அத்தியாயம் 14
அந்த பார்ட்டியில் தட்டுபாடின்றி மது அனைவருக்கும் வழங்கப்பட அனைவரும் கையில் மது கோப்பையுடன் நின்றிருந்தனர்
ரிச்சர்ட்டின் கையிலும் ஒரு கோப்பை இருந்தது அவனும் யாரிடமோ பேசிக் கொண்டு மது அருந்திக் கொண்டு இருந்தான்.
ரிச்சர்ட் கவனிக்காத சமயம் லிசா வள்ளியின் பக்கத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்
“ஹாய் நீ எப்போ வந்த” என்று சாதரணமாக அவளிடம் பேச்சு கொடுக்க வள்ளியும் பதிலுக்கு லேசாக புன்னகைத்து கொண்டே
“இப்போ தான்ங்க வந்தோம்” என்றாள்.
“நீ இன்னும் ஏன் அவனை விட்டு போகாம இருக்க” என்று எடுத்த எடுப்பிலேயே முதல் வார்த்தையாக அவளிடம் இதை பற்றி கேட்க
வள்ளி என்ன கூறுவது என்று தெரியாமல் கண்கள் கலங்கியவள்
அவளிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.
“சாரி நான் உன் நல்லதுக்கு தான் சொன்னேன் ரிச்சர்ட்டை உனக்கு பிடிச்சா நீ அவன் கூடவே இரு” என்க
“எனக்கு அவரை பிடிக்கலை நான் என் அம்மா கிட்ட போகனும்” என்றாள் வள்ளி உதட்டை கடித்து தன் அழுகையை அடக்கி கொண்டே.
அவள் பதிலை கேட்டு உள்ளுக்குள் சிரித்து கொண்ட லிசா “அவன் அப்பா ரொம்ப மோசமானவர் அவனோட அம்மாவை கொலை பண்ணினதே அவரு தான் உனக்கு தெரியுமா
அவன் வயித்துல ஒரு தழும்பு இருக்கும் பார்த்து இருக்கியா நீ” என்று கேட்க வள்ளி பதிலுக்கு “ம்ம்” என்றாள்.
“அந்த காயம் அவங்க அப்பா அவன் வயித்துல கத்தியால குத்தினதால வந்தது அவரோட முரட்டுத்தனம் மொத்தமும் இவனுக்கு இருக்கு நீ என்னை உன் அக்கா மாதிரி நினைச்சிக்கோ” என்று அவள் கைப்பிடித்து கூற வள்ளி பயத்தில் தேம்பி தேம்பி அழுக அவளை திருப்தியான ஒரு பார்வை பார்த்தாள் லிசா.
“சாரி நான் உன்னை அழுக வைச்சிட்டேன்” என்று தன் கைக்குட்டையை அவள் கையில் கொடுக்க வள்ளி அவளின் கண்ணை துடைத்து கொண்டாள்
“அக்கா நான் இங்கே இருந்து தப்பிச்சு போக எனக்கு உதவி பண்ணுறிங்களா” என்று கேட்க
“நான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்” என்று கூறினாள்.
அதோடு விடாமல் தன் கையில் இருந்த மது கோப்பையை வள்ளியிடம் நீட்ட “நான் குடிக்க மாட்டேன்” என்றாள்.
“நீ குடிக்கலைன்னா இங்கே இருக்க எல்லாரும் உன்னை கிண்டல் பண்ணுவாங்க இங்க வந்தா குடிச்சே ஆகனும் அது கட்டாயம்” என்று கூறி அவளிடம் அந்த கோப்பையை நீட்ட அவள் தயக்கத்துடனே அதை வாங்கி கொண்டாள்.
வள்ளி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க அடுத்த அடுத்து அவளும் கொடுத்து கொண்டே இருந்தாள்
பார்ட்டியில் அனைவரும் ஜோடி ஜோடியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் ஆடிக் கொண்டு இருப்பதை பார்த்த வள்ளியின் கண்கள் மங்கலாக வேறு தெரிந்தது கண்ணை கசக்கி கொண்டு பார்க்க அப்போதும் மங்கலாக தெரிந்தது.
