அத்தியாயம் 13
அனு அழுது கொண்டே நிற்க
“டேய் தம்பி பாவம் டா அனு அவளா விருப்பட்டா கர்ப்பமா இருக்கா நீ கூட அவளை புரிஞ்சிக்கலனா எப்படி டா” என்று பத்மா கூற
“அக்கா நீ எதுவும் பேசாத இவளை கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் தீராது ஊரே என்னை பார்த்து சிரிக்குது” என்று கூறிக் கொண்டே அவளின் கழுத்தை பிடித்து நெறிக்க பத்மா அவரின் கையை பிடித்து தடுக்க முயற்சி செய்தார் ஆனால் அவர் அவளின் கழுத்தில் இருந்த கையை எடுக்கவேயில்லை இறுக்கமாக பிடித்து இருந்தார்.
ஒரு கட்டத்தில் அனு மூச்சுக்கு திணறிக் கொண்டு இருக்க ஆரோன் அங்கு வந்தவன் பதறி அடித்து கொண்டு ஓடி ரகுவின் கையை தன் பலம் கொண்டு பிடித்து இழுத்தான்.
அனு அழுது கொண்டே இறும ஆரம்பித்தாள் தன் தந்தையின் கோர முகத்தை அவளால் ஏனோ ஏற்க முடியவில்லை மனதின் வலி உடலின் வலி இரண்டும் அவளை வலிக்க செய்ததது.
“சார் மனுசனா நீங்க உங்க பொண்ணு தான அவங்க இப்படியா கொடூரமா நடந்துப்பிங்க ஒருத்தன் அவளை மிரட்டி கர்ப்பமாக்கிருக்கான் நியாயமா நீங்க அவனை தான் கொல்லனும் ஒன்னும் தெரியாத இந்த பொண்ணு என்ன பண்ணுவா பாவம்” என்றான் ஆரோன்.
ரகு தன் கோபம் சற்றும் குறையாமல் அனுவை பார்த்து முறைத்துக் கொண்டே நின்றிருந்தார் “சார் வாங்க எல்லாரும் கிளம்புவோம் முதல் அவன் எங்கே இருக்கான்னு கண்டுபிடிப்போம் அதுக்கு பிறகு அவனை என்னலாம் பண்ணனும்ன்னு நினைக்கிறிங்களோ அதை பண்ணுங்க” என்றான் ஆரோன்.
“ஆமாம் டா தம்பி நம்ம அனு என்ன பண்ணுவா அவள் கெட்டு போகனும்ன்னு நினைச்சு இருந்தா இவ்வளவு நாள் வெளிநாட்டுல படிச்சாலே அங்கேயே கெட்டு போய்ருப்பாலே அவள் பாவம் அப்பாவி டா” என்றார் பத்மா.
அதன் பின் ரகுநந்தன் கிளம்ப அவருடன் அனு, பத்மா, பிரதீப் ஆகிய மூவரும் கிளம்பினர் “அக்கா நீ எதுக்கு வர இங்கேயே இருக்கலாமே” என்று ரகு கேட்க “அனு என்னோட பொண்ணு மாதிரி இந்த மாதிரி ஒரு நேரத்தில அவளை என்னால தனியா விட முடியாது” என்றார் பத்மா.
காரில் செல்ல வேண்டாம் விமானத்தில் சென்று விடலாம் என அனைவரும் விமானத்தில் சென்றனர் அவ்வப்போது அனுவுக்கு வாந்தி வர பத்மா அவளுடன் துணைக்கு இருந்து ஒரு தாயை போல் பார்த்து கொண்டார்.
முதலில் அனைவரும் கொடைக்கானலில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமத்துக்கு சென்றனர்
அனுவிடம் கேட்க அந்த இடம் அங்கிருந்த மக்கள் எனஅ வளுக்கு முன்பு எப்போதும் பார்த்தை போல் தோன்றவில்லை அடுத்ததாக ஊட்டி பக்கத்தில் இருந்த ஒரு மலை வாழ் கிராமத்துக்கு அவளை அழைத்து சென்றனர்.
அந்த காட்டுப்பாதையின் வழியாக செல்லும் போது அனுவின் உடலில் நடுக்கம் பரவியது முன்பு அவள் பார்த்த அதே இடங்களை பார்த்தவள் பத்மாவின் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள் பயத்துடன்.
