கண்ணை கவ்வாதே
கள்வா -5
கீழே வந்தவனின் பார்வையில் அனைவரும் டைனிங் ஹாலில் அவர்களின் வீட்டு பழக்கமாக இரவு உணவிற்காக அமர்ந்திருந்தனர். இது விசாலாட்சி பாட்டியின் அன்பு கட்டளை அதை இன்று வரை யாரும் தவறியது இல்லை.
ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்ற நாட்களை தவிர மற்ற நாட்களை போல் இன்றும் அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்.
சஷ்டி கூட தனது கொள்ளு பாட்டியின் மடியில் தூங்காமல் அமர்ந்து விளையாண்டு கொண்டு இருந்தது தாத்தாவே முதலில் தனது பேச்சை ஆரம்பித்து வைத்தார் “ என்ன சொல்றான் நம்ப வீட்டு கடைக்குட்டி பய”
என்றதுக்கு செல்வமோ “ இவன் என்னப்பா நம்பல தலையால் தண்ணி குடிக்க வச்சிகிட்டு இருக்கான்”. கோபாலனோ” இன்னைக்கு நம்ப கதிரவன் காலேஜ்ல போய் ப்ரொபசராக ஜாயின் பண்ணி இருக்கானாம் “
“ அப்படியா அண்ணா எனக்கு தெரியாதே ! அந்த பொண்ணு கூட அங்க தான் படிக்கிறதா கமலா சொன்னாலே” .
“ ஆமாங்க அங்க தான் படிக்கிறா”என்ற கமலா பறிமாறிக் கொண்டிருந்த தனது அக்காவை ஒரு பார்வை பார்க்க அவரோ கண்களை மூடி சம்மதம் தெரிவித்தார்.
அப்பொழுது “மாமா” என்று அழைக்கவும் அவரோ நிமிர்ந்து பார்க்க மற்ற அனைவரின் கவனமும் அவரிடம் வந்தது அப்போழுதும் தயங்கி கொண்டே இருந்தவரை பார்த்தவர் “சொல்லுமா” என்றார்.
“அது வந்து மாமா மஹா போன் பண்ணி இருந்தா மருமகளுக்கு இந்த லீவ்ல தாலி பெருக்கி போடலாமானு கேட்டு இருந்தா நான் பெரியவங்ககிட்ட கேட்டு சொல்லுறேன்னு சொன்னேன் அத்தை “ என்று தனது மாமாவிடம் தொடங்கி அத்தையிடம் முடித்தார்.
“ ஆமாப்பா மாதவனும் என்கிட்ட இத பத்தி பேசணும் சொன்னான் நான் தான் அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு உன் கிட்ட சொல்றேன்னு சொன்னேன் நீங்க என்ன பண்ண நினைக்கிறீங்க “ என்றார் கோபால்.
அப்போது விசாலாட்சி ஆச்சியோ “ இதுல நினைக்க என்ன இருக்கு கோபால் அவங்களும் கல்யாணம் பண்ண பிள்ளையை எத்தனை நாளைக்கு வச்சிருப்பாங்க, என்னதான் நம்மளும், அவங்களும் இத பத்தி பேசி முடிவு எடுத்து இருந்தாலும் நம்பல விசாரிக்கிற மாதிரி தானே அவர்கள் சொந்தமும் விசாரித்து இருப்பார்கள்.
நாம் தான் நம்ம சைட்டுல இருந்து இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும். ” என்னங்க நீங்க என்ன சொல்லுறிங்க” என்று முடித்தார்.
அதற்குள் ராஜி “ இன்னும் ஒரு வருஷம் தான படிப்பு இருக்கு அதை நம்ம வீட்ல இருந்தே முடிக்கட்டும் நாம தான் எல்லோரும் இங்க இருக்கோமே நம்ம பார்த்துபோம் ” என்றார்.
“ஆமா ராஜி நாளைக்கு காலைல நீயும் கமலாவும் போயி நல்லா தாளில கோக்குற மாதிரி கெட்டி செயினா ஆர்டர் குடுத்துட்டு ரெண்டு நாள்ல வேணும்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்துருங்க
இப்படி அனைவரும் ஆளுக்கு ஒன்று கூறிக்கொண்டு இருக்கையிலேயே அனைவரையும் பார்த்து கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தார் தாத்தா. “ என்ன அப்பா ஏதோ யோசனையிலேயே இருக்கிங்க” என்றார் செல்வம்.
தனது யோசனையில் இருந்து விடுபட்டவர் “ நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் அது என்னவென்றால் வர புதன்கிழமை நாள் நன்றாக இருக்கு நம்ம முறைப்படி காலையில் பேத்திக்கு நம்ம குலதெய்வ கோயில்ல தாலி பெருக்கி போட்டுட்டு, அப்படியே நம்ப சொந்தகாரர்கள் எல்லோருக்கும் கறி விருந்து கொடுத்து போட்டு பேத்தியையும் நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம் ” என்ன சொல்லுறிங்க எல்லோரும்? என்றார்.
