ATM Tamil Romantic Novels

என் வினோதனே 18,19

அத்தியாயம் 18

 

நாளுக்கு நாள் அஜய்யின் மன உளச்சல் அதிகரிக்க அதிகரிக்க அவனால் ஒரு கட்டத்துக்க மேல் முடியாமல் வேல்முருகனை காண சென்றான். 

 

அவனை பார்த்த வேல்முருகன் “என்னாச்சு அஜய் ஏன் ரொம்ப டல்லா இருக்க எதாவது பிரச்சனையா” என்று கேட்டார் “ஆமா அங்கிள் நான் இதை எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னே தெரியலை அங்கிள் எனக்கு அவள் நியாபகமாவே இருக்கு என் மனசும் உடம்பும் அவளை மட்டும் தான் தேடி அலையுது” என்றான் தடுமாற்றத்துடனே. 

 

“யாரு எந்த பொண்ணு நீ என்ன செல்லுற எனக்கு ஒன்னுமே புரியலை அஜய்” என்று கேட்க

“அவள் தான் நான் கூட்டிட்டு போனனே மல்லிகா” என்று கூற வேல்முருகன் அவனை புரியாத ஒரு பார்வை பார்த்தார் அதன் பின் அஜய் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான். 

 

“அவள் உன்னை லவ் பண்றா எல்லாம் ஓகே பட் நீ அவளை லவ் பண்ணுறியா கல்யாணம் பண்ணிக்க போறியா” என்று கேட்டார். 

 

“அங்கிள் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்காக நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா சொசைட்டில அவளை பத்தின உண்மை தெரிஞ்சா எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க, முன்னாடி மாதிரியே நான் என் குழந்தைன்னு அவள் கூட சேர்ந்து வாழ்ந்தா மட்டும் போதும்” என்றான். 

 

“அப்போ நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க விரும்புறியா” என்று கேட்டார். 

 

அஜய் உடனே பதட்டத்துடனே “இல்லை அங்கிள் அவளை தவிர எனக்கு இந்த உலகத்துல எந்த பொண்ணையும் பிடிக்காது இந்த உலகத்துக்கு தெரியாம ஏதோ ஒரு மூலையில நானும் அவளும் சேர்ந்து வாழ்ந்தா போதும் எனக்கு கல்யாணத்து மேல இருந்த நம்பிக்கையே போய்ருச்சு” என்றான். 

 

இவன் என்ன லூசா என்பதை போல் அவனை ஒரு பார்வை பார்த்தவர் “உன் கூட இப்படி வாழ எந்த பொண்ணு ஒத்துப்பா அஜய் இது தப்பு” என்றார். 

 

“எனக்கு இது தப்பா படலை அங்கிள் சொசைட்டில நாலு பேருக்கு அவள் யாரோட பொண்ணுங்குற உண்மை தெரிஞ்சா எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க எனக்கு அவள் வேணும் அவ்வளவு தான் அங்கிள் அதுக்காக என்னோட தரத்தையும் என்னால தாழ்த்திக்க முடியாது”

 

“தாலியே இல்லாம வெறும் குழந்தையோட அந்த பொண்ணு உன் கூட வாழ்ந்தா அவளை பத்தி எல்லாரும் நினைப்பாங்க அஜய் நீ படிச்சவன் உனக்கு நான் சொல்லி தெரியனும்ன்னு இல்லை” என்று கூறிக் கொண்டே இருக்கும் போதே 

அஜய்யின் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தவன்

ஏதோ பேசிவிட்டு “இதோ இப்போவே வரேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தவன் “அங்கிள் ஒரு அர்ஜென்ட் வொர்க் இப்போ வரேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். 

 

வேல்முருகன் அஜய்யை பார்த்து கொண்டே இருந்தவர் அவன் பெற்றோரிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்து கொண்டார். 

 

இப்படியே நாட்கள் நகர ஷில்பா-தீபக்கிற்க்கு பெண் குழந்தை வெளிநாட்டில் பிறக்க அவர்களின் மகளின் பெயர் சூட்டும் விழாவுக்காக இந்தியா புறப்பட்டு வந்தனர். 

 

ஏர்போர்ட்டில் இருந்து நேராக அஜய்யின் பெற்றோர் இருக்கும் வீட்டுக்கு தான் சென்றனர் 

பேத்தியை பார்த்தவுடன் லதாவின் கோபம் குறைந்து போனது

மல்லிகா அவர்களை பார்த்தவள் தீபக் தான் லதாவின் மகன் என்று நினைத்து கொண்டாள். 

