அத்தியாயம் 18
“பேபி வாயை திறந்து பேசு” என்று அவன் சற்று கோபத்துடன் அவளிடம் கேட்க “ஆமாம் அவங்க வந்து என்னை அடிச்சாங்க என்னை மட்டும் இல்லை என் அம்மாவையும் தான் அடிச்சாங்க நீ என் வாழ்க்கையில வர வரைக்கும் நான் எவ்வளவு நிம்மதியா வாழ்ந்தேன்னு தெரியுமா சாப்பாட்டுக்கு
வழியில்லைன்னாலும் என் அம்மாவோட நிம்மதியா இருந்தேன் ஆனா உன்னால என் வாழ்க்கையே நாசமா போச்சு இருந்த ஒரு வீடும் எரிஞ்சிருச்சு என் அம்மாவும் என் கூட இல்லை” என்று கூறிவிட்டு ஒரு நிமிடம் தலை குனிந்து அழுதவள்
அதன் பின் “போதும் நீ எதுவும் பண்ண வேண்டாம் என்னை வாழ விடு அது போதும்” என்றாள் நிமிர்வுடன் அவனை பார்த்து.
“வாட் நான் உன் வாழ்க்கையை கெடுத்தனா நீ தான் முதல்ல என்னோட லைப்ல நுழைஞ்ச இனி நீயே நினைச்சாலும் என்னை விட்டு எங்கேயும் போக முடியாது வி ஆர் மேரீட்” என்றான் கோபத்துடன் அவளின் கன்னத்தை பிடித்து,
இன்னும் வேகமாக தன் இரும்பு கரங்களால் அவளின் கன்னத்தை பிடித்து அழுத்தி “வலிக்குது” என்றவளின் கண்கள் கலங்கியது.
அவளின் கன்னத்தில் இருந்த காயத்தில் அவன் அழுத்தி பிடித்து விட அவளுக்கு வலித்தது.
அவள் கண்கள் கலங்கி இருப்பதை ரிச்சர்ட் உடனே அவளின் கன்னத்தில் இருந்த தன் கையை எடுத்து கொண்டான் “சாரி” என்றவனுக்கு அவளின் கன்னத்தை பார்க்க பார்க்க கோபம் தலைக்கு ஏறியது அவளை அடித்தவனை எதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ரிச்சர்ட் வள்ளியின் தம்பியிடம் “ஜமீன்தார் வீடு எங்கே இருக்கு”
என்று கேட்டான்
“நான் காட்டுறேன் வாங்க” என்று அவனின் கைப்பிடித்து அழைத்து செல்ல போக “வேண்டாம் கோபாலா அவரை அங்கே அழைச்சிட்டு போகாத” என்று வள்ளி எவ்வளவு கூறியும் காதில் கூட வாங்காமல் அவன் ரிச்சர்ட்டுன் ஜமீன்தார் வீட்டுக்கு நடந்து சென்றான்.
ஜமீன்தார் வீட்டின் கேட்டின் உள்ளே நுழைந்தவுடன் ரிச்சர்ட் தன் பாக்கெட்டில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்தான் கோபாலன் அதை பார்த்து பயத்துடன் ஒன்றும் பேசாமல் ரிச்சர்ட்டை அழைத்து சென்றான்.
ஜமீன்தார் வீட்டின் உள்ளே இருவரும் சென்றனர் அனைவரும் தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர் வள்ளியின் தம்பி
“அவரு தான் அக்கா கன்னத்துல எட்டி மிதிச்சாரு” என்று நாச்சியப்பன் மூத்த மகனை கைக் காட்டினான்.
ரிச்சர்ட் ஆறடி உயரத்தில் அவனை குத்தி கிழிக்கும் பார்வையுடன் அவன் அருகில் நெருங்கி வர நாச்சியப்பன் தன் மகனை அவன் கண்டிப்பாக எதாவது செய்து விடுவான் என்று தெரிந்து சாப்பிட்ட கையுடன் ஓடி வந்து “துரை வேண்டாம் அவனை ஒன்னும் பண்ணிடாதிங்க” என்று அவனின் காலைப்பிடிக்க அவரின் நெஞ்சில் ஓங்கி மிதித்தான் ரிச்சர்ட்
நாச்சியப்பன் தரையில் விழுந்தார்.