பத்மாவும் அவளின் கையை ஆறுதலாக பிடித்து கொண்டார்
அவர்கள் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.
“இந்த இடம் தானா மா உனக்கு எதாவது நினைவுக்கு வருதா” என்று கேட்டான் ஆரோன்
அனுவும் பயத்துடன் “ஆமாம் இதே இடம் தான்” என்று கூறி தலையை ஆட்டினாள்.
கார் அந்த மலை வாழ் கிராமத்தின் உள்ளே செல்ல அனுவுக்கு பதட்டம் அதிகரித்தது வயிற்றில் இருந்த குழந்தை வேறு தன் இருக்கும் இடம் இது தான் என்பதை போல் உதைத்தது ஏதோ ஒன்று அவளின் மனதை போட்டு பிசைந்து கொண்டே இருந்தது.
காரை டிரைவர் ஓரம் கட்ட அனைவரும் காரில் இருந்து இறங்கினர் “மா நீங்க போய் எந்த வீடுன்னு தேடி பாருங்க அந்த இடத்தில் அவன் இருந்தான்னா எங்களுக்கு அடையாளம் காட்டுங்க நான் இந்த ஊர்ல இருக்க எல்லாரையும் கூட்டிட்டு வரேன்” என்றான் ஆரோன்.
ஆரோனுக்கு உதவியாக அந்த ஊரின் லோக்கல் கைட் ஒருவர் மொழிபெயர்ப்புக்காக உடன் வந்திருந்தார் அவரை அழைத்து கொண்டு சென்றவன் அங்கிருந்த ஊர் மக்கள் அனைவரையும் ஊரின் மத்தியில் அழைத்து வந்து நிற்க வைத்தான்.
அனு ஒவ்வொரு குடிசையையும் பார்த்து கொண்டே நடந்து சென்றவள் இறுதியாக ஒரு குடிசை வீடு வர அவள் கால்கள் அசையாமல் அங்கேயே நின்றது “இந்த வீடு தானா” என்று பத்மா அவளிடம் கேட்க
அவளும் “ம்ம்” என்றாள் கண்கள் கலங்க பயத்துடன்.
“இன்னைக்கு அவனை கொல்லாம விட மாட்டேன்” என்று கோபத்துடன் ரகுநந்தன் உள்ளே செல்ல அங்கே யாரும் இல்லை.
“ஏய் அனு என்ன பொய் சொல்றியா நீ இங்கே உள்ளே யாருமே இல்லையே” என்று ரகுநந்தன் கேட்க
அவளும் உள்ளே வந்து பார்த்தாள் ஆனால் அங்கே யாரும் இல்லை
“இல்ல பா அவன் இங்கே தான் இருப்பான் இப்போ எங்கே போனான்னு தெரியலை” என்றாள்.
“அவன் எங்கே மாயமா மறைஞ்சி இருப்பானா” என்று ரகுநந்தன் கேட்க
“மாமா வெளியே ஆரோன் சார் எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்காரு அங்கே போய் பார்ப்போம்” என்று கூறினான் பிரதீப்.
அனைவரும் அங்கிருந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் வரிசையில் நிற்க “அனு மா நீங்க போய் பார்த்துட்டு இதுல யாருன்னு சொல்லுங்க” என்றான் ஆரோன்.
அனு அவன் கூறியதை கேட்டு அங்கிருந்த ஆண்கள் ஒவ்வொருவரையும் வரிசையாக பார்த்து கொண்டே வர ஆனால் வில்லாளன் அங்கே இல்லை.
“இவங்கல்ல யாரும் இல்லை” என்று அனு ஆரோனிடம் கூற ரகுநந்தனுக்கு கோபம் வந்தது
“எங்க எல்லாரையும் முட்டாள் ஆக்க பார்க்குறியா நீ உண்மையை சொல்லு நீ யார் கூட ஓடி போன” என்று அவர் கத்த ஆரம்பித்தார்.
“அப்பா நான் உண்மையை தான் சொல்றேன் என்னை நம்புங்க” என்றாள் அனு அழுது கொண்டே அப்போது அவள் எதார்த்தமாக நிமிர்ந்து பார்க்க அவள் முன் அல்லி நின்றிருந்தாள்.
