ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11

11

 

 ஊருக்கு முன்பாக தன் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கிரிதரன் மீது கொலை வெறியுடன் பாய்ந்தான் பரத்..

 

அவனுக்கு இணையாக சண்டையில் குதித்தான் கிரிதரன்… ஒருவர் மாற்றி ஒருவர் விட்டு கொடுக்காமல் சண்டை மாயிந்தனர்… கூடியிருந்த பெரியவர்கள்  இருவரையும் விலக்கி விட  பெரும்  பாடுபட்டு போயினர்…   ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் சண்டை போட்டதின் பலன்…இவனுக்கு மூக்கு உடைந்தால் அவனுக்கு உதடு கிழிந்தது… அவன் சட்டை கிழிந்து இருந்தால் இவனுக்கு  வேட்டி அவிழ்ந்து கிடந்தது…

 

“ச்சை என்னப்பா நீங்க படிச்ச புள்ளைங்க மாதிரியா நடந்துக்கிறீங்க  இப்படி சின்ன புள்ள மாதிரி அடிச்சுகிட்டா அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்…!!”என தலைவர் பிரித்து விட…

 

“மொதல்ல அவனை வெளிய விரட்டி விடுங்க இல்லைனா நான் கொலைகாரனா மாறிடுவேன்…??” என ஆவேசத்தில் கத்திய பரத்தை பிடிக்கப் படாத பாடுபட்டு போயினர் ஆதிகேசவனும் பஞ்சாட்சரமும்…

 

“ நீ என்னடா என்ன கொல்றது நான் உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு கூட போவேன்டா… நீ எப்படிடா அவள் பக்கத்துல உட்காருவ…அவள் எனக்கு மட்டும் தான் சொந்தம்…அவளை அடைய நான் எந்த எல்லைக்கும் போவேன்…!!” என திமிறிய கிரிதரனை அடக்குவதற்குள் திண்டாடிப் போயினர்… 

 

“ நானும் எல்லாத்துக்கும் ரெடி தான் வாடா…!!” வலிய வம்பிழுக்க…

 

“போதும் நிறுத்துறீங்களா…?? என அதுவரை அதிர்ச்சியில் உறைந்திருந்த திலோ என்னும் வெண்கல சிலை உயிர் பெற்றது…

“யாரும் யாருக்காகவும் கொலை பண்ணி ஜெயிலுக்கு போக வேண்டாம்… நான் என்ன மனுஷியா இல்ல மரப்பாச்சி பொம்மையா? எனக்கு வேணும் உனக்கு வேணும்னு ஆளாளுக்கு அடிச்சுக்கிறதுக்கு…!!”

 

இப்போ உங்களுக்கு என்ன வேணும் கிரி  என்று சொல்ல வந்தவள் அவன் பார்வையில் கிரி அத்தான் என திருத்திட… கர்வம் கூடியது கொண்டவனுக்கு… திலோவுக்கு பெருத்த அவமானமாக போனது… அவன் முன்பு துணிவாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றாலும் அவன் சிறு கண்ணசைவுக்கே இவள் வீழ்ந்து விடுகிறாள்  என்றால்… அவ்வளவு பலகீனமானவளா நான் என வெட்கி போனாள்…

 

 “அதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சே… வேணாம்னு முடிவு பண்ணி தானே விட்டுட்டு போனீங்க… இப்ப எதுக்கு திரும்பி வந்து தகராறு பண்றீங்க… என்ன நிம்மதியாக வாழ விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா… இன்னைக்கு நான் வேணும்னு தகராறு பண்ற மனுஷன் அஞ்சு வருஷமா எங்க போயிருந்தீங்க…சரி விட்டுட்டு போன இந்த அஞ்சு வருஷத்துல நான் என்ன ஆனேன் ஏதானேன்னு கொஞ்சமாவது நினைத்து பார்த்திருப்பீங்களா… எந்த நிலைமையில நீங்க என்னை விட்டுட்டு போனீங்கன்னாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா…?? படிப்பறிவில்லாமல் பக்குவம் இல்லாமல் ஊர் பழி சொல் ஏற்று உங்க அம்மா வீட்டை விட்டு வெளியே அடிச்சு விரட்டின பிறகு நிர்கதியா நின்னபோ…  எனக்கு அடைக்கலம் கொடுத்து  இப்போ வரை வழி காட்டி வந்தார் பஞ்சாட்சரம் மாமா… அவரை எப்படி நீங்க குற்றம் சொல்லலாம்… 

