12
பரத் திலோவின் தாலியைப் பிடுங்கவும் பதறிப் போய் தடுத்தாள் திலோத்தமா ஒரு கையால் தன் தாலியை இறுக பற்றி கொண்டு மறு கையால் பரத்தை தடுக்க பெரும் பாடு பட்டு போனாள்… அந்த மெல்லியவள்…
“பரத் என்ன பண்றிங்க விடுங்க பரத் ஐயோ தயவு செஞ்சு விடுங்க, விடுங்க சொல்றேன்ல??? “ என திலோவின் கெஞ்சல் கதறல் எதுவும் பரத்ன் செவியை எட்டியதாகவே தெரியவில்லை…
பரத் தம்பி என்ன காரியம் பண்றிங்க விடுங்க என தலைவர் வந்து பரத்தை தடுக்க அவரையும் கீழே தள்ளி விட்டவனுக்கு தாலியை பறித்தே ஆக வேண்டும் என்னும் வெறி மட்டுமே…
இப்படி வெறியுடன் இருப்பவனிடம் எங்கனம் தனியாக போராட உதவிக்கு அவள் கிரிதரனை பார்க்க அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்று வேடிக்கை பார்க்க… தன் தாலியை காப்பாற்றிக் கொள்ள தனி ஒருத்தியாக தான் போராட வேண்டும் என நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டவள் எவ்ளோவோ போராடி பார்த்தும் பரத் தன் பிடியை தளர்த்துவதாக இல்லை என்பதை உணர்ந்தவள் வேறு வழியே இன்றி பரத்தை மறு கையால் அறைந்தாள் திலோத்தமா…
ஏய்ய் என வந்து தன் மகனை தாங்கினார் ஆதி கேசவ்…
அதில் அவமானத்தில் கசங்கிய முகத்துடன் பரத் திலோவை பார்க்க… அவளோ செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நிற்க…
“என்ன திலோ இது…?? “ என பரத் அடிப்பட்ட கழிவிருக்கத்துடன் கேட்க…ஒரு மாதிரி ஆகிவிட்டது அங்கிருந்தவர்களுக்கு… இல்லை அது என திலோ திணறுகையில்…
“டேய் முட்டாளாடா நீ, அதான் அடிச்சு மூஞ்சில கரிய பூசிட்டால்ல… அப்புறம் என்ன திலோ நொன்ன திலோன்னுட்டு… நீ இரக்கப்பட்டு வாழ்க்கை கொடுக்கணும் நினைச்ச ஆனால் அவங்க உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க பார்த்தியா… இதுக்கு தான் அப்பவே சொன்னேன் தகுதியும் தராதரமும் இல்லாத இடத்தில் சம்பந்தம் வசிக்காதன்னு கேட்டியா… ஊருக்கு நடுவுல உன்னை நல்லா அசிங்கபடுத்தி வேடிக்கை பார்க்கிறாங்க…உனக்கு எப்படியோ என் கண்ணு முன்னாடி என் புள்ள அசிங்கப்படுத்தறத என்னால பாத்துட்டு சகித்துக் கொள்ள முடியாது…வாடா போலாம் என பரத் கையை பிடித்து இழுக்க…
அவனோ இன்னுமும் திலோவை தான் பார்த்து இருந்தான்… பஞ்சாட்சரத்துக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை…அவருக்கே நடப்பது எல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது…
“டேய் வாடா இவளை விட்டா ஊர்ல வேற பொண்ணா இல்லை… லோலோன்னு இவள் பின்னாடி அலைஞ்சதுக்கு தான் உனக்கு **** பட்டம் வாங்கி கொடுத்துட்டாளே அப்புறம் என்ன அவள் மூஞ்சிய பார்த்துட்டு நிக்கிற சொரணை கெட்டவனே வாடா…!!”என ஆதி கேசவ் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தன் மகனை அழைத்து கொண்டு போக… அவரை தடுத்தப் படி வந்து நின்றார் ஊர் தலைவர் சர்குணம்…
