ATM Tamil Romantic Novels

ராவணன் தேடிய சீதை 10

அத்தியாயம் 10

 

வில்லாளன் கூறியதை கேட்ட அல்லி இன்னும் கதறி கதறி அழுது கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள். 

 

வில்லாளன் வழக்கம் போல் வேட்டைக்கு கிளம்பி சென்றான்

காட்டில் ஒரு மரத்தின் மேல் அவன் தேன் எடுக்க ஏறும் போது 

“அண்ணா அண்ணா” என்ற சத்தம் கேட்டது மரத்தில் இருந்தபடியே 

அவன் கீழே பார்க்க அங்கே ஒருவன் நின்றிருந்தான் அவனை பார்த்தவுடன் அவன் முகம் மலர்ந்தது. 

 

வில்லாளன் மரத்தில் இருந்து கீழே இறங்கியவன் “எப்படி டா இருக்க முத்து” என்று கேட்டான் 

“நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்படி இருக்கிங்க” என்று அவனிடம் பேசினான். 

 

“நல்லா இருக்கேன் என்ன விசயம் இவ்வளவு தூரம் வந்திருக்க ஏதாவது முக்கியமான விசயமா” என்று கேட்டான். 

 

“ஆமா அண்ணா எங்க முதலாளி பொண்ணை கடத்துனது ஒரு காட்டுவாசி தான்னு போலீஸ் கண்டுபடிச்சிட்டாங்க அநேகமா அவங்க நம்ம ஊருக்கும் அந்த பொண்ணை தேடி வர வாய்ப்பு இருக்கு நீங்க முன்னெச்சரிக்கையோட இருங்கன்னு சொல்ல தான் வந்தேன்” என்றான். 

 

வில்லாளன் அவனை இறுக அணைத்தவன் “ரொம்ப நன்றி டா முத்து” என்றான்

“பரவாயில்லை அண்ணா நன்றிலாம் பெரிய வார்த்தை எங்களுக்காக நீங்க எவ்வளவோ உதவி பண்ணிருக்கிங்க உங்களுக்காக நான் இதை கூட பண்ண மாட்டேன்” என்றான். 

 

அதே நேரம் போலீஸ் ஜீப் ஒன்று வில்லாளன் கிராமத்தின் உள்ளே நுழைந்தது வில்லாளனுக்கும் தெரிந்திருந்தது இங்கு எந்த நேரமானாலும் போலீசார் வரலாம் என்று அதனால் முன் கூட்டியே அவன் தன் குடிசைக்குள் சென்று அனுவை ஒரு குகையின் உள்ளே கட்டி வைத்தான் அதுமட்டுமின்றி அவளின் வாயையும் கத்தாமல் இருக்க இறுக மூடிவிட்டு வந்திருந்தான். 

 

போலீஸ் ஜீப்பின் முன்னே ஊரே கூடியிருந்தது ஜீப்பில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் மூன்று கான்ஸ்டபிள்லும் இறங்கினர். 

 

“இவனுங்கேளே காட்டுபயலுக இவனுங்க கிட்ட என்னை யா விசாரிக்கிறது நாம என்ன கேட்டாலும் இங்கே இருக்க எவனுக்கும் ஒன்னும் புரிய போறது இல்லை” என்று அந்த இன்ஸ்பெக்டர் பக்கத்தில் நின்ற கான்ஸ்டபிளிடம் பேசிக் கொண்டு இருந்தார். 

 

அப்போது அந்த கூட்டத்தின் முன்னே வில்லாளன் வந்து நின்றான் அவனை பார்த்த போலீஸ்க்காரர் 

அவனுக்கு சல்யூட் அடித்து “சார் நீங்க இங்கே எப்படி” என்று கேட்டார்.

 

“இது தான் என் சொந்த ஊர் சுந்தரமூர்த்தி” என்றான் வில்லாளன்

“சார் தொந்தரவுக்கு மன்னிக்கனும் 

நீங்களே சிக் லீவுல இருக்கிங்க” என்றார். 

