கண்ணை கவ்வாதே கள்வா -25
ஒரு மாதம் எப்படி போனது என்று கேட்டாள் தர்ஷினியிடம் பதில் இல்லை ஏனென்றால் மித்ரன் அந்த அளவிற்கு படிப்பிலும் தாம்பத்தியத்திலும் அவளை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கே சில சமயம் சந்தேகம் கூட வரும் எங்கிருந்து இவன் இவ்வளவு எனர்ஜியாக இருக்கிறான் என்று அந்த அளவிற்கு நைட்டில் போட்டு பெண்டு எடுப்பவன் மறுநாள் காலையில் டான் என்று ஆறு மணிக்கு எழுந்து தனது ஒர்க் அவுட்டு ஸ்டார்ட் பண்ணி விடுவான்.
மிஸ்டர் பர்ஃபெக்ட் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு இப்போது தர்ஷினி தனது புருஷனை தான் கை காட்டுவாள் அந்த அளவிற்கு அனைத்திலும் பர்ஃபெக்ட்டாக இருப்பான்.
ஹனிமூனிலும் புதிதாக கற்கும் குழந்தை போல் மெல்ல மெல்ல கற்றுக்கொண்டாலும் புதிது புதிதாக வித்தியாசமான முறைகளை முயற்சி செய்வதில் அவனுக்கு அலாதியான இன்பம்
அந்த மாதிரி நேரத்தில் தர்ஷினி தான் படாத பாடு பட்டு போவாள்.
ஆனால் அதிலும் தர்ஷினியின் விருப்பத்தையும் அவளின் சௌகரியத்தையும் பார்த்து தான் அவனின் அணுகுமுறையே இருக்கும் அந்த அளவிற்கு அவளின் மேல் ஆசையை கொட்டுபவன் தூரம் ஆகும் நாட்களிள் அவனுக்கு தெரிந்த வகையில் அவளை பார்த்துக் கொள்வான்.
அந்த அளவிற்கு இருவரும் ஒருமித்து வாழ ஆரம்பித்துவிட்டார்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த தர்ஷினி ஒரு நாள் அவர்களுக்குள் எல்லாம் முடிந்த இரவில் அவனை கட்டிக் கொண்டு மார்பின் முடியில் விரல்களை அளையவிட்டு விளையாண்டு கொண்டு இருக்கும் போது தனக்குள் எப்போதும் தோன்றும் கேள்வியை அன்று அவனிடம் கேட்டாள்.
“ அத்தான் இப்போ நம்ம ரெண்டு பேரும் வாழ்க்கையில ஒன்றாக வாழ ஆரம்பிச்சிட்டோம் உங்களுக்கு என் மேல காதல் வந்துடுச்சா “ என்று கேட்க
சற்றும் தாமதிக்காமல் அவனிடமிருந்து “இல்லை” என்ற பதில் வந்ததில் தர்ஷினியின் நெஞ்சில் சுருக்கென்று ஒரு வழி ஏற்பட்டது அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்து மழுப்பிவிட்டு திரும்பி படுத்து கொண்டாள்.
அதைக் கண்டவன் அவளை விலகிப் படுக்க அனுமதிக்காமல் பின்னோடு சென்று அவளை கட்டிக்கொண்டு அவளது காதில் “காதல்தான் இல்லடி ஆனால் உன் மேல தான் ஆசை எக்கச்சக்கமா பொங்கி வருதே அதை தான் நீ தினமும் பாக்குறியே” என்று கூறினான்.
அந்த பதில் தர்ஷினிக்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை ஆனாலும் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு தூங்கி விட்டாள்.
அன்று அவள் எதிர்பார்த்து இருக்க மாட்டாள் அந்த காதல் வருவதற்கு முன் தாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்றும் விதி தங்களை பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் என்று துளி கூட எண்ணியிருக்க மாட்டாள்.
ஆனால் அந்த பிரிவிற்கான வித்து மறுநாளே ஆரம்பித்து விடும் என்றும் அதற்கு தானே வழிவகுத்து கொடுப்போம் என்றும் நினைக்கவில்லை.
ஒரு மாதம் ஹனிமூன் போயிட்டு வந்து வீட்டிற்குள் நுழைந்தவர்கள் சோர்ந்து படுத்துவிட்டார்கள். அன்றைய நாள் எப்படி போனது என்றே தெரியவில்லை ரெஸ்ட் எடுத்தே அன்றைய பொழுதை கழித்தனர்.