லிசா திருப்தியுடன் அவளிடம் இருந்து எழுந்து சென்று தன் கணவனுடன் நின்று கொண்டாள்.
ரிச்சர்ட் தன் நண்பர்களிடம் பேசிவிட்டு திரும்பி வர வள்ளி அரை போதையில் அமர்ந்து இருந்தாள்
அவளை பார்த்தவனுக்கு உடனே புரிந்து போனது அவள் குடித்திருக்கிறாள் என்று “வா கிளம்பலாம்” என்று அவளின் கைப்பிடிக்க வள்ளி அவன் கையை தட்டிவிட்டு தானே எழுந்து நின்று நடக்க ஆரம்பித்தாள்.
லிசா வேண்டுமென்றே அவள் நடந்து வரும் பாதையில் தண்ணீரை ஊற்றி வைக்க அவள் கோமாளி போதையில் தள்ளாடி கொண்டே நடந்து வருவதை பார்த்து அங்கிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
வள்ளி தள்ளாடி கொண்டே வந்து தண்ணீரில் கால் வைத்த மறு நொடி வழுக்கி கீழே விழுந்தாள் அவர்களிடைய சிரிப்பு சத்தம் இன்னும் அதிகரித்தது ரிச்சர்ட் ஓடி வந்து அவளை தூக்க அவன் அணிந்திருந்த கருப்பு நிற கோர்ட்டில் வாந்தி எடுத்தாள் அங்கிருந்த அனைவரும் அவளை பார்த்து முகம் சுளிக்க லிசா வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்
அவளை பார்த்த நொடியே தெரிந்து கொண்டான் இது கண்டிப்பாக அவள் வேலை தான் என்று அவளை முறைத்து கொண்டே கோபத்துடன் அவள் அருகில் சென்றான் ரிச்சர்ட் லிசாவின் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறை விட்டான் அவன் கணவனுக்கு உடனே கோபம் வந்து அவனை அவனை எட்டி தன் பூட்ஸ் காலால் உதைக்க அவன் தரையில் விழுந்தான்.
லிசா அவனை கோபத்துடன் பார்க்க ரிச்சர்ட் அவளை கண்டுகொள்ளாமல் வள்ளியை தூக்கி அங்கிருந்து தூக்கி சென்றான்.
வெளியே விடாமல் பேய் மழை பெய்து கொண்டே இருக்க அவளை தட்டுத்தடுமாறி காரில் படுக்க வைத்து காரை ஓட்டிச் சென்றான் ரிச்சர்ட் கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தவுடன் அந்த கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவளை உள்ளே தூக்கி சென்றான்.
அவளை குளியலறை சுவற்றில் சாய்த்து தரையில் அமர வைக்க இன்னும் இன்னும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள் அதனுடன் “அம்மா நான் உன்னை பார்க்கனும் எனக்கு இங்கே இருக்கவே பயமா இருக்கு உன் மடியில வந்து படுத்துக்கவா” என்று அழுது கொண்டே இருந்தாள்.
ரிச்சர்ட் அவளை பார்த்து கொண்டே நின்றவன் அவள் ஆடையை கலைந்து துளி கூட அருவருப்பு இல்லாமல் அவள் மீது தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தவன் ஒரு டவலால் அவளை சுற்றி தூக்கி வந்து படுக்கையில் படுக்க வைத்தான்.
தானும் குளித்துவிட்டு வந்து அவளை அணைத்து கொண்டே படுத்து கொண்டான் இரவு முழுக்க “அம்மா அம்மா” என்று அழுது கொண்டே இருந்தாள் வள்ளி.
அதே நேரம் நாச்சியப்பன் இல்லத்தில் ஜமீன் வாரிசான அவர்களின் ஒற்றை செல்ல மகளின் இறப்பு அந்த ஊரில் உள்ள அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மீனாட்சியின் இறுதி சடங்குகள் நடைபெற அவளின் மூன்று அண்ணன்களும் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.
