அத்தியாயம் 3
மீனாட்சியின் பயம் கலந்த அப்பாவி முகம் ரிச்சர்ட்டின் மனதை அசைத்து பார்த்தது இரையை தேடும் கழுகை போல தன் பழுப்பு நிற கண்களால் அவளை பார்த்துக் கொண்டே காரில் ஏறி சென்றான்.
அவனின் அந்த தீவிரமான பார்வை மீனாட்சியின் மனதின் உள்ளே கிலி பரவச் செய்தது.
வீரபூபதி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்க “அய்யோ என் தம்பி” என்று வேதவள்ளி கதறி அழுது கொண்டே இருந்தார்.
“டேய் என் மாப்பிள்ளையை நாட்டு வைத்தியர் கிட்ட தூக்கிட்டு போங்க டா” என்று ஜமீன்தார் கட்டளையிட வீரபூபதியை அங்கிருந்த வேலைக்காரர்களும் அவரின் மகன்களும் சேர்ந்து குதிரை வண்டியில் ஏற்றி அவனை தூக்கி கொண்டு ஊரில் இருந்த நாட்டு வைத்தியரிடம் அழைத்து சென்றனர்.
வேதவள்ளி புடவையால் தன் வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டே அமர்ந்து இருந்தார் அவரை பார்த்த நாச்சியப்பனுக்கு என்ன தோன்றியதோ கோபத்துடன் அவரின் அருகில் சென்று கன்னத்தில் மாறி மாறி அறைய ஆரம்பித்தார்.
“இருக்க ஒரு பொம்பளை பிள்ளையை ஒழுங்கா பார்த்துக்க தெரியலை உன் மகளா இருந்து இருந்தா இப்படி விட்டு இருப்பியா டி” என்று கேட்டுக் கொண்டே அவரை அடித்துக்கொண்டே இருந்தார்.
அப்போதும் தன் கோபம் தீராமல் தன் இடுப்பில் இருந்த பச்சை நிற பெல்ட்டை கழட்டி வேதவள்ளியை அடிக்க கையை ஓங்கி கொண்டு போக அவரின் குறுக்கே வந்த மீனாட்சி “அப்பா வேண்டாம் பெரியம்மாவை அடிக்காதிங்க எல்லாமே என் தப்பு தான்” என்று அவரின் காலை பிடித்து கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
“என் காலை விடு மீனாட்சி” என்று அவர் கோபத்துடன் கர்ஜிக்க
“அப்பா வேண்டாம் அவங்க பாவம்
நான் தான் பாவி நான் செத்து போறேன் நான் இந்த உலகத்துல இல்லைன்னா உங்க ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை” என்று அழுது கொண்டே இருக்க நாச்சியப்பன் தன் கையில் இருந்த பெல்ட்டை கீழே போட்டுவிட்டு இடிந்து போய் அப்படியே அமர்ந்து கொண்டார்.
தன் மகளின் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று துளி அளவு கூட அவர் எதிர்ப்பார்க்கவில்லை அவரும் நெஞ்சை பிடித்து கொண்டு அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து இருந்தார்.
மூவரும் கண்கள் கலங்க இடிந்து போய் அமர்ந்து இருந்தனர்.
வீரபூபதியை நாட்டு வைத்தியரிடம் அழைத்து சென்றனர் ஜமீன்தாரின் மகன்கள், அவன் உடலில் அதிகளவில் ரத்தம் வெளியேறி இருக்க வைத்தியர் கத்தியை நெருப்பில் பழுக்க காட்சி அவன் கையில் இருந்த தோட்டாவை வெளியே எடுத்தார் மேலே மூலிகை மருந்துகளை வைத்து இறுக்க கட்டினார்.
“ஐயா மூன்று நாட்களுக்கு இந்த கட்டை அவிழ்க்காதிங்க கையையும் அசைக்காதிங்க அதிகமான பளு தூக்காமல் இருங்க” என்று கூறி அனுப்பி வைத்தார்.
நள்ளிரவு வேளையில் வீரபூபதியை வீட்டிற்க்கு அழைத்து வந்தனர் மூவரும்
வேதவள்ளி தன் அழுகயை அடக்க முடியாமல் அவன் பின்னோடு அழுது கொண்டே ஓடி வந்தார்.
வீரபூபதி மருந்தின் வீரியத்தால் படுத்தவுடனே உறங்கி விட மற்றவர்களுக்கு தான் அது தூங்கா இரவாகி போனது.
ஜமீன்தாரின் மூத்த மகன் தன் தாய், தந்தை,தங்கை என்று மூவரும் இடிந்து போய் அமர்ந்து இருப்பதை
பார்த்தவன் தன் தந்தையின் அருகில் சென்றவன் “அப்பா” என்று அவரை அழைத்தான்.
நாச்சியப்பன் கண்ணீர் தேங்கிய சிவந்த கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தார் “அப்பா நான் அந்த வெள்ளைக்காரனை கொலை பண்ண போறேன் அவனை கொன்னுட்டா நீங்க எல்லாரும் நிம்மதியா வாழலாம்” என்று கூற அதை கேட்ட வேதவள்ளிக்கு தூக்கி வாரிப் போட்டது.