 

ஷில்பா-தீபக் தம்பதியின் மகளின் பெயர் சூட்டும் விழாவுக்கு அஜய்யை அழைக்க அவன் மறுப்பு எதுவும் கூறாமல் வருவதாக கூறினான் அவர்களுக்கும் அது ஆச்சரியமாக தான் இருந்தது. 

 

முன்பு இருந்த அஜய் என்றால் நிச்சயமாக வந்து இருக்க மாட்டான் ஆனால் இப்போது மல்லிகாவின் 

மீது கொண்ட காதலால் எந்த வித விருப்பு வெறுப்பும் இன்றி வந்தான். 

 

விழா கோலகலமாக நடைபெற ஆரம்பித்தது ஷில்பாவின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் அனைத்து பிரபலங்களும் அங்கே ஒன்று கூடி இருந்தனர் விழா அஜய்யின் பெற்றோர் வீட்டில் தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

 

அந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்களுக்கும் அன்று சற்று வேலைப்பளு அதிகமாக தான் இருந்தது மல்லிகா சமைக்கும் இடத்தில் காய்கறி நறுக்கி கொடுத்து கொண்டு இருந்தாள் அவள் மகன் ஒரு யானை பொம்மையுடன் தரையில் அமர்ந்து விளையாடி கொண்டு இருந்தான். 

 

ஒவ்வொரு பிரபலமாக அங்கே வர அஜய்யின் பெற்றோர் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்று கொண்டு இருந்தனர். 

 

அஜய்யும் தன் உயர் தர ரோல்ஸ் ராய்ஸ் காரில் அங்கே வந்து சேர்ந்தான் எப்போதும் போல் வெள்ளை நிற பார்மல் ஷர்ட் அதற்க்கு ஏற்றார் போன்று கருப்பு நிற சட்டை அணிந்து தன் மகளுக்காக தங்கத்தில் வைரம் பதித்த வளையல் வாங்கி வந்திருந்தான் அந்த நகை பையையும் எடுத்து கொண்டு கீழே இறங்கினான். 

 

அவன் உள்ளே வர அவன் தாயோ 

“எவ்வளவு நேரம் டா கொஞ்சம் சீக்கிரமா வந்துருக்கலாமே யாரோ மாதிரி வர” என்று கேட்டார் 

“மா இப்போவாது வந்தனேன்னு சந்தோஷப்படுங்க” என்றான் அஜய் பதிலுக்கு. 

 

“சரி சரி உள்ளே போ” என்க 

அவனும் உள்ளே சென்றான் ஷில்பா கையில் குழந்தையுடன் தீபக்குடன் ஜோடியாக நின்றிருந்தாள் 

அஜய் அவளை சாதாரணமாக பார்த்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தாள் 

ஷில்பா. 

 

அதன் பின் குழந்தையை தொட்டிலில் போட்டு பெயர் சூட்டும் விழா ஆரம்பமானது “தாட்சாயனி” என்ற பெயரை தீபக் முதலில் குழந்தையின் காதில் கூற அடுத்தப்படியாக ஷில்பா கூறினாள். 

 

அதன் பின் ஒவ்வொருவராக தங்கள் பரிசுகளை கொடுத்துவிட்டு சென்றனர் இறுதியாக அஜய்யும் தான் வாங்கி வந்திருந்த தங்க வளையலை தாட்சாயனியின் கையில் அணிவித்துவிட்டு ஒரு புன்னகையுடன் நகர்ந்தான். 

 

வெளியே இருந்த தோட்ட பகுதியில் ஃபப்பே முறையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க அனைவரும் உணவருந்தி கொண்டு இருந்தனர். 

 

மல்லிகாவும் உறங்கும் குழந்தையை தன் தோளில் சுமந்து கொண்டே அனைவருக்கும் ஜூஸ்சை கண்ணாடி டம்ளரில் கொடுத்து கொண்டு இருந்தாள் அப்போது அங்கே அஜய் சாப்பிடுவதற்க்காக வர எதார்த்தமாக திரும்பியவள் அவனை பார்த்துவிட்டாள். 

