அத்தியாயம் 11
சென்னையின் புறநகரில் உள்ள பரபரப்பான சாலை அது அங்கே தன் ஜீப்பை நிறுத்திய வில்லாளன்
“இறங்கு இங்க இருந்து உங்க அப்பாவுக்கு போன் பண்ணு வந்து உன்னை கூட்டிட்டு போவாரு” என்றான்.
அனு கீழே இறங்கியவள் அவனை பார்த்து கொண்டே நிற்க அவளை கண்டு கொள்ளாமல் தன் ஜீப்பில் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அங்கே நடந்து சென்றிருந்தவர்கள் அனுவை வித்தியாசமாக பார்த்து கொண்டே சென்று கொண்டிருந்தனர் அனு அவர்களை கடந்து சென்று அங்கிருந்த ஒருவனிடம் “எக்ஸ்கியூஸ் மீ உங்க போன் தரீங்களா” என்று கேட்க அவன் அவளை வித்தியாசமாக பார்த்தான்.
“உங்களை எங்கேயோ பார்த்துருக்கனே நீங்க ரகுநந்தன் சார் பொண்ணு தான உங்களை பத்தி தான் நிறைய விளம்பரம்லாம் வந்துச்சு” என்றான்.
அனு அவன் பேச்சை காதில் கூட வாங்காமல் தன் தந்தைக்கு அழைத்தவள் “அப்பா நான் அனு பேசுறேன்” என்று கூறும்போதே அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
அந்த பக்கத்தில் ரகுநந்தன் “அம்மாடி எங்கே டா இருக்க” என்று கேட்டவர் அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.
அதற்க்குள் செய்தியாளர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்
ஏனெனில் அவள் போன் வாங்கி பேசியது ஒரு ரிப்போர்ட்டர் அவன் தான் வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்துக்கு தகவல் கொடுத்திருக்க அனைவரும் அவளை சூழ்ந்து நின்றிருந்தனர்.
அனு பயத்துடனே நின்றிருக்க ரகுநந்தன் அந்த கூட்டத்தின் உள்ளே வர “டாடி” என்று ஓடிச்சென்று அவரை இறுக அணைத்து கொண்டாள்.
“அனு மா” என்று அவரும் அவளை இறுக அணைத்து கொண்டவர் செய்தியாளர்கள் அனைவரையும் விலக்கி விட்டு தன் மகளை காரில் வீட்டிற்க்கு அழைத்து சென்றார்.
இருவரும் வீட்டின் உள்ளே வர பத்மா அனுவுக்கு ஆலம் சுற்றி உள்ளே அழைத்து சென்றார்.
அப்போது தான் அவளிடம் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தவர் அவளின் லேசாக மேடிட்ட வயிற்றை பார்த்தவர்
“அனு நீ மாசமா இருக்கியா” என்று அவளின் வயிற்றை பார்த்து கேட்க
“ஆமாம் அத்தை அஞ்சாவது மாசம்” என்றாள்.
அவள் கூறியதை கேட்ட ரகுநந்தன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார் பிரதீப் உட்பட
ரகுநந்தன் அவள் அருகில் வந்தவர்
“இந்த குழந்தையோட அப்பா யாரு” என்று கேட்க “வில்லாளன்” என்றாள்.
“வில்லாளன் யாரு அவன்” என்று கேட்க “அவன் தான் என்னை கடத்தி வச்சிருந்தவன் பா” என்றாள் அனு.
“அனு நீ என்ன சொல்ற” என்று அவர் அதிர்ச்சியுடன் கேட்க
“ஆமா பா ஒரு காட்டுவாசி தான் என்னை இவ்வளவு நாள் கடத்தி வச்சிருந்தான் இது அவனோட குழந்தை தான்” என்றாள்.
“உன்னை எங்கே கடத்தி வச்சிருந்தான் உனக்கு எதாவது நியாபகம் இருக்கா” என்று அவர் கேட்க “ஏதோ மலை மாதிரி இருந்துச்சு நல்லா குளிரா இருந்துச்சு நிறைய காட்டுவாசிங்க அங்கே இருந்தாங்க” என்றாள்.
அவள் கூறியது தான் தாமதம் ரகுநந்தன் அவளின் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறைவிட்டார் “வெட்கமாயில்லை எவ்வளவு தைரியம் இருந்தா ஒரு காட்டுவாசி பயலோட பிள்ளையை சுமக்குறேன்னு என் கிட்டையே தைரியமா வந்து சொல்லுவ” என்று கத்த அனு அழுக ஆரம்பித்தாள்.
“சாரி பா அவன் தான் வற்புறுத்தி என் கூட இருந்தான் குழந்தைங்க நல்லா தான இருப்பாங்க நானே இந்த பேபியை வச்சிக்குறேன்” என்றாள் அழுது கொண்டே.
அவள் பேசியதை கேட்டு மீண்டும் அவளின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார் ரகுநந்தன்
அப்போதும் தன் ஆத்திரம் தீராமல் அவளின் கழுத்தை பிடித்து நெறிக்க
பத்மா ஓடி வந்து அவரை தடுத்துவிட்டார் “ரகு என்ன பண்ணுற பாவம் பிள்ளைத்தாச்சு பொண்ணு” என்றார்.
பத்மா வந்து தடுத்த அனுவின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவர் பின் தன் அலைபேசியை எடுத்து ஆரோனுக்கு அழைத்தவர் விஷயத்தை கூறி உடனே வர சொல்ல ஆரோனும் அங்கே வந்து சேர்ந்தான்.
ஆரோன் வீட்டின் உள்ளே வந்தவன் அனுவை பாவமாக பார்த்தான்
அவளின் கன்னத்தில் இருந்த விரல் தடங்களையும் பார்க்க தவறவில்லை
“சார் நீங்க பண்ணின பாவத்துக்கு தான் உங்க பொண்ணு கஷ்டப்பட்டுறா” என்று கோபத்துடன் ரகுநந்தனிடம் சண்டைக்கு செல்ல
“ஏய் நான் முழுசா ஒரு கோடி உனக்கு கொடுத்துருக்கேன் நான் என்ன சொல்றனோ அதை மட்டும் செய் என் பொண்ணை கண்டுபிடிச்சு தரேன்னு சொல்லி என்னை ஏமார்த்துனதே நீதான்” என்றார் கோபத்துடன்.
“நானும் என் பக்கத்துல இருந்து விசாரிச்சிட்டு தான் இருந்தேன் நீங்க ஒன்னும் சும்மா எனக்கு ஒரு கோடி தரல உங்க தப்பை மறைக்க தான் கொடுத்திங்க” என்றான் கோபத்துடன்.
அனு அழுது கொண்டே இருக்க ஆரோன் அவளின் அருகில் சென்றவன் “மா நீங்க அழாதிங்க என்ன நடந்ததுன்னு என் கிட்ட தெளிவா சொல்லுங்க” என்று அவளிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.
அவள் கூறிய விபரங்களை கேட்டு கொண்டவன் கண்டிப்பா அது ஊட்டி இல்லை கொடைக்கானல் தான் இருக்கனும் “வாங்க நாளைக்கு போய் விசாரிப்போம் மா நீங்க என் கூட வந்து அவனை அடையாளம் காட்டுங்க” என்றான்.
அனுவும் சரி என தலையை ஆட்டினாள் அங்கிருந்து செல்வதற்க்கு முன் ஆரோன் தன் கார்ட் ஒன்றை அவளின் கையில் கொடுத்தவன் “மா உனக்கு எந்த பிரச்சனை அவசரம்னாலும் இந்த நம்பர்க்கு கூப்பிடுங்க அடுத்த பத்து நிமிஷத்துல நான் இங்கே இருப்பேன்” என்று ரகுநந்தனை பார்த்து கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
ரகுநந்தன் அனுவை ஏதோ ஒரு வேண்ட தகாத புழுவை போல் பார்த்து கொண்டிருந்தார் பிரதீப் அதை விட அவளை கேவலமான ஒரு பார்வை பார்த்தான்.