அவரை வேதவள்ளி பிடித்து கொண்டவர் “ஏன் டா உங்க அப்பனையே அடிக்கிறான் வேடிக்கை பார்க்கிறிங்களே அவனை அடிச்சி கொல்லுங்க டா” என்று கூற
அவரின் இரு இளைய மகன்களும் எழுந்து ரிச்சர்ட் அருகில் நெருங்கி வர அவர்கள் இருவரின் கால்களிலும் ரிச்சர்ட் குறி பார்த்து துப்பாக்கியால் சுட்டான்
இருவரும் காலில் குண்டு பாய்ந்து நிலைத்தடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
நாச்சியப்பனின் மூத்த மகன் எழுந்து பயத்துடனே பின்னே நடந்து சென்று சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த குறுவாளை எடுத்து ரிச்சர்ட்டின் கையில் குத்தினான்.
ரிச்சர்ட் ஒரு கணம் கூட அசராமல் தன் கையில் ரத்தம் தோய்ந்து இருந்த அந்த குறுவாளை எடுக்க அவன் அங்கிருந்து ஓட போனான்
அவன் காலில் குறி பார்த்து சுட கீழே விழுந்து “அம்மா வலிக்குதே” என்று கத்தி அலறி கொண்டு இருந்தான்.
அந்த குறு வாளுடன் அவன் அருகில் கொலை வெறியுடன் சென்றான் ரிச்சர்ட் “ஏய் என் பிள்ளையை மட்டும் எதாவது பண்ணின உன்னை கொல்லாம விட மாட்டேன்” என்று நாச்சியப்பன் கத்த அவரின் கையிலும் குறி பார்த்து சுட்டான் ரிச்சர்ட்.
நாச்சியப்பன் கையில் இருந்தும் ரத்தம் வர “என்னங்க நீ எல்லாம் நல்லா இருப்பியா நாசமா தான் போவ” என்று வேதவள்ளி கண்ணீர் விட ரிச்சர்ட்டின் இதழின் ஓரம் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
நாச்சியப்பன் மூத்த மகன் அருகில் சென்றவன் அவன் அருகில் சென்று அந்த குறுங்கத்தியால் அவனின் கன்னத்தில் கோடிழுத்தான்
அவனோ அவனை எவ்வளவு தடுக்க முயற்சி செய்தும் அவனின் இரும்பு கரங்களை அசைக்க கூட முடியவில்லை வலி தாங்க “ஆஆ” என்று கத்த அவன் குரல் அந்த வீடேங்கும் எதிரொலித்தது.
அவனின் மறு கன்னத்திலும் கத்தியால் கோடிழுக்க போக அவன் ரிச்சர்ட் கைப்பிடித்து தடுக்க வள்ளியின் தம்பி கோபாலன் ஓடி வந்து நாச்சியப்பன் மகனின் கையை அசைக்க முடியாத படி தன் கையால் இறுக்கி பிடித்து கொண்டான்.
ரிச்சர்ட் கொலை வெறியுடன் அவனின் மறு கன்னத்திலும் கூர்மையான கத்தியால் கோடிழுத்தான் “அம்மா” என்று அவன் அலறி துடித்து கொண்டே இருக்க வேதவள்ளி மனம் தாங்காமல் ரிச்சர்ட்டை அவனிடமிருந்து பிடித்து இழுக்க முயற்சி செய்ய அவரின் கையிலும் அந்த ரத்தம் தோய்ந்த கத்தியால் குத்தி கிழிக்க வேதவள்ளி உடனே தன் கையை எடுத்து கொண்டான்.
ஜமீன்தார் குடும்பமே ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்க
“இனி யாராவது வள்ளி கிட்ட நெருங்குனிங்க உங்க எல்லாரையும் கொன்னுடுவேன்” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினான் ரிச்சர்ட் போகும் போது அந்த குறுங்கத்தியை தூக்கி எறிந்துவிட்டு தான் சென்றான்.
