ATM Tamil Romantic Novels

மெய் தீண்டும் முரடா 16

 அத்தியாயம் 16

 

சின்னவள் கூறியதை கேட்ட வள்ளி அவளை கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டாள். 

 

அவள் அழுவதை பார்த்த அவளின் தங்கை இன்னும் தேம்பி கொண்டே மழலை மொழியில் “அக்கா அம்மாவை அன்னைக்கு ஒரு நாலு பேர் சேர்ந்து அடிச்சாங்க அன்னையிலிருந்து அம்மா படுத்து தான் இருக்காங்க அன்னைக்கு அம்மா உடம்பு முழுக்க ரத்தம்” என்றாள் தன் மழலை மொழியில். 

 

வள்ளி உடனே அவளை தன் அணைப்பில் இருந்து விலக்கி அவளின் தோளை தொட்டு “என்ன சொல்ற நீ” என்று அதிர்ச்சியுடன் கேட்க சின்னவள் கண்ணை துடைத்து கொண்டே தேம்பலுடன்

“ஆமாம் அக்கா அன்னைக்கு அம்மா ஜமீன்தார் வீட்டுக்கு வேலைக்கு போனாங்க அப்போ அங்கே இருந்த ஜமீன்தார் அம்மா துடப்பத்தாலயே அம்மாவை அடிச்சாங்க அப்புறம் ஜமீன்தார் ஐயா அவங்க பசங்க எல்லாரும் அம்மாவை சேர்ந்து அடிச்சாங்க” என்றாள் அழுது கொண்டே. 

 

அதை கேட்ட வள்ளி கோபத்துடன் எழுந்து நின்றாள் தன் புடவை முந்தானையை தூக்கி இடையில் சொருகி கொண்டே அழுது கொண்டிருந்த தன் கண்ணை துடைத்து கொண்டு “இங்கேயே அம்மா கூடவே இருங்க அக்கா இப்போ வந்துடுறேன்” என்று கூறிவிட்டு தன் வீட்டில் இருந்த துடப்பத்தை எடுத்து கொண்டு ஜமீன்தார் வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்து சென்றாள். 

 

வள்ளி தெருவில் நடந்து செல்ல அந்த ஊரில் இருந்தவர்கள் அவளை வித்தியாசமான ஒரு பார்வை பார்த்தனர் தங்களுக்குள் அவளை பற்றி எதேதோ கிசுகிசுத்து கொண்டு இருந்தனர். 

 

அவர்களின் பார்வை பேச்சுகள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் காதில் வாங்காமல் ஜமீன்தார் வீட்டின் வாசலில் சென்று நின்றாள் அங்கிருந்த காவலாளி அவளை பார்த்து அதிர்ந்து போய் நிற்க அந்த இரும்பு கதவை திறந்து கொண்டு ஜமீன்தார் வீட்டின் உள்ளே சென்றாள். 

 

வேதவள்ளி ஏதோ வேலையாக இருந்தவர் எதார்த்தமாக அங்கே திரும்பினார் வள்ளி தலைவிரி கோலத்துடன் பத்ரகாளியை போல கையில் துடப்பத்துடன் நிற்க அவளை பார்த்து ஒரு கணம் அதிர்ச்சியடைந்தவர் 

“அடியேய் நீ எங்கே டி இங்கே வந்த உன்னை இன்னைக்கு என்ன பண்றேன்னு பாரு” என்று கத்தி கொண்டே அவள் அருகில் வர 

“எதுக்காக என் அம்மாவை அடிச்ச” என்று முறைத்து கொண்டே வள்ளி அவளை பார்த்து கேட்டாள். 

