6
என்றும் போல் அன்று வழக்கமாக பள்ளியை விட்டு நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் மேனகை… திலோவிற்கு நிச்சயம் ஆகி விட்டதால் தினமும் பஞ்சாட்சரமே வந்து அவளை அழைத்து சென்று விடுவார்… அவள், தானே தனியாக சமாளித்து கொள்வதாக கூறினாலும்… நீ இன்னொரு வீட்டுக்கு போக போற பொண்ணு ஆத்தா… உன்னை கட்டிக் கொடுக்கற வரைக்கும் ஈ எறும்பு காத்து கருப்பு அண்டாம பாத்துக்க வேண்டியது என்னோட கடமை… கண்ணாலம் முடியுற மட்டும் நானே கொண்டு வந்து விட்டு போறேன் அதுக்கு அப்புறம் நானே நினைச்சாலும் இதெல்லாம் என்னால உரிமையா செய்ய முடியாதே ஆத்தா…!!” என சோகம் போல் காட்டி சொன்னவரை தட்ட முடியவில்லை திலோவால்…
எனவே மேனகை மற்ற ஆசிரியர்களோடு அல்லது மாணவர்களோடு கதை அளந்தப் படி வீடு வந்து சேர்வாள்…
அன்றும் அப்படி தான் தன் சக ஆசிரியர்களோடு சிரித்து பேசிய வண்ணம் வந்து கொண்டு இருந்தவளை கையில் ரோஜாப் பூவுடன் எதிர்கொண்டான் அந்த ஊரின் பேரழகன் ஆல் இன் ஆல் அழகுசுந்தரம்… வயது பின் முப்பதுகளில் கடைசிப் படி…வயசுக்கேற்ற செயலும் புத்தியும் கிடையாது… வெட்டியாக ஊரை சுற்றி கொண்டு , வயதில் சின்ன பசங்களை கூட்டு சேர்த்து கொண்டு, ஊரில் உள்ளவர்களிடம் வம்பு இழுத்து வாங்கி கட்டிக் கொண்டு திரியும் இவனை… சாரி இவரை சில்லறை பயல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல வேண்டுமாம்…
ஒரு வேலை வெட்டிக்கு போக கூடாதா என்று கேட்டால்… தாத்தன் அப்பன் சேர்த்த சொத்து இருக்கு அதுவே ஆறு தலைமுறைக்கு குந்தி திண்ணலாம்… நான் எதுக்கு மூளைய குடைந்து வேலை பார்க்கணும்…சாரி எனக்கு வியர்வை என்றாலே அலர்ஜி என்பான்…
சரி திருமணமாவது செய்து வைத்தால் பொறுப்பு வருமா என்று பார்த்தால்… பள்ளிச் சிறுமி முதல் பல்லு போன கிழவி வரை ஊரில் உள்ள மொத்த பெண்களுக்கும் இவன் காதல் கடிதம் கொடுத்து காரி துப்பிய வரலாறும் உண்டே… இவன் ஹிஸ்ட்ரிய பார்த்து எவன் பொண்ணு கொடுக்க முன்னுக்கு வருவான் அப்படியே சொத்தை பார்த்து எவனாவது பொண்ணை தர முன் வந்தாலும்… இவனின் கிறுக்கு புத்தியால் சகலமும் கெட்டு விடுகிறது… நீ எல்லாம் உருப்படவே மாட்டடா எக்கேடோ கெட்டுப் நாசமா போ…என வீட்டை விட்டு விரட்டி விட…
“உங்களுக்கெல்லாம் நான் யாருன்னு தெரியல… இந்த ஊர்லயே அதிகம் படிச்ச புள்ளயா அழகு புள்ளையா பார்த்து நான் காதலிச்சு கல்யாணம் பண்ணி காட்டல இல்லை காட்டுவேன் அப்போ இருக்குடி உன் மொத்த குடும்பத்துக்கும்… என சவால் விட்டு சென்றவன்… பொண்ணு தேட வசதியாக பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக சுற்றி திரிகிறான்… பின்ன படிச்ச பொண்ணா பார்த்து கட்ட வேணும் இல்ல… அதுக்கு கல்லூரி பக்கம் போலாமே நீங்க கேக்கலாம்… ஐயாவுக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை என்பதே மெய்…
