அத்தியாயம் – 8
அவன் அவசரமாக கூறி வெளியே சென்றவுடன் அதுவரை அமைதியாக நின்று அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க மிகவும் பயமாக இருந்ததில்.
உடனே அவன் சுட்டிக்காட்டிய அறைக்கு சென்று கதவை தாள் போட்டுக்கொண்டு அங்கிருந்த மெத்தையில் அமர்ந்து கொண்டாள்
அங்கிருந்த ரூமை சுற்றி பார்த்தவள் ரூம் மிகவும் சுத்தமாக இருப்பதை தான் முதலில் கவனித்தாள்.
தான் அமர்ந்திருக்கும் மெத்தையில் அமர்ந்தவுடன் முதலில் அந்த மெத்தை சட்டென்று உள்ளே இழுத்துக் கொள்ள சட்டென்று பயந்து எழுந்து விட்டாள்.
அவள் கண்டதெல்லாம் குடிசையில் பாய் விரித்து கைகளை தலைக்கு வைத்துக் கொண்டு ஒரு நிம்மதியான தூக்கத்தை தான் மதுரையில் ஹாஸ்டல் வந்த பிறகு அவளுக்கு பெட் பழக்கமானது அதுவும் அந்த பெட் கடினமாக இருக்கும்.
இந்த அளவிற்கு ஒரு மிருதுவான மெத்தையை இப்பொழுது தான் முதன் முதலில் பார்ப்பது அதனால் தான் சட்டென்று பயந்துவிட்டாள்.
பின் தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டு அங்கு இருக்கும் ஒவ்வொரு இடமாக பார்க்க ஆரம்பித்தாள்.
நவீன வசதிகள் அனைத்தும் உள்ளடக்கி இருந்தது அந்த அறை ஏசி ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ட்ரெஸ்ஸிங் டேபிள் இருந்தது அதன் மறுபுறம் கபோர்டுகள் இருந்து அந்த அறையில் டேபிளில் பென்ஸ்டாண்டர்ட் வைக்கப்பட்டு இருந்தது.
அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் யாவும் தான் இங்கு வந்து அவனுடன் சேர்ந்த அந்த நாளை எண்ணி தன்னையும் அறியாமல் அந்த எண்ணங்கள் வந்து முட்டி மோத அதன் போக்கிலேயே சென்று அனைத்தையும் மீண்டும் யோசித்துப் பார்க்க தொடங்கினாள்.
அன்றைய நாள் காலேஜ் கிரவுண்டில் தன்னை மட்டும் கிளாஸிற்கு அனுப்பி விட்டு சீனியரை பார்க்க போகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டாள் கலையரசி.
இவளும் கிளாசுக்கு சென்று முதல் வகுப்பை அட்டென்ட் பண்ண அந்த பீரியட் முடிந்தவுடன் வந்துவிடுவாள் என்று பார்க்க இரண்டு பீரியட் முடியவும் தான் கலையரசி கிளாஸ் இருக்கு வந்தாள்.
அருகில் வந்து அமர்ந்தவளிடம் “என்ன” என்று வள்ளி கேட்க அதற்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் அவளை பார்த்து தெளிவான முகத்துடன் ஒரு சிரிப்பு சிரித்தாள்.
அதைக் கண்டு வள்ளிக்கு என்ன தோன்றியதோ அவளைப் பார்த்து புன்னகையுடன் “ நