ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே கள்வா -11

 

 

கோவிலுக்கு சென்று இறங்கிய தர்ஷினியையும் அவள் குடும்பத்தினகளையும் சேதுதாத்தாவும் அப்பத்தாவும் வரவேற்று மணவறைக்கு அழைத்துச் சென்றனர்.

 

அங்கே பாட்டிக்கும் நர்சின் உதவியுடன் ஒரு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு கல்யாணத்தை பார்க்க வசதியாக அமர்ந்திருந்தார் அதை கண்டவுடன் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

மேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பதில் கூறுவது போல் ஏற்கனவே இருந்த கோபத்திலும் அய்யர் ஹோமம் செய்து கொண்டு இருந்த ஹோமத்தில் இருந்து வந்த புகையிலும் கண்கள் சிவந்து முகம் இறுகி ஐயர் கூறுவதை திருப்பி கூறிக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

 

ஐயரின் குரலில் “பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள்” என்று கூறியதை கேட்டவுடன் அருகில் இருந்த தற்காலிக ரூமில் இருந்து உறவினர்கள் புடை சூழ மென் சிவப்பு காஞ்சி பட்டு புடவையில், கண்களுக்கு மையிட்டு மூக்கில் எப்போதும் குடி இருக்கும் வைர மூக்குத்தி மின்ன உதடுகளில் லைட் ரெட் லிப்ஸ்டிக் போட்டு கைகளில் தங்கமும் கண்ணாடியும் கலந்த வளையல்கள் பூட்டி மெல்லிய இடையில் ஒட்டியானமும் கைகளில் அவசரமாக வைத்துக் கொண்ட மெஹந்தியும் என்று அன்னமாக அன்னநடையில் மணமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தாள் தர்ஷினி.

 

 

அவளை கண்டதும் அங்கிருந்த அவளது அம்மா அப்பாவிற்கும் பாட்டிக்கும் தானாகவே கண்களில் நீர் தேங்க ஆரம்பித்து விட்டது.

அவளை கைப்பிடித்து அழைத்து வந்த பிரியா மித்திரனின் அருகில் அமர வைத்தாள்.

 

 

 அருகில் அமர்ந்த அரவத்தில் கூட அந்த பக்கம் திரும்பி பார்க்காமல் மந்திரம் கூறுவது மட்டுமே தனது கடமை என்று மித்ரன் கூறிக்கொண்டு இருந்தான் தர்ஷினிக்கும் அவனின் அருகில் அமர்ந்தவுடன் உடலில் ஓடிய நடுக்கத்துடன் கூடிய பயத்தில் தலையை கீழே குனிந்து கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் மஞ்சள் கயிற்றில் கோர்த்த பொன் தாலி சுவாமி பாதத்தில் வைத்து பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் மித்ரனின் கையில் தாலி கொடுக்கப்பட்டது அதை வாங்கி கையில் வைத்து வெறித்துக் கொண்டிருந்தவனிடம் அவனது தாத்தா “ தாலியை கட்டுடா தம்பு” என்ற குரலில் நிதர்சனம் உணர்ந்து அருகில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் அவனின் பார்வையில் அவள் இன்னும் கீழே குனிந்து கொண்டாள்.

 

 

 அதில் கண்களில் கோபத்துடன் அவளை தொடாமலே அவளை சுற்றி மூன்று முடிச்சு போட்டு திருமதி. மித்ரன் ஆக்கிகொண்டான் அவனது செய்கையில் அவளது கண்களில் இருந்து இரண்டு சொட்டு நீர் கீழே விழுந்தது.

 

 

பின் பெரியோர்கள் கூறியபடி திருமாங்கல்யத்தில் குங்குமம் வைத்து கையை எடுக்கையில் அவனது கை திருமாங்கல்யம் இருந்த இடத்தில் லேசாக உரசியதில் அவனுக்கோ கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருந்தது அவளுக்கும் வெளிப்படையாகவே உடம்பு நடுங்க தொடங்கி விட்டது.

