ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

 

 

அத்தியாயம் – 6

 

வள்ளியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கலை நேராக சென்று நின்றது என்னவோ கிரவுண்டில் தான் அனைவரும் என்ன பார்க்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தால் அங்கே அழகர் ராகேஷ்யை மிரட்டி கொண்டிருந்தான்.

 

 

அருகில் நின்று இருந்தவளிடம் என்ன விஷயம் என்று கேட்க அதற்கு அவள் “ அந்த ராகேஷ் இருக்கான்ல இவரோட ஏரியா பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்திட்டானாம் அதோட விடாம வீடியோ எடுத்து வைச்சுக்கிட்டு மிரட்டியிருக்கான்.

 

 

அந்த பொண்ணுக்கு என்ன பண்ணுரதுனு தெரியாம இவன் சொல்றதெல்லாம் கேட்டுட்டு வந்து இருக்கு திடீர்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவனோட ஃப்ரெண்ட் கூட அவள ஷேர் பண்ண பார்த்து இருக்கான்.

 

 

அது தாங்க முடியாமல் அந்த பொண்ணு சூசைட் அட்டென்ட் பண்ணி இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கு என்ன விஷயம்னு தெரியாம அந்த பொண்ணோட அம்மா அவளை பார்த்து கேட்கவும் இதுக்கு மேல முடியாம எல்லாத்தையும் சொல்லிடுச்சாம்.

 

 

இத தெரிஞ்சுகிட்ட அவளோட அம்மா அப்பா நேரா வந்து அழகர்கிட்ட சொல்லி இருக்காங்க அதை தெரிஞ்சுகிட்ட ராகேஷ் யார் கண்ணுலயும் படமா சுத்திட்டு இருந்து இருக்கான் அதான் இன்னைக்கு காலேஜ்ல வச்சு மாட்டிக்கிட்டான்” என்று கூறினாள்.

 

 

கலைக்கும், வள்ளிக்கும் சட்டென்று மனதில் தோன்றியது ‘ ஓ அதனால் தான் கொஞ்ச நாளாக நம்மை தொந்தரவு பண்ணாமா இருக்கானா’ என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது.

 

 

‘ யார் பண்ண புண்ணியமோ வள்ளி கொஞ்சம் கொஞ்சமா தப்பிச்சுக்கிட்டு இருக்கா இது எவ்வளவு நாளைக்கு போகும்னு வேற தெரியல பேசாம இந்த அண்ணனை இங்கேயே பார்த்து வள்ளியோட பிரச்சனையோட அவசியத்தை சொன்னா ஏதாவது பண்ணுவாரு’ என்று யோசித்துக்கொண்டு இருந்தாள்.

 

 

இவள் இப்படி யோசித்துக் கொண்டு இருக்க அருகில் நின்று இருந்த வள்ளியோ கண் சிமிட்டாமல் அவனை பார்த்தவள்

‘ என்ன இவரா அன்னைக்கு பஸ் முன்னால் போட்டு அடிச்சாரே அப்பக்கூட பக்கத்துல இருக்கவங்க இவரை பத்தி சொன்னார்களே பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப ஒழுக்கமானவருனு அதனால் தான் இப்ப வந்து ராகேஷ் கிட்ட பேசிக்கிட்டு இருக்காரோ’ என்று நினைத்தவள்.

 

 

அதை அப்படியே தன் தோழியிடமும் சொல்ல நினைத்து அவளை பார்க்க அவளோ வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

கலை என்று கூறி அவளை கிள்ளி தன்னை பார்க்க செய்தாள்.

 

 

“ ஏய் லூசு ஏன் டி இப்படி கிள்ளி வைக்கிற என் சதையே உன் கையோடு வந்திருக்கும் போல” என்று திட்ட ஆரம்பிக்க

 

“ என்னது உன்னோட சதை என் கையில வந்துச்சா எங்கையோ வேடிக்கை பார்த்துகிட்டு இருந்துகிட்டு எத்தன வாட்டி கூப்பிடுறது அதான் கிள்ளி வச்சேன் நானா டி லூசு, நீதாண்டி பைத்தியம்”

 

“நானா பைத்தியம் போடி பேக்கு என்று சொல்ல வந்ததை விட்டுவிட்டு இருவரும் அங்கேயே சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பிக்க” 

 

அதை முதலில் முடிவுக்கு கொண்டு வந்தது வள்ளி தான் “ நான் உன்கிட்ட சொல்ல வந்ததே வேற விஷயம் அதுக்குள்ள நம்ம சண்டையை ஆரம்பிச்சாச்சு நான் சொல்றத ஃபர்ஸ்ட் கேளு” என்றாள்.

