ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா – 10

 

 

அவ்விடியற்காலை பொழுதில் கோவிலே பரபரப்பாக காட்சி அளித்தது வாசலில் வண்ணக் கோலமும், வாழைமரம், மாவிலை தோரணம் தொடங்கி அன்னதானம் வரை அனைத்து ஏற்பாடுகளும் சைக்கிளில் விட்ட எண்ணையாக ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்தது. 

 

 

கோவிலில் இருக்கும் அனைத்து சுவாமிக்கும் அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது எல்லா இடத்திலும் அவர்களது ஆட்கள் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து கொண்டு அங்கும் இங்கும் பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

 

 

சன்னந்திக்கு மிக அருகில் உள்ள மண்டபத்தில் அனைத்து பூக்களால் ஆன கல்யாண மேடை அமைத்து அதில் ஏர் கூலர் முதற்கொண்டு அனைத்து வசதிகளும் இடம்பெற்று இருந்து கல்யாணத்திற்கு வரும் முக்கிய விருந்தினர்கள் அனைவரையும் தனித்தனியே கவனிக்கும்படி அதற்கும் ஆட்கள் ஏற்பாடு செய்யப்பட்டது இருந்தது.

 

 

கோவில் முழுவதுமே பூக்களாலும் சீரியல் செட் லைட்டுகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது குடும்பத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் இரவு முழுவதும் துளி தூக்கம் இன்றி அனைத்து வேலைகளிளும் ஈடுபட்டிருந்தனர்.

 

 

இதில் மாதவனும் இரவு வந்து கல்யாண வேலைகளில் சேர்ந்து கொண்டார் இதனால் கோபாலன், செல்வம், மாதவன் இவர்களுக்கு இடையில் உறவையும் தாண்டி ஒரு நட்புணர்வு ஏற்பட்டது அதில் மாதவனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.

 

 

சற்று முன்பு தான் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு பொறுப்பை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அனைவரும் தங்கள் வீட்டை நோக்கி கிளம்பினர் மீண்டும் கல்யாணத்திற்கு ரெடியாகி வருவதற்காக சென்றனர்.

 

 

அங்கு மித்ரனின் வீட்டில் அனைவரும் கிளம்பி இருக்க பாட்டியை கொஞ்ச நேரம் நர்ஸிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தாத்தாவும் அப்பத்தாவும் அப்போது தான் வீட்டிற்கு வந்தனர். தாத்தா நேராக தனது ரூமிற்கு சென்று விட்டார்.

 

 

அங்கு சோபாவில் சற்று ஆசுவாசமாக அமர்ந்த அப்பத்தாவும் “ என்ன எல்லாரும் கிளம்பியாச்சா கோயிலுக்கு போக டைம் ஆயிடுச்சு எல்லாமே கரெக்டா எடுத்து வச்சுக்கிட்டிங்களா” என்றார்.

 

 

ராஜி “ ஆமா அத்தை எல்லாமே எடுத்து வச்சாச்சு நீங்க கிளம்பி வந்தீங்கன்னா நம்ம எல்லோரும் கிளம்ப வேண்டியது தான் கமலா இப்பதான் புடவை மாத்திட்டு வரேன்னு சொல்லிட்டு போனா” என்றார்.

 

 

விசா அப்பத்தா வை பார்த்தவுடன் தனது அப்பத்தா மடியில் இருந்த சஷ்டி குட்டி தாவவும் “ அட நம்ம சஷ்டி குட்டி அழகா பட்டு பாவாடை போட்டு ரெடியா இருக்காங்களே இரு தங்கம் அப்பத்தா போய் குளிச்சிட்டு வந்து உன்னை தூக்கி வச்சிப்பனாம் அதுவரை நீங்க ராஜி அப்பத்தாகிட்டயே இருங்க என்று கொஞ்சினார்.

 

 

பேசிக் கொண்டே இருக்கும் போது “அம்மா” என்ற குரலில் திரும்பிப் பார்த்தவர் மகளும் மருமகனும் வருவதைக் கண்டவர் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று மருமகனை வரவேற்றார்.