 

அதை கண்டவன் மெதுவாக அவளின் புறம் சரிந்து “ நீ பெரிய உலக அழகி கிடையாது உன்னை பார்த்த உடனே இங்க எல்லாரும் பிளாட் ஆவதற்கு தெரியாம தான் பட்டுச்சு அதுக்கு எதுக்கு இவ்வளவு சீன் கிரியேட் பண்ற” என்றான் எரிச்சல் குரலில்.

 

அதைக் கேட்டவுடன் தர்ஷினியின் முகத்தில் சிறிது கோபம் எட்டி பார்த்தது அதை யாருக்கும் காட்டாமல் புன்னகையில் மறைத்துக் கொண்டவள் அவனைப் பார்த்து ஒரு அலட்சிய புன்னகையுடன் திரும்பிக் கொண்டாள்.

 

ஆனால் மனதிலோ ‘காட்டெருமை நல்லா ஜிம்பான்சி மாதிரி வளர்ந்து இருக்கு தெரியாம கைபட்டுச்சா சரி பட்டுச்சில்ல அதோட மூடிக்கிட்டு ஒக்காந்து இருக்க வேண்டியது தானே அதை விட்டுட்டு என்கிட்டயே வந்து திட்டுறான் லூசு பையன் இது கூட எப்படித்தான் நாம காலம் தள்ள போறோமோ தெரியலையே’என்று மனதினுள் புலம்பிக்கொண்டு இருந்தாள்.

 

 

இன்னும் எவ்வளவு நேரம் இப்படி திட்டிக்கொண்டு இருந்திருப்பாளோ அடுத்து அடுத்து சடங்குகள் செய்யச் சொல்லி அவளை அவனுடன் கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள்.

 

அவளது அலட்சிய புன்னகையிலேயே உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தவன் அடுத்தடுத்து சடங்குகள் செய்தது என்று கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான் சற்றென்று மாலையை கழட்டி விட்டு எழுந்தவனை பார்த்தவர்கள் பதறித்தான் போனார்கள்.

 

உடனே அவனது அம்மா அருகில் வந்தவர் “டேய் மித்து கண்ணா எல்லா சடங்கு முடிஞ்சிருச்சு நீ கோபப்படாதே அப்படியே அவளோட சேர்ந்து பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கடா இதோட எல்லா சடங்கும் முடிஞ்சுடுச்சு ப்ளீஸ்டா அம்மாக்காக” என்று கெஞ்சி அவனை சம்மதிக்க வைத்தார்.

 

முதலில் பாட்டியிடம் வாங்கிக்கொண்டனர் அதில் பாட்டி உணர்ச்சிவசப்பட்டதில் மீண்டும் மயக்கத்திற்கு சென்றவர் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு நர்ஸின் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

 

 

பின் ஒவ்வொரு தம்பதியராக காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர் இந்த இளம் தம்பதியினர் பெரியவர்கள் அனைவரும் சூழ்நிலை காரணமாக அமைதியாக ஆசீர்வதிக்க அவனது அண்ணன் கார்த்திக்கோ அவனிடம் சீக்கிரம் சஷ்டிக்கு விளையாட துணைக்கு ஒரு பாப்பாவை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டான். 

 

அதை கேட்டவன் தனது அண்ணனின் காதுக்கு அருகில் வந்து ஏதோ சொல்ல அதில் அவனது அண்ணன் முகம் மாறியது சட்டென்று கார்த்திக் “ சரிடா இப்ப வேணாம் உனக்கு எப்ப தோணுதோ அப்ப விளையாட பாப்பா அரேஞ்ச் பண்ணி கொடு” என்று ஜகா வாங்கி விட்டான். 