 

“இந்த பேச்சுக்கு தான் அவள் வாங்கி கட்டிக்கிட்டா அவளுக்கு இது தேவை தான் நானே என் பொண்ணை காவு கொடுத்துட்டு கஷ்டத்துல இருக்கேன் வீணா எரிச்சலை கிளப்பாம இங்கே இருந்து கிளம்பு” என்றார் அலட்சியமாக

அவரின் அலட்சிய பேச்சில் மேலும் கோபமடைந்த வள்ளி

மீண்டும் “எதுக்காக என் அம்மாவை அடிச்ச கேட்ட கேள்விக்கு பதிலை மட்டும் சொல்லு” என்றாள். 

 

“என்ன டி ரொம்ப பண்ற உன் ஆத்தாக்காரி மூஞ்சை பார்த்தாளே கோபம் கோபமா வந்துச்சு அதுக்காக தான் அடிச்சேன் இப்போ என்ன உன்னால என்னை என்ன பண்ண முடியும் ஒரு வேளை கஞ்சிக்கு வக்கு இல்லாதவளுக்கு கோபம் ரோஷத்துக்கு மட்டும் கொஞ்சம் கூட குறைச்சலே இல்லை அந்த வெள்ளைக்காரன் கூட படுத்தவள் தான நீ உனக்கு என்ன அவ்வளவு ரோஷம் வருது” என்றார் அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு ஏளன பார்வை பார்த்துக் கொண்டே முகத்தை சுளித்தார். 

 

“என்னோட இந்த நிலைக்கு காரணம் நீ தான எங்களுக்கு நஞ்சை பூஞ்சைன்னு தரேன்னு சொன்னதால தான நான் உன் பொண்ணுக்காக போனேன் இப்போ கெட்டு சீரழிஞ்சு வந்து நிக்குறேன் உனக்காக தான எல்லாம் பண்ணினேன் உனக்கு என் மேல கொஞ்சமும் இரக்கமே வரலையா” என்று கேட்க. 

 

“நான் ஏன் டி உன் மேல இரக்கப்படனும் என் பொண்ணே போய் சேர்ந்துட்டா நல்லா வெள்ளைக்காரன் ஆபீசருன்னு தெரிஞ்சு தான நீ அவன் கூட போன

எப்படியும் உன் ஆத்தாவால உன்னை எவனுக்கும் கட்டிக் கொடுக்க முடியாது நீயா எவனயாவது ஒருத்தனை இழுத்துக்கிட்டு வந்தா தான்னு உனக்கே தெரியும் அதனால தான் இவனை பிடிச்சிக்கிட்ட நீ உன் உடம்பு சுகத்துக்கு ஆசைப்பட்டு அலைஞ்சதுக்கு நான் என்ன பண்ண முடியும்” என்று முடிக்க வள்ளி அவரின் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறைவிட்டாள். 

 

“என்னையே அடிச்சிட்டல்ல உன்னை என்ன பண்றேன்னு பாரு டி” என்று அவளை அடிக்க போக வள்ளி அவரின் கையை பிடித்து தடுத்தாள்

கையில் இருந்த துடப்பத்தால் அவரை அடி வெளுக்க ஆரம்பித்தாள். 

 

“அடியேய் என் புருசன் மகன்களுக்கு மட்டும் தெரிஞ்சுது உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடு வாங்க டி அய்யோ வலிக்குதே” என்று கத்திக் கொண்டே அவர் இங்கும் அங்கும் ஓட ஆரம்பித்தார். 

 

வள்ளி அவரை விடாமல் துரத்தி அடித்தாள் “என் அம்மாவை போயிட்டாங்க இனி எனக்கு என்ன நடந்தா என்ன உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன் டி” என்று அங்கு இளநீர் வெட்டுவதற்க்காக வைத்திருந்த அருவாளை எடுத்து கொண்டு அவரை வெட்ட போக அங்கே இருந்த வேலைக்காரர்கள் அவளை தடுத்தனர். 

