மெய் தீண்டும் முரடா
அத்தியாயம் 1
இந்தியா சுதந்திரம் வாங்குவதற்க்கு முன்பான காலகட்டம் அது தமிழ்நாடு இன்னும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் தான் கட்டுப்பட்டு இருந்தது அந்த காலக்கட்டத்தில் ஜமீன்தார்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் உறவு மிக முக்கியமானதாக இருந்தது
அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அடிபணிந்தவர்களாக இருந்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜமீன்தார்கள் மாளிகைக்கு அடிக்கடி வருவார்கள்.
இன்னும் சில ஜமீன்தார்களும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் விருந்துகள்,வேட்டைகள், குதிரை சாவரிகள் போன்றவற்றுக்கு இணைந்தனர்.
பிரிட்டிஷ் அரசு இவர்களுக்கு நிறைய பட்டங்களையும் வாரி வழங்கினர் அதில் முக்கியமானவர் தான் நாச்சியப்பன் மதுரை பக்கத்தில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்தார் நாச்சியப்பன் ஜமீன்தார் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அதே போன்று தான் பிரிட்டிஷ் அரசாங்கத்திலும் மிகுந்த செல்வாக்கு படைத்தவர்.
அவர் இருந்த கிராமத்தில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம், மாமரம்,நெல் வயல்கள் என ஏராளமாக இருந்தது வானம் பொய்க்காத வளமான பூமி என்பதால் தண்ணீருக்கே இதுவரை பஞ்சம் இருந்தது இல்லை ஊரே செழித்து இருந்தது நாச்சியப்பன் மிகவும் நல்லவர் தன்னை நாடி வரும் மக்களுக்கு கர்ணனை போல் வாரி வழங்குபவர் அதே நேரம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் விசுவாசி ஆவார் பாமர மக்களுக்கு இடையே மரியாதைக்கு உரியவரும் கூட.
நாச்சியப்பனின் ஒற்றை மகளான மீனாட்சி இன்று பெரிய மனுஷி ஆகி இருந்தாள் ஊரே அதனால் கலை கட்டி கொண்டு இருந்தது.
ஊரே மாவிளை தோரணங்களாலும் மண் விளக்குகளாலும்,தோரண விளக்குகளாலும் ஜொலித்து கொண்டிருந்தது
விசேஷத்துக்கு வரும் பணக்காரர்களுக்கு என குதிரை வண்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சுற்று வட்டாரத்தில் இருந்த பெரும் பணக்காரர்கள் அனைவரும் அங்கே வந்திருந்தனர் அதில் வெள்ளைக்காரர்களும் அடக்கம் இன்று ஊருக்கே சாப்பாடு அங்கே தான் அன்னதானம் பரிமாறப்பட்டது பாமர மக்களுக்கு கொட்டகை அமைத்து மண் தரையில் சாப்பாடு போட்டனர் விருந்தில் பாயசம் நாலு வகையான சாப்பாடு மிட்டாய் போன்றவைகள் பரிமாறப்பட்டன்.
பணக்காரர்கள் செல்வந்தர்களுக்கு என தனியே உள்ளே உணவு பரிமாறப்பட்டது.
ஜமீன் மாளிகையின் தோட்டத்தில் மேடை அமைத்து மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நாச்சியப்பன்-வேதவள்ளி தம்பதிக்கு மொத்தம் மூன்று ஆண் பிள்ளைகள்
அவரின் இரண்டாம் தாரமான அஞ்சலையம்மாளுக்கு கடைசியாக பிறந்தவள் தான் இந்த மீனாட்சி
அவள் பிறக்கும் போதே அவளின் தாய் இறந்துவிட அவளை தாயாக இருந்து வேதவள்ளி தான் வளர்த்தார்.
மீனாட்சி ஊரே பார்த்து பொறாமை படக்கூடிய அளவுக்கு பேரழகி அதனால் வீட்டை விட்டே வெளியே வந்தது இல்லை அவளை வீட்டின் உள்ளேயே அடைக்காத்து வைத்திருந்தனர்
அனைவரும் அவளை எட்டு வயதில் பார்த்தது இப்போது அவளுக்கு பதினெழு வயது பத்து நாட்களுக்கு முன் பெரிய மனுஷி ஆகி இருந்ததாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அவளின் தாய்மாமனான வீரபூபதியின் வீட்டில் இருந்து சீர் வரிசைகள் எடுத்து வரப்பட்டன
ஊரே திருவிழாவை போல் காட்சியளித்தது அதுமட்டுமல்ல இன்று வீரபூபதிக்கும் மீனாட்சிக்கும் திருமணத்துக்கான தேதி குறிக்க போகிறார்கள் நாச்சியப்பன் வீட்டில் நடக்கும் முதல் விசேஷம் என்பதால் சொந்த பந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர்.