 

இவன் கூறியதை கேட்டு பிரியாவும் தர்ஷினியும் சற்றென்று சிரித்து விட்டார்கள் அதை பார்த்த கார்த்திக் பிரியாவை கண்டு சமாளிப்பாக சிரித்தவனை பார்த்து உடனே பிரியா காரி துப்புவது போல் பாவனை காட்டினாள்.

 

அதில் எனக்கு மீசையில் மண் ஒட்டவே இல்லை என்பது போல் திரும்பி யாரோ கூப்பிடுவது போல் சென்று விட்டான் அதை பார்த்து கண்ணில் நீர் வர சிரித்துக் கொண்டிருந்த தர்ஷினியை திரும்பி ஓர் பார்வையில் அடக்கி விட்டான்.

 

அதில் மித்ரனிடம் இருந்து சற்று விலகி அங்கிருந்த தனது அன்னையுடன் இணைந்து கொண்டாள். அப்போது அங்கே வந்த செல்வமோ “ தர்ஷினி வாமா முதல் அன்னதானத்தை நீயும் மித்ரன் தான் தொடங்கி வைக்கணும்” என்று கூப்பிட்டுக்கொண்டு சென்றார்.

 

தர்ஷினி ஆல் ஒன்றும் கூற முடியாமல் தனது மாமா கூப்பிட்டதற்கு பலியாடு போல் சென்றாள் மனதில் ‘ ஓ மை கருப்பசாமி உன்கிட்ட நான் என்ன கேட்டேன் நீ என்ன கொடுத்து இருக்க என்ன இப்படி வந்து சிக்க வச்சிருக்க அங்க போனா அந்த காட்டெருமை நம்மள மொறச்சே பயமுறுத்துவான்’. என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

 

அன்னதானம் கொடுக்கும் இடத்தில் அனைவரும் இருக்கவே மித்ரனின் அருகில் சென்று அமைதியாக நின்று கொண்டாள் பின் மணக்கோலத்தில் மித்ரனும் அவளும் சேர்ந்து அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது.

 

 

அப்படி குனிந்து நிமிர்ந்து பிரியாவுடன் பேசிக்கொண்டே பரிமாறிக் கொண்டிருந்தாள் அதில் அவளது இடுப்பு சேலை விலகி வெள்ளை நிற இடுப்பு பளிரென்று அப்பட்டமாக தெரிந்தது. அதை பார்த்தவன் முதலில் நமக்கு என்ன என்று அதை கண்டுகொள்ளவே இல்லை.

 

 

அவன்தான் கண்டு கொள்ள பிடிக்காமல் தலையை திருப்பிக் கொண்டான் என்றால் மற்றவர்களும் அதே நிலையில் இருப்பார்களா என்ன அவன் தலையை திருப்பிய பக்கம் வேறு ஒருவனும் அவளது இடுப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அதைப் பார்த்தவன் கொதிநிலையில் உச்சத்திற்கு சென்றது நேராக அவனிடம் சென்றவன் ஓரமாக அவனை தள்ளி சென்று ஓங்கி ஒரு அரை வைத்தான் அதிலேயே அடி வாங்கியவன் காதில் ஒலி கேட்க ஆரம்பித்து விட்டது.

 

அடி வாங்கியவன் திரும்பி தன்னை எதற்காக அடித்தான் என்று பார்க்க அங்கே கண்களில் தீ ஜுவாலையுடன் நின்று கொண்டிருந்த மித்தனை கண்டவன் ஒன்றும் கூறாமல் அப்படியே ஓடிவிட்டான்.

 

இது எதையும் பற்றியும் அறியாமல் மிகவும் சுவாரசியமாக பிரியாவிடம் பேசிக் கொண்டிருந்தவளை அப்படியே முழங்கையுடன் சேர்த்து பிடித்து ஒரு ஓரமாக இழுத்து வந்தவன் இவ்வளவு நேரம் ஆகியும் சரி படுத்தாமல் இருந்த இடுப்பில் நன்றாக விரல் தடங்கல் பதியுமாறு அழுத்தி கிள்ளி விட்டான்.

