ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

 

என்னை உனக்குள் தொலைத்தேனடி – 4

 

கதவை திறந்து பார்த்தவள் அங்கே உள்ளே நின்று இருந்தவளை பார்த்து அதிர்ந்து நின்றவள் தனக்குள் ‘ஐய்யோ இவளை பார்த்தாலே தெரியுது அவுங்களுக்கு மேலே இருப்பாள் போல போச்சு நம்ம இப்பவும் தனியாக தான் இருக்கனுமா’ என்று கதவை திறந்து வைத்துக்கொண்டே யோசித்துக் கொண்டு இருந்தாள்.

 

 

உள்ளே இருந்தவளும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்கபோகிறாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தவள் அவள் இப்போதைக்கு உள்ளே வரும் சாத்திய கூறுகள் இல்லாதலால் தானே “ ஏய் ஹலோ யாரு நீ” என்று சத்தமாக கேட்க 

 

 

அதில் கலைந்தவள் ரூமிற்கு உள்ளே வந்து “நான் இங்கே தான் தங்கி இருக்கேன்” என்று கூற “ ஓ அப்படியா சரி ஓகே” என்று கூறியவள் அவளது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

 

 

“ அப்புறம் கேட்கணும்னு நினைச்சேன் உன் பெயர் என்ன”

 

“ வள்ளி”

 

“வள்ளி ம்ம் நீதான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்தியாமே காலேஜ்ல எல்லாம் சொன்னாங்க”

 

“ஆமா”

 

“எனக்கு ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும் நல்லா கவனமா கேட்டுக்கோ எனக்கு இந்த ஒரு வார்த்தைல பதில் சொன்னா பிடிக்காது இப்ப இருந்து நான் உன்ன என்னோட ஃப்ரெண்டா தத்து எடுத்துக்கிட்டேன் அதனால நான் எப்படி பேசுறேனோ அதே மாதிரியே பேசணும் என்ன புரியுதா” என்று கேட்டு மிரட்டினாள்.

 

 

“நான் உன்கிட்ட இவ்ளோ பேசுறேனே இப்படி அமைதியாகவே இருக்கியே உன் பேர் என்ன? எங்க இருந்து வர இதெல்லாம் கேட்க மாட்டியா”

 

 

“உங்க பேர் என்ன?”

 

 

“ என்னது உங்க பெயர் என்ன வா? சும்மா நீ வா போனேன்னு சொல்லு நான் ஒன்னும் தப்பா நினைத்துக் கொள்ளமாட்டேன்”

 

 

“என்னோட பேரு கலையரசி நானும் ஸ்காலர்ஷப்ல தான் படிக்க வந்து இருக்கேன் உன்ன பத்தின எல்லா டீடெயிலும் எனக்கு தெரியும் அதனால நீ எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம்.

 

 

 என்ன பத்தி சொல்லணும்னா நானும் கஷ்டப்படுற ஃபேமிலில இருந்து தான் வந்து இருக்கேன் என்னோட அப்பா இங்க தான் பக்கத்து ஊருல மெக்கானிக் கடை வச்சு இருக்கிறார்.

 

 

 நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு அதனால் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க வெளியே தங்கி இருந்தேன் ரொம்ப செலவு ஆச்சு அதனால் இங்க சொல்லி வச்சு இருந்தேன் காலி ஆச்சுனா தரேன்னு சொல்லி இருந்தாங்க அதான் இப்பவந்தேன் இது தான் என்னோட கதை சரியா இப்ப இருந்து நம்ம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்” என்று நட்புடன் கைகுலுக்கினாள்.

 

 

வள்ளியும் சிறு புன்னகையுடன் கலையரசியின் நட்பை ஏற்றுக் கொண்டாள்.

 

 

அன்று ஆரம்பித்த அவர்களது நட்பு மெல்ல மெல்ல வளர்ந்து கிளாசிலும் காலேஜ் ஹாஸ்டலிலும் விருட்சமாக வளர்ந்து நின்றது. 

 

 

கலையுடன் சேர்ந்த பிறகு வள்ளியிடம் ஒரு வருடம் எப்படி போனது என்று கேட்டாள் தெரியவில்லை என்பாள். 

