ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10

10

 

நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து முகூர்த்தம் குறித்த நேரத்தில் மணமகள் மணமகன் அலகரத்தில் பரத்தும் திலோத்தமாவும் ஜோடி பதுமைகள் போல்  மணையில் அமர்ந்து இருக்க… அவர்களை வாழ்த்த வந்த கூட்டத்தை விட  திலோவின் திருமணம் நடைப் பெறுமா இல்லையா என வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் தான் அதிகம்…(அவ்ளோ ஆசை)

 

மணமகள் மணமகனை மணையில் அமர்த்தி கங்கணம் பூட்டுதல் வேள்வி வளர்த்து வேத மந்திரங்கள் ஓதுதல் என அனைத்துமே முறைப்படி நடந்தேறிட… கல்யாண மண்டப வாசலில் சிறு சலசலப்பு ஏற்பட  அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்னபா அங்க சத்தம் என்று பார்க்க… 

 

ராயல் சூட்டில் கன கம்பீரமாக கையில் ஏந்திய பூச்செண்டுடன் வந்து கொண்டு இருந்தான் கிரிதரன்…

 

வந்துட்டான்… வந்துட்டான்… என அனைவரின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டப்படி தடதடக்கும் காலடி ஓசையோடு ஓடி வந்தவன்… முன் வரிசையில் போடப்பட்டு இருந்த  முதல் நாற்காலியில் சமர்த்தாக அமர்ந்து கொண்டான்…

 

படு கேஷுவலாக உட்கார்ந்து இருந்தவனால் மேடையில் சிறு பதற்றம் நிலவியது… அவன் ஏதாவது செய்வான் அல்லது பேசுவான் சண்டையிடுவான் என எதிர்பார்க்க அத்தனையும் பொய்யாக்கி விட்டு சமர்த்து பிள்ளையாக உட்கார்ந்து இருந்தான் கிரிதரன்…அதிலும் அவர்களை வாழ்த்தவென்று  பூங்கொத்து வேறு… புஸ்  என்றானது அனைவருக்கும்…

 

இந்தாமா ரைட்டரே எதோ குண்டை தூக்கி போடுவான் கதைல ஒரு ட்விஸ்ட் வரும்னு ஆவலா காத்து இருந்தா என்ன இப்படி எனக்கும் இந்த கல்யாணத்துக்கும் சம்மந்தமே இல்லாதவன் மாதிரி உட்கார்ந்து இருக்கான் இது தான் நீ சொன்ன அந்த டெரர் டைம் பாம் பீஸா  அட போமா உன்னை நம்பி வேலை மெனக்கெட்டு கதைய படிக்க வந்தா இப்படி பண்ணிட்டியே…

 

அட இருங்கப்பா நானும் அதான் யோசிச்சிட்டு இருக்கேன் கால் ஷீட் போடும் போதே கண்டீஷனை சொல்லி தான் கூட்டி வந்தேன் அப்புறம் ஏன் இப்படி சொதப்புறான்னு தெரியலையே…

 

அங்கு மேடையிலோ பரத் திலோவின் கழுத்தில் தாலி கட்ட தயாராக இங்கு கிரிதரன் எதுவும் செய்வதாக தெரியவில்லை…

 

அடேய் உன்னை வேற வில்லன் ரேஞ்ச்க்கு பில்டப் பண்ணி வச்சி இருக்கேன்  இப்படி சொதப்புறியே ஏதாவது செஞ்சி என் மானத்தை காப்பாத்துடா… அடடா  இவன் தேறுவானா??? மாட்டானா?? என்ன நான் பாட்டுக்கு இங்க புலம்பிட்டு இருக்கேன் இவன் பாட்டுக்கு அமைதியாக இருக்கான் ரைட்டரா நானே நேரடியா களத்துல குதிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சி… இந்த கதைல எங்கடா கெஸ்ட் ரோல் பண்றதுன்னு யோச்சிக்கிட்டே இருந்தேன் சிக்கிடுச்சி மக்களே இந்த யது கலவரம் பண்ணி நீங்க பார்த்தது இல்லையே இப்போ பார்ப்பீங்க… என ரைட்டர் கெஸ்ட் ரோல் பண்ண தயாராகும் போதே கூட்டத்திற்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது…