 

அவனை பார்த்த அதிர்ச்சியில் நின்றிருக்க அஜய் அவளை பார்க்கவில்லை வேறொரு கவுண்டரில் நின்றிருந்தான் 

அஜய்யை பார்த்து கொண்டே மல்லிகா ஒருவனுக்கு ஜூஸ்சை கொடுக்க போக அவன் வாங்குவதற்கு முன்னே விட்டுவிட்டாள். 

 

அவன் மேலே அந்த கண்ணாடி டம்ளர் பட்டு சட்டை முழுவதும் ஜூஸ்சாகி கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்தது அடுத்த கணம் அவன் மல்லிகாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான் 

“இடியட் கண்ணை எங்கே வச்சிருக்க” என்று அந்த இடமே அதிரும் படி கத்த உறங்கி கொண்டு இருந்த குழந்தை வீல்லென்று அழுக ஆரம்பித்தது. 

 

அந்த சத்தத்தில் அங்கிருந்த அனைவரின் பார்வையும் மல்விகாவிடம் சென்றது அஜய் உட்பட அனைவரும் அங்கே தான் பார்த்தனர் அஜய் அவளை பார்த்தவன் தான் காண்பவை உண்மை தானா இது அவள் தானா என்று ஒரு முறை கண்ணை கசக்கி விட்டு பார்த்தான் ஆம் அது அவளே தான் “சாரி சார்” என்று அழுதாள். 

 

அவளின் முதுகில் இருந்த குழந்தை தன் தாய் அழுவதை பார்த்து இன்னும் அழ அவளின் பக்கத்தில் வந்தார் லதா “சாரி தம்பி கை குழந்தை வச்சிருக்க பொண்ணு தப்பா நினைச்சிக்காதிங்க” என்று அவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். 

 

“கவனமா வேலை செய்ய மாட்டியா மல்லிகா” என்று லதா அவள் புறம் திரும்பி கேட்க 

“மன்னிச்சிடுங்க மா” என்றாள் அவள் பதிலுக்கு கண்ணீர் மல்க “குழந்தை அழுகுது போய் பசியாத்து” என்று அனுப்பி வைத்தார். 

 

மல்லிகா அழுது கொண்டே குழந்தையை தூக்கி கொண்டு அங்கிருந்து சென்றாள் ஆனால் அஜய்யால் அவளிடம் நெருங்கி போய் பேச முடியவில்லை இத்தனை பேர் பார்க்க எப்படி பேசுவது என்று அவனின் ஸ்டேட்டஸ் தடுத்தது. 

 

மல்லிகா அழுகையுடனே குழந்தையின் பசியாற்றியவள் குழந்தையை தோட்டத்து மரத்தடியில் இருந்த தொட்டிலில் போட்டுவிட்டு மீண்டும் கண்ணை துடைத்து கொண்டு அங்கிருந்த வேலைக்காரர்களுடன் வேலை பார்க்க ஆரம்பித்தாள். 

 

பின்னே இருந்த வாசலில் அனைவரும் பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருக்க அவளும் பாத்திரங்களை கழுவி கொண்டு இருந்தாள் அஜய் அவளை பார்த்து கொண்டே கையை கழுவுபவனை போல் அங்கே வந்தான் ஆனால் அவளோ அவனை கண்டுகொள்ளவேயில்லை. 

 

அவள் பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் “எல்லாரும் சாப்பிட்டிங்களா” என்று குரல் கொடுத்து பேச 

“சாப்பிட்டங்க ஐயா” என்றாள். 

 

மல்லிகா அப்போதும் திரும்பவேயில்லை அவளை முறைத்து கொண்டே அஜய் அங்கிருந்து சென்றவன் தொட்டிலில் உறங்கும் குழந்தையை பார்த்தான். 

 

சட்டை எதுவும் போடாமல் பிறந்த மேனியுடன் இருந்ததால் ஆண் குழந்தை என்று தெரிந்தது அவனுக்கு அவனை போன்று இருக்கும் தன் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றியது. 

 

‘மூக்கு என்னை மாதிரி இருக்கு அட பாரு மச்சம் கூட என்னைய மாதிரியே இருக்கு இந்த குட்டி பையலுக்கு’ என்று நினைத்து கொண்டான். 

 

அந்த பக்கம் யாரோ ஆள் நடமாட்டம் இருப்பதை போல் தெரிய சட்டென குழந்தையிடம் இருந்து விலகினான் சாதரணமாக நடப்பவனை போல் நடந்தான் அவர்கள் சென்றவுடன் மீண்டும் குழந்தையை வந்து பார்த்தான். 

