ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா -29

 

சற்று முன்பு மித்ரனுக்கு கிடைத்த செய்தியில் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு மகா ஃபோன் பண்ணி “மாப்பிள்ளை தர்ஷினி டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வெளியே கிளம்பிட்டாள்”என்று கூற

 

“என்னத்த சொல்றீங்க எங்க கிளம்பிட்டா அவ அங்க இருக்கேன்னு சொன்னதால தானே நான் அமைதியா இருந்தேன் சரி அவ வரும்போது வரட்டும்னு இப்ப அவ எங்க கிளம்புறா” என்று குழம்பிக் கொண்டே கேட்டான். 

 

“ இல்ல மாப்ள இங்கே இருந்து போர் அடிக்குதாம் 15 நாளைக்கு மேல இங்க இருக்க முடியாதாம் அதனால இப்ப அவ கிளம்பி உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா” என்று கூற கொஞ்ச நேரம் மித்ரனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை அவன் அமைதியாக இருக்க அவன் மாமியாரால் அப்படி இருக்க முடியவில்லை. 

 

போனில் “மாப்பிள்ளை என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்” பின்பு சுதாரித்து அவருக்கு உரிய பதிலை கூறியவன் இப்போது கொஞ்சம் பிஸியாக இருப்பதால் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன்” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

 

 

‘ அடிப்பாவி தர்ஷினி என்னடி பண்ற என்கூட சண்டை போட்டுட்டு போன என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தால் நீ ஜாலியா உங்க அம்மா வீட்டுல 15 நாள் இருந்துட்டு இப்போ எங்க அம்மா வீட்டுக்கு வேற போறியா உன்னை என்ன பண்றேன் பாரு ஆனா நீயா வராம நான் உன்னை கூப்பிடவே மாட்டேன் டி பாப்போம் நீயா நானா’ என்று மனதில் புலம்பல் மட்டுமே முடிந்தது. 

 

 

 

கேடி தர்ஷினியும் எங்கே தனது அம்மா வீட்டில் இருந்தால் எக்ஸாம் இருக்கு மீண்டும் படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவாங்களோ என்று நினைத்து கரெக்டாக எக்ஸாம்க்கு முதல் நாள் சென்று தனது மாமியார்களிடம் அடைக்கலம் ஆகி விட்டாள் அது புரியாமல் மகாவும் மித்திரனும் குழம்பி கொண்டு இருந்தார்கள்.

 

 

மறுநாள் காலேஜிற்குள் நுழைந்தவளை வருண் தடுத்து அவளை பிடித்தான் என்ன தர்ஷினி வரவர என்கிட்ட பேசவே மாட்டேங்குற நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்க மாட்டேன்கிற என்று தன் மன ஆதங்கத்தை கொட்ட ஆரம்பித்தான். 

 

 

அவனைப் பார்த்தவள் அங்கிருந்து நகர்ந்து கிரவுண்டில் ஒரு மரத்தின் கீழ் சென்று அமர்ந்தவள் அவனையும் தனது பக்கத்தில் அமர்த்திக் கொண்டு இப்போது பேசு என்னும் பார்வையில் அவனைப் பார்த்தாள் அந்த ஒரு பார்வை போதும் என் மனதில் இருப்பதை கொட்ட என்று எண்ணிக் கொண்டவன் தான் இத்தனை நாட்களாக தர்ஷினியிடம் கூற நினைத்த அனைத்தும் ஒரு வார்த்தை விடாமல் கூற ஆரம்பித்து விட்டான். 

 

 

“தர்ஷினி நான் உன்னை காலேஜ்ல முதல் நாள் பார்த்ததிலிருந்தே லவ் பண்ண ஆரம்பித்து விட்டேன் அன்னைக்கு நான் சொன்னது இத்தனை வருஷமா என் மனசுக்குள்ள பூட்டி வைத்திருந்த விஷயம் உன்னோட கண்ணீரை பார்த்து சட்டு என்று வெளியே வந்து விட்டது என்னை தப்பா நினைச்சுக்காத என்னோட லவ் ரொம்ப உண்மையானது.