அவர்களின் குடும்பமே உருகுலைந்து போனது அனைவரும் வீட்டில் சோகத்தில் அமர்ந்து இருக்க
வள்ளியின் தாய் சாரதா வேலைக்கு வந்திருந்தார் அவரும் அங்கிருந்த மற்றவர்களை போல் வேலை செய்து கொண்டு இருக்க அவரை பார்த்த
வேதவள்ளிக்கு கோபம் தலைக்கு ஏறியது.
வீட்டின் உள்ளே அழுது கொண்டே அமர்ந்து இருந்தவர் அவரை பார்த்து தலையில் கொண்டையிட்டு கொண்டு விறுவிறுவென கோபத்துடன் வெளியே நடந்து வந்தார்.
அவர் அருகில் வர சாரதா ஒன்றும் புரியாமல் அவரை பார்த்தார்
வேதவள்ளி அவர் அருகில் வந்து அவரின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்தவர் “ஏன் டி கழுதை உன் மகளை அந்த வெள்ளைக்காரனுக்கு கூட்டி கொடுத்துட்டு நீ மட்டும் சந்தோசமா இருக்கியா” என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் பெருக்கி கொண்டிருந்த பெண்மணியிடம் துடப்பத்தை பிடுங்கி அவரை அடிக்க ஆரம்பித்தார்.
“அம்மா நான் எதுவும் தப்பு பண்ணலமா நீங்க தான என் வீட்டு படியேறி உங்க பொண்ணை காப்பத்தனும்ன்னு கேட்டிங்க என் பொண்ணும் தான் அந்த வெள்ளைக்காரன் கிட்ட மாட்டி இருக்கா நான் கஞ்சிக்கு வழியில்லாதவங்கலா இருந்தாலும் சோத்துல உப்பு போட்டு தான் திங்கிறோம்” என்று அவரின் கைப்பிடித்து தடுத்து கொண்டே கூற.
“ஏன் டி வேலைக்கார நாயே என் வீட்டு எச்சை சோறு தின்னுட்டு என்னோட கையவே பிடிக்கிறியா” என்று இன்னும் அவரை அடிக்க போக சாரதா அவரின் கையில் இருந்த துடப்பத்தை பிடுங்கி எறிந்தார்.
அவரின் செயலை பார்த்த நாச்சியப்பன் தன் மகன்களை அழைத்து கொண்டு வெளியே அங்கே வந்தார்.
“என் வீட்டு வேலைக்கார நீ என் பொண்டாட்டி கையையே பிடிக்கிறியா” என்று அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்
சுற்றி இருந்த அவரின் வேலைக்காரர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட அங்கே வரவில்லை.
வேதவள்ளி உடனே தேம்பி தேம்பி அழுக “என்னங்க இவள் என் கையையே பிடிச்சு முறிக்கிட்டாங்க வலிக்குது” என்க அவரின் மகன்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர் ஒரு பெண் ஏழை என்று கூட பாராமல் அடித்து விரட்டினர்.
கை, கால்களில் ரத்தத்துடன் உடலில் காயங்களுடன் சாரதா அழுது கொண்டே வெளியே வர “இனி இவளுக்கு வேலை கொடுத்திங்க அவர்களுக்கும் இதே நிலைமை அந்த வெள்ளைக்காரன் வந்து இவளையும் அவள் குடும்பத்தையும் பார்த்துக்கட்டும்” என்று கத்திவிட்டு நாச்சியப்பன் தன் மனைவி மகன்களையும் அழைத்து சென்றார்.
ரத்த தோய்ந்த கண்களுடன் வீட்டிற்க்கு சென்ற சாரதாவுக்கு மருந்திட கூட யாரும் முன் வரவில்லை அனைவரும் ஜமீன்தாருக்கு பயந்து இருந்து கொண்டனர்.
சாரதா உடல் நிலை சரியில்லாமல் இருக்க பிள்ளைகள் பசியில் வாடினர்.