 

 

அந்த அளவிற்கு இருவரும் நெருங்கிய தோழிகளாக ஆகிவிட்டனர் அவளை கிளாஸில் அனைவரும் ஒதுக்குவதை புரிந்து கொண்டவள்.

 

அதில் அவளது வெளித்தோற்றமும் ஒரு காரணம் என்று புரிந்துக்கொண்டவள் தன்னை மட்டும் மாற்றிக் கொள்ளாமல் வள்ளியையும் சேர்த்து அவளது நடை உடை பாவனை அனைத்தையும் மாற்றி இருந்தால் இந்த ஒரு வருடத்தில் அதில் வள்ளியின் அழகு தூசி படிந்த ஓவியமாக இருந்தவள் இப்போது கோவில் சிலையாக மாறி இருந்தாள். 

 

 

நன்றாக எண்ணெய் வைத்து படிய வாரி இருந்த முடி இப்பொழுது லேயர்கட்டில் பவுன்ஸியாக மாறி இருந்தது. இயற்கையாகவே அடர்ந்து வளைந்த புருவங்களை பியூட்டி பார்லரின் உதவியுடன் நன்றாக செதுக்கிய புருவமும் கூர்மையான மூக்கில் அவர்களது வழக்கப்படி வித்தியாசமாக போட்டிருந்த மூக்குத்தியும் முதலில் அதை கலட்ட சொல்லிய கலை வள்ளி திடமாக மறுக்கவும் அது கூட அவளுக்கு அழகாகவும் மற்றவரை விட தனித்து காண்பிக்கவும் சரி என்று விட்டுவிட்டாள்.

 

 

துளி மாசு மறுவற்ற வட்ட முகமும் அதில் ஆரஞ்சு பலத்தின் சுவையை எடுத்து ஒட்ட வைத்தது போல் இருந்த அழகிய உதடுகளும் நீண்ட களத்தில் வெண்பாசி மணியும் பிரம்மனின் படைப்பில் இளமையின் செழுமைகளும் அதன் கீழே கைக்குள் அடங்கிடும் அளவிற்கு சிறுத்த இடையும் முதலில் அணிந்திருந்த சுடிதாரை விட இப்போது கலையின் ரசனையில் அணிந்திருந்த டாப்பும் அதற்கு மேட்ச் ஆக லெக்கினும் அணிந்து மலைவாழ் மகள் மறைந்து மதுரை வாழ் மகளாக வாழ்ந்து கொண்டிருந்தாள். 

 

 

இந்த மாற்றமே தனக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்று தெரிந்திருந்தால் இதற்கு சம்மதிக்கவே மாட்டாள். 

 

 

இன்றைய கிளாஸ் இருக்கு இருவரும் அவசர அவசரமாக கிளம்பி ஹாஸ்டலில் இருந்து காலேஜுக்குள் நுழையும் போது ஒரே கும்பலாக இருக்க இருவரும் ஒன்றும் புரியாமல் என்னவென்று பார்க்க சென்றனர். 

 

 

அதற்குள் அவர்களை கடந்து செல்ல முயன்ற அவளது வகுப்பு தோழி ஒருத்தியை நிறுத்தி என்னவென்று விசாரிக்க நமது காலேஜில் படிக்கும் எம் பி மகன் ராகேஷ்யை தேடி அழகர் அண்ணன் வந்திருப்பதாகவும் அங்கு கிரவுண்டில் நின்று பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறியவள் தானும் அதைத்தான் பார்க்க போவதாக கூறி சென்றாள்.

 

 

கலையும் அங்கே சென்று பார்க்க கிளம்ப அவளை தடுத்து வள்ளி 

 “ வேண்டாம் கலை நாம இப்படியே கிளாசுக்கு போயிறலாம் ஆல்ரெடி அவன் என்ன நினைச்சு என் பின்னாடி சுத்துறானே தெரியல நானும் எத்தனை நாள் தான் அமைதியா போறது இப்ப போய் இதை பார்த்தா இது வேற பிரச்சனையாகும்” என்று கூற 

 

 

“நீ இப்படியே பயந்துகிட்டே இரு அவன் முதல் நாள் உன் பின்னாடி வந்தவனை நீ திட்டி அனுப்பி இருந்தினா அது இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து இருக்காது இல்ல” என்று ஆதங்கபட்டாள்.

