அத்தியாயம் 2
மீனாட்சி ஏதோ உணர்வு வந்து திரும்பியவள் அங்கே நின்றிருந்த ரிச்சர்ட்டை பார்த்தாள் பதறி அடித்து கொண்டு கீழே கிடந்த புடவையை எடுத்து தன் மேலே போட்டு மறைத்து கொண்டவள் தலைகுனிந்து பயத்துடன் நடுக்கம் கலந்து நின்றிருந்தாள்.
பதட்டத்துடன் சற்று நிமிர்ந்து அவனை பார்த்தவள் அவனின் தீர்க்கமான பார்வையில் அவள் கண்களில் பயமும் பதட்டமும் இன்னும் அதிகரித்தது ஒரு சிங்கம் தன் இரையை வேட்டையாட போகும் முன் பார்க்குமே அதே பார்வை அதை பார்த்தவள் தலைகுனிந்து நின்று கொண்டாள்.
அப்போது கூட அவன் பார்வை அவளை விட்டு விலகவேயில்லை அவள் தலைகுனிந்து நின்றிருப்பது கூட அவனுக்கு அத்தனை கவர்ச்சியாக தோன்றியது உரிமை உணர்வும் ஆசையும் ரிச்சர்ட் மனதில் பொங்கி வழிந்தது.
அந்த நேரம் வீட்டின் உள்ளே வந்த நாச்சியப்பன் “துரை துரை” என்று அழைத்து கொண்டே வர சுயநினைவுக்கு வந்தவன்
அங்கிருந்து சென்று சாதரணமாக தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
“வாங்க துரை சாப்பிடலாம் அங்கே எல்லாம் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்காங்க” என்று நாச்சியப்பன் அவனை அங்கிருந்து அழைத்து செல்ல அவனின் பழுப்பு நிற கண்கள் பின்னே திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வந்தது.
பந்தி பரிமாறும் இடத்துக்கு அவனை அழைத்து வந்தார் அவரின் மகன்கள் மூவரும் அனைத்தையும் மேற்பார்வை பார்த்து கொண்டே இருந்தனர் நாச்சியப்பன் அவர்களை அழைத்து ரிச்சர்ட்க்கு அறிமுகப்படுத்தினார்.
“துரை இது என் மூத்த மகன் வீராசாமி இது என் இரண்டாவது மகன் அழகர்சாமி இவன் கடைசி மவன் முருகப்பன்” என்று அவர் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்க ரிச்சர்ட் இடையில் கை நீட்டி தடுத்தான் “ஐ பீல் டயர்ட் நாட்சி சோ ப்ளீஸ்” என்று கூற
“அய்யோ மன்னிச்சிக்கங்க துரை வாங்க சாப்பிடலாம்” என்று அவனை அழைத்து சென்றவர் அவனுக்கென்று உருவாக்கப்பட்ட தங்க நாற்காலியில் அமர வைத்தார்.
ரிச்சர்ட்க்கு என்ன வேண்டுமென்று கேட்டு கேட்டு அவரே பரிமாறினார்
அவன் சாப்பிட்டு முடிக்க
“வாங்க துரை மயிலாட்டம் நடக்குது பார்க்கலாம்” என்று அவனை அங்கு அழைத்து சென்றார்.
அப்போதே நன்றாக இருட்டி இருக்க
அவனும் நாற்காலியில் அமர்ந்து அனைத்தையும் பார்த்து கொண்டே இருந்தான் பொன்னாடைகள், மலர் அலங்காரம், தீப ஒளியில் மிளிரும் மண்டபம்,ஒலிப்பொறி நிறைந்த வாத்யம், மக்களின் குசுகுசுப்பு, ஆரவாரத்துக்கிடையில்
அங்கே தன் தோழிகளுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தாள் மீனாட்சி.
அடர் நீல நிற தாவணி பாவைடையில் நீண்ட கூந்தலை பின்னலிட்டு அந்த மண் விளக்கின் ஒளியில் தன் தோழிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டே இருந்தவளின் ஒரு ஓரத்தில் மயிலாட்டத்தை பார்த்து கொண்டே இருந்த ரிச்சர்ட்க்கு இன்னும் வசதியாகி விட மயிலாட்டத்தை பார்க்காமல் தன்னவளை பழுப்பு நிறக் கண்களால் ரசித்து பார்த்து கொண்டே இருந்தான்.
அவள் தன் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் தலையை ஆட்டிக் கொண்டே ஏதோ காதில் பேச பேச அவளின் காதில் இருந்த தங்க ஜிமிக்கியும் சேர்ந்து ஆடியது.
அதை கூட ரிச்சர்ட் உன்னிப்பாக கவனித்து பார்த்தான் அவளின் தலைமுடியில் இருந்து பாதம் ஏன் அவளின் சின்ன சிரிப்பு கூட அவனை ஏதோ செய்தது பித்தம் கொள்ள செய்தது.
மீனாட்சி சிறிது நேரத்திற்க்கு பிறகு அங்கிருந்து எழுந்து சென்றவள் ஓரக்கண்ணால் பார்த்தாள் எட்வர்ட்டின் பார்வை அவளுக்கு பயத்தை கொடுக்க பதட்டத்துடனே உள்ளே ஓடினாள்.