அதே நேரம் இரவு உறங்கி கொண்டிருந்த வள்ளியின் கனவில்
தன் தாய் தம்பி தங்கைகள் அனைவரும் இறந்ததை போல் கனவு வர “அம்மா” என்று கத்தி கொண்டு எழுந்தமார்ந்தாள்.
அவள் பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த ரிச்சர்ட் அவளை அணைத்து சமாதானம் செய்ய அவளின் உடல் நடுங்கி கொண்டே தான் இருந்தது.
“ஏய் என்னாச்சு பேபி” என்று கேட்க
“அம்மா தம்பி தங்கை உடம்பெல்லாம் ரத்தம்” என்றாள் பதட்டத்துடனே
ரிச்சர்ட் மனதில் ஏதோ கனவு கண்டிருக்கிறாள் போல என்று நினைத்தவன் எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க அவளும் கைகள் நடுங்கி கொண்டே அதை வாங்கி குடித்தாள்.
“நான் என் அம்மா கிட்ட போகனும் என்னை கூட்டிட்டு போங்க தயவு செஞ்சு என்னை கூட்டிட்டு போங்க நான் அவங்களை பார்க்கனும் நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்” என்று கையெடுத்து கும்பிட்டு அழுக
“ஓகே மார்னிங் போலாம் இப்போ தூங்கு” என்று அவளை சமாதானம் செய்து படுக்க வைத்தான்.
மறுநாள் காலை ரிச்சர்ட் வழக்கம் போல வெளியே செல்ல வள்ளி மனது தன் தாயிடம் தான் இருந்தது.
அப்போது அங்கே வந்த வெள்ளைக்காரன் ஒருவன் அழகான தமிழில் “லிசா மேடம் உங்களை உங்க ஊருக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க வரீங்களா” என்று கேட்க அடுத்த நொடி அவனுடன் சென்றாள் வள்ளி.
வெளியே சென்ற ரிச்சர்ட் கெஸ்ட் ஹவுஸ் உள்ளே நுழைந்தவன் வள்ளியை ஒவ்வொரு இடமாக தேட அவள் எங்கும் இல்லை.
அந்த வீட்டு பணியாட்களிடம் விசாரிக்க அவள் யாரோ ஒரு வெள்ளைக்காரனுடன் சென்றதாக கூறினர்.
அத்தியாயம் 15
அந்த பணியாள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தவன் “ஏன் இதை என் கிட்ட முன்னாடியே நீ சொல்லை” என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
“துரை நீங்க வெளியே போயிருந்திங்க” என்றான் அவன் எங்கே அவன் தன்னை மீண்டும் அடித்து விடுவானோ என்ற பயத்துடனே ரிச்சர்ட் மீண்டும் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்
“அதனால என்னை கேட்க்காம அவளை வெளியே அனுப்பிவியா” என்று கேட்டான் கோபத்துடன்.
தன் கணவன் அடி வாங்குவதை பார்த்த அவன் மனைவி அங்கே ஓடி வந்தாள் “துரை ஐயா என் புருசனுக்கும் ஒன்னும் தெரியாதுங்க அவரை விட்டுருங்க” என்று அவன் காலை பிடித்து கதறினாள்.
ரிச்சர்ட் அவள் மீது துளி அளவு கூட இரக்கம் காட்டாமல் தன் காலை அவள் கையில் இருந்து உதறியவன் அவளின் கணவன் மூக்கில் ஓங்கி குத்தினான்
அவன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது “சொல்லு டா அவளை யார் கூட்டிட்டு போனா” என்று கேட்டு கொண்டே மீண்டும் அடித்தான்.
“ஐயா நாங்க புள்ளை குட்டிக்காரங்க எங்களை விட்ருடுங்க எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று கதறி அழ
ரிச்சர்ட் அப்போதும் அவனை விடாமல் “சொல்லு டா” என்று கேட்டு கொண்டே அவனை அடித்து வெளுத்து கொண்டே இருந்தான்.
“ஐயா அன்னைக்கு வந்தாங்களே ஒரு மேடம் அவங்க பேர சொல்லி தான் அவங்களை ஒருத்தன் கூட்டிட்டு போனா” என்று அந்த பணியாளின் மனைவி நினைவு வந்தவளாக கூறினாள்.