 

 

 அதற்குள் அனைவருக்கும் காபியை எடுத்துக்கொண்டு வந்த கமலாவும் “வாங்க அண்ணா அண்ணி” என்று அழைத்து விட்டு அவர்களுடன் இணைந்தார் அப்பதாவும் தானும் சென்று கிளம்பி வருவதாக கூறினார்.

 

 

பின் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் கிளம்பி வந்து ஹாலில் ஒன்று சேரவும் இறுதியாக தாத்தாவும் அப்பத்தாவும் வந்தவர்கள் அனைவரும் மாடியையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு என்ன என்று விசாரித்தனர்.

 

 

அப்பொழுது தான் மித்ரன் இன்னும் கிளம்பி கீழே வரவில்லை என்பதை உணர்ந்தவர்கள் அங்கு வேலை செய்யும் வேலைக்காரியை அழைத்து அறைக்கு சென்று கூப்பிட்டு கொண்டு வருமாறு கூறினார்.

 

 

போனவர் சிறிது நேரத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாக உடனே திரும்பி வந்து பெரிய ஐயா “ கதவை தட்டி பார்த்தேன் தம்பி திறக்கவே இல்லை” என்றார்.

 

 

கமலாவோட ‘க்கும் இதோ ஆரம்பித்து விட்டான் அவனோட ஆட்டத்தை’ என்று மனதில் நினைத்தார்.

 

தாத்தா தானே நேரில் சென்று மித்ரனை அழைத்து வந்தார். அவன் படிகளில் இறங்கி வரும் போதே கீழே இருந்து மேலே பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் பட்டு வேஷ்டி சட்டையில் அவனை பார்த்தவர்கள் அவனது அழகில் அசந்து நின்று விட்டார்கள்.

 

 

என்ன தான் அவனது உடை அவனை அழகாக காட்டினாலும் சிறு புன்னகை இன்றி இறுகி போய் இருந்த அவனது முகமும் அவனது விருப்பமின்மையை அப்பட்டமாக எடுத்து காட்டியது.

 

 

அனைவரது கண்களுக்கும் தற்பொழுது அவன் முதன் முதலில் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் சிறுவன் போலவே காட்சியளித்தான் அதனை காட்டிக்கொள்ளாமல் அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.

 

 

கோபால் “ அப்பா கிளம்பலாம் டைம் ஆகிட்டே இருக்கு” என்றார் மீண்டும் அனைவரிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது ஆளுக்கு ஒரு பையை எடுத்துக்கொண்டு காரை நோக்கி சென்றனர்.

 

மித்ரன் முதலில் சென்று தனது பிளாக் ஆடியில் ஏறி அமரவும் அதை தடுக்க வந்த தனது அம்மாவை ஒருமுறை முறைத்து விட்டு சட்டென்று தானே காரை இயக்கக் கொண்டு சென்று விட்டான்.

 

அங்கு அவரோ ‘அடப்பாவி என்னையும் இப்படி கழட்டி விட்டுட்டு போயிட்டானே பெத்தது ஒரு புள்ளை அவன் கல்யாணத்துக்கு என்னால நிம்மதியா போக முடியுதா எப்போ பார்த்தாலும் பதட்டமாகவே வச்சிருக்கான் என்னை’ என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

 

 

அவரின் மனக்குமுறலை அருகே இருந்து கேட்ட மாதிரி அவருக்கு அருகில் வந்த கார்த்திக் தனது சித்தியை அணைத்தது “ என்ன கமலாமா ஃபீலிங்சா கவலைப்படாதீங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன்” என்றான்.

 

அவரோ தனது பெறாத மகனை கட்டிக்கொண்டு நின்றார் இருக்காதா பின்னே அவரது பையன் அம்மா என்று அழைக்கும் முன்பே கல்யாணம் ஆகி வந்தவுடன் தன்னை அம்மா என்று அழைத்து தாய்மையை கொடுத்தவன் இவன் அல்லவோ.