மறுநாள் வழக்கம் போல் காலேஜ் தொடங்க தர்ஷினியின் அலாரம் அடித்துக் கொண்டே இருந்ததில் மித்ரன் எழுந்து கொண்டான் இன்று அவனுக்கும் அவனது படிப்பு சம்பந்தமான செமினார் இருந்தில் அதற்கு ரெடி செய்து அவனது லேப்டாப் டேபிளில் வைத்திருந்தவன் காலையில் ஒரு முறை அதை சரி பார்த்துக் கொள்ள தேடியவன் கண்களில் அந்த நீல கலர் கோப்பு கண்ணில் அகப்படவில்லை என்றதில் மிகவும் டென்ஷன் ஆகி நின்றுவிட்டான்.
அவனது ரூம் ஃபுல்லாக தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்பதில் ஒரு நொடி என்ன செய்வது என்றே தெரியாமல் நின்று விட்டான் அப்போதுதான் தனது ரூமில் நிலையை கண்டவன் அவனது கோபம் எக்குதப்பாக எகிற ஆரம்பித்துவிட்டது.
தர்ஷினி அந்த ரூமை யூஸ் பண்ண ஆரம்பித்ததில் இருந்து பொருட்கள் அங்கும் இங்கும் ஆக கலைந்து ரூமே ஒரு மாதிரி அலங்கோலமாக காட்சியளித்தது இதுவரை இதைப் பற்றி எதுவும் கருத்தில் கொள்ளாதவன் இன்றைய சூழ்நிலையில் அவனது கோபம் கட்டுக்கடங்காமல் வர ஆரம்பித்து விட்டது.
அப்பொழுதும் தர்ஷினியின் போனில் அலாரம் அடித்துக் கொண்டிருக்க சுகமாக பெட்டில் பெட்ஷீட் இழுத்து போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் அவளைப் பார்த்து என்ன நினைத்தானோ நேராக பாத்ரூமிற்குல் சென்று ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்தவன் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது ஊற்றி விட்டான்.
அதில் அலறி அடித்துக் கொண்டு எழுந்தவள் அங்கிருந்த மித்திரனை பார்த்து அவன் மனநிலை புரியாமல் தூக்கத்தில் எழுந்ததில் கோபம் வந்து திட்ட ஆரம்பித்து விட்டாள்.
இதுவரை இருந்த மித்ரன் வேறு இப்போது இருக்கும் மித்ரன் அவளை முதன் முதலில் சந்தித்த மித்ரன் என்பதை கருத்தில் கொள்ளாமல் அவனிடம் “என்ன அத்தான் காலையில இப்படியா எழுப்புவாங்க இப்படி மேலே புல்லா தண்ணி கொட்டிட்டீருக்கிங்க சரியான மங்கூஸ் மண்டையனா இருப்பீங்க போல” என்று பேசிக்கொண்டு இருக்கையிலே கீழே விழுந்து கிடந்தாள்.
என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவள் கன்னத்தின் வலியில் தான் அவன் தன்னை அடித்ததையே உணர்ந்துகொண்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கோபத்தில் முகம் சிவக்க பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டவன் சொடக்கிட்டு அவளை பார்க்க செய்தவன் “கொன்னுடுவேன் இனிமே இந்த மாதிரி என்கிட்ட பேசிக்கிட்டு இருந்தனா என்ன நெனச்சிட்டு இருக்க என்ன பத்தி ஒரு மரியாதை வேணாம் ரூம்மா இது எப்படி போட்டு வச்சிருக்க இதுவரைக்கும் இப்படி ஒரு கேவலமான ரூமில் நான் இருந்ததே இல்லை” என்று கண்டபடி பேசியவன் பின் வேகமாக கிளம்பி காலேஜ்ற்கு சென்றுவிட்டான்.
தர்ஷினியின் நிலை தான் அந்த நிமிடத்தில் மிகவும் பாவமாக இருந்தது இதுவரை யாரிடமும் இப்படி ஒரு அடியை வாங்குனது இல்லை அந்த அளவிற்கு கன்னத்தில் கைத்தடம் படும்மாறு வேகமாக அடித்து விட்டு சென்று விட்டான்.
அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தவள் பின் மீண்டும் அவளது அலாரம் அடிக்கவும் உணர்விற்கு வந்தவள் பின் நேரம் ஆகுவதை உணர்ந்து காலேஜுக்கு கிளம்பி தயாரானால் அவளது கன்னத்தில் உள்ள கை தடத்தை மறைக்க மேக்கப் எக்ஸ்ட்ராவா ஒரு கோட்டிங் கொடுத்து சென்றாள்.
காலேஜில் உள்ள அவளது தோழிகள் இவளை ஆவலுடன் எதிர்பார்த்து பேசிக்கொண்டிருக்க தர்ஷினி மட்டும் ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தாள்.