 

 உங்கள பெத்து  வளர்த்தவர் மேல மரியாதை இல்லை… உடன் பிறந்தவங்க மேல பாசம் இல்ல…உங்க கூட பழகுனவங்க மேல அக்கறை இல்லை…இவ்வளவு ஏன் உங்க கூட ஒன்னா பழகுனவர் தானே பரத் அவரை இத்தனை பேர் முன்னாடி வச்சி இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே… உங்களுக்கே இது நியாயமா இருக்கா  சொல்லுங்க… இப்போ கூட என் கூட வாழனும் என்கிற ஆசை ஒரு துளி கூட உங்கட்ட கிடையாது… எங்கே  பரத் என்னை கல்யாணம் பன்னிக்குவாரோ என்கிற பயம்… அத தடுக்கணும் என்பதற்காக இவ்ளோ ட்ராமா பண்றிங்கன்னு தெரியும் அத்தான் மத்தவங்களா விட  உங்கள பத்தி எனக்கு தான் நல்லாவே தெரியும்… உங்க சுயநலத்துக்காக நீங்க எந்த எல்லைக்கும் போவீங்க…சீ எவ்வளவு மட்டமான புத்தி உங்களுக்கு…

 

“இப்போ என்ன அதான் நான் வேணாம்னு ஒரு வெள்ளைக்காரி கூட வாழ்ந்து புள்ளையும் பெத்துட்டிங்கல்ல… அப்புறமும் ஏன் என்னை வாழ விடாமல் இடைஞ்சல் பண்றீங்க… நீங்க மட்டும் புள்ள குட்டினு சந்தோஷமா வாழனும் ஆனால் நான் காலம் பூரா உங்களை நினைச்சு கண்ணீர் வடித்துக் கொண்டே சாகணுமா??? அதுக்கு வேற ஆள பாருங்க… நான் ஒன்னும் பழைய தத்தி திலோத்தமா இல்ல… நவ் ஐ அம் கிராஜுவேட் அண்ட் டீசென்ட் ஜாப் ஹோல்டர்… என்னோட வாழ்க்கையை நானே முடிவு பண்ணிட்டேன்…என்னை முன்ன மாதிரி ஏயிச்சி தள்ள நினைக்காதீங்க…என மிடுக்காக நெஞ்சை நிமிர்த்திட…

 

அவளை கேலியாக வியந்து பார்த்தான் கிரிதரன்… அவன் பார்வையின் பொருள் உணர்ந்து திரும்பி கொண்டாள் திலோத்தமா “பொறுக்கி” என அவள் உதடுகள் முனுமுனுத்தது…

 

“ யார்டி உன்னை புள்ள குட்டியோட வாழ வேண்டாம் என்று சொன்னது… அதுக்கு தான இந்த அத்தான் வந்து இருக்கேன்… எத்தனை புள்ளக் குட்டி வேணுங்கிறது எல்லாம் நாம தனியா போய் பேசிக்கலாம் …!!”என அவள் காதருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு துள்ளி குதித்தாள் திலோத்தமா… இவன் எப்போ என் பக்கத்துல வந்தான் என புரியாது முழித்தவள் பின்பு அவன் சொன்ன வார்த்தைகள் விளங்க… முகம் அவமானத்தில் சிவந்தது…

 