அவளை பார்த்த அனு அவள் அருகில் ஓடி சென்று “அல்லி எப்படி இருக்க என்னை யாரு நம்ப மாட்றாங்க நீயாவது அவங்க எல்லார் கிட்டையும் உண்மையை சொல்லு பிளீஸ்” என்றாள்.
அல்லி அவளை ஏதோ புதிதாக பார்ப்பவளை போல் பார்க்க “சார் அந்த பொண்ணுக்கு இவங்க பேசுற எதுவும் புரியலைன்னு நினைக்கிறேன்” என்றார் அந்த டூரிஸ்ட் கைட்.
“இல்லை அவளுக்கு தமிழ் தெரியும் நீ சொல்லு வள்ளி என்னை தெரியும் தான உனக்கு” என்று கேட்க
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
அந்த மொழிபெயர்ப்பாளர் அவர்களின் மொழியில் வள்ளியிடம் கேட்க அவளோ மீண்டும் பதிலுக்கு ஏதோ கூற “என்ன சொன்னாங்க” என்று கேட்டான் ஆரோன்.
“அந்த பொண்ணுக்கு இந்த பொண்ணை யாருன்னே தெரியலையாம் சார் இதுவரை பார்த்து கூட இல்லைன்னு சொல்லுது” என்றான்.
“அத்தை இவள் பொய் சொல்றா இவள் மட்டும் இல்லை இவங்க எல்லாருக்குமே என்னை நல்லா தெரியும் அவன் தான் ஏதோ பண்ணிருக்கான் நல்லா விசாரிச்சு பாருங்க” என்றாள் அனு அழுத கொண்டு தேம்பலுடன்.
ஆனால் அனு கூறியதை யாரும் நம்பவில்லை “என்னை யாரும் நம்ப மாட்டிங்கல்ல இதோ இந்த மரத்தடியில தான் எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆச்சு இது அவன் கட்டுன தாலி தான்” என்று தன் கழுத்தில் இருந்த கருப்பு கயிறை காட்டினாள்.
“அதுமட்டுமில்லாம நாங்க கல்யாணம் முடிஞ்ச உடனே எங்க ரெண்டு பேரையும் ஒரு நெருப்பை தாண்ட சொன்னாங்க இது எல்லாமே உண்மை” என்றாள் அழுது கொண்டே.
அந்த மொழி பெயர்ப்பாளர் “ஆமாம் சார் இவங்க எல்லாரும் கல்யாணம் முடிஞ்ச உடனே நெருப்பை தாண்டி போவாங்க இது எப்படி இந்த பொண்ணுக்கு தெரியும்” என்றார்.
“அய்யோ என்னை நம்புங்க இத்தனை மாசமா நான் இங்கே தான் இருந்தேன் அவன் ஒருத்தன் மட்டும் இங்கே இல்லை அவனை தவிர இங்கே எல்லாரும் இருக்காங்க” என்றாள் அனு அழுது கொண்டே.
அப்போது அவள் அருகில் ஒரு வயதான பெண்மணி நின்றிருக்க அவரை பார்த்தவள் “இதோ இவங்க தான் நான் கர்ப்பமா இருக்கேன்னு முதல் முறையா என் கிட்ட சொன்னாங்க” என்றாள் அவரின் கைப்பிடித்து.
“இது எனக்கு என்னவோ சரியா வரும்ன்னு தோனல இவங்களை எல்லாம் இப்படி விசாரிச்சா மட்டும் பத்தாது” என்ற ரகுநந்தன் தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தவர்.
“பத்து நிமிசத்துல நம்ம ஆளுங்களோட இங்கே வா” என்றார்.
“சார் என்ன பண்ணுறிங்க நாம இங்கே வந்து விசாரிக்க பர்மிஷன் கூட வாங்கல” என்றான் ஆரோன்.
“என்ன நடந்தாலும் சரி இன்னைக்கு அவன் யாருன்னு கண்டுப்பிடிக்காம நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்” என்றார் ரகுநந்தன்.
அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தனர் அவரின் அடியாட்கள் ஒரு 20-30 பேர் வரிசையாக ஒவ்வொரு காரில் வந்து இறங்கினர்.
“டேய் கபாலி இங்கே இருக்கவனுங்க எல்லாரையும் அடிச்சி சாவடிங்க டா அவனுங்க வாயில இருந்து உண்மை வர வரையும் ஒருத்தரையும் விடாதிங்க” என்றார்.