 

மல்லிகாவுடன் இருந்த பெண்மணி

“இவரு தான் லதா அம்மா மூத்த மகன் சினிமாவுல எல்லாம் நடிக்குறாரு ரொம்ப நல்ல மனுஷனா இருக்காரு” என்றாள்

அவள் கூறியதை கேட்ட மல்லிகா கோபத்துடன் பாத்திரங்களை வேக வேகமாக தேய்த்தாள். 

 

அதன் பின் மல்லிகா அனைவரும் சாப்பிட்டு போட்ட பிளாஸ்டிக் தட்டு கண்ணாடி டம்ளர்கள் என்று அனைத்தையும் வாரி எடுத்து போட்டு கொண்டு இருந்தாள். 

 

அவளை பார்த்தவனின் மனம் ஒரு ஒரத்தில் வலித்தது மெல்ல மெல்ல அவளை ரசிக்க ஆரம்பித்தது முன்பு எல்லாம் சிறுபிள்ளையை போன்று இருப்பவளின் முகத்தில் இப்போது தெளிவு இருந்தது அவளின் உடல் அளவு கூட கூடி போய் இருந்தது. 

 

ஆனால் வெளுத்து போன புடவையை தான் அணிந்திருந்தாள் 

தலையை கொண்டை போட்டு இருந்தாள் பாத்திரம் விலக்கி சோர்ந்து போய் இருந்தாள் முகமெல்லாம் வியர்த்து வடிந்து இருக்க அங்கே ஓடிக் கொண்டு இருந்த டேபிள் பேனை அவள் புறம் திருப்பினான் அஜய். 

 

திடீரென காற்று வீச மல்லிகா நிமிர்ந்து பார்த்தாள் அங்கே நின்றிருந்த அஜய்யை பார்த்தவளுக்கு கோபத்தில் முகம் சிவந்து போனது அனைத்து குப்பைகளையும் அள்ளிப்போட்டு விட்டு அங்கிருந்து சென்றாள். 

 

அன்று முழுக்க அஜய் அங்கேயே இருந்து மல்லிகாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ஆனால் அவளோ அவனை மதிக்கவே இல்லை. 

அத்தியாயம் 19

 

மல்லிகா இரவு அனைத்து வேலைகளையும் முடித்தவள் குழந்தையை தரையில் பொம்மையுடன் விளையாட வைத்துவிட்டு சமயலறையின் மேடையை துடைத்து கொண்டு இருந்தாள். 

 

விழாவிற்க்கு வந்திருந்த அனைவரும் கிளம்பி இருக்க அஜய் அங்கேயே தான் இருந்தான் சமயலறையில் அவள் மட்டும் தனித்து இருப்பதை பார்த்தவன் தண்ணீர் குடிப்பவனை போல யார் கண்ணிலும் படாமல் சமயலறையின் உள்ளே சென்றான். 

 

தண்ணீரை குடித்து கொண்டே ஓரக்கண்ணால் அவளை பார்த்தான் ஆனால் மல்லிகா அவனை மதிக்காமல் வேலை பார்த்து கொண்டிருந்தாள். 

 

அஜய்யின் கண்கள் குழந்தையிடம் சென்றது தரையில் ஒரு உடைந்து போன பொம்மை ஒன்றை வைத்து கொண்டு விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்தது அதை பார்த்தவனின் இதயத்தில் ரத்தம் கசிந்தது. 

 

அவன் நினைத்தால் ஒரு பொம்மை கடையையே விலைக்கு வாங்க முடியும் ஆனால் அவன் குழந்தையோ உடைந்து போன பொம்மையை வைத்து விளையாடி கொண்டு இருக்கிறான். 

 

தன் அறைக்குள் சென்றவன் அங்கிருந்த பொம்மைகளை ஒரு பை நிறைய போட்டு எடுத்து வந்தான் மல்லிகா வேலை முடிந்து செல்லும் போது அவளிடம் நீட்ட

என்ன இது என்பதை போல் பார்த்தாள் “குழந்தைக்கு பொம்மை” என்றான் அஜய். 

