ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா – 26

 

அந்த ஒரு மாதமும் இருவரும் கண்ணாம்பூச்சி விளையாட்டு தான் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் மித்ரன் நினைத்திருந்தாள் அதை இரண்டே நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்து இருக்க முடியும்.

 

 

ஆனால் விதி அவனுக்கு குடும்ப பாடத்தை சொல்லிக்குடுக்க முடிவெடுத்து விட்டது நூல் அதன் கையில் இருக்கும் போது அவர்கள் அதற்கு ஏற்றது போல் ஆடத்தானே வேண்டும்.

 

 

அவன் கஷ்டப்படுவது மட்டும் இன்றி தனக்கு மனைவியாக வந்த காரணத்தினால் தர்ஷினியையும் சேர்ந்து படுத்த ஆரம்பித்துவிட்டான்.

 பெரியவர்களுடன் இருந்து இருந்தால் குடும்ப சூட்சுமத்தை சொல்லி கொடுத்து இருப்பார்களோ என்னவோ அதை மித்ரன் தனது தாத்தாவிடம் உள்ள கோபத்தில் தவற விட்டுவிட்டான்.

 

 

அவளை அடித்த முதல் ஒருவாரம் அதனை பற்றி கவலைப்பாடாமல் தர்ஷினியை கண்டதும் பேச தான் முயன்றான் ஆனால் அவனை கண்டாலே தர்ஷினி அந்த இடத்திலிருந்து விலக ஆரம்பித்துவிட்டாள்.

 

 

அதை கண்டவன் தான் என்ற அகங்காரம் தலை தூக்க அதற்கு அப்புறம் இவன் தர்ஷினியை ஒதுக்கி வைக்க ஆரம்பித்துவிட்டான் அவளை கண்டால் விலகி செல்ல ஆரம்பித்துவிட்டான்.

 

 

தர்ஷினிக்கு முதலில் அவள் விலகும் போது ஒன்றும் தோன்றாமல் தான் இருந்தது ஆனால் அதை அவன் கண்டுகொண்டு அவனே விலகும்போது இவளுக்கு இங்கே தனது இதயத்தில் வலிக்க ஆரம்பித்து விட்டது.

 

 

அப்பொழுது தான் அவள் மித்ரனை விரும்ப ஆரம்பித்ததை உணர ஆரம்பித்தாள் அதுமட்டுமின்றி கிளாஸ்ல் மித்ரனை பற்றிய பேச்சும் காயத்திரி தங்களிடம் மித்ரனை எவ்வாறு எல்லாம் ரசிக்கிறாள் என்பதையும் அதற்கு சிந்து தானும் சேர்ந்து கொண்டு அவனை வர்ணிக்கும் போது இருவரையும் ஆளுக்கு ஒன்று கன்னத்தில் வைக்கும் அளவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வரும் அப்பொழுது அவளுக்கு புரியாமல் இருந்தது இப்பொழுது தெளிவாக உணரத்தொடங்கினாள்.

 

 

தான் மித்ரனை மனதின் அடி ஆழத்தில் இருந்து விரும்ப ஆரம்பித்து விட்டதும் அதன் தொடர்ச்சி தான் அவனை தன்னுள் அனுமதித்ததும் என்று புரிந்துகொண்டாள்.

 

 

மித்ரன் தன்னை விரும்பவில்லை என்று கூறினாலும் அவனது செயல்களில் காட்டினான் ஒருநாளும் தன்னை எடுத்து கொள்ளாமல் அவன் தூங்கியதும் இல்லை ஆனால் இப்பொழுது தன்னை தொடாமல் இருப்பதையும் நினைத்து தன்னை தானே தெளிவாக குழப்பிக் கொண்டு இருந்தாள்.

 

 

இங்கே அமைதியாக செல்லும் மித்ரன் காலேஜில் தன்னை வைத்து செய்வதை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருந்தாள் அந்த வருடம் அவர்களுக்கு கோடிங் பேப்பர் எடுக்க வரும் மோகன் சாருக்கு திடீரென்று உடம்பு முடியாமல் போனதில் அவர் லாங்‌லீவ் எடுத்துக் கொண்டார். 