 

“என்னன்னு சொல்லு நான் முதல்ல சண்டையே ஆரம்பிக்கல நீதான் என்னை கிள்ளி ஃபஸ்ட் ஆரம்பிச்ச” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

 

 

“அம்மா சாமி நான் எதுவும் ஆரம்பிக்கல பஸ்ட் இப்ப நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை கேளு இந்தோ நிக்கிறாரே வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில இவரை நான் காலேஜ் சேர்வதற்கு முன்னாடியே பார்த்து இருக்கேன்”

 

 

“ என்னடி சொல்ற காலேஜ் சேரத்துக்கு முன்னாடியே பாத்திருக்கியா” என்றாள் அதிர்வுடன்.

 

 

“ ஆமா டி என்று அன்றைக்கு தான் பார்த்ததையும் தங்களுக்கு அருகில் உள்ள பெண்மணியும் பற்றியும் அவர்கள் கூறியதை பற்றியும் தெளிவாக கூறினாள்” 

 

 

இதை கேட்டதும் கலை ஒரு உறுதியான முடிவுக்கே வந்துவிட்டாள் ‘ இது தான் நல்ல சான்ஸ் அந்த அண்ணாவ பார்த்தாலும் நல்லபடியாக தான் தெரியுது இவ சொல்லுறதும் நல்லபடியாக தான் இருக்கு ஏன் நாம இப்பவே இந்த அண்ணணை பார்த்து சொல்லிட கூடாது

 

 

பாவம் வள்ளியும் எவ்வளவு தான் கஷ்டப்படுவா இவனுக்கு பயந்து கிட்டு அவ எங்கேயும் வெளியே கூட வர்றதில்லை, ஒரு சாதாரண கல்லூரில படிக்கிற ஒரு பொண்ணு எந்த ஒரு சந்தோஷத்தையும் அவனால அனுபவிக்க முடியல இதுக்கு ஒரு முடிவை இப்பவே நம்ம எடுத்து ஆகணும்’ என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

அதற்குள் அங்கே சூழ்நிலை பரபரப்பாகியது அவர்கள் என்ன பேசினார்கள் என்று தூரத்தில் நின்று பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் ராகேஷ் ஏதோ திமிராக பேச போய் அதுவரை அமைதியாக பேசிக்கொண்டு இருந்த அழகர் சட்டென்று அவனை அடித்து விட்டான்.

 

 

அனைவரும் இதை சுற்றி நின்று பார்க்க ராகேஷ்கு மிகவும் அவமானமாக போய்விட்டது ஆனாலும் அழகரை அடிக்கும் அளவுக்கு வெறியே வந்தாலும் அதை இப்பொழுது காட்டும் நிலையில் அவன் இல்லை

 

 

 அமைதியாக போக வேண்டிய சூழ்நிலை கொஞ்ச நாட்களுக்கு முன்பு வள்ளியை கடத்தியதில் அவனது அப்பாவிடம் இருந்து நன்றாக வாங்கிகட்டிகொண்டான்.

 

 

இதுவரை அவன் எது செய்தாலும் பெரிதாக கண்டுக் கொள்ளாமல் இருந்தவர் அன்று காலேஜுக்கு வந்து வள்ளி கடத்தியதை பற்றிய செய்தி வரவும் அவனுக்கு அழைத்தவர் “ அந்த பொண்ணை அப்படியே கொண்டுபோய் காலேஜ்ல விட்டுட்டு நேராக நம்ப பங்களாவுக்கு வா” என்று கடுமையான குரலில் கூறவும் முதலில் கண்டுகொள்ளாதவன் 

 

 

அடுத்து அவனது அம்மாவிடம் இருந்து கால் வரவும் சற்றென்று வள்ளியை திரும்பி பார்த்தவன் மயக்கத்தில் இருக்கவும் அப்படியே சென்று காலேஜில் கிரவுண்டில் இறக்கிவிட்டு வீட்டை நோக்கி சென்று விட்டான்.

