ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா – 22

 

காலையில் தர்ஷினி தனது ரூமில் இருந்து காலேஜிற்கு கிளம்பி வெளியே வந்தவளை வீட்டின் கிச்சனில் இருந்து காபி மனம் வந்தது தன்னையும் அறியாமல் அவளது கால்கள் காபியின் நறுமணத்தை நோக்கி சென்றது. 

 

 

அங்கே கிச்சனில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்றவள் “நீங்க யாரு “ என்று கேட்க “என்ன பாப்பா எப்படி இருக்க என்ன பாத்து யாருன்னு கேட்டுட்ட உங்க அத்தை சொல்லலையா நான் தான் செல்வி” என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.

 

 

அவரைப் பார்த்து தர்ஷினி மலைத்து நின்று விட்டாள் ‘ஐயப்பா நாமளே ஒரு வார்த்தைக்கு நூறு வார்த்தை பேசுவோம் இவங்க நம்மக்கே டஃப் கொடுத்து 200 வார்த்தை பேசுவாங்க போல இருக்கு அத்தை சரியான ஆள தான் நமக்கு பிடிச்சு கொடுத்திருக்காங்க இந்த வீட்ல எப்படி தனியா இருக்கிறது என்று யோசித்துக்கொண்டே இருந்தேன் இவங்க இருந்தா என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சமே இருக்காது போல இருக்கு’ என்று அவரைப் பார்த்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள். 

 

 

அதைப் பார்த்தவர் “என்ன பாப்பா நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கே என்ன வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்க “ என்று கேட்க 

 

 

“உங்களுக்கு என்ன செல்விமா ஐஸ்வர்யா ராய்கே டஃப் கொடுப்பிங்க போல” என்று கூற அவரோ மிகவும் வெள்ளந்தியாக “என்ன கூட ஊருல அப்படி தான் பாப்பா சொல்லுவாங்க” என்றார்.

 

 

“ஐயோ மறந்துட்டேன் பாரு இன்னைக்கு உனக்கு காலேஜ் இருக்குல்ல காபி சாப்பிடுறியா பாப்பா” என்று கேட்க “இல்ல செல்வி அம்மா நீங்க முதல்ல டிபன் கொடுத்துடுங்க நான் சாப்பிட்டுட்டு காபி சாப்பிடுறேன் எப்போதுமே காலேஜ் போகும்போது நான் இப்படித்தான் சாப்பிடுவேன்” என்று தனது பழக்கவழக்கத்தை கூறினாள்.

 

இவர்கள் இங்கே இப்படி பேசிக் கொண்டிருக்க மாடியில் இருந்து இறங்கி வந்த மித்ரன் “வாங்க செல்வி அக்கா எப்ப வந்தீங்க என்று கேட்க “நான் காலையிலேயே வந்துட்டேன் தம்பி பெரியம்மா தான் வீட்டு சாவி உன்கிட்ட ஒன்னு இருக்கட்டும்னு சொல்லி கொடுத்து விட்டாங்க அதை வச்சு வீட்டை திறந்து வந்துட்டேன்” என்றார்.

 

 

“ஓ அப்ப சரி செல்வி அக்கா என்ன பண்ணனும்னு உங்ககிட்ட சொல்லி தானே அனுப்பிச்சி இருப்பாங்க நான் கிளம்புறேன் நீங்க முடிச்சிட்டு கிளம்புங்க” என்றான்.

 

 

“தம்பி டிபன் ரெடியா இருக்கு உங்களுக்கு புடிச்ச ஆப்பம் தேங்காய்ப்பாலும் செஞ்சிருக்கேன் ஒரு வாய் சாப்பிட்டு போங்க தம்பி” என்று கூற “ சரி” என்று அங்கே உள்ள டைனிங் டேபிளில் அமர்ந்தான். 

 

 

அதுவரை இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தர்ஷினியும் வேகமாக வந்து டைனிங் டேபிளில் அமர செல்வி இருவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்.

 

 

“என்ன இன்னைக்கு எக்ஸாமுக்கு படிச்சிட்டியா” என்று மித்ரன் சாதாரணமாக கேட்க அவளும் “நான் சூப்பரா படிச்சிட்டேன் என்ன கேள்வி கேட்டாலும் எனக்கு தெரிஞ்சிடும் அந்த அளவுக்கு பிரிப்பேர் பண்ணி வச்சிருக்கேன்” என்று மனதில் பிட்டை நினைத்துக் கொண்டே கூறினாள்.

 

 

அவனோ கிண்டலுடன் “ ஓ நேத்து நீ படிச்ச நான் தான் பார்த்தேனே எப்படி கஷ்டப்பட்டு படிச்சிட்டு இருந்த” என்று கூற சம்பந்தமே இல்லாமல் “ நீங்க எப்படி ஒரு பொண்ணு தனியா இருக்க ரூமுக்குள்ள வரலாம் இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் உங்க வீட்ல தங்கியிருந்தா இப்படி வருவீங்களா” என்று இடம் பொருள் பார்க்காமல் கூறி விட அங்கே நின்று கொண்டிருந்த செல்வி இதை கேட்டு அதிர்ச்சியில் நின்று விட்டார். 

 

தான் உலரிய பின்பே தான் பேசிய வார்த்தைகளை யோசித்தவள் வாயில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் மித்ரன் மனசிகமாக தலையில் அடித்துக் கொண்டான். 

 

 

பின்ன அவளே பாவமாக ஒரு பார்வை பார்க்க அவனும் கண்களில் கனலை கக்கியவன் பின் சமாளிக்கும் பொருட்டு “ நீ எக்ஸாமுக்கு படிக்கிறேன் தானே தனி ரூம்ல போய் படிச்சுட்டு இருந்த எக்ஸாம் முடிச்சிட்டு நம்ம ரூம்ல தான் இருப்ப இதுல என்ன இருக்கு” என்று சமாளித்தான்.

 

 

அதைக் கேட்டவுடன் தான் செல்வியின் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது அதை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் அவரை அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டனர். 

 

 

 

தர்ஷினியின் காதின் அருகில் சென்றவன் “இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாது ஒழுங்கா உன் வாயை மூடிகிட்டு சாப்பிட்டுட்டு காலேஜுக்கு கெளம்பு ஏதாவது உளறிக்கொண்டு இருந்த அப்புறம் என்னோட ட்ரீட்மெண்ட் வேற மாதிரி இருக்கும்” என்று விரட்டினான்.

 

 

அதை செல்வி தப்பாக புரிந்து கொண்டு புதுசா கல்யாணம் ஆனவங்க ஏதும் அவங்களுக்குள்ள எல்லாம் ரகசியம் பேசுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து கிச்சனுக்குள் சென்று நின்று கொண்டார்.

 

பின் சாப்பிட்டு முடித்த இருவரிடமும் செல்வி வந்து லஞ்ச் பாக்ஸ் தர அதை வாங்கி தர்ஷினி தனது பேக்கில் போட்டுக் கொண்டாள் ஆனால் மித்திரனும் “என்ன செல்வி அக்கா நான் என்ன ஸ்கூலுக்குகா போறேன் எனக்கு லஞ்ச் பாக்ஸ் எல்லாம் கட்டி தந்துட்டு இருக்கீங்க” என்ற கடிந்து கொண்டான்.

 

 

“இல்ல தம்பி சின்னம்மா சொல்லித்தான் அனுப்பிச்சாங்க நீங்க வெளில சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குறீங்க என்று அதுதான் உங்களுக்கும் காலேஜ் போறதுக்கு லஞ்ச் கட்டிக் கொடுக்கிறேன் கோச்சுக்காம வாங்கிக்கோங்க தம்பி” என்று தயங்கி கொண்டே கூறினார்.