 

இவர்களின் நாடகத்தை பார்த்துக் கொண்டே அனைவரும் அவர்களது காரில் ஏறிக் கொண்டிருந்தனர் பின்னோடு வந்த செல்வம் “இப்படியே ரெண்டு பேரும் நிற்க போறிங்களா சீக்கிரம் வண்டியில் ஏறுங்க” என்று கூறிவிட்டு சென்றார். அவரின் குரலில் இருவரும் தங்கள் காரில் ஏறிக் கொண்டனர்.

 

 

இவ்வளவு நேரம் கழித்து வந்து காரில் ஏறிய கணவனை கண்டு பிரியா முறைத்தாலும் கணவனையும், சின்ன மாமியாருக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு சிறுவயதில் இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதால் வேறு எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.

 

மித்ரன் வீட்டில் அனைவரும் கல்யாணத்திற்கு கிளம்ப அங்கே தனது அப்பார்ட்மெண்ட்ல் தனது வீட்டிற்குள் நுழைந்த மாதவனுக்கு முதலில் கேட்டது அம்மா என்ற தர்ஷினியின் சத்தம் தான்.

 

 

அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தவர் ஹாலில் சோபாவில் தனது இளையமகள் அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு “என்ன பாப்பா இப்படி உட்கார்ந்து இருக்க கல்யாணத்துக்கு கிளம்பலையா அக்கா ஏன் கத்திக் கொண்டிருக்கிறாள்?” என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தார்.

 

 

“ அப்பா நல்ல வேலை நீங்கள் வந்தீர்கள் என்னால் இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியலப்பா” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

 

“சரிடா என்ன ஆச்சு அம்மா எங்க நீ ஏன் இப்படி உக்காந்திருக்க கிளம்பிட்டீங்களா அக்காக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண வேண்டியதுதானே” என்றார்.

 

 

“அத ஏம்பா கேக்குறீங்க அக்கா கல்யாணத்துக்கு ஓகே னு அம்மாகிட்ட சொல்லிட்டு அதுக்கு அப்புறம் பயமா இருக்குனு நேற்றிலிருந்து புலம்பிக் கொண்டே இருக்காப்பா ஆமா இப்ப தானே காலேஜ் செகண்ட் இயர்ரே படிக்கிறாங்க அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் அவசியமப்பா” என்றாள்.

 

 

“அப்படி சொல்லாதடா கண்ணு எங்க அம்மாக்காக இப்ப நான் தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணாலும் எனக்கும் அந்த வருத்தம் இல்லை என்று நினைக்கிறாயா? இரண்டாவது இப்படி ஒரு சம்பந்தம் அமையும் நானும் அம்மாவும் நினைச்சு கூட பாக்கல எல்லாரும் ரொம்ப தன்மையா இருக்காங்க அக்கா அங்க நல்லபடியா வாழ்வா? நீ கவலைப்படாதடா” என்றார்.

 

“சரிப்பா நீங்களும் அம்மாவும் எதையும் யோசிக்காமல் எந்த விஷயத்துல முடிவு எடுக்க மாட்டீங்கன்னு எங்களுக்கு நல்லா தெரியும் அதனால தான் அம்மா கேட்டவுடன் தர்ஷினி எதைப் பற்றியும் யோசிக்காமல் கல்யாணத்திற்கு சரி என்று கூறினாள்”.

 

 

“எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு கண்ணம்மா உங்க ரெண்டு பேரையும் நாங்க நல்லபடியா வளர்த்து இருக்கோம் நாங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக எங்கள நம்பி உங்களோட வாழ்க்கைய குடுத்து இருக்கீங்க அதை அப்பா நல்லபடியா அமைத்துக் கொடுப்பேன்” என்று உறுதியாக கூறினார்.

 

 

“சரிப்பா அங்க அம்மா அப்புறம் பக்கத்து வீட்டு பியூட்டிஷியன் ஆன்ட்டியை கூப்பிட்டு இப்போதைக்கு தர்ஷினிக்கு மேக்கப் பண்ண சொல்லி சொன்னாங்க அதுக்கு தான் மூணு பேரும் உள்ள இருக்காங்க நான் போய் என்னன்னு பாக்குறேன் அம்மாவை அனுப்பட்டுமா அப்பா”என்றாள்.