அதைக் கேட்டுக் கொண்டே கீழே இறங்கி வந்தவனின் முகத்தில் அத்தனை அதிர்ச்சியுடன் அப்படியே நின்று விட்டான். அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தார் விசாலாட்சி ஆச்சி.
மருமகள்கள் இருவரின் முகத்தில் தோன்றிய நிறைவான புன்னகையுடன் “சரிங்க மாமா” என்றனர். கோபாலனோ “ அப்பா வர புதன்கிழமைனா நாள் ரொம்ப பக்கத்துல இருக்கே எப்படி மித்த ஏற்பாடு எல்லாம் பண்றது” என்றார்.
செல்வம் “ அண்ணா அது ஒன்னும் பிரச்சனை இல்ல எல்லாரும் இருக்கோம் ஆளுக்கு ஒரு வேலையா பார்த்து முடித்துவிடுவோம் கல்யாணம் தான் அவசரமா முடிச்சுட்டோம் விருந்துக்கு சொந்த பந்தம் எல்லாத்தையும் கூப்பிட்டு நிறைவா பண்ணிடுவோம் அண்ணா” என்றார்.
அதிர்வில் இருந்து மீண்டவன் அவர்கள் ஏற்பாடுகளை எல்லாம் கேட்டுக் கொண்டே வேகமாக வந்த மித்ரன் தனது தாத்தாவிடம். “ என்னால் இதற்கு எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது” என்றான் அழுத்தமாக.
அதைவிட மிகவும் அழுத்தமாக அவனைப் பார்த்த சேதுபதி தாத்தா “ நீ இந்த முடிவுக்கு சம்மதித்து தான் ஆக வேண்டும் மித்ரன் இதுக்கும் மேல உன்னை தனியா விட முடியாது” என்றார்.
“இதுக்கு தான் நான் இங்க வரதே இல்லை என் வீட்டுக்கே நான் போறேன்” என்றான்.
அவனது தந்தையோ கோபத்துடன் “தம்பி என்ன பழக்கம் இது உன் வீடு என் வீட்டுல பேசிட்டு இருக்க நீ இங்க தான் இருக்கணும்” என்றார் மிகவும் கண்டிப்பாக அதில் மித்ரனின் கோபம் அதிகமாத தூண்டப்பட மிகவும் இறுகி காணப்பட்டான்.
விசாலாட்சி ஆட்சியும் இதை கவனித்துக் கொண்டிருந்தவர் தனது மகனிடம் “ கோபாலா நீ இப்பயே மாதவனுக்கு போன் பண்ணி பேசிடு அப்பதான் அவங்க சைடுல இருந்து எல்லாரும் வரதுக்கு சரியா இருக்கும்” என்றார் அதில் அனைவரும் மித்திரனை பார்க்க அவன் மிகுந்த கோபத்துடன் அவனது அறைக்கு சென்று விட்டான்.
மற்ற அனைவரும் இது குறித்து அனைத்தையும் ஆலோசனை செய்து விட்டு தங்களது அறைக்கு சென்றனர்.
அங்கே தர்ஷனியின் வீட்டிலும் அவளை தவிர மற்ற மூவரும் இரவு உணவிணை முடித்துக் கொண்டு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் மாதவனுக்கு கோபாலன் அழைத்து இத்தகவலை கூறினார்.
அவர் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த மஹாவும், தர்ஷனாவும் என்ன என்ற கேள்வியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர் மாதவனும் தொலைபேசி அழைப்பை முடித்துக் கொண்டு வந்து மகாவிடம் கோபாலன் தெரிவித்ததை கூறினார்.
“என்ன அக்காவ அங்க அனுப்பபோறிங்களா? அக்காவோட படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் தானே அனுப்புறதா நீங்க சொன்னீங்க இன்னும் அதுக்கு ஒரு வருஷம் இருக்கே நான் போய் அக்கா கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன்” என்று கிளம்பியவள் தந்தையின் குரலில் நின்றாள்.
“ஒரு நிமிஷம் பாப்பா இப்ப நீ போய் எதுவும் சொல்ல வேண்டாம் அம்மாவே நாளைக்கு காலைல பொறுமையா எடுத்து சொல்லுவா அவசரப்படாம இரு பெரியவங்க நாங்க பண்ணுனா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்” என்றவர் என்ன மகா நீ ஒண்ணுமே பேசாம அப்படியே அமைதியா இருக்க என்று மனைவியை கேட்டார்.