 

 

நான் மித்ரன் சார் உன்னை திட்ட ஆரம்பித்த உடனே உன் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தேன் என்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அந்த பீரியட் எப்படியோ மல்லுக்கட்டி முடித்துவிட்டு முதல் ஆளாக உன்னை தேடித்தான் வந்தேன்.

 

 

என்னை பார்த்த என் பிரண்ட்ஸும் நான் ரொம்ப ரெஸ்லர்ஸா இருக்கிறதை பார்த்துட்டு என் பின்னாடியே வந்துட்டாங்க வந்த இடத்துல நான் உன்னை ப்ரொபோஸ் செய்வதை பார்த்தவர்கள் என்னை ஊக்குவிக்கும் விதமாக உன்னை ஏற்றுக்கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் அது தப்புதான் அதுக்காக நான் உன்கிட்ட சாரி கேட்டுக்குறேன். 

 

நீ மூஞ்சி கொடுத்து கூட பேசாம போறது ரொம்ப கஷ்டமா இருக்கு தர்ஷினி என்னோட லவ்வ ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன்னோட இஷ்டம் தான் நான் எப்பவுமே உன்ன போர்ஸ் பண்ணவே மாட்டேன் ஆனா நீ கொஞ்சம் கன்சிடர் பண்ணலாம் நீ என்னோட லவ்வ ஏத்துக்கலைன்னாலும் நமக்குள்ள ஒரு நல்ல நட்பு எப்பவுமே இருக்கணும் அதுதான் என்னோட ஆசை இதோட நம்மளோட படிப்பு முடிய போகுது எதா இருந்தாலும் எனக்கு ஓபனா சொல்லிடு எந்த முடிவாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தன் மனதில் உள்ளதை அனைத்தையும் தர்ஷினியிடம் கொட்டி விட்டான்.

 

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த தர்ஷினி சட்டென்று தனது கழுத்தில் உள்ள தாளிச்செயினை உடனே எடுத்து வெளியே விட்டாள்.

 

 

அதைப் பார்த்தவன் ஒரு நிமிடம் அவனது கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை என்னது தர்ஷினிக்கு கல்யாணம் ஆயிடுச்சா கல்யாணம் ஆன பொண்ணையா இத்தனை நாள் விரும்பி கொண்டிருந்தோம் என்று குற்ற உணர்வுடன் அவளை பார்க்க

 

 

அவனது முகத்தைப் பார்த்தவள் அவனது மனதில் உள்ளதை தெரிந்து கொண்டவள் போல் தன் கதையை சுருக்கமாக கூறினாள் ஆனால் தன் புருஷன் யார் என்று மட்டும் கூறவில்லை அப்போதுதான் வருணனுக்கு கொஞ்சம் ஆசுவாசம் பிறந்தது. 

 

 

நல்ல வேலை நாம் காதலிக்க ஆரம்பித்த பிறகு தான் அவளுக்கு திருமணம் முடிந்துள்ளது என்பது நிம்மதியாக இருந்தாலும் அவனது மனதில் இத்தனை ஆண்டுகள் காதலியாக இருந்து விட்டவள் இனி தனக்கு சொந்தமில்லை என்று எண்ணும்போதே வருணின் கண்களில் கண்ணீர் நிரம்ப ஆரம்பித்துவிட்டது.

 

 

பின் தன்னைத்தானே தேற்றிக் கொண்டவன் அவளைப் பார்த்து வாழ்த்துக்கள் கூறி விடைபெற்று சென்றான். 