 

தலைத் தெறிக்க ஓடி வந்தார் தலையாரி… கிராம தலைவர் காதில் எதையோ ஓத…

 

 தம்பி தாலி கட்டுவதை நிறுத்துங்க… இந்த கல்யாணத்தை கொஞ்சம் ஒத்தி வையுங்க… என கிராம தலைவர் எழுந்து நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்த…கிரிதரனோ  “எப்படி வாயே திறக்காம இந்த கல்யாணத்தை நிறுத்தினேன் பார்த்தியா…!!” என்பது போல் பார்க்க (ஆப்பு லட்டுல வச்சு நினைச்சியா தாஸ் நட்டுல வச்சேன் மொமெண்ட் )

 

ஏன் என்பதே அங்கிருந்த அனைவரது ஒற்றை கேள்வியாய் பிரதிபலிக்க… 

 

எதுக்கு தலைவரே இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்தச் சொல்றீங்க என பரத் கோவமாக எழ முனைய அவனை தடுத்த பஞ்சாட்சரம்… நீ இரு தம்பி மணைய விட்டு எழும்ப கூடாது… நான் பார்த்துக்கிறேன் என்றவர் நேரடியாக…

 

“சற்குணம் என்னயா இது நல்லது நடக்குற இடத்துல நின்னு அபசகுனமா நிறுத்த சொல்ற… என்ன உன் பிரச்சனை எதுவா இருந்தாலும் இந்த கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம் இப்போதைக்கு அமைதியா இரு… வாழ வேண்டிய புள்ளைங்க வாழ்க்கைய  கெடுத்து புடாதே…!!”

 

தம்பி என்ன பார்க்கிறீங்க நீங்க தாலி கட்டுங்க எவன் தடுக்கிறான்னு  நான் பார்க்கிறேன்… என பஞ்சாட்சரத்தின் வார்த்தைகள் பொதுவாக இருந்தாலும் அவரது பார்வை என்னவோ கிரிதரன் இடமே இருந்தது…

 

“ஏப்பா பஞ்சா நிலைமை புரியாம  பேசாதப்பா…இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு பஞ்சாயத்தில் பிராது கொடுத்து இருக்குப்பா…!!”என தலைவர் சற்குணம் முட்டு கட்டை போட…

 

 “என்னயா கூறுக்கெட்ட தனமா பேசுற ஏதோ போக்கத்தவன் பிராதுக் கொடுத்தான்னு இங்க வந்து கல்யாணத்தை நிறுத்துரீரு…உமக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா…!!”என காட்டமாக கேட்க…

 

“கிறுக்கு எனக்கு புடிக்கிறது இருக்கட்டும்யா… எம் பொண்டாட்டிக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு இருக்குற சொத்தை எல்லாம் விக்க பார்க்கிறார்… என் அப்பா அவர் கிட்ட இருந்து சொத்தையும் என் பொண்டாட்டியையும் மீட்டு கொடுங்கன்னு உன்ற புள்ளை உம்ம மேல கொடுத்த பிராதுக்கு நீர் என்ன பதில் சொல்ல போறீரு…!!”என குத்தலாக கேட்கும் முறை தலைவருடையதாகிற்று…

 