இவளின் முகத்தை கண்டுவிட்டு கார்த்திகா தான் என்னவென்று விசாரிக்க ஒண்ணுமில்லை ரிசல்ட் பத்தின பயம் தான் என்று இப்போது சமாளித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளாசுக்கு சென்றாள்.
இந்த வருடம் மித்ரன் தங்களது கிளாஸ்கு சப்ஜெக்ட் எடுக்கவில்லை என்ற செய்தி கிளாஸ் ரெப் நம்ப கருப்பசாமி மூலம் வர அனைவரும் கொஞ்சம் சோகமாகவே காணப்பட்டனர் ஏனெனில் மித்ரனின் சப்ஜெக்டில் எல்லோருமே ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்களை எடுக்கும் அளவிற்கு அந்த தேர்வை முடித்து இருந்தனர்.
அப்போதும் அவள் அமைதியாகவே இருக்க சிந்து அவளின் அமைதியை பார்த்துவிட்டு “என்ன மச்சி ஏன் ஒரு மாதிரியாவே இருக்க என்ன பண்ணுது” என்று கேட்க
“ஒன்னும் இல்லடி நல்லாத்தான் இருக்கேன் என்னன்னு தெரியல காலைல இருந்து ஒரே தலைவலியா இருக்கு” என்று பொய் சொல்லி சமாளிக்க
உடனே தனது அருகில் அடுத்த பெஞ்சில் உட்கார்ந்து இருந்த மாணவனை கூப்பிட்டு கேண்டினில் இந்த பீரியட் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரு டீ வாங்கிட்டு வந்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள்.
அவளது அக்கறையை கண்டு இப்போது தர்ஷினியின் கண்கள் கலங்க ஆரம்பிக்க அதை இமை கொட்டி கீழே இறங்காதவாறு சமாளித்தவள் வேறு புறம் திரும்பிக்கொண்டாள்.
தோழிகள் அனைவரும் ஆளுக்கு ஒன்று பேச கலகலப்பாக சென்ற பேச்சில் தர்ஷினியும் காலையில் நடந்ததை கொஞ்சம் மறந்துவிட்டு அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டாள்.
தர்ஷினியை என்ன என்று கேட்காமலே அவளை மீட்கவே நினைத்த தோழிகள் காமெடியாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அவளையும் பேச்சில் இழுத்து சகஜமாக ஆக்கிவிட்டனர் அதில் பேச்சுவார்த்தை இன்னும் கலகட்ட ஆரம்பித்துவிட்டது.
அவளுக்கு இருந்த மன உளைச்சலில் தனக்கு திருமணமானதை தனது தோழிகளிடம் சொல்லும் மனநிலையில் இல்லை அதனால் அவள் அப்படியே விட்டு விட்டாள்.
அன்றைய பொழுது இப்படியே தர்ஷினிக்கு நிறைவடைய மித்திரனும் தனது லேப்டாப்பில் வைத்திருந்த இன்னொரு காப்பியை வைத்து அவனது செமினாரை முடித்துக் கொண்டான்.
நல்லபடியாக அவனது செமினாரை முடிக்கவும் தான் அவனுக்கு கொஞ்சம் ஆசுவாசம் ஆக இருந்தது அதனால் காலையில் நடந்த விஷயம் அவனை பெரிதாக பாதிக்கவும் இல்லை சாயங்காலம் எப்போதும் போல் வீட்டிற்கு வந்தவன் தர்ஷினி அவளது அறையில் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து தொந்தரவு செய்யாமல் அவனது ரூமிற்கு சென்று விட்டான்.
மித்ரன் தனது அறையில் அவனது வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவை எடுத்துக் கொள்ள கீழே வந்தவன் தர்ஷினியை பார்க்க அவளோ அறையில் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தால் அதைப் பார்த்தவன் சாப்பிடாமல் படுத்து விட்டாலோ என்று எண்ணி டைனிங் ஹாலில் இருந்த உணவை பார்க்க அது ஒருவர் உண்ணும் அளவே இருந்தது.
அதை பார்த்தவன் தனக்கு போட்டு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் சென்று படுத்து விட்டான் அவன் சென்றதும் கண்விழித்து பார்த்த தர்ஷினி அழுகையில் கரைந்தவள் சோர்வில் அப்படியே தூங்கி விட்டாள்.