 

 

அதைப் பார்த்தவன் ஒன்றும் கூறாமல் தனது லஞ்ச் பாக்ஸை வாங்கி லேப்டாப் பேக்கில் வைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் அதுவரையும் தர்ஷினி இவர்களை பார்த்துக் கொண்டிருக்க “ என்ன பாப்பா நீ இன்னும் கிளம்பலையா “ என்று செல்வி உலுக்கி அனுப்பி வைத்தார்.

 

 

கீழே சென்ற மித்ரன் தர்ஷினிக்காக காரினுள் காத்துக் கொண்டிருந்தான் இவள் ஆடி அசைந்து வருவதை பார்த்தவன் “பார்த்து பார்த்து மெதுவா வா எதுக்கு இவ்வளவு வேகமா வர சீக்கிரமா எக்ஸாம் எழுதுறதுக்கா அடிச்சேனா பாரு சீக்கிரம் வாடி எவ்வளவு நேரம் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கது” எண்ணெய் இல்லாமலேயே பொரிந்து தள்ளினான். 

 

 

அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் வந்தவள் அங்கிருந்த அவனது காரில் ஜம்பமாக ஏறி அமர்ந்து கொண்டாள் அதைக் கண்டவன் பற்களை நரநரவென்று கடித்துக் கொண்டே வந்து காரில் எடுத்தவுடனே வேகம் எடுத்து ஓட்ட ஆரம்பித்தான். 

 

 

“அத்தான் ரொம்ப ஸ்பீடா ஓட்டாதீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கும்” என்ற அவ கூற இன்னும் வேகமாக ஓட்ட ஆரம்பித்தான் அதோடு வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தாள் காலேஜ் வரவும் கீழே இறங்கியவளை தடுத்து நிறுத்தியவன். 

 

 

“இன்னைக்கு மட்டும் தான் உன்னை காலேஜுக்கு கூட்டிட்டு போவன் நீ அடுத்து ஸ்கூட்டி எடுத்துட்டு போயிட்டு வந்துரு என்னால எல்லாம் உன்ன கூட்டிட்டு போய் கூட்டிட்டு வர முடியாது” என்று அழுத்தமாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.

 

 

அவனை திட்டிக்கொண்டே கிரவுண்டில் நடந்து கொண்டிருந்தவளை பின்னாடி இருந்து ஒரு கரம் அவளது கண்களை பொத்தியது அதன் கைகளை தடவி பார்த்தவள் கண்டுகொண்டால் அது தனது தோழி சிந்து என்று “ எரும மாடு கையை எடுத்து தொலடி எக்ஸாமுக்கு போற நேரத்துல இப்படி கண்ணை பொத்திகிட்டு இருக்க” என்று திட்ட “அவ்ளோ கண்களை விரித்துக்கொண்டு எப்படி என்னை இவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்ச” என்று ஆச்சரியப்பட்டாள்.

 

 

“நீதான் எக்ஸாம்னா கையில நாலு மந்திரிச்ச கயிறோடதானே வருவ அத வச்சு தான் கண்டுபிடிச்சேன்”

என்று அசிங்க படுத்தினாள்.

 

 

“என் ஃப்ரெண்டுக்கு என்ன ஒரு புத்திசாலித்தனம் அதோட சேர்த்து இன்னைக்கு கொஞ்சம் உனக்கு மினுமினுப்பு ஜாஸ்தியா இருக்கே என்ன விஷயம்” என்று சந்தேக கண்ணோடு கேட்டாள். 

 

 

அதில் பக்கென்று ஒரு நிமிடம் தர்ஷினி பயந்தாலும் பின் சமாளித்துக் கொண்டு அதெல்லாம் ஒன்னும் இல்லடி “சும்மா இன்னைக்கு எக்ஸ்ட்ரா ஒரு கோட்டிங் மேக்கப் ஜாஸ்தியா இருக்கு வேற ஒன்னும் இல்லை என்று பேசிக்கொண்டு இருக்க மற்ற அனைவரும் வந்து இவர்களுடன் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்கள். 