அதற்கு மகா “ தர்ஷனா நீ போய் படிக்க இருக்கனு சொன்னியே படிச்சுட்டு சீக்கிரம் தூங்கு” என்று முதலில் தனது மகளை அனுப்பியவர் தனது மகள் சென்றவுடன் கணவரிடம் திரும்பி சொல்லுங்க என்றார். அவரோ கோபால் சொன்னதை திரும்பவும் ஒரு முறை சொல்லி இப்ப நீ தான் சொல்லணும் என்றார்.
“ நான் இப்ப என்ன சொல்லனும் இத பத்தி ஆல்ரெடி நம்ம கலந்துபேசி முடிவு பண்ணி தான் அண்ணிக்கு போன் பண்ணி சொன்னேன் அவுங்களும் வீட்டுல பெரியவங்ககிட்ட கலந்து பேசி முறைப்படி நமக்கு சொல்லி இருக்காங்க, அடுத்து நம்ம சைட்டுல நாம பண்ணவேண்டிய வேலையை பார்போம்” என்றார்.
“ நீ பண்றது சரியா இருக்கா மகா அம்மாவோட காரியத்துக்கு வந்தவுங்க யாரோ ஏதோ சொன்னாங்க என்ற காரணத்துக்காக நீ இவ்ளோ பெரிய முடிவு எடுத்து இருக்க முதல்ல நாம பேசின மாதிரி ஒரு வருஷம் கழிச்சு தர்ஷனியை கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வரலாம் இப்ப இவ்வளவு அவசரமா அங்க போய் விடனுமா கல்யாணம்தான் அவசரமா முடிஞ்சிருச்சு ஒரு வருஷம் கழிச்சு ரிசப்ஷன் வைத்து கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுறது தான் நம்ம பொண்ணுக்கு மரியாதை” என்றார்.
“ இப்பவும் பெரியப்பா நீங்க சொல்ற மாதிரி நம்ம பொண்ண மரியாதையா தான் அவுங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வச்சு தான் நம்ம பொண்ண கூட்டிட்டு போறாங்க பெரியப்பா யோசனை எப்பவுமே கரெக்டா தான் இருக்கும் யாரோ சொன்னாங்கன்னு நான் இந்த முடிவ எடுக்கலங்க ரெண்டு பேத்துக்குமே திடீர்னு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கோம் அதை அவங்க கத்துகிட்டு வாழ நாம் அவங்களுக்கு தர்ஷினியின் படிப்பு முடியும் வரை டைம் கொடுக்கிறோம்னு பெரியவங்க எல்லாரும் சொல்லி இருந்தோம்.
ஆனா சூழ்நிலை நம்மளால அவங்க கேட்ட டைம் கொடுக்க முடியவில்லை, அதனால் என்ன பரவால்ல ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்தே ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்டு அவங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கட்டும் இதுல நாம யாரும் தலையிட போறது இல்லைங்க பிரிச்சு இருக்கிறத விட சேர்ந்து இருக்கிறது தான் நல்லதுனு என் மனசுக்கு படுதுங்க.
“ நீங்க என்ன நினைக்கிறிங்க”
“ நீ சொல்றது எல்லாமே எனக்கு புரியுது மகா ஆனா நம்ம பொண்ணு பத்தி நெனச்சு பாத்தியா சின்ன பொண்ணு இப்பதான் படிக்கிறாள். அவளால கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துட்டு படிப்பையும் கவனிச்சுக்க முடியுமா அதான் என்னோட கவலையே” என்று மிகவும் வருத்தத்துடன் பேசினார்.
“உங்களுக்கு அந்த வருத்தமே வேண்டாம் கமலா அண்ணியும் சரி பெரிய அண்ணியும் சரி நம்ம பொண்ண நல்லா பாத்துகுவாங்க உங்களுக்கு தெரியாதா அந்த குடும்பத்தை பத்தி விடுங்க எல்லாமே நல்லாதா தான் நடக்கும்” என்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
இப்படியே இவர்கள் குடும்பமாக மாறி மாறி பேசிக்கொண்டு இருக்கையில் அதற்கு காரணமான ஒரு ஜோடி பறவைகளில் ஒன்று தனது நிலையை நொந்து கொண்டு தனது அறையில் வெறும் தரையில் படுத்து கொண்டு மேலே உள்ள சீலிங்கை பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று ஞாபகம் வந்தவனாக தனது விரலில் டி என்று பொறிக்கப்பட்ட மோதிரத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு நடந்தும் அவனது விரலில் உள்ள மோதிரத்தை கழட்டி வைக்க வேண்டும் என்று அந்நேரத்திலும் அவனுக்கு தோணவில்லை.
அதே நேரத்தில் அவனின் சரிபாதியோ அவளின் அறையில் அன்று காலையில் இருந்து நடந்த சம்பவங்களிலும் அதில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சியையும் யோசித்துக் கொண்டே தன்னையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள்.
appo mithran dharshini ku marriage aitta…..
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