“சார் இது ரொம்ப பெரிய தப்பு
இது மட்டும் வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும்” என்றான் ஆரோன் ஆனால் அவர் அவனின் பேச்சை காதில் கூட வாங்கவில்ல பெண்கள் ஆண்கள் என ஒருவரையும் விடாமல் அடித்து வெளுக்க ஆரம்பித்தனர்.
அனைவரும் அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓட ஆரம்பித்தனர் அவர்களின் வீடுகளையும் அடித்து உடைத்து நொறுக்க ஆரம்பித்தனர் வயதானவர்கள் என்று கூட பாராமால் அவர்களையும் அடித்து துவைத்தனர்.
ஒரு கட்டத்திற்க்கு மேல் அனுவே அவர்களை பாவம் பார்த்து “அப்பா வேண்டாம் பா அவன் பண்ணின தப்புக்கு இவங்க எல்லாரும் என்ன பண்ணுவாங்க” என்று கெஞ்சினாள்
“ஏய் வாயை மூடு எல்லாம் உன்னால” அவளிடம் கத்தினார் அவள் தந்தை.
அப்போது அந்த இடத்திற்க்கு யாரும் எதிர்ப்பாரா வண்ணம் வெள்ளை நிற ஜீப் ஒன்று வந்து நின்றது அதிலிருந்து வெள்ளை நிற பார்மல் ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேன்ட் அணிந்து இறங்கினான் ஒருவன்.
அவன் கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை பார்த்து சுட அங்கிருந்து அனைவரும் துப்பாக்கி சத்தம் கேட்டு யார் என்று திரும்பி பார்த்தனர்.
அத்தியாயம் 14
தூப்பாக்கியில் இருந்த தோட்டா வானத்தை நோக்கி செல்ல அந்த சத்தத்தில் மரத்தில் இருந்த பறவைகள் பயத்துடன் தன் சிறகுகளை விரித்து சத்தத்துடன் பறந்து சென்றன.
அங்கு இருந்த அனைவரின் பார்வையும் சத்தம் வந்த திசையை நோக்கி சென்றது அடியாட்கள் அங்கிருந்த மக்கள் உட்பட அனைவரும் அந்த சத்தத்தில் பின்னே திரும்பி பார்த்தனர்.
ரகுநந்தன் அங்கே நின்றிருந்தவனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார் அவருக்கு மட்டுமல்ல பத்மாவுக்கும் அவனை பார்த்து பேரதிர்ச்சியாக தான் இருந்தது.
ரகுநந்தனும் பத்மாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர் “டேய் தம்பி இவன்…” என்று கூறும் போதே பத்மாவின் இதழ்கள் பயத்தில் தந்தியடித்தது பேச்சு தடுமாறியது “இ…வ…ன் இ…ன்…னு…ம் சா…க…லை..யா டா தம்பி” என்றார் திக்கி திணறி கூறி முடித்தார் பத்மா.
அவர் கேள்விக்கு ரகுநந்தன் எதுவும் பதில் பேசாமல் வாயடைத்து போய் நின்றிருந்தார் அவரின் முகத்தில் குப்பென்று வியர்வை வடிய ஆரம்பித்தது கைகள் நடுங்க ஆரம்பித்தது.
அனு அவனை பார்த்து வாயை பிளந்து நின்றிருந்தாள் ஆம் அது வில்லாளன் தான் இந்த ஒரு வாரத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான்.
எப்போதும் சட்டையில்லாமல் வேட்டியில் இருப்பவன் இன்று நீட்டாக பார்மல் ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து இருந்தான் முகத்தில் தாடி இல்லை சுத்தமாக மழிக்கப்பட்டு இருந்தது முறுக்கு மீசை தலையில் இருந்த ஜடா முடி இல்லை கிராப் வெட்டி இருந்தான் கம்பீரமான தோற்றத்துடன் தன் கையில் தூப்பாக்கியை வைத்து கொண்டு நின்றிருந்தவனை பார்க்க ஏதோ படத்தில் வரும் நாயகர்களை போன்று இருந்தது.