 

 

போன வருடமே மித்ரன் எடுத்த பேப்பரில் அனைவரும் நன்றாக படித்திருந்ததாக எச் ஓடியிடம் இருந்து ரிவ்யூ வந்ததில் இந்த முறையும் மோகன் சார் பேப்பரை மித்ரன் எடுக்குமாறு மேனேஜ்மென்ட் கேட்டுக் கொண்டதில் இப்போது மித்ரன் இவர்களது கிளாஸிற்கு அந்த பேப்பரை எடுக்க ஆரம்பித்து விட்டான். 

 

 

மற்ற மாணவர்களுக்கு மோகன் சார் போனதில் வருத்தம் என்றாலும் மித்ரன் அந்த பேப்பரை எடுக்கிறான் என்பதில் மிக மகிழ்ச்சி அதுவும் தர்ஷினியின் தோழிகள் இரு மடங்கு மகிழ்ச்சியில் இருந்தார்கள். 

 

 

 

இந்த வருடம் இந்த பேப்பர்தான் ரொம்பவும் கஷ்டமான பேப்பர் அதனால் மித்ரன் அதை எளிய முறையில் சொல்லிக் கொடுப்பான் என்ற நம்பிக்கையும் இரண்டாவது அவனை நன்றாக சைட் அடிக்கலாம் என்ற ஆசையில் இருந்தார்கள்.

 

 

“அப்பாடா மோகன் சார் போறாருனு ரொம்ப வருத்தமா இருந்துச்சு இப்ப அந்த இடத்துக்கு மித்ரன் சார் வரதுதான் மேனேஜ்மென்ட் பெஸ்ட் டிசிஷன் எடுத்து இருக்கு அதனால் நாம் எல்லோரும் தப்பிச்சோம்” என்றாள் கார்த்திகா

 

சிந்துவும் காயத்ரியும் கோரசாக “நாங்க இருக்க மீதி மாசமும் நல்லா மித்ரன் சாரை சைட் அடிச்சு வச்சுக்குவோம் பா” என்றாள்.

 

“என்னடி தர்ஷினி எதுவும் பேசாம அமைதியா இருக்க உனக்கு மித்திரன் சார் வர்றது சந்தோஷம் தானே” என்றாள் மற்றொருவள்

 

 

“ எனக்கும் மித்ரன் சார் இந்த பேப்பரை எடுக்கிறது ரொம்ப சந்தோஷமா தான் இருக்கு ஏன்னா நல்லாவே சொல்லித் தருவாரு அதனால ஈஸியா பாஸ் பண்ணலாம்” என்றாள்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மித்ரன் வகுப்பிற்குள் நுழைந்தவன் அவனது கண்கள் நேராக தர்ஷினியிடம் சென்று அவளை பார்த்தது ஆனால் அவளும் அவனை அலட்சியப்படுத்திவிட்டு தனது தோழிகளிடம் பேசும் பாவனையில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

 

அதை கண்டவன் இவளை ஒரு வழி செய்து விடும் முடிவில் நேராக தனது வகுப்பை தொடங்கி விட்டான் இடையிடையே கேள்விகளையும் கேட்டு அனைத்து மாணவர்களையும் திணரடித்து விட்டான். 

 

 

பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே தர்ஷினியை பார்த்தவன் இப்போது அவள் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்து இருப்பதை கண்டதும் ‘ என்னையே அலட்சியபடுத்துறியா’ என்று எண்ணிக்கொண்டு அவளிடமும் கேள்விகளை கேட்டு படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான். 

 

 

தெரியாத கேள்விகளுக்கு அவளை நிற்க வைத்தும் அனைத்து மாணவர்களின் முன்பும் வார்த்தைகளால் அவமானப்படுத்தியும் தனது வன்மத்தை இறக்கி கொண்டிருந்தான். 

 

 

அதனால் தர்ஷினிக்கு காலேஜ் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மிகவும் அழுத்தமாக சென்று கொண்டிருந்தது வீட்டிலும் தனிமையை மிகவும் உணர்ந்தவள் கல்லூரியிலும் இவன் இப்படி நடந்து கொள்ள ஒரு மாதிரி உச்ச கட்ட விரக்தியில் இருந்தாள்.

 

 

யாரிடமும் இதைப் பற்றி எதுவும் கூறாமல் மனதில் வைத்து அழுது கொண்டிருந்ததில் தோழிகளிடமோ பெற்றோரிடமும் தினமும் கூப்பிடும் தனது அத்தைமார்களிடமும் எதைப்பற்றியும் கலந்து கொள்ளாமல் அழுத்தத்திலேயே இருந்தாள்.

