அத்தியாயம் – 7
மதுரையின் சித்திரை திருவிழாவின் முக்கியமான நாளே மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணமாகும் ஊரெங்கும் அலங்காரமாகவும் மேல தாளங்களும் வானவேடிக்கைகளும் கொண்டு ஊரே ஜெகஜோதியாய் ஜொலித்துக் கொண்டு இருந்தது.
கோவிலின் மண்டபத்தில் திருக்கல்யாணத்திற்கு உண்டான அனைத்து அலங்காரங்களும் செய்து பூ தோரணங்களாலும் மேல வாத்தியங்கள் முழங்க மக்கள் கூட்டத்தின் நடுவே கம்பிரமாக தனது உமாபதியுடன் அமர்ந்து பக்தர்களுக்கு தனது திருமணத்தை அருள்பாலிக்கும் வகையில் காட்சியளித்துக் கொண்டிருந்தாள் மதுரையை ஆளும் மீனாட்சி.
இங்கே சொக்கனுடன் கை சேரும் மீனாட்சியைப் போலவே மதுரையில் இருக்கும் பெண்களும் பட்டு கட்டி பூ வைத்து அலங்காரம் செய்து கொண்டு தங்களின் கணவர்களின் கையால் திருமாங்கல்யத்தை பெற்றுக்கொள்ள காத்திருந்தனர்.
அதைப்போல் மண்டபத்தின் ஓரத்தில் நின்று இருந்த அழகரின் கையால் திருமாங்கல்யத்தை பெற்றுக் கொள்ள மணப்பெண்ணாக காத்திருந்தாள் வள்ளி.
கெட்டி மேளம் முழங்க அட்சதை தூவ மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரர் தாலி அணிவிக்க மற்ற பெண்களும் அவரவர் கணவர்களின் கையால் திருமாங்கல்யத்தை அணிவித்து கொண்டனர்.
மண்டபத்தின் கீழே நின்று கொண்டிருந்த இருவருக்கும் சேர்த்து அட்சதை தூவி வாழ்த்தை பெற்றுக் கொள்ளும் முறையாக அழகரின் கையால் வள்ளி கழுத்தில் மஞ்சள் கயிறில் கோர்த்திருந்த தாலி ஏறி மூன்று முடிச்சுகள் விழுந்தது.
தாலி கட்டுவதற்கு முன்பு ஒரு நொடி அவளை கண்ணோடு கண் கலந்து கூர்மையாக பார்த்தவன் அவள் தலையை குனிந்து கொள்ளவும் அதையே சம்மதமாக ஏற்று அவளை தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டான்.
தங்களை சேர்ந்தவங்களோ தங்களின் நட்புகளோ யாருமே இல்லாமல் மீனாட்சி சுந்தரேஸ்வரன் ஆசிர்வாதத்துடனும் அங்கே கூடி இருந்த மக்களின் ஆசிர்வாதத்துடனும் நிறைவாக அழகர் வள்ளி திருமணம் முடிவடைந்தது.
சற்று நேரத்தில் குங்கும பிரசாதம் வழங்கப்பட அதை வாங்கி அழகர் வள்ளியின் திருமாங்கல்யத்திலும் நெற்றியிலும் வைத்து தனது சரிபாதியாக ஆக்கிக் கொண்டான்.
அதன் பின் நடந்த அனைத்தும் வள்ளிக்கு கனவாகவே தோன்றியது.
அதற்குள் அழகரின் வலதுகை என்று அழைக்கப்படுபவனனும்
அவனது தம்பியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ராமு அங்கே வந்துவிட
“ என்ன அண்ணே நான் வரதுகுள்ள கல்யாணத்தை முடிச்சுட்ட” என்று அவனை கட்டிபிடிச்சு வாழ்த்து சொல்ல
அழகரோ அவன் கூறிய எதற்கும் பதில் சொல்லாமல் இறுகி போய் நின்று இருந்தான் அதை எதையும் கண்டுக் கொள்ளாமல் அருகில் நின்று இருந்த வள்ளியை பார்த்தவன் தன்னை தானே அறிமுகப் படுத்திக் கொண்டான்.
