ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா -21

 

மித்ரன் கண்கள் விரிய தர்ஷணியை கண்டவன் தனது செயலை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் ஏனென்றால் அவளது உதடுகள் நன்றாக சிவந்து வீங்கி சிவப்பு நிறம் பூசிக்கொண்டு இருந்தது. 

 

 

அதைப் பார்த்தவன் தற்போது அவனது அம்மா கீழே அனைவரும் இருப்பதை ஞாபகப்படுத்த அவளது உதடுகளை பார்த்தாலே அனைவரும் கண்டுபிடித்து விடும் நிலையில் இருந்தது.

 

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தனக்குள் ‘ என்ன பண்ணி வச்சிருக்க மித்ரா நீ காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி அவளோட உதட்டை நல்லா சுவிங்கம் மாதிரி மென்னு வச்சிருக்க இதோட கீழே போனா நம்ம மானம் கப்பல் ஏறிடும்’ என்று எண்ணிக் கொண்டிருந்தவன் முகமும் வெட்கத்தில் சிவந்துவிட்டது.

 

 

 (ஆண்களின் வெட்கம் அழகுதான் அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் தற்போது அவன் மனைவி இல்லை நம்ம ஹீரோயின் அறிவு அப்படி)

 

 

அதைப் பார்த்தவள் “என்ன உங்க முகம் இப்படி சிவந்த இருக்கு ஸ்பிரே அடிச்சது ஏதாவது ஒத்துக்கலையா” என்று கேட்டு வைத்தாள்.

 

 

அவளைப் பார்த்துக்கொண்டு அருகில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளின் கண்ணாடியில் தன்னை பார்த்தவன் மீண்டும் தனது மனதினில் ‘ஐயோ இவ சொல்ற மாதிரி முகமெல்லாம் இப்படி அந்த கிஸ்ஸ நினைத்தாலே சிவக்குது நல்ல வேலை இது வெட்கத்துல சிவந்து இருக்கனு அவளுக்கு தெரியல இல்லன்னா நம்ம கெத்து என்ன ஆகுறது’ என்று நினைத்து கொண்டு இருந்தவன் .

 

 

அவள் அருகில் வந்து “உன்ன எங்க அம்மாவும் உங்க அம்மாவும் கீழ கூப்பிடுறாங்க” என்று சொல்ல “அய்யோ ஆமா இல்ல நான் மறந்தே போயிட்டேன்” என்று அப்படியே செல்ல போனவளை தடுத்து நிறுத்தியவன். 

 

 

அவளை அங்கிருந்த கண்ணாடியில் பார்க்குமாறு கூட்டிக் கொண்டு சென்று நிறுத்தியவன் கண்களால் அவளை கண்ணாடியில் பார்க்குமாறு கூறினான். 

 

 

அவளது முகத்தை கண்ணாடியில் பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டாள் ‘என்ன நம்மளோட லிப்ஸ் இந்த அளவுக்கு சிவந்து வீங்கி இருக்கு’ என்று பார்த்தவள்

 

 

அவனிடமே கேள்வியை கேட்க துவங்கி விட்டாள் “என்னங்க இப்படி ஆகிப்போச்சு இந்த லிப்ஸோட எப்படி நான் கீழே போறது பிரியா அக்கா எல்லாம் என்னை கலாய்ச்சிக்கிட்டே இருப்பாங்க” என்று கூறினாள்.

 

 

“ஏண்டி நான் தெரியாமத்தான் கேட்கிறேன் உனக்கு இந்த வெட்கம் எல்லாம் வராதா லிப்ஸை பார்த்தும் என்னை பார்த்து வெட்கப்படுவேன் பார்த்தா நீ பாட்டுக்கு அவங்க என்ன சொல்லுவாங்க இவங்க என்ன சொல்லுவாங்கன்னு பேசிக்கிட்டே போற” என்று தனது மனதில் உள்ளதை நேரடியாகவே கேட்டான். 

