என் வினோதனே
அத்தியாயம் 1
சென்னை விமான நிலையம் அன்று வழக்கத்தை விட மிகவும் பரபரப்பாக காணப்பட்டது சற்று அதிகப்படியான மக்கள் கூட்டம் இருந்தது காரணம் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான
அஜய்கிருஷ்ணா தன் சமீபத்திய படம் ஒன்றிற்க்கான தேசிய விருதை வாங்கி விட்டு டெல்லியில் இருந்து வந்து கொண்டிருக்கிறான் அவனை வரவேற்க்கவே அவனின் ரசிகர்கள் பட்டாளம் மொத்தமும் விமான நிலையத்தின் வாசலில் தவம் கிடந்தனர்.
இதில் பெண் விசிறிகளும் அடக்கம் ஒரு தடவையெனும் அவனை தொட்டு விட மாட்டோமா அவன் கையை பிடித்த விட மாட்டோமா என்று அவனுக்காக அங்கேயே ஒரு கூட்டம் ஏங்கி கிடந்தது.
டெல்லியில் இருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கியது ஒவ்வொரு பயணியாக வெளியே வர ஆரம்பித்தனர் எப்போது அஜய் வெளியே வருவான் என்று அனைவரும் வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு கால் வலிக்க நின்றிருந்தனர்.
அவர்களின் எதிர்ப்பார்பை எல்லாம் பொய்யாக்காமல் நட்சத்திர நாயகன் அஜய் கிருஷ்ணா ஆறடி மூன்று அங்குல உயரத்தில் அதற்கேற்ற உடல்வாகுடன் வேக நடையுடன் தன் ஷூ காலின் சத்தத்துடன் டக் டக் என்று வெளியே நடந்து வந்து கொண்டிருந்தான்.
அஜய் கிருஷ்ணா வயது 30 ஆகிறது இன்னும் திருமணமாகவில்லை தமிழ் திரையுலகின் மிக முக்கிய நட்சத்திரம் தனது 50-வது படத்துக்கான தேசிய விருதை தான் இன்று வாங்கி கொண்டு வெற்றி நடைப்போட்டு வந்து கொண்டிருக்கிறான்.
அவனை பார்த்த பெண்கள் கூட்டம் ஆர்பரித்தது இன்னும் சிலர் இது நிஜம் தானா என்ற திகைப்பில் இருந்து வெளி வராமலேயே அவனை பார்த்து கொண்டே நின்றிருந்தனர்.
தன் உடலோடு ஒட்டி இறுக்கி பிடித்த நீல நிற ஷர்ட் அணிந்து அதற்க்கு ஏற்றார் போன்று நீல நிற ஜீன்ஸ் அணிந்து இருந்தான் தினமும் உடற்பயிற்சி செய்ததன் பலனாக கட்டுமஸ்தான உடவ்வாகுடன் அலை அலையான கேசம் காற்றில் பறக்க கர்ஜிக்கும் சிங்கத்தை போல நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவன் வெளியே வந்தவுடன் அவனின் ரசிகர்கள் பட்டாளம் அவனை சூழ்ந்து கொள்ள அவனின் பவுன்சர்களும் அவனை சூழ்ந்து கொண்டு அஜய்யின் அருகில் அவனின் ரசிகர்களை நெருங்க விடாமல் செய்தனர்.
அத்தனை கூட்டமும் அவனை பார்த்து கத்தி “ஏ.கே ஏ.கே” என்று அழைக்க பதிலுக்கு அவர்கள் யாரையும் திரும்பி கூட பாராமல் வெளியே விறுவிறுவென நடந்து வந்த அஜய் தன் காரில் ஏற போக பத்திரிகையாளர்கள் ஓடி வந்து அவன் முன் மைக்கை நீட்டி கேள்விகள் எழுப்பினர் “அஜய் சார் உங்களோட முதல் தேசிய விருதை வாங்கிட்டு வந்துருக்கிங்க இதை பற்றி உங்கள் கருத்துகளை சொல்லுங்க” என்றான் ஒருவன் அவனின் பி.ஏ உடனே அவர்கள் முன் வந்து “சார் ரொம்ப டயர்ட்டா இருக்காரு இன்னொரு நாள் உங்க கேள்விக்கு பதில் சொல்லுவாரு” என்றான்.
மீண்டும் அவன் தன் காரில் ஏற போக
“அஜய் சார் உங்க முன்னாள் காதலி ஷில்பா உங்க சொந்த தம்பி வினய்யவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே அதைப் பற்றி எதாவது கருத்து சொல்ல விரும்புறிங்களா உங்களுக்கு அது கஷ்ட்டமாவே இல்லையா” என்று அங்கிருந்த பத்திரிகையாளன் ஒருவன் கேள்வி கேட்டான்.
அஜய்யின் முகம் உடனே கோபத்தில் ரத்த நிறத்தில் சிவந்து போனது “யார் இந்த கேள்வியை கேட்டது” என்று தன் கம்பீரமான குரலில் கோபத்துடன் கேட்டான் “நான் தான் சார் பதில் சொல்லுங்க” என்று ஒருவன் அவன் முன் வந்து தைரியமாக நின்று கேள்வி கேட்க சற்றும் யோசியாமல் அடுத்த நொடி அவனின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறைவிட்டான் அஜய்.