“ ஹாய் அண்ணி நான் ராமு அண்ணனுக்கு பி.ஏ வா இருக்கேன்
நீங்க என்னோட அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க இரண்டுபேரும் ரொம்ப பொருத்தமா இருக்கீங்க” என்று மனதில் இருந்து சொல்ல
அதுவரை அவன் கூறுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த வள்ளி பேச ஆரம்பிக்கும் முன்பே அழகர் வள்ளியிடம் திரும்பி ”இவன் என்னோட பி.ஏ எல்லாம் கிடையாது என்னோட கூட பிறக்காத தம்பி அவனுக்கு எல்லாமே நான்தான் எனக்கும் அவன் தான் எல்லாமே இப்ப அதுல நீயும் சேர்ந்து கிட்ட” என்றான்.
அழகர் கூறுவதை கேட்டதும் வள்ளியின் கண்கள் எல்லாம் கலங்க ஆரம்பித்துவிட்டது அதை கண்டு ஒன்றும் புரியாமல் இருவரும் என்னவென்று பார்க்க
“ எனக்கு அப்பா அம்மா யாரும் இல்ல இப்ப எனக்குன்னு ஒரு கூடு இருக்கு உங்க கூட என்னை சேர்த்துகிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று கூறினாள்.
அவள் கூறியதை கேட்டவுடன் இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்று இருக்க அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவள் இருவரையும் பார்த்து மென்மையாக சிரித்தாள்.
மூவரும் நின்று பேசிக்கொண்டு இருக்க அதற்குள் அழகரின் திருமண விஷயத்தை கேள்விப்பட்டு திருவிழாவின் முக்கியஸ்தர்கள் அனைவரும் அவனை பார்க்க வர அவன் நின்று இருந்த இடம் கும்பலாக மாறி அவனை சூழ்ந்து கொண்டனர்.
சட்டென்று வள்ளியின் கையை பிடித்துக் கொண்டவன் அதை முகத்தில் காண்பிக்காமல் அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தான்.
பின் அவர்கள் வற்புறுத்தி சாப்பிட அழைத்து சென்றனர் ஏனேனில் அவனுமே கோயிலில் திருவிழாவிற்காக எப்பொழுதுமே அவனால் முடிந்த பொருள் உதவியையும், ஆட்களையும் அனுப்பி வைப்பான்.
அதிலும் முக்கியமாக திருக்கல்யாணத்திற்கு உண்டான அன்னதானத்தின் அனைத்து பொருட்களும் அழகர் மூலமாகவே வழங்கப்படும்.
திருக்கல்யாணத்திற்கு செய்யப்படும் விருந்து இன்று தனது கல்யாணத்தில் விருந்து சாப்பாடு ஆக அமையும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
இருவரும் அங்கே அன்னதானத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பின்னரே அவர்களை விட்டார்கள் மீனாட்சி அம்மனின் பிரசாதம் வள்ளியின் கையில் ஒப்படைக்கப்பட்டது அதை இருவரும் வாங்கிக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தனர்.
அதுவரை அவர்கள் கூடவே இருந்த ராமு ” அண்ணா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வாங்க நான் முன்னாடி போறேன்” என்று கூறு அவன் கூற வருவது எதையும் கேட்காமல் தனது பைக்கை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.
பின் இவர்களும் கிளம்பி அழகரின் வீட்டை அடைய அங்கு ராமு அதற்குள் இவர்களை வரவேற்கும் விதமாக அனைத்தையும் ரெடியாக வைத்திருந்தான்.
அழகர் வீட்டில் அருகில் இருக்கும் பெண் ஆரத்தி தட்டுடன் வர வாசலிலேயே நிற்க வைத்து இருவருக்கும் ஆழம் சுற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
“ ஏன் கா ஆரத்தி எல்லாம் எடுத்துக்கிட்டு” என்று அழகர் சங்கடப்பட்டு கேட்டாலும் அதை கருத்தில் கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை.
