கண்ணை கவ்வாதே
கள்வா -15
அவசரமாக கீழே சென்றவர்களை தர்ம சங்கடமாக வரவேற்றனர் ஹாலில் அமர்ந்து இவர்களுக்காக காத்திருந்த பெரியவர்கள் தாத்தா மித்திரனை பார்த்து “சொல்லிட்டியா” என்று கேட்க அவன் கண்களாலேயே இல்லை என்றான்.
அப்பத்தா தர்ஷினியிடம் மெதுவாக வந்து “ஆத்தா உங்க பாட்டி தவறிட்டாங்க நம்ம எல்லோரும் உடனடியா உங்க வீட்டுக்கு போகணும் டா” என்று கூற அதைக் கேட்டவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க தொடங்கிவிட்டது.
இது நாள் வரை கூடவே இருந்த பாட்டி தற்போது இல்லை என்ற உண்மை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிர்சியில் நின்றவளை பிரியா வந்து அணைத்து சமாதானப்படுத்தி கூடவே கூட்டிக் கொண்டு சென்றாள்.
தாத்தா தனது மகனிடம் “கோபால் நான் போய் ஹாஸ்பிடலில் நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கும் முடிச்சுட்டு மாதவனுக்கு துணையாக இருந்து கூட்டிட்டு வரேன் நீங்க எல்லாரும் வீட்டுக்கு போங்க” என்றார்.
“இல்லப்பா நானும் உங்க கூட வரேன் நீங்க மட்டும் தனியா எப்படி போவீங்க மாதவனுக்கு துணையா நானும் இருந்துக்கிறேன்” என்றவரை
“அப்பா தாத்தா நீங்க ரெண்டு பேருமே நைட்டு டேப்லெட் எடுத்து இருக்கீங்க அதனால நீங்க முதல்ல எல்லாரையும் கூப்பிட்டுகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க நான் போய் அங்கிளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வரேன்” என்று முடித்தான் மித்திரன்.
அப்பத்தாவும் அதை ஆமோதிக்கும் விதமாக “ஆமாங்க நம்ம எல்லாரும் வீட்டுக்கு போயிடுவோம் மித்ரன் எல்லாத்தையும் முடிச்சிட்டு வருவான்”
“இல்ல விசா என்னால முடியாது அவ என்னோட தங்கச்சி நான் கடைசியாக அவ கூடவே இருக்கணும் ஆசைப்படுறேன்” என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்.
பின் ஒரு மனதாக கார்த்திக் அனைவரையும் கூட்டிக்கொண்டு தர்ஷினி வீட்டிற்கு செல்வதாகவும் மித்ரன் தனது தாத்தாவையும் அப்பாவையும் அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் செல்வதாக முடிவு எடுத்துக் கொண்டனர்.
ஹாஸ்பிடலுக்கு நேராக சென்றவர்கள் அங்கே மாதவன் பில் செட்டில் பண்ணிக் கொண்டு இருக்க அந்த வேலையை தன் கையில் எடுத்துக் கொண்டவன் அவரையும் தாத்தாவையும் ரூமுக்கு சென்று இருக்குமாறு கூறினான்.
எல்லா ஃபார்மாலிட்டிசையும் முடித்துக் கொண்டு மாதவனை ஆம்புலன்ஸ்ல் அனுப்பி வைத்த மித்ரன் தனது தாத்தாவை காரில் அழைத்துக் கொண்டு தர்ஷினியின் வீட்டுக்கு சென்ற போது பொழுது புலர்ந்து விட்டது.
தாத்தா தான் தனது தங்கையின் உடனடி இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மிகவும் சோர்ந்து போயிருந்தார் அவரை தனது அப்பத்தாவிடம் ஒப்படைத்து விட்டு மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை தனது பெரியப்பா உடன் சேர்ந்து செய்ய ஆரம்பித்து விட்டான்.
பின் ஒவ்வொருவராக வந்து இறுதி காரியத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர் தன்னையும் அறியாமல் அவனது கண்கள் தர்ஷினியை தேடின அவளோ அவனை சிறிதும் கண்டுக்காமல் ஒரு மூலையில் தனது தங்கையுடன் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
அவள் தன்னை கவனிக்கவில்லை என்றவுடன் சற்றென்று மூக்கின் மேல் ஒரு கோபம் வந்து ஒட்டிக்கொள்ள உடனடியாக வீட்டில் இருந்து வெளியே சென்றவன் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் நின்று கொண்டான்.