 

“பரவாயில்லை மூர்த்தி என்ன விசயம் சொல்லுங்க” என்று கேட்டான் வில்லாளன் 

“சார் சென்னையில விஐபி ஒருத்தரோட பொண்ணு காணாம போய்ட்டாங்க அவங்களை ஒரு காட்டுவாசி தான் கடத்தி இருக்காங்கன்னு தகவல் வந்துச்சு அதனால தான் இங்கே வந்தோம்” என்றார். 

 

அவர் காட்டுவாசி என்றவுடன் வில்லாளனுக்கு கோபம் வந்துவிட அவரை பார்த்து முறைத்தான் 

அதில் அந்த இன்ஸ்பெக்டர் தலை குனிந்து கொண்டார். 

 

“இவங்களும் உங்களை மாதிரி மனுசங்க தான் மூர்த்தி பேசறதுக்கு முன்னாடி என்ன பேசுறோம்ன்னு யோசிச்சு பேசுங்க” என்றான் கோபத்துடன் வில்லாளன். 

 

“சாரி சார் இப்போ அந்த பொண்ணு இங்கே இருக்கான்னு இந்த இடத்துல ஒரு சின்ன செக் பண்ணனும் மேல் இடத்து உத்தரவு வேற வழியில்லை” என்றார் மூர்த்தி. 

 

“ஓகே மூர்த்தி உங்க எல்லாருக்கும் டென் மினிட்ஸ் டைம் தரேன் போய் செக் பண்ணிக்கோங்க ஆனா அவங்க வீட்ல இருக்க எந்த பொருளையும் கலைக்க கூடாது” என்று கூறினான். 

 

“ஓகே சார் கண்டிப்பா எந்த பொருளையும் கலைக்காம எல்லாரும் தேடிட்டு வாங்க” என்று மூர்த்தி கூற கான்ஸ்ட்டபிள் ஒவ்வொரு வீடாக சென்று தேட ஆரம்பித்தனர். 

 

கூட்டத்தில் இருந்த அந்த மக்கள் இடையே சலசலப்பு ஏற்பட வில்லாளன் அவர்கள் புறம் வேறு ஏதோ ஒரு மொழியில் சத்தமாக பேச

அனைவரும் அமைதியாக நின்று கொண்டனர். 

 

மூர்த்தி அவனை ஆச்சரியமாக பார்த்தான் ஒவ்வொரு கான்ஸ்ட்டபிளும் ஓடி வந்து 

“சார் உள்ளே யாரும் இல்லை” கூறினர். 

 

“சரி சார் தேங்க்யூ மேல் இடத்துல இருந்து ரொம்ப பிரஷர் அதுக்காக தான் வர வேண்டியதா போச்சு” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஜீப்பில் ஏறி சென்றனர். 

 

சுந்தரமூர்த்தி ஜீப்பில் ஏறி அமர்ந்திருந்தவர் “யோவ் கான்ஸ்ட்டபிள் இந்த ஆளு காட்டுவாசியா இவ்வளவு நாள் தெரியவே இல்லை பாரேன்” என்றார். 

 

“ஆமா சார் இப்போலாம் எவன் வேணும்னாலும் படிச்சி மேல வந்துட்றானுங்க சார்” என்றார் கான்ஸ்ட்டபிள். 

 

வில்லாளன் அனுவை அடைத்து வைத்த அந்த பாறையால் ஆன குகையில் சென்று பார்க்க அவள் அங்கே இல்லை அவளை கட்டி வைத்திருந்த கயிறு மட்டும் கீழே கிடந்தது அதை பார்த்து அதிரச்சியடைந்தவன் அவளை சுற்றிலும் தேட ஆரம்பித்தான். 

 

அனு போலீஸ் தன்னை தேடி வந்துவுடன் அவன் பாறையில் அடைத்து வைத்தது தெரிந்து விட எப்படியோ கட்டை அவிழ்த்து அந்த ஜீப் இங்கிருந்து செல்வதற்க்குள் உதவி கேட்க்கலாம் என்று தப்பித்து சென்றிருந்தாள். 