 

 

ஆமாம் என்று தலையசைத்தாள் ‘அவள் கூறுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது’ என்று யோசித்தவள் அந்த நாளை இப்பொழுது நினைத்தாலும் வள்ளிக்கு உடம்பு நடுங்கத் தொடங்கி விடும்.

 

 

அன்றைய கிளாஸ் ஆரம்பிக்கும் முன் செல்ல வேண்டும் என்று இருவரும் வேகமாக கிளம்பி சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று காலேஜ் காரிடரில் வழியை மறைத்து நின்றான்.

 

 

திடிரென்று வந்து மறைக்கவும் அதிர்ந்து நின்றவர்கள் யார் என்று பார்க்க அங்கே ராகேஷ் நின்று கொண்டு இருந்தான். இருவரையும் பார்த்தவன் சட்டென்று வள்ளியின் கையைப் பிடித்து நெருக்கமாக இழுத்தவன்.

 

 

“ இங்க பாருடி உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதனால நம்ம ரெண்டு பேரும் இனிமே ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன்.

 

 

அதுக்காக காதல், கல்யாணம் எல்லாம் கிடையாது ஏன்னா எனக்கு கமிட்மென்ட் எல்லாம் சுத்தமா பிடிக்காது உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் காட்டுவாசி தானே நீ நான் விசாரிச்சுட்டு தான் வந்தேன்.

 

 

லிவின்ல இருக்கலாம் உனக்கு தேவையான எல்லாத்தையும் நான் பாத்துகுறேன் நீ என்னை கவனிச்சா போதும் இதுக்கு நீ சம்மதித்துதான் தான் ஆகணும்

 

 

நான் யாருனு உனக்கு தெரியும்ல உன்னால் எங்கையும் ஓட முடியாது இன்னும் இரண்டு நாள் தான் உனக்கு டைம் அதுக்குள்ள நீ ரெடி ஆகிக்கோ” என்று கிட்டதட்ட மிரட்டி விட்டே சென்றான்.

 

 

சற்றுநேரம் இருவரும் அவன் கூறிய எதுவும் புரியாமல் அதிர்ச்சியில் நின்று கொண்டு இருந்தனர்.

 

 

காலேஜ் பெல் அடிக்கவும் 

கலைந்தவர்கள் சற்று முன்பு என்ன நடந்தது என்று யோசிக்க கூட முடியாத அளவுக்கு அதிர்ச்சியும், குழப்பமும் அவர்களை தாக்கி இருந்தது.

 

 

அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்பாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்று இருக்க அவ்வழியாக வந்த பேராசிரியர் இருவரும் நிற்பதை பார்த்துவிட்டு

 

 

“ பெல் அடிச்சு எவ்வளவு நேரம் ஆகுது என்ன ரெண்டு பேரும் இப்படி காரிடர் ல நின்னுட்டு இருக்கீங்க சீக்கிரமா கிளாசுக்கு போங்க” என்று கூறிவிட்டு அவர்கள் வகுப்பை நோக்கி சென்றார்.

 

 

அதில் சற்று தெரிந்தவள் வள்ளியின் கைகளை பிடித்துக்கொண்டு அங்கு இருந்த தங்களது வகுப்பை நோக்கி இழுத்துக்கொண்டு சென்றாள்.

 

 

பெல் அடித்ததால் வந்திருந்த பேராசிரியர் வகுப்பை தொடங்கி இருக்க அவர்களிடம் அனுமதி வேண்டிக்கொண்டு உள்ளே சென்று தங்களது இடத்தில் வந்து அமர்ந்தனர். 