காலையில் மித்ரனும் தர்ஷினியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் போது தர்ஷினி அவனிடம் நேற்று காலை அடித்ததற்கு ஒரு சாரியாவது கேட்பான் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்க அவனும் அப்படி ஒரு சம்பவம் நடக்காத மாதிரி மிகவும் இயல்பாக அவளிடம் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
இதுதான் தர்ஷணியின் மனதில் முதல் அடியாக விழுந்தது பின்பு அதற்கும் தர்ஷினி உரிமை உள்ள இடத்தில் தானே கோபமும் வரும் என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் சில நாட்களிற்கு அப்புறம் மீண்டும் அவர்கள் நாட்கள் அமைதியாக நகரத் தொடங்கியது முன்பிருந்த அந்த துடிப்பு மட்டும் தர்ஷினியிடம் காணப்படவில்லை.
இப்படியே ஒரு இரண்டு வாரம் சென்று இருக்க அன்று அரசு விடுமுறை என்று இருவரும் வீட்டில் இருந்தனர் அப்போது செல்வி அக்கா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க இவளும் அவர்களிடம் பேச்சு கொடுத்து கொண்டு இருந்தாள்.
மேலிருந்த மித்ரன் அவளை கூப்பிட்டு கொண்டே இருக்கவும் என்ன என்று கேட்க மேலே செல்ல அவளை தடுத்து நிறுத்திய செல்வி அக்கா “ பாப்பா தம்பி டீ கேட்டுச்சு ரெடி பண்ணி வைத்துருக்கேன்” என்று கூறி தயாரித்து வைத்திருந்த டீயை எடுத்துக் கொடுக்கும் அதை வாங்கிகொண்டு மாடிக்கு சென்றாள்.
அங்கே மித்ரன் அவளை பின்னி இருந்து அணைக்கவும் அதில் கொஞ்சம் தடுமாறியவள் டீயை அவனின் மேலேயே கொட்டி விட்டாள் அதில் மித்ரன் சூடான டீ கொட்டிய எரிச்சலில் கோபமாகி சட்டென்று கைநீட்டி அடித்து விட்டான்.
மீண்டும் மீண்டும் அவனிடம் அடி வாங்குவது அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தங்களது வீட்டில் மகா கண்டிப்புடன் இருந்தாலும் இவ்வளவு அடியெல்லாம் வாங்கியதில்லை அதே போல் மாதவன் அதற்கு அனுமதித்ததும் இல்லை இங்கு மித்ரனிடம் ஒவ்வொரு வாட்டியும் அடி வாங்கும் போது தனது குடும்பத்தை தேட ஆரம்பித்து விட்டாள்.
வலியிலும் தனது குடும்பத்தை தேடியும் அங்கேயே உட்கார்ந்து ஓவென்று கதறி அழுக ஆரம்பித்துவிட்டாள் அதை கண்ட மித்ரன் அவள் இப்படி அழுகவும் தன்னை கொஞ்சம் நிதானித்துக் கொண்டு அவளிடம் வந்தவன் அவளையே குறை கூற அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை ஒன்றும் கூறாமல் ரூமில் இருந்து வெளியே வந்தவள் தனது அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.
மித்ரனிற்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை அவள் அழுதது தனது மனதில் ஏதோ ஒரு வலியை ஏற்படுத்தி மனதை பிசைந்தது ஆனால் அதை கண்டுகொள்ள அவனது ஈகோ விடவில்லை அதனால் தான் போய் சமாதானபடுத்துவதா என்று எண்ணி தனது அறையிலேயே இருந்து கொண்டான்.
செல்வி வந்து உணவை உண்ண இருவரையும் அழைத்துப் பார்த்தார் தர்ஷினியிடம் இடமிருந்து எவ்விதமான பதிலும் இல்லை எனவும் மித்திரனின் அறை கதவை தட்டியவர் சாப்பிட அழைக்க அவனும் பிறகு சாப்பிட்டுக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டான் அதனால் அனைத்தையும் எடுத்து வைத்தவர் தனது வேலைகளை முடித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து மித்ரன் வந்து கதவை தட்டியும் அவள் கதவை திறக்காமல் இருக்கவும் கோபத்தில் கதவை ஓங்கி ஒரு அடி அடித்து விட்டு சென்று விட்டான்.
அதில் இன்னும் பயந்தவள் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை அவனும் தான் போய் அவளிடம் கெஞ்சுவதா என்ற இரு மார்பில் அதன் பிறகு அவளை கண்டுகொள்ளவே இல்லை.
அதன் பிறகு தொடர்ந்த இரு மாதமும் அவர்களது கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருந்தது அவர்களது விளையாட்டிற்கும் அவர்களது பிரிவிற்கும் சேர்த்து முடிவு கட்ட அன்று விதி எழுதி விட்டது போல அன்றைய தினம் இருவருக்கும் மறக்க முடியாத நாளாக அமைந்தது.
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