 

அவனைப் பற்றிய யோசனையிலேயே அமர்ந்து கொண்டிருந்தவள் அருகில் மித்ரன் உட்காருவதை கவனிக்கவில்லை சற்று என்று தனது கழுத்தில் ஏதோ ஊர்வது போல் இருக்க திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

 

 

அப்போதுதான் தனக்கு அருகில் மித்ரன் அமர்ந்திருப்பதும் அவன் தனது கழுத்தில் வெளியேஎடுத்து போட்டிருந்த தாலிச் செயினை எடுத்து உரிமையாக அவளது உடைக்குள் போடுவதும் தெரிந்தது. 

 

அவனது கையை தட்டி விட்டவள் தானே சரியாக உள்ளே எடுத்து போட்டுக் கொண்டாள் அதை பார்த்தவன் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்தான். 

 

 

“என்ன அத்தான் எதுக்கு இப்ப இப்படி சிரிக்கிறீங்க ஏன் நீங்க இங்க உக்காந்து இருக்கீங்க யாராவது பார்த்தா தப்பா நினைச்சுக்க போறாங்க” என்று கேட்க 

 

“என்னோட பொண்டாட்டி பக்கத்துல உட்காருவதற்கு யாரு தப்பா நினைக்க போறா அப்புறம் என் கைய தட்டி விட்டு என்னமோ செஞ்சியே எனக்கில்லாத உரிமையா? அதை எத்தனை தடவை என் கைகளில் அளந்து பார்த்திருக்கிறேன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்” என்று பேச தர்ஷினியின் முகமும் செவ்வானமாக சிவந்துவிட்டது.

 

 

அதை கண்டவன் அவளது காதுக்கு அருகில் “என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ற டி சீக்கிரமா வீட்டுக்கு வா நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று கூற “அதெல்லாம் முடியாது நீங்க வந்து கூட்டிட்டு போங்க” என்று கூற இருவருக்கும் அங்கேயே வாக்குவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

 

இருவரும் தங்களது காதலை கூறிகொள்ளவே இல்லை அதன் போக்கிலேயே காதலை புரிதலோடு அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது தெரியாத காதல் இப்பொழுது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்து அதன்சுவையில்‌ கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தனர்

 

 

தாத்தா வீட்டிற்கு சென்றதைப் பற்றி அவன் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை இதற்கு மேல் காலேஜில் அவள் பக்கத்தில் இருந்தால் சரியாக இருக்காது என்று கிளம்பி சென்று விட்டான்.

 

 

தாத்தா வீட்டில் தர்ஷினியை அனைவரும் தாங்க ஆரம்பித்தார்கள் அவள் அங்கு மித்ரனின் ரூமில் தான் தங்கி இருந்தாள் கொஞ்ச நேரம் எக்ஸாம் இருக்கு படிப்பதும் கொஞ்ச நேரம் சஷ்டியுடன் விளையாடுவதும் என்று அழகாக அவள் பொழுது சென்றது. 

 

 

தாத்தா அப்பத்தாவின் ரூமிற்கு சென்று அவர்களுடன் பேசுவதும் பிரியாவுடன் அப்பத்தா உடனும் தாயக்கட்டை விளையாடவும் தனது அத்தைகளுக்கு சமையலில் உதவுகிறேன் என்று தொல்லை கொடுத்துக் கொண்டு இருப்பது என்று அவளது நாள் சிட்டாக பறந்தது.

 

 

எக்ஸாம் முடித்து மறுநாளில் அவள் பூரி கேட்டால் என்று கமலா கிச்சனில் பூரி போட்டுக் கொண்டிருக்க அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தவள் திடீரென்று அந்த எண்ணை வாடை ஒத்துக் கொள்ளாமல் சட்டு என்று வெளியே வந்து வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டாள்.

 

 

அதில் என்னவோ என்று பதறி கொண்டு வந்தவர்கள் அவள் வாந்தி எடுப்பதை கண்டு அப்பதா விற்கு சந்தேகம் வந்தது உடனே பிரியாவிடம் சொல்லி பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று பிரக்னன்சிகிட்டு வாங்கி வருமாறு கூறினார்.

