3
“திலோ மிஸ் உங்களை பார்க்க ஆள் வந்து இருக்கு ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றாங்களாம் உங்களை உடனே வர சொன்னாங்க…!!” என அட்டென்ட்ர் கூறி விட்டு செல்ல…
எப்பொழுதும் ஒரு கவனம் குடி கொண்டு இருக்கும் அந்த மதி முகத்தில் சின்ன சுருக்கம் … இவ்வளவு தானா இவள் என அலட்சியமாக எடை போட்டு விட முடியாத படி ஒரு திடம் அவளிடத்தில்… அத்தனை சுலபமாக அவளை யாரும் நெருங்கி விட முடியாதபடி அவளை சுற்றிய ஒரு வளையத்தை அவளுக்காக அவளே போட்டுக் கொண்டு வாழும் ஒரு சிங்கப்பெண்…
நெறிந்த புருவமும் இடுங்கிய கண்களுடன் அலுவலகம் நோக்கி சென்றவள் அங்கு அமர்ந்து இருந்தவரை கண்டதும் கண்கள் கனிவுற்றது, முகம் மென்மையானது,கருணையும் பாசமும் சம அளவில் வழிந்து ஓடியது…
இருபத்தி ஐந்து வயது ஆகும் திலோவின் வாழ்க்கையில் பல ஆறாத வலிகள் உண்டு…அவற்றுக்கு எல்லாம் மருந்து உண்டா என்றால் உண்டே என்பார் அவளது தாய் மாமா பஞ்சாட்சரம்…
விவரம் அறியாத வயதில் வாயிலே நுழையாத நோய் தாக்கி தந்தை பாலன் இறக்க…வயசுக்கு வந்த புதிதில் தாய் வாசுகியும் அவளை தவிக்க விட்டு பரலோகம் போய் சேர… தந்தையையும் தாயையையும் முழுங்கிவிட்டவள் என ஊரார் பட்டம் கட்ட…உதவி என்கிற பெயரில் வந்த உறவினர்களோ கயவர்களாகி இவளிடம் அத்துமீற… கேட்பாரற்று கிடந்தவளை தூக்கி தோளில் சுமந்தவர் இவர் அன்றோ… கதியற்ற கிடந்தவளின் வாழ்க்கையை மாற்றி தந்த மாமனிதர் ஆகிற்றே…ஒற்றை ஆளாய் இவளை வளர்த்து பாதுகாத்து படிக்க வைத்து ஆளாக்கி விட்ட மாமனை நினைத்து அவள் நெகிழாத நாட்களே இல்லை…இத்தனைக்கும் அவர் நெருங்கிய உறவு முறை கூட அல்ல…தொட்டு தொடரும் தூரத்து சொந்தம் தான் ஆனால் இன்று வரை அவளையும் அவள் அன்னையையும் வேற்று ஆளாக பாவித்ததே இல்லை…
“வாங்க மாமா…!!என்ன இவ்வளவு தூரம்… எதுவும் விஷயமா மாமா…?? என யோசனையாக கேட்டவளுக்கு நன்கு தெரியும் பஞ்சாட்சரம் அதி முக்கியமான காரணம் இன்றி அவளைத் தேடி ஸ்கூல் வரை வர மாட்டார் என்பது, ஆனால் பள்ளி நேரம் முடிந்து அவளே வீட்டுககே செல்ல இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் வேளையில் அவளை தேடி வரும் அளவுக்கு என்ன அவசரம் என்பது தான்…அவரின் அமைதிவேறு அவளை மேலும் சிந்திக்க வைத்தது ஒரு வேளை உடல் நிலையில் எதுவும் பிரச்சனையாக இருக்க கூடுமோ சொல்ல தயங்குகிறாரோ…”மேலுக்கு எதுவும் முடியலையா மாமா… அதுக்கு தான் வெளில கண்ட இடம் அலையாத்தீக சொல்லுறது எங்க கேக்குறீங்க நீங்க… வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம் இங்க எனக்கும் வேலை முடிஞ்சிது…நானும் உங்க கூடவே வரேன்…!!” என பதட்டத்துடன் அவரை பார்க்க…