 

அவளை தடுத்த ஒரு வயதான பெண்மணி ஒருவர் “வள்ளி உனக்கும் எதாவது ஆகிடுச்சுன்னா அங்கே உன் வீட்ல இருக்க அந்த அறியா பிள்ளைங்க என்ன பண்ணும் வீட்டுக்கு போ வள்ளி ஆக வேண்டியதை பாரு இவங்களுக்கு அந்த ஆண்டவன் கூலி கொடுப்பான்” என்று கூற. 

 

வள்ளி மூச்சிறைக்க நின்றிருந்தவளுக்கு அப்போது தான் தன் தம்பி தங்கைகளின் நினைவு வந்தது அவர்களுக்காகவாது தான் உயிரோடு இருந்தே ஆக வேண்டும்

என்று நினைத்தவள் அந்த அருவாளை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றாள். 

 

இதற்க்கு மேல் வள்ளியின் வாழ்க்கையில் இழக்க எதுவும் இல்லை ஒரு பெண் எதை எல்லாம் இழக்க கூடாதோ அவை அத்தனையையும் அவள் இழந்துவிட்டாள் அதனால் தான் எதற்க்கும் துணிந்து அங்கே சென்றாள். 

 

தன் குடிசை வீட்டிற்க்கு பொடி நடையாக நடந்து வந்தவள் அங்கே அழுது கொண்டிருந்த தன் தம்பி தங்கைகளை பார்த்து அவர்களை சென்று அணைத்து கொண்டாள் “அழக்கூடாது அம்மா இல்லைன்னா என்ன அக்கா நான் இருக்கேன்” என்றாள் அழுது கொண்டே. 

 

தன் தாயின் அருகில் சென்று அவரின் கைப்பிடித்தவள் தானே அவரை குளிப்பாட்டி அவரின் புது புடவை அணிவித்து இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தாள் ஜமீன்தாருக்கு பயந்து ஒருவர் கூட அங்கே வரவேயில்லை. 

 

அவள் பக்தத்து வீட்டில் இருந்த கல்யாணி பாட்டி மட்டும் அங்கே வந்து அவளுடன் இருந்தார். 

 

பிள்ளைகள் அனைத்தும் சோர்வுடன் இருப்பதை பார்த்தவர் தன் வீட்டிற்க்கு சென்று இருக்கும் பழைய சாதம் ஊறுகாயை பானையில் ஊற்றி எடுத்து வந்தார். 

 

வள்ளி அழுது கொண்டே சேர்ந்து போய் அமர்ந்திருக்க அவள் அருகில் வந்த கல்யாணி பாட்டி “கொஞ்சமா நீயும் சாப்பிட்டு பிள்ளைகளுக்கும் கொடு மா” என்றார். 

 

“இல்லை வேண்டாம் ஆயா” என்று வள்ளி மறுக்க “பிள்ளைகள் பசியில தான் சோர்ந்து போய் இருக்கு அவங்களுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டு நீயும் சாப்பிடு” என்றார் வள்ளி தன் தம்பி தங்கைகளுக்கு கஞ்சியை கொடுத்து விட்டு தன் தாயை அடக்கம் செய்ய ஒரு நான்கு பேர் வேண்டும் அல்லவா அதனால் ஊரின் உள்ளே சென்று யாராவது கூப்பிடலாம் என்று கேட்க அதில் ஒருவர் கூட ஜமீன்தாருக்கு பயந்து வரவேயில்லை. 

 

அப்போது அவள் அருகில் வந்த சிவநேசன் “வாங்க நான் வரேன்” என்று கூற அவனின் தாய் பச்சையம்மா “டேய் நமக்கு எதுக்கு டா ஊர் வம்பு போகாத டா” என்று அவனை எவ்வளவு தடுத்தும் அவளுடன் சென்றான். 

 

சிவநேசன் வள்ளியை விட நான்கு வயது மூத்தவன் சிறுவயதில் இருந்தே வள்ளி என்றாள் அவனுக்கு கொள்ளை பிரியம் பட்டணத்தில் சைக்கிள் பஞ்சர் ஓட்டும் கடையில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறான். 

