அத்தியாயம் 15
அவன் பேசியதை கேட்ட அனு கோபத்துடன் அவனின் அருகில் வந்தவள் வில்லாளன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டாள்.
“பாவி என் வாழ்க்கையை தான் கெடுத்த இப்போ என் அப்பாவையும் மிரட்டி கொல்ல பார்க்குறியா உன்னை சும்மா விட மாட்டேன் உன் மேலே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன் டா” என்றாள்.
“என்னன்னு கம்ப்ள்னைட் கொடுப்ப செல்லம் என் புருஷன் என்னை கெடுத்து எனக்கு பிள்ளையை கொடுத்துட்டான்னா இதோ பாரு” என்று அவளிடம் தன் மொபைலை ஆன் செய்து அவள் முன் நீட்டினான்.
அதில் இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ததற்க்கான சர்பிக்கேட்டின் புகைப்படம் இருந்தது அதில் இருவரின் புகைப்படங்கள் மற்றும் அவளின் கையொப்பம் கூட இருந்தது அனு அதனை பார்த்து அதிர்ந்து போய் நிற்க
“இது என்ன இன்னைக்கு நேத்து
நடந்ததுன்னு நினைக்கிறியா பதினெட்டு வருசமா பிளான் பண்ணி இருக்கேன் இந்நேரம் நீ என்னை அடிச்சதுக்கு உன் வயித்துல குழந்தை மட்டும் இல்லாமல் இருந்துருக்கனும் உன்னை அடிச்சி துண்டு துண்டா வெட்டி காட்டு நரிக்கு இரையா போட்டுருப்பேன்” என்றான் வில்லாளன்.
“வில்லா திஸ் இஸ் டூ மச் அந்த பொண்ணு பாவம் அவள் என்ன பண்ணுவா” என்றான் ஆரோன் அவன் முன் வந்து
“அப்பாவோட சொத்து மகளுக்கு தான அப்போ அவரோட பாவமும் மகளுக்கு தான் போய் சேரனும்” என்றான்.
“டேய் இது என்ன லாஜிக் அவள் சின்ன பொண்ணு டா நீ படிச்சவன் தான உனக்கு தெரியாத சட்ட திட்டமா முறையா கம்ப்ளைன்ட் பண்ணி தண்டனை வாங்கி கொடுக்கலாம்”
“தண்டனை யாரு இவனுக்கா மூணு கொலை பண்ணிட்டு நிம்மதியா தான சுத்திட்டு இருக்கான்
இதுல சிறந்த தொழில்திபர்ன்னு பட்டம் வேற இந்தாளுக்கு நான் கொடுக்குற தண்டனை தான் சரியா இருக்கும்” என்றான் ரகுவை பார்த்து முறைத்து கொண்டே.
“இந்த பாரு உன் பொண்ணை கெடுத்தவன் யாருன்னு தெரிஞ்சிருச்சுல்ல அது நான் தான், அவள் வயித்துல இருக்க அந்த பிள்ளைக்கு அப்பன் இந்த காட்டுவாசி தான் இதுக்கு மேல இங்கே இருக்கவங்க யார் மேலயாவது உன் கைப்பட்டுச்சு உன்னை உரு தெரியாம அழிச்சிடுவேன்” என்று மிரட்டினான்.
“உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது டா இன்னும் ஒரே மாசத்துல உன்னை கொன்னு இதே இடத்துல வந்து புதைக்கல என் பெயர் ரகுநந்தன் இல்லை டா” என்றார்.
“ஓ அப்படியா” என்றவன் அவர் சற்றும் எதிர்பாராத சமயம் அவரின் பாக்கெட்டில் இருந்து அவரின் போனை எடுத்தவன் யாரோ ஒருவரின் எண்ணுக்கு அழைத்து “இந்தா பேசு” என்று அவரின் கையில் கொடுத்தான்.
ரகுநந்தன் யோசனையுடன் அவன் கையில் இருந்த மொபலை வாங்கியவர் அதை காதில் வைத்தார்
“சார் நான் உங்க பிஏ சுரேஷ் பேசுறேன்” என்றான் பதட்டத்துடனே.
“என்ன சுரேஷ் என்ன ஆச்சு” என்று இவரும் பதறிக் கொண்டே அவரிடம் கேட்க “சார் நம்ம கெமிக்கல் பேக்ட்ரி தீ பிடிச்சு எறியுது உடனே வாங்க சார்” என்றான் பதட்டத்துடனே ரகுநந்தன் அதை கேட்டு ஆடிவிட்டார் வில்லாளனை முறைக்க.
“என்னோட மக்கள் மேல கையை வச்சிட்டு நீ எப்படி சும்மா போகலாம் உனக்கும் அதுக்கான தண்டனை வேணும்ல ஓடு இல்லைன்னா உன் அடுத்த பேக்ட்ரியும் தீ பிடிச்சு எரியும்” என்றான் புன்னகையுடனே.