அவரோ… “அதெல்லாம் என் உடம்புக்கு ஒன்னும் இல்லத்தா… சும்மா தான் உன்னை பார்க்க வந்தேன்…!!”என்றவர் தன் மருமகளை ஏறெடுத்து பார்த்தார்… “கலையான முகம் நல்ல படித்த பண்பான குணவதி…மைக்ரோ ஸ்கோப் வைத்து தேடினாலும் குறை சொல்லவே முடியாத தங்கப்பெண்…என்ன ஒன்று கல்யாணம் ஆக வில்லை அது மட்டும் தான் ஒரே குறை…
ஆகவில்லை என்பதை விட ஆக விடவில்லை என்பதல்லவா மெய்…
போட்டி என்றும் பொறாமை என்றும் பேர் கொண்டு தன் சுயநலத்துக்காக மனிதனை மனிதன் ஆள நினைக்கும் வரை நாம் எத்தனை பரிணாம வளர்ச்சியின் உச்சத்தை அடைந்தாலும் அது வெறும் கானல் நீர், கற்பனை சித்திரத்திற்கு சமமானதே…
நாமளும் உருப்படாம அடுத்தவன் உருப்புட்டாலும் மனசு தாங்காம வயிற்று எரிச்சல் கொள்ளும் மனிதர்கள் இருக்கும் வரை திலோ போன்ற பெண்களுக்கு (ஆண்கள் )திருமணம் நடக்காவே நடக்காது…(சிம்பிலி டெல்லிங் நமக்கு ஒத்த ஸ்டார் விழும் போது அடுத்தவன் அஞ்சி ஸ்டார் வாங்கினா நமக்கு அவிஞ்சி போகுமே அதே போல… )
அடுத்தவன் மீது எரியும் கல் என்றாவது ஒருநாள் திரும்ப நம் மீதே விழும் என்பதை மறந்து விடுகிறோம்…
தன் மருமகளை நினைத்து ஓங்கி பெருமூச்சு விட்டவர்… “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் செத்த இப்படி உட்காருத்தா…!!” என மருமகள் கையை பிடித்து தனக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்தவர்… பேச வந்த வார்த்தையை எப்படி தொடங்க என தெரியாமல் சற்றே தயங்க… “என்ன மாமா? என் கிட்ட உங்களுக்கு என்ன தயக்கம்? நீங்க சொன்னா நான் உயிரை கூட தர காத்திருக்கேன்… ஆனால் நீங்க அப்படி என்கிட்ட கேக்க மாட்டீங்கன்னும் எனக்கு நல்லாவே தெரியும் மாமா… வேற எதுக்கோ தயங்கிறீங்ன்னு புரியுது ஆனா அது என்னன்னு தான் தெரியல… சும்மா சொல்லுங்க மாமா நான் உங்க செல்ல மருமகள் தான…!!” என அவரை சொல்லும் படி ஊந்தினாள் திலோத்தமா…
“சந்தோசம்த்தா இந்த மாமன் மேல எம்புட்டு நம்பிக்கை வச்சி இருக்கன்னு உன்ற வார்த்தையிலே நல்லா தெரியுது…அதே மாதிரி இந்த மாமன் எது செஞ்சாலும் அது உன் நல்லதுக்குன்னு நம்புறியா ஆத்தா…??”” என இடைவெளி விட்டு அவள் முகத்தை பரிதவிப்புடன் பார்க்க…
“நம்புறேன்…!” என்னும் விதமாக அவள் கண்கள் மூடி திறக்க…அவருக்கு அது போதவில்லை போல வாய் வார்த்தைக்காக காத்து இருந்தார்…அதை புரிந்து கொண்டவள்…
“நீங்க கண்ணக்கட்டிக்கிட்டு கடல்ல விட்டாலும் சரி காதை பொத்தி காட்டுக்குள் விட்டாலும் சரி… நீங்க சொன்னா நான் நிச்சயம் செய்வேன் மாமா…!!” என கிண்டலாக சொன்னாலும் அவர் மீதான அவள் நம்பிக்கையை பட்டவர்த்தனமாக தெரிவிக்க…அகம் நெகிழ்ந்து போனவர்…
