கண்ணை கவ்வாதே
கள்வா -16
மித்ரன் தனது தாத்தா கூறிய தகவலில் கோபத்தின் உச்சத்தில் இருந்தான் அவர்கூறியதும் அவனது கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆகி விட்டது.
தர்ஷினி மீண்டும் திரும்பி வராததில் அவனுக்குள் ஏற்பட்ட ஏமாற்றமும் தன்னை கேட்காமல் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணமும் எந்த ஒரு பெண்ணின் வாசமும் படாமல் முனிவராக இத்தனை காலமும் இருந்தவன் தர்ஷியிடம் தனக்கு ஏற்பட்ட அந்த ஒரு நொடி ஈர்ப்பும்.
அதை அவளிடமே ஓரே நாளில் புதிதாக கண்ட பெண்மையில் முற்று பெறாத மோகமும் என்று அவனது உணர்வுகள் பெண்டுலம் போல நிலையில்லாமல் நின்றது. அனைவரும் தனது வாழ்க்கையை அவர்கள் கையில் எடுத்து கொள்வது போல் ஒரு எண்ணம் அவனுக்குள் தோன்றி கொண்டே இருந்தது.
சிறுவயதில் இருந்தே தனது முடிவுகளை தானே எடுத்து பழகியவன் படிப்பில் இருந்து இந்த இரண்டு வருடம் தொழில்களில் வரை அவன் முடிவுகள் அனைத்தும் சரியாகவே இருக்கும் என்ற நம்பிக்கையை தாத்தா, அப்பாக்கள் இருவருக்கும் தனது செயல்களின் மூலம் நிருபித்து காட்டியவன்.
அதனாலேயே கல்யாணத்திற்கு கட்டாயபடுத்தி சம்மதிக்க வைத்ததையும், தற்போது தன்னை கேட்காமல் தர்ஷினி பற்றிய முடிவை எடுத்ததும் அவனை கேட்காமல் முடிவு எடுத்ததில் அவனது ஈகோ அடிபட்டதாக நினைத்துக் கொண்டான்.
அடுத்தடுத்த நடந்த நிகழ்வுகளால் அவனது குடும்பத்தாரிடம் மிகுந்த கோபம் அடைந்த மித்ரன் அனைவரையும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டான்.
“ நான்தான் இப்போது கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன் நான் சொன்னதை கேட்காமல் உடனே எனக்கு கல்யாணத்தை பண்ணி வச்சீங்க இப்போ கல்யாணத்துக்கு முன்னாடி முடிவு எடுத்ததை இப்பதான் என்கிட்ட சொல்றீங்க
என்னதான் எல்லாரும் மனசுல முடிவு எடுத்து வச்சிருக்கீங்க அவள் புருஷன் நான் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உங்களுக்கு தோணவே இல்லையா என்று கோபத்தில் உறுமியவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவனது அறைக்கு சென்றுவிட்டான்.
அவன் சென்ற பிறகு அந்த ஹாலே புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவன் பதின் வயதின் இறுதியில் இருந்தே வளர வளர அனைவரிடமும் கொஞ்சம் தனித்து இருந்து வளர்ந்துவிட்டான் இப்போது அதுவே குடும்பத்தினரை தள்ளி நிறுத்திவிட்டது.
அவனது எண்ணபோக்கு புரியாமல் தாத்தாவும், அப்பாக்களும் முழித்துக்கொண்டு இருக்க அப்பத்தா யோசனையுடனே அமர்ந்து இருந்தார் அவரது அனுபவ அறிவு அவருக்கு மித்ரனை பத்தி சிறு சந்தேக விதை தூவத்துவங்கியது என்ன தான் செய்கிறான் பார்ப்போம் என்று அமைதியாகவே அமர்ந்து இருந்தார்.
மாடிக்கு சென்றவன் தனது மனநிலை தனக்கே புரியாமல் இருந்ததில் இதுவரை பெரியவர்களை எதிர்த்து பேசுகிறவன் இன்று தான் இவ்வளவு கோபமாக பேசியதை நினைத்து மிகுந்த ஆழ்மன உளைச்சலுக்கு ஆளனான்.