 

 

அதற்கு அவளும் வெளிப்படையாக “என்னங்க நீங்க இன்னும் 90ஸ் கிட்ஸ் ஆக யோசிக்கிறீங்க நீங்க ஒரு வாட்டி கொடுத்தால் நான் வெட்கப்படலாம் நான் சிக்கும்போதெல்லாம் என்னை ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கீங்க இதுல எங்க இருந்து எனக்கு வெட்கம் வரும்” என்று அவனையே கலாய்த்து தள்ளி விட்டாள்.

 

 

இப்பொழுது மித்திரனுக்கு தான் இவளிடம் ஏண்டா இப்படி கேட்டோம் என்று மானசிகமாக தன் தலையில் தானே அடித்துக் கொண்டான் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் தனது அழுத்தமான குரலில் “சரி இப்ப நீ கீழே போ உன்னை எல்லாரும் தேடுறாங்களாம்” என்றான்.

 

 

அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள் அங்கிருந்த பிரிட்ஜில் இருந்து ஐஸ் கியூபை எடுத்து வந்து கண்ணாடியை பார்த்து உதட்டில் வைத்து ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

 

 

சற்று நேரம் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அவளை கண்டுகொள்ளாமல் தனது கபோடிலிருந்து வேறு சட்டையை எடுத்துக்கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூம் இருக்கு சென்றான்.

 

 

சிறிது நேரத்தில் நீட்டாக கிளம்பி வந்தவன் அப்போதும் தர்ஷினி தனது உதடுகளில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடத்தை கொடுத்துக் கொண்டிருக்கவும் அதை கண்டவன் வீக்கம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கவும் அவளது புத்திசாலி தனத்தை மெச்சிக்கொண்டான் அவளது உதடுகளை கண்ணாடியில் பார்த்து கொஞ்சம் திருப்தி ஆனதுக்கு அப்புறம்தான் இருவரும் கிளம்பி கீழே சென்றனர்.

 

 

கீழே இறங்கி வந்தவர்களை கண்ட பிரியாவும் தர்ஷனாவும் அவர்களை கலாய்க்க குறும்பு சிரிப்புடன் காத்துக் கொண்டிருக்க தர்ஷனியும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு தனது அம்மாவையும் அத்தையையும் தேடிக்கொண்டு கிச்சனைக்குள் நுழைந்து விட்டாள்.

 

 

 மித்ரனோ எப்போதும் போல் இறுகிய முகத்துடன் சென்று ஹாலில் அமரவும் அவனைப் பார்த்த தர்ஷனா மீண்டும் ஒரு முறை அவனிடம் மன்னிப்பு கோரினாள்.

 

 

பரவாயில்லை என்று தலையை மட்டும் ஆட்டியவன் தனது அம்மாவை சத்தமாக கூப்பிட்டான்.

“ என்னடா எதுக்கு இப்படி கத்திக்கிட்டு இருக்க என்று கிச்சனிலிருந்து வெளியே வந்தார்” 

 

 

“ நான் காலேஜ் கிளம்பிட்டேன் எனக்கு டைம் ஆயிடுச்சு”என்று கூறிவிட்டு நிற்காமல் சென்று விட்டான். 

 

 

அவரோ தர்ஷினியை அழைத்து “இன்னைக்கு உங்களுக்கு லீவு இல்லையா எக்ஸாம் இரண்டு நாள் கழிச்சு தானே இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இருந்தா” என்றார்.

 

 

“அத்தை நாங்க எல்லாம் ஸ்டூடண்ட் அவரு வாத்தில அதனால் அவருக்கு இருக்கும்” என்றாள்.

 

 

பின் அனைத்து பெண்களும் கூட்டு சேர்ந்து கொண்டு வீட்டை ஒரு வழியாக்கி கொண்டிருந்தனர் நன்றாக சமைத்து தர்ஷினி விருப்பப்பட்ட நான்வெஜ் அனைத்தயும் பார்த்து பார்த்து சமைத்து கொடுத்தனர் கமலாவும் ராஜியும்.

 

 

தர்ஷணியை கையில் பிடிக்க முடியவில்லை பிரியாவிடமும் தர்ஷனாவிடமும் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தால் அவள் கூட சஷ்டியும் சேர்ந்து கொள்ள வீடு ரணகளப்பட்டது.

