கண்ணை கவ்வாதே
கள்வா -7
ஹாஸ்பிடல் பார்க்கில் அமர்ந்து தனது கன்னத்திற்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த மொபைல் அடிக்கவும் அதை எடுத்துப் பார்க்க அவளது அம்மா தான் கூப்பிட்டு கொண்டு இருந்தார்.
ஹலோ என்று அவள் கூறும் முன்பே “ எரும மாடு எங்க தான் நீ போய் தொலையுற உனக்கு போன் போட்டு போட்டு எனக்கு தான் டயர்ட் ஆகுது சீக்கிரம் வா ஐ சி யு கிட்ட நாங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” என்று இருந்த கடுப்பில் கத்திவிட்டு தனது போனை வைத்துவிட்டார் மகா.
‘இந்த அம்மா அதுவே பேசி அதுவே போன்னை கட் பண்ணிடுச்சு, இன்னைக்கு நாளை சரியில்லை கொஞ்சம் முன்னாடி ஒருத்தன் யாருனே தெரியல அவனா வந்தான் அடிச்சான் போய்ட்டான், இப்போ அம்மா வேற திட்டிட்டே இருக்காங்க என்னவோ போ தர்ஷினி நம்ம பொழப்பு சிரிப்பா தான் சிரிக்குது’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டே சென்றாள்.
உள்ளே சென்று ஐ சி யூ எங்கே இருக்கு என்று விசாரித்தவள் நேராக அந்த ஃப்ளோருக்கு சென்றாள் ‘என்ன அங்கே ஒரே கும்பலா இருக்கு இதுல நம்ம அம்மா அப்பாவை தவிர இன்னும் நிறைய பேர் இருக்காங்களே யாரு இவங்க எல்லாம்’ என்று யோசித்துக் கொண்டே சென்றவள்.
அங்கே இருந்த அந்த ஆறடி ஆண் மகனை பார்த்ததும் கண்களில் பூச்சி பறக்க அப்படியே நின்று விட்டாள் அவளது கை தானாகவே தனது கன்னத்தை பிடித்துக் கொண்டது.
அவனும் அவளைப் பார்த்து அதிர்ந்து நின்றது கூட அவளுக்கு அவன் முறைத்து பார்ப்பது போலவே தோன்ற சற்றென்று அவனை பாராதது போலவே கடந்து சென்று தனது அம்மாவின் அருகில் நின்றிருந்த தங்கச்சியிடம் சென்று பதுங்கிக் கொண்டாள்.
அவளது நடவடிக்கைகளை பார்த்தவன் அவ்வளவு நேரம் இருந்த அதிர்ச்சி கூட நீங்கி அந்த இடத்தில் கோபம் குடி கொண்டு விட்டது அவளைப் பார்த்த நிமிடத்தில் பின் சற்று நிதானித்து அவளை கண்டுக் கொள்ளாமல் திரும்பி விட்டான்.
தனது தங்கையின் அருகில் சென்று நின்றவளோ தன்னை கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக் கொண்டு மெல்ல அவளின் கையை பிடித்து சுரண்டினாள் .
அதில் அவளை திரும்பி பார்த்தவளோ “ என்னக்கா என்க?” அவளின் கண்களிலும் கண்ணீரை கண்டவள் அதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை கைவிட்டு தனது தங்கையை சற்று தள்ளி கூட்டிக் கொண்டு சென்றாள்.
இருவரும் சற்று விலகி சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்தார்கள் அதுவரை அமைதியாக இருந்த தர்ஷினி இப்பொழுது தனது தங்கையை பார்த்து “ என்ன டி ஆச்சு ஏன் அழுகிற” என்று கேட்டவளை சற்று என்று கட்டிக்கொண்டு கதறி விட்டாள்.
“ தர்ஷனா மா என்ன ஆச்சு ஏன்டா இப்படி அழுகுற” என்று அவளை சமாதானப்படுத்தி என்ன என்று கேட்க தனது அக்காவிடம் அன்று காலையில் நடந்ததை கூற ஆரம்பித்தாள்.
காலையில் அனைவரும் கிளம்பி இருக்க மகாவும் தனது வேலைகளை முடிக்க எண்ணி கிச்சனுக்குள் நுழைந்தவர் திடீரென்று அவரது மாமியாரின் அறையில் இருந்து கேட்ட சத்தத்தில் வேகமாக சென்று பார்த்தார்.
அங்கே அவரோ உணர்வற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்தார் அதை பார்த்தவர் உடனடியாக செயல்பட்டு ஆம்புலன்ஸை வரவைத்து ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு தனது கணவருக்கு அழைத்தவர்.
“ஏங்க சீக்கிரம் பவன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்க்கு வாங்க அத்தையை அங்க சேர்த்து இருக்கேன்” என்று கூறிக்கொண்டு இருக்கையிலே மாதவன் மிகவும் பதட்டத்துடன் குறுக்கிட்டு “ என்ன ஆச்சு மஹா நாளைக்கு தானே அம்மாவுக்கு செக்கப் என்று போகணும்னு சொல்லிட்டு இருந்த” என்று கேட்டுக்கொண்டே அவசரமாக கிளம்பினார்.
அவரது பதட்டத்தை பார்த்த மகாவோ “ ஏங்க நான் அத்தையை அட்மிட் பண்ணிட்டேன் டாக்டர் பார்த்துகொண்டு இருக்காங்க நீங்க நிதானமா வாங்க” என்றார்.
அவர் கூறியதை கேட்டுக் கொண்டே மாதவன் காரில் ஏறி கிளம்பிவிட்டேன் என்று கூறி மொபைலை கட் செய்து விட்டார்.
வேகமாக வந்து கொண்டிருந்த மாதவன் அங்கு மகா யாருனோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அருகில் வந்தவர் யார் என்று விசாரிக்க தான் சேதுராமன் என்றும் உடன் இருப்பது தனது மனைவி விசாலாட்சி என்றும் எஸ்.வி குருப்ஸ் சேர்மன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரை பார்த்திருந்த மாதவனின் மனதிலோ இந்த வயதிலும் ஆறடி உயரத்தில் முறுக்கிய நரை மீசையிலும் கண்களின் கூர்மைக்கு பரிசாக தங்க பிரேம் இட்ட கண்ணாடியும்.
முகத்தில் சற்று இறுக்கத்துடனும் தனது மனைவியை அறிமுகப் படுத்தும் போது மட்டும் மெல்லிய காதலுடன் கூடிய கனிவான சிரிப்பும் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையும் உடல் மொழியின் தோரணையே சொல்லாமல் சொல்லும் என்னிடம் கிட்ட நெருங்காதே என்றும் அதோடு சேர்த்து அவரது செல்வ செழிப்பையும் கண்டவரின் பார்வையில் தன்னால் மரியாதையுடனும் கூடிய குழப்பத்துடனே அவரை பார்த்து கொண்டு இருந்தார்.
அவரது பார்வையில் லேசாக சிரித்த சேது தாத்தாவும் தனது உறவு முறையை விளக்க ஆரம்பித்தார் அதாவது தனது சித்தப்பாவின் மகள் தான் மாதவனின் அம்மா என்றும்.
சிறு வயதிலேயே தனது பெற்றோரை ஒரு விபத்தில் இழந்த பிறகு அவர் தங்கள் வீட்டில் தான் ஒற்றை பிள்ளையாய் இருந்த எனக்கு துணைக்கு செல்ல தங்கையாக வளர்ந்தார் என்றும் ஊர் பள்ளியில் டீச்சர்ராக வந்தவருடன் காதல் மலர்ந்ததும்.
வீட்டில் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்து யாருக்கும் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு சென்றவர்கள் பின் ஊருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்றும் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் காலப்போக்கில் அப்படியே சென்று விட்டது என்று கூறினார்.
இன்று செக்கப் வந்த இடத்தில் இந்த சூழ்நிலையில் அவரை அடையாளம் கண்டுகொண்டதை கூறி கண்கலங்கினார். அவரை பார்த்த அனைவரும் கண்கலங்க நின்று இருந்தார்கள்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலே வெளியே வந்த நர்ஸ் பேஷண்ட் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் என்று சொல்லிவிட்டு சென்றார்.
அதைக் கேட்டு அனைவரும் உள்ளே செல்கையில் அங்கே படுத்து இருந்த பாட்டியும் தனது மகன் மற்றும் மருமகளுடன் உள்ளே வரும் தனது அண்ணனை கண்டு அதிர்ந்தவர் பின் அழுகையுடன் பார்த்தார்.
பின் தனது அண்ணனை கண்டு கைகளை பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு அழுது அனைத்தையும் முடித்துவிட்டு தனது குடும்பத்தை பற்றி கூறியும் அவர்களது குடும்பத்தை பற்றி கேட்டும் தெரிந்தும் கொண்டு அவர்களை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென்று மீண்டும் தனது சுயநினைவை இழந்தவரை கண்ட குடும்பத்தினர்கள் பதறி அடித்துக் கொண்டு டாக்டரே அழைக்க சென்றார்கள்.
வெளியே வந்த சேது தாத்தாவை தனது தங்கையின் நிலையை என்னை வருந்தி கொண்டிருக்கும் போதே விசாலாட்சி அப்பத்தா தான் மூவருக்கும் ஆறுதல் சொல்லி தனது பெரிய மகனுக்கு அழைத்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருமாறு கூறினார்.