ரிச்சர்ட் உடனே அவனை அடிப்பதை நிறுத்திவிட்டு “எந்த மேடம் யாரு?” என்று சந்தேகத்துடன் கேட்டான் அவங்க தான் சார்
“வெள்ளையா ஒரு சார் கூட வந்தாங்களே நடுகூடத்துல கூட உதட்டுல முத்தம் கொடுத்துக்கிட்டாங்களே அவங்க தான்” என்றாள்.
ரிச்சர்ட்க்கு இப்போது புரிந்துவிட்டது லிசா நேற்று தான் அவளை அடித்ததற்க்கு இன்று தன்னை பழிவாங்கி இருக்கிறாள் என்று அவனின் மொத்த கோபமும் லிசாவின் புறம் திரும்ப தன் காரை எடுத்து கொண்டு லிசா தங்கி இருக்கும் இடத்துக்கு ஓட்டிச் சென்றான்.
ஆனால் அங்கே லிசா இல்லை அவளும் அவள் கணவனும் வெளியூருக்கு சென்றிருப்பதாக அவன் காவலாளி கூறினான்
ரிச்சர்ட்க்கு இப்போது என்ன செய்வது என்று புரியாத ஒரு நிலை
தலையில் கை வைத்து கொண்டு அந்த வீட்டின வெளியில் அமர்ந்து கொண்டான்.
இன்று காலை வள்ளியை அவளின் தாயை பார்க்க கூட்டிச் செல்லலாம் என்று தான் அவனும் நினைத்து கொண்டு இருந்தான் அதற்க்குள் அவள் இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று அவன் துளி கூட நினைக்கவில்லை.
லிசாவுக்கு தெரியும் எப்படியும் அவன் தன்னை தேடி வருவான் என்று அதனால் தான் முன்பே அவன் இங்கு வருவதற்க்குள் தன் கணவனை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
ரிச்சர்ட் எவ்வளவு நேரம் யோசனையுடன் அமர்ந்து இருந்தானோ ஒரு முடிவுடன் எழுந்து சென்று மீண்டும் கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தான் அவர்கள் இருவரும் தங்கி இருந்த அறையின் உள்ளே சென்றான் அங்கே அவள் ஆடைகள் மூலைக்கு ஒன்றாக சிதறி கிடந்தது.
அதை கையில் எடுத்து பார்த்தவனுக்கு ஏனோ மனது வலித்தது அவள் இல்லாத வெறுமையான அறையில் இருக்க அவனுக்கு மூச்சு முட்டியது சிறையில் இருப்பதை போன்ற ஒரு உணர்வு வந்தது அந்த உடையை கையில் வைத்து பார்த்து கொண்டு இருந்தவன் மனதில் காலை நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
இன்று வள்ளி அவனுக்கு முன்பே விடியற்காலை வேளையில் கண்விழித்தவள் தான் உடலில் ஒரு பொட்டு ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை நினைத்து பதறி கீழே சிதறி கிடந்த அவளின் ஆடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.
உடை மாற்றி கொண்டு இருந்தவளின் கை தெரியாமல் பக்தத்தில் இருந்த மேசையில் பட்டு விட அதிலிருந்து கண்ணாடி டம்ளர் கீழே உடைந்து சிதறியது அந்த சத்தத்தில் தான் ரிச்சர்ட் கண் விழித்தான்.
அவனின் கண்கள் கண்விழித்தவுடன் முதலில் பார்த்தது தன்னவளை தான் ஏனோ அவளை தினமும் பார்க்க பார்க்க ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு பெண்ணை போன்று தான் அவனுக்கு தோன்றியது
அவளிடம் தோன்றும் ஈர்ப்பும் தாப எண்ணங்களும் சலித்து போகவேயில்லை அவள் வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு அனுவும் ஏங்கியது.