 

 

பின் கார்த்திகா முன்னாடியே சென்று எக்ஸாம் ஹால் எங்கே இருக்கு என்று பார்த்துவிட்டு வரவும் மணி அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

 

 

அவர்கள் காலேஜில் எப்போதும் சுடிதாரில் கிளோஸ் நெக் அணிய மட்டுமே அனுமதி அதனால் தர்ஷினியிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவர்களின் கண்களுக்கு பெரிதாக தெரியவில்லை அதோடு அனைவரும் எக்ஸாம் பரபரப்பில் வேற இருந்து கொண்டிருந்தனர். 

 

 

தூரத்தில் இருந்து தர்ஷினியை பார்த்துக் கொண்டிருந்த வருணிற்கு மட்டும் அவளிடம் ஏதோ மாற்றம் என்று மட்டுமே புரிந்தது ஆனால் அது எதனால் என்று ஒன்றும் புரியவில்லை அதனால் அவனும் எப்போதும் போல தள்ளி இருந்தே அவளை ரசித்துக் கொண்டிருந்தான். 

 

 

அவன் பார்ப்பதை அப்போதுதான் அங்கு வந்து கொண்டிருந்த மித்திரனும் கண்டான் எதை இந்த பையன் இவ்வளவு சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆச்சரியமாக அவனது பார்வையை பின் தொடர்ந்தவன் அது தர்ஷினி இடம் சென்று முடிவதை கண்டவன் ஏனென்று தெரியாமல் எரிச்சல் உண்டானது.

 

 

அனைவரும் தேர்வு முடிந்து வெளிய வருகையில் இன்றாவது தர்ஷனிடம் தனது காதலை கூறிவிட வேண்டும் என்ற முனைப்பில் அவளுக்கு முன்பே எக்ஸாமை அவசரமாக எழுதி விட்டு வந்த வருண் அவளது கிளாஸ் வெளியில் நின்றுகொண்டிருந்தான்.

 

 

தனது தோழிகளுடன் பேசிக்கொண்டே வெளியில் வந்தவள் அங்கு நின்ற வருணை பார்க்கவும் ‘ஆனால் இவன் எங்கெங்க இங்கு நின்று கொண்டிருக்கிறான்’ என்று வாய்விட்டு கூறிவிட அதைப் பார்த்து அவளது தோழிகளும் அவனை பார்த்து விட்டு தங்களது குழுவில் அவனையும் இணைத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டனர்.

 

 

இன்றும் அவனால் அவனது காதலை தெரிவிக்க முடியாமலேயே சென்றது திடீரென்று தர்ஷினியும் இன்று வீட்டிற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று விடைபெற்று சென்றுவிட்டாள்.

 

 

சாயங்காலம் வீட்டில் அணியும் உடையில் எக்ஸாமுக்கு படிக்கிறேன் என்ற பெயரில் மொபைலில் கொரியன் டிராமா பார்த்துக் கொண்டிருந்தாள் அதில் வந்த முத்தக் காட்சியில் தன்னை மீறிய ஆர்வத்துடன் அதில் தன்னையும் மித்திரனையும் இணைத்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

மாலை கொஞ்சம் டயர்டாக வந்தவன் தனது கையில் உள்ள சாவியை வைத்து வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் இவள் புத்தகங்களை பரப்பி வைத்துக் கொண்டு மொபைலில் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவன்.

 

 

அப்படி எதை இவள் அவ்வளவு சுவாரசியமாக பார்க்கிறாள் என்று அவளது பின் இருந்து மொபைலை எட்டிப் பார்த்தவன் அதில் வந்த முத்தக் காட்சியை கண்டு திகைத்து நின்று விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top