“அக்கா இவள் என் கண்ணு முன்னாடியே வரக்கூடாது இவளை எங்கேயவது கூட்டிட்டு போ” என்று கத்த பத்மா அனுவை அழைத்து கொண்டு அவளின் அறைக்கு சென்றார்.
அறையின் உள்ளே வந்த அனு அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்
பத்மா அனுவின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் “அனு மா நீ எப்படி அவனை இந்த அளவுக்கு உன் கிட்ட நெருங்க விட்ட இது தப்பு தான” என்றார்.
“இல்லை அத்தை அவன் பார்க்க நல்லா பயில்வான் மாதிரி இருந்தான் என்னால அவனை எதிர்த்து எதுவும் பண்ண முடியல பாருங்க என் முதுகுல சூடு கூட வச்சு இருக்கான் அவன் கிட்ட இருந்து தப்பிச்சா போதும்ன்னு தான் எனக்கு அப்போ தோனிச்சு குழந்தை வந்துட்டா அவன் என்னை விட்டுறேன்னு சொன்னான்” என்றாள் அழுது கொண்டே.
“எல்லாம் சரி இப்போ உங்க அப்பாவுக்கு யாரு பதில் சொல்றது” என்றார் “எனக்கும் எதுவும் தெரியாது அத்தை என்னை நீங்களாவது நம்புங்க” என்றாள் அழுது கொண்டே.
கீழே ரகுநந்தன் ஹாலில் கோபத்துடன் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார் அவருக்கு இப்போதும் ஆத்திரம் தீர்ந்த பாடில்லை கேவலம் ஒரு காட்டுவாசியின் வாரிசு தன் மகளின் வயிற்றில் வளர்வதா என்று வெறியுடன் நடந்து கொண்டிருந்தார்.
பிரதீப் அவரின் அருகில் வந்தவன்
“நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க அனுவுக்கு நான் வாழ்க்கை கொடுக்கிறேன் மாமா” என்றான்
“ஏய் மாப்பிள்ளை எனக்கு அதை பத்தியெல்லாம் கவலையேயில்லை
அவள் வயித்துல இருக்கே அந்த பிசாசை அழிக்க வழி சொல்லு அவ்வளோ தான்” என்றார் கோபத்துடன்.
“அவ்ளோ தான மாமா எனக்கு தெரிஞ்ச ஒரு லேடி டாக்டர் இருக்காங்க அவங்க இப்படிங்குறதுக்குள்ள வேலையை முடிச்சிருவாங்க” என்றான் பிரதீப்.
“சரி மாப்பிள்ளை அவங்களை வீட்டுக்கு வர சொல்லு காதும் காதும் வச்ச மாதிரி வேலையை முடிச்சிடலாம்” என்றார் ரகுநந்தன்.
பிரதீப் தன் அலைபேசியை எடுத்து கொண்டு போய் அந்த மருத்துவரிடம் பேசியவன் “மாமா அவங்க அனுவை அவங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வர சொல்றாங்க” என்றான்.
“ஏன் அவங்க இங்கே வர மாட்டாங்களா” என்று ரகுநந்தன் புருவத்தை உயர்த்தி சந்தேகத்துடன் கேட்க “மாமா அவங்களால இங்கே குழந்தையை ஸ்கேன் பண்ணிலாம் பார்க்க முடியாதுல்ல” என்றான்.
“ஓஹோ சரி நீயே போய் அவளை கூட்டிட்டு வா அவளோட முகத்தை பார்க்க கூட எனக்கு பிடிக்கலை” என்றார்.
“இதோ இப்போவே போறேன் மாமா” என்று பிரதீப் மேலே ஓடிச்சென்றவன்
“அம்மா மாமா அனுவை கூட்டிட்டு வர சொன்னாரு” என்றான்.