நேரே கோபாலனை அழைத்து கொண்டு வள்ளி இருக்கும் இடத்துக்கு சென்றான் அங்கே இருந்த கல்லில் தன் தங்கையுடன் இருட்டில் ஒரு தீப்பந்தத்தை மட்டும் வைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
ரிச்சர்ட் கோபலனும் அவளின் அருகில் வர அவன் கையில் ரத்தம் வடிந்து கொண்டு இருப்பதை பார்த்தாள் வள்ளி உடனே பதறிக் கொண்டே “ரத்தம் வருது மருந்து வைக்கனும்” என்று கூறிக் கொண்டே அவனின் கைப்பிடிக்க போக “அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை வாங்க எல்லாரும் என்னோட மாளிகைக்கு போலாம் இப்போதைக்கு நாம அங்கே இருக்கிறது தான் பாதுகாப்பு” என்று அவர்களை தன்னுடன் அழைத்து சென்றான்.
அவர்களும் ரிச்சர்ட்டுடன் சென்றனர்
வழியில் ஒரு குதிரை வண்டிக்காரரிடம் பேசி அனைவரையும் ரிச்சர்ட் அழைத்து சென்றான்.
ஜமீன்தார் வீட்டில் அனைவரும் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்க அவர்களின் பணியாட்கள் அவர்கள் அனைவரையும் மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
அனைவருக்கும் மருந்து கொடுக்கப்பட்டு இருக்க வேதவள்ளி மட்டும் விழித்து இருந்தார் அப்போது அங்கே வந்தான் அவர்களின் வீட்டு வேலைக்காரன் மெய்காப்பாளன் கடம்பன் அவனை பார்த்த வேதவள்ளி அதிர்ந்து போய் அவனை தனியே அழைத்துச் சென்றார்.
“ஏய் நீ எதுக்கு டா இங்கே வந்த” என்று கேட்க “அந்த மீனாட்சி கதையை முடிக்க சொன்னிங்க முடிச்சிட்டேன் அதுக்கு இன்னும் கூலி தரலையே” என்று கேட்க தன் கையில் இருந்து இரண்டு மூன்று தங்க வளையல்களை அவனிடம் கழட்டி கொடுத்தார் வேதவள்ளி “எவ்வளவு பெரிய வேலையை பார்த்து இருக்கேன் இவ்வளவு கம்மியா கூலி தரீங்களே மா” என்று கேட்க
“அய்யோ ஏன் டா நீ வேற என் புள்ளை புருசன் எல்லாம் உள்ளே உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்க அப்புறமா வா மொத்தமா தரேன்” என்று அவனை அனுப்பி வைத்தார்.
அவன் சென்றுவிட்டானா என்று பார்த்து விட்டு மீண்டும் உள்ளே சென்றார்.
அன்று மீனாட்சி தன் மாமா வீட்டில் இருந்து தப்பித்து செல்லும் வழியில் இந்த கடம்பன் குதிரை வண்டியுடன் வந்தவன் “ஜமீன்தார் அம்மா உங்களை அழைச்சிட்டு வர சொன்னங்க” என்று கூறி அவளை அழைத்து சென்றான்.
இருவரும் செல்லும் வழியில் குதிரைக்கு தண்ணீர் காட்ட வேண்டும் என்று கூறி மீனாட்சியை இறங்க கூறியவன் அவளை அந்த உயரமான அருவியில் இருந்து இடித்து தள்ளினான் இவை அனைத்தும் வேதவள்ளியின் திட்டம் தான்.
மீனாட்சி தண்ணீர் விழுந்து விட அவளை அவளது அலைகள் அடித்து சென்று ஒரு காட்டில் இருந்த
ஓடையில் தள்ளியது அவளும் ஒரு நாள் அந்த தண்ணீரில் ஓடையிலேயே மயங்கி கிடந்தாள்.