“யோவ் என்னயா அதான் கூப்பிட்டு வச்சி மூஞ்சில சாணிய அடிச்சிட்டிங்களே அதுக்கு அப்புறம் என்ன இதுக்கு வழியை மறைச்சிட்டு நிக்கிறீர்…!!”என காட்டமாக கேட்க…
“அப்பு அதுக்குள்ள எங்கன கிளம்பிட்டீரு இன்னும் பஞ்சாயத்தே முடியலயே…!” என அவர் தடுக்க…
“அதான் எங்களுக்கு அவங்களுக்கு இனி எந்த சம்பந்தமும் இல்லைனு ஆகி போச்சே அப்புறமும் எவன் எப்படி போனா எங்களுக்கு என்ன…!!” ஆதி கேசவ்…
“அப்பு அவங்க பஞ்சாயத்துக்காக உங்கள பிடிச்சு நிறுத்தல… நான் நிறுத்துனது உங்க பஞ்சாயத்துக்கு புரியலயா… இருங்க…
லேய் யாருடாது அந்த புள்ளைய கூட்டி வாங்கடா…!!”என வெளியே குரல் கொடுக்க…
அங்கு அழகிய ரோஜா நிற கவுன் அணிந்த வெள்ளை மலராக வெளிநாட்டு பெண் அனா பிரிட்ஜெட்…கூடவே அவள் நான்கு வயது மகன் ரேயான் @ ரிஷி கேசவ்…வந்து நின்றனர்…
வெள்ளைகாரப் பெண்ணையும் பொடியனையும் கண்டு கூட்டத்தில் அநேக சலசலப்பு ஏற்பட்டது…
இந்த பக்கம் அவர்களை கண்ட ஆதி கேசவ்னுக்கோ ஏக குழப்பம் என்றால்… பரத்திற்க்கோ உச்சகட்ட அதிர்ச்சி… அதிலும் அவனை உரித்து வைத்தது போல் வந்து நிற்கும் ரேயானை கண்டதும் அவன் முகம் கருத்து தாடை இறுகி போயிற்று…
“இந்த பொண்ணை ஏமாற்றி பிள்ளைய கொடுத்துட்டு ஓடி வந்துட்டார்ன்னு பரத் தம்பி மேல பிராது கொடுத்து இருக்கு… அதுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு போங்க..!!” என தலைவர் கேட்க…
“யோவ் என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க ஆளாளுக்கு எல்லா பழியையும் தூக்கி என் பிள்ளை மேல சுமத்துறீங்க… எவனாவது காசுக்கு ஆசைப் பட்டு எதையாவது சொன்னா உடனே நம்பி பஞ்சாயத்து கூட்டிடுவீங்களா… எனக்கு தெரியும் என் புள்ளைய பற்றி நீங்க ஆனத பார்த்துக்கோங்கள் நாங்க கிளம்புறோம் விட்டா நம்மள கிறுக்கனாக்கிடுவாங்க போலையே நீ ஏன்டா நிக்கற வா இல்லாட்டி வேற ஏதாவது பழியை தூக்கி போட போறாங்க வா இங்கிருந்து போயிடலாம்…!!” என ஆதி கேசவ் அங்கிருந்து சென்றால் போதும் என்னும் மனநிலையில் கிடந்த குதிக்க…
அவரை விட்டால் தானே… “என்ன அப்பு சொல்லிக்கிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போயிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்… அப்புறம் பஞ்சாயத்துக்கு என்ன மரியாதை இருக்கு… இல்ல பெரிய மனுஷன் எங்களுக்கு தான் என்ன மரியாதை இருக்கு… நீங்க பணத்துல வேணுனா பெரிய ஆள இருக்கலாம் ஆனால் ஊர் கட்டுப்பாடு உண்டான மரியாதை ஒன்னு இருக்குல அதுக்கு யாரா இருந்தாலும் கட்டுபட்டு தேன் ஆகணும்… நம்பி வாங்க என்ன நடந்ததுன்னு பஞ்சாயத்தில் கூட்டி தீர விசாரிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்…!!”என அவர்களை தள்ளி கொண்டே சென்றவர் போகும் போது