ஜமீன்தார் வீட்டின் உள்ளே இருந்த பின்கட்டில் மீனாட்சியை சுற்றி அனைத்து பெண்களும் நின்றிருந்தனர் குடும்பத்தில் உள்ள மூத்த பெண்மணிகள் பெண்கள் என அனைவரும் அவளை சுற்றி தான் இருந்தனர்.
நடுநாயகமாக மீனாட்சி அமர வைக்கப்பட்டு இருந்தாள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் வெள்ளந்தியாக கண்ணை சிமிட்டி கொண்டு இருந்தாள்.
“இந்தா பிள்ளை மீனாட்சி ஏன் திருட்டு முழி முழிக்கிற நாங்க எல்லாம் உனக்கு உறவுக்காரவங்க தான்” என்றாள் அந்த பெண்களில் ஒருத்தி “நீ இப்போவே இந்த
முழி முழிச்சா இன்னும் ஒரு கிழமையில உனக்கு கல்யாணம் வச்சிருக்காரே ஜமீன்தார் ஐயா என்ன பண்ணுவியோ” என்று ஒவ்வொருவராக கிண்டலடித்து கொண்டு இருந்தனர்.
“இந்தாங்க டி என்ன என் மவளையே கேலி பண்ணிறிங்களா போய் தலைக்கு ஊத்த தண்ணீ எடுத்துட்டு வாங்க டி” என்று அனைவரையும் விரட்டி விட்டார் வேதவள்ளி.
வேதவள்ளி அவரின் பெயரை போல அகத்தின் உள்ளேயும் வெளியேயும் அழகானவர் தங்க ஜரிகை வைத்த காஞ்சிபுரம் பட்டு புடவை அணிந்து
நெற்றியில் பெரிய பொட்டு வைத்து தலையை கொண்டையிட்டு தங்க ஆபரணங்களுடன் அங்கே வந்து நின்றார்.
வேதவள்ளி மீனாட்சியின் அருகில் வந்தவர் “அவளுக கிடக்குறாளுக நீ ஒன்னும் வேசனப்படாத என் தம்பி தங்கம் மாதிரி உன்னை அவன் உள்ளங்கையில வச்சி பார்த்துப்பான்
நீ கொஞ்சம் முன்னவே சமைஞ்சி இருந்தா இந்நேரம் கையில ஒன்னு வயித்துல ஒன்னுன்னு புள்ளை குட்டியோட இருந்துருப்ப” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.
அதன் பின் ஊரின் பெரிய பெண்மணிகள் அனைவரும் ஒன்று கூடி குழந்தை பச்சை இலை, மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றை தண்ணீரில் கலந்து சல்லடை வைத்து மீனாட்சியின் தலையில் தண்ணீரை ஊற்றி குளிக்க வைத்தனர் முகத்தில் மஞ்சள் பூசி பாலும் பன்னீரும் கலந்து நீரில் குளிக்க வைத்து உள்ளே அழைத்து வந்தனர் புடவை கட்டி அலங்காரம் செய்ய ஆரம்பித்தனர் மீனாட்சியின் ஐந்தடி உயரத்துக்கு அவளின் முடியே இருந்தது முழங்கால் முட்டியை தாண்டி கீழே வரை இருந்த முடியை இருவர் சேர்ந்து குஞ்சம் வைத்து பின்னலிட்டு முடித்தனர்
தலை நிறைய நெருக்க கட்டிய மதுரை குண்டு மல்லி கனகாம்பரம் சேர்த்து சூடினர்.
வெளியே வீரபூபதி பெரியவர்களுடன் பேசிக் கொண்டே அமர்ந்து இருந்தாலும் அவன் பார்வை மட்டும் அந்த அறையின் வாசலிலேயே வட்டமடித்து கொண்டே இருந்தது எழு வருடமாக இந்த நாளுக்காக தான் அவன் காத்திருக்கிறான்.
மாம்பழ மஞ்சளில் சிவப்பு நிற கரை வைத்த பட்டு புடவை அணிந்து தங்க வரை அணிகலன்கள் அணிந்து பெரிய பெண்மணியை போல் நின்றிருந்த மீனாட்சியை பார்த்து கண்கள் கலங்கினார் வேதவள்ளி தன் கண்ணில் இருந்த மையை விரலில் எடுத்து அவளின் கழுத்தின் பின்னே வைத்தார் “என் கண்ணே பட்டுரும் போல ராசாத்தி எம்புட்டு அழகா இருக்க” என்று கூறியவர் வெளியே மனையில் சென்று அவளை அமர வைத்தார்.