அப்போது அந்த வழியாக வந்தான் காளி காட்டில் வாழ்பவன் தாய் தந்தை யாருமற்றவன் அந்த காட்டையே நம்பி தேன் எடுத்து கிழங்கை பறித்து என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறான் திடக்காத்திரமானவன் உடல்வாகு உடையவன் அவ்வப்போது காட்டில் இருக்கும் மான் புலியை கூட வேட்டையாடுவான்.
ஓடையில் குளிப்பதற்க்காக தன் உடையை கலைந்தவன் அங்கே கரை ஒதுங்கி ஏதோ விலங்கு தான் கிடக்கிறது என்று அருகில் சென்றாள் ஏனெனில் மீனாட்சியின் முடி அவளை முழுதாக மறைத்து இருந்தது.
அந்த முடியை விலக்கி பார்த்தவன் ஒரு கணம் அதிர்ந்து நின்றான் அது ஒரு பெண் அவன் இதுவரை மனிதர்களையே இந்த காட்டில் பார்த்தது இல்லை வெளியே எப்போதாவது சந்தைக்கு செல்லும் போது பார்ப்பான் அவ்வளவே இங்கு எப்படி ஒரு பெண் என்று நினைத்தவன் அவள் மூக்கில் தொட்டு பார்க்க மூச்சு இருந்தது உடனே அவளை தூக்க முயற்சிக்க அவளின் தாவணி தண்ணீரில் எப்போதோ அடித்து சென்றிருக்க மேலாடை ஒரு மரக்கட்டை ஒன்றில் மாட்டி இருந்தது உடனே அதை பிடித்து இழுக்க அது முழுதாக டர் என்று கிழிந்து போனது.
அவளின் கீழேயும் ஆடை எதுவும் இல்லாமல் பிறந்த மேனியாக கிடந்தாள் உடல் வேறு சில்லிட்டு இருக்க காளி தன் குடிசைக்கு தூக்கி சென்றான் அவளின் உடலில் இருந்த ஈரத்தை துண்டால் துவட்டியவன் தன்னிடம் உள்ள ஒரு கம்பளியை அவளுக்கே போர்த்தினான்.
அவளின் கை மற்றும் கால்கள் சூடு வர தேய்த்தான் பக்கத்தில் நெருப்பு மூட்டி அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சூடு வர வைத்தான்.
ஒரு அரை மணி நேரத்துக்கு பின் அவள் கண்விழித்தாள் தான் எங்கு இருக்கிறோம் என்று மீனாட்சி சுற்றி பார்க்க தன் பக்கத்தில் இருந்த காளியை பார்த்து பயந்து எழுந்தாள் அவள் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் இருக்க மேலே கம்பளியை போர்த்தி கொண்டு “யாரு டா நீ”என்று பயத்துடனே கேட்டாள்.
Как выбрать источник бесперебойного питания, в обзоре.
Советы по выбору источников бесперебойного питания, читайте.
Почему стоит купить ИБП, узнайте.
Рекомендации по выбору источников бесперебойного питания, на нашем сайте.
Как выбрать идеальный источник бесперебойного питания, узнайте.
Покупка ИБП: на что обратить внимание, с нашими рекомендациями.
Источники бесперебойного питания: как выбрать лучший, в анализе.
Как работает источник бесперебойного питания, на нашем сайте.
Как продлить срок службы источника бесперебойного питания, здесь.
Инновации в области источников бесперебойного питания, в гиде.
Как правильно подключить ИБП, здесь.
Как выбрать ИБП для разных нужд, в этой статье.
Как выбрать оптимальный ИБП, читайте.
Все о различных типах источников бесперебойного питания, здесь.
Советы по монтажу источников бесперебойного питания, на сайте.
Обзор популярнейших источников бесперебойного питания, в нашем блоге.
Как продлить срок службы ИБП, в статье.
Рейтинг лучших ИБП для геймеров, в статье.
Что учесть при выборе источника бесперебойного питания, узнайте.
источники бесперебойного питания купить [url=http://www.istochniki-bespereboynogo-pitaniya.ru#источники-бесперебойного-питания-купить]http://www.istochniki-bespereboynogo-pitaniya.ru[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Bro ud podunga plss interesting a iku
Ud continue panunha pls