கண்ணை கவ்வாதே
கள்வா -8
பாட்டியை பார்க்க உள்ளே சென்ற அனைவரையும் சேது தாத்தா தனது குடும்பத்தினரை பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார் அதில் அவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் மிகவும் சந்தோஷமாக அமர்ந்திருந்தார் பாட்டி.
மித்ரனின் முறை வரும்போது அவனைப் பார்த்தவரின் கண்களில் ஒரு ஒளி தோன்றியது அதை தனது அண்ணனிடம் பார்வையாலேயே தெரிவித்தார் அதை கவனித்துவிட்ட மித்ரனும் தாத்தாவை என்ன என்ற பொருளோடு பார்த்தான்.
அதை கண்டும் காணாதது போல் மித்ரனிடம் “ நான் சின்ன வயதில் இருந்ததை போல் என்னை மாதிரி நீயும் இருக்கிறாய் என்று என் தங்கச்சி சொல்லுறா” என்றார் பெருமையுடன்.
அந்த ஒரு வார்த்தை போதாதா அங்கிருந்த விசாலாட்சி அப்பத்தாவிற்கு அவனைப் பற்றியும் அவரது கணவரை பற்றியும் அவர்களின் உருவ ஒற்றுமையை பற்றியும் குண நலன்களை பற்றியும் ஆறு வித்தியாசம் கூறும் அளவிற்கு பேசிக் கொண்டே சென்றார்.
அதில் அங்கிருந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் இவர் அவர்கள் இருவரையும் புகழ்ந்து கூறுகிறாரா இல்லை குறை கூறுகிறார்களோ என்று சந்தேகமே வரும் அளவிற்கு இருந்தது அப்பத்தாவின் பேச்சு அதை அந்த ரூமில் உள்ளே இருந்த மூளையில் நின்று கொண்டிருந்த தர்ஷனியும் கேட்டுக்
கொண்டிருந்தாள்.
என்ன காரணம் என்றே தெரியாமல் ஓரே ஒரு நொடி மித்ரனின் பார்வையில் பட்ட தர்ஷினியோ பின் சென்று மறைய நினைத்தவள் இனி இவனை நாம் எங்க பார்க்க போறோம் என்று நினைத்துக்கொண்டு ஒரு முடிவு எடுத்து தைரியத்துடன் நிமிர்ந்து அவனை நோக்கி விட்டு அலட்சிய பார்வையுடன் திரும்பி கொண்டாள்.
ஏற்கனவே தனது அப்பத்தா வின் பேச்சில் எரிச்சலில் நின்று இருந்தவன் இவளின் செயலில் தற்போது இன்னும் இரத்தம் சூடுஏற உடனே வெளியே சென்று விட்டான் அவனை தொடர்ந்து ஒவ்வொரு ஆளாக வெளியே செல்ல ஆரம்பித்தனர்.
கடைசியாக தனது அண்ணனையும் அண்ணியையும் பார்த்த பாட்டி தனியாக பேச வேண்டும் என்று விழிகளில் கெஞ்ச அதை புரிந்து கொண்ட தாத்தாவும் அமைதியாக நின்று கொண்டார்.
“ மாதவா நீயும் மகாவம் பிள்ளைகளை கூட்டிட்டு கொஞ்ச நேரம் வெளியில் இருங்க நான் கொஞ்சம் அண்ணா கிட்ட தனியா பேசணும்” என்றார்.
அவர்கள் வெளியே சென்ற பிறகு தனது அண்ணன் மற்றும் அண்ணியை அருகில் அழைத்து அவர்களின் கையை பிடித்துக் கொண்டு தான் சொல்ல நினைத்ததை மெதுவாக கூற ஆரம்பித்தார்.
“ அண்ணா என்னை நீ தப்பா நினைக்காத எங்களை பிரிச்சுடுவாங்கனு யாருக்கும் சொல்லலாமா நான் காதல் கல்யாணம் பண்ணி நம்ம ஊரை விட்டு வந்துட்டேன்.