அதில் கொஞ்சம் தெளிந்த மாதவனும் தனது நண்பரின் மூலம் பள்ளி சென்ற தர்ஷனாவையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் விடுமாறு கேட்டுக் கொண்டவன் பின் தர்ஷினிக்கு மொபைலில் அழைத்து இங்கு வருமாறு கூறினார்.
இங்கு இருவரும் ஹாஸ்பிடல் இருக்கையில் அமர்ந்து காலையில் நடந்த கதையை பேசிக்கொண்டு இருக்கையிலே அங்கு வந்த ராஜியும், பிரியாவும் அவர்கள் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து அவர்களை பார்த்து சிரித்தார்கள்.
அக்கா தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் அவர்களை பார்த்து சிரித்தார்கள் அப்பொழுது ராஜு இருவரையும் பார்த்து “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மா” என்று கூறினார்.
அதற்கு தர்ஷினியும் “ நீங்களும் அழகா இருக்கிங்க உங்க பக்கத்துல இருக்க அக்காவும் ரொம்ப அழகா இருக்காங்க” என்று கூறினாள். அவளது பேச்சைக் கேட்ட ராஜுயோ “ அது என்ன அவளை அக்கா என்றும் என்னை மட்டும் வாங்க போங்கன்னு சொல்ற நான் உனக்கு அத்தை முறை தான் வேணும் நீங்க என்னை அத்தைன்னு கூப்பிடுங்க” என்றார்.
இப்படி பேசிக் கொண்டு இருக்கையில் தர்ஷினி மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும் தர்ஷனா எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்த ராஜியும் “ என்ன தர்ஷனா எதுவுமே பேச மாட்டேங்கற உங்க அக்கா மட்டும் தான் பேசிட்டு இருக்கா ?” என்றார்.
அதற்கும் தர்ஷனா அமைதியான சிரிப்புடன் “அப்படி ஒன்றும் இல்லை அத்தை” என்று ஒரு வரியில் முடித்தாள். அவளின் ஒரு வரி பதிலில் திரும்பி தனது தங்கையை பார்த்த தர்ஷினி அவளுக்கும் சேர்த்து வாய் அடிக்க ஆரம்பித்து விட்டாள்.
இவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த பிரியாவோ “ ஏன் தர்ஷினி இவளுக்கும் சேர்த்து நீயே பேசிடுவியா வீட்டுலயும்” என்று சந்தேகமாக கேட்க “ என்ன அக்கா நீங்களும் இப்படியே கேக்குறீங்க எங்க மாதாஜி கூட வீட்டுல இதே சொல்லிதான் திட்டுறாங்க இது வாலிப வயசு இல்ல அதனால அவங்க சொல்றத நான் காதுல வாங்கிக்கிறது இல்லை” என்றாள்.
“அப்போ வாலிப வயசு முடிஞ்சதுக்கு அப்புறம் நீ உங்க அம்மா சொல்றதெல்லாம் கேட்டு அப்படியே நடந்துக்குவாயா ?” .என்றதுக்கு.
“வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை” என்று நக்கலாக கூற அதைக் கேட்ட பிரியாவோ கண்ணில் நீர் வரும் வரை சிரித்துக் கொண்டிருந்தாள்.
ராஜி கூட மெலிதாக சிரித்தார்.
இவர்கள் சிரிப்பதை அங்கிருந்து பார்த்த அப்பத்தாவோ ஒரு முறை முறைத்ததில் அதை கண்டுகொண்டவர்கள் அங்கிருந்து கிளம்பவும் சற்று பின் தங்கிய ராஜியும் தர்ஷனியின் தலையில் கை வைத்து “இப்படியே எப்போதும் போல சந்தோஷமா இருங்க” என்று வாழ்த்திவிட்டு சென்றார்.
மீண்டும் சூழ்நிலை பரபரப்பாக மாறிய சமயத்தில் பாட்டி அனைவரையும் பார்க்க விரும்பியதாக கூற அனைவரும் சென்று பார்த்து வந்தனர்.
இறுதியாக வந்த தாத்தாவின் முகத்தில் இருந்த யோசனையும் அதில் உண்டான அமைதியும் பின்பு ஒரு முடிவுக்கு வந்த மாதிரி முகம் தெளிவாக மாறவும் இறுதியில் எனது முடிவே உறுதியானது என்று தெளிவாக அவர் கூறிய செய்தியில் இரு குடும்பமும் அதிர்ச்சியில் ஆணி அடித்தது போல் ஒரே இடத்தில் நின்று விட்டனர்.
sema super sis next epi pls……