அதோடு விடாமல் அவன் முகத்தில் ஓங்கி குத்த அவன் வாயில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது அஜய்யின் பி. ஏ பிரதாப் அவனை பிடித்து தடுக்க அவனை பிடித்து இடித்து தள்ளிவிட்டு மீண்டும் அந்த பத்திரிகையாளனை விடாமல் கோபத்துடன் அடித்து வெளுத்து கொண்டு இருந்தான் அதை அங்கிருந்தவர்கள் தங்கள் கேமராக்களில் படம் பிடித்து கொண்டனர்.
கீழே விழுந்த பிரதாப் மீண்டும் எழுந்து ஓடி வந்து அஜய்யை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்று காரில் ஏற்றியவன் விரைவாக அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டான்.
அஜய் அப்போதும் தன் கோபம் குறையாமல் காரில் அமர்ந்திருக்க “சார் நீங்க பண்ணினது ரொம்ப பெரிய தப்பு இன்னைக்கு சோஷியல் மீடியா முழுக்க இந்த விஷயம் வைரல் ஆக போகுது” என்று கூற.
அஜய் அவனை திரும்பி ஒரு பார்வை மட்டுமே பார்த்தான் அதிலேயே பிரதாப் தன் வாயை மூடிக்கொண்டான்.
அஜய் கிருஷ்ணாவுக்கு ஒரு தம்பி இருக்கிறான் தீபக் அவனும் அவனின் முன்னாள் காதலியான ஷில்பாவும் திருமணம் செய்து கொண்டு சரியாக ஆறு மாதங்கள் ஆகிறது ஷில்பா அஜய்யை காதலிக்கும் போதே அவன் தம்பியுடன் தவறான உறவு முறையில் இருந்தது தெரிய வந்து அவன் அவளிடமிருந்து விலகிவிட்டான்.
ஆறு மாதத்துக்கு முன் இந்த செய்தி பயங்கர வைரலாகி சோஷியல் மீடியாவையே அலற விட்டது ஏனெனில் ஷில்பாவும் அஜய்யும் மூன்று வருடமாக காதலித்து வந்தனர் அதன் புகைச்சல் இப்போது வரை குறையவேயில்லை வேண்டுமென்று அவனிடம் கேள்வி கேட்டு அவன் கோபத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
அஜய்யின் மனதிலும் அது ஆராத வடுவாகி இருந்தது இத்தனை வருடமாக தன்னை ஒருத்தி நம்ப வைத்து ஏமாற்றி விட்டாள் என்ற வலி அதை யாரிடமும் காட்ட முடியாமல் கோபத்துடன் அமர்ந்து இருந்தவன் “டிரைவர் காரை பிரதாப் அங்கிள் கிளினிக்கு விடு” என்று கூறினான்.
“ஓகே சார்” என்று கூறிய டிரைவர் ஒரு அரை மணி நேர பயணத்துக்கு பிறகு கிளினிக்கின் வாசலில் வந்து காரை நிறுத்தினான் அஜய் காரிலிருந்து இறங்கியவன் முகத்திற்க்கு மாஸ்க் மற்றும் கண்ணில் கண்ணாடி அணிந்து கொண்டு தன்னை யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் உள்ளே சென்றான்.
அங்கே வரவேற்பில் இருந்த பெண்மணி அஜய்யை வழிந்து கொண்டே ஒரு பார்வை பார்க்க அவனோ அவளை எரிப்பதை போல பார்த்துவிட்டு “டாக்டர் இருக்காரா” என்று கேட்டான்.
“இருக்காரு சார் போங்க உங்களுக்காக தான் வெயிட் பண்றாரு” என்றாள் வழிந்து கொண்டே அவனும் பதிலுக்கு தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான்
அவன் கதவை திறந்து உள்ளே போகும் வரை அந்த பெண் அவனையே தான் பார்த்து கொண்டு இருந்தாள் அஜய்க்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் தான் அதிகம்.
அஜய் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அவனின் தந்தை வயதில் உள்ள பெரியவர் ஒருவர் அமர்ந்து இருந்தார் அவர் தான் அஜய் அப்பாவின் உயிர் தோழன் வேல்முருகன்.
“வா அஜய் உட்காரு” என்று தன் எதிரே இருந்த இருக்கையை காட்ட அவனும் அமர்ந்து கொண்டான் “வாழ்த்துக்கள் அஜய் உன்னோட முதல் தேசிய விருதுக்கு” என்று கூறி அவன் கையை பிடித்து குலுக்கினார் அவனும் பதிலுக்கு லேசாக புன்னகைத்தான்.
“இப்போ சொல்லு அஜய் ஏன் என்னை டெல்லியில் இருந்து வந்த உடனே பார்க்கனும்ன்னு சொன்ன உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டவுடன் அவன் முகம் தடுமாற ஆரம்பித்தது எப்போதும் விரைப்பாக சுற்றுபவன் யாருக்கும் அஞ்சாதவன் முதல் முறையாக அவரின் முகம் பார்க்க முடியாமல் தடுமாறினான்.