“ச்சே அங்க அவள் கூட அப்படி வாழ்ந்து பிள்ளைய பெத்துட்டு… இங்க என்கிட்ட இப்படி பேச… உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா… ??” திலோவிற்கு மனம் தாங்கவில்லை… அவன் அப்படி பேசியதா??? அல்லது அவன் வேறு பொண்ணோடு வாழ்ந்ததா?? அவளுக்கே வெளிச்சம்…

 

“அவளை ஏண்டி நமக்கு நடுவுல இழுக்கிற…அவள் ஒரு ஓரமா இருந்துட்டு போறா  நீ தாண்டி முதல்ல அவள்  உனக்கு அப்புறம் தான்…  நான் எதுக்குடி வெட்கப்படனும்… நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி நீ, உன்கிட்ட இப்படியும் பேசுவேன் அதுக்கு மேலையும் பேசுவேன் இடம் தான் கொஞ்சம் சரி இல்லை வாயேன் தானிய போய் பேசுவோம்…!!” என கடைசி வரியை ஹஸ்கி வாய்ஸில் கூறினான்… ச்சை என்ன மனுஷன் இவன்  என அருவெறுப்பாக நினைத்தாள் 

 

“ இங்க பாருங்க சும்மா சும்மா உங்க பொண்டாட்டி உங்க பொண்டாட்டின்னு சொல்லாதீங்க… நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவுமே இல்ல… நான் பரத்தை கல்யாணம் பண்ணிக்க போறேன்… தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கீடாம இங்க இருந்து போயிடுங்க ப்ளீஸ்…!!” என இரு கரத்தை தலைக்கு மேல் தூக்கி கை கூப்பி வேண்டினாள் திலோத்தமா… இவனோடு போராட வேண்டும் என்ற எண்ணமே பெரும் போராட்டமாக இருக்கிறதே…

 

“ஓ நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சா??? அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவுமே இல்ல…??? அப்படி தான?? என்றபடி திலோத்தமாவை அழுத்தமாக பார்த்தான் கிரிதரன்…

 

“அ..ஆமாம்…!” திலோ கவனமாக அவன் பார்வையை தவிர்த்தபடி…

 

“ இல்லன்னு நான் நிரூபிச்சிட்டா என் கூடவே வந்துடுவியாடி…!!” என கேட்க அவள் மறுப்பாக தலை அசைக்க…உடனே மற்றவர்கள் புறம் திரும்பி 

 

“மக்களே நீங்களே சொல்லுங்க  எங்களுக்குள்ள எதுவும் முடியல… இன்னமும் நான் தான் அவன் புருஷன்னு நிரூபிச்சிட்டா…!!? என் கூடவே அவளை அனுப்பி வைப்பிங்களா…?? “என கேட்க…

 

 “அதான் முடியாது என் மருமகள் வாயால சொல்லிட்டாளே டா  இதுக்கு மேல நீ எதை நிரூபிக்க போற… எவளோ வெள்ள காரி பொண்ணை கூட்டி வந்து வச்சிக்கிட்டு தான் இங்க வந்து வியாக்கியானம் பேசுறியே உனக்கு வெட்கமா இல்லை… உதை வாங்கி சாகாம ஒழுங்கா வீடு போய் சேரு  அதுதான் உனக்கு நல்லது…!!” என பஞ்சாட்சரம் மகனை எச்சரிக்க…

 

“ யோவ் வாத்தி வயசான காலத்தில் ஓரமா போய் நில்லுயா… அதான் பேசிட்டு இருக்கோம்ல…சும்மா கிடந்‌து கத்திகிட்டு…!!”கிரிதரன் அசால்ட்டாக பேசி விட்டு… திலோத்தமாவை ஆழமாக பார்த்தப்படி அவளை நெருங்க இவள் விலக… 

 

“டேய் இப்போ அவள் கிட்ட எதுக்குடா போற???  எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசுடா…!! என பரத் துள்ளி வந்து அவன் முன்னால் இடை மறிக்க…

 