பத்மா உடனே “ஏன் எதுக்கு” என்று கேட்க “எனக்கு தெரியாது மா” என்றான் அவன் பதிலுக்கு
“சரி போ நானே கூட்டிட்டு வரேன்” என்றார் பத்மா.
“அம்மா மாமா உடனே வர சொன்னாரு” என்றான் பிரதீப்
“சரி டா வரோம் வா அனு” என்று அவளை அழைத்து கொண்டு கீழே வந்தார்.
“அனு வா வெளியே போகனும்” என்று ரகுநந்தன் கூறியவுடன்
பத்மாவின் முகம் மாற ஆரம்பித்தது
அவர் பயப்படுவது அப்பட்டமாக வெளியே தெரிந்தது.
“அனு வா போலாம்” என்க அவள் பத்மாவின் முகத்தை பார்த்தாள்
“தம்பி நானும் உங்க கூட வரேன்” என்றார் பத்மா.
“ஏன் அவளை கொன்னுடுவேன்னு பயப்படுறியா அக்கா அவள் என் ரத்தம் அவளை எதுவும் பண்ண மாட்டேன்” என்றார் கோபத்துடன்.
“அப்போ அந்த குழந்தை” என்று பத்மா பதட்டத்துடனே கேட்க
“அது என் கையில இல்லை” என்று கூறியவர் “அனு வா போலாம்” என்று அவளின் கைப்பிடித்து இழுத்து சென்றார்.
அனு பயத்துடன் பத்மாவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ரகுவுடன் சென்றாள்.
அனு காரில் ஏறி அமர்ந்து கொள்ள பிரதீப்பும் அவளுடன் அமர்ந்து கொண்டான் “மாமா எங்கே போறோம்” என்று அவனிடம் கேட்க
“எனக்கு தெரியாது அனு மா” என்றான்.
கார் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் வாசலில் நிற்க அனு பயத்துடன் கீழே இறங்கினாள்
“அப்பா நாம எங்கே போறோம்” என்று அவள் கேட்க
“உன் வயித்துல இருக்கே அந்த பிசாசை கொல்ல” என்று கூற
அனு பயத்துடன் வயிற்றில் கை வைத்து கொண்டாள்.
“அப்பா நான் வர மாட்டேன்” என்றாள்
“உன் கிட்ட யாரும் அனுமதி கேட்க்கல வா” என்று அவளின் கைப்பிடித்து இழுத்து செல்ல “அப்பா நான் வர மாட்டேன்” என்று அழுக ஆரம்பித்தாள் ரகுநந்தன் அவளை அடித்து தன்னுடன் இழுத்து சென்றார்.
அத்தியாயம் 12
அனு அழுது கொண்டே “வேண்டாம் பா பிளீஸ் பாவம் பா அந்த குழந்தை” என்று கெஞ்சி கொண்டே வர அவர் அதை எதையும் காதில் வாங்காமல் அவளை தன்னுடன் இழுத்து வந்தார்.
நேரே மருத்துவமனையின் உள்ளே சென்றவர் யாருடைய அனுமதியையும் கேட்க்காமல் அந்த மருத்துவரின் அறையின் உள்ளே அனுவை இழுத்து சென்றார் அவருடன் பிரதீப்பும் ஓடி வந்தான்.
“வாங்க சார் வாங்க” என்று புன்னகையுடன் அந்த பெண்மணி அவரை வரவேற்க்க அவரோ பதிலுக்கு எதுவும் கூறாமல் “ம்ம்” என்ற ஒரே ஒரு தலையசைப்பை மட்டும் பதிலுக்கு வழங்கியவர்.
“இது என் பொண்ணு” என்றார்
“ஓ தெரியும் சார் பிரதீப் சார் எல்லா விஷயத்தையும் போன்ல சொன்னாரு நீங்க கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க நான் செக் பண்ணிட்டு உங்களை கூப்பிட்டுறேன்” என்றார்.