“அஜய் நீ என்ன பிரச்சனைன்னு சொன்னா தான் அதுக்கான தீர்வை என்னால சொல்ல முடியும் நீ என்னை டாக்டரா பாரு உன் அங்கிள்லா இல்லை” என்றார்.
அஜய் அப்போதும் இதை எப்படி கூறுவது என்று தடுமாறியவன் டேபிளில் இருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து தன் வாயில் சரித்து குடித்து முடித்தவன் எங்கோ பார்த்து கொண்டு பேச ஆரம்பித்தான்
“அங்கிள் நான்… எனக்கு… மத்தவங்க கிட்ட எதுவும் சொல்ல முடியலை அங்கிள்
நாள் முழுக்க என் உடம்பும் மனசும் ஒரே விஷயத்துல தான் இருக்கு அதை எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னே தெரியலை அங்கிள்” என்றான் தடுமாறி கொண்டே.
“நீ எதுவா இருந்தாலும் என் கிட்ட வெளிப்படையா சொன்னா மட்டும் தான் அதுக்கான தீர்வை என்னால சொல்ல முடியும் கம் ஆன் அஜய்”
அஜய் அப்போதும் அவர் முகத்தை பார்க்க முடியாமல் “அங்கிள் நான் எந்த தப்பும் செய்யலை பட் என் மூளை எப்பவும் செக்ஸ் பத்தி மட்டும் தான் யோசிக்குது நான் எந்த பொண்ணை பார்த்தாலும் இதே யோசனை தான் என்னால என்னையவே கன்ட்ரோல் பண்ண முடியலை எனக்கு பிடிக்கவே இல்லைனாலும் அதே நினைப்பு தான் இருக்கு சாப்பிடும் போது தூங்கும் போது குளிக்கும் போது எப்பவுமே இதே யோசனை மட்டும் தான் இருக்கு அந்த கற்பனையில மூழ்கி என்னால சரியா வேலை கூட பார்க்க கூட முடியலை எனக்கு என்னை நினைச்சே ரொம்ப அருவருப்பா இருக்கு” என்று தவிப்புடன் சங்கடத்துடனும் கூறி முடித்தான்.
கண்ணன் அனைத்தையும் கேட்டு முடித்தவர் “இது உனக்கு எவ்வளவு நாளா இருக்கு அஜய்” என்று கேட்டார்
“ஒரு ஆறு மாசமா இருக்கு அங்கிள் பட் இப்போ கொஞ்ச நாளா ரொம்ப அதிகமா இருக்கு என்னால என்னையே கன்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு இருக்கு” என்றான்.
அனைத்தையும் குறிப்பு எடுத்து கொண்டவர் “இது ஒரு நோய் அஜய் இதோட பெயர் hyper sexual disorder” என்றார்.
“வாட் நோயா என்ன அங்கிள் சொல்றிங்க” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அஜய்
“எஸ் அஜய் இந்த நோய் உலகளவுல 3 முதல் 6 சதவீதம் பேருக்கு வந்தருக்கு பெண்களை விட ஆண்கள் அதிகம் இந்த நோயால பாதிக்கப்படுறாங்க போதை பழக்கம் சின்ன வயசுல ஏற்பட்ட பாதிப்பு மன அழுத்ததால கூட இந்த நோய் வர வாய்ப்பு இருக்கு” என்றார்.
“இதை குணப்படுத்தவே முடியாதா அங்கிள்” என்று கேட்டான் அஜய்
“கண்டிப்பா குணப்படுத்தலாம் அஜய் நீ ரெகுலரா என் கிட்ட கவுன்சிலிங் வா யோகா பண்ணு நான் கொடுக்குற டேப்லட்ஸ் எடுத்துக்கோ சீக்கிரமே சரி ஆகிடும்” என்றார்.
“அங்கிள் என்னால ராத்திரியில தூங்கவே முடியலை என் மனசு அமைதியாவே இருக்க மாட்டேங்குது எனக்கு பிடிக்கவே இல்லைனாலும் அதை பத்தி மட்டும் தான் யோசிக்குது” என்றான்.
“நைட் ஸ்லிப்பிங் டேப்லட்ஸ் தரேன் ரெகுலரா எடுத்துக்கோ நாம இதை சரி பண்ணிடலாம்” என்க
“அங்கிள் இதை அம்மா அப்பா கிட்ட இப்போதைக்கு சொல்ல வேண்டாம் அவங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க” என்றான்.
“நீ கவலையே படாத அஜய் உன் அம்மா அப்பாவுக்கு எதுவும் தெரியாது நான் பார்த்துக்குறேன்” என்றார்.
“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” என்று கூறிய அஜய்யும் அதன் பின் நிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பினான் அவனுக்கு அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவனின் இந்த நிம்மதி இன்னும் குறை காலத்துக்கு மட்டுமே என்பது.
super start bro