 

 

கோபத்துடன் நேராக வீட்டுக்கு சென்றவன் அங்கு அவனது தந்தை கடும் கோபத்துடன் இருக்கவும் அவனைப் பார்த்தவர் மறு பேச்சு பேசாமல் ஓங்கி அவனது கன்னத்திலே ஒரு அறை வைத்தார்.

 

 

இதுவரை அதட்டி கூட பேசியிராதவர் இன்று அடிக்கவும் அவனுக்கு ஒரு நொடி என்ன நடந்தது என்று புரியாமல் இருந்தவனை மேலும் அடிக்க வந்தவர் பின் என நினைத்தாரோ மிகவும் கண்டிப்புடன் “ இனிமே நீ பொண்ணுங்க விஷயத்துல தலையிட கூடாது எலக்சன் வேற வருது ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா உன்ன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கடுமையாக மிரட்டி விட்டார்.

 

 

பிரின்சிபால் கால் பண்ணுவதற்கு முன்பு தான் அழகர் ஃபோன் பண்ணி அவரது மகன் பற்றிய செய்திகளை கூறியிருந்தான்

அதனால் தான் அடுத்து அடுத்து மகனை பற்றி கேள்விப்பட்டதும் உடனே அவனை அழைத்து கண்டித்தும்.

 

 

இப்பொழுது அவன் அமைதியாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தான் காலேஜில் அத்தனை பேருக்கும் முன்னாடியும் தான் அடி வாங்கியது எண்ணி அவமானமாக எண்ணியவன் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டான்.

 

இந்த கலவரம் அங்கே நடந்து முடிய அவன் செல்லவும் சுற்றி ஒரு முறை காலேஜ்யை பார்த்த அழகர் பின் அவனும் செல்லவும் அதுவரை அங்கு நடந்தவற்றை பார்த்துகொண்டு இருந்த தோழிகள் இருவரும் அழகர் செல்வதை பார்த்த கலை ‘ நாம் போய் இப்ப இந்த அண்ணா கிட்ட அவ விஷயம் சொல்லிட்டா பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தா அவரு பார்த்துகுவாறு’ என்று யோசித்தாள்.

 

அருகில் நின்று இருந்த வள்ளியை பார்த்தவள் “ நீ கிளாஸ்கு போ டி நான் சீனியரை பார்த்துட்டு வரேன் அவர்கிட்ட நோட்ஸ் கேட்டு இருந்தேன் வந்து வாங்கிக்க சொன்னாறு” என்றாள்.

 

அவளை சந்தேகமாக பார்த்த வள்ளி யாரு என்ன என்று விசாரிக்க அவளை சமாளித்து அனுப்பி வைத்துவிட்டு இவள் அழகரை தேடி ஓடினாள்.

 

அதற்குள் அழகர் பார்க்கிங் சென்றுவிட அவன் கிளம்புவதற்கு முன் அழகரின் முன் தடுத்து நிறுத்தி நின்று விட்டாள். 

 

 

பைக்கில் அமர்ந்து இருந்தவன் திடீரென்று ஒரு பெண் வந்து வண்டியை மறிக்கவும் என்ன என்று எதுவும் புரியாமல் அவளைப் பார்த்தான்.

 

 

அவனை பார்த்தவள் அவனின் வண்டி முன்பு மூச்சு வாங்க நின்றாள்.

 

 

“ அண்ணா சாரி அண்ணா உங்கள புடிக்க அவசரமா ஓடி வந்ததால கொஞ்சம் மூச்சு வாங்குவது ஒரு நிமிஷம்” என்று கூறியவாறே தன்னை நிதானம் படுத்திக் கொண்டாள்.

 

முகத்தில் இறுக்கத்துடன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவனை கண்டவள்

 “ அண்ணா என்னோட பெயர் கலையரசி நான் இந்த காலேஜ்ல தான் சி.எஸ் செகண்ட் இயர் படிக்கிறேன்” என்று சொல்லவும்

 

மேலே சொல் என்று ஒரு பார்வை பார்த்திருந்தான்.