 

 

அன்றைய நாள் முற்றிலும் அவர்களது கையில் இல்லை என்பது போல் காலை வீட்டிலிருந்தே சிறு சிறு மோதல்கள் ஆரம்பித்திருந்தது. 

 

 

காலையில் கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருந்தவளிடம் நீண்ட நாட்களுக்கு அப்புறம் பேசிய மித்ரன் “கிளாஸ்ல ஒழுங்கா படிக்க மாட்டியா இப்படி மக்கா இருக்க வீட்டுலயும் ஒரு பொருளையும் எடுத்த இடத்துல வைக்க மாட்டேன் என்ற அழுக்கு பண்ணி வைக்கிற உன்னை போய் என் தலையில் கட்டி வைத்து என் உயிரை வாங்குகிறார்கள் நான் எப்படி இருக்கேன் எனக்கு அப்படியே ஆப்போசிட்டா இருக்க உன்னை நான் கல்யாணம் பண்ணதுக்கு நான் கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்” என்று மிகவும் கடுமையாக அவளை அன்று திட்டி விட்டான். 

 

 

அதற்கு காரணமும் இருந்தது இவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டை செல்வியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார் அது நாட்களை நீடித்துக் கொண்டே செல்லவும் பெரிய வீட்டிற்கு தகவலை தெரிவித்து விட்டாள் அதில் மிகவும் கடுப்பான தாத்தா நேற்று இரவு அவனை போனில் கூப்பிட்டு மிகவும் கடுகடுப்பாக பேசி விட்டார் அந்த கோபத்தை இன்று காலையில் தர்ஷினியிடம் இறக்கி விட்டான். 

 

 

அவனை கண்டு ஒன்றும் புரியாமல் கடுமையாக திட்டிய தில் கண்ணில் இருந்து கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்த தர்ஷினி மனதிலும் சுக்கு நூறாக உடைந்து விட்டாள் இவ்வளவு நாள் பேசாமல் இருந்தவன் திடீரென்று இன்று காலை வந்து மிகவும் கடுமையாக திட்டியதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாள். 

 

 

அதனுடனே காலேஜுக்கு செல்ல அங்கு முதல் பீரியடு மித்ரன் பீரியடாக அமைந்ததில் லேட்டாக சென்றதும் பயந்து கொண்டு “எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்று அழைத்தாள்.

 

 

அங்கு நின்று கொண்டிருந்தவன் இவளை பார்த்ததும் கண்களில் கனலை காட்டி “இதுதான் கிளாசுக்கு வரும் நேரமா” என்று உறுமியவன் “வெளியிலேயே நில்லுங்கள் படிக்கிறது தான் இல்லன்னு பார்த்தா கிளாஸ்க்கு ஒழுங்கா டைம்க்கு வர்றதும் கிடையாது நீங்க எல்லாம் எதுக்கு தான் காலேஜுக்கு வருகிறீர்களோ” என்று கடுமையாக திட்ட ஆரம்பித்திருந்தான்.

 

 

இதை அனைத்தையும் அங்கிருந்த வகுப்பு மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவளது தோழிகளுக்கும் வருணுக்கும் மிகுந்த கஷ்டமாக இருந்தது.

 

 

வெளியே நின்று இருந்த தர்ஷினியும் மிகவும் அவமானமாக இருந்ததில் தலையை குனிந்து கொண்டு நின்று இருந்தவள் இதற்கு மேலும் தாங்காது என்பது போல் விறுவிறு என்று சென்று விட்டாள்.

 

 

நேராக சென்று கிரவுண்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்தவள் மிகுந்த மன உளைச்சலில் அதிகமாக அழுக ஆரம்பித்து விட்டாள் தேற்ற ஆளில்லாமல் எவ்வளவு நேரம் அழுதாலோ பின் தன்னை தானே சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டு அங்கிருந்து கிளம்பி கேண்டினில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

 

அவளது தோழிகளும் வகுப்பு முடியும் வரை பொறுமையாக அமர்ந்திருந்தவர்கள் எப்போது மணி அடிக்கும் என்று காத்து கொண்டு இருந்தவர்கள் மணி அடித்து மித்ரன் கிளாஸ் விட்டு வெளியே செல்லவும் மின்னல் என்ன அவளை தேடிக்கொண்டு சென்று விட்டார்கள்.