“ஏலேய் இதுவரைக்கும் இங்க நின்னு வேடிக்கை பார்த்த மக்கா எல்லாரும் நம்ம பஞ்சாயத்து செட்க்கு வந்துருங்கடே அப்புறம் ஒன்னு விட்டு போச்சி ரெண்டு விட்டு போச்சு சொன்னாக்கா திரும்பி எல்லாம் பஞ்சாயத்து சீனை வைக்க முடியாது சரியா எல்லாரும் வாங்கலே…!!”என அனைவரையும் அழைத்து விட்டு போக…
அதுவரை வாயடைத்து நின்ற கூட்டம் யாவும் தலைவர் சற்குணம் பின்னால் சென்றது…
கூட்டம் கலைந்து சென்ற பின்பு தான் பஞ்சாட்சரத்துக்கு உணர்வு வந்தது போலும்…உடனே மகனிடம் வந்தவர்…
“டேய்ய் என்னடா நடக்குது இங்க அந்த பையனுக்கு குழந்தை பொறக்கதுனு தான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ சொன்ன அப்புறம் எப்படி டா அவனை உரிச்சு வச்ச மாதிரி ஒரு பையன் வந்து நிக்கிறான் என்னடா நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியல என அவர் தலையை சொறிய…
“நான் அப்போ சொன்னதும் உண்மை இப்போ நீங்க கண்ணால பார்த்ததும் உண்மை…!!”என்று குழப்பி விட்டு ஹாயாக சென்று ஒரு சேரில் அமர்ந்து கொள்ள…
டேய் என்னடா உளர்ற கொஞ்சம் விவரமா சொல்லு என அவன் அருகில் சென்று மற்றொரு சேரில் அமர்ந்துக் கொண்டவர்க்கு மகன் மேல் இருந்த கோவத்தை விட கதை கேட்கும் ஆர்வமே மேலோங்கி இருந்தது…
“ஆசை!!! அடுத்தவன் கதை தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வம்…!!” என அவரை இளக்காரமாக பார்த்தவனை… அவர் முறைக்க…
“சரி போனா போகுது சொல்றேன் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க… அது நம்ம ரைட்டர் யது நந்தினி “ பிறை முகமதில் வீழ்ந்தேனடி…!” இந்த கதையோட செகண்ட் பார்ட்டா கதை எழுதுவாங்க அப்போ படிச்சி தெரிஞ்சிக் கோங்க… என்று விட்டு கண்ணடிக்க…
“ ஏண்டா கதைக்குள்ள கதையை பிரமோட் பண்றீயே உனக்கு வெக்கமா இல்ல…!” (நோ பஞ்சு குட்டி ரைட்டர் பாவம் )
“நான் எதுக்கு வெட்க படனும்…நீ என் கதைய பிரமோட் பண்றியா இல்ல உன் ரொமான்ஸ் சீன்ல நான் கை வைக்கவா ரைட்டர் கேட்டுச்சு… ஆப் கோர்ஸ் எனக்கு ரொமான்ஸ் சீன் தான் முக்கியம்னு ப்ரோமோஷன் பண்ணிட்டேன்… எப்படி என் சாணக்கியத்தனம்…!!” என காலரை தூக்கி காட்டிட…
அவனை காறித் துப்பாத குறையாக பார்த்து விட்டு பஞ்சாயத்துக்கு போனர் பஞ்சாட்சரம்…
அங்கு தனித்து விட பட்டது என்னவோ திலோத்தமாவும் கிரிதரனும் மட்டுமே…
“அப்புறம் மேடம் அடுத்து என்ன பண்ண போறீங்க…உங்களுக்கு வாழ்க்கை கொடுக்க இருந்த ஒரே உத்தமனும் இப்போ உத்தமனா இல்லையாமே… அச்சோ பாவம் இனி டீச்சர்மா என்ன செய்வாங்க என கிரிதரன் போலியாக வருத்தம் காட்ட… அவனை தீயாக முறைத்தாள் திலோ