அதன் பிறகு அவன் வீட்டினுள் நுழையவே இல்லை
அங்கு தர்ஷினியும் திடீரென்று இரண்டு நாட்களில் நடந்த திருமணமும் நேற்று இரவு மித்ரனுடன் நடந்த உணர்வுகளின் தாக்கத்திலும் அதன் பின் பாட்டியின் மரணம் என்று அடுத்தடுத்த நடந்த நிகழ்வுகளில் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.
தனது அன்னையை மிகவும் தேடியவள் அவர் மிகவும் பரபரப்பாக அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததாள் தனது வீட்டிற்கு வந்ததே பெரும் ஆசுவாசத்தை கொடுத்தது தர்ஷினிக்கு பின் தனது தங்கையுடன் சேர்ந்து கொண்டாள்.
வீட்டிற்கு அனைவரும் வர ஆரம்பிக்கவும் கொஞ்சம் தெளிந்தவள் பின் மகாவிடம் கேட்டு காபி வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அனைத்து உறவினர்களையும் கவனிக்க ஆரம்பித்து விட்டாள்.
இப்படியே நிற்க நேரமில்லாமல் சென்று பாட்டியின் கடைசி நிமிடங்களும் வர தர்ஷினியால் தனது அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமல் தனது தந்தையின் தோளில் சாய்ந்து அழுது கொண்டே இருந்தாள்.
ஒரு மகனாக தனது தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகள் அவரை அழைக்கவும் தர்ஷினியை அருகில் இருந்த அவளது மாமியார் தனது பொறுப்பில் ஏற்றுக் கொள்ள அதை கண்ட மாதவன் மிகவும் திருப்தியுடன் தனது தாய்க்கு மகனாக கடைசி காரியங்களை கவனிக்க சென்று விட்டார்.
அதை பார்த்துக் கொண்டிருந்த மித்திரனுக்கு சிறிது பொறாமை வந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் தனது மனதிடமே அப்படி ஒன்றும் இல்லை என்று சாதித்து நின்று கொண்டான்.
பின் அனைத்து ஆக வேண்டிய காரியங்களும் சிறப்பாக நடக்க பாட்டியை நன்முறையில் காட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மித்ரன் தர்ஷினி கல்யாணத்தைப் பற்றி நெருங்கிய உறவுகள் தங்களுக்குள் கிசுகிசுத்தாலும் சில மாதங்களுக்கு முன்பே தர்ஷனியை பெண் கேட்டு வந்த அவளது அத்தை நேரடியாகவே மகாவிடம் வந்து “ என்ன நாங்க பொண்ணு கேட்டப்ப இப்பதான் செகண்ட் இயர் படிக்கிறா சின்ன பொண்ணு அப்படின்னு சொல்லி கல்யாணம் பண்ணி தர மாட்டேன்னு சொன்னீங்க இப்ப தர்ஷினிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க” என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
மகாவின் அருகிலேயே கமலாவும் நின்று கொண்டிருந்ததால் சற்று சங்கடமாக உணர்ந்த மகாவிற்கு அண்ணி முறையில் உள்ளவர்க்கு பதில் சொல்ல கடமைப்பட்டவராக
“ இல்ல அண்ணி அத்தை திடீரென்று சீரியஸ் ஆனதில் பயந்துட்டாங்க அப்பதான் அவங்களோட அண்ணனை பார்த்தாங்க அவங்களோட பிறந்த வீட்டு சொந்தம் விட்டுப் போக கூடாதுன்னு நம்ம தர்ஷியையும் உடனே அவங்க அண்ணன் பேரனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி எங்க கிட்ட சொல்லிட்டாங்க” என்றார்.
“ ஆமாம் மகா நல்லா இருந்தவங்க திடீர்னு இறந்து போவாங்கன்னு யாரு தான் எதிர்பார்த்தது அதனாலதான் அவங்களுக்கு தோனிஇருக்கு அதான் அவங்க பேத்தியோட கல்யாணத்தை பார்த்துட்டு இறந்து இருக்காங்க” என்று கூறினார்.