 

அனைத்தையும் அப்பத்தா ரசித்துக் கொண்டிருந்தார் ரொம்ப நாட்கள் கழித்து வீட்டுப் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக அவர்களது இன்றைய நாளை கொண்டாடி தீர்த்து விட்டனர்.

 

 

மாதவனுக்கும் மற்ற ஆண்களுக்கும் இங்கிருந்தே உணவுகள் அவரவர் ஆபிசை நோக்கி சென்று விட்டது அதனால் எந்த கவலையும் இல்லாமல் இருந்தார்கள் என்ன ஒரே குறை என்றால் மித்ரன் மட்டும் சாப்பிடாமலேயே சென்று விட்டான். 

 

 

தர்ஷினியும் தர்ஷனாவும் சேர்ந்து செய்த கலாட்டாவில் பிரியாவையும் சேர்த்துக்கொள்ள அவளும் தனது இரு அத்தைகளையும் மகாவையும் சேர்த்து வைத்து விளையாட ஆரம்பித்தார்கள் .

 

 

பின் அப்பத்தாவையும் சேர்த்துக்கொண்டு பாட்டுக்கு பாட்டு தாயக்கட்டை, பல்லாங்குழி, பரமபதம் என்று பழைய விளையாட்டையும் சேர்ந்து ரவுண்டு கட்டி விளையாட்டி விட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு டிவியில் பேய் படம் போட்டு அனைவரும் பயந்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

 

 

இப்படியே அன்றைய பொழுது செல்ல மகா விற்கு தான் மிகவும் வருத்தமாக இருந்தது அதை அப்பத்தாவிடம் அவர் கூறிக் கொண்டிருந்தார்.

 

 

“அம்மா தர்ஷினி செல்லம்மாவே வளர்ந்துட்டா இன்னும் ஒன்னு கூட கற்றுக்கொள்ளவில்லை எப்படி இந்த வீட்ல தனியா சமாளிக்க போறான்னு தெரியல சமையல் ரொம்ப மோசமா இருக்கும் விளையாட்டுத்தனமும் ஜாஸ்தியா இருக்கு மாப்பிள்ளை எப்படி அவளை வைத்து சமாளிக்க போறார் என்று தெரியவில்லை” என்று வருத்தமாக பேசிக் கொண்டிருந்தார். 

 

 

அவர்களது மருமகளை பற்றி குறை கூறவும் ராஜியம் கமலாவும் சேர்ந்து சண்டைக்கு வந்து விட்டனர். “என்ன மகா என் மருமகளை பற்றி குறையா சொல்லிக்கிட்டு இருக்க இப்ப என்ன படிக்கிற பொண்ணு தானே படிப்ப முடிச்சுட்டு அவள் எல்லாத்தையும் பக்குவமா கத்துக்க போறா அதுவரைக்கும் மித்ரன் பார்த்துக்குவான் நீ கவலைப்படாதே சாப்பாடை பத்தியும் கவலைப்படாத அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறோம்” என்றார்.

 

 

“ நமக்கு ரொம்ப வருஷமா மேல் வேளை பார்த்துகிட்டு இருக்க செல்வி நல்லா சமைக்கவும் செய்வா நம்பிக்கையான ஆளும் கூட அவளையே இங்க வந்து சமைக்க சொல்லி மித்த வீட்டு வேலைகளையும் பார்க்க சொல்லிட்டேன்.

 

 

 நாளிலிருந்து வந்துருவா காலையிலேயே வந்து சமைச்சு வச்சுட்டு போக சொல்லிட்டேன் சாயங்காலமும் ஒரு முறை வந்து சமைச்சு மத்த வேலைகளை பார்த்து வச்சிட்டு போவா நீ கவலைபடாதே” என்றனர்.

 

 

இப்படியே பேசிக்கொண்டு இரவு 7 மணி வரை அனைவரும் மித்திரனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தார்கள் அவன் வரும் பாட்டை காணவில்லை என்றவுடன் அனைவரும் தர்ஷினியிடம் சொல்லிக் கொண்டு கவனமாக இருக்குமாறு கூறி வீட்டிற்கு கிளம்பி சென்றனர். 

