அத்தியாயம் 16
“டேய் உனக்கு என்ன தான் டா ஆச்சு ஏன் இவ்வளோ கோவப்படுற வா ஜில்லனு ஜூஸ் போட்டு தரேன் குடி” என்றான் வில்லாளன்.
“டேய் பாவம் டா அந்த பொண்ணு அவங்க அப்பன் பைத்தியம் மாதிரி அந்த பொண்ணு கிட்ட நடந்துக்குறான் டா இந்த பாவம்லாம் உன்னை சும்மா விடாது டா” என்றான் ஆரோன்.
“அவன் எங்களுக்கு பண்ணின பாவத்துக்கு தான் இப்போ அனுபவிக்கிறான் தப்புல்ல அவன் இன்னும் கஷ்டப்படனும்” என்றான் வில்லாளன்.
“என்ன டா பண்ணிட்டான் அந்த ஆளு அந்த பொண்ணை விடவா நீங்க கஷ்டப்பட்டுடிங்க” என்றான்
“உனக்கு எதுவுமே தெரியாது அந்த ஆளுக்காக என் கிட்ட வந்து வக்காளத்து வாங்காத” என்றான் வில்லாளன்.
“என்ன தெரியாது அந்த ஆளு உன் அப்பா அம்மாவை கொன்னுட்டான் அவ்வளோ தான அதுக்காக அந்த பொண்ணு காலத்துக்கும் கஷ்டப்படனுமா” என்றான் ஆரோன் கோபத்துடன்.
வில்லாளனுக்கு அவன் பேச்சு கோபத்தை வரவழைக்க “என் அப்பா அம்மா எப்படி செத்தாங்கன்னு தெரியுமா டா உனக்கு” என்று அன்று நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தான்.
சில பல வருடங்களுக்கு முன்…..
மதுரை பக்கத்தில் இருந்த சிறிய கிராமம் அது ரகுநந்தன் அந்த ஊரின் பெரிய தனக்காரர்களில் ஒருவர் அவருக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை இருந்தனர் அக்காவின் பெயர் பத்மா,தங்கையின் பெயர் தாமரை.
தாமரை பேரழகி அந்த ஊரில் அவள் பின்னே சுற்றாத ஆண்களே கிடையாது பலர் அக்காவிற்க்கு முன்னே தங்கையை பெண் கேட்டு வந்து கொண்டிருந்தனர் பத்மாவுக்கு கூட அவரின் அழகில் சற்று அதிகமாகவே பொறாமை உண்டு அவள் நன்றாக படிக்கிறாள் அழகாக இருக்கிறாள் என்று அதனால் அடிக்கடி அவளிடம் எரிந்து விழுவார்.
ரகுநந்தன் தாய் தந்தை காலமாகிவிட்டதால் அவர் தான் அக்கா தங்கை இருவரையும் கவனித்துக் கொண்டார்
அவரின் அப்பாவின் சொத்துக்களே நிறைய இருந்ததாள்
அவர் அதையும் கவனித்து கொண்டார்.
தாமரை பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்
அவள் பள்ளியிலேயே படிப்பிலும் சரி அழகிலும் சரி சிறந்து விளங்கினாள் அவளின் கணக்கு வாத்தியார் கண்ணாயிரத்துக்கு எப்போதிலிருந்தே அவளின் மீது ஒரு கண் இருந்தது அது அவளுக்கும் தெரியும் ஆனால் அவள் அதை இதுவரை கண்டு கொண்டதில்லை.
தன் வாழ்வில் இதுவரை எந்த ஆண் மகனையும் ஏறெடுத்து கூட பார்க்காதவள் தாமரை, குனிந்த தலை நிமிராமல் பள்ளிக்கு செல்வாள் வருவாள்
அன்று தான் இறுதி பரீட்சை என்பதால் அதை எழுதி முடித்துவிட்டு தனியாக அந்த காட்டுப்பாதையின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போது அவளின் முன்னே கணக்கு வாத்தியார் வந்து நிற்க ஒரு கணம் தடுமாறினாள் “சார் நீங்க” என்று அவள் பதட்டத்துடனே கேட்க
“தாமரை எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று கேட்டார்.
“சார் என்ன சொல்றிங்க நான் உங்களை அந்த மாதிரி எண்ணத்துல பார்க்கல இனியும் பார்க்க போறதும் இல்லை வழியை விடுங்க” என்றாள்.