“ம்ம் சீக்கிரம் ரொம்ப நேரம் வெயிட் பண்ண முடியாது யாராவது என்னை பார்த்தா பிரச்சனை ஆகிடும்” என்று கூறிவிட்டு பிரதீப்பை தன்னுடன் அழைத்து கொண்டு வெளியே சென்றார்.
அனு அழுத விழிகளுடன் நின்றிருக்க அவளை பரிசோதிக்க அழைத்து சென்றார் அந்த மருத்துவர் அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் இருவரையும் உள்ளே அழைக்க இருவரும் உள்ளே வந்தனர்.
“ரகு சார் உங்க பொண்ணு பிரக்னன்ட் ஆகி பைவ் மனத்ஸ் ஆகுது” என்றார் அந்த மருத்துவர்
“அதனால என்ன” என்றார் ரகு.
“குழந்தை ரொம்ப ஆரோக்கியமா இருக்கு அது மட்டுமில்லை ஆக்டிவ்வா வேற இருக்கு நல்ல வளர்ச்சியடைஞ்சிருச்சு” என்றார்
“மேடம் இந்த கதையை எல்லாம் நான் உங்க கிட்ட கேட்டனா” என்று கோவப்பட்டார் ரகு.
“சார் இதையெல்லாம் சொல்ல வேண்டியது என்னோட கடமை சொல்லி தான் ஆகனும் பேபி பைவ் மன்த் மேலே தாண்டிட்டதால இனி கலைக்கிறது கஷ்டம்” என்றார்
அவர் கூறியதை கேட்ட அனுவின் மனதில் இப்போது தான் நிம்மதி பெருமூச்சு வெளியே வந்தது.
“என்ன ஆனாலும் சரி அந்த குழந்தையை கலைச்சிடுங்க” என்றார் ரகுநந்தன்
“சார் அந்த குழந்தையை அழிக்க முயற்சி செஞ்சா உங்க பொண்ணோட உயிருக்கு தான் அது ஆபத்தா முடியும் இது ஒரு கிரைம் அந்ந பொண்ணுக்கு எதாவது ஆகிட்டா யார் பதில் சொல்றது” என்றார்.
ரகுவுக்கு அவரின் பேச்சு கோபத்தை வரவழைக்க அங்கிருந்த டேபிளின் மீது வேகமாக குத்தியவர்
“என்ன டாக்டர் டா இவங்க என்ன என்னவோ சொல்லி இங்கே கூட்டிட்டு வந்த வா நாம வேற டாக்டரை பார்க்கலாம்” என்றார் கோபத்துடன்.
“சார் சொல்றேன்னு கோவப்படாதிங்க நீங்க எந்த டாக்டர் கிட்ட போனாலும் அவங்களும் இதை தான் சொல்லுவாங்க பேசாம அந்த குழந்தையை பெத்துக்க சொல்லுங்க இன்னும் நாலு மாசம் தான அதுக்கு அப்புறம் அந்த குழந்தையை எதாவது அனாதை இல்லத்துக்கு தத்து கொடுத்துடுங்க” என்றார் அந்த மருத்துவர்.
“எல்லாம் எங்களுக்கு தெரியும் உங்க வேலையை பார்க்குறிங்களா” என்று கோவப்பட்ட ரகுநந்தன் தன் மகளை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார்.
அனு தன் தந்தையுடன் அமைதியாக சென்றாலும் அவள் மனதில் ‘முருகா என் குழந்தைக்கு எதுவும் ஆகிட கூடாது’ என்று வேண்டிக் கொண்டே தான் சென்றாள்.
மூவரும் வீட்டின் உள்ளே வர பத்மா பதட்டத்துடனே அனுவின் அருகில் ஓடினார் விட்டால் அழுதுவிடுவேன் என்பதை போல் முகத்தை வைத்திருந்தவர் “அனு மா உனக்கு ஒன்னும் இல்லையே” என்று அவளை தொட்டு பார்த்தவரின் கைகள் அனிச்சையாக அவளின் வயிற்றுக்கு சென்றது அந்த குழந்தையும் என்ன நினைத்ததோ நான் இருக்கிறேன் என்பதை போல் உதைத்து காட்டியது இப்போது தான் பத்மாவுக்கு உயிரே வந்தது.