 

அனு காட்டு பாதையின் தலைத்தெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள் தூரத்தில் தெரிந்த போலீஸ் ஜீப்பில் பார்த்து இன்னும் வேக வேகமாக “ஹெல்ப் 

ஹெல்ப்” என்று கத்தி கொண்டே ஓடினாள் ஆனால் அவள் ஜீப்பை நெருங்கி செல்வதற்க்குள் அந்த ஜீப் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. 

 

அனு சோரந்து போன முகத்துடன் அழுது விழிகளுடன் நடந்து வர அவளின் எதிரே ஒரு சிறுத்தை வந்து நின்றது அதைப்பார்த்தவள் பயத்துடன் ஓட போக அதற்க்குள் அந்த சிறுத்தை அவள் மீது தாவி ஏறியது. 

 

அனுவின் மனதில் தான் இன்று கண்டிப்பாக சாக தான் போகிறோம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே அந்த சிறுத்தை அவளை கடிக்க வர வில்லாளன் எங்கிருந்தோ ஓடி வந்தவன். 

 

அந்த சிறுத்தையை பிடித்து வேகாமாக இழுத்தான் அது சீறிக் கொண்டே வில்லாளனை கடிக்க வர 

அவன் தன் இடையில் இருந்த குறுங்கத்தியை எடுத்து அதன் கழுத்தில் இருந்து வேகமாக செங்குத்தாக கிழித்தான் அந்த ஆழமான கத்தி சிறுத்தையின் உடலை இரண்டாக கிழிக்க அதன் உடலில் இருந்து ரத்தம் ஊற்ற ஆரம்பித்தது. 

 

வில்லாளன் மீது இருந்த அந்த சிறுத்தை துடிதுடித்து கீழே விழுந்து இறந்து போனது. 

 

வில்லாளன் எழுந்து வந்தவன் அனு எழுந்து கொள்ள கையை கொடுத்தான் அனு எழுந்து நின்றவள் அவன் நெஞ்சில் சிறுத்தையின் நகக்கிறல் இருந்ததை பாவமாக பார்த்தாள். 

 

ஆனால் அவனோ அவளை கொலைவெறியுடன் கொன்றுவிடும் ஆத்திரத்துடன் பார்த்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறைவிட்டான் அனு அழுது கொண்டே நிற்க. 

 

அவளின் கழுத்தை பிடித்து தரதரவென ஊருக்குள் இழுத்து சென்றவன் அங்கே வெந்நீர் காய வைக்க அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகு கட்டையை எடுத்து அவள் முதுகில் கோடிழுத்தான். 

 

அனு வலி தாங்க முடியாமல் கத்தி கதறி அழ அந்த இடமே அதிர்ந்தது ஊரே அவளை பாவமாக பார்த்தது 

வில்லாளனின் கோபத்தை பார்த்த சிறுபிள்ளைகள் தங்கள் தாயின் பின்னே ஒளிந்து கொண்டன. 

 

“இனி இங்கே இருந்து தப்பிக்கனும்ன்னு நினைச்ச உன் உடம்புல உயிர் இருக்காது” என்று கூறிவிட்டு சென்றான் அல்லி அதனை திருப்தியாக பார்த்து கொண்டே நின்றிருந்தாள். 

 

வில்லாளன் அந்த விறகை கீழே போட்டுவிட்டு தன் குடிசைக்குள் சென்றுவிட்டான். 

 

அனு தரையில் அமர்ந்து அழுது கொண்டே இருக்க அந்த வாய் பேச முடியாது பெண்மணி அவளின் கைப்பிடித்து தன்னுடன் அழைத்துச் சென்றார். 

 

அவரின் குடிசைக்குள் அழைத்துச் சென்று அவளின் காயத்துக்கு மருந்திட்டார் அனு அவரை தன் தாயாக நினைத்து கட்டி அழுக ஆரம்பித்தாள். 

 

அன்றிலிருந்து அனு அவன் பக்கத்தில் கூட செல்வதையே நிறுத்தி இருந்தாள் அவனை பார்த்தாலே பயந்து நடுங்க ஆரம்பித்து இருந்தாள். 