ரகுநந்தன் பதறி அடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார் அவருடன் அனுவும் அவனை முறைத்து கொண்டே அங்கிருந்து சென்றாள்.
ஆரோன் அவன் அருகில் சென்றவன்
“உன்னை இப்படி ஒரு சூழ்நிலையில் பார்ப்பேன் நினைச்சு கூட பார்க்கலை டா இருந்தாலும் நீ பண்ணினது ரொம்ப பெரிய தப்பு டா” என்றான்.
“என்ன டா தப்பு என்ன தப்பு நான் பண்ணினது எல்லாமே எனக்கு சரி தான் உனக்கு என் வலி என்னைக்குமே புரியாது வலியை அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தான் தெரியும் அந்த வலி எப்படி இருக்கும்ன்னு சும்மா நின்னு வேடிக்கை பார்க்குறவங்களுக்கு என்ன தெரிய போகுது” என்றான் கோபத்துடன் வில்லாளன்.
அதே நேரம் ரகுநந்தன் அங்கு செல்வதற்க்குள் அவரின் மொத்த பேக்ட்ரியும் எரிந்து சாம்பலாக இருந்தது மூன்று மணி நேர போராட்டத்திறக்கு பின் வெறும் எரிந்த கட்டிடம் மட்டுமே அங்கே எஞ்சி இருந்தது.
ரகுநந்தன் அதை பார்த்த கண்ணீர் விட ஆரம்பித்தார் “ பல கோடி மதிப்புள்ள என்னோட சொத்து போச்சே நான் அவனை சும்மா விட மாட்டேன்” என்று அந்த இடமே அதிரும்படி கத்தினார்.
வீட்டிற்க்கு கோபத்துடன் வந்தவர் ஏதோ பைத்தியம் பிடித்தவரை போன்று நின்றிருந்தவர்
என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கோபத்துடன் தூக்கி போட்டு உடைக்க ஆரம்பித்தார்.
அவரின் கோபத்தை பார்த்து பயந்த அனு “அப்பா அப்பா என்ன பண்ணுறீங்க” என்று அவரை பிடித்து தடுக்க முயற்சி செய்ய
ரகுநந்தன் திரும்பியவரின் கண்கள் அவள் வயிற்றில் இருந்த குழந்தையை தான் முதலில் பார்த்தது அதில் கோபமடைந்தவர் தன் கையில் இருந்தத கட்டையால் அவள் வயிற்றில் அடிக்க ஓங்கி கொண்டு போக அனு தன் வயிற்றில் கை வைத்து கொண்டு தன் ஒற்றை கையால் அவரின் கையை பிடித்து தடுத்தாள் “அப்பா என்ன பண்ணுறிங்க உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு” என்றாள்.
“ஆமா பைத்தியம் தான் பிடிச்சிருக்கு ஒரு காட்டுவாசியோட ரத்தம் இந்த வீட்ல இருக்கவே கூடாது” என்றார்.
அனு அவர் எங்கே தன் குழந்தையை கொன்றுவிடுவாரோ என்று பயந்தவள் அவரை கீழே இடித்து தள்ளிவிட்டு வேகமாக ஓடிச்சென்று அந்த அறையின் கதவை வெளியே தாழிட்டாள்.
அவளுக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து அங்கிருந்து வெளியேற போனவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது ஆரோன் தன் கார்ட்டை அவளிடம் கொடுத்துவிட்டு சென்றது.
தன் அறையின் உள்ளே அந்த கார்டை எடுத்து உடனே ஆரோனுக்கு தன் வீட்டின் லேன்ட்லைன் வழியாக அழைத்தாள்.
அந்த அறையின் கதவை விட்டால் உடைத்து விடுவேன் என்பதை போல் தட்டி கொண்டு இருந்தார் ரகுநந்தன்
“அனு கதவை திற” என்று கத்தி கொண்டே இருந்தார்.
அனுவும் பதட்டத்துடனே நின்று கொண்டு இருந்தாள் ரிங் போய் கொண்டே இருக்க நான்காவது ரிங்கில் அழைப்பை எடுத்த ஆரோன் “ஹலோ” என்றான்
“ஹலோ சார் நான்…நான்.. அனு பேசுறேன் பிளீஸ் என்னை காப்பாத்துங்க” என்றாள் அழுதுகொண்டே.
“அனு உனக்கு ஒன்னும் இல்லையே மா நீ இப்போ எங்கே இருக்கன்னு சொல்லு நான் உடனே அங்கே வரேன்” என்றான் ஆரோன்.
“நான் என் வீட்ல தான் இருக்கேன் சார் என் அப்பா என்னை அடிக்க வராரு என் குழந்தையை எதாவது பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு பிளீஸ் கொஞ்சம் சீக்கிரமா வாங்களேன்” என்றாள் அழுகையுடனே.