அந்த அளவிற்கு அழகர் அனைவருக்கும் பெரும் உதவி அனைத்தும் செய்திருக்கிறான் அதனால் பாசத்துடனே அனைவரும் அவனிடம் இருந்து எதுவும் எதிர்பார்க்காமல் அவனுக்கு தேவையானதை செய்தனர்.
பின் அந்த பெண்மணியே வள்ளியை உள்ளே அழைத்துக்கொண்டு வந்து அங்கு இருக்கும் சாமி படத்திற்கு முன்பு விளக்கு ஏற்ற சொல்லி இருவரையும் விழுந்து கும்பிட சொன்னார்கள்.
அவர் கூறிய படியே இருவரும் அப்படியே செய்ய பின் அழகர் கிளம்பி வெளியே சென்று நின்றுக்கொண்டான்.
வள்ளியை அங்கே ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்தவர் அவளிடம் எப்படி திருமணம் ஆனது என்று எதுவும் கேட்காமல் அவளைப் பற்றிய கேள்விகளை மட்டுமே கேட்டார்.
“உன்னோட பேரு என்ன பாப்பா பாக்க ரொம்ப சின்ன பொண்ணா தெரியுற”
“என்னோட பேரு வள்ளி இங்க இருக்க காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கேன் அக்கா” என்றாள்.
“ ஓ அப்படியா அழகர் தம்பி எது செஞ்சாலும் கரெக்டா தான் இருக்கும் அதனால தான் நாங்க இத பத்தி ஒன்னும் கேட்டுக்கல” என்று கூறியவர்.
“நான் சொல்றேன்னு எதுவும் தப்பா எடுத்துக்காத பாப்பா அழகர் தம்பி ரொம்ப நல்ல பையன் யார்கிட்டயும் அனாவசியமா பேசாது எப்போதும் கொஞ்சம் இறுக்கமாகவே தான் இருக்கும்.
ஆனால் பெண்களுக்கும் ஏதாவது பிரச்சனை என்று அதுகிட்ட வந்து சொல்லிட்டா போதும் உயிரை கொடுத்தாவது நமக்கு அதை சரி பண்ணி கொடுத்துடும்.
அது பண்ற தொழில் வேணா வட்டி தொழில் இருக்கலாம் ஆனா அதோட மனசு ரொம்ப தங்கம் ஆனால் அனாவசியமாக அதிகமா எதுக்கும் ஆசைப்படாது.
என் பிள்ளைக்கு பீஸ் கட்ட முடியலன்னு அது கிட்ட வந்து சொன்னேன் உடனே என் புள்ள இப்ப படிக்கிற வரைக்கும் அந்த தம்பி தான் ஃபீஸ் கட்டிக்கிட்டு இருக்கு” என்று தனக்கு தெரிந்தவரை அழகரை பற்றி கூறினார்.
“அப்புறம் நைட்டுக்கு எதுவும் நீ சமைக்காத இது உனக்கு புது இடம் தானே நானே கொண்டு வந்து கொடுத்தர்றேன்”
“இங்க மேல் வேலைக்கு ஒரு அம்மா மட்டும் வருவாங்க மத்தபடி தம்பி தான் சமைச்சுக்கும்” என்றார்.
“ சரிம்மா நான் வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு ராமு தம்பி வந்து சொல்லவும் எல்லாத்தையும் அப்படி அப்படியே போட்டுட்டு வந்துட்டேன் புது இடம் தான் உனக்கு கொஞ்சம் பழகு நேரம் எடுக்கும் சீக்கிரம் எல்லாமே பழகிடும் புள்ளைங்க வந்துடும் நான் இப்ப கிளம்புறேன் மா தம்பி கிட்டயும் சொல்லிடு” என்று கூறியவர் விடை பெற்று சென்றார்.