இவரின் நிலை இப்படி இருக்க ரகு அனுவின் லேசாக மேடிட்ட வயிற்றை பார்த்து முறைத்து கொண்டே நின்றிருந்தார்.
அவருக்கு கோபம் இந்த குழந்தையை எதுவும் செய்ய முடியவில்லையே என்று அங்கு நிற்க பிடிக்காமல் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார்.
“மாமா எங்கே போறிங்க இருங்க நானும் வரேன்” என்று அவரின் பின்னே வால் பிடித்ததை போன்று
பிரதீப்பும் ஓடினான்.
ரகுநந்தன் வெளியே வந்தவர் கோபத்துடன் சிகரெட்டை எடுத்து வைத்து பிடித்து கொண்டே நின்றிருந்தார் “மாமா டென்ஷன் ஆகாதிங்க ஊர்ல இந்த டாக்டர் மட்டும் தான் இருக்காங்களா என்ன பணத்துக்காக ஆசைப்படுற எவனாவது வருவான்” என்றான்.
“டேய் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு நல்லா டாக்டரை புடுச்சிட்டு வா அந்த வயிறை பார்க்க பார்க்க எனக்கு எரியுது எனக்கு என்னவோ அது என் பழைய நினைவுகளை நியாபகப்படுத்துற மாதிரி இருக்கு” என்றார்.
“என்ன பழைய நியாபகம் மாமா” என்று பிரதீப் கேட்க “அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் சொன்னதை மட்டும் நீ செஞ்சா என் பொண்ணை உனக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன் என் மொத்த சொத்தும் என் பொண்ணுக்கு தான்” என்றார்.
“மாமா சொத்துக்காகலாம் இல்லை எனக்கு அனுவை ரொம்ப பிடிக்கும்” என்றான் பிரதீப் வழிந்து கொண்டே
“டேய் முதல்ல ஒரு நல்ல டாக்டரை கண்டுபிடி அப்புறம் வந்து இதெல்லாம் பேசு கிளம்பு” என்று அவனை துரத்திவிட்டார்.
வெகுநேரம் தன் கால்கள் வலி எடுக்கும் வரை ரகுநந்தன் வெளியே நடந்து கொண்டிருந்தவர் சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தார்.
அவர் உள்ளே வரும்போது அனு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்
அவளுக்கு பத்மா பரிமாறி கொண்டு இருந்தார் “நல்லா சாப்பிடு அனு மாசமா இருக்க பொண்ணுங்க நல்லா சாப்பிடனும்” என்று கூறிக் கொண்டே பத்மா பரிமாற ஆரம்பித்தார்.
அதை பார்த்த ரகுநந்தனுக்கு கோபம் தலைக்கு ஏற விறுவிறுவென டைனிங் டேபிளின் அருகில் சென்றவர் டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த அனைத்தையும் தரையில் தூக்கிப் போட்டு உடைத்தார்.
அவரின் கோபத்தை பார்த்த அனு பயத்துடன் எழுந்து நின்று கொண்டாள் தன் மீது அன்பை மட்டுமே காட்டும் தந்தை இப்படி மிருகமாக மாறுவார் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை.
“எவனோ ஒரு காட்டுவாசியோட பிள்ளையை இவள் வயித்துல சுமப்பா அது இந்த வீட்டு வாரிசாகனுமா அக்கா எனக்கு என்னவோ பழைசெல்லாம் திரும்பவும் எனக்கு நடக்குற மாதிரி இருக்கு எவனோ ஒருத்தன் என்னை பைத்தியமாக்க பார்க்குறான் நீ என்னடான்னா அவன் பிள்ளைக்கு சோறு ஊட்டி வளர்க்குறியா” என்று கோபத்துடன் பேசியவர் அனுவின் வயிற்றை பார்த்து முறைத்து கொண்டே அங்கிருந்து சென்றார்.