அருகில் இருந்த கமலாவை பார்த்துவிட்டு யார் என்று விசாரித்தவர் அவரிடம் “எங்க வீட்டுக்கு வரவேண்டிய தங்கத்தை கடவுள் உங்க வீட்டுக்கு தந்திருக்கிறார் நல்லபடியா பார்த்துக்கோங்க”என்று மனதில் இருந்ததை வெளிப்படையாக கூறி விடை பெற்றார்.
அதில் சிரித்துக் கொண்ட கமலாவும் யார் என்று மகாவிடம் விசாரிக்க அவரைப் பற்றி நல்லவிதமாகவும் அவரது வெளிப்படையான பேச்சை பற்றியும் இருவரும் பேசிக் கொண்டே மற்ற வேலைகளை கவனித்து கொண்டிருந்தனர்.
காட்டிற்கு சென்ற அனைத்து ஆண்களும் மீண்டும் வீட்டிற்கு வந்து குளித்து விட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
உடனடியாக ஆபீஸ் செல்ல வேண்டும் என்பதால் மித்ரன் அப்படியே தனது வீட்டிற்கு செல்வதாக கூறி சென்று விட்டான் இப்போது மித்திரனை எதிர்பார்ப்பது இவளது முறையாகிற்று பின் தன் தந்தையிடம் சுற்றி வளைத்து கேட்டதில் தான் மித்ரன் வீட்டிற்கு சென்று விட்டது தெரிந்தது.
ஹாலில் அமர்ந்திருந்த பெரியவர்கள் அனைவரும் முதலில் நாளை குறித்த சடங்குகளை பற்றி பேசியவர்கள் பின் பாட்டியின் 16ஆம் நாள் காரியத்தை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை லீவு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று அனைவராலும் பேசி முடிக்கப்பட்டது.
சேது தாத்தா விடைபெறும் முகமாக மாதவனின் கையை பற்றி அழுத்திவிட்டு எழுந்து கொள்ள அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களது குடும்பமும் விடைபெறும் நோக்கத்துடன் எழுந்து நின்றனர்.
தர்ஷியோ மனதினில் ‘ ஐயோ இப்ப நம்மளும் எழுந்திருச்சு அவங்க கூட கிளம்பி போகனுமா எனக்கு அங்க போய் அவன பாக்கவே பயமா இருக்கு அதுவும் நேத்து நைட்டு நடந்ததை நினைத்தால் பயந்து பயந்து வருதே’ என்று தன் போக்கில் எண்ணிக்கொண்டு இருந்தால்.
“ என்ன மாமா அதுக்குள்ள கிளம்புறீங்க இன்னைக்கு இங்க தங்கி நாளைக்கு காலையில போகலாம்” என்று மாதவன் கூற
“ இல்ல மாதவா இறப்புக்கு வந்துட்டு நைட்டு தங்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க அதுவும் இல்லாம நேத்து தான் கல்யாணம் ஆயிருக்கு இன்னைக்கு வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு காலையில எல்லாரும் வரோம்” என்று முடித்தார் அப்பத்தா.
மாதவனின் உறவு முறையில் உள்ள பெரியப்பா ஒருவர் “ஆமாடா மாதவா அவங்க சொல்றது தான் கரெக்ட் இப்ப கிளம்பி நாளைக்கு காலைல வந்துடுங்க” மாதவனிடம் தொடங்கி சேதுவிடம் விட முடித்தார்.
பின் தர்ஷனியை பற்றியும் அவர்களது கல்யாணத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தவர்கள் தர்ஷனியை பற்றி கேட்க தாத்தாவும் “தர்ஷினி இங்கேயே இருக்கட்டும் நம்ம பேசி முடிச்சபடி படிப்பு முடிச்சுட்டு ஒரு ரிசப்ஷன் வச்சு அழைத்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.
கார்த்திக் தனது தாத்தாவிடம் மித்ரன் இடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளலாம் என்று கூற அதெல்லாம் வேண்டாம் என்று அழுத்தமாக மறுத்துவிட்டார்.