ரிச்சர்ட் பக்கத்தில் அமர்ந்து இருந்த நாச்சியப்பனிடம் “நாட்சி நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்” என்று கூற “துரை நானும் கூட வரவா” என்று அவர் பதிலுக்கு கேட்டார்.
“இட்ஸ் ஓகே ஐ கேன் மேனேஜ்” என்றவன் அங்கிருந்து எழுந்து வீட்டின் உள்ளே சென்றான் குளியலறைக்கு செல்லாமல் மீனாட்சி அறையின் கதவை திறந்து உள்ளே செல்ல கட்டிலில் அமர்ந்து இருந்தவள் பதட்டத்துடனே எழுந்து கொண்டாள்.
அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருக்க ஒரு மூலையில் மட்டும் மண் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
மீனாட்சி அவனை பார்த்து பயந்தவளுக்கு வியர்த்து வடிய ஆரம்பித்தது பயந்து கொண்டே பின்னே நகர்ந்து சென்றவள் சுவற்றில் மோதி நின்று கொண்டாள்.
ரிச்சர்ட் அவளின் முகத்தை பார்த்து கொண்டே வந்தவன் அவள் அருகில் நெருங்கி வந்து “ஏய் கேர்ள் வில் யூ மேரி மீ” என்று கேட்க அவளுக்கு ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தாள் “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று தனக்கு தெரிந்த தமிழில் கேட்டு முடிக்க மீனாட்சியின் முட்டை கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
அதுமட்டுமின்றி தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள் அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் கடலே வெளியே வந்து கொண்டிருந்தது உதட்டை பிதுக்கி சிறு பிள்ளை போல் அழுக “என்னாட்சி” என்று கேட்டான் ரிச்சர்ட்.
“இதெல்லாம் தப்பு அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை வெட்டி போடுவாரு” என்றாள் சிணுங்கலுடன் “நாட்சி கிட்ட நான் பேசுறேன்” என்று கூறியவன் அந்த அறையில் இருந்து வெளியே சென்றான்.
பின் என்ன நினைத்தானோ ஒரு நிமிடம் அவளை பார்த்து கொண்டே அவள் அருகில் நெருங்கி வந்தவன் அவளின் இடையில் கை நுழைத்து தன் உடலோடு அவளை சேர்த்து இறுக்கி பிடித்து அவளின் செவ்விதழ்களை நோக்கி முத்தமிட போக மீனாட்சி அனிச்சை செயலாக அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
அதுவரை சாதாரணமாக இருந்த ரிச்சர்ட்டின் முகம் அடுத்த நொடி கோபத்தில் சிவந்து போனது மீனாட்சியின் கழுத்தை பிடித்து நெறித்து தன் உயரத்துக்கு அவளை தூக்கினான் மீனாட்சி மூச்சுக்கு திணறி அவளின் கண் இமைகள் மேலே சென்று விட இரக்கம் கொண்டு அவளின் கழுத்தில் இருந்த தன் கையை எடுத்து கொண்டான்.
அதில் மீனாட்சி பொத்தென்று தரையில் வந்து விழுந்தாள்
“நீ எனக்கு மட்டும் தான்” என்று அவளிடம் கூறியவனின் பழுப்பு நிற கண்களை பார்த்து பயந்து போனாள் அதன் பின் அவன் அங்கிருந்து விறுவிறுவென நடந்து வெளியே சென்றான்.
மீனாட்சி பயத்துடன் கை, கால் எல்லாம் நடுக்கத்துடன் தரையில் அமர்ந்து இருந்தாள்.
ரிச்சர்ட் நேரே நாச்சியப்பனிடம் சென்றவன் “நாட்சி உன் கிட்ட கொஞ்சம் பேசனும் தனியா வா” என்று அவரை அழைத்து சென்றான்.
நாச்சியப்பன் ஒன்றும் புரியாமல் அவனுடன் செல்ல அவரின் மூன்று மகன்களும் இதை பார்த்து கொண்டே தான் இருந்தனர்
ஜமீன்தார் தனியே வந்தவுடன் முதல் வார்த்தையாக “நாட்சி உன் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா” என்றான் ரிச்சர்ட் கண்களில் மையலுடன் அதை கேட்ட நாச்சியப்பன் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தார்.
“நான் அவளை கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுறேன் எனக்கு அவளை கட்டி கொடு” என்க அதை கேட்ட ஜமீன்தாரின் கண்களில் வியப்பும் கலக்கமும் கூடவே பயமும் சேர்ந்து இருந்தது என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்தார்.
“துரை என்ன மன்னிச்சிடுங்க இது சாத்தியமே இல்லை என் மாமனார் மகனுக்கு அதாவது என் மச்சானுக்கு என்னோட மகளை கட்டி கொடுக்குறதா வாக்கு கொடுத்துட்டேன் தேதி குறிச்சிட்டோம் இன்னும் ஒரு கிழமையில் கல்யாணம்” என்று கூறி முடிக்க.