 

அதில் தர்ஷினியின் கண்கள் கலங்கிய விட்டது இரண்டு சொட்டு நீர் கன்னத்தில் தெரித்து விழுந்தது சற்று நேரம் அப்படியே நின்று விட்டாள் பின் வலி கொஞ்சம் மட்டுபட்டதும் அவனின் அருகில் சென்றவள் ஓங்கி மித்ரனின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.

 

 

“ யாரைக் கேட்டு என் மேல கை வைக்கிறிங்க அன்னைக்கும் அப்படித்தான் என்ன என்று எதுவும் கேட்காமல் அடித்துவிட்டு நீங்கள் பாட்டுக்கு சென்று விட்டீர்கள் இன்றும் இடுப்பில் கிள்ளி வைக்கிறிங்க யாருக்கு உங்களுக்கு உரிமை கொடுத்தது என்னை அடிப்பதற்கு” என்று உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளை கொட்டி விட்ட பின்பு தான் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

அப்போதே அங்கு அவனின் இறுகிய முகத்தையும் விரைத்த உடலையும் எந்நேரமும் என் கோபம் கட்டுப்பாடை இழந்து விடும் என்ற நிலையில் நின்று கொண்டிருந்த அவனை கண்டவள் கண்டவள் உடம்பும் மனதும் பயத்தில் தன்னால் நடுங்கி விட்டது.

 

வேகமாக அங்கிருந்த சென்றவன் யார் கூப்பிடுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கோவிலை விட்டு வெளியே சென்று தனது காரை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.

 

அனைவரும் என்ன என்ற கேள்வியுடன் வர சற்று முன்பு வரை பிரியாவுடன் தான் இருவரும் நின்று இருந்ததால் பிரியாவையே அனைவரும் பார்க்க அதற்கு உள்ளே என்று அவள் கை காட்டினாள்.

 

அங்கே சென்று பார்த்தாள் தர்ஷினி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தாள் அவளை என்ன என்று கேட்க ஒன்றும் கூறாமல் அழுதுகொண்டே இருந்தாள் அதில் மித்ரன் தான் அவளை ஏதோ செய்து விட்டதாக எண்ணி அழுதுகொண்டு இருந்தவளை குடும்பமே அவளை சமாதானம் படுத்தி கொண்டு இருந்து.

 

 

அதை பார்த்த தர்ஷினி குடும்பத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் நின்று இருந்தனர் இதில் மகா மட்டும் தர்ஷினியின் உடல்மொழியில் சற்று சந்தேகத்துடன் கூடிய யோசனையிலேயே இருந்தார்.

(சும்மாவா அவளது அம்மாவாகிறே)

 

 

மித்ரனின் குடும்பமே என்ன நடந்தது என்று தெரியாமல் தர்ஷினியிடமும் அவளது குடும்பத்தினரிடமும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

 

பின் பெரியோர்கள் அனைவரும் இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் கோவிலில் இருந்த மற்ற வேளைகளை அதற்குரிய ஆட்களிடம் ஒப்படைத்து விட்டு முறைப்படி தர்ஷினி யின் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு பால் பழம் சாப்பிட மித்ரனின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றனர்.

 

அங்கே வீட்டை பார்த்து பிரமித்து நின்று விட்டனர் தர்ஷினி குடும்பத்தினர் இவ்வளவு பெரிய வசதியை அவர்கள் எதிர்பார்த்து இருக்கவில்லை அதனால் மிகவும் சங்கடத்துடன் வந்தனர் அதை கண்டு கொண்ட கோபாலனும் ராஜியும் அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு உள்ளே அழைத்து சென்றனர்.

 

பின் முறைப்படி கிஹப்பிரவேசம் செய்து

தனியாக தர்ஷினி வலது காலை எடுத்து வைத்து தனது புகுந்த வீட்டிற்குள் சென்றாள்.

 

 

 

 

 

 

 

3 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top