2
வெட்டி கவுரவம் என்றால் தையல் நாயகி,தையல்நாயகி என்றால் வெட்டி கவுரவம் என்னும் அளவுக்கு அவரது வரட்டு கெளரவம் அங்கு முழு பிரசித்தம்…
பிறந்தது முதல் தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அதீத செல்லமாகவும் செல்வாக்காகவும் வளர்க்கப்பட்டவர்தான் தையல்நாயகி… அதே நிலையை தான் வாக்கப்பட்ட இடத்திலும் கடைப்பிடிக்க விளைவு மாமியார் நாத்தனார் உறவு முறைகளோடு விரிசல், பிளவு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்… ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ரகம் நாயகி அல்லவே…
விட்டது சனி என்று மொத்த வீட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார்…பிறகு சொல்வதற்கு என்ன??? அங்கு எல்லாமே தையல்நாயகி தர்பார் தான்… கணவன் பிள்ளைகள் என்று பாரபட்சமே பார்க்க மாட்டார்… அவர் சொல்லுக்கு கட்டுப்படாவிட்டால் வறுத்தெடுத்து விடுவார்…
செல்வாக்காகவும் செல்வீகமாகவும் வளைய வரும் தையல்நாயகிக்கு ஏனோ நடுத்தர வர்க்கத்தை கண்டால் தானாகவே ஒரு ஏளனம் வந்து குடிகொண்டு விடுகிறது…அப்படி தான் அவரது ஏளன பார்வையின் வட்டத்தில் உள்ளாகினர் பாலனும் வாசுகியும் நாயகியின் எதிர்வீட்டு குடும்பம்…
திருமணமான புதிதில் ஒன்றுக்கும் வக்கில்லை என்றாலும் அவ்விடம் சந்தோசத்திற்கு குறைவே வந்ததில்லை… இது போதாதா தையல் நாயகியின் வயிற்றெரிச்சல் எடுப்பதற்கு அதில் கணவன் மனைவியின் அந்நியோன்யம் வேறு இவருக்கு எரிகிற இடத்தில் மண்ணெண்ணெய் ஊற்றியது போல் காந்தியது… இவர் செஞ்ச வேலைக்கு புருஷன் பக்கத்துல போனாலே வல்லுனு விழுந்த புடுங்குறாரே அப்புறம் எங்கயிருந்து அந்நியோன்யம் வர… என்னவோ, அவர்கள் முன்னால் தான் குன்றி விட கூடாது அவர்களை விட தான் எல்லா விதத்திலும் ஒசந்தவள் என்பதை வெளிப்படுத்தும் வண்ணமே தன்னை டாம்பீகமாக காட்டிக் கொள்வதில் தான் அவருக்கு எத்தனை எத்தனை இன்பமோ…??
அப்படித்தான் அவர்களுக்கு பெண் பிள்ளை பிறந்ததும் ஆசையாக அவளுக்கு திலத்தம்மா என்று பெயர் வைத்தால்… இவர் வீம்புக்கு இரண்டாவது பெண் பிள்ளையைப் பெற்று மேனகை என பெயர் வைத்தார் என்றால் அது மிகையல்ல…(இது என்ன ரகம்ன்னே தெரியலையே ) இதில் தொடங்கி இப்படி எல்லாவற்றிலும் அவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து உயர்த்தி காட்டி பெருமை பீற்றிக் கொள்வது தான் அவருக்கு அலாதி பிரியமும் அத்தனை நிம்மதியும் கூட…
போட்டியும் பொறாமையும் அழிவுப் பாதைக்கு இட்டு செல்லும் என்பதை அநேக நேரங்களில் மனிதன் மறந்து விடுகிறான்… அதன் பின்வரும் விளைவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறான்…
விட்டால் போதும் என்று மேனகை தன்னறைக்கு ஓடிப்போய் குளியலறையில் புகுந்து கொண்டவள் வேக வேகமாக குளித்து முடித்து கிளம்பி தயாராகி கீழே வந்தவள் அடுத்த பஞ்சாயத்தை அன்னை கூட்டிடாமல் இருக்க, முன் ஜாக்கிரதையாக காலை உணவையும் மதிய உணவையும் டப்பாவில் இட்டுக்கொண்டு தையல்நாயகி பேசுவதற்கு வாய்ப்பே அளிக்காமல் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டாள்…
இருப்பினும் அந்த கோல மேட்டரை அவர் விடுவதாக இல்லை… “அடியே பள்ளிகூடத்துக்கு போய் பாடத்தை மட்டும் எடுக்காம கூடவே என்னமோ சொன்னியே அந்த விவரமான கோலத்தை எப்படி நல்லா போடணும் படிச்சிட்டுவா நாளைக்கு அந்த எதிர் வீட்டுக்காரி மூஞ்சில கரிய பூசணும்ல…!!” என மகளுக்கு மறக்காமல் அறிவுறுத்த…
‘ சப்பா இந்த கோலக் கூத்தை இவங்க விட மாட்டாங்க போலயே… ஏன்டா கோலம் போட்டோம் கதற வைக்காமல் விட மாட்டாங்க போலயே… வேற வழியே இல்ல இந்த பயாலஜி டீச்சரை புடிச்சு இருக்கிறதிலேயே ரொம்ப குழப்பமான அமீபாவை வரைஞ்சு வாங்கி வந்து நாளைக்கு கோலமா போட்டுற வேண்டியது தான்… பாக்குறவன் எல்லாம் இது ஒரு செல் உயிரியா இரு செல் உயிரியா அம்மாவை கேட்டு மண்டைய பிச்சுக்க விடணும்…இன்னா இம்சைப்பா வர வர இந்த அம்மாவோட ரவுசு தாங்க முடியல சாமி… என புலம்பிக்கொண்டே நாயகி சொன்னதை காதில் வாங்காததை போல் நழுவி ஓடி விட்டாள்…( கிரேட் எஸ்கேப் உஃப் முடியல )