அதனால் எப்போதோ தனது நண்பர்களால் பிறந்தநாள் பரிசாக தனக்கு கிடைத்த காஸ்ட்லி மதுபானம் ஒன்றை தனது கபோர்ட்டில் வைத்திருந்தவன் சற்றென்று அதன் ஞாபகம் வரவும் இருந்த மன உளைச்சலுக்கு நேராக சென்ற அதை எடுத்து அப்படியே தனது வாயில் கவிழ்த்து விட்டான்.
அதிகம் மாடிக்கு வராத அப்பத்தான் இன்று தன் பேரன் மிகவும் கோபப்பட்டதில் சமாதானப்படுத்தும் விதமாக அவனது தளத்திற்கு வந்து அவனது அறையின் கதவில் கை வைக்க அது திறந்து கொண்டது சிறிது யோசனையுடன் உள்ளே சென்றவர் அங்கு அவன் இருக்கும் நிலைமையை கண்டு மிகவும் அதிர்ந்து போய் நின்று விட்டார்.
அவனுக்கு எதிரே மது பாட்டில்கள் இருக்க சேரில் அமர்ந்திருந்தவன் கையில் கிளாஸ் உடன் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
நேராக அவனின் அருகில் வந்தவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனை ஓங்கி ஒரு அரை கன்னத்தில் வைத்து விட்டார் இதை எதிர்பார்க்காதவன் கையில் இருந்த கிளாசை கீழே போட்டு உடைத்து விட்டு ஒரு நொடி அதிர்வில் நின்று விட்டான்.
அங்கே தனது அப்பத்தாவை இந்த நேரத்தில் அதுவும் அவனது அறையில் தன்னை இப்படி ஒரு நிலையில் காணவும் அவனது குற்ற உணர்ச்சி மிகவும் அதிகமாகி விட்டது.
“என்ன மித்ரா நான் உன்னை இப்படித்தான் வளர்த்தேனா எப்ப இருந்து உனக்கு இப்படி ஒரு பழக்கம் வந்துச்சு அதுவும் வீட்ல வச்சே குடிக்கிற அளவுக்கு இப்ப என்ன நடந்து போச்சு”கோபத்தில் தனது உடல் நடுங்க கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் கூறுவதை கேட்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக தலையை குனிந்து கொண்டு நின்று இருந்தவன் அப்பத்தாவின் உடம்பு நடங்குவதை கண்டதும் சற்றென்று அவரை கைப்பிடித்து அருகில் இருந்த சேரில் அமர வைத்தான்.
தன்னை சமாளித்துக் கொண்டவர் அவன் அமர வைக்கவும் அந்த சாரில் அமர்ந்து கொண்டு அவனையே பார்த்திருந்தார்.
தனது மன உளைச்சலும் கோபமும் குற்ற உணர்வும் கொஞ்சம் போதையும் சேர்ந்து கொள்ள மித்ரனை சிறு குழந்தையாக மாற்றி தனது அப்பத்தாவிடம் சரணடைய வைத்தது.
அவரின் அருகில் கீழே அமர்ந்தவன் தனது அப்பத்தாவின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான் சிறுவயதில் ஏதாவது கோபமோ அழுகையோ வந்தால் தனது மடியில் தலை சாய்ப்பவன் பல வருடங்கள் கழித்து இன்று தனது மடி சாய்ந்ததில் அவரது கோபம் பொங்கி வரும் பாலில் பட்ட தண்ணீர் போல் சற்று குறைந்தது அவனது தலையை மிருதுவாக வருடிவிட்டார்.
ஆனாலும் அவரால் தனது வளர்ப்பு இப்படி பொய்த்து போனதில் மிகுந்த வருத்தத்தில் இருந்தவர் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டார்.
அவரது மடியில் படுத்திருந்த மித்திரனே போதையில் பேச்சை ஆரம்பித்து தனது மனதில் உள்ள அனைத்தையும் அவரிடம் கொட்ட ஆரம்பித்தான் இல்லையென்றால் அவ்வளவு எளிதில் அவன் தன் மனதில் இருப்பதை கூறுபவன் கிடையாதே.
அதிலேயே அவர் அவன் பேசுவதை குறுக்க பேசாமல் அதை கேட்டுக் கொண்டிருந்தவர் எந்த இடத்தில் தாங்கள் தவறினோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தவர் அவனை சமாதானப்படுத்தி தங்களது பக்கத்தை எடுத்து கூற ஆரம்பித்தார்.