கண் விலகாமல் அவளை பார்க்க வள்ளி பயம் வெட்கம் கலந்து அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் ஓடிச்சென்று குளியலைறயின் உள்ளே புகுந்து கதவை தாழிட போக ரிச்சர்ட் தன் கை வைத்து தடுத்தான் அவனும் அவளுடன் உள்ளே புகுந்து கொண்டான் “சேர்ந்து குளிக்கலாம் பேபி” என்று கூறிக் கொண்டே கதவடைத்தான்.
இன்று காலை நடந்த கூடலின் நெருக்கம் அவளின் கதகதப்பு அவளின் பவள இதழ்கள் பஞ்சு போன்ற தேகம் அவளுக்கே உண்டான பெண்மையின் மணம் அனைத்திற்க்கும் அவன் உடலும் மனமும் ஏங்க ஆரம்பித்தான்.
அவள் எங்கே சென்றிருப்பாள் யோசித்தவனுக்கு விடையாக எப்படியும் அவள் தன் தாய் வீட்டிற்க்கு தான் சென்றிருக்க கூடும் என்று தோன்றியது.
அடுத்த விநாடி அங்கிருந்த தன் ஆடைகளை எடுத்து தன் பெட்டியில் அடுக்கி வைத்தவன் அங்கிருந்து விறுவிறுவென கீழே இறங்கி வந்து காரில் ஏறி அசுர வேகத்தில் காற்றை கிழித்து கொண்டே தன்னவளை தேடிச் சென்றான்.
அதே நேரம் வள்ளி அந்த வெள்ளைக்காரனுடன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தாள் வீட்டிற்க்கு சென்று இறங்கியவுடன் முதலில் தன் தாயை கட்டியணைத்து அழ வேண்டும் தன் தம்பி தங்கைகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்தாள்.
வள்ளி ரிச்சர்ட்டுன் வந்து இன்றோடு சரியாக பத்து நாட்கள் ஆகி இருந்தது
தன் தாய் தன்னை இந்த கோலத்தில் பார்த்தாள் எப்படியும் அழுதுவிடுவார் என்று நினைத்து கொண்டே தான் வந்து கொண்டிருந்தாள்.
அவள் தோளில் வெட்டு தழும்பின் வடு இன்னமும் அப்படியே இருந்தது
அதை பார்த்தவள் தன் புடவையால் தன்னை போர்த்தி மறைத்து கொண்டே அமர்ந்து கொண்டாள்.
காரின் ஜன்னல் வழியாக தன்னை கடந்து செல்லும் மரம் செடி கொடிகளை வேடிக்கை பார்த்து கொண்டே ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்தாள்.
கார் ஒரு முழு பகலின் பயணத்திற்க்கு பின் மாலை வேளையில் அவளின் ஊரின் எல்லையில் உள்ளே நுழைந்து வள்ளியின் இதயம் ஏனோ படபடவென அடித்து தன்னை அறியாமல் ஏதோ கேட்டது நடக்க போவதை போல் ஒரு உணர்வு அவள் மனதில் தோன்றியது.
காரை ஓட்டிக் கொண்டு இருந்த அந்த வெள்ளைக்காரன் “எந்த வீடு” என்று கேட்டு கொண்டே ஓட்ட வள்ளி அவனுக்கு வழிக்காட்டி கொண்டிருந்தாள்.
ஊருக்குள் புதிதாக ஒரு கார் நுழைய அனைவருக்கும் ஆச்சரியம் ஏனெனில் அந்த ஊரின் ஜமீன்தார் வீட்டில் கூட இப்போது வரை ஒரு கார் இல்லை அந்த காரில் செல்வது யாராக இருக்க கூடும் எந்த வீட்டுக்கு செல்கிறார்கள் என்று நினைத்து கொண்டே இருந்தனர்.
சிறுவர் சிறுமிகள் புதிதாக காரை பார்த்தவுடன் அந்த காரின் பின்னே ஓடிக் கொண்டிருந்தனர் தெருவில் தண்ணீர் எடுப்பதற்க்காக சென்ற பெண்மணிகள் கூட இடுப்பில் குடத்தை வைத்து கொண்டு வேடிக்கை பார்த்தனர்.