“யாருக்கு யார்யா மகன் எப்போ அந்த தறுதலையால பஞ்சாயத்துல தலைகுனிஞ்சி நின்னேனோ அன்னைக்கே அவனை தலை முழுகிட்டேன்… நான் சொந்தமா உழைச்சு  சம்பாரிச்ச சொத்தை யாருக்கு வேணாலும் விப்பேன் இல்லை தூக்கி  தானமா கொடுப்பேன்..   அதை கேக்குற உரிமை யாருக்கும் இல்லை… அப்புறம் அவன் பொண்டாட்டியா??? அன்னைக்கு அந்த புள்ளைய தனியா தவிக்க விட்டு ஊரை விட்டு ஓடி போனவன்… இப்போ எந்த உரிமையில பொண்டாட்டி வேணுங்கிறான்… அதெல்லாம் அந்த புள்ளை அவனை மறந்து இன்னொரு வாழ்க்கைக்கு தயாராகிடுச்சி இதுக்கு மேல அந்த புள்ள வாழ்க்கைல குறுக்கிட அந்த **** நாயிக்கு எந்த உரிமையும் இல்லை… மீறினால் எவன் தலையை எடுக்கவும் நான் தயங்க மாட்டேன்… என்னை நம்பி வந்த புள்ளைய மீண்டும் அந்த பாவி கிட்ட தள்ள மாட்டேன் முடிவா சொல்லிட்டேன்…இன்னைக்கு இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்… அதுக்கு எத்தனை தலை உருண்டாலும் பரவாயில்ல…!!”என பஞ்சாட்சரம் உறுதியாக மறுக்க…

 

அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த கிரிதரன் எழுந்தான்…

 

“என்னயா புரியாமல் பேசிட்டு இருக்க…!!” என தலைவர் எதையோ கூற…

 

“இருங்க தலைவரே அதான் ஸ்கூல் வாத்தி சாரி உங்களுக்கு தான் அப்படி கூப்பிட்டா பிடிக்காதே தகப்பா… என்ன இதுவும் பிடிக்கலையா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது நீர் ம்க்கும் நீங்க தான் என்னை புள்ளை இல்லைன்னு சொல்லிட்டிங்க அதுக்காக நான் உங்களை என் தகப்பன் இல்லைனு சொல்ல முடியுமா சொன்னா ஊர் என் அம்மாவை தப்பா பேசாது…?? என பொடி வைத்து பேச 

 

டேய்ய்ய் என பஞ்சாட்சரம் ஆத்திரத்தில் அடிக்க பாய அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து கொண்டனர்…

 

“ஸ்ஸ்ஸ் ப்பா…!!” என காதை குடைந்தவன் “ அப்படினு  நீர் தானயா கொஞ்சம் முன்னாடி சொன்னது… நானே உனக்கு புள்ளை இல்லங்கும் போது இவள் மட்டும் எந்த விதத்துல உமக்கு உறவு… என் பொண்டாட்டிங்கிறதுனால தானே இப்போ தான் உனக்கு  மருமகள் அதுக்கு முன்னடி  உன் வீட்ல வேலைக்காரியா வச்சி இருந்தபோ எங்கையா போச்சு உன் பாசம், அக்கறை,சக்கரை  எல்லாம்…!!”என கேட்க தலை குனிந்து நின்றார்…

 

“அட ஆமாயா விட்டு  ஓடி போனேன் தான்… அதான் இப்போ திரும்பி வந்துட்டேன் இல்லை அவளை என்கூட அனுப்பி விடுங்க இனி ஒழுங்கா வச்சி வாழுறேன்…!!”என சொன்னவன் குரலில் துளியும் நம்பிக்கை வரவில்லை 

 

“டேய் என்ன விளையாடுறியா உன் இஷ்டத்துக்கு தூக்கி போட்டு போயிட்டு… வேற ஒருத்தனுக்கு பேசின பின்னாடி உடனே  வந்து என்னது என்கிட்டயே தான்னு கேக்க அவள் என்ன பொண்ணா பொம்மையாடா என பஞ்சாட்சரத்துக்கு மனம் பொறுக்கவில்லை…அநியாயம்செய்யும் மகனை நினைத்து தலையில் அடித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது…

 

“ நீங்க என்ன வேணாலும் சொல்லிக்கோங்க எனக்கு என் பொண்டாட்டி வேணும்…!!” என பிடித்த பிடியில் நிற்க…

 

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்துவிட்டான் பரத்…

 