 

 

இருவர் கிரவுண்டில் சுற்றிப் பார்க்க மற்ற இருவர் வேறு அவர்கள் அமரும் இடங்களில் தேடிப் பார்க்க பின் நால்வரும் கடைசியாக கேண்டினில் வந்து தேடினர் அங்கு ஒரு மூலையில் தர்ஷினி முகம் எல்லாம் சிவந்து கண்கள் வீங்கி அமைதியாக அமர்ந்திருக்க அவளின் அருகில் வந்து அமர்ந்தனர். 

 

 

தர்ஷினிக்கு ஆறுதலாக அவளது தோழிகள் பேசிக் கொண்டிருக்கும் போது கார்த்திகா “என்ன தர்ஷினி உன்மேல அப்படி என்ன மித்ரன் சாருக்கு கோபம்னு தெரியல எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காரு கிளாஸ்ல” என்று சந்தேகத்துடன் கேட்க

 

 

“ அவளுக்கு எப்படி தெரியும் ஒருவேளை படிக்கலைன்னு திட்டுறாரோ என்னவோ ஏன் ரெண்டு நாளைக்கு முன்னாடி என்ன கூட தான் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தி நிக்க வச்சாரு கிளாஸ்ல” என்று சிந்து அவளுக்கு பதில் பேச 

 

 

“ஆமாடி அன்னைக்கு எனக்கு ஒரு டவுட்டுன்னு நான் போய் கேட்டேன் அதுக்கு சொல்லிக் கொடுத்துட்டு அதை புரிய வைத்து அதுக்கு அப்புறம் கிளாஸ்ல கவனிக்காம என்ன பண்ண என்று கேட்டு என்னை வைத்து செய்துவிட்டார்” என்றால் காயத்ரி தனது அனுபவமாக

 

 

இதற்கு எதுக்கும் பதில் கூறாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தால் தர்ஷினி. 

 

 

கார்த்திகாவும் “ தர்ஷினி நீ பேசாம ஒன்னு பண்ணு ஸ்டாப் ரூம் போயி அங்க மித்ரன் சார் கிட்ட ஒரு சாரி கேட்டு வந்துரு அதுக்கப்புறம் நடக்கிறது பார்த்துக்கலாம்” என்றாள்.

 

 

“ அவ என்ன பண்ணுனான்னு சாரி கேட்க சொல்ற தப்பே பண்ணாம யாராவது சாரி கேட்பாங்களா” என்று சிந்து பொங்கி விட 

 

 

“ லூசு மாதிரி பேசாத சிந்து இன்னைக்கு கிளாஸ்க்கு லேட்டா வந்தா அதுக்கு சார் வெளியில நிக்க வச்சாரு ஒண்ணுமே சொல்லாம அவ பாட்டுக்கு வெளியே போயிட்டா அது தப்பு இல்லையா” என்று கார்த்திகா நியாயமாக பேச

 

 

“ ஆமா எனக்கும் இப்பதான் புரியுது அடுத்த கிளாஸ்ல என்ன பண்ணுவாரா தெரியாது அதனால இப்பவே போயி அவர்கிட்ட ஒரு மன்னிப்பு கேட்டு வந்துரு” என்றாள் சிந்து

 

 

“ஏய் அப்படி போறதா இருந்தா அந்த அல்டி ஸ்டாப் ரூம்ல இல்லாத நேரமா பார்த்து போ இல்லன்னா மித்ரன் சார விட அவ ஓவரா சீன் போடுவா அவளுக்கு மித்ரன் சார் மேல ஒரு கண்ணு ” என்றாள் காயத்திரி தான் சென்று வாங்கி கட்டிக்கொண்டு வந்ததில் அனுபவமாக. 

 

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அங்கே வந்த வருண் வேறு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தர்ஷினியின் அருகில் சென்று அமர்ந்தான்.

 

 

 

இதை இவளது தோழிகள் என்ன என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போதே வருண் தர்ஷினியின் கைகளை பிடித்துக் கொண்டு அவளிடம் காலையில் நடந்ததை பற்றி ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று தனது காதலை அவளிடம் தெரியப்படுத்தினான்..

 

 

இதில் இவளது தோழிகள்

அதிர்ந்து நின்று கொண்டிருக்கும் போதே அங்கு மித்ரனும் வந்துவிட அவ்வளவுதான் தர்ஷினி அதிர்ச்சியில் சிலையாகி நின்று விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

  1. Srija aranganathan

    இன்னும் கொஞ்ச நேரத்தில் தருகிறேன் மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top