பள்ளிக்கூட மாணவிகள் பக்கம் போனால் “போக்சோ” என்று தெரியுமே… அதனாலே தூண்டிலை டீச்சர்களுக்கு போட ஆரம்பித்து விட்டான்… படிச்ச புள்ளைய கட்டணும் தான சபதம்!! நாலு பேர படிக்க வைக்குதுனா
அப்போ எம்புட்டு பெரிய படிப்பாளி??? நான் கட்டிக்கிட்டா டீச்சரை தான் கட்டுவேன்…!! என்று ஒற்றைக்காலில் நிற்கிறான்…(பார்த்து ராசா அந்த காலம் உடைந்து போயிடாம )
ஊர் முழுக்க உள்ள பள்ளி கல்லூரி டீச்சர்களுக்கு இவன் போட்ட தூண்டிலில் சிக்கியது என்னமோ பேட்டா செருப்பும் பேரகான் செருப்பும் தான் இதில் வாக்ரோவும் உண்டே…அப்பவும் அசராமல் வலை வீசி திரிந்தவனின் பார்வை வட்டத்தில் வந்து விழுந்தாள் மேனகை…
அவளின் அமைதி அழகு அறிவு எல்லாம் இவனை சுண்டி இழுக்க… ஒரு தலையா இந்த தறுதலை அவள் பின்னால் சுற்றுகிறது… அவளோ இவனை கண்டாலே பூச்சாண்டி என்று பயந்து ஓடி ஒளிகிறாளே… திலோ இருந்தவரை இவன் தொல்லை மேனகைக்கு இல்லை… அது ஏன் என்று சொல்ல வேண்டுமானால் அவன் முதல் முதலில் நூல் விட்டு பார்த்ததே திலோத்தமாவிற்கு தான்… அதன் பலன் கடவா பல் கொட்டி போனதுதான் மிச்சம்…அதன் பின்பே அழகு சுந்தரத்தின் ஃபோகஸ் மொத்தமும் அப்புராணி மேனகை பக்கம் திரும்பியது…
இவனும் காலை முதல் மாலை வரை மேனகைக்காக அவள் பள்ளி வாசலிலே அவளுக்காக காத்து கிடப்பது… அவள் திரும்பி கூட பார்க்க மாட்டாள் என தெரிந்தே இவளை பின் தொடர்வது…அவளுக்கே தெரியாமல் அவள் பையில் பூ போடுவது… அவளிடம் படிக்கும் மாணவர்களை கரெக்ட் பண்ணி பல்லி மிட்டாய் புளிப்பு மிட்டாய் என்று வாங்கி இவளுக்கு கொடுத்து விடுவது… தினம் ஒரு காதல் கடிதம் எழுதி இவளிடம் கொடுத்து விடுவது… அதில் அந்த அம்மாவேறு அவன் கடிதத்தில் உள்ள பிழைகளை சிகப்பு மையால் திருத்தி ஃபெயில் மார்க் போட்டு தருவது என இவன் செய்யும் கூத்துகள் இன்னும் ஏராளம்…
எப்போதும் போல் இப்போதும் பள்ளி முடிந்து வரும் மேனகையிடம் இவன் வம்பு செய்ய தொடங்கினான்…
ராக்கு புள்ள ராக்கு, என்ன ராக்கு உன் பாட்டுக்கு போற வார மாமனை கண்டுக்கிறதே இல்லை…மாமனுக்கு எப்போ அஞ்சி ஆறு கஞ்சி ஊத்தறது என்னும் சினிமா வசனத்தை மேனகை பார்த்து வேண்டும் என்றே கத்தி கூற…
அவளோ இவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை கிஞ்சதுக்கும் மதிக்காமல் கடந்து சென்றாள்…அவள் உடன் வந்த பயாலஜி ஆசிரியையோ…
“ஏய் மேனகா அவன் உன்னை தாண்டி சீண்டி கிட்டு இருக்கான்…!!”என்க
“தெரியும் டீச்சர் நீங்களும் கண்டுக்காம அமைதியா வாங்க ப்ளீஸ் …!!” என மேனகா பயந்த குரலில்…
“ஏய் எதுக்கு இப்படி பயந்து சாகுற அவன் என்ன பண்ணிடுவான் வா என்னனு கேப்போம்…!!” இவள் கையை பற்ற
“ஐயோ டீச்சர் எதுக்கு வம்பு அவனை பார்த்தாலே பொறுக்கி மாதிரி தெரியுது அவன் கிட்ட எல்லாம் நமக்கு வம்பு வேணாம் வாங்க…என இவளும் அவர்கள் கையை கெட்டியாக பிடித்து கொண்டு கெஞ்ச…