“ப்ச் யாருடா இவன்…குறுக்க மறுக்க ஓடி கிட்டு… அடேய் வந்து இவனை கூட்டி போங்களேன் டா எல்லாத்துக்கும் உங்களுக்கு சொல்லனுமா…!!”என கூட்டத்தை பார்த்து சொல்ல அவன் சொல்லிற்காகவே காத்திருந்தது போல் தலைவரின் ஆட்கள் வந்து பரத்தை மடக்கி பிடித்து இழுத்து போக…அவன் முரட்டு திமிறல் எல்லாம் அவர்களிடம் எடுப்படவில்லை… கூடவே தடுக்க வந்த ஆதிக்கேசவனையும் பஞ்சாட்சரத்தையும் தடுத்து பிடித்து கொண்டனர்… பிறகு  என்ன எந்த இடையூறும் இல்லை எனவே திலோவின் அருகே செல்ல… இவளோ அவன் அருகே வருவதை உணர்ந்து அவன் நெருக்கத்தை தவிர்க்க எண்ணி பின்னால் அடி வைக்க…

 

“ஏய்  பயப்படாதடி எல்லாரும் முன்னாடி வச்சி உன்னை ஒன்னும்  பண்ண மாட்டேன்… நம்புடி உன் அத்தான் அவ்வளவு மோசம் இல்ல… உன் நிழலை கூட அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்… ஏன் தெரியுமா அவ்வளவு லவ்ஸ் உன் மேல… !!” என்று விட்டு கண்ணடிக்க…  

 

 அவனது கூற்றில்  வாயடைத்துப் போய் நிற்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திலோத்தமாவின் தாலியை அவளது பிளவுஸில்  கையை விட்டு வெளியே எடுத்தான் கிரிதரன்…அதை அவையோரிடமும் காட்டிட அனைவரும் வாய் மேல் கை வைத்து அசந்து போயினர்… 

 

“ அடிப்பாவி!!! என்னடி இவள் இப்படி பண்ணிட்டா… மொத புருஷன் கட்டின தாலியோட இரண்டாவது கல்யாணத்துக்கு ரெடியாகிட்டா… இவள் எல்லாம் ஒரு பொண்ணா?? அடுக்குமாடி இதெல்லாம்…?? இந்த மாதிரி கூத்தெல்லாம் எங்கடி நடக்கும் … என ஆளாளுக்கு  பேச…

 

 சம்பந்தப்பட்டவர்களோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்… இதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் பேயறைந்த  முகத்திலிருந்து தெரிய வந்தது…

என்ன இது என்பது போல் பரத் திலோவை பார்க்க 

 பரத்தின் முன்பு குற்றவாளியாக நின்றாள் திலோத்தம்மா… 

 

“நல்லா பார்த்திங்களா நான் கட்டுன தாலி இன்னும் அவள் கழுத்துல தான் இருக்கு இதுக்கு என்ன அர்த்தம் அவள் மனசுல நான் தான் இருக்கேன்னு அர்த்தம்…இப்போ சொல்லுங்க அப்போ இவள் யார் கூட வாழனும்னு…!!” என்றுவிட்டு தெனாவெட்டாக பரத்தை பார்க்க…

 

ஆத்திரம் தலைக்கேறியது பரத்திற்கு மூர்க்க தனமாக தன்னை விடுவித்து கொண்டவன்…  திலோவிடம் விரைந்தவன் ஏறிட்டு அவளை பார்க்க அவளோ குட்டு வெளிப்பட்டத்தில் அவமானத்தில் குன்றி போய் குனிந்து நிற்கிறாளே… அவளையும் தாலியையும் மாறி பார்த்தவன்…

 

“இப்போ என்னடா உன் தாலி அவள் கழுத்துல அவ்வளவு தான இரு அறுத்து தரேன் பொறுக்கிட்டு போ…!!” என திலோவின் தாலியை பிடிங்கினான் பரத்…

 

பகை வெறி அவன் கண்ணையும் மறைத்தது… இரு ஆண்களின் நீயா  நானா என்னும் போட்டியில் நாணல் கயிறாகி போனதோ பெண்ணவளின் வாழ்க்கை?? 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top