இத்தனை நாள் தன்னுடன் இருந்தவன் இவன் தானா என்று அவளே ஆச்சரியப்பட்டு நின்றாள் ஒரே ஒரு கணம் தான் அதிர்ச்சியில் நின்றிருந்தாள் அனு அடுத்த நிமிடம்
“சார் இவன் தான் என்னை கடத்திட்டு போனவன்” என்றாள் அவனை கைக் காட்டி கொண்டே ஆரோனிடம்.
ஆரோன் எதுவும் பதில் கூறாமல் அதிர்ந்து போய் அவனை பார்த்து கொண்டு இருந்தான்.
ஆரோனுக்கும் அவனை பார்த்து பேரதிர்ச்சியாக தான் இருந்தது
அவனின் நெருங்கிய நண்பன் தான் வில்லாளன் இருவரும் ஒரே நேரத்தில் தான் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தனர் அவன் ஒரு பெண்ணை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கிறான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை
ஏனெனில் கல்லூரியில் கூட அவன் எந்த பெண்ணையும் இதுவரை ஏறெடுத்து பார்த்தில்லை அவனா இப்படி என்று நினைத்தான்.
“சார் இவன் தான் அது ஏன் எதுவுமே பேசாம நிற்க்கிறிங்க” என்று அனு கேட்டுக் கொண்டிருக்க,
ரகுநந்தன் “டேய் அவனை அடிச்சு கொல்லுங்கடா எவன் அவனை சாகடிக்கிறிங்களோ அவனுக்கு பத்து கோடி ரூபாய் இப்போவே தரேன்” என்றார் சத்தமாக.
“சார் வேண்டாம் அவனை சீண்டி பார்க்காதிங்க அவன் ரொம்ப மோசமானவன்” என்று ஆரோன் கூறிக் கொண்டே இருக்கும் போதே
அங்கிருந்த அடியாட்கள் அனைவரும் வில்லாளனை நோக்கி தெறித்து ஓட ஆரம்பித்தனர்.
தன்னை நோக்கி கத்தி கடப்பாரை என ஆபத்தான ஆயுதங்களுடன் ஓடி வருபவர்களை பார்த்தவனின் கண்ணில் துளி அளவு கூட பயமில்லை இதழின் ஓரத்தில் லேசாக புன்னகை மலர்ந்தது.
வில்லாளன் தன் கையில் இருந்த சிறிய துப்பாக்கியை ஜீப்பின் கதவை திறந்து உள்ளே வைத்தவன் உள்ளே இருந்த பெரிய மிஷின் கன் ஒன்றை வெளியே எடுத்தான் தன்னை நோக்கி வருபவர்களின் ஒவ்வொருவரின் கால் கையிலும் குறி பார்த்து அசால்ட்டாக வரிசையாக சுட ஆரம்பித்தான்.
“சொன்னா கேட்டா தான எங்க டீம்லையே பேஸ்ட் ஷூட்டர் இவன் ஒருத்தன் தான்” என்று புலம்பிக் கொண்டிருந்தான் ஆரோன்.
“இவரை உங்களுக்கு முன்னடியே தெரியுமா” என்று அனு ஆச்சரியத்துடன் கேட்டாள்
“தெரியுமா வா இவன் என்னோட பெஸ்ட் பிரண்ட் மா நானும் இவனும் சேர்ந்து தான் யூபிஎஸ்சி கிளியர் பண்ணினோம் நான் ஹைதராபாத் போயிட்டேன் இவனுக்கு தமிழ்நாட்ல போஸ்ட்டிங் ரொம்ப நாளுக்கு அப்பறம் இவனை இன்னைக்கு தான் பார்க்குறேன்
எப்பவும் இப்படி தான் ஒரு மாதிரி விரப்பா சுத்துவான் இத்தனை வருஷம் கழிச்சு இவனை இப்படி பார்ப்பேன்னு நான் நினைச்சு கூட பார்க்கல” என்றான் ஆரோன்.
அனு கண்கள் அவன் கூறியதை கேட்டு இன்னும் மிரண்டு போனது.
ரகுநந்தன் காதிலும் இது விழுந்தது
வில்லாளன் தன்னை நோக்கி வருபவர்களை காக்காய் குருவியை போல் சுட்டு தள்ளிக் கொண்டிருந்தான்.
இன்னும் சிலர் அவன் சுடுவதை பார்த்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தனர்.