“அடங்க *** நானும் பார்த்துட்டே இருக்கேன்…சும்மா என் பொண்டாட்டி பொண்டாட்டிங்குற… அவ்ளோ யோக்கியமா இருக்கறவன் தான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தாலி கட்டின கையோட இவளும் வேணாம் ஊரும் வேணாம் தானடா ஓடி போன இப்போ எந்த முகத்தை வச்சி வந்து அவளை உன் பொண்டாட்டினு உரிமை கொண்டாடுற…ஒழுங்கு மரியாதையா எங்க இருந்து வந்தியோ அங்கேயே ஓடி போயிடு வீணா என் கையாள அடிபட்டு சாகாத…!!” என பரத் எச்சரிக்க…

 

“அடடே யாரு ராசா ஒரு காலத்துல எனக்கு நண்பனா இருந்து இப்போ துரோகியா ப்ரோமோட் ஆன மிஸ்டர் பரத் கேசவ் ஆ பேசுறது… யோக்கியதை பற்றி பேசுன இல்லை… ஆமாம் உன் யோக்கியதை என்னனு நான் சொல்லவா ராசா…ஆமாம் இவளுக்கு வாழ்க்கை கொடுத்து நீ தியாகி ஆகலாம்னு பார்க்கிரியா என்ன… ஆனால் நீ எதுக்கு இவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்னு எனக்கு தெரியுமே…?? எப்படி எனக்கு தெரிஞ்சத ஊருக்குள்ள சொல்லவா…?? என பரத்தின் பரம ரகசியம் அறிந்தவனுள் கிரிதரனும் ஒருவன் ஆகிற்றே… 

 

கிரிதரன் அவ்வாறு கூறியதும் திலோத்தமாவிற்கு கிரிதரன் மேல் அதீத வெறுப்பு குடி கொண்டது… பழி வாங்க எந்த எல்லைக்கும் இறங்கி விட்டானே என்று அவனை அறவே வெறுத்து போனாள்…

 

“டேய் தேவை இல்லாதத பேசி எல்லாரையும் குழப்பிட்டு இருக்காம ஒழுங்கா இங்க இருந்து போயிடு…இல்லை என் சுய ரூபத்தை காட்ட வேண்டி வரும்…!!”என அதுவரை இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாது நின்ற ஆதி கேசவ் மகன் அவமானம் படுத்தப் படுகிறான் என்றதும் இறங்கி வந்து விட்டார்…

 

“ நீங்க சுய ரூபம் என்ன விஸ்வரூபம் கூட எடுங்க… உங்க புள்ள யோக்கியதை என்னனு இந்த ஊரும் தெரிஞ்சிக்கிடட்டும்…நல்லா கேட்டுக்கோங்க மக்களே இந்தா நிக்கிறானே முன்னாள் நண்பன் இந்நாள் துரோகி பரத் அவன் மெஷின்ல மக்காரு அதுனால அவனால குழந்தை ப்ரொடியூஸ் பண்ண முடியாது…புரியலயா நான் நேராவா சொல்றேன்… இவனால குழந்தை பெத்துக்க முடியாது… ஃபாரின்ல போயிட்டு ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வந்தாச்சு நோ யூஸ்…!!”என அனைவரது முன்பும் ஒருவன் உள்ளத்தை காயப்படுத்துகிறோம் அவனின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறோம் என்கிற உறுத்தல் கூட இல்லாது பரத்தை பற்றிய உண்மையை போட்டு உடைத்தான் பரத்… அவனை பொறுத்த வரை பழிக்கு பழி அவ்வளவு தான்…

 

கிரிதரன் உண்மை உடைத்த பின்பு கூட்டமே பரத்தை கேள்வி குறியாகவும் கேலியாகவும் பார்ப்பதை உணர்ந்தவன்… அவமானத்தில் முகம் சிவக்க…கிரிதரனை அடிக்க பாய்ந்து விட்டான்…

 

 வாய் தகராறில் தொடங்கி கைகலப்பில் முடிந்தது  திலோவின் திருமண ம்ஹும் மறுமணம்…

 

என்ன மக்காஸ் இந்த பாம் போதுமா அடுத்து எபில தீயாய் வருவான் கிரிதரன்…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top