“சரி நீ போலாம் ஆனா இந்த ஒரு பொழுதை என்னோட கழிச்சிட்டு போ இல்லைன்னா உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு ஊர் எல்லாம் சொல்லிட்டுவேன்” என்றார்.
“சார் இதெல்லாம் தப்பு வழியை விடுங்க எங்க அண்ணனுக்கு தெரிஞ்சா அவ்வளோ தான்” என்று பேசிக் கொண்டே இருக்க கண்ணாயிரம் அவளின் தாவணியை பிடித்து இழுத்தார்.
“சார் வேண்டாம் என்னை விட்டுறிங்க” என்று கெஞ்சும் போதே அவளின் தாவணியை மொத்தமாக உருவி இழுக்க தாமரை தன் மேல கையை வைத்து கொண்டாள்.
“சும்மா சொல்லக்கூடாது தாமரை நீ அவ்வளோ அழகு” என்று கூறிக் கொண்டே அவளை நெருங்கி வர தாமரை அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள் அவளை துரத்தி கொண்டே கண்ணாயிரம் அவள் பின்னே ஓடி வந்தார்.
தாமரை ஓடிக் கொண்டே இருந்தவள் யாரோ ஒருவனின் மோதி நின்றாள்
அவன் தான் காளி ஒரு காட்டுவாசி
இளமையான மாவீரன்
“என்ன காப்பாத்துங்க” என்று அவனிடம் தாமரை கெஞ்ச அவளின் கண்களை மெளனமாக பார்த்த காளி தன் முதுகின் பின்னே அவளை இழுத்து நிற்க வைத்தான்.
கண்ணாயிரம் அவனை நெருங்கி வந்தவர் “ஏய் வழியை விடு டா” என்று கூற காளி அவர் நெஞ்சில் எட்டி மிதித்தான் அதன் பின் அவனை அடித்து துவைத்து தாவணியை அவளுக்கு வாங்கி கொடுத்தான்.
காளி பார்க்க அச்சில் வார்த்தை போல் இப்போதிருக்கும் வில்லாளனை போல இருப்பான் அதனால் தான் பத்மாவும் ரகுநந்தனும் ஆடிப்போய் நின்றிருந்தனர்.
“ரொம்ப நன்றிங்க” என்று தாவணியை கட்டிக் கொள்ள இருவரின் கண்களிலும் காதல் வழிந்தேடியது பார்த்த உடனே இருவருக்கும் பிடித்துவிட்டது
அவளை வீடு வரை கொண்டு வந்துவிட்ட காளி அதன் பின் தன் வீட்டுக்கு சென்றான்.
ரகுநந்தன் காளியுடன் வீடு வந்து சேர்ந்த தன் தங்கையிடம் அனைத்தையும் கேட்டு விசாரித்தவர் “தாமரை போய் உன் உடுப்பை மாத்திட்டு வா” என்றார் கோபத்துடன்.
தாமரை உடை மாற்றி வர “நீ போட்டிருந்த தாவணியை எடுத்துட்டு வா” என்க அவரும் எடுத்து வந்து கொடுக்க அதை கையில் கூட வாங்காமல் “கீழே போடு” என்றார் அவளும் தாவணியை கீழே போட அதில் நெருப்பை பற்ற வைத்தார்.
“கேவலம் ஒரு காட்டுவாசி கொடுத்த உடையை போட்டுட்டு வந்ததுக்கு நீ வெட்கப்படனும் நீ இதுக்கு அங்கேயே செத்து போய் இருக்கலாம்” என்றார் கோபத்துடன் ரகுநந்தன் எப்போதும் தரம் இனம் பார்த்து தான் பழகுவார்.
அன்றைய நிகழ்வுக்கு பிறகு தாமரையை வீட்டை விட்டு வெளியே அனுப்பவேயில்லை படிப்பதற்க்கு கூட ஊரில் திருவிழா ஆரம்பிக்க ஊரே கலைக்கட்டியது.
வெகு நாட்கள் கழித்து இன்று தான்
தாமரை வெளியே வந்திருந்தாள்
அடர் பச்சை புடவை கட்டி கோவிலுக்கு வந்தவளின் அழகை ஊரே வேடிக்கை பார்த்தது.
கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் அவள் வெளியே வர அவளின் கையை யாரோ பிடித்து இழுக்க அதிர்ந்து போய் யாரென்று அவள் நிமிர்ந்து பார்க்க காளி தான் நின்றிருந்தான்.
அவனை பார்த்தவுடன் அவள் முகம் தன்னை அறியாமல் செந்நிறம் பூசிக் கொண்டது அவனை பார்த்து வெட்கத்தில் தலை குனிந்து நின்றிருந்தாள்.
அவர்கள் இருவரும் சந்தில் நின்றிருக்க வெளியே யாருக்கும் தெரியவில்லை காளியின் கண்கள் அவளை விட்டு விலகவேயில்லை
“என்னை உனக்கு பிடிச்சிருக்கா” என்று கேட்க அவளும் தலைகுனிந்து கொண்டே “ம்ம்” என்றாள்.
காளி அவளின் கன்னத்தில் கை வைத்து அவள் முகத்தை நிமிர்த்த இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தது.
அப்போது வெளியே இருந்த பத்மா
“தாமரை தாமரை” என்று கத்தி அவளை அழைத்து கொண்டே இருக்க காளியிடம் இருந்து தாமரை விலக அவன் அவளின் இடையில் தன்னோடு சேர்த்து இழுத்தான்
“என்னங்க அக்கா கூப்பிடுறா விடுங்க” என்றாள்.
“திரும்ப எப்போ பார்ப்போம்” என்று கேட்க “தெரியலை” என்று கத்தி கொண்டே அவனிடமிருந்து விலகி ஓடினாள் தாமரை.
“எங்கே டி போன” என்று பத்மா கேட்க அவள் ஏதேதோ சொல்லி சமாளிக்க
அந்த சந்தில் இருந்து வெளியே வந்த காளியை பார்த்தவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது ஆனால் அவள் அதை அவளிடம் அன்று கேட்கவில்லை.
அதன் பின் எப்போதாவது வெளியே வரும் வாய்ப்பு கிடைத்தால் இருவரும் சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்து கொண்டனர் பத்மாவுக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது.
மாப்பிள்ளை பத்மாவை பார்க்க வந்து தாமரை பிடித்திருப்பதாக கூறிவிட பாக்கியத்தின் திருமணம் நின்று போனது அன்று இரவு பாக்கியம் தன் தங்கையை அடி வெளுத்துவிட்டார்.
மறுநாள் தாமரை காளியிடம் சொல்லி அழ அவன் தான் அவளை சமாதானம் செய்தான்.
அதன் பின் சொந்த தாய்மாமனேயே பாக்கியம் திருமணம் செய்து கொண்டார் அடுத்தபடியாக தாமரையின் திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்யப்பட திருமணத்தின் அன்றைய இரவு வீட்டில் தாமரையை காணவில்லை என்று ஊரே தேடி அலைந்தது ரகுநந்தன் ஆட்களும் தேடினர்.
அதன் பின் தான் அனைவருக்கும் தெரிய வந்தது காளி- தாமரையும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்றும் ஊரை விட்டு ஓடி இருந்ததும்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன
காளி-தாமரை எங்கு தேடியும் கிடைக்கவேயில்லை பதினான்கு வருடங்களுக்கு பின் பாக்கியத்தின் கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட துக்கம் விசாரிக்க தாமரை தன் கணவன் குழந்தை மாமியார் ஆகியோருடன் ஊருக்குள் வந்தாள்.
தாமரை படித்து முடித்து ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார் காளி மெக்கானிக் கடை ஒன்றை வைத்து இருந்தார் அந்த தம்பதிக்கு வில்லாளன் என்ற ஒரு மகனும் இருந்தான் அவனுக்கு அப்போது 13 வயதானது அவரின் மாமியார் தெய்வானை அவர்களுடன் வந்திருந்தார் அதுமட்டுமல்ல தாமரை ஐந்து மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார்.
