ATM Tamil Romantic Novels

மெய் தீண்டும் முரடா 4

அத்தியாயம் 4

 

ரிச்சர்ட் அந்த பெண்ணின் கையை பிடிக்கும் போதே அவளின் கைகள் நடுங்கியது ரிச்சர்ட் அதை உணர்ந்தாலும் அவளின் கையை இன்னும் தன் இரும்பு கரங்களால் கெட்டியாக பிடித்து கொண்டான். 

 

ரிச்சர்ட் தன் மகளுடன் ஜோடியாக வெளியே வருவதை பார்த்த நாச்சியப்பனின் கண்கள் கலங்கியது தன் இயலாமையை நினைத்து கண்ணீர் வடிக்க அவரை பார்த்த ரிச்சர்ட்டின் இதழின் ஓரம் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது. 

 

இருவரும் காரில் ஏறி செல்ல நாச்சியப்பன் தன் மகளையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டே இருக்க அவரின் அருகில் வந்த வேதவள்ளி அவரின் கையை பிடித்தார் “நம்ம பொண்ணு” என்று கூறியவரால் அதற்க்கு மேல் பேச முடியாமல் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே அமர்ந்து கொண்டார். 

 

அவரின் இருதயத்தில் ஏதோ முள் ஒன்று குத்துவதை போல் வலிக்க 

துடிக்க ஆரம்பித்தார் வேதவள்ளி அவரின் தோளை தொட்டு அவரின் மார்பில் தன் கைகளால் தடவி விட்டவர் “என்னங்க என்னாச்சு” என்று கேட்டார் பதட்டத்துடனே. 

 

“என் பொண்ணு…பொண்ணு..” என்று அவர் துடிக்க “என்னங்க மீனாட்சி அவன் கூட போகலங்க” என்றார் சத்தமாக அவர் கூறியதை  கேட்ட நாச்சியப்பன் அதிர்ச்சியுடன் அவரை பார்க்க “என்ன சொல்ற மா” என்று அவர் கேட்டார். 

 

“ஆமாங்க நம்ம சாரதா பொண்ணு வள்ளி தான் அவன் கூட போய்ருக்கா இதெல்லாம் நடக்கும்ன்னு எனக்கு முன்னவே தெரியும் அதனால தான் நான் நேற்று சாரதா வீட்டுக்கு போனேன்” என்றார். 

 

நேற்று மாலை ஒரு ஆறு மணி போல் இரவு உணவை சமைத்து வைத்துவிட்டு சாரதாவும் அவரின் மகள் வள்ளியும் அந்த இருட்டில் நடந்து சென்று ஊரின் எல்லையில் இருந்த தங்கள் குடிசை வீட்டின் உள்ளே நுழைந்தனர். 

 

அவர்களின் பின்னேயே வந்து குதிரை வண்டி ஒன்று அவர்கள் வீட்டின் வாசலில் வந்து நின்றது தலையில் புடவையால் முக்காடிட்டு கொண்டு குடிசையின் உள்ளே வந்தார் வேதவள்ளி அவரை பார்த்த சாரதா “வாங்க மா நீங்க இந்த நேரத்துல” என்று தயக்கத்துடன் கேட்க. 

 

வள்ளி அங்கே வரிசையாக அமர்ந்து இருந்த தன் தம்பி தங்கைகளுக்கு சாப்பாடு பரிமாறி கொண்டு இருந்தாள் அவளும் ஜமீன்தார் அம்மாவை பார்த்தாள். 

 

நேரே வந்த வேதவள்ளி சாரதா அம்மாவின் கையை பிடித்து கொண்டு அழுக ஆரம்பித்தார் 

“என்ன மா என்னவாச்சு உங்களுக்கு” என்று கேட்க “சாரதா எனக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய யாருமேயில்லை நீ தான் எனக்கு உதவனும்” என்று கேட்டார். 