ரிச்சர்ட் உடல் திடுக்கிட்டது அவன் வலது கையை கோபத்துடன் முறிக்கினான் ‘அவளுக்கு நிச்சயமாகிவிட்டதா இல்லை இது முடியாது அவள் எனக்கு மட்டும் தான் சொந்தம் அவளை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்’ என்று மனதில் நினைத்தவன் ஜமீன்தாரின் கண்களை கோபத்துடனே பார்த்தான்.
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை நாட்சி அந்த கல்யாணத்தை நிறுத்திட்டு எனக்கு அவளை கட்டி கொடு” என்றான் எட்வர்ட் தீர்க்கமாக
ஜமீன்தார் அவன் பேச்சில் திடுக்கிட்டவர்.
“துரை என்னை மன்னிக்கனும் கண்டிப்பா என் பொண்ணை ஒரு வெள்ளையனுக்கு கட்டி கொடுக்க முடியாது அது எங்க குடும்ப வழக்கமும் இல்லை” என்றார்.
ரிச்சர்ட் கோபத்துடன் அவரை ஆழமான ஒரு பார்வை பார்த்தவன் தன் நெஞ்சை நிமிர்த்தி தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றவன்
“நான் உன் கிட்ட கேட்கல உனக்கு ஆர்டர் பண்றேன் நீ இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ணி தான் ஆகனும் அவள் எனக்கு மட்டும் தான் சொந்தம்” என்றான் கோபத்துடன்.
ஜமீன்தாரின் உடல் வியர்த்து வடிய ஆரம்பத்தது அவருக்கு எட்வர்ட் எவ்வளவு மோசமானவன் என்று தெரியும் அவன் கட்டளையை மீறினால் அவரின் தலை துண்டிக்கப்படும் என்று பயத்துடன் நின்றிருந்தார்.
இதையெல்லாம் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த வீரபூபதி எட்வர்ட் பின்னே ஓடிவந்து அவனை அடிக்க வர அவனை பின்னால் திரும்பி பார்க்காமலேயே அவனின் கைப்பிடித்து தடுத்தான் ரிச்சர்ட்.
அவன் பின்னே திரும்பி தன் ஷூ காலால் அவன் நெஞ்சில் எட்டி ஒரு மிதி மிதிக்க தடுமாறி அவன் கீழே விழுந்தான்.
அங்கிருந்த மொத்த பேரும் இவர்களை அதிர்ச்சியுடன் பார்க்க
வீரபூபதி தரையில் இருந்து எழுந்து வந்தவன் “வெள்ளைக்கார நாய் நீ எவ்வளவு தைரியம் இருந்தா என் அக்கா மகளையே பொண்ணு கேட்ப” என்று அவனை அடிக்க போக ரிச்சர்ட் தன் கோர்ட்டின் உள்ளே இருந்த கை துப்பாக்கியை எடுத்து அவன் ஓங்கிய கையை குறிப்பார்த்து சுட்டான்.
அதை பார்த்த ஜமீன்தாரின் மகன்கள் ஒருவர் கூட அவன் அருகில் நெருங்கவில்லை அங்கிருந்த மக்கள் பயத்துடன் அங்கிருந்து சிதறி ஓடினர்.
வீரபூபதி தன் கையில் ரத்தம் ஒழுக கீழே விழுந்து கிடந்தான்
சத்தம் கேட்டு உள்ளே இருந்து வேதவள்ளியும் மீனாட்சியும் ஓடி வந்தனர்.
வேதவள்ளி அழுது கொண்டே தன் தம்பியின் அருகில் ஓடியவர் “அய்யோ தம்பி உனக்கு என்ன டா ஆச்சு” என்று கதறி அழ ஆரம்பித்தார்.
மீனாட்சி பயத்துடனே ரிச்சர்ட்டை பார்த்து கொண்டே இருந்தாள்
“நாட்சி இன்னும் ஒன் வீக் தான் உனக்கு டைம் அதுக்குள்ள இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ணிட்டு உன் பொண்ணை எனக்கு கட்டி கொடு” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போனவன் பயத்துடன் அங்கே நின்றிருந்த மீனாட்சியின் அருகில் சென்றான்.
அவன் பார்வையில் ஒரு திடமான உரிமை ஒன்று இருந்தது மீனாட்சி அவன் அருகில் வர வர பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள் அவனின் அண்ணன்மார்கள் கோபத்துடன் ரிச்சர்ட்டை பார்த்து கொண்டே இருந்தனர்.
“நீ யாருக்கும் சொந்தம் கிடையாது
நீ எனக்கு மட்டும் தான் யூ ஆர் மைன்” என்றவன் மிருகத்தனமான ஒரு புன்னகையுடன் அவளிடம் இருந்து விலகி காரில் ஏறி சென்றான்.
மீனாட்சி குழப்பத்துடனும் பயத்துடனும் நின்றிருந்தாள் அவளுக்கு இங்கே என்ன நடக்கிறது என்று கூட புரியவில்லை ‘இவனிடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறோம்’ என்று மனதில் நினைத்து கொண்டே பயத்துடனே நின்றிருந்தாள்.
super bro…. y epi so late bro….
Wow super and intresting