“ இங்க பாரு மித்ரா முதல் விஷயம் தர்ஷினி இப்போதுதான் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள் அவளும் சின்ன பொண்ணு தான் அவளால இப்போதைக்கு இந்த குடும்ப பாரத்தை தாங்க முடியாது
அவங்க பாட்டி கடைசியாக ஆசைப்பட்டனால தான் உனக்கு தர்ஷினியை கல்யாணம் பண்ணி வச்சாங்க இல்லைன்னா அவள் படிப்பு முடிந்ததற்கு அப்புறம்தான் அவளுக்கு கல்யாணம் என்று அனைவரிடமும் கூறிக் கொண்டிருந்தார்கள்
இந்த மாதிரி நிலைமையில் தர்ஷனையை மீண்டும் நமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வர முடியாது என்ற காரணத்தினால் தான் அவளை அவங்க அம்மா வீட்டிலேயே இருக்க சொல்லி தாத்தா கூறினார்.
உங்க ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணம் ரொம்ப அவசர கல்யாணம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க இன்னும் கொஞ்சம் நீங்க பக்குவப்படணும் அதுக்கு இந்த பிரிவு சரியா இருக்கும் என்று தாத்தா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தார்
அதற்குள் தர்ஷிணியும் தன்னோட படிப்பை முடிச்சுட்டு வந்துருவா அவளும் புரிந்து கொண்டு குடும்ப சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ள இந்த கால அவகாசம் தேவைப்படும்
நீ கேட்கலாம் ரெண்டு வருஷமா தொழில் பண்ணிட்டு இருக்கேன் எனக்கு அந்த பக்குவம் இல்லையா என்று தொழில் வேற குடும்பம் வேற அதை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்”
என்று அப்பத்தான் தனக்கு தெரிந்த வகையில் நீண்ட காரணங்களை கூறி மித்திரனை சமாதானப்படுத்தி விட்டு இந்த பழக்கம் இனிமே தொடரக்கூடாது என்று கண்டித்து விட்டு சென்றார்.
அவர் சென்றதும் தனக்கு எதிரில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச் சென்று குப்பையில் போட்டவன் தன்னை கொஞ்சம் ரெப்ரெஷ் பண்ணி கொண்டு படுக்கைக்கு சென்று படுத்தாலும் விட்டத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டே இருந்தான்..
தனது மனதிலும் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் ‘அப்பத்தா சொல்றதும் கரெக்டா தான் இருக்கு ஆனா ஏதோ ஒன்னும் நம்மளால அதை ஏற்றுக் கொள்ளவும் முடியல இந்த லட்சணத்துல அவங்க நம்ம தண்ணி அடிக்கிறத வேற பாத்துட்டாங்க அது நெனச்சா வேற நம்மளோட மனசு இன்னும் கில்டியா ஃபீல் பண்ணுது இதுக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு ஒன்னும் புரியலையே’ என்று தனது மனதில் புலம்பிக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினான் என்று தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.
காலை சூரியன் அவனது அறையில் அடர்ந்த திரை சிலைக்கு மத்தியில் லேசாக வந்து அவனது முகத்தில் பட்டு விழுந்தது அதில் உறக்கம் கலந்தவன் உடனடியாக எழ முடியாமல் நேற்று அடித்த போதையில் இன்னும் மிச்சம் இருந்ததில் படுக்கையை விட்டு எழாமல் உருண்டு கொண்டிருந்தான்.
கொஞ்சம் தலைவலியுடன் சேர்த்து நேற்று நடந்தது அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவிற்கு வரவும் தனது தலையில் தானே அடித்துக் கொண்டு வேகமாக எழுந்து அமர்ந்தான்.
‘என்ன பண்ணி வச்சிருக்க டா நீ அப்பத்தாகிட்ட எல்லாத்தையும் சொல்லி என்ன பத்தி என்ன நினைச்சு இருக்காங்க தெரியலையே ஐயோ நான் எப்படி இப்ப கீழ அவங்க முகத்தை பார்த்து பேசறது’ என்று புலம்பிக் கொண்டிருந்தவன் இறுதியாக ஒரு முடிவுடன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கிளம்பி அலுவலகத்திற்கு செல்லும் முன் கீழே தனது தாத்தாவையும் அப்பத்தாவையும் பார்க்க சென்றான்.