வீரபூபதி தன்னை மறந்து அவளை பார்க்க ஆரம்பித்தான் அங்கிருந்த ஆண்கள் கூட அவளின் மாசு மருவற்ற அழகை கண்டு வாயை பிளந்து பார்த்தனர் பெண்கள் சொல்லவே தேவையில்லை அங்கிருந்த அனைவரின் கண்களிலும் அவளின் அழகை பார்த்து பொறாமையில் பொங்கி வழிந்தது.
வீரபூபதி அவளுக்கு மாலை அணிவிக்க அவள் தலைகுனிந்து நின்றிருந்தாள் பெரிய வீட்டு பெண்மணிகள் அனைவரும் அவளுக்கு நலுங்கு வைக்க ஆரம்பித்தனர் சாதாரண மக்கள் கூட்த்தோடு கூட்டமாக வெளியே நின்று அவளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
அனைத்து சடங்குகளும் முடிய திருமணத்திற்க்கான நாள் பஞ்சாங்கம் பார்த்து குறிக்கப்பட்டது இன்னும் ஒரு திங்களில் திருமணம் என்று முடிவு செய்துவிட மீனாட்சியை மீண்டும் உள்ளே அழைத்து சென்று அவளின் அறையில் விட்டுவிட்டு வந்த வேதவள்ளி அனைத்து வேலைகளையும் கவனிக்க ஆரம்பித்தார்.
அவர்களின் மூன்று மகன்களும் ஓடி ஆடி வேலை பார்த்து கொண்டு இருந்தனர் வந்தவர்களை வரவேற்று கொண்டு இருந்தார் நாச்சியப்பன் ஜமீன்தார்.
அப்போது திடீரென வானத்தில் கருமேகங்கள் ஒன்று சேர்ந்து இடியுடன் கூடிய மழை வெளுக்க ஆரம்பித்தது அந்த மழை நேரத்தில் ஆங்கிலேய அதிகாரிகள் அதிகமாக பயன்படுத்தும் காரான ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார் ஒன்று வந்து ஜமீன்தார் வீட்டு வாசலில் வந்து நின்றது.
அதை பார்த்த அடுத்த நொடி நாச்சியப்பன் குடையை எடுத்து கொண்டு கொட்டும் மழையில் ஓடினார் காரின் கதவை காரின் சாரதி திறக்க அதிலிருந்து இறங்கினான் மதுரை மாவட்டத்தின் கலெக்டரான ஜார்ஜ் ரிச்சட்ர்ட்சன்.
அவன் காரிலிருந்து இறங்கியவுடன் மழையில் நனைய விடாமல் இருக்க குடை பிடித்து அழைத்து வந்தார் நாச்சியப்பன்.
அங்கிருந்த மக்கள் அனைவரும் அவனை அச்சத்துடன் பார்த்து கொண்டே இருந்தனர் ஏனெனில் அவன் ரொம்பவே கெடுபிடியானவன்
எந்த நேரத்தில் எப்படி இருப்பான் என்று யாருக்குமே தெரியாது.
வெண்கல பட்டன்களுடன் வெள்ளை நிற சட்டை கருப்பு நிற பேன்ட் அணிந்து அதற்க்கு மேலே கருப்பு கோர்ட் அணிந்து அகன்ற தோள்களுடன் கூர்மையான கண்களுடன் ஒரு அரசனை போன்ற தோற்றத்துடன் தன் பூட்ஸ் கால் சத்தத்துடன் ஜமீன் வீட்டு வாசற்படியில் ஏறி வந்தான்.
ஆறடி உயரம் அதற்க்கு ஏற்ற உடல்வாகு நல்ல சிவந்த நிறம் பழுப்பு நிற கண்களுடன் கூர்மையான சுற்றி நின்றிருந்தவர்களை ஒர் அலட்சிய பார்வையுடன் பார்த்துக் கொண்டே நடந்து வந்தான் “நீங்க வருவிங்கன்னு தான் துரை நாங்க காத்துக் கிடந்தோம் ரொம்ப சந்தோசம் உட்காருங்க” என்று நாச்சியப்பன் அவனை கும்பிட்டு உள்ளே அழைத்து சென்றார்.