 

 

பிரியாவும் உடனே சென்று வாங்கி வர அப்பத்தா அதை தர்ஷினியின் கையில் கொடுத்து பார்த்துக் கொண்டு வருமாறு கூறினார் அதற்கு பிரியாவும் கொஞ்சம் ஹெல்ப் செய்யவும் சென்று பார்த்து வந்தவள் இரண்டு கோடு இருந்தது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி உடனே வீட்டில் ஸ்வீட் செய்து அனைவருக்கும் கொடுத்து அசத்தி விட்டார் ராஜேஸ்வரி. 

 

 

உடனே அப்பத்தா மித்ரனுக்கு கால் செய்ய அவனும் அவனது ப்ராஜெக்ட்டில் கொஞ்சம் பிஸியாக இருந்தவன் முதலில் போனை எடுக்கவில்லை பின் இரண்டாம் முறையாக அடிக்கவும் அவசரமாக எடுத்து பேச ஆரம்பித்தவனிடம் அப்பத்தா விஷயத்தைக் கூற அதற்கு மேல் அவனுக்கு அங்கு வேலை ஓடவில்லை அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு தனது மனைவியை தேடி தங்களது வீட்டிற்கு ஓடி வந்து விட்டான்.

 

 

ஹாலில் அங்கு அனைவரும் தர்ஷினியை நடுவில் விட்டு அனைவரும் சூழ்ந்து உட்கார்ந்து இருக்க இவனுக்கு தனது மனைவியின் அருகில் செல்லக்கூட இடமில்லை அந்த அளவிற்கு அனைவரும் உட்கார்ந்து இருந்தனர். 

 

 

அவளைப் பார்த்தவன் கண்களாலேயே மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்க அவளும் அதை சுத்தலில் விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அப்போதுதான் மித்ரன் வந்ததை கவனித்தவர்கள் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க அவனால் கூச்சத்தில் வெட்கத்திலும் பதில் கொடுத்தான் அதை பார்த்தவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். 

 

 

பின் ஒரு வழியாக அனைத்தையும் முடித்துக் கொண்டு மாடிக்கு சென்றவர்கள் தங்களது ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவர்கள் மறு நொடி இருவரும் உடனடியாக இறுக்கமாக அணைத்துக் கொண்டார்கள்.

 

 

பிரிவு அந்த அளவிற்கு அவர்களை பாதித்து இருந்தது “அத்தான் நீங்க வர மாட்டீங்க ன்னு சொன்னீங்க இப்ப எப்படி வந்தீங்க” என்று கேட்க 

 

“என்ன பண்றது கல்யாணம் ஆகிட்டாலே பொண்டாட்டி கால்ல விழுந்து தான் ஆகணும்னு எழுதப்படாத விதி இருக்கு அதான் என் புள்ளைய வர வச்சு அவன் மூலமா என்னை இங்கே இழுத்துட்டு வந்துட்டல்ல அப்புறம் என்னடி” என்று செல்லமாக கோபித்துக் கொண்டான்.

 

 

“என்னது புள்ளைய நான் மட்டும் வர வச்சேனா இது என்ன புது உருட்டா இருக்கு இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையா என்ன” என்று கேள்வியாக நிறுத்த

 

 

“ நான் அப்படி சொல்வேன்னாடி ஹனிமூன் போனப்ப எல்லாம் என்னால அடிக்க முடியாத சிக்சர் என் பொண்டாட்டி களத்துல இறங்கியவுடன் அடிச்சு தூக்கிட்டாலே நான் எப்படி அப்படி சொல்ல முடியும்” என்று கூற அதனை கேட்டவள் உடம்பிலிருந்து காதுமடல் வரை சிவந்து நின்றது.