என்ன அவரு நல்லா தான் பார்த்துக்கொண்டார் அவரு பக்கம் சொந்தமும் எனக்காக வேண்டாம் என்று யாருக்கும் சொல்லாம நாங்க வேற ஊருக்கு அவரு வேலையை டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு தனியா வந்துட்டோம்.
ஆனா தனியா வந்ததுக்கு அப்புறம் தான் உங்களை எல்லாம் ஏமாத்திட்டேனு ரொம்ப குற்றவுணர்வாக இருந்துச்சு நாட்கள் செல்ல அவரோட பார்த்துலயும், மாதவன் வந்த பிறகும் வாழ்க்கைய அதன் போக்குல வாழ ஆரம்பிச்சேன்.
ஆனா மனசு ஓரத்தில் இது அப்படியே தான் இருந்துசு மாதவன் அப்பா இறந்ததற்கு அப்புறம் தான் சொந்தங்களோட அன்புக்காக ரொம்ப ஏங்க ஆரம்பிச்சேன்.
சொல்லபோனா இப்ப வரைக்கும் என்கிட்டு தான் இருக்கேன் ஏன்னா அந்த அளவுக்கு என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டிங்க உங்களை ஏமாத்துன குற்ற உணர்ச்சி என்னால தாங்கிக்கவே முடியல அண்ணா.
நானும் அவரை நினைத்துக் கொண்டு மாதவனை நல்லபடியா வளர்த்து குடும்பத்துக்கு ஏத்த மகராசியா மகாவ கல்யாணம் பண்ணி வச்சிடேன் அவங்களுக்கும் ரெண்டு பிள்ளைங்க பிறந்து சந்தோஷமா தான் இருக்கேன்.
நம்ம குடும்பத்தை வந்து பார்க்கவும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது நீங்களே இல்லாததனால எந்த சொந்தக்காரங்கள் யாரையும் நானும் நெருங்கி விட்டதில்லை அது எவ்வளவு பெரிய தப்புன்னு நான் காலம் கடந்து தான் புரிஞ்சுகிட்டேன்.
இப்பயாவது என்னோட பிள்ளைக்கு சொந்தம் என்று நீயும் நம்ம சொந்தக்காரங்களும் வேணும்னு நினைக்கிறேன் அதனால எனக்கு ஒரு யோசனை வந்துச்சு உன்னோட பேரனை பாத்ததுல இருந்து எனக்கு உன்ன பார்த்த சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்கு ஏன்றார்.
உன் பேரனுக்கு என்னோட பேத்திய கல்யாணம் பண்ணி வச்சி நம்ம குடும்பத்தோடு உறவு என் பேத்தி மூலமாவது என் மகனுக்கு என் வழி சொந்தங்கள் கிடைக்கட்டும் எனக்கு ஆசையாக இருக்கு அண்ணா, அண்ணி” என்றார்.
இது என்னோட கடைசியா ஆசையாக கூட இருக்கலாம்னு நினைக்கிறேன் என்று கூறியவரை அவரது வாயை கையை கொண்டு அழுத்தி வோண்டாம் என்று அமைதியாக்க அவரோ “ ப்ளீஸ் அண்ணா நான் கேட்டது எனக்கு நிறைவேற்றி தருவேன் என்று சத்தியம் பண்ணி கொடு அண்ணா” என்று கண்ணீர் கண்களுடன் கேட்டார்.
அவர் பேசிக்கொண்டு இருந்ததை அமைதியாக இதுவரை கேட்டுக் கொண்டிருந்த அப்பத்தாவோ ஏதோ கூற வருகையில் அவரின் கையை அழுத்தி பிடித்து எதுவும் பேச வேண்டாம் என்று தலையை அசைத்தார் சேது தாத்தா அதை கண்டு அவர் சங்கடத்துடன் பார்க்கும் போதே கண்களை மூடு திறந்து மனைவியை சமாதானப்படுத்தி தனது தங்கையின் கையில் சத்தியம் செய்து வைத்தார்.
அவர் சத்தியம் செய்யவும் அதைவிட அடுத்த அதிர்ச்சியை அவர் தங்கை அவருக்கு கொடுத்தார்.