கபாலி ரகுநந்தன் அருகில் ஓடி வந்தவன் “சார் அவன் என் ஆளுங்களை எல்லாம் கண்ட மேனிக்கு சுடுறான் நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்களே நிறுத்த சொல்லுங்க சார் அவனை” என்று கதறினான்.
“யோவ் அவன் இப்போ இவரு சொன்னாலாம் கேட்க மாட்டான் சுட்டு தள்ளிட்டு தான் மறுவேலை பார்ப்பான் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணு வந்து உன் ஆளுங்களை அள்ளிட்டு போகட்டும்” என்றான் ஆரோன்.
கபாலி தன் மொபலை எடுத்து கொண்டு சிக்னல் கிடைக்கும் இடத்திற்க்கு சென்றவன் “ஹலோ ஆம்புலன்ஸ்” என்று விஷயத்தை கூறி வர சொன்னான்.
வில்லாளன் அங்கிருந்த அனைவரையும் சுட்டு முடிக்க அவனின் பின்னே வந்து ஒருவன் அவனை அரிவாளால் வெட்ட பார்க்க அவனோ பின் பக்கம் திரும்பாமலேயே அவன் கையை பிடித்து கொண்டான்.
அவன் கையை பிடித்து வளைக்க “அம்மா அய்யோ வலிக்குதே என்னை விடு டா” என்று அந்த காட்டு விலங்குகளே பயந்து ஓடும் படி வலியில் கத்த
வில்லாளன் அவன் கையை விடாமல் பிடித்து வளைத்தான் உள்ளே அவன் எலும்பு உடைந்து நொறுங்கும் சத்தம் வெளியே வரை கேட்டது.
அனு அவனை பார்க்க கூட முடியாமல் கண்ணை இறுக மூடிக்கொண்டு தன் அத்தையின் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள் “காக்க காக்க” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
வில்லாளன் அவன் கையை பிடித்து வளைத்ததில் முழுமையாக அவன் கை உடைந்து போனது அதில் கீழே விழுந்தவன் வலியில் கத்தி கதறி கொண்டு இருந்தான்.
அவனை கண்டுகொள்ளாமல் ரகுநந்தன் பத்மாவையும் முறைத்து கொண்டே அவர்களின் அருகில் வந்தான் வில்லாளன்.
பத்மாவுக்கு அவன் அருகில் நெருங்க நெருங்க உடலே பயத்தில் நடுங்க ஆரம்பித்தது “அத்தை உங்களுக்கு என்ன ஆச்சு” என்று அனு அவரிடம் கேட்க பதில் கூறும் நிலையில் இல்லை அவர் வில்லாளனை கண் விலகாமல் பார்த்து கொண்டிருந்தார்.
வில்லாளன் கண்கள் அவர்கள் இருவரையும் பார்த்து கோபத்தில் ரத்த நிறத்தில் சிவக்க ஆரம்பித்தது
ஆரோனுக்கு இவர்கள் இருவரும் பயந்து நடுங்குவதை பார்த்து ஏதோ ஒன்று புரிவதை போல் இருந்தது ஆனால் அவன் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.
வில்லாளன் ரகுநந்தன் முன் வந்து நிற்க “என்ன டா திமிரா என் முன்னாடியே வந்து தைரியமா நிக்குற யாரு டா நீ” என்றார் கோபத்துடன்.
“நான் காளியோட பையன்” என்றான் அவரை எரிப்பதை போல் பார்த்து கொண்டே அவன் கூறியதை கேட்ட ரகுநந்தன் ஒரு கணம் ஆடிப்போய் நின்றுவிட்டார்.
“நீ இன்னும் சாகலையா உயிரோட தான் இருக்கியா” என்று கேட்க
“என் அப்பாவை கொன்னு எரிச்ச மாதிரி என்னையும் எரிச்சடலாம்ன்னு நினைச்சிங்களா
உங்களை கொல்ல தான் பினிக்ஸ் பறவையா உருமாறி உயிரோட வந்துருக்கேன்” என்றான் வில்லாளன் கொலைவெறியுடன் அவரை பார்த்து கொண்டே.