 

“வேண்டாம் சார் என் குழந்தைக்கிட்ட இருக்க பொம்மையே போதும்” என்றாள் அவன் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்து கொண்டு அஜய் உடனே பையிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து “குட்டி பையா பொம்மையை வச்சிக்கோங்க” என்று கொஞ்சி கொண்டே குழந்தையின் கையில் கொடுக்க அதுவும் சமத்தாக வாங்கி கொண்டு விளையாட ஆரம்பித்தது. 

 

மல்லிகா கோபத்துடன் குழந்தையின் கையில் இருந்த பொம்மையை வலுக்கட்டாயமாக பிடுங்கியவள் அஜய்யின் கையில் கொடுத்தாள் 

குழந்தை உடனே வீல்லென்று அழுக ஆரம்பித்தது “என் குழந்தைக்கு நான் இருக்கேன் பொம்மை வாங்கி தர நீங்க யாரு இனி பொம்மை வாங்கி தர வேலையெல்லாம் வச்சுக்கிட்டிங்க அசிங்கப்பட்டு தான் போவிங்க” என்று கோபத்துடன் கூறியவள் குழந்தை அழுவதை கூட கண்டு கொள்ளாமல் கோபத்துடனே அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள். 

 

குழந்தை பொம்மையை பார்த்து கொண்டே அழுதது அவன் கண்ணுக்குள்ளேயே நின்றது மனம் தாங்காமல் நடந்து செல்லும் மல்லிகாவை காரை எடுத்து கொண்டு பின் தொடர்ந்தான். 

 

கிட்டத்தட்ட ஒரு கீலோ மீட்டர் வரை பச்சிளம் குழந்தையை தூக்கி கொண்டே அந்த இருளில் நடந்து சென்று கொண்டிருந்தாள் 

“எப்படி தினமும் இவ்வளவு தூரம் நடந்து வராளோ” என்று காரை ஒட்டிக் கொண்டே வாய்விட்டே கூறினான் அஜய். 

 

ரோட்டில் இருந்து ஓரம் தள்ளியிருந்த ஒரு குடிசை போடப்பட்ட குறுகலான பாதையில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குள் சென்றாள் அவள், 

அஜய் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளின் பின்னேயே நடந்து சென்றான் நாலாவதாக இருந்த குடிசை வீட்டின் தகர கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் மல்லிகா. 

 

குடிசையின் உள்ளே சென்றவள் பிள்ளையை இடையில் வைத்து கொண்டே விளக்கை ஏற்றினாள் 

ஏனெனில் அந்த வீட்டில் மின்சாரம் கூட இல்லை அப்போது அந்த வீட்டின் தகர கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அஜய். 

 

அஜய்யின் கண்கள் சுற்றிமுற்றி பார்த்தது மண் தரை தான் வீட்டில் மின்சாரம் கூட நான்கு பேர் சேர்ந்து நின்றாள் இடம் அடைந்துவிடும் 

நாலைந்து சமையல் பாத்திரங்கள் ஒரு சிறிய பை ஒரே ஒரு பாய் மட்டும் இருந்தது இப்படி ஒரு சூழலில் அவளை பார்க்க மனம் வலித்தது. 

 

அவனை பார்த்தவள் ஒரு கணம் அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள் ஒரே ஒரு கணம் மட்டுமே அதிர்ச்சியுடன் நின்றிருந்தவள் தன்னை சுதாரித்துக் கொண்டு “யார் நீங்க எதுக்கு என் வீட்டுக்குள்ள வந்திங்க வெளியே போங்க” என்றாள் கோபத்துடன். 

 

அஜய் அவளை கண்டுகொள்ளாமல் அவளின் இடையில் இருந்த தன் மகனை தூக்கியவன் “தங்கம் அப்பா வந்துருக்கேன் டா அப்பா” என்று கூறும் போதே அவன் கண்கள் கலங்கியது குழந்தையின் முகத்தில் ஒரு இடம் கூட விடாமல் கண் கன்னம் நெற்றி என்று கண் மண் தெரியாமல் தன் மீசை முடி குத்த எச்சில் முத்தத்தை வாரி வழங்கினான். 

 

அவனை பார்த்த மல்லிகாவுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது அவனிடமிருந்து தன் குழந்தையை வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்தவள் 

“யார் நீங்க எதுக்கு இங்கே வந்திங்க 

அக்கம் பக்கத்துல யாராவது பார்த்தா என்னை பத்தி என்ன நினைப்பாங்க முதல்ல வெளியே போங்க” என்றாள். 