“அண்ணா நான் உயிரோட இருக்கும்போதே என்னோட பேரன் பேத்தி கல்யாணத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் அதனால இப்பவே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுருவோம்” என்றார்.
அதைக் கேட்டதும் இருவருக்கும் பெரும் அதிர்ச்சி என்ன செய்வது என்று தெரியவில்லை விசாலாட்சி அப்பத்தாவின் கண்டன பார்வையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தாத்தா முழித்துக் கொண்டிருந்தார்.
பாட்டி தான் இவ்வளவு பேசுவதே தன் உடல்நிலைக்கு அதிகம் என்று மூச்சு வாங்க ஆரம்பித்தது தன் அண்ணன் தன் ஆசையை எப்படியும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் மெல்ல மெல்ல தன் சுயநினைவை இழக்க ஆரம்பித்தார்.
அதில் மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட டாக்டர் அழைத்து பார்க்க கூறிவிட்டு ரூமில் இருந்து வெளியில் வந்தவர் வேறு யாரையும் கண்டு கொள்ளாமல் நேராக அருகில் இருந்த சேரில் அமர்ந்தார்.
சூழ்நிலையை புரிந்து கொண்ட அப்பத்தாவும் தாத்தாவின் அருகில் சென்று அவரது கையில் அழுத்தத்தை கொடுத்து பார்த்துக் கொள்வோம் என்ற தைரியத்தை அளித்தார்.
தான் சொல்லாமலே தன்னுடைய சூழ்நிலையை புரிந்து கொண்ட மனைவியை நினைத்து அந்த நிலையிலும் காதலுடன் பார்த்து பார்த்து ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்.
அருகில் அமர்ந்திருந்த மனைவியை பார்த்தவர் “விசா” என்று அழைக்கவும் என்ன என்ற பார்வையுடன் பார்த்துவிடம் “ நீ முதலில் மருமகள்களிடம் விஷயத்தை எடுத்து சொல்லு பின் பக்குவமாக அதை மகன்களிடம் தெரிவிக்குமாறு சொல்லு” என்று கூறினார்.
“நான் போய் மாதவனிடம் இந்த விஷயத்தை சொல்றேன் அவன் இதை எப்படி எடுத்துக் கொள்வான் என்ற தெரியவில்லை” பார்ப்போம் என்று கூறி மிகப்பெரிய பொறுப்பை தனது தலையை ஏற்றுக்கொண்டு எழுந்து சென்றார்.
இதை பார்த்த விசாலாட்சி அப்பத்தாவும் தனது மருமகள்களை தேடி கொண்டு சென்றார் அங்கே பேத்தியுடன் இரண்டு மருமகள்களும் அமர்ந்திருப்பதை கண்டவர் மூவரையும் தனியாக அழைத்து விஷயத்தை கூறினார்.
மூவரும் இந்த விஷயத்தை கேட்டவுடன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார்கள் பின் ராஜு முதலில் “ இது எப்படி அத்தை நடக்கும்” என்று கேட்டார் அதே கேள்வியுடன் மற்ற இருவரும் பார்வையில் அப்பத்தாவை பார்த்தனர்.
அதற்கு அப்பத்தாவும் தங்களது சூழ்நிலையை தெளிவாக எடுத்து கூறி மருமகள்களின் கருத்தை கேட்டார் அவர்களும் தற்சமயம் ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டும் தனது மாமாவின் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான, தீர்க்கமான முடிவைக் கண்டு திருப்தியில் இருந்தவர்கள் இந்த விஷயத்திலும் அவரின் முடிவை கண்டு ஒரு மனதாக சம்மதித்தனார்.
இதில் கமலாவிற்கு மட்டும் சிறிது தயக்கம் தன் மகனை நினைத்து அதை அப்படியே தனது மாமியாரிடம் கேட்டு விட்டார் “ அத்தை மித்ரனை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக உள்ளது”என்று அதற்கு அவரோ முதலில் இவர்களின் சம்மதத்தை பெற்றுவிட்டு அவனை பார்ப்போம்” என்றார்.