அனு அழுது கொண்டே பத்மாவை இறுக அணைத்து கொண்டாள்
“அத்தை அப்பா எவ்வளவு நல்லவரு ஏன் இப்படி நடந்துக்குறாரு” என்றாள்.
“உன் அப்பனா நல்லவன் அவனோட உண்மையான சுயரூபம் என்னன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றார்.
“நீங்க என்ன அத்தை சொல்றிங்க” என்று அனு அவரிடம் கேட்க
“எல்லாம் நேரம் வரும் போது உனக்கே தெரியும் அனு மா” என்றார் அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க
“முதல்ல சாப்பிடு” என்று அவள் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து கொடுக்க “வேண்டாம் அத்தை அப்பா பாவம் அவரே இன்னும் சாப்பிடல நான் மட்டும் எப்படி சாப்பிட” என்றாள்.
“அனு மா உன் வயித்துல குழந்தை இருக்கு அதுக்காவாது நீ நல்லா சாப்பிடனும்” என்று அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்தவர் அன்று அவளை விட்டு ஒரு நொடி கூட விலகாமல் அவளுடனே படுத்து கொண்டார்.
அனு நன்றாக உறங்கி கொண்டிருந்தவளின் கனவில்
“ஏய் இன்னும் என்ன டி தூங்கிட்டு இருக்க எனக்கு எழுத்து போய் சோறு எடுத்து வை” என்று வில்லாளன் அவளின் கனவில் வந்து கத்தி அவளை மிரட்ட அலறி அடித்து கொண்டு எழுந்தமர்ந்தாள்.
அனு எழுந்தமர்ந்தவள் சுற்றிமுற்றி பயத்துடன் பார்த்தாள் தன் வீட்டில் தன் அறையில் தான் இருக்கிறோம் என்ற நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்.
ஆனால் ரகுநந்தன் அன்று இரவு முழுவதும் உறங்காமல் அது யாராக இருக்க கூடும் என்று யோசித்து கொண்டு இருந்தார் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் அவரின் கண்முன வந்து அவரை இம்சை செய்தது.
கண்களை மூடினாள் அவரின் கண்முன்னே தன் மகளை போன்ற ஒரு பெண் வயிற்று பிள்ளையுடன் அலறி துடிக்கும் காட்சி அவரின் மனக்கண்ணில் வந்து அவரை இம்சை செய்தது.
மறுநாள் காலை பொழுது மெல்ல விடிய பிரதீப் ரகுவின் அறையில் வந்து “மாமா மாமா” என்று கத்தி கொண்டே அவரை எழுப்பினான்.
இரவெல்லாம் உறக்கம் வராமல் இருந்தவர் அதிகாலை வேளையில் தான் உறங்கியிருந்தார் பிரதீப் வந்து அவரை எழுப்ப “என்ன டா” என்றார் கண்களை திறந்து “மாமா டிவியை பாருங்க” என்று கைக்காட்ட ரகுவும் எழுந்தமர்ந்து தன் மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு அந்த அறையில் இருந்த டிவியை பார்த்தார்.
அதில் செய்தி வாசிப்பாளர் “இன்றைய முக்கிய செய்திகள் பிரபல கோடிஸ்வரர் ரகுநந்தன் மகளான அனுநந்தன் இத்தனை மாதங்களாக போலீசார் காணாமல் போனதாக வலை வீசி தேடிக்கொண்டு இருக்க நேற்று அதிகாலை பிரபல புறவழிச்சாலையில் வயிற்றில் குழந்தையுடன் நிற்கும் காட்சி நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது மேலும் அவர் உண்மையிலேயே காணாமல் தான் போனாரா என்ற கேள்வி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று செய்தியை வாசித்து முடித்தார்.