கீழே சென்ற அவர்களது ரூமை தட்டியவன் தனது தாத்தா சற்று இறுகிய முகத்துடன் வந்து கதவை திறக்கவும் அவனுக்கு தெரிந்து விட்டது நேற்று நடந்தது அனைத்தையும் அப்பத்தா அவரிடம் கூறிவிட்டார் என்று
சிறிது குற்ற உணர்வுடன் தலை குனிந்து நின்றவன் தனது தாத்தா “வா” என்று ஒற்றை சொல்லில் கூறவும் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை அவர்களே முதலில் ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக இருந்துக்கொண்டான்.
பின் தனது தாத்தா கோபத்தில் “ நீ இப்படி செய்வ என்று எதிர்பார்கலை மித்ரன் இது என்ன புது பழக்கம் அதுவும் வீட்டில் வைத்து உன்னோட அம்மா அப்பாக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டபடுவாங்க” என்று திட்ட ஆரம்பித்தவர் தன்னால் முடிந்த அளவுக்கு தனது கோபத்தை வார்த்தைகளில் காண்பித்தார்.
அதில் உடல் இறுகி போய் நின்றவன் அவர்களைப் பார்த்து “நான் இந்த வீட்டை விட்டு போறேன்” என்று கூற தாத்தா பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் அப்படியே பாதியிலேயே நின்று விட்டது.
தனது பேரனை நினைத்து அப்பத்தாவிற்கு கண்களில் கண்ணீர் வழிந்து கன்னத்தில் பட்டு தெரித்தது.
“ நாங்க ஒன்னுமே சொல்லிட கூடாதா மித்ரா அதற்காக வீட்டை விட்டு வெளியே போவியா எப்படி இப்படி போறேன்னு சொல்றதுக்கு உனக்கு மனசு வந்துச்சு” என்றார் சற்று நெகிழ்ந்த இறுகிய குறளில்.
“ அப்படி எல்லாம் இல்லை தாத்தா எனக்கு இப்ப உங்க எல்லாருடைய முகத்தையும் பார்க்கவும் ஒரே குற்ற உணர்வா இருக்கு அதனால எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும் நீங்களே எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க” என்று பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தான்.
“என்னால முடியாது உனக்கு வேணும்னா நீயே எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிக்க”
“சரி நானே எல்லாத்தையும் கூப்பிட்டு சொல்லிட்டு இந்த வீட்டை விட்டு போறேன்”
“அப்போ நீ இந்த வீட்டை விட்டு போறதில் உறுதியா இருக்க”
“ஆமா தாத்தா இதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை”என்று அழுத்தத்துடன் முடித்தான்.
அவரும் கடைசி முயற்சியாக “நீ வீட்டை விட்டு போறதா இருந்தா பிசினஸ் குள்ள இருந்து வெளில போயிடு இனி நீ ஆபீஸ் வரனும் அவசியமில்லை” என்றார்.
“என்னங்க நீங்க இப்படி சொல்லலாமா அவன்தான் சின்னப்பிள்ளை பிடிவாதமா இருக்கான் உங்களுக்கு என்ன அது எப்படி என் பேரனை நீங்க பிசினஸ் உள்ள வரக்கூடாதுன்னு சொல்லலாம்” என்ற சண்டைக்கு கிளம்பி விட்டார்.
“விசா நீ கொஞ்சம் அமைதியா இரு” என்று பாட்டியை அவர் வார்த்தையை மீற முடியாத அளவிற்கு அழுத்தமாக அடக்கி விட்டார்.
இதை கேட்டுக் கொண்டிருந்தவன் உடனடியாக ஹாலிற்கு சென்று அனைவரையும் அழைத்து தனது முடிவை
கூறினான் இதில் வீட்டு மக்கள்தான் என்ன நடந்தது என்று புரியாமல் குழப்பத்துடனும் அதிர்ச்சையுடனும் இருந்தனர்.
Super sis next epi plz
விரைவில்
Story romba nalla pohuthu Sister 😍❤️
நன்றி மா
sema super sis nxt epi podugga
சீக்கிரமா போடுறேன் மா
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