உடனே சென்று மருமகள் கூறிய செய்தியில் மகன்கள் இருவரும் பேரனுடன் வரவும் பின்னே வந்த மருமகள்கள் அனைவரும் அப்பத்தாவை சூழ்ந்து கொண்டனர்.
கோபாலனோ “ அம்மா இந்த விஷயம் எப்படி சாத்தியப்படும் இது என்ன சினிமாவா உடனே கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு அந்த பொண்ணுக்கும் வயசு கம்மியா தான் இருக்கும் போல இது சரிப்பட்டு வராது” என்றார்.
“ ஆமா ஆமா எனக்கும் அண்ணா சொல்றது தான் சரியா வரும்னு தோணுது கொஞ்சம் ஆபீஸ் வேலையா வெளியே நின்று விட்டோம் அதுக்குள்ள இவ்வளவு பெரிய முடிவை எடுத்து இருக்கீங்க” என்று தனது ஆதங்கத்தை காட்டினார்.
“ அப்பத்தா நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க மித்ரன் இதுக்கு எப்பவும் சம்மதிக்க மாட்டான் அவனுக்கு எல்லாத்திலேயும் கரெக்டா இருக்கணும் இந்த திடீர் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளவே மாட்டான்” என்றான் அவரின் பேரன் கார்த்திக்.
அப்பத்தாவும் இவ்வளவு தூரம் சூழ்நிலையை எடுத்துக் கூறியும் அனைவரும் தன்னை வந்து கேள்வி கேட்பதுடன் முடியாது என்பது போன்ற பேச்சை கேட்டவர் மிகுந்த கோபம் கொண்டார்.
“ இப்ப என்ன சொல்றீங்க எல்லாரும் மித்தன பத்தி அடுத்து பேசிக்கலாம் உங்களுக்கு சம்மதமா? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க இது நானும் என் வீட்டுக்காரரும் எடுத்த முடிவு உங்களுக்கு உங்க அப்பாவோட முடிவுல நம்பிக்கை இருந்தா இதுக்கு சம்மதம் சொல்லுங்க” என்றார் மிகுந்த கோபத்துடன்.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு அனைவரும் தங்களுக்கு சம்மதம் என்றும் மித்திரனை நினைத்தால் மட்டும் சிறிது நெருடலாக இருப்பதாகவும் கூறினர்.
அதற்கு அப்பத்தாவோ “ மித்ரன் நாம தூக்கி வளர்த்த பையன் என்ன தான் கோபம் அதிகம் வரும் என்றாலும் நாம் சொல்வதற்கு எப்போதும் மறுப்பு கூற மாட்டான் அவனது சம்மதத்தை வாங்க வேண்டியது எங்களது பொறுப்பு” என்று முடித்தார்.
இங்கே அப்பத்தா தனது குடும்பத்தை சரிகட்டி அனைவரின் சம்மதத்தையும் பெற்றார் என்றார் அங்கு அவரது கணவரோ மாதவன் தம்பதிகளை தனியே அழைத்து சூழ்நிலையை எடுத்து கூறிக் கொண்டிருந்தார்.
அதில் மிகவும் அதிர்ந்து போயினர் மாதவன் தம்பதியினர் அதிர்ச்சியில் இருந்து முதலில் தெளிந்த மகாவிற்கோ ஏகப்பட்ட சந்தேகங்களும், கேள்விகளும் உள்ளே இருந்தது அவரது முகத்திலேயே தெரிந்தது.
அவரது முகத்தை பார்த்து அனைத்தையும் புரிந்து கொண்ட தாத்தாவும் மகாவிடம் திரும்பி “ நீயும் எனக்கு மகள் மாதிரி தான் மா உனக்கு ஏற்பட்ட எல்லாம் சந்தேகத்தையும் தீர்த்து வைக்க வேண்டியது என்னோட கடமை” என்று கூறினார்.
தன் மனதில் இருப்பதை தன் முகத்தில் மூலம் தெரிந்து கொண்டு அதற்கு
பதில் அளித்த பெரியமனிதரை கண்டு மகா விற்கு முதல் பார்வையிலேயே திருப்தி ஏற்பட்டது.
super sis
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