 

 

மகாவும் தனது மகளை தனியாக கூப்பிட்டு “ அம்மு தனியா இருக்கடா பாத்து கவனமா இரு விளையாட்டுத்தனமா இருக்க கூடாது வீட்டை நல்லா பூட்டிக்கோ மாப்பிள வந்து பெல் அடிச்சா டோர் லென்ஸ் வழியா பார்த்துட்டு கதவ தொற நல்லா சாப்பிடு அம்மாக்கு டெய்லி போன் பண்ணு சரியா காலேஜுக்கு கட் பண்ணாம போகணும் இந்த வருஷத்தை கண்டிப்பாக அரியர் இல்லாம முடிச்சிடனும் சரியா” என்று கூறி கண்கலங்கி நின்று விட்டார்.

 

 

 தர்ஷினியும் தனது அம்மாவுடன் சேர்ந்து அழுக ஆரம்பிக்க கூடவே வந்து தர்ஷனாவும் அணைத்துக்கொண்டு அழுக ஆரம்பித்து விட்டால் பின் மகா தான் தன் மகள்கள் இருவரையும் தேற்றும் படியும் ஆகிவிட்டது.

 

 

அவர்களை பார்த்து அப்பத்தா தான் மகாவிடம் பார்த்துக் கொள்ளலாம் ஒன்னும் கவலைப்படாதே என்று தேற்றி தர்ஷினிக்கு ஆறுதல் கூறி மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

 

 

அவர்கள் சென்றவுடன் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே வந்தவள் தனது ரூமில் நுழைந்து ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள் தனது குடும்பத்தை நினைத்து.

 

 

 தனது போன் அடிக்கையில்தான் நினைவிற்கு வந்தவள் அதில் மகா கூப்பிட்டுக் கொண்டிருக்கவும் சற்று நேரம் அதை பார்த்தவள் பின் போன் கட் ஆகவும் வாஷ்ரூம் சென்று முகத்தை நன்றாக அடித்து கழுவி தன்னைக் கொஞ்சம் சரி செய்து கொண்டு வந்து தனது அன்னையை மீண்டும் அழைத்தாள்.

 

 

தான் வீடு வந்து சேர்ந்து விட்டதாகவும் கவனமாக இருக்குமாறு மறுபடியும் ஒரு முறை கூறியவர் அப்பா பேச வேண்டுமாம் என்று கூறவும் மீண்டும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது உதடை கடித்து தனது அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தவள் தான் அழுதால் தான் குடும்பமும் கலங்குவார்கள் என்று உணர்ந்து தண்ணீர் குடித்து தொண்டையை சரி செய்து கொண்டாள்.

 

“ அப்பா” என்று அழைக்கும் போதே அந்த பக்கம் மாதவன் தடுமாறுவது தெரிந்தது அதற்குள் அம்மா அப்பாவை சமாதானப்படுத்துவதும் போன் வழியாக தர்ஷினியை அடைந்ததும் அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டாள்.

 

 

பின் மகாவே அவளுக்கு மீண்டும் அழைத்து அவளை சகஜமாக்க அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள் இப்படியே ஒரு மணி நேரம் செல்லவும் மகாவே “தர்ஷினி கொஞ்ச நேரம் புக் எடுத்து படி” என்று கூறி அவரே போனை வைத்து விட்டு சென்றார்.

 

 

அவளும் தனது மனதை ஒருநிலைப்படுத்த புக்கை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள் எவ்வளவு நேரம் படித்துக் கொண்டு இருந்தால் என்று தெரியவில்லை அப்படியே முகத்தை தனது புக்கில் மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள். 

 

 

இரவு 10 மணி போல் வீடு வந்த மித்ரன் வீடு மிகவும் அமைதியாக இருப்பதை கண்டவன் தர்ஷனின் ரூமிற்குள் சென்று பார்த்தான் அங்கு அவள் பு

க்கை மூடிக் கொண்டு தூங்குவதை கண்டவன் இது திருந்தாத கேஸ் என்று தன் தலையில் அடித்துக் கொண்டு சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top