சரி நீ கேக்க வேணாம் வா உங்க வீட்டு ஆளுங்க கிட்ட சொல்லி ஊருல உள்ள நாலு பேர் சேர்ந்து இவனை நாலு போடு போட்டா தான் ரெண்டாவது உன் பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான்… என்க…
ஐயோ அதை விட வேற வினையே வேணாம் வாங்க எங்க அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சிது… அவன் உன்னை பார்க்கிற வரை நீ என்னடி பண்ணிட்டு இருந்த நின்னு என்னைப் பார் என் அழகை பாருன்னு பல்லு இளிச்சுட்டு நின்னியா… இதுக்குதான் பொட்ட பிள்ளைய எல்லாம் படிக்க வச்சு வேலைக்கு அனுப்ப கூடாதுன்னு சொல்றது… நீ வேலைக்கு போய் கிழிச்சதெல்லாம் போதும் உனக்குன்னு ஒரு மாப்பிள்ளை பார்த்து பேசி முடிக்க வரை ஒரு மூலைல கடன்னு…!!” எங்க அம்மா என்னை வேலைய விட்டு நிறுத்திடுவாங்க டீச்சர்… ப்ளீஸ் டீச்சர் எனக்கு இந்த வேலையால தான் கொஞ்சம் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் இருக்கேன்… இதுவும் இல்லனா எனக்கு வேற ஆறுதலே கிடைக்காது டீச்சர்… எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்குமாவது நான் இந்த வேலையில தொடரனும்னு ஆசை படுறேன்… இந்த பிரச்சனைய இங்கயே விட்ருங்க… இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் கண்டுக்காமல் விட்டாலே போதும் அவனுங்களே கடுப்பாகி சீப்பே இது தேறாதுன்னு போயிடுவாங்க டீச்சர் ப்ளீஸ் என மேனகை மன்றாட “என்னமோ நீ சொல்ற மேனகா ஆனா இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் முளையிலே கிள்ளி வைக்கணும் அப்புறம் விட்டா பின்னால ஆபத்து ஆகிடும்… பார்த்துக்க என எச்சரிக்கையோடு அவளும் அத்தோடு விட்டு விட்டாள்…
சரி சரி என தலை ஆட்டிய மேனகையோ தனக்கு திருமணம் ஆகி விட்டால் இவன் பின்னால் வரமாட்டான் என அழுத்தமாக நம்பினாள்…வைக்கோல் போர் நாய்களும் இங்கு உண்டு என்பதை அவள் மறந்தே போனாள் பாவம்…
ஒருவாறு தன் வீடு இருக்கும் திசை வரை பாதுகாப்பாக வந்து சேர்ந்த மேனகை திரும்பி சுந்தரம் தொடர்ந்து வருகிறானா என்று பார்த்து இல்லை என்றான பின் நிம்மதியாக வீடு நோக்கி வர அவள் வீடு திரும்பும் முற்றில் கூட்டம் கூடி நின்றது…
என்ன கூட்டம் இது… எங்க வீடு வேற அமைதியா தான் இருக்கு அப்போ அம்மா பஞ்சாயத்து இல்லை அப்புறம் வேற யாராக இருக்கும் என கூட்டத்தை ஒதுக்கி விட்டு உள்ளே சென்று பார்த்தவளுக்கு இதயம் கணத்து போனது…
அங்கு முழுபோதையில் ஆடை விலகியது கூட அறியாமல் தரையில் சரிந்து உருண்டு கிடந்தான் அவளின் முறை மாமன் சீரளான்…
எப்பொழுதும் தோரணையுடன் முறுக்கு மீசையும் முழுக்கை சட்டையும் வேட்டியும் கட்டி கம்பீரமாக புல்லட்டில் பார்த்தவனை இன்று இப்படி நடு ரோடு என்றும் பாராமல் குடிபோதையில் வாந்தி எடுத்து மயங்கி கிடந்தவனை கண்டவளுக்கு காட்சி பிழையானதோ…??