 

அஜய்க்கு உடனே அவள் பேச்சில் கோபம் வந்து விட “ஏய்” என்று கையை ஓங்கி கொண்டு அடிக்க போனவன் தன்னையே சமாதானம் செய்து கொண்டு நின்றான்

“இங்க பாரு டி நீ உன் காதலை என் கிட்ட சொல்லும் போது நான் புரிஞ்சிக்காம கோவப்பட்டது என் தப்பு தான் அதுக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன் நீங்க இப்படி கஷ்டப்படனும்ன்னு என்ன தலையெழுத்தா நீயும் பையனும் என் கூட வந்துருங்க நான் உங்களை நல்லபடியா பார்த்துக்குறேன்” என்றான். 

 

“எங்களை கூட்டிட்டு போனா உங்க பொண்டாட்டி கோவப்பட மாட்டாங்களா சார்” என்றாள் மல்லிகா கோபமும் அழுகையும் கலந்த குரலில் “அந்த கல்யாணம் நின்னு போச்சு டி என்னால உன்னை மறக்க முடியல உன்னை தவிர அந்த இடத்துல யாரையும் நினைச்சு கூட பார்க்க முடியல இந்த ஒன்றரை வருசமா உன்னை நினைச்சே காலத்தை ஓட்டிட்டேன்” என்றான். 

 

மல்லிகா பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசவில்லை அமைதியாக நின்றிருந்தாள் “என் கூட நீங்க ரெண்டு பேரும் வந்துருங்க நாம பழைய மாதிரியே இருப்போம்” என்றான். 

 

“பழைய மாதிரியேன்னா ஒரு விபச்சாரியா நான் உங்க கூட படுக்கனும் அப்படி தான சார்” என்றாள் கோபத்துடன் மல்லிகா

“அப்படி இல்லை நீ என்னோட காதலியா வா அது போதும்” என்றான் அதை கேட்ட மல்லிகாவுக்கு சுல்லென்று கோபம் தலைக்கு ஏறியது. 

 

“ஓ அப்போ கல்யாணம் கட்டி உங்களோட குடும்பம் நடத்த நீங்க என்னை கூப்பிடல முன்னாடி மாதிரி விபச்சாரியா உங்க கூட வாழனும் அப்படி தான சார்” 

 

“ஏன் டி எப்போ பாரு படுக்கறதை பத்தி மட்டும் தான் பேசுவியா 

வாழ்க்கையில அது ஒன்னு மட்டும் தான் இருக்கா என்ன, நான் உன் கூட சேர்ந்து வாழனும்ன்னு ஆசைப்படுறேன்” என்றான். 

 

“சேர்ந்து வாழனும்ன்னா எப்படி” என்று அவள் கேட்க

“இங்கே பாரு மல்லிகா நான் உன்னை இப்போ கல்யாணம் பண்ணினா கண்டிப்பா நீ யாருங்குறதை சொசைட்டில எல்லாரும் நோண்டுவாங்க உன்னை பத்தின உண்மை தெரிஞ்சா என்னை கேவலமா நினைப்பாங்க அதனால தான் சொல்றேன் யாருக்கும் தெரியாம உலகத்துல எங்கேயாவது ஒரு மூலையில நீயும் நானும் சந்தோசமா வாழலாம் அதாவது நீ விபச்சாரியோட பொண்ணுன்னு தொரிஞ்சா அதை விட அசிங்கம் வேற எதுவும் இருக்காது” என்று அவன் கூறி முடிக்கும் முன்னே 

மல்லிகா தன் கையை ஓங்கி அஜய்யின் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டாள். 

 

அஜய் தன் கன்னத்தில் கை வைத்து கொண்டு நின்றவன் “எதுக்கு டி என்னை அடிச்ச” என்று கேட்க 

“மரியாதையா என் வீட்டை விட்டு வெளியே போய்டு நான் கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் கெளரவாமா உழைச்சி சாப்பிட்டு கிட்டு இருக்கேன் உன் கூட வப்பாட்டியா வாழுறதுக்கு இப்படியே இருந்துட்டு போறேன் வெளியே போ” என்றாள். 

 

இப்போது அஜய் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்

“நான் உன்னை வப்பாட்டியாவா வாழ கூப்பிட்டேன் சேர்ந்து வாழுவோம்ன்னு தான கூப்பிட்டேன்” என்றான் கோபத்துடன். 