துக்கத்துக்கு வந்த தாமரை அழுதுகொண்டே தன் அண்ணனின் காலில் விழுந்தார் ஆனால் ரகுநந்தன் அவளை தூக்காமல் நின்றிருக்க சுற்றி இருந்தவர்கள்
“என்னப்பா ரகு ஏதோ வயசுல அந்த பொண்ணு தெரியாம தப்பு பண்ணிடுச்சு அதுக்காக இப்போ வரைக்கும் மன்னிக்காம இருக்க முடியுமா பேசுப்பா உன் தங்கச்சி தான” என்று கூற அவரும் வேறு
வழியில்லாமல் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
இறுதி காரியங்கள் அனைத்தும் முடிய பத்மாவுக்கு தன் தங்கையின் மீது பொறாமையாக இருந்தது அவர் நன்றாக படித்து ஆசிரியராக இருப்பது மேலும் வயிற்றில் குழந்தையுடன் நல்ல கணவருடன் நல்ல வாழ்க்கை வாழ்வதை நினைத்து பொறாமை எழுந்தது.
பிரதீப் பிறந்ததில் இருந்தே பத்மாவின் கணவர் அவரை நிறைய கொடுமை செய்தார்
ஆனால் காளி தாமரையை தாங்குவதை நினைத்து மனது வலித்தது.
அன்று இரவு அனைவரும் உறங்கி விட பத்மாவும் ரகுநந்தன் மட்டும் உறங்காமல் இருந்தனர் இவர்களை எதாவது செய்ய வேண்டும் என்று சதி திட்டம் தீட்டினர் ரகுநந்தன் வெளியே அனைவர் முன்னிலையிலும் தன் தங்கையை ஏற்றுக் கொண்டதை போல் நடித்தாலும் அவரால் தாமரையை மன்னித்து ஏற்க முடியவில்லை.
அதன் பின் இறுதி காரியங்கள் முடிந்து சொந்த பந்தங்கள் அனைவரும் ஊருக்கு சென்றிருந்தனர் தக்க சமயம் பார்த்து இருவரும் காத்திருக்க ஆரம்பித்தனர்.
அத்தியாயம் 17
இறுதி சடங்குகள் முடிந்து தாமரையின் மாமியார்
தெய்வானை ஆடு மாடுகளை பார்க்க வேண்டும் என்று முன்பே ஊருக்கு கிளம்பி சென்று விட காளி-தாமரை
அவர்களின் மகன் வில்லாளன் மேலும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி இருந்தனர்.
ரகுநந்தன் மனைவி லதா இவர்கள் இருவரையும் நன்றாக கவனித்து கொண்டார் அப்போது அனு ஒரு வயது கைக்குழந்தை.
இரண்டு நாட்களுக்கு பின் அவர்கள் ஊருக்கு கிளம்ப போக ரகுநந்தன் “மாப்பிள்ளை வாங்க நானே கொண்டு வந்து விடுறேன்” என்றார்.
“இல்லை மச்சான் உங்களுக்கு எதுக்கு சிரமம் நாங்களே போய்க்கிறோம்” என்றான் காளி
“மாப்பிள்ளை உங்களையும் தங்கச்சியையும் கொண்டு வந்து விடுறதுல எனக்கு ஒரு சிரமமும் இல்லை” என்றார்.
“தாமரை அதுக்கு முன்னாடி நம்ம குல தெய்வ கோவிலுக்கு போய்ட்டு வருவோம்” என்றாள் பத்மா
“ஆமாம் தாமரை நானும் தான் சொல்லனும் நினைச்சேன் வாங்க கோவிலுக்கு போய்ட்டு போவோம்” என்றார் ரகுநந்தன்.
“என்னங்க எங்க ஊரு குல தெய்வ கோவில் போய் ரொம்ப நாள் ஆச்சு வாங்க போய்ட்டு வரலாம் அண்ணனும் அக்காவும் இவ்வளவு சொல்றங்கல்ல” என்றாள் தாமரை.
காளியின் மனதில் மட்டும் ஏதோ ஒன்று உருத்திக் கொண்டே இருக்க
அதை வெளிக்காட்டி கொள்ளாமல்
“சரி தாமரை” என்றான்.
அதன் பின் அனைவரும் கோவிலுக்கு கிளம்ப பிரதீப் “அம்மா நானும் வரேன்” என்று அழுது அடம்பிடித்தான் “டேய் ஒரு தடவை சொன்னா கேட்க மாட்ட இங்கேயே இரு” என்று பத்மா அவனை அடித்து வெளுக்க
தாமரை ஓடி வந்து பிரதீப் தன்னுடன் இழுத்துக் கொண்டாள்.
“என்ன அக்கா சின்னப்பிள்ளையை போட்டு இப்படி அடிக்கிற அவனும் நம்ம கூட வரட்டுமே” என்றாள்
பத்மா உடனே என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் பேய் முழி ழுழித்தவர் “அது தாமரை நாளைக்கு அவனுக்கு அரை பரீட்சை இருக்கு” என்றாள் மழுப்பிக் கொண்டே.
“சித்தி அம்மா பொய் சொல்றாங்க நாளைக்கு எனக்கு எந்த பரீட்சையும் இல்லை” என்றான் அழுது கொண்டே பிரதீப்.
அதை கேட்ட தாமரையின் முகத்தில் சந்தேக முடிச்சு விழ “அய்யோ அவன் பொய் சொல்றான் தாமரை வா நாம போலாம்” என்றாள் பத்மா.
அதன் பின் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர் பிரதீப் ரகுநந்தன் மனைவி அனு மட்டும் வீட்டிலேயே இருந்தனர் அவர்களை வழியனுப்பி வைத்தனர் அவர்கள் மூவருக்கும் இவர்களின் சதி திட்டம் தெரியாது.
அவர்களின் குலதெய்வமான அய்யனார் கோவிலுக்கு மூவரையும் அழைத்து சென்றனர் அந்த கோவிலை சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கரும்பு காடுகள் பனை மர தோப்புகள் தான் இருந்தன.
கோவிலின் வெளியே சாமி கும்பிடுவதற்க்காக பத்து இருபது ஆண்கள் நின்றிருந்தனர்.
தாமரை காரில் இருந்து இறங்கியவுடன் “என்ன பத்மா அக்கா இவ்வளவு கூட்டமா இன்னைக்கு எதுவும் விசேஷம் கூட இல்லையே” என்றாள்.
“எனக்கு தெரியலை தாமரை எதாவது வேண்டுதலா கூட இருக்கலாம் வா போய் கும்பிட்டு வருவோம்” என்று அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றார்.
காளிக்கு இப்போது கூட மனதில் ஏதோ உருத்தலாகவே தான் இருந்தது எதற்காக இத்தனை பேர் கோவிலில் இருக்கிறார்கள் அதுவும் அந்த கூட்டத்தில் ஆண்கள் மட்டுமே இருக்க அவரின் சந்தேகம் இன்னும் வலுத்தது அவர் தன் மகன் வில்லாளனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார்.
தாமரை கோவிலின் உள்ளே செல்ல அவரின் பின்னே காளியும் வில்லாளனும் நுழைய போக
அவர்களின் முன் கையை நீட்டி தடுத்தார் ரகுநந்தன்.
காளி அவரை நிமிர்ந்து பார்த்து “என்ன மச்சான்” என்று கேட்க
“யாருக்கு யாரு டா மச்சான் காட்டுவாசி பயலே என்ன தைரியம் இருந்தா என்னையே முறை சொல்லி கூப்பிடுவ நான் யாரு என் வம்சம் என்னன்னு தெரியுமா என் கோவில் உள்ளையே நீ நுழைய பார்க்குறியா டா பரதேசி” என்று கேட்டார் அவரை முறைத்து கொண்டே.
“என்ன பொல்லாத வம்சம் நாம எல்லாரும் மனுசங்க தான் இங்கே எல்லாம் சமம் தான்” என்றார் காளி
“எப்படி டா சமமாக முடியும் எப்படி முடியும் காட்டுவாசி நீயும் நானும் ஒன்னா நான் போட்ற எச்சை சோத்த திங்குற நாய் நீ” என்க
காளிக்கு கோபம் வந்து விட “என்ன டா சொன்ன” என்று கேட்டு கொண்டே ரகுநந்தனை அடிக்க கையை ஓங்கி கொண்டே போக அங்கு நின்றிருந்த ஆண்கள் அனைவரும் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த கத்தி வாள் என இன்னும் ஆபத்தான ஆயுதங்களை வெளியே எடுத்தனர்.
வில்லாளன் அவர்கள் அனைவரையும் பார்த்து பயந்து கொண்டே தன் தந்தையை இறுக அணைத்து பிடித்து கொண்டான்.
அங்கே சுற்றி இருந்தவர்களில் இருவர் வந்து காளியின் கையை பிடித்து கொள்ள அவர் அவர்களிடம் இருந்து விடுபட திமிறினார்
“எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டு பொண்ணையே கூட்டிட்டு ஓடி போவ டேய் இவனை வந்து பிடிங்கடா” என்று கத்தி அழைக்க.
இன்னும் இருவர் சேர்ந்து காளியை பிடித்து கொண்டனர் அப்போது ரகுநந்தன் தன் கையில் விஷப்பாட்டிலை எடுத்தவர்
“டேய் இவன் வாயை திறங்க டா” என்றார்.
காளியின் பக்கத்தில் இருந்த அந்த ஆட்கள் வில்லாளனை இடித்து தள்ளிவிட்டு அவரை கீழே இழுத்து முட்டி போட வைத்தனர் அந்த நால்வரும் அவரின் கையை பின்னே கயிற்றால் கட்டினர்
இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த வில்லாளன் “அம்மா அம்மா” என்று கத்தி அழ ஆரம்பித்தான்.
அவனின் சத்தம் கேட்டு கோவிலின் உள்ளே இருந்து தாமரை வெளியே ஓடி வர தன் கணவன் வாயில் ரகுநந்தன் விஷம் ஊற்ற போவதை பார்த்தவர் ஓடி வந்து அவரை தடுத்தார் “அண்ணா என்ன பண்ற” என்று கேட்க.
“டேய் முதல்ல இவளை பிடிங்கடா மூதேவி கண்டவனோட ஊர் மேஞ்சிட்டு வருவ நான் உன்னை ஏத்துக்கனும் இந்த கீழ் குடி புள்ளை முதல்ல அழியனும்” என்று கூறிக் கொண்டே இன்னும் இருவர் சேர்ந்து தாமரையை பிடித்து கொண்டனர் அவள் வாயில் விஷத்தை ஊற்றினார்.
“டேய் அவளை எதுவும் பண்ணாத அவள் பிள்ளைத்தாச்சி டா அதுக்கு பதிலா என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க டா” என்று கதறி அழுதார் காளி.
“உன் புள்ளை அவள் வயித்துல இருக்க கூடாதுன்னு தான் டா இந்த விஷத்தை ஊத்துறேன் சாகட்டும்” என்றார் ரகுநந்தன்.
“டேய் வேண்டாம் ” என்று காளி கதற கதற அவள் வாயில் விஷத்தை ஊற்றி முடித்தவர் காளியின் வாயிலும் விஷத்தை ஊற்றினார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த வில்லாளன் அழுது கொண்டே நிற்க “வில்லா தப்பிச்சு போய்டு” என்று தாமரை கத்த
அவன் அங்கிருந்து ஓட பார்த்தான்
“இவன் வேற இருக்கான் இல்லை விஷம் தீர்ந்து போச்சே இப்போ என்ன பண்றது” என்று திரும்பியவரின் கண்ணில் பக்கத்தில் இருந்த ஆறு பட அவனை பக்கத்துல இருக்க ஆத்துல தூக்கி போடுங்கடா” என்றார்.
“அண்ணா அக்கா அவன் அறியாப்பிள்ளை அவனை விடுங்க” என்று தாமரை கெஞ்ச அவர்கள் காதிலேயே வாங்காமல் அவனை ஆற்றில் தூக்கி எறிந்தனர்.
விஷத்தின் வீரியத்தில் காளி-தாமரை வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது பத்மாவுக்கு அது மட்டும் போதவில்லை தாமரையின் அழகான முகம் பாழாக வேண்டும் என்று நினைத்தவர்.
“டேய் தம்பி இவங்க விஷம் சாப்பிட்டும் பிழைச்சிட்டா என்ன பண்றது நாம மாட்டிப்போம் அதனால கார் பின்னாடி ஒரு கயிரை கட்டி அதுல இவங்களை மாட்டி நீ வேகமா காரை ஓட்டு அவங்க முழுசா இறந்துடுவாங்க” என்றாள் பத்மா மிகவும் கொடூரமாக யோசித்து.
அவர்களின் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் காரில் கட்டி ஊர் எல்லை வரை அந்த நடு இரவு நேரத்தில் இழுத்து சென்றனர் வரும் வழியெல்லாம் இருவரும் அலறி துடித்தனர் இருவரின் உயிரும் பாதி தூரத்திலேயே பறிபோனது.
இதையெல்லாம் ஆற்றில் ஒளிந்து கொண்டே அழுகையுடனே வில்லாளன் பார்த்து கொண்டிருந்தான் அவனுக்கு நீச்சல் தெரியும் என்பதால் கரையேறி வந்து இருந்தான்.