“ஸ்ஸ்ஸ்ப்பா பயந்துட்டேன்டி சரி வா போனா போகுதுன்னு உனக்கு வாழ்க்கை தரலாம் நானே முடிவு பண்ணிட்டேன்…எங்க ஓடிவந்து அத்தான் கால்ல விழுந்து நன்றி சொல்லி கெஞ்சு பார்ப்போம்… என அமர்ந்த வாக்கிலே கால்களை நீட்டி காட்டினான் கொழுப்பு எடுத்தவன்…
“என்னை என்ன நினைச்சீங்க அத்தான்…முன்ன போல உங்க அதட்டல் உருட்டல் எல்லாம் இனி என்கிட்ட செல்லுப்படி ஆகாது…ஒழுங்கா போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க உங்க கூட சேர்ந்து நான் வாழ்வேன் கனவுல கூட நினைக்காதீங்க…!!” என திடமாக சொல்ல…
“உப் அதிகமா பேச வைக்கிறாலே இங்க பாருடி உன் அதிர்ஷ்டத்துக்கு நானே என் ஈகோ கோவம் எல்லாத்தையும் விட்டு இறங்கி வந்து இருக்கேன்… ஒழுங்கா வந்து வாழப் பார் அதை விட்டுட்டு குறுக்க எவனாவது வருவான் தப்பிச்சிடலாம் கனவு காணாத நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காது!! நடக்கவும் விட நான் மாட்டேன்… சண்டி தனம் செய்யாம சமர்த்தா வந்தினா சேதாரம் கம்மி ஆகும் இல்லை… முரட்டு குதிரையா நடந்தா மூஞ்சி வாயெல்லாம் பெயர்ந்துவிடும்… அத்தானுக்கு ஆயிரம் ஜோலி கிடக்கு வா போலாம்…!!” என எழுந்து கொண்டே அவளை அழைக்க…
மறுத்து அவனை தாண்டி செல்ல முயன்றவளின் கையை பிடித்து இழுத்தான் கிரிதரன்… அவன் கை பிடியை தட்டி விட,அவன் முரட்டு பிடியை உதற முடியாமல் போராடியவள்… “கைய விடுங்க அத்தான் ஆஆ வலிக்குது விடுங்க அத்தான் ஹாஆ…!!”என அவளை அழ விட்ட பின்பே இரக்கப்பட்டு பிடியை விட…
“நீங்க கொஞ்சம் கூட மாறவே இல்லை… அதே பழைய தையல் நாயகி மகனாவே தான் இருக்கீங்க அத்தான்… என்னால பழசை மறக்கவே முடியல… அந்த அளவுக்கு என்னை காயப் படுத்தி இருக்கீங்க… எதை நம்பி என்னை உங்க கூட வர சொல்றிங்க மீண்டும் விட்டுட்டு போக மாட்டீங்கனு என்ன நிச்சயம்… இங்க பாருங்க அத்தான் இந்த ஜென்மத்துல என்னால பழசை மறந்துட்டு உங்களோட வாழ முடியாது… உங்களால் முடிஞ்சத பார்த்துக்கோங்க…!!” என்று விட்டு நிற்க்காமல் பறந்து விட்டாள்…
ஓ நீ பழசை மறக்கலயா??? ரொம்ப நல்லது!!! அப்போ இந்த கிரிதரன் ஒன்னு வேணும்னு முடிவு பண்ணிட்டானா அதை அடைய எந்த எல்லைக்கும் போவேன்னு உனக்கு நல்லாவே தெரியுமே… உனக்கு நாலு நாள் டைம் தரேன் ஒழுங்கு மரியாதையா என்கூட வந்துடு இல்லை உன்னை தூக்கிட்டு போய் கூட குடும்பம் நடத்த வேண்டி இருக்கும் … உனக்கு ரெண்டு ஆப்ஷன் தான் ஒன்னு நீயே வரியா இல்ல நானே தூக்கிட்டு போகவா… இரண்டுல எதுன்னு நீயே முடிவு பண்ணிக்கோ…!!!என்று விட்டு அவளை தாண்டி வெளியே சென்று விட்டான்…
அவனது வார்த்தைகளில் ஸ்தம்பித்து போனவளின் கண்கள் அவள் அறியாது கண்ணீர் வழிந்து ஓடியது…அவள் கதையை அந்த கண்ணீரும் அறியுமோ…??
next epi eppo varum waiting unga story ellamae super sis