 

 

அந்த கிளாசை எப்படியோ சமாளித்து பேராசிரியர் சென்ற பிறகு அருகில் இருந்த பெண்ணிடம் ராகேஷ் யார் என்பதை விசாரித்தாள் கலையரசி

 

 

அதுவரை அவள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வள்ளி அந்தப் பெண் கூறிய செய்தியில் உடல் நடுங்க உட்கார்ந்து விட்டாள்.

 

 

அருகில் இருந்தவள் கலையின் புறம் நன்றாக திரும்பி உட்கார்ந்தவள் அவனை பற்றி கூற தொடங்கினால் “ அவன் பெயர் ராகேஷ் பா அவன் அப்பா தான் இப்போதைய கல்வித்துறை அமைச்சர் என்றும் நம்ம காலேஜ் மாதிரி இன்னும் இரண்டு காலேஜ்ல கூட அவங்களுக்கு பங்கு இருப்பதாகவும் அதனால் யார் எந்த பொண்ண பார்த்தாலும் அவளை காதலிக்கிறதா சொல்லி ஏமாத்தி கை கழுவி விட்டுட்டு போயிடுவான் ஓரே பையன்கிறதால ரொம்ப செல்லலாம் அவுங்க வீட்டிற்கும் சரியான பொம்பள பொறுக்கி பா அவன் ” என்றாள் .

 

“ ம்ம் அப்புறம் சொல்ல மறந்துட்டேன் நம்ம கிளாஸ்ல யாருமேலயோ கண்ணு வச்சிட்டான் போல ஒரு வாரம் முன்னாடி இங்க வந்து நம்ம பசங்க கிட்ட யாரோ ஒரு பொண்ணு பத்தி விசாரிச்சானாம் யாருனு தெரியல” என்றாள் அந்த பெண்ணை நினைத்து பாவப்பட்டுக்கொண்டே.

 

 

அதுவரைக்கும் ஒன்றும் தெரியாமல் கேட்டுக்

கொண்டிருந்தவர்கள் அவள் கூறிய பின் தான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார்கள். 

 

அவன் மிரட்டுவதை கலையும் பார்த்துக் கொண்டிருந்ததால் அடுத்து என்ன பண்ணுவது என்று புரியாமல் இருக்க வல்லின் நிலையோ கேட்கவே வேண்டாம் பயத்தில் செத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஏன் மல்லி பேசாம போயி பிரின்ஸ்பல் பண்ணிட்டு இருக்கேன் கம்ப்ளைன்ட் பண்ணிடுவமா “ என்று கேட்க 

 

“இல்ல கலை கண்டிப்பா நமக்கு ஃபேவரா எதுவும் பேச மாட்டாங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணிதான் பேசுவாங்க அங்க போறது வேஸ்ட்” என்று கூறினாள்.

 

“ நீ சொல்றதும் யோசிக்கிற படி தான் இருக்கு இப்ப எதுவும் எந்த முடிவுக்கும் நம்ம வரவேண்டாம் அடுத்த வாட்டி இதே மாதிரி நடந்துச்சுன்னா ஏதாவது ஸ்டெப் எடுப்போம்” என்றாள்.

 

அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வள்ளியை தேடி வந்தவன்

” இன்னும் ஒரு வாரத்துல நீ ஹாஸ்டல்ல வெக்கேட் பண்ணிட்டு என்னோட பங்களாவில் வந்து தங்கணும் புரியுதா இல்லன்னா என்ன நீ வேற மாதிரி பார்ப்ப வரட்டா பாப்பா” என்றான்.

 

 

அவன் செய்யும் அனைத்து தொந்தரவுகளுக்கும் வள்ளியால் அழ மட்டுமே முடிந்தது.

 

 

ஒரு வாரம் கழித்து வருவேன் என்று கூறியவன் மறுநாள் மாலை கல்லூரி விட்டு செல்லும்போதே திடீரென்று வந்தவன்.

 

 

கலை வள்ளியிடம் ஏதோ பேசிக்கொண்டு செல்லும்போது திடீரென்று அவர்களின் முன்பு வந்தவன் வள்ளியின் கையைப் பிடித்து இழுத்து தனது காரில் தள்ளி வேகமாக காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

 

கமெண்ட் பீளிஸ் நட்புகளே 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top