பத்மாவுக்கு தாமரையின் முகம் கல்லிலும் மண்ணிலும் சிதைந்த பின் தான் நிம்மதியாக இருந்தது
திருப்தியுடன் இருவரின் பிணத்தையும் சத்தமில்லாமல் வீட்டிற்க்கு தூக்கி வந்து வீட்டின் உள்ளே வைத்து எரித்தனர் நெருப்பு நன்றாக எரியும் போது ரகுநந்தன் மனைவி குழந்தை பிரதீப் அனைவரையும் வெளியே இழுத்து வந்தார் வீடு தீப்பிடித்து எறிவதாக கூறி அழைத்து சென்றனர்
தாமரை குடும்பம் உள்ளே சிக்கி உயிரிழந்ததை போல் நாடகமாடினர்.
அதன் பின் அவர் சென்னை வந்து மிகப்பெரிய தொழிலதிபராக மாறினார் அவர் வீட்டோடு சேர்ந்து புகைப்படங்களும் எரிந்த போனதால் தான் அனுவின் சிறு வயது புகைப்படம் எதுவும் அவர் வீட்டில் இல்லை.
வில்லாளன் அங்கிருந்து தப்பித்து நடந்து சென்று தன் பாட்டியிடம் உண்மையை கூற எங்கே இங்கே இருந்தாள் தன் பேரனை கொன்று விடுவார்களோ என்று பயந்து தன் பூர்வ குடியான ஊட்டிக்கு அழைத்து சென்றார்.
அதன் பின் வில்லாளனை நன்றாக படிக்க வைத்தார் ஆனால் அவன் மனதில் இன்னும் ஆறாத வடுக்கள் ரணமாக இருந்தன அதனால் தான் அனு வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த உடனே கடத்தினான்.
“இப்போ சொல்லு டா என் அம்மா ஐந்து மாத கருவை சுமக்குறாங்கன்னு தெரிஞ்சும் அவங்களை விஷம் வச்சு கொன்னாங்க அதுக்கு அப்பறம் கூட விடாம கார்ல கட்டி தரதரன்னு இழுத்துட்டு போனாங்களே அவங்க எல்லாம் மனுசங்க தானா,
எந்த காளியோட வாரிசு அவங்க வீட்ல இருக்க கூடாதுன்னு நினைச்சாங்களோ அதே வாரிசு தான் அவன் பொண்ணு வயித்துல வளருது, அவங்களை போய் சும்மா விட சொல்றியா அவங்க ரெண்டு பேரையும் கொல்லாம நான் விட மாட்டேன்” என்றான் வில்லாளன்.
ஆரோனே இதையெல்லாம் கேட்டு ஒரு கணம் ஆடித்தான் போனான்
அவர்கள் கொன்றதை மட்டும் தான் ரகுநந்தன் கூறியிருந்தார் ஆனால் எப்படி எதற்க்கு என்ற காரணம் சொல்லவில்லை இவ்வளவு கொடூரமான மனிதர்கள் கூட இன்னும் இந்த பூமியில் இருக்கிறார்களா என்று நினைத்து வருத்தப்பட்டான் ஆனால் அவனுக்கு அனுவின் நினைவு மட்டுமே வந்து போனது.
“டேய் வில்லா நீ அவங்க ரெண்டு பேரையும் என்ன வேணும்னாலும் பண்ணு ஆனா அனு பாவம் டா உங்க அம்மா இருந்த அதே நிலையில் தான் இப்போ அவளும் இருக்கா சொந்த தங்கச்சியை கொன்னவங்களுக்கு மகளை கொல்ல எவ்வளவு நேரமாகும் அந்த பொண்ணு வயித்துல இருக்குறது உன் குழந்தை மச்சான் நீ தான் அதை காப்பத்தனும் உன் மேலே இருக்க கடுப்புல கொலை பண்ணக் கூட தயங்க மாட்டாங்க எதாவது பண்ணு டா” என்றான் ஆரோன்.
super bro waiting for next epi
Монтаж и ремонт сантехники – качественные услуги от специалистов
вызов сантехника [url=https://www.uslugisantehnika-spb.ru/]https://www.uslugisantehnika-spb.ru/[/url] .
Waiting for Next ep
Ada paavatha 👀🙂🤧😕