“ஹாஹா அப்படி போடு நான் உன்னை கண்ணை காதை பொத்தி கடல்ல விழ சொல்லி எல்லாம் கேக்க மாட்டேன் ஆத்தா அதுக்கு பதிலா நான் காட்டுற மாப்பிளைக் கிட்ட நீ கழுத்தை நீட்டுனு மட்டும் தேன் கேப்பேன்…!!”என்றவர் ஒரு வழியாக உண்மையை போட்டு உடைக்க… சின்ன அதிர்ச்சி வந்து போனதுக்கான தடம் அவள் முகத்தில்…நொடிக்குள் அதை மறைத்து கொண்டாள் சாமர்த்தியமாக… “ எதிராளிக்கு உன் உணர்வுகளை காண்பிக்காதே என்பது தானே அவள் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட முதல் உளவியல் பாடம்…
“என்னாத்தா அமைதியா இருக்க…என் வார்த்தைக்கு நீ கட்டுப் படுவ என்கிற நம்பிக்கையில தான் உன்னை கேக்காம மாப்பிளை முடிவு பண்ணி கல்யாண தேதியையும் குறிச்சுட்டு வந்துட்டேன் … என்னத்தா மாமா உன்கிட்ட கேக்காம உன் விஷயத்துல அவசரமா முடிவு எடுத்துப் புட்டேன்னு கோவமா… எல்லாம் உன் எதிர்காலம் கருதி எடுத்த முடிவு தான் ஆத்தா…என்னை நம்பு தாயீ இந்த மாமா உனக்கு நல்லது மட்டும் தான் நினைப்பேன்…என்ன ஆத்தா அப்படி பார்க்கிற எதாவது பேசு ஆத்தா…!!” என வாஞ்சையாக கேட்க…
“ச்சே அதுகில்ல மாமா இதெல்லாம் நான் வீட்டுக்கு வந்ததும் பேசி இருக்கலாமே அதை விட்டு ஸ்கூல்ல வச்சே பேச வேண்டிய அவசரம் என்ன…?? அதை தான் யோசிச்சேன் என்றவள் வார்த்தைகளில் அப்பட்டமாக குழப்பம் தெரிந்தது…
“அவசரமா…?? அவசியம் ஆத்தா… எந்த நேரத்துல எவன் குடிய கெடுக்கலாம்னு அலையுற **** பய மவனுங்க மத்தியில உனக்கு ஒரு கல்யாணத்தை எப்படியாவது பண்ணிப்புடனும் கிடந்து தவிக்குறது எனக்கு தானா தெரியும்… எம்புட்டு சீக்கிரம்முடியுமோ அம்புட்டு சீக்கிரம் உனக்கு கல்யாணத்தை பண்ணி புடனும்… இல்லாட்டி இதையும் எந்த வினையம் புடிச்ச தற்குறி முண்டமும் தட்டி கெடுத்துப்புடும் … அந்த அவசரம் ஆத்தா… வயசு புள்ளைய வீட்டுல வச்சிகிட்டு சுத்தறதும் வயத்துல நெருப்பை கட்டிகிட்டு சுத்துறது ஒன்னு ஆத்தா… நான் நல்லா இருக்கும் போதே உன்னை கரை ஏத்திட்டா போதும் நான் நிம்மதியா கண்ணை மூடிக்குவேன்… !!”என்றவர் கடைசி வரியில் உணர்ச்சி பெருக கூறியதில் அவர்கள் கண்களில் சிறு நீர் மணி உருண்டு ஓடியது…
“ஐயோ மாமா நீங்க கண் கலங்குனா எனக்கு தாங்காது மாமா… இப்போ என்ன நீங்க சொல்ற பையனை கட்டிக்கணும் அவ்ளோ தான…?? நீங்க பார்த்து ஒரு கழுதையை கட்டிக்க சொன்னா கூட கட்டிக்குவேன்… நீங்க கொண்டு வந்த மாப்பிளை கட்டிக்க மாட்டேனா என்ன …?? அவ்வளவு தான மாமா இப்போ உங்களுக்கு சந்தோசம் தான வாங்க வீட்டுக்கு போலாம்…!!” என்ற திலோவுக்கு பஞ்சாட்சரம் கண்ணீர் சிந்துவதில் சிறுதும் விருப்பம் இல்லை வளர்த்த பாசம் அன்றோ…
“ நான் வளர்த்த கழுதை நீ… உனக்கு ஒண்ணும் தெரியாது நான் பார்த்து யாரை காட்டுறேனோ அவனை தான் கட்டிக்கணும்…!!” என மற்றவர்களை போல் அதிகாரம் பண்ணாமல்…அவளிடம் அனுமதி கேட்டு நிற்கும் மாமனை நினைத்து எப்போதும் ஒரு பெருமிதம் தான்…