 

அன்றும் அப்படி தான் வில்லாளன் இரவு உறங்க அனுவை அழைக்க அந்த குடிசையின் வாசலில் வந்து நின்றான் “ஏய் வா வீட்டுக்கு போலாம்” என்று வில்லாளன் அழைக்க அனு அந்த வாய் பேச முடியாத பெண்மணியின் பின்னே ஓடி ஒளிந்து கொண்டாள். 

 

அதன் பின் வில்லாளன் அவளை எதுவும் தொந்தரவு செய்யவில்லை. 

 

நாட்கள் அதன் போக்கில் நகரந்தன அனு அதன் பின் தப்பிக்க எந்த முயற்சியையும் எடுக்கவேயில்லை

அந்த காட்டிலேயே வாழ பழகி இருந்தாள் அவள் முதுகில் இருந்த தீக்காயம் ஆறிப்போனது ஆனால் அதன் வடு மட்டும் அப்படியே இருந்தது. 

 

அனு ஒரளவுக்கு அவர்களின் மொழியையும் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருந்தாள் 

முன்பு அவளை பார்த்தாள் பயந்து ஓடும் சிறுவர்கள் இப்போது நன்றாகவே அவளிடம் ஒட்டிக்கொண்டனர் அவர்களுடன் சிறுமியாக துள்ளி குதித்து விளையாடுவாள் இரவு அந்த வயதான பாட்டி வீட்டிலேயே உறங்கி விடுவாள். 

 

அன்று சிறுவர்களுடன் அனு கோடு கிழித்து நொண்டி விளையாடி கொண்டு இருந்தாள் அப்போது அவளுக்கு தலைச்சுற்றி மயக்கம் வர அப்படியே மயங்கி விழுந்தாள். 

 

சிறுவர்கள் ஓடி மருத்துவச்சியை எழுத்து வர அவர் வந்து அனுவின் கைப்பிடித்து பார்த்தார். 

 

வில்லாளனும் செய்தி கேள்விப்பட்டு அங்கே வந்து சேர்ந்தான் அனு கர்ப்பாமாக இருப்பதை கேட்ட அவன் சந்தோசத்துக்கு அளவே இல்லை. 

 

அதே போன்று அனுவும் தான் இங்கிருந்து செல்ல போகிறோம் என்று சந்தோஷப்பட்டாள். 

 

அனு எப்போது தன் வீட்டிற்க்கு செல்வோம் என்று காத்து கொண்டு இருக்க அவளுக்கு நான்காம் மாதம் தொடங்கி இருந்தது. 

 

ஒரு நாள் வில்லாளன் அவளிடம் “நீ இங்கே இருந்து கிளம்பி போக நேரம் வந்துருச்சு கிளம்பு” என்று கூறியவுடன் அவளுக்கு சந்தோசம் தாளவில்லை மகிழ்ச்சியாக கிளம்பியவளுக்கு ஏனோ அந்த மக்கள் குழந்தைகளை விட்டு பிரிய மனமேயில்லாமல் கிளம்பினாள். 

 

வில்லாளன் சென்று உடை மாற்றி வந்தான் மேல் சட்டை வேஷ்டி அணிந்து வர அனு அழுது கொண்டே அனைவருக்கும் பிரியா விடை கொடுத்து அவன் எடுத்து வந்திருந்த ஜீப்பில் ஏறினாள். 

 

அவர்களும் கண்ணீருடன் அவளை வழியனுப்பி வைத்தனர். 

 

அனு சிரித்து கொண்டே வர

வில்லாளன் அவளிடம் திரும்பி 

“இந்த குழந்தையை என்ன பண்ண போற” என்று கேட்டான். 

 

“வளர்க்க போறேன்” என்றாள் சாதாரணமாக அனு கையை வயிற்றில் வைத்து கொண்டு. 

 

“உங்க அப்பா உன்னை வளர்க்க விடுவாரா” என்று கேட்க

“எங்க அப்பாவுக்கு எப்பவும் என் விருப்பம் தான் முக்கியம்” என்றாள் சிரித்த முகமாக. 

 

வில்லாளன் முகம் அவளின் பதிலில் இறுகி போனது. 

 

 

 

 

 

 

 

2 thoughts on “ராவணன் தேடிய சீதை 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top