 

“ அது வந்து என்னோட ஃப்ரெண்ட் வள்ளிக்கு ஒரு பிரச்சனை இப்ப நீங்க அடிச்சிட்டு வந்தீங்க இல்ல ராகேஷ் அவன் அவளை கடத்திட்டு போகப் பார்த்தான் என்றும் மேலும் வள்ளியிடம் அவன் சொன்ன அனைத்து விஷயங்களையும் கூறி மிரட்டியதையும் கூறினாள்”.

 

 

“ சரி அதுக்கு நான் என்னமா பண்ண முடியும்” என்று கேட்க 

 

 

“ நீங்க அப்படி சொல்லக்கூடாது அண்ணா உங்கள நம்பித்தான் இந்த விஷயத்தை அவ கிட்ட கூட கேட்காமல் உங்களை தேடி வந்து சொல்றேன்”

 

 

“ நீங்க தான் எப்படியாவது அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்ணா பாவம் அம்மா அப்பா இல்லாத பொண்ணு அவங்க மலை கிராமத்தில் இருந்து படிக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக இங்க வந்து ரொம்ப கஷ்டப்படுறா

 

ராகேஷ் சொன்னதும் இதுதான் மலைவாழ் கிராமத்துல இருக்க பொண்ணு உனக்கு யாரும் இல்ல என் கூட வந்து இருந்து தான் ஆகணும் சொல்லி மிரட்டுறான் அண்ணா பிளீஸ் அவளுக்கு ஹெல்ப் பண்ணுங்க” 

 

 

என்று அவள் பேச பேச அவளது கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் கொட்ட ஆரம்பித்து விட்டது. 

 

 

அவள் கூறுவதை முதலில் எதார்த்தமாக கேட்டுக் கொண்டிருந்தவன் பின்பு அவளுக்கு அம்மா அப்பா யாரும் இல்லை என்ற காரணமும் படிப்பின் மீது அவளுக்கு இருக்கும் ஏக்கமும் அவனை மிகவும் பாதித்தது.

 

 

ஏனென்றால் தானும் இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து வந்ததும் அந்த படிப்பிற்காக இன்னமும் ஏங்கிக் கொண்டிருப்பதும் தனது ஆழ்மனது ஒன்றுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அதே சூழ்நிலையில் தற்போது அந்தப் பெண்ணும் இருப்பது ஏதோ தானே மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலையில் நிற்பது போல் அவனுக்கு தோன்றியது. 

 

 

பிரெண்டுக்காக இந்த பெண்ணின் கண்ணீரும் அவளது சூழ்நிலையும் ஒன்று போல் இருக்க மனதில் ஒரு முடிவெடுத்துக் கொண்டான்.

 

 

“இங்க பாருமா நீ சொல்ற எல்லாமே எனக்கு புரியுது அந்த பொண்ணுக்கு கண்டிப்பா நான் ஹெல்ப் பண்றேன் இனிமேல் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே என்னோட போன் நம்பருக்கு காண்டாக்ட் பண்ணு மித்தத்தை நான் பார்த்துக்கிறேன்” என்று உறுதியாக கூறினான்.

 

 

அவன் கூறியதை கேட்டவள் சட்டென்று கையெடுத்து கும்பிட்டு விட்டாள் “ரொம்ப நன்றி அண்ணா இந்த ஹெல்ப் கண்டிப்பா நாங்க மறக்கவே மாட்டோம்” என்று கூறினாள்.

 

 

பின் தன் போன் நம்பரை அவளிடம் கொடுத்து பத்திரமாக இருவரையும் இருக்கும்படி கேட்டுக் கொண்டான் 

அதற்கு அவளும் சரி என்று தலையசைத்து அவனின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு விடை பெற்றாள்.

 

 

இவர்கள் இருவரும் நின்று பேசுவதை அருகில் இருந்

த தூணில் மறைவில் இருந்து அதுவரை கேட்டுக் கொண்டிருந்த ராகேஷ்ன் நண்பன் சட்டென்று அவனிடம் கூறுவதற்காக சென்று விட்டான்.

கமெண்ட் பீளிஸ் நட்புகளே 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “என்னை உனக்குள் தொலைத்தேனடி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top