“நீ முதல்ல உங்க வீட்டிலிருந்து வெளியே போ மா ரெண்டு தெரு தள்ளி ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும் அங்கே போய் நில்லு நான் இப்போ உடனே வரேன்” என்றான் ஆரோன்.
“சரி சார்” என்று கூறிவிட்டு அழைப்பு துண்டித்த அனு அவன் கூறிய பஸ் ஸ்டாப்பில் சென்று நிற்க அடுத்த பத்தாவது நிமிடம் அங்கே ஓடி வந்தார் ரகுநந்தன்.
“மா அனு நீயில்லாம அப்பா எப்படி இருப்பேன் பிளீஸ் என் கூடயே இரு நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்” என்று கெஞ்ச அனு அவரை பார்த்து பயப்பட ஆரம்பித்தாள்.
அங்கே பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அவர்களை வித்தியாசமாக பார்த்தனர் இன்னும் சிலர் அங்கே நடப்பவைகளை தங்கள் மொபைலில் படம் பிடிக்க ஆரம்பித்தனர்.
“சொன்னா கேளு நீ என் கூட வா” என்று அவர் ஒரு கட்டத்திற்க்கு மேல் அனுவை மிரட்ட ஆரம்பித்தார்
“அப்பா நான் வர மாட்டேன் நீங்க வீட்டுக்கு போங்க எல்லாரும் பார்க்குறாங்க” என்றாள்.
அப்போது ஆரோன் அந்த இடத்திற்க்கு தன் காரில் வந்து சேர்ந்தான் அங்கு வந்து காரை நிறுத்தியவன் காரில் இருந்து இறங்கி அனுவின் கைப்பிடித்து அழைத்து செல்ல
“அம்மாடி அப்பாவை விட்டு போய்டாத டா” என்று கெஞ்சி அழுதார் ரகுநந்தன்.
ஒரு கணம் அவரை பார்த்து அனு இளக ஆரம்பித்தாள் “சொன்னா கேளு மா நீ என் கூட வா உங்க அப்பாவுக்கு வில்லாளன் மேலே இருக்க கோவத்துல உன்னை என்ன வேணும்னாலும் பண்ணுவாரு” என்றான்.
“அம்மாடி நீயும் அப்பா கூட இல்லைன்னா நான் என்ன மா பண்ணுவேன்” என்று அவளின் கையை பிடித்து கொண்டார்.
அனு அப்போதும் இளகி வருவதை போல் தெரியாததால் “அம்மாடி நான் வேணும்னா உன் கால்ல கூட விழுறேன்” என்று அவர் அனுவின் காலில் விழ போக “அப்பா என்ன பண்ணுறீங்க” என்று அவரின் கையை பிடித்து கொண்டாள்.
“அப்பா நான் உங்க கூட வரேன்” என்றாள் “மா என்ன சொல்ற” என்றான் அதிர்ச்சியுடன் ஆரோன்.
“சார் நான் என் அப்பா கூடவே போறேன் அவரை இந்த நிலையில தனியா விட்டுட்டு போக எனக்கு விருப்பம் இல்லை” என்றாள் அனு.
“மா அவரு இப்போ இருக்க மனநிலையில உன்னை எதாவது பண்ணிட்டா” என்று கேட்டான் ஆரோன்.
“பரவாயில்லை சார் இனி நான் உயிரோட இருந்து என்ன பண்ண போறேன்” என்று அவருடன் சென்றாள்.
“அப்பா வாங்க போலாம்” என்று அவரை தன்னுடன் அழைத்துச் சென்றாள் அனு.
ஆரோன் அவளை பார்த்து கொண்ட நின்றிருந்தான் அனுவை பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது.
அவனுடைய மொத்த கோபமும் வில்லாளன் புறம் திரும்பியது காரில் ஏறி அவனை பார்க்க சென்றான்.
நேரே அவன் வீட்டிற்க்கு சென்றவன்
கதவை படாரென திறந்து கொண்டு உள்ளே சென்றான் அங்கே வில்லாளன் தன் வீட்டில் இருந்த உடற்பயிற்சி கூடத்தில் ஓடு பொறியில்(treadmill) வியர்வை விறுவிறுக்க ஓடிக் கொண்டு இருந்தான்.
ஆரோனை பார்த்தவன் அதன் இயக்கத்தை நிறுத்திவிட்டு “என்ன டா இந்த நேரத்துல வந்திருக்க எதாவது முக்கியமான விஷயம்” என்று கேட்டான்.
“டேய் நீயெல்லாம் மனுஷனா டா எப்படி டா ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு ஏதோ ஒன்னுமே நடக்காத மாதிரி சாதரணமா இருக்க” என்றான்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Yen sir unga kadha heroes la romba overa hha pandranga🙂🤧
sema super bro but anu romba pavam
So sad for anu