அப்படி அவர் பண்ணாமல் இருக்க இரண்டு காரணங்கள் இருந்தன… முதலாவது ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையில் அத்தனை துயரையும் அவள் சிறுவயதிலே கடந்து விட்டதால்… வாழ்க்கை அவளுக்கு கற்று கொடுத்த மிக பெரிய பாடங்களில் ஒன்று யாவருக்கும் அஞ்சாதே… இதை செய் அதை செய் என்று அவ்வளவு எளிதில் அவளை வற்புறுத்தி விட முடியாதே… அவளுக்கு வேண்டியதை அவள் ஏற்கவும் மறுக்கவும் முழு உரிமையை அவளுக்கு கல்வி அறிவு வழங்கியது என்றால் அவள் வேலை அதற்கு உரம் போட்டது என்பதும் மெய்யே…
இரண்டாவது காரணம் தான் வளர்த்த பிள்ளை என்றாலும் அவளது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு மதிப்பளித்து மரியாதை கொடுப்பது … நிச்சயம் இதில் அவளின் மாமா இரண்டாவது ரகம் என்பதில் எள்ளவும் ஐயமில்லை…ஆனால் இத்தனை அவசரமாக ஏன் என்பது சிறு உறுத்தல்… ஆனால் அதற்கும் விளக்கம் அளித்து விட்டாரே இதற்கு முன்பும் அவர் கொண்டு வந்த சம்பந்தங்களை எல்லாம் அந்த “குறுக்கு புத்தி’ கெடுத்து விட்டது என மாமா சொல்லாமல் சொன்னது யார் என்பது அவளுக்கே தெரியுமே… பாவம் இந்த வயதான காலத்தில் அவளுக்காக வரன் தேடி போகாத இடமில்லை அத்தனையும் குறுக்கே புகுந்து கெடுத்து விடும் புண்ணிய வான்கள் ஏராளம்… இது போதாதா ஊர் வாய்க்கு இடிக்கும் அவலாக அவள் கதை ஆகீற்று… இதில் வேற அவளைப் பற்றிய அசிங்கமான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் சில சின்னபுத்தியுள்ள ஜென்மங்கள்… பிறர் வலியில் இன்பம் காணும் ஈனப் பிறவிகள்… எனவே இந்த வரனும் அப்படி ஆகி விட கூடாதே என்று இவ்வளவு மெனக்கெடுகிறார் என்றால் இவள் மீது தான் இந்த மனிதருக்கு எத்தனை பாசம் நினைக்கையில் நெஞ்சம் நெகிழத் தான் செய்தது…
“சரித்தா இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு… நீ சரின்னு சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு தெம்பே வந்து இருக்கு…பத்து வயசு குறைஞ்சாப்புல இருக்கு…உன் கல்யாண வேலை எல்லாம் நானே ஓடி ஆடி முடிச்சிட மாட்டேன்… என உண்மையாகவே பத்து வயது குழந்தையாக துள்ளியவர் உடனே என்ன நினைத்தாரோ… பின் நிதானமாக
“ஆத்தா என்னதான் நான் சொன்னேன்னு நீ ஒத்துக்கிட்டாலும்…மாப்பிளை கூட உனக்கு ஒத்துவரனுமே ஏன்னா கட்டி வைக்கிறது நானா இருந்தாலும் காலம் பூரா வாழ போறது நீ தானே அதனால மாப்பிளை வெளில தான் நிக்கறாரு அவர் கிட்ட பேசிபாரு சரியா வந்தா மேல போவோம்…இல்லைன பரவால்ல பரத்துப்போம்… ஆனால் ஒன்ன மட்டும் மனசுல வச்சுக்காத்தா உனக்கு பிடிக்காது எதையும் இந்த மாமன் செய்ய மாட்டேன்…!!”என்றவர் இறுதி வரியை உறுதியாக கூறி விட்டு செல்ல…
மாப்பிளை யார் என வெளியே வந்து பார்த்த திலோவின் விழிகள் விரித்து சற்றே அதிர்ந்து தான் போனாள்…இவனா…??
அந்த இவன்??? அவன்??? யார் எவன்?? என்பதை அடுத்த எபில வரும் என சொல்லிக் கொண்டு இந்த இது அது யது ரைட்டர் எஸ் ஆகிறார்…
👌👌👌👌👌👌👌👌👌👌
🙂 tq