 

அவளை பெண் கேட்க்கலாம் என்று ஊருக்கு வந்த சமயம் தான் அவள் ரிச்சர்ட்டுடன் சென்றிருந்தாள் 

இப்போது சந்தையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து கொண்டு இருக்கிறான். 

 

மிகவும் நல்லவன் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது வள்ளி ஒரு உதவி என்று கேட்க்கும் போது அவனால் அவளுக்கு உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை தான் நேசித்த பெண்ணை இப்படி ஒரு நிலையில் பார்க்க அவன் மணம் வலித்தது. 

 

அவன் ஒருவன் மட்டுமே அங்கே வர எப்படி அடக்கம் செய்வது என்று தெரியாமல் விழிக்க சிவநேசன் “ஒரு நிமிசம் இப்போ வந்துட்றேன்” என்று கூறிவிட்டு ஓடிச்சென்று ஒரு சுமை இழுக்கும் தள்ளு வண்டியை எடுத்து வர அவனும் வள்ளியும் சேர்ந்து சாரதா அம்மாவை அதில் படுக்க வைத்தனர். 

 

சிவநேசன் முன்னே இழுத்து செல்ல அவனின் பின்னே வள்ளியும் பிள்ளைகளும் தள்ளிக்கொண்டு வந்தனர். 

 

சிவநேசனே சுடுகாட்டில் இருந்தவரிடம் தன் சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்து இறுதி சடங்குக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். 

 

அவருக்கு கொல்லி வைக்க போகும் சமயம் தீப்பந்தத்தை வள்ளியிடம் நீட்ட அவளோ தயக்கத்துடன் “நான் எப்படி” என்று கேட்க 

“நீங்க தான அவங்க மூத்த பொண்ணு வைங்க” என்று கூற வள்ளி கண்ணீருடன் தன் தாய்க்கு கொல்லி வைத்தாள். 

 

“ரொம்ப நன்றிங்க இந்த உதவியை என்னைக்கு மறக்கவே மாட்டேன்” என்று வள்ளி கையெடுத்து கும்பிட 

“பரவாயில்லைங்க” என்று தன் சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுத்து அவளிடம் கொடுக்க 

வள்ளியின் முகம் மாறியது

“பிச்சை போடுறிங்களா” என்று வீம்புடன் கேட்க. 

 

“அய்யோ அப்படி இல்லைங்க எங்க வயல்ல வேலை பார்க்க வேலைக்கு ஆள் வேணும் நாளையில இருந்து வாங்க இதை முன் பணமா வச்சுக்காங்க உங்களுக்கு விருப்பம் இல்லனா வாங்க வேண்டாம்” என்று கூறினான். 

 

“ரொம்ப நன்றிங்க” என்று அவள் கண்ணீருடன் கையெடுத்து 

“போங்க போய் பசங்களுக்கு எதாவது சாப்பிட வாங்கி தாங்க” என்று அனுப்பி வைத்தான். 

 

இரவு அவளின் தம்பி தங்கைகள் அனைவரும் சாப்பிட்டவுடன் உறங்கி விட வள்ளி மட்டும் உறங்காமல் விழித்து கிடந்தாள் தன் தாயின் புடவையை அவள் கையில் வைத்து கொண்டு அழுது கொண்டே இருந்தாள். 

 

சந்தைக்கு சென்றிருந்த நாச்சியப்பன் அவரின் மகன்கள் வீட்டிற்க்கு வர வேதவள்ளி காயத்துடன் கிடந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

 

அவரின் வீட்டில் வேலை செய்பவர்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்புவிக்க தன் மகன்கள் மூவரையும் அழைத்து கொண்டு கையில் தீப்பந்தத்துடன் வள்ளியை கொன்று விடும் ஆத்திரத்துடன் அவளின் வீடு தேடி சென்றார். 

 

 

 

 

2 thoughts on “மெய் தீண்டும் முரடா 16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top