 

சாரதா ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க “நாளைக்கு காலையில அந்த படுபாவி என் மகளை கல்யாணம் பண்ணிக்க வரான் அவன் கிட்ட இருந்து நீ தான் என் பொண்ணை காப்பத்தனும்” என்றார். 

 

சாரதாவுக்கு இப்போது கூட ஒன்றும் புரியவில்லை தன்னால் என்ன அவருக்கு உதவி செய்துவிட முடியும் என்று “நான் என்ன பண்ண முடியும் ஜமீன்தார் அம்மா நானே ஒரு ஏழை தாய் என் பிள்ளைக்களுக்கே வயிறு நிறைய சோறு போட முடியாத நிலையில் நான் இருக்கேன்” என்று கூறினார். 

 

“எனக்கு எல்லாம் தெரியும் சாரதா உன் கணவர் இறந்தது வறுமையில் நீ வாடி இருக்கிறது எல்லாம் எனக்கு தொரியும் ஒரே ஒரு உதவி மட்டும் எனக்கு பண்ணு இதை நீ எனக்கு பண்ணினா காலம் முழுக்க உன் பிள்ளைகள் நான்கும் வயிறு நிறைய சாப்பிடுவாங்க” என்றார். 

 

சாரதா ஒன்றும் புரியாமல் “சொல்லுங்க மா நான் என்ன செய்யனும்” என்று கேட்டார். 

 

“நாளைக்கு அந்த படுபாவி வரும் போது என் மகளுக்கு பதிலா உன் மகளை அவன் கூட அனுப்பி வைக்கனும்” என்று கூறி முடிக்க சாரதா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார் 

“என்ன சொல்றிங்க ஜமீன்தார் அம்மா என் மகளையா” என்று சாரதா அதிர்ச்சியுடன் கேட்டவர் தன் மகள் வள்ளியை பார்த்தார். 

 

“ஆமாம் நான் உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன் சாரதா எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை நீ இதை எனக்காக உனக்கு தேவையான எதுவா இருந்தாலும் நான் பண்ணுவேன்” என்றார். 

 

“அம்மா என் மகள் அவளை அவங்க எதாவது பண்ணிட்டா நான் என்னை பண்ணுவேன் மா” என்று கேட்டார் அழுது கொண்டே சாரதா

“உனக்கு இந்த ஒரு மகள் மட்டும் இல்லை இன்னும் நாலு பசங்க இருக்காங்க ஒரு குடும்பம் நல்லா இருக்கனும்ன்னா ஒருத்தர் தன் வாழ்க்கையை இழக்குறதுல தப்பே இல்லை உன் பெயர்ல ஒரு மண் வீடு எழுதி கொடுக்கிறேன் அதோட ஒரு நஞ்சை புஞ்சை தங்க நகைகள் சிலதையும் கொடுக்கிறேன்” என்றார் அவரின் கைப்பிடித்து. 

 

“என்னால முடியாது என் மகளை பலி கொடுத்து தான் நான் சாப்பிடனும்ன்னா எனக்கு அப்படி பட்ட சாப்பாடே வேண்டாம்” என்றார் சாரதா. 

 

“நீ இப்போ எனக்கு பதில் சொல்ல வேண்டாம் சாரதா நல்லா யோசிச்சு காலையில வந்து உன் முடிவை சொல்லு எனக்கு அது போதும் என்னை இப்போ ஊர்ல யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும் காலையில உன் பொண்ணை அழைச்சிட்டு வந்துடு” என்று கூறியவர் குதிரை வண்டியில் ஏறி மீண்டும் சென்றுவிட்டார். 

 

சாரதா ஒன்று புரியாமல் குழப்பத்துடன் அமர்ந்து இருக்க வள்ளி தன் தம்பி தங்கைகளுக்கு சாப்பாட்டை பரிமாறினாள் 

இறுதியாக அந்த பானையில் இருந்த சாப்பாடு மொத்தமும் தீர்ந்து விட வள்ளி பானையில் இருந்த தண்ணீரை குடித்து தன் பசியை ஆற்றியவள் தன் தாயுடன் வந்து அமர போக அவளின் கடைசி தங்கை 

“அக்கா பசிக்குது இன்னும் கொஞ்சம் வேணும்” என்றாள் வள்ளியிடம். 