 

“வேண்டாம் டா அம்மாவும் எவ்வளவு வேலை தான் பார்ப்பா நான் போய் குளிச்சு கிளம்பி வரேன் அம்மாகிட்ட சொல்லிட்டு தர்ஷினியும் கிளம்பிட்டா நம்ம எல்லாரும் கிளம்பிடலாம் முகூர்த்தத்துக்கு நேரம் ஆயிடுச்சு” 

 

 

“அப்ப சரி நானும் போய் அவங்கள சீக்கிரமா கிளம்புறதுக்கு உதவி பண்ணிட்டு இருக்கேன் “ என்றாள்.

அம்மாடி அப்புறம் சொல்ல மறந்துட்டேன் “தாத்தாவும் அம்மாச்சியும் நேரா கோயிலுக்கு கிளம்பி வராங்களாம் அம்மாவை எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லிட்டாங்க” இதையும் அம்மாகிட்ட சொல்லிடுடா என்றார்.

 

“ சரிப்பா நான் போய் அம்மாகிட்ட சொல்லிடுறேன்” என்று சென்றாள்.அம்மா என்று கூறிக் கொண்டே அறைக்குள் சென்றவள் வாயை திறந்து கொண்டு நின்று விட்டாள்.

 

தர்ஷினி இவ்வளவு அழகா நீ சிம்பிள் மேக்கப்லயே அசத்துற மாமா உன்ன பாத்தா அன்னைக்கு நீ சொன்ன மாதிரி கையில கொடுத்தாரு இன்னைக்கு அதே இடத்துல உதட்டால் கொடுக்க போறாரு பாரு ஏன்னா என் அக்கா இன்னைக்கு அவ்வளவு அழகா இருக்கா” என்று அவளை அணைத்து கொண்டாள்.

 

 

இருவரையும் பார்த்துக் கொண்டே அருகில் வந்தான் அவர்களது அம்மாவோ தனது இரு மகள்களையும் சேர்த்து கட்டிக் கொண்டார் பின் பியூட்டிஷியனிடம் திரும்பி அக்கா நான் கூப்பிட்ட உடனே வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் என் பொண்ணு இன்னைக்கு அவ்வளவு அழகா இருக்கா அப்படியே நீங்களும் வாங்க கல்யாணத்துக்கு தர்ஷனியை ஆசீர்வதித்து விட்டு போகலாம் என்றார்.

 

 

“ இல்ல மகா என்னால இன்னைக்கு வர முடியாது இன்னிக்கு முக்கியமான இடத்தில மேக்கப் போறதுக்கு ஒத்துக்கிட்டேன் என்னோட ஆசிர்வாதம் எப்பவும் தர்ஷினிக்கு உண்டு நல்லபடியாக போய் கல்யாணத்தை எல்லாம் முடிச்சுட்டு வாங்க” என்றார்.

 

 

இப்போது நடந்த அனைத்து நிகழ்ச்சிக்கும் தர்ஷினி வெறும் பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் இவர்களது பேச்சில் எதுவும் கலந்து கொள்ளவே இல்லை இதை கவனித்த அவளது தங்கையும் வேண்டும் என்றே தனது அக்காவை சீட்டிங் கொண்டே இருந்தாள்.

 

 

அதற்குள் வெளியில் இருந்த மாதவன் குரல் கேட்கவும் அனைவரும் கிளம்பி வெளியே செல்லவும் சரியாக இருந்தது. மகாவின் அண்ணனின் மனைவி தர்ஷனியை அழைத்துக்கொண்டு பூஜை அறைக்குள் சென்று விளக்கேற்றி வைத்து வேண்டிக்கொண்டு அனைவரும் கல்யாணத்திற்கு புறப்பட்டனர்.

 

 

அனைவரும் மகிழ்ச்சியாகவும் தர்ஷினி மட்டும் வெளியில் புன்னகையுடன் மனதில் பெருங் குழப்பத்துடன் பயத்துடனும் சென்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top