அனு தன் வயிற்றில் கை வைத்து கொண்டு நின்றிருந்த காட்சியும் அந்த செய்தி சேனலில் ஒளிபரப்பானது அதை பார்த்த ரகுநந்தன் அதிர்ச்சியடைந்தார்.
அதுமட்டுமின்றி அவரின் அலைப்பேசிக்கு அவரின் நண்பர்கள் அனைவரும் வரிசையாக வேறு அழைத்திருந்தனர் அதை பார்த்து எரிச்சலடைந்தவர் ஒவ்வொருக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்தார் கோபத்துடன் நேரே வெளியே வந்து அனுவின் அறைக்குள் சென்றார்.
தன் அறையினுள் விறுவிறுவென நடந்து வரும் தன் தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அனு
அவள் அருகில் வந்தவர் அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார்.
அனு கண்கள் கலங்க அதிர்ந்து போய் நிற்க “என் மானத்தை வாங்குறதுக்குன்னே வந்து பிறந்திருக்கியே எங்கேயாவது விழுந்து செத்து தொலைஞ்சிருக்கலாமே எதுக்கு உயிரோட இந்த பிள்ளையை சுமந்து கிட்டு வந்து என் உயிரை எடுக்குற” என்றார் கோபத்துடன்.
Si te apasiona el universo del juego en linea en Espana, estas en el sitio correcto.
Explora los casinos con **mayor seguridad, ofertas exclusivas y juegos emocionantes**.
**?Que encontraras en los sitios de juego de Espana?**
**Licencias oficiales y regulacion espanola para una total tranquilidad.**
**Promociones para nuevos jugadores que no puedes perderte.**
**Ruleta, blackjack, tragaperras y mas con jackpots millonarios.**
**Transacciones seguras con opciones bancarias flexibles.**
**?Quieres conocer la lista de los casinos mas recomendados?**
En esta web hemos recopilado las **opiniones de expertos sobre los principales operadores de juego en Espana**: casinotorero.info
**Unete en un casino de prestigio y empieza a ganar hoy mismo!**
Dei pavamda ava
anu romba pavam
Как выбрать конкурсного управляющего для своего бизнеса, Профессиональные советы начинающему конкурсному управляющему, тайны профессионального роста, Как подготовиться к работе конкурсным управляющим: ключевые моменты, практические рекомендации, выбери свою карьеру, Конкурсный управляющий как специалист: путь к успеху, экспертный анализ, Основные принципы работы конкурсного управляющего, Конкурсный управляющий: секреты успеха в профессии, эксклюзивные советы
конкурсный управляющий [url=http://konkursnyj-upravlyayushhij.ru/]http://konkursnyj-upravlyayushhij.ru/[/url] .
Каркасные дома с удобными планировками и гарантией долговечности
каркасный дом под ключ в спб цена [url=https://karkasnye-doma178.ru/]каркасный дом под ключ в спб цена[/url] .
Maybe anuvoda amma antha villalan pola kaattuvaasi kudumbathai sernthavangalo
😡🙃😌
Коммерческий автотранспорт в лизинг для малого бизнеса: рост без финансовых рисков
лизинг грузовых автомобилей для юридических лиц [url=https://kommercheskiy-avtotransport-v-lizing.ru/gruzovye-avtomobili]https://kommercheskiy-avtotransport-v-lizing.ru/gruzovye-avtomobili[/url] .
Каркасный дом: как защитить ваш дом от капризов погоды благодаря проекту
каркасные дома спб [url=https://www.karkasnye-doma-spb178.ru]https://www.karkasnye-doma-spb178.ru[/url] .
Оформите кредит на карту без предоставления фото паспорта, без лишних документов и проверок.
Взять кредит без фото паспорта [url=niasam.ru/vklady__kredity__kreditnye_karty/zajm-bez-foto-pasporta-udobstvo-i-vazhnye-momenty-248466.html]niasam.ru/vklady__kredity__kreditnye_karty/zajm-bez-foto-pasporta-udobstvo-i-vazhnye-momenty-248466.html[/url] .