அதில் ஒருத்தி உள்ளே இருந்த வள்ளியை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டாள் “ஏட்டி அது நம்ம சாரதா மவள் தான” என்று தன்னுடன் இருந்த பெண்ணிடம் கூற
அவளோ பதிலுக்கு “என்ன டி சொல்லுற அவள் அந்த வெள்ளைக்காரன் கூட ஓடி போகலையா” என்று கேட்டாள்.
“ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் டி நம்ம ஆம்பளைங்களே பிடிக்கலைன்னா விட்டுட்டு போறானுக இவரு வெள்ளைக்கார ஆபீசரு பத்து நாள் வச்சுக்கிட்டு இருந்துட்டு துரத்தி விட்டு இருப்பான் டி” என்றாள்.
“இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு தைரியம் ஆகாது டி நானா இருந்தா அரளி விதையை அரைச்சி குடிச்சு செத்தே போய் இருப்பேன் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படி வரா பாரு சாரதாவும் உடம்பு முடியாம கிடைக்கா அந்த பிள்ளைகளும் பசியில வாடுதுக இவளுக்கு வந்த வாழ்வை பார்த்தியா காருல போறா” என்றாள்.
“நமக்கு என்ன வந்துச்சு தோசைக்கு ஏத்த கூலி அவ்வளவு தான் வூட்டுல வேலை கிடைக்கு வாங்க போவோம்” என்று கூறிவிட்டு அனைவரும் அங்கிருந்து தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
கார் வள்ளியின் குடிசையின் வெளியே வந்து நிற்க வள்ளி கதவை திறக்க தெரியாமல் தடுமாற அந்த வெள்ளைக்காரன் வந்து கதவை திறந்துவிட்டான்.
இப்போது தான் ரிச்சர்ட்டின் நினைவு அவளுக்கு வந்தது அவன் எப்போதும் அவள் காரின் கதவை திறந்துவிடுவான் அவன் தான் மூடியும் விடுவான் ஏதோ இளவரசியை போல் நடத்தினான்.
அவள் இறங்கியவுடன் அந்த வெள்ளைக்காரன் தன் காரை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான் வள்ளி தயக்கத்துடனே உள்ளே சென்றாள்
வீடே அலங்கோலமாக கிடந்தது மணம் தரையில் சாணம் போட்டு முழுகி கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் வைத்து மங்களகராமாக இருக்கும் அவள் வீடு இன்று ஏனோ பாழடைந்த வீட்டை போல் இருந்தது.
தன் தாய் எங்கே என்று தேட
ஒரு மூலையில் போர்வையின் உள்ளே சுருண்டு பக்கத்தில் அவளின் தம்பி தங்கைகள் பசி மயக்கத்தில் படுத்து கிடந்தனர்.
வீட்டின் ஒரு மூலையில் தண்ணீர் பானையை தவிர வேறு எதுவும் இல்லை அதை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது தன் தாயை பார்க்க அவர் கை கால்களில் ஆங்காங்கே கட்டுகளுடன் படுத்திருந்தார் அவரை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் பொங்கியது.
“அம்மா” என்று அவரின் மேலே கை வைத்து எழுப்ப அவர் எழுந்து கொள்ளவில்லை அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை மீண்டும் அம்மா என்று எழுப்ப அவரின் உடல் ஐஸ்சை போல் சில்லிட்டு இருந்தது.
அவளுக்கு புரிந்து போனது தன் தாய் எப்போதோ இறந்து போனது கத்தி கதறி அழுக ஆரம்பித்தாள்.
அவளின் சத்தம் கேட்டு அவளின் தம்பி தங்கைகள் எழுந்து அழுக ஆரம்பித்தனர் அவர்களை கட்டிக் கொண்டு இவளும் அழுதாள்.
அவளின் சிறிய தங்கை “அக்கா அம்மாவை எழுப்பினேன் அவங்க எழுந்துக்கவேயில்லை நேத்துல இருந்து தூங்கிட்டு இருக்காங்க” என்றாள்.
Super bro ud podunga plss interesting aa imu
super bro next epi eppo poduvigga