருப்பைக் கடந்து அந்த பக்கம் சென்றனர் மந்திரங்கள் முழங்கின பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர் அவர்கள் இருவரின் வாழ்க்கையும் இனிதாக இணைந்து ஆரம்பமானது.

 

“இன்று முதல், நீ எங்கள் மருமகள்,” என்று புன்னகையுடன் கூறினார்  அந்த வயதான பெண்மணி.

 

அனு மூச்சை இழுத்துக்கொண்டு, தன்னுடைய புது வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்ந்தாள். 

 

அனைத்து சடங்குகளும் முடிய இருவரும் அந்த மரத்தை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர் 

மத்தியில் நின்றிருந்த அந்த பெண்மணி அனுவின் கையில் கலவை கல்லால் செய்யப்பட்ட நெக்லஸ் ஒன்றை பரிசாக கொடுத்தார். 

 

அனு அதை வாங்காமல் நின்றிருக்க

“ஏய்” என்று வில்லாளன் கத்த உடனே அதை தன் கையில் வாங்கி கொண்டாள். 

 

அதன் பின் வில்லாளன் அனுவின் கைப்பிடித்து அந்த வயதான பெண்மணி இருக்கும் குடிசையின் உள்ளே அழைத்து சென்றான். 

 

அவரின் காலை தொட்டு வணங்கியவன் அனுவை திரும்பி பார்க்க அவளோ அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து அந்த வயதான பெண்மணியின் காலை தொட்டு வணங்கினாள். 

 

“நல்லா… இருங்க…” என்று அந்த பெண்மணி திக்கி திணறி கூறி முடித்தார் “ஆத்தா நான் உனக்கு  செஞ்சு கொடுத்த சத்தியத்தை நிறைவேத்தாம ஓய மாட்டேன்” என்று 

அவரின் கைப்பிடித்து கூறினான் வில்லாளன். 

 

‘இவன் என்ன சொல்றான் ஒன்னும் புரியலையே ஒரு வேளை இந்த பாட்டிக்கு எல்லா விஷயமும்’ என்று அனு நினைத்து கொண்டே இருக்க 

வில்லாளன் அவளின் கைப்பிடித்து இழுத்து கொண்டு தன் குடிசைக்குள் அழைத்து சென்றான். 

 

நெருப்பில் நடந்ததில் அவள் ஆடை லேசாக கிழிந்து அவளின் கை கால்களில் லேசான தீக்காயம் இருந்தது அதை பார்த்து கண்கள் கலங்கினாள் அந்த மக்களின் சடங்குகள் கூட முடிந்துவிட்டது, ஆனால் அவளுடைய வாழ்க்கை போராட்டம் மட்டும் தொடர்கிறது.

 

வில்லாளன் உள்ளே நுழைந்தான். அவனது பார்வை அவளிடம் அமைதியாக இருந்தது, ஆனால் அதே சமயம் கடினமாகவும் இருந்தது.

 

“அவ்வளவு தானா எல்லாம் முடிஞ்சுதா இன்னும் வேற ஏதாவது இருக்கா?” என்று  அனு கோபத்துடன் அவனை பார்த்து கேட்டாள். 

 

“முடிஞ்சிருச்சு இனி நீ என் மனைவி” என்றான் அவள் கண்களை நேராக பார்த்து கொண்டே. 

 

“நீ என்னை கட்டாய கல்யாணம் பண்ணிருக்க இதுக்கு பேர் கல்யாணமா?” என்றாள் கண்கள் கலங்க. 

 

வில்லாளன் லேசாக புன்னகைத்தவன் “இங்கே கல்யாணம் பண்ண உன் சம்மதம் எனக்கு தேவையில்லை எங்க மக்கள் விதி படி நடந்தது” என்றான். 

 

 “நான் ஒருநாள் கண்டிப்பா இங்கிருந்து தப்பிச் போய்டுவேன்” என்றாள் அவள் அவனை பார்த்து 

வில்லாளன் உடனே கோபத்துடன் அவள் அருகில் நெருங்கி அவள் கழுத்தை பிடித்து நெறித்தான் அனு அவனை தள்ள முயற்சி செய்ய ஆனால் அவன் அவள் கழுத்தை ஒரு காட்டு மிராண்டியை போல் இன்னும் இறுக்கமாகப் பிடித்தான்.

 

“நீ எங்கு போனாலும், இதே இடத்துக்கு நான் உன்னை திருப்பிக் கொண்டு வந்து விடுவேன் டி” என்று அவளின் கழுத்தை பிடித்து தன் உயரத்துக்கு தூக்கி மிரட்டினான் அவள் கால்கள் அந்தரத்தில் ஆடியது கண் இமைகள் மேலே சென்றுவிட்டது

அவள் மூச்சுக்கு திணற அவளை பொத்தென்று கீழே போட்டான். 

 

 

 

 

 

 

 

 

1 thought on “ராவணன் தேடிய சீதை 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top