மீனாட்சியும் நாச்சியப்பனும் ஒருவரை ஒருவர் அதிர்வுடன் பார்த்து கொண்டனர் “நீ என்ன பா சொல்ற” என்று நாச்சியப்பன் சேர்ந்து போன குரலில் அதிர்ச்சியுடனே கேட்க
“வேற வழியில்லை பா அவனை கொன்னுட்டு நான் எங்கேயாவது தப்பிச்சு போயிடுறேன் நீங்களாவது நிம்மதியா வாழ்ந்தா எனக்கு அது போதும்” என்று மீண்டும் அவன் கூறினான்.
வேதவள்ளி எழுந்து தன் மூத்த மகன் அருகில் சென்றவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் “நீ அவனை கொன்னுட்டா எல்லாம் சரி ஆகிடுமா சொல்லு அவன் பின்னாடி இந்த அரசாங்கமே இருக்கு அவன் நம்ப எல்லாரையும் வாழ விடுவானா சொல்லு” என்றார் கோபத்துடன்.
“யார் கண்ணு பட்டுச்சோ நமக்கா இப்படி ஒரு இழிநிலை வர வேண்டும்” என்று வேதவள்ளி கண்ணீர் விட தன்னால் தன் குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்ட்டப்படுவது பார்த்த மீனாட்சி “அண்ணா நான் செத்து போறேன் எனக்காக நீங்க யாரும் கஷ்டப்பட வேண்டாம்” என்று ஒரு முடிவுடன் எழுந்து நின்று கூறியவள் அங்கிருந்து விறுவிறுவென உள்ளே ஓடிச்சென்றாள்.
மீனாட்சியின் பின்னே அவளின் அண்ணமார்கள் ஓடி வர பின்கட்டில் இருந்த கிணற்றில் ஓடிச் சென்று விழுந்தாள் அவள் தண்ணீரில் விழுந்த சத்தம் கேட்டு நாச்சியப்பன் “அம்மாடி நான் பெத்த என் செல்ல மகளே” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தார் அவரின் பின்னேயே வேதவள்ளியும் ஓடி வந்தார்.
தண்ணீரில் விழுந்த மீனாட்சியை அவளின் இளைய அண்ணன் முருகப்பன் கிணற்றில் அவளுடன் சேர்ந்து விழுந்து காப்பாற்றி மேலே தூக்கி வந்தான்.
மீனாட்சி தண்ணீரை பெரிதாக குடிக்காமல் இருந்ததால் அவளை காப்பாற்றி இருந்தனர் ஊர் முழுக்க இந்த செய்தி காற்றில் பரவி சென்றது.
அடுத்த வந்த நாட்களில் இதுவே பேசும் பொருளாக மாறியது இந்த ஒரு வாரத்தில் என்ன செய்ய முடியும் என்று அனைவரும் யோசித்து கொண்டு இருந்தனர்.
அன்று காலை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சாரதா தன் மகள் வள்ளியை அழைத்து கொண்டு அங்கே வந்தார் வீட்டில் இருந்த அனைவரின் துணிகளையும் இஸ்திரி போட்டு எடுத்து வந்தார்.
இருவரும் துணியை மேசை மீது வைத்துவிட்டு வீட்டில் இருந்த அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டு இருந்தனர்.
வள்ளி மீனாட்சியின் கிழந்து போன தாவணி பாவடை ஒன்றை ஒட்டு போட்டு அணிந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள் அந்த வழியாக வந்த வேதவள்ளி “மீனாட்சி இங்கே நின்னு என்ன பண்ணிட்டு இருக்க” என்று தோளில் கை வைத்து கேட்க அவரின் புறம் திரும்பிய வள்ளி “சொல்லுங்க மா என்ன வேணும்” என்று கோட்டாள்.
வேதவள்ளி அவளை பார்த்து கொண்டே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார்
“ஜமீன்தார் அம்மா உங்களுக்கு என்னாச்சு” என்று வள்ளி கேட்ட அவள் குரலில் சுயநினைவுக்கு வந்தவர்
“ஒன்னுமில்லை மீனாட்சி எங்கே” என்று கேட்க “சின்னம்மா அவங்க அறையில இருக்காங்க” என்றாள் வள்ளி.
வேதவள்ளியும் பதிலுக்கு தலையை ஆட்டிவிட்டு அவளை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே மீனாட்சியின் அறையின் உள்ளே சென்றார் அங்கே இருந்த மீனாட்சி எப்போதும் போல அழுது வடித்து கொண்டே படுத்திருந்தாள்.
தன் மகளை சமாதானம் செய்யும் வழி அறியாமல் பார்த்து கொண்டே வருத்தத்துடன் அவள் அருகில் சென்று மீனாட்சியை இறுக அணைத்து கொண்டார் அவளும் ஆறுதலாக அவரை அணைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள்.