தன் கை பையைத் தூக்கி கொண்டவள் செருப்பை மாட்டிக் கொண்டு வாசல் தாண்டி வீதியில் இறங்கும் அதே வேளை எதிர் வீட்டு திலோத்தமாவும் தயாராகி வர அவளை பார்த்தவள் திரும்பி தன் அன்னை அவளை தொடர்ந்து வருகிறார என்பதை உறுதி படுத்தி கொண்ட பின்பே சகஜமாக நடைக்கு வந்தவள் பின் திலோவை பார்த்து புன்னகை புரிய அவளும் இவளை பார்த்து புன்னகை புரிந்து இருவரும் பரஸ்பரம் சினேகத்தோடு பார்வையை பரிமாறி கொண்டனர்…
சொல்லாமல் காதல் மட்டும் தான் பூக்குமா இங்கு நட்பும் பூக்குமே…இரு பெண்களுக்கு இடையில் அதிக பேச்சு வார்த்தை இல்லாது போனாலும் அவர்கள் இருவர்க்குள்ளும் மெல்லிய புரிதல் ஓடி கொண்டு இருந்தது தான் மோனக் கவிதை…
ஆடு பகை குட்டி உறவா என்றால் அது அப்படி இல்லை…தாய்க்கும் தனக்கும் ஒன்றும் இல்லை என்று அவர்களோடு ஒட்டி உறவாடவும் இல்லை…தாய்க்கு பிடிக்காதவர்கள் தனக்கும் பிடிக்காது என வெட்டிக் கொள்ளும் ரகமும் இல்லை… அவர் தவறையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அதே சமையம் தாயையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை… அவர் செய்த தப்புக்கு இவள் மன்னிப்பு வேண்டும் விதமாக ஒரு கெஞ்சல் பார்வை அவளும் மன்னித்து விட்டதாக ஒரு சினேக புன்னகை இதை விட ஒரு அழகியல் நட்புக்குள் கிடைத்திடுமா…??? பேசினால் தான் பாசம் பிறக்குமா?? பந்தம் உருவாகுமா…??? இதோ பேசாமலும் ஒரு உறவு ஆழமாக அவர்கள் இருவருக்குள் மட்டும் தொடரும் நட்பு…
பள்ளிக்கூடம் செல்லும் வரை பாதையில் தனித்தனியாக இருவரும் ஒன்றாக இணைந்து நடந்து செல்வர்…வகுப்பு வந்ததும் தலையசைத்து புன்னகை புரிந்த வண்ணம் பிரிந்து அவரவர் இடம் செல்வர்… அதே நிலையை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுதும்…ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் எந்த வார்த்தை பரிமாற்றமும் இருக்காது என்பதுதான் ஆச்சரியம் கலந்த உண்மை…
இப்படி இருவருக்குள் இருக்கும் புரிதலுடன் கூடிய நட்பில் தையல்நாயகியால் விரிசல் வர கூடுமோ…?? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்… அப்போ நீ ஏதோ சூனியம் வச்சிட்ட அதான…??ஹிஹிஹி
வானமகன் நில மகளுக்கு இருள் உடை போர்த்தி உறங்க வைக்கும் இரவு பொழுது…
நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம் தனிமை
அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும்
கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே நானும்
மெழுகுவர்த்தியும் தனிமை
தனிமையோ கொடுமை
கொடுமையோ…
ஏய் ஏய் வீரத்தை அது என்ன ஆனா ஊனா நியூயார்க்குக்கு ஓடி போற நீ,வேற ஊரே கிடைக்கலையா உனக்கு…
ஏன் இல்லை இருக்கவே இருக்கு கனடா வாங்க போவோம்…நின்னா வேற ஊர கேப்பாங்க விடாத அமுக்கிடு…( பட்ஜெட் பிரச்சனையில் ரைட்டர் )
ஒட்டாவா ( கனடாவின் தலைநகரம்)நகரம்
உறங்கும் நேரம் தனிமை
அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும்
கரையில் நடந்தது…( என்ன சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி பாட்ட மாத்தி போட்டுக்கலாம் தப்பே இல்ல )
பனியில் உயிர் உறையும் வெள்ளை இரவில் கனடாவின் தலைநகரில் பிரதான சாலை வீதிகளில் ஒரு மூலையில் கட்டப்பட்டிருந்த வில்லா டைப் வீட்டில்…
விடுமுறை கால கொண்டாட்டத்திற்காக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த வீட்டின் ஒரு அறையில் குளிருக்காக கனைப்பு போடப்பட்டிருக்க…
விஸ்தாரமான அந்த அறையில் போடப்பட்டிருந்த கிங் சைஸ் பெட்டில் போர்வைக்கிடையில் இரு உடல்கள்… உடைகள் இன்றி சர்ப்பங்களாக பின்னிப்பிணைந்து குளிரையும் தங்கள் தணியாத தாபங்களால் தீ மூட்டி இரவை எரித்துக் கொண்டு இருந்தனர்…
கட் ஆஃப்டர் தி பிரேக்…ஹிஹி முக்கியமான நேரத்துல முடிச்சு வைக்கிறதும் ரொமான்ஸ்க்கு நடுவுல கட்டைய கொடுக்கறதும் தானப்பா ரைட்டர்களோட குல வழக்கம்…ஹிஹி…
கண்ணாயிரம் மக்கள் வெபேன்ஸ் தேடுறாங்க ஓடிடு…
👌👌👌👌👌👌👌👌
🙂