ATM Tamil Romantic Novels

மெய் தீண்டும் முரடா 5

அத்தியாயம் 5

 

வள்ளி அழுகையுடனே அவனை நிமிர்ந்து ஏறிட்டு பார்த்தவள் 

“நான்… நான்” என்று பேச ஆரம்பிக்க அவளின் வாயில் இருந்து வார்த்தைகள் வெளியே வரவேயில்லை காற்று மட்டும் தான் வெளியே வந்தது. 

 

ரிச்சர்ட்டின் முகத்தில் கோபத்தில் சிவந்து போக தன் கோர்ட் பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை வெளியே எடுத்தவன் தன் இடது கையால் அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்தான் “சொல்லு நீ யாரு” என்று கேட்டுக் கொண்டே அவளின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட போக “நான்..ம்ம்..நான்..ஜமீன்தார் ஐயா வீட்டுல வேலை செய்யுறேன்” என்றாள் தேம்பலுடன் வள்ளி. 

 

அடுத்த கணம் ரிச்சர்ட் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டான் இவர்களை பார்த்த சுற்றியிருந்தவர்கள் பதட்டமடைந்தனர் ஆனால் அவனை நெருங்கி கேள்வி கேட்க்கும் அளவுக்கு அங்கிருந்த யாருக்கும் தைரியம் வரவில்லை ரிச்சர்ட்டின் கையில் இருந்த மோதிரம் வள்ளியின் இதழின் ஓரம் கிழித்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. 

 

அந்த ஆறடி ஆண்மகனின் பக்கத்தில் வள்ளி உயரத்தில் அவனை விட மிகவும் சிறியவளாக சிறு குழந்தையை போல் அவனிடம் அடி வாங்கி தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தாள். 

 

“உன்னை யாரு இங்கே வர சொன்னா சொல்லு” என்று அவளின் முடியை பிடித்து ரிச்சர்ட் இன்னும் கோபத்துடனே கேட்க வலி தாங்க முடியாமல் வள்ளி “அம்மா” என்று முனகியவள்

“ஜமீன்தார் அம்மா தான் அவங்க பொண்ணுக்கு பதிலா என்னை போக சொன்னாங்க” என்று கூற மீண்டும் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான் ரிச்சர்ட். 

 

அவளின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றவன் ஒரு கையில் துப்பாக்கியுடன் சினம் கொண்டே சிறுத்தையை போல அந்த தேவலாயத்தை விட்டு வெளியே சென்றான் வள்ளியை காரின் கதவை திறந்து உள்ளே தள்ளியவன் தானும் அவளுடன் ஏறி அமர்ந்து காரை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றான். 

 

அதே நேரம் ஜமீன்தார் இல்லத்தில் ரிச்சர்ட் வருவதற்க்கு முன்பே அனைவரும் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்றனர் அதாவது நாச்சியப்பன்- வேதவள்ளி,வீரபூபதி ஒரு புறமும் அவரின் மகன்கள் ஒரு புறமும் சென்றுவிட்டனர் மீனாட்சி எப்போதோ அந்த ஊரின் எல்லையை தாண்டி இருந்தாள் உயிர் பயத்தில் அனைவரும் ஒரு கூட்டில் இருந்து வெவ்வேறு திசைக்கு பிரிந்து சென்றனர். 

 

ரிச்சர்ட் காரை வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருக்க வள்ளி பயத்துடனும் அழுகையுடனும் அவனின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள் அவளுக்கு நடப்பவையெல்லாம் கனவா நினைவா என்று எதுவும் புரியவில்லை பாவம் அவள்

ஒரு சாதாரண வேலைக்கார பெண் என்ற நிலையில் இருந்தவள் இன்று ஒரு ஆங்கிலேய ஆளுநரின் மனைவி. 

 

ரிச்சர்ட் ஜமீன்தார் வீட்டு வாசலில் காரை சென்று நிறுத்தினான் கார் அங்கே வந்து நின்றதால் அந்த இடமே புழுதி மணலாக மாறி இருந்தது திடீரென அங்கே வந்து நின்ற காரை அங்கிருந்த மக்கள் ஆவென பார்க்க ஆரம்பித்தனர். 

 

காரிலிருந்து ரிச்சர்ட் இறங்கி வெளியே வர அவனை பார்த்த மக்களுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது உள்ளே அமர்ந்திருந்த வள்ளியின் கையை பிடித்து வெளியே இழுத்து நிறுத்தியவன் காரில் இருந்த பெரிய துப்பாக்கியை எடுத்து தோட்டாகளை லோட் செய்தான். 

 

அவன் அவ்வளவு பெரிய துப்பாக்கியை வெளியே எடுக்க அங்கிருந்து மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட ஆரம்பித்தனர் 

அவர்கள் ஓடுவதை தன் பழுப்பு நிற கண்களால் கோபத்துடன் பார்த்த ரிச்சர்ட் ஒருவரை கூட மிச்சம் வைக்காமல் கண் மண் தெரியாமல் கை,கால் எல்லாம் குறி பார்த்து சுட்டு தள்ளினான். 