அதுவரை தனியாக இருப்பது போல் தோன்றாமல் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தவர் இப்போது கிளம்பவும் அவருக்கு விடை கொடுத்தவள் அப்படியே அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
அப்பொழுதுதான் அந்த வீட்டையே சுற்றி பார்க்க ஆரம்பித்தால் மிகவும் பெரிதாகவும் இல்லாமல் சின்னதாகவும் இல்லாமல் தேவையான அனைத்து வசதிகளும் கொண்டு இருந்தது அவன் வீடு.
உள்ளே நுழைந்தவுடன் இரண்டு பக்கமும் காலினயான கொஞ்சம் இடமும் இன்னும் கொஞ்சம் உள்ளே வந்தாள் ஒரு ஹால் போன்ற அமைப்புடன் அங்கேயும் சோபா பேர்கள் போட்டு தொழில் விஷயமாக பேச வருபவர்களை உபசரிக்கும் விதமாக அங்கேயே சின்ன ஏசி போட்டு டிவி எல்லாம் வைத்து இருந்தது.
அதற்கும் சற்று உள்ளே வந்தாள் முழுவதும் வீடு போன்ற அமைப்பு ஹாலில் சோபாவும் பெரிய எல்ஈடி டிவியும் அதற்கு ஒரு மூலையில் அவனது அம்மா அப்பா போட்டோவும் அதைத்தொடர்ந்து இரண்டு ரூம்கள் எதிரெதிரே இருந்தது அதற்கு அருகில் கிட்சன் இருந்தது ஹாலில் இருந்தே மாடிக்கு செல்லும்படி படிக்கட்டுகள் அமைந்து இருந்தது.
இதை அனைத்தையும் உட்கார்ந்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன்.
“என்ன பண்ற அந்த அக்கா கிளம்பிட்டாங்களா” என்று கேட்டான்.
அதற்கு அவளும் வெறும் தலையசைப்பையுடன் ஆமா என்று கூறினாள்.
“டீ காபி ஏதாவது சாப்பிடறியா” என்று கேட்டுக்கொண்டே கிச்சனிற்குள் சென்றான்.
அவளோ மனதில் ‘என்ன ஏதாவது குடிக்கிறியான்னு கேட்டுட்டு பதிலே கேட்காமல் அவர் பாட்டுக்கு நேரா விறு விறுன்னு உள்ள போறாரு இப்ப நான் உள்ள போகணுமா இல்ல இங்கேயே இருக்கணுமான்னு தெரியலையே’ என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.
இவன் இங்கேயே நின்று புலம்பி கொண்டிருக்க அவனும் அதற்குள் கையில் இரண்டு காபி கப்புடன் அவளை நெருங்கினான்.
“ இந்தா இந்த காபி குடி நீ குடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூறியவன் தனது பேச்சு முடிந்தது என்பது போல் அவனது காபியை அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்து விட்டான்.
அதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் பின்பு அவன் கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.
அவன் காபி குடித்துக் கொண்டிருக்கும் போதே வெளியில் இருந்து “அண்ணா” என்ற குரல் கேட்கவும் வேகமாக வெளியே சென்றவன் அங்கு என்ன கூறப்பட்டதோ உடனடியாக உள்ளே வந்தவன்.
அவளிடம் அங்கிருந்த ஒரு ரூமை சுட்டிகாட்டி “இன்னைக்கு நைட்டு நீ அந்த ரூம்ல போய் தங்கிகோ” என்று கூறியவுடன் அவள் பயந்த பார்வை பார்க்க.
அதை கண்டவன் “ இங்க ஒன்னும் பயம் கிடையாது தைரியமா இரு நான் வர்றதுக்கு லேட் ஆகும் வீட்டை நான் வெ
ளியே பூட்டிக்கொண்டு போயிடுவேன் நிம்மதியா தூங்கு நாளைக்கு காலையில வந்து நான் பேசுறேன்” என்று கூறி வேகமாக சென்று விட்டான்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