வேதவள்ளி இதுவரை மீனாட்சியை மாற்று தாரத்து பிள்ளை என்று ஒதுக்கியது இல்லை பெண் பிள்ளைகள் மீது அதீத விருப்பம் கொண்டவர் என்பதால் அவளை தன் மகளை போல் வளர்த்து வந்தார்
தன் மகன்களை விடவே ஒரு படி மேலே தான் அவள் மீது பாசம் வைத்திருந்தார்.
நாட்கள் இப்படியே நகர மறுநாள் காலை வேளையில் ரிச்சர்ட் தன் பணியாள் ஒருவனை ஜமீன்தாரின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான்.
அவன் பேன்ட் முழுக்கை சட்டையுடன் அங்கே வந்து நின்றான் அவன் வெள்ளைக்கார பணியாள்
அவனுடைய கையில் ஒரு சிறிய பெட்டியை எடுத்து வந்திருந்தான்.
அந்த வீட்டில் இருந்த அனைவரும் அவனை பார்த்து கொண்டே நிற்க
மீனாட்சியின் சகோதரர்கள் கோபத்துடன் நின்றிருந்தனர்
“ரிச்சர்ட் சார் இந்த டிரஸ்சை உங்களிடம் கொடுத்துட்டு வர சொன்னாரு இது ஆபிசர் மேடம்க்கு” என்று நாச்சியப்பன் கையில் கொடுத்தான்.
நாச்சியப்பன் கோபத்துடன் எதுவும் பேச முடியாமல அதை தன் கையில் வாங்கி கொண்டார் “டுமாரோ மார்னிங் சர்ச்ல ரிச்சர்ட் சார்க்கும் ஆபீசர் மேடம்க்கும் மேரேஜ் சோ அவங்களை ரெடி ஆகி வர சொன்னாரு மார்னிங் ஆபீசர் சார் இங்கே வந்துடுவாரு” என்று கூறிவிட்டு அங்கிருந்த யாரின் பதிலையும் கேட்க்காமல் சென்றுவிட்டான்.
மீனாட்சி இதையெல்லாம் பார்த்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் மறுநாள் காலை அந்த ஜமீன்தார் வீட்டின் வாசலில் ரிச்சர்ட்டின் கார் வந்து நின்றது.
ரிச்சர்ட் கருப்பு நிற கோர்ட் சூட்டுடன் கீழே இறங்கியவுடன் தன் பளபள ஷூ கால்கள் சத்தத்துடன் டக் டக் என உள்ளே நடந்து வந்தான் அவனின் ஷூ காலின் சத்தம் கேட்டே மீனாட்சியின் உடலில் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
அவள் அறையின் உள்ளே இருக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த வேதவள்ளி “நீ இங்கே இருந்து சீக்கிரமா கிளம்பி போ நேரா திருவனந்தபுரத்துல இருக்க நம்ம மாமா வீட்டுக்கு போ” என்று அவளை அனுப்பி வைத்தார்.
“அம்மா நான் அங்கே போய்ட்டா இந்த வெள்ளைக்காரனை எப்படி சமாளிப்பிங்க” என்று அழுது கொண்டே கேட்டாள் “நான் சமாளிச்சிக்கிறேன் வெளியே வண்டி நிற்க்குது நீ சீக்கிரமா கிளம்பி போ” என்று அவளை பின் வாசல் வழியாக அனுப்பி வைத்தார்.
ரிச்சர்ட் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வர வேதவள்ளி பயத்துடன் வியர்த்து வடிய நின்றிருந்தார்.
“உன் பொண்ணு எங்கே வெர் இஸ் மீனாட்சி” என்று தன் அனல் கக்கும் விழிகளுடன் கேட்க
“இ..ங்… கே.. தான் துரை இருக்கா” என்று திக்கி திணறி கூறிய வேதவள்ளி அந்த அறையின் உள்ளே இருந்த சிறிய அறையில் இருந்து
வெள்ளை நிற கவுன் அணிந்த ஒரு பெண்ணை அழைத்து வந்தார்.
அந்த வலை போன்ற வெள்ளை துணியால் அந்த பெண்ணின் முகம் முழுதாக மூடி இருந்தது ரிச்சர்ட் அவளை பார்த்தவனுக்கு அவளின் முகம் சரியாக தெரியவில்லை சர்ச்சில் அனைவரும் காத்திருந்ததால் நேரமில்லை என்று நினைத்தவன்
“கம் மீனாட்சி” என்று அவளின் கைப்பிடித்து வெளியே அழைத்து சென்றான்.
Hey there ggreat website! Does running a blog like this
require a large amount of work? I’ve very little knowledge of programming however I was hoping to
start my own blog in the near future. Anyhow, if you have any suggestions or techniques for new blog owners please share.
I know this is off subject but I just wanted to ask. Thank you!
Also visit my site – химчистка мебели москва на дому
The story is very interesting, please upload the next part very soon ♥️👍🏻
super bro