 

அங்கிருந்த ஒவ்வொவரும் அலறி அடித்து கொண்டு ஓடி கீழே விழுந்தனர்

“இங்கே இருந்து ஒருத்தர் கூட வெளியே போக கூடாது கேட்டை க்ளோஸ் பண்ணு டேவிட்” என்று அவன் கர்ஜிக்க அவன் காரின் பின்னே ஓடி வந்திருந்த அவனின் பணியாள் சென்று கதவடைத்தான். 

 

அங்கே இருந்த அனைவரும் ரிச்சர்ட்டை பார்த்து பயத்துடன் நின்றிருந்தனர் இன்னும் சிலரோ அழுகவே ஆரம்பித்துவிட்டனர் இதில் ஆண்களும் அடக்கம் அனைவரும் பயத்துடன் நின்றிருக்க “இங்கே இருந்த ஜமீன்தார் எங்கே அவரோட பேமிலி எங்கே?” என்று கேட்டவனின் கணீர் குரல் அந்த இடம் முழுக்க எதிரொலித்தது. 

 

அதே நேரம் இன்னும் சில சீருடை அணிந்த காவலர்களும் குதிரை வண்டியில் அங்கே வந்து சேர்ந்தனர் அவர்களும் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர். 

 

அப்போது அங்கே வள்ளியின் தாய் சாரதா ஓடி வந்தார் நேரே ரிச்சர்ட்டின் அருகில் சென்றவர் அவன் முன் குனிந்து குனி குறுகி நின்று 

“துரை ஐயா என் மகளை விட்டுருங்க அவளுக்கு ஒன்னும் தெரியாது உங்களை கெஞ்சி கேட்க்குறேன்” என்று கண்ணீர் விட ரிச்சர்ட்க்கு துளி அளவு கூட இரக்கம் வரவேயில்லை இரக்கமே இல்லாமல் இறுகிய பாறையை போல் எந்த உணர்ச்சியையும் வெளியே காட்டாமல் நின்றிருந்தான். 

 

துப்பாக்கியை நீட்டி சாரதாவின் புறம் வைத்து குறி பார்த்தவன்

“சொல்லு அந்த ஜமீன்தார் பேமிலி எங்கே போச்சு” என்று கேட்க

“துரை சத்தியமா அவங்க எங்கே போனாங்கன்னு எனக்கு தெரியாது” என்று சாரதா கண்ணீர் விட ரிச்சர்ட் அடுத்த நொடி அவரை சுட போக வள்ளி கீழே விழுந்து அவன் ஷூ அணிந்த கால்களை பிடித்து கொண்டாள். 

 

“என் அம்மாவுக்கு ஒன்னுமே தெரியாது துரை உங்களை கெஞ்சி கேட்க்குறேன் அவங்களை ஒன்னும் பண்ணிடாதிங்க நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க்குறேன் தயவு பண்ணி என் அம்மாவை மட்டும் விட்டுருங்க என் தம்பி தங்கச்சிங்க அனாதை ஆகிடுவாங்க” என்றாள் வள்ளி கண்ணீருடன். 

 

ரிச்சர்ட்க்கு அவள் தன் காலை பிடித்திருப்பது கோபத்தை வரவழைக்க வள்ளியை தன் ஷூ காலால் எட்டி உதைத்தான் அதில் ஒரு அடி தள்ளி விழுந்தாள் வள்ளி. 

 

“அவங்க எல்லாரும் எங்கே போனாங்கன்னு சொல்லாம இங்கே இருந்து ஒருத்தர் கூட போக முடியாது” என்றான் ரிச்சர்ட் கோபத்துடன். 

 

அங்கிருந்த ஒருவருக்கு கூட அவர்கள் அனைவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை

அனைவரும் வாயை திறக்காமல் பயத்துடனே நின்றிருக்க 

“அட்டாக் தேம் ஒருத்தரையும் விடாதிங்க” என்று காவலர்களுக்கு கட்டளையிட மூங்கில் தடிகளால் அங்கிருந்த மக்களை அடித்து வெளுக்க ஆரம்பித்தனர். 

 

வலி தாங்க முடியாமல் பெண்கள் ஆண்கள் என்று அனைவரும் அலறி அடித்து கொண்டு ஓட தன் பழுப்பு நிற கண்களால் தன் கோபம் சற்றும் குறையாமல் அங்கிருந்த அனைவரையும் கோபத்துடன் பார்த்து கொண்டு இருந்தான். 

 

அங்கிருந்த மக்கள் அடி வாங்கி ரத்தம் சிந்துவதை பார்த்த வள்ளி 

அழுது கொண்டே எழுந்து நின்றவள் 

“எனக்கு தெரியும் அவங்க எங்கே போனாங்கன்னு” என்று அந்த இடமே அதிரும் படி தன் மூச்சை பிடித்து கொண்டு கத்தினாள். 

 

அவளின் சத்தம் கேட்ட ரிச்சர்ட் வள்ளியை திரும்பி கோபமும் அதிர்ச்சியும் கலந்த ஒரு பார்வை பார்த்தான் அவன் பார்வையை பார்த்து உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் நடுங்கிய கைகளை தன்னுள் அடக்கி கொண்டு அழுகையுடனே “எனக்கு தெரியும் அவங்க எங்கே போனாங்கன்னு” என்றாள் 

“சொல்லு அவங்க எங்கே போனாங்கன்னு” என்று கேட்டான் ரிச்சர்ட். 