“அதுக்காக என் பொண்ணு வாழ்க்கையை கெடுப்பியா டா நீ படுபாவி” என்று கோபத்துடன் கேட்க
“எந்த காட்டுவாசியோட ரத்தம் உங்க வீட்ல சேர கூடாதுன்னு நினைச்சிங்களோ அதே காட்டுவாசியோட வாரிசு இன்னைக்கு உங்க பொண்ணு வயித்துல வளருது” என்று சிரித்து கொண்டே கூற.
ரகுநந்தனுக்கு கோபம் தலைக்கு ஏறியது அவன் சட்டையை கொத்தாக பிடித்தவர் “நான் நினைச்சா உங்க அப்பனை கொன்ன மாதிரியே உன்னையும் கொல்ல முடியும் உன் வாரிசையும் அழிக்க முடியும் பார்க்குறியா” என்றார் கோபத்துடன்.
“என்ன மாமா அந்த அளவுக்கு கூட மூளை இல்லாத முட்டாளா நான் இன்னும் ஒரே மாசத்துல நானே உங்களை போட போறேன் அதுக்கு அப்புறம் நரகத்துக்கு போய் என்னை கொல்லுவிங்களா,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா மாமா உங்களை சுத்தி இருக்க முக்கால்வாசி பேரை நான் ஏற்கனவே விலைக்கு வாங்கிட்டேன், அவங்க நான் சொல்றதை மட்டும் தான் செய்வாங்க,
உங்க கழுத்துல ஒரு கோடு போட்டு உங்க கதையை முடிக்க சொன்னா கூட செய்வாங்க
அது உங்க தோட்டக்காரானா இருக்கலாம் உங்க நெருங்கிய நண்பரா இருக்கலாம் இன்னும் யாரா வேணும்னா கூட இருக்கலாம் நீங்க கண்ணை சிமிட்டினா கூட அது எனக்கு தெரியும்” என்றான்.
ரகுநந்தன் அவனை அதிர்ந்து போய் பார்க்க “டேய் யார்ரா நீ என் மாமாவையே மிரட்டுறியா அவரு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா” என்று அவன் முன் வந்த பிரதீப் அவனுடன் சண்டைக்கு செல்ல “யார்ரா நீ ஜோக்கர் தள்ளி போடா” என்க.
“என்னையே ஜோக்கர்ன்னு சொல்லுவியா” என்று கூறிக் கொண்டே பிரதீப் அவனிடம் கையை ஓங்கி கொண்டே அடிக்க வர வில்லாளன் தன் இடையில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து அவன் கையில் சுட்டான்.
அவன் கையில் இருந்து ரத்தம் ஒழுக தள்ளி போய் விழுந்தான்
பத்மா “பிரதீப்” என்று கத்தி கொண்டே அவன் அருகில் ஓடினார்
“நீயெல்லாம் நல்லா இருப்பியா டா பாவி” என்று பத்மா கண்ணீர் விட்டு கதற வில்லாளன் முகத்தில் இப்போதும் அதே மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது.
அந்த நேரம் வரிசையாக அங்கே ஆம்புலன்ஸ் வந்து நிற்க
“டேய் ஜோக்கர் போய் ஆம்புலன்ஸ்ல படுத்துக்கோ போ” என்று வில்லாளன் கூற பிரதீப் அவனை முறைத்து கொண்டே எழுந்து சென்றான்.
“என்ன மாமா ரொம்ப கஷ்டமா இருக்கா மாப்பிள்ளைக்கு அடிப்பட்டது அச்சோ பாவம்ல” என்றான்.
“டேய் நான் உன்னை கொல்லாம விட மாட்டேன் டா நான் யாருன்னு தெரியாம என் கிட்டயே விளையாடிட்டு இருக்க” என்றார் ரகுநந்தன்.
“அய்யோ எனக்கு ரொம்ப பயமா இருக்கே” என்றவன்
“அதுக்குள்ள நான் உன்னை போட்ருவேன் டா நான் நினைச்சா உன்னை இப்போ கூட கொல்ல முடியும் ஆனா நான் இப்போ உன்னை கொல்ல மாட்டேன் உன்னை அனு அனுவா ரசிச்சு சித்ரவதை பண்ணி சாகடிக்கனும் ஒரு நாள் நீயே வந்து என் கிட்ட கதறுவ என்னை கொன்னுடுன்னு அன்னைக்கு தான் உன்னை கொல்லுவேன்” என்றான் வில்லாளன்.
wow super
SUPER
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