 

வள்ளி அந்த பானையில் ஓட்டி இருந்த உணவை வழித்து அவளின் அவளின் மண் தட்டில் வைத்தாள். 

 

அதை பார்த்த சாரதா அழுது கொண்டே அமர்ந்திருக்க அவரின் அருகில் வந்த வள்ளி “அம்மா நான் நாளைக்கு சின்னம்மாவுக்கு பதிலா போறேன் மா” என்றாள் சாரதா அவளை அதிர்ச்சியுடன் பார்க்க

“வேண்டாம் அந்த கலெக்ட்டரு ரொம்ப மோசமானவன் நம்ம ஆளுங்க நிறைய பேரை கொன்னு இருக்காங்க நான் உன்னை போக விட மாட்டேன்” என்றார் கண்கள் கலங்க. 

 

“பரவாயில்லை அம்மா என்னைக்காவது ஒரு நாள் என்னோட உயிர் போக தான் போகுது அது நாளைக்கா இருக்கட்டும் 

நான் இறந்தாலும் நீங்க எல்லாரும் வயிறு நிறைய சாப்பிடுவிங்கல்ல” என்றாள் அழுது கொண்டே தேம்பலுடன் “வேண்டாம் நான் உன்னை இழக்க மாட்டேன் வள்ளி” என்று அவர் அவளை கட்டி அணைத்து அழுதார். 

 

“அம்மா கையில சத்தியம் பண்ணு நீ நாளைக்கு எங்கேயும் போக கூடாது வள்ளி” என்று அவளின் கைப்பிடித்து கேட்டார் சாரதா “இல்லை நாளைக்கு நான் போவேன் எனக்கு நீங்க நல்லா இருந்தா போதும் மா” என்றாள். 

 

“ஓ அப்போ சரி நாளைக்கு நீ இங்கே இருந்து போனா நானும் உன் தம்பி தங்கச்சிங்க எல்லாரும் குளத்துல விழுந்து செத்து தான் போவோம் முதல்ல என்னோட கணவரை இழந்தேன் அடுத்து உன்னையும் இழக்க எனக்கு விருப்பம் இல்லை” என்றார். 

 

“அம்மா இன்னும் கொஞ்ச நாளுக்கு நாம எல்லாரும் பசியோட சாவதற்க்கு பதிலா நான் ஒருத்தி சாகுறது எந்த தப்பும் இல்லை” என்றாள் வள்ளி

“இல்லை ஒரு வேளை செத்தா எல்லாரும் சேர்ந்தே சாவோம் நீ எதுவும் பேச வேண்டாம் முதல்ல படுத்து தூங்கு” என்று தன் பிள்ளைகளை படுக்க வைத்தவர் தானும் அவர்களுடன் உறங்க ஆரம்பித்தார். 

 

காலை பொழுது மெல்ல விடிய சாரதா எழுந்தவர் பக்கத்தில் வள்ளி படுத்திருந்த முதலில் தேடியது வள்ளியை தான் அவள் படுத்திருந்த இடம் வெற்றிடமாக இருக்க “வள்ளி வள்ளி” என்று அவளை தேட ஆரம்பித்தார். 

 

அவள் காலையிலேயே ஜமீன்தார் வீட்டுக்கு சென்று மீனாட்சிக்காக அனுப்பி வைத்திருந்த கவுனை அணிந்து கொண்டு தயாராக இருந்தாள். 