 

“மீனாட்சி அம்மாவை திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்கிறதா பேசிக்கிட்டாங்க” என்றாள் வள்ளி அழுகையுடனே அவள் கூறி முடிக்க அடுத்த கணம் ரிச்சர்ட் அவளின் கழுத்தை பிடித்து நெறித்தான். 

 

“இதை ஏன் முன்னாடியே என் கிட்ட சொல்லலை” என்று கேட்டு கொண்டே அவளின் கழுத்தை பிடித்து இன்னும் நெறிக்க வள்ளி மூச்சுக்கு திணற ஆரம்பித்தாள் அவளின் கண்ணின் கருவிழிகள் மேலே ஏறியது “துரை என் மகளை விட்டுருங்க அவள் ஒன்னும் தெரியாத அப்பாவி” என்று சாரதா காலை பிடித்து கெஞ்ச அவன் கோபம் அப்போதும் குறையவேயில்லை விட்டால் செத்து விடுவாள் என்று நினைத்தவன் அவளின் கழுத்தில் இருந்த தன் கையை எடுத்தான். 

 

வள்ளி இறுமி கொண்டே இருக்க சாரதா அவளை பிடித்து ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தார். 

 

அங்கே சுற்றி இருந்தவர்களை காவலர்கள் அடிப்பதை நிறுத்தி இருக்க அனைவரும் வள்ளியையும் ரிச்சர்ட்டையும் வேடிக்கை பார்த்தனர். 

 

“ஹௌவ் டேர் யூ கேவலம் ஒரு வேலைக்காரி நீ எவ்வளவு தைரியம் இருந்தா என்னையவே கல்யாணம் பண்ணியிருப்ப” என்று கேட்டு கொண்டே ரிச்சர்ட் அவளை முறைத்து பார்த்தான் அங்கு நடக்கும் அனைத்தையும் சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டே தான் இருந்தனர். 

 

வள்ளியை அந்த ஊரில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் 

அவள் வெள்ளைக்கார பெண்மணியை போல் உடை அணிந்து இருப்பதை பார்த்தவர்களுக்கு அவள் இந்த மாகாணத்தின் ஆளுநரை மீனாட்சிக்கு பதிலாக மாறி சென்று திருமணம் செய்திருக்கிறாள் என்பது இப்போது தான் புரிந்தது. 

 

“எல்லாரும் கிளம்புங்க நாம இப்போவே திருவனந்தபுரம் போறோம் அவளை தேடி கண்டுபிடிக்கிறோம்” என்றான் ரிச்சர்ட் காவலர்களை நோக்கி அவன் கட்டளையிட்ட மறு நொடி அனைவரும் வண்டிகளில் ஏறி கொண்டு புறப்பட தயாராகி இருந்தனர் சாரதாவுடன் வள்ளி அழுது கொண்டே நின்றிருந்தாள். 

 

அவளை பார்த்த ரிச்சர்ட்க்கு இன்னும் கோபம் அதிகரிக்க “நீயும் என் கூட வா அவளை தேடி கண்டுபிடிக்கிற வரை நீ என் கூட தான் இருக்கனும்” என்ற ரிச்சர்ட் வள்ளியின் கையை பிடித்து தரதரவென இழுத்து 

செல்ல “நான் வர மாட்டேன் என் கையை விடுங்க அம்மா என்னை காப்பாத்துங்க” என்று அழுது கொண்டே வள்ளி அவனுடன் செல்ல சாரதாவும் அவளின் பின்னே ஒடி வந்தார். 

 

“துரை என் பொண்ணு அவளை விடுங்க உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன்” என்று சாரதா காரில் ஏறிச் சென்ற ரிச்சர்ட்டின் காலை பிடிக்க அவனோ தன் ஷூ கால்களால் சாரதாவின் கையில் மிதிக்க அவர் அப்போதும் அவன் காலை விடவேயில்லை. 

 

ரிச்சர்ட் அதில் கோபமடைந்தவன் சாரதாவை துப்பாக்கியால் சுட போக “நான் உங்க கூட வரேன் என் அம்மாவை ஒன்னும் பண்ணிடாதிங்க” என்று வள்ளி அழுது கொண்டே கை எடுத்து கும்பிட ரிச்சர்ட்டின் இதழின் ஓரம் வன்மத்துடன் ஒரு புன்னகை மலர்ந்தது. 

 

“அம்மா என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம் நீங்க வீட்டுக்கு போங்க” என்று கூறி முடிக்க ரிச்சர்ட் அவளை தரதரவென இழுத்து சென்று தன் காரில் ஏற்றினான்.

 

சாரதா அழுது கொண்டே தன் மகளை பார்த்து கொண்டே இருக்க வள்ளியும் 

அவரை ஏக்கத்துடன் கலங்கிய கண்களுடன் அவரை பார்த்து கொண்டே அவனுடன் சென்றாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “மெய் தீண்டும் முரடா 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!