தர்ஷினியோ ‘ ஐ ஜாலி இன்னும் ஒன்றரை வருஷத்துக்கு நம்ம இங்கே இருந்து என்ஜாய் பண்ணுவோம் ஓ கருப்பசாமி இப்பதான் எனக்கு நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க உங்களுக்கு பொங்கல் கன்ஃபார்ம்’ என்று மனதினுள் எண்ணிக் கொண்டாள்.
இப்படியே ஒன்று மாற்றி ஒன்றாக பேசிக் கொண்டிருந்தவர்களை அப்பத்தா தான் “ஏங்க சீக்கிரம் கிளம்புவோம் ரொம்ப நேரம் ஆகிட்டே இருக்கு” என்று கூறி தனது குடும்பத்துடன் விடைபெற்று சென்றார்.
வீட்டிற்கு சென்று இறங்கியவர்களை வரவேற்றது ஹாலில் அமர்ந்திருந்த மித்ரன்
தான் “ என்ன தாத்தா இவ்வளவு லேட் ஆயிடுச்சு” என்று அவன் வாய் கேட்க பார்வையோ பின்னே அவள் வருகிறாளா என்று பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளை காணவில்லை என்றவுடன் ஒரு நொடி கண்களில் தோன்றிய ஏமாற்றத்தையும் பின் தனது மனதை சமாதானப்படுத்தும் விதமாக ‘அவ வரலைன்னா நமக்கு நல்லது தான் இத்தனை நாளா நான் என்ன அவ கூட இருந்தேன்’ என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அவனை கவனிக்கும் சூழ்நிலையில் யாரும் இல்லாத காரணத்தினால் இரண்டு நாட்களாக கல்யாணத்திற்காக வேலை செய்தது பின் நேற்று இரவு பாட்டி இறந்ததில் இருந்து அனைவரும் துளி உறக்கம் இல்லாமல் இருந்ததில் அனைவரும் குட் நைட் கூறிவிட்டு அவர்கள் அறையில் அடைந்து விட்டனர்.
மித்ரனும் சிறிது நேரத்தில் தனது அறைக்கு சென்றவன் அங்கே நேற்று அரங்கேறிய நாடகத்திற்கு சான்றாக ரூமில் அவள் விட்டு சென்றிருந்த அடையாளங்களை பார்த்து கொண்டுடே படுத்து இருந்தவன் சற்று நேரத்தில் தன்னையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டான்.
நிற்க நேரமில்லாமல் ஒரு வாரமாக ஓடிக் கொண்டிருந்தவர்கள் இன்று 16ஆம் நாள் காரியத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு தங்களது இருப்பிடத்தை நோக்கி வந்தார்கள்.
அப்பொழுதும் தர்ஷினி வராமல் இருக்கவே மித்ரன் அனைவரையும் கேள்வியாக பார்த்தான் அப்பொழுதுதான் அனைவருக்கும் புரிந்தது இன்னும் விஷயம் மித்ரனுக்கு தெரியப்படுத்தவில்லை என்று மிகவும் பக்குவமாக மித்ரனிடம் தர்ஷினியின் படிப்பு முடிந்தவுடன் அழைத்துக் கொள்வதாக கல்யாணத்திற்கு முன்பு கூறியதை தெரியப்படுத்தினார்கள்.
அவர்கள் கூறியதை கேட்டவன் சற்று நேரம் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் நின்று விட்டான்
பின் மிகவும் கோபத்தில் மித்ரன் எடுத்து முடிவில் தற்போது குடும்பமே அதிர்ச்சியில் நின்று விட்டது.
நட்புகளே கதையை படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று ப்ளீஸ் கொஞ்சம் கமெண்டில் சொல்லுங்கள்.
தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழிகளே
super sis nexd epi podugga
கண்டிப்பாக இன்னைக்கே போட முயற்சி பன்றேன்
ok sis thank u so much
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sis epi koduga plz oru nalaiku 2 epi kedaiyatha plz sis periya ud poduga plz
Sister next ep ah seekrama podunga pls
Can’t wait
Sis daily ud koduga plz negalachum ud continues ah koduga. Sis
Sis epi koduga plz oru nalaiku 2 epi kedaiyatha plz sis periya ud poduga plz