 

சாரதா ஜமீன் வீட்டுக்கு ஓடி வந்தவர் ரிச்சர்ட் தன் மகளின் கைப்பிடித்து அழைத்து செல்வதை பார்த்தார் 

அவளின் வலது காலில் கட்டியிருந்த கயிறு அது வள்ளி தான் என்பதை அவருக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 

 

ரிச்சர்ட் அவள் பக்கத்தில் இருக்கையில் எதுவும் பேச முடியாமல் தொண்டை அடைத்து அழுகையுடனே நின்றிருந்தார் 

அவரின் மகள் வள்ளியோ அவரை பார்த்து கொண்டே அவனுடன் காரில் ஏறி சென்றாள். 

 

கார் அங்கிருந்து செல்லும் வரை அழுகையை அடக்கி வைத்திருந்தவர் 

அந்த கார் அங்கிருந்து சென்றவுடன் மண் தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தார். 

 

வேதவள்ளி தன் கணவரிடம் அனைத்தையும் கூறி முடிக்க நாச்சியப்பன் இப்போது தான் நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார். 

 

“என்னங்க அவன் நம்மளை தேடி வருவதற்க்குள்ள நாம இந்த ஊரை விட்டே கிளம்பனும்” என்றவர் தன் கணவர் மற்றும் மகன்களுடன் தனக்கு தேவையான உடமைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். 

 

ரிச்சர்ட் வள்ளியுடன் தேவாலயத்தின் வாசலில் இறங்கியவன் அவளின் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றான். 

 

வள்ளி தலை குனிந்து தன் கண்களால் அனைவரையும் பார்த்து கொண்டே வந்தாள் சுற்றி வெள்ளைக்கார பணக்கார ஆண்கள் பெண்கள் என அனைவரும் திருமணத்துக்கு வந்திருந்தனர் அனைவரும் அவர்களை பார்த்து கொண்டே இருந்தனர்.  

 

பாதிரியார் இவர்களுக்காக அங்கே காத்திருக்க இருவரும் அங்கே சென்று நின்றனர். 

 

மதகுரு பைபிளில் இருந்த வேதங்களை ஆங்கிலத்தில் ஓதியவர் இருவரின் முன்பு திருமண மோதிரத்தை நீட்டினார். 

 

ரிச்சர்ட் மோதிரத்தை கையில் எடுத்தவன் வள்ளியின் விரல்களுக்கு அணிவித்தான் 

அவள் ஒன்றும் புரியாமல் நின்றிருக்க “மீனாட்சி அந்த ரிங்க் எடுத்து என்னோட கையில போட்டு விடு” என்றான். 

 

வள்ளி பயத்துடன் கண்கள் நடுங்க அவனின் கம்பீரமான கைகளை பிடித்து அவன் விரல்களில் அந்த தங்க மோதிரத்தை அணிவித்தாள். 

 

திருமணம் நல்லபடியாக முடிய சுற்றி இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பினர் ரிச்சர்ட் அவளின் கையை பிடித்து முத்தமிட்டான். 

 

ரிச்சர்ட் அவளின் முகத்தை பார்க்கும் ஆவலில் வள்ளியின் முகத்தில் இருந்த திரையை எடுத்தான் 

அவளின் முகத்தை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது பற்களை நறநறவென கடித்து கொண்டு இருக்க வள்ளி பயத்துடன் அழுது கொண்டே தலை குனிந்து நின்றிருந்தாள். 

 

“ஹூ ஆர் யூ” என்று கேட்க வள்ளி பயத்துடனே நின்றிருந்தவளுக்கு அவன் கேள்வி ஒன்றுமே புரியவில்லை

“யார் நீ” என்று கேபத்துடன் மீண்டும் கேட்டான் ரிச்சர்ட். 

 

 

 

 

 

 

2 thoughts on “மெய் தீண்டும் முரடா 4”

  1. Adhane pathen epdi jameen veetu ponnuku takunu vaazka kuduthaaarenuu
    Sathish ungaluku epomae velakare ponnuku vaazka kuduthu thanae palakam 😂😂😂😂 ini enna nadaka poguthooo

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top