 

 

அதை கண்டவன் தாங்க முடியாத தவிப்பில் அவளை நெருங்க தனது மாமியார் கொடுத்த அறிவுரையின் படி டாக்டரிடம் செக் பண்ணி விட்டு வந்து தான் எதா இருந்தாலும் என்று தர்ஷினியை சமாதானப்படுத்தி அவளிடம் பிள்ளைக்கு எதுவும் ஆகாமல் தான் பார்த்துக் கொள்வதாக ஆயிரம் வாக்குறுதிகளை அளித்து அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். 

 

 

அவளும் கொஞ்சம் பிகு பண்ணி கொண்டு சரி என்று தலை அசைக்க மித்ரனை கையில் பிடிக்க முடியவில்லை உடனே அவளை மெதுவாக தூக்கிச் சென்று கட்டிலில் அணைவாக படுக்க வைத்தவன் அன்று அவள் அணிந்திருந்த புடவையின் முந்தானையை லேசாக விளக்கி அவளது நாபி குழியில் சிப்பியில் இருக்கும் முத்தாக உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் தனது குழந்தைக்கு முதல் முத்தத்தை வழங்கினான்.

 

 

பின் அதற்கு வலிக்குமோ என்று தனது ஒரு விரலால் தடவிக் கொடுத்தவன் அதன் இடத்தில் மீண்டும் முத்தத்தை வாரி வழங்க ஆரம்பித்தான் அதை குழந்தைக்கு சென்று சேர்ந்ததோ இல்லையோ அதன் தாய்க்கு உணர்வுகள் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது.

 

 

“அத்தான் என்ன உங்க பிள்ளையை கண்டதும் பாசமழை பொழியுறீங்க இன்னும் நம்ம பஞ்சாயத்து முடியல அதுக்கு பஸ்ட் வாங்க என்று பிறக்காத பிள்ளையை கொஞ்சுவதை பொறாமை கொண்டு தடுத்து விட்டாள். 

 

அதை கண்டு கொண்டவன் நமட்டு சிரிப்புடன் அவளிடம் வந்து என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டான் அதற்கு “இப்ப கூட நீங்க பேச மாட்டீங்களா” அப்படின்னு சொல்லி கேட்க “நான் எப்படி உன்னோட குணத்தை அப்படியே ஏத்துக்கிட்டேனா நீயும் என்னை அப்படியே ஏத்துக்கோ நம்ம லைஃப் அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கும் என்று கூற “ என்ன இப்படி மாறிட்டீங்க” என்றாள்.

 

“என்ன பண்றது எனக்கு வாச்சது அப்படி இருக்கு” என்று சலித்துக் கொள்ள உடனே ரோசப்பட்ட தர்ஷினியோ அவனை தலையில் முந்தானையை சரியாக இழுத்து விட்டாள். 

 

அதைக் கண்டவன் இன்னும் வேகமாக அவனது முந்தானையை எடுத்து கீழே போட்டு பிளவுசில் உள்ள ஊக்குகளை அதற்கு ஆரம்பித்து விட்டான் இப்ப என்ன வழக்கம்போல் அவளது மார்பு சூட்டில் குளிர் காய்ந்து தான் ஏதாவது செய்தால்தான் குழந்தைக்கு ஆகாது என்று கூறி அவளை நன்றாக வேலை வாங்கி விட்டான். 

 

ஒருமுறை அவளது நாவு சுவையில் குளிர் காய்ந்தவன் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக் கொண்டான்.

மறுநாள் மித்ரன் தர்ஷினியை கூப்பிட்டுக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்ப அவனுக்கு முன் அவனது அம்மா பெரியம்மா பிரியா அத்தை மாமியார் அப்பத்தான் என்று ஒரு பெரிய கூட்டமே கிளம்பி விட்டது. 

 

அனைவரையும் பார்த்தவன் எதுவும் பேசாமல் சென்று தனது பிளாக் ஆடியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

 

 

 

 

 

2 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top