அவர் பேசிய அனைத்திற்கும் ஒரே ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான் ரிச்சர்ட்
“உட்காருங்க துரை” என்று அங்கிருந்த நாற்காலியை காட்ட அவன் உள்ளே நுழைந்தவுடன் அவனை பார்த்த பெண்கள் ஆண்கள் என அனைவரும் அங்கிருந்த வெளியே சென்றுவிட்டனர்.
ரிச்சர்ட்டின் பழுப்பு நிற கண்கள் அந்த வீட்டை சுற்றி அலை பாய்ந்தது கொண்டு இருந்தது “துரை சாப்பிட வாங்க” என்று கூற அவன் பதிலுக்கு
“நாட்சி வாஷ்ரூம் எங்கே இருக்கு?” என்று கேட்டான் அவனின் கணீர் குரலில்.
“பின்னாடி இருக்கு துரை” என்று அவனை அழைத்து சென்று விட்டவரை வெளியே யாரோ அழைக்க அங்கே சென்றார்.
ரிச்சர்ட்க்கு நன்றாகவே தமிழ் தெரியும் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுவான்
அந்த மழையில் குளியலறையின் உள்ளே சென்றவன் தன் மேலே இருந்த சேற்றை ஈர கைக்குட்டையால் துடைத்து விட்டு கொண்டான்
அந்த காலத்தில் உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த கூடிய
ஹவானா சிகார்(சிகரெட்) ஒன்றை பற்ற வைத்து புகைத்து முடித்தவன் மீண்டும் உள்ளே வந்தான்.
மீண்டும் உள்ளே வந்தவன் ஒரு அறையை கடக்க போகும் சமயம் அந்த அறையில் இருந்து வந்த கண்ணாடி வளையல் சத்தம் அவனை ஈர்த்தது என்னவென்று அந்த அறையின் உள்ளே எட்டி பார்க்க அறையின் கதவு லேசாக திறந்து தான் இருந்தது
மீனாட்சி தன் நீளக் கூந்தலை அவிழ்த்துக்கொண்டு இருந்தாள்.
அவள் அவிழ்த்து போட்ட புடவை கீழே அனமத்தாக கிடந்தது
சிவப்பு நிற மேலங்கி அணிந்து கீழே அதே நிற பாவடை அணிந்து இருந்தாள்.
அவள் தன் நீளக்கூந்தலை மருதாணி வைத்து சிவந்த இருந்த கைகளால் அவிழ்த்து கெண்டு இருக்க ரிச்சர்ட்டின் கண்கள்
முதலில் அவள் நீளக்கூந்தலில் தான் படர்ந்தது அதன் பின் அவளின் மாசுமருவற்ற முகத்தை பார்த்தவனின் கண்கள் இன்னும் கீழே சென்று அவனின் இளமை கனிகளில் மையலுடன் படிந்தது அவளின் வெந்நிற இடை அதிலிருந்த சிறிய மச்சம் அவளின் கூர் நாசியில் மின்னிய வைர மூக்குத்தி அவளின் தடித்த செவ்விதழ்களை பார்த்தவன்
அவளை தன் பழுப்பு நிற கண்களால் வருடிக் கொண்டே அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான்
இதுவரை எந்த பெண்ணாலும் அசைக்க முடியாத இரும்பை போன்ற இதயத்தை அவளின் பெண்மையின் முன்பு நிற்க முடியாமல் சலனப்படுத்த தான் செய்தது அது ஆசையா இல்லை அவள் மேல் இருந்த உரிமை உணர்வா என்று அவனுக்கே தெரியவில்லை ஒரு நொடி கூட கண் இமைக்காமல் அவளை பார்த்தவன் தன் மனதில் ‘ஏன்ஜல்’ என்று அவளை வர்ணித்தான்.
Безопасный вывод из запоя в лицензированной наркологической клинике
наркология в спб [url=https://platnaya-narkologicheskaya-klinika-01.ru]https://platnaya-narkologicheskaya-klinika-01.ru[/url] .
Грамотный подбор и установка сантехники в СПб – прозрачные цены
цены на сантехнические работы [url=https://www.remont-santehniki-price.ru/]https://www.remont-santehniki-price.ru/[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Услуги сантехников для офисов и квартир в СПб – выгодные расценки
сантехнические услуги цена [url=https://24-santehniki-price.ru/]https://24-santehniki-price.ru/[/url] .
super sis
Wow arambamey kalakkal dheerapa
Ayyoyo
The beginning is very nice.😍
Super sema super super super super next episode fasta podunga pls
Next episode ah konjem seekirama podungo..