முறையில் இருந்த பெண் மீது ஆசை பட்டு காசை வாரி இறைத்து கல்யாணம் பண்ணி வைக்க… அந்த பெண்ணோ இந்த முரடனை பிடிக்க வில்லை என் காதலனோடு போகிறேன் என முதலிரவில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடி விட… இவனுக்கு எஞ்சியது என்னவோ அவமானமும் ஆண்மையற்றவன் என்னும் பட்டம் மட்டுமே… அதில் இருந்து குடிக்க ஆரம்பித்தவன் தான்… தன் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்தவன் கடைசியில் தன்னையே மறந்து குடிக்கு அடிமை ஆகி போனான்…
சீராளனின் நிலைமையை கண்டு அவனை அப்படியே விட்டு செல்ல மனமில்லாமல் அருகில் இருந்த கடையில் சோடாவை வாங்கி அவன் போதையை தெளிய வைக்க…
“எந்த **** மவன்டா அது மூஞ்சில தண்ணி தெளிச்சது… விக்கிற விலைவாசியில் சரக்கு விலை என்னன்னு தெரியுமாடா… என கத்தி கொண்டே கண் விழித்து பார்த்தவன் எதிரில் மேனகை நின்று இருக்க…
“ தங்க புள்ள நீயாடா மாமனை எழுப்பினது நான் கூட இந்த **** பயலுங்க நினைச்சேட்டேன்…!!”என போதையில் குழறலாக வந்து விழுந்தன வார்த்தைகள்…
“ஏன் மாமா இப்படி குடிக்கிற… ரோட் எது வீடு எதுன்னு வித்யாசம் தெரியாம போதையில் கிடக்குறியே உனக்கே இது நல்லா இருக்கா… எந்திரி மாமா வீட்டுக்கு போலாம் மேல எல்லாம் ஒரே அழுக்கு என கைத் தாங்கலாக சீரளான் எழ உதவி புரிய… அவள் கையை தள்ளி விட்டு தட்டு தடுமாறி எழுந்து நின்றவன்…
“தொடாதப் புள்ள …. மாமா அழுக்கு உவக்கு வாந்தி …!! நீ அழகு தங்க புள்ள டீச்சர் என சல்யூட் அடித்தவன்… “என்னை தொட்டா நீயும் அழுக்காகிடுவ வ்வேணாம்… உன் அம்மா வையும்… நீ போ ஆத்தா நான் போயிக்கிறேன்…!!”என உளறிய படி சரிய போனவன் முட்டு சுவரை பிடித்து நின்று சமாளித்து விட்டு “மாமா ஸ்டடி மேன்… எவ்வளவு அடிச்சாலும் நேரா போவேன்…!!” என வளைந்து வளைந்து வீடு போக எத்தணித்தவன் என்ன நினைத்தானோ திரும்பி இவளிடம் வந்தவன்…
“தங்க புள்ள தப்பா நினைக்காத நூறு ரூவா சில்லறை வச்சி இருக்கியா இருந்தா மாமனுக்கு குடேன்…( நூறு ரூபாயை சில்லறையா அடேய் )என்கிட்ட எல்லாம் ஐயாயிரம் ரூபாய் ஒரே தாளா இருக்கு…(எவன் கிட்ட அடிச்சது )என்றவன் ஒருக்காலத்தில் வேலைக்கு ஆட்களை வைத்து சம்பளம் கொடுத்து இருந்தவன் இன்று அவனை விட வயதில் சிறு பெண்ணிடம் கையேந்தி நின்றது காலத்தின் கொடுமையோ…
சட்டென்று பையை திறந்து சில பணத் தாள்களை எடுத்து அவன் கிழிந்த சட்டை பையில் பத்திரமாக வைக்க… அதை திருப்தியாக எடுத்து பார்த்தவன் சென்றது என்னவோ மீண்டும் டாஸ்மாக் கடைக்கு தான்…
போதையில் தள்ளாடியபடி போகும் சீராளனை பார்த்து முக்கு விடைக்க கண்களில் கண்ணீர் செறிய நின்றாள் மேனகை…
“எல்லாமே என்னால தான மாமா நான் செஞ்ச தப்பால தான… உங்க வாழ்க்கை நாசமாக நானே காரணமாகிட்டேனே… இந்த ஜென்மத்துல எனக்கு மன்னிப்பே கிடையாது… இதை இப்படியே விட்டா சரி வராது இதுக்கு ஒரு முடிவு கட்டணும்… முதல்ல மாமாவை பற்றி அம்மா கிட்ட சொல்லி ஒரு வழி பண்ணனும்…!!” என முடிவு எடுத்தவளுக்கு தெரியவில்லை…
அங்கு அவள் வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது என்று… அவளுக்கே தெரியாமல் தையல்நாயகி அவளுக்கு அவசரம் அவசரமாக நிச்சயதார்த்த ஏற்பாடு பண்ணி கொண்டு இருக்கிறார் என்று தெரியாமல் சாவதனமாக நடந்து சென்றவளை கோழி அமுக்காக அமுக்கி நிச்சயம் முடித்து விட்டார் தையல் நாயகி… கூடவே அவர் பையன் கிரிதரனுக்கும் பெண்ணை பார்த்து பேசி முடித்து விட்டார்… அவனுக்கே தெரியாமல் என்பது தான் இங்கு சிறப்பம்சம்…
அப்புறம் என்ன கோலாகலமா நடக்க போகும் கல்யாண கச்சேரி கலை கட்ட போகுது மறக்காம வந்து சேருங்க மக்களே…
👌👌👌👌👌👌👌👌👌👌
tq 🙂