 

“ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான் இங்கே என்னை சுத்தி இருக்குற எத்தனையோ பேர் என்னை அவங்க கூட சேர்ந்து வாழ தான் கூப்பிடுறாங்க” என்று கூறும்போதே வந்த தன் அழுகையை உதட்டை கடித்து கொண்டு தடுத்தவள்

“எனக்கு உங்க கூட வர விருப்பம் இல்லை நான் இப்படியே இருந்துக்குறேன் வெளியே போங்க” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே அந்த தகர கதவு திறக்கப்பட்டது. 

 

இருவரும் யார் என்று திரும்பி பார்க்க அங்கே அவளுடன் அஜய் வீட்டில் வேலை செய்யும் பத்மா தான் வந்திருந்தார் அஜய்யை பார்த்தவர்

“வாங்க சார் இங்கே என்ன பண்ணுறிங்க” என்று கேட்க 

“அது அது” என்ன கூறுவது என்று தெரியாமல் தடுமாறியவன் 

“இதோ இந்த பொம்மையை குழந்தைக்கு கொடுக்க வந்தேன் அம்மா தான் கொடுக்க சொன்னாங்க” என்றவன். 

 

மல்லிகாவின் அருகில் சென்று அந்த பையை கொடுத்துவிட்டு “இந்தாங்க நான் வரேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். 

 

அவனை முறைத்து கொண்டே மல்லிகா நிற்க “அடியேய் மல்லிகா இந்தா டி வத்தக்குழம்பு உனக்கு பிடிக்குமேன்னு எடுத்து வந்தேன்” என்று அவளிடம் கிண்ணத்தை கொடுக்க அவளும் வாங்கி கொண்டாள். 

 

“ஏன் டி அந்த ஆளு பொம்மை தான் கொடுக்க வந்தாரா முழிச்ச முழியே சரியில்லையே” என்றாள் சந்தேகமாக அவளை பார்த்து கொண்டே “ஆமாம் அக்கா அதுக்காக தான் வந்தாரு” என்றாள் அவள். 

 

அதன் பின் பத்மா அவளிடம் எதுவும் கேட்க்கவில்லை ஆனால் அவரின் மனதில் சந்தேகம் மட்டும் இருந்தது. 

 

அவர் சென்ற பின் மல்லிகா குழந்தையை மடியில் படுக்க வைத்து கொண்டு சுவற்றில் சாய்ந்து அழுக ஆரம்பித்தாள் அவன் கடைசி 

வரை தன்னை ஒரு விபச்சாரியின் மகளாக தான் பார்க்கிறான் என்ற வலி அவளுள் இருந்தது. 

 

இப்படி ஒரு எண்ணம் கொண்ட ஒருவனை எந்த பெண் தான் ஏற்றுக்கொள்வாள் ரோசியின் வயிற்றில் பிறந்தது அவள் தவறா 

இதை என்று தான் அவன் உணரப் போகிறானோ. 

 

அஜய் நேரே தன் அப்பார்மென்ட்டுக்கு சென்றவன் அங்கிருந்த தன் உடமைகளை இரவோடு இரவாக எடுத்து கொண்டு தன் தாய் தந்தை இருக்கும் வீட்டுக்கு வந்தான் அவனை பார்த்த ஷில்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது தீபக் அவனை கண்டுகொள்ளவேயில்லை தன் மொபைலில் எதையோ பார்த்து கொண்டு இருந்தான். 

 

அவனின் தாய் லதா “என்ன டா லக்கேஜோட வந்துருக்க” என்று கேட்க “ஏன் மா நான் வரக்கூடாதா இதுவும் என் வீடு தான” என்று கேட்க 

“இல்லை நைட்டோட நைட்டா வந்துருங்கியே அதனால தான் கேட்டேன்” என்றார். 

 

“உங்களையும் அப்பாவையும் விட்டுட்டு அங்கே தனியா இருக்க முடியலை மா அதனால தான் கிளம்பி வந்துட்டேன்” என்றான். 

 

ஆனால் அவன் கூறியதை கேட்ட லதாவுக்கு நம்பும்படியாக இல்லை ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று மட்டும் தோன்றியது ஏனெனில் ஷில்பாவை அவனுக்கு சுத்தமா பிடிக்காது அவள் இருக்கும் இடத்துக்கு வருகிறான் என்றாள் நிச்சயமாக ஏதோ காரணம் இருக்கிறது என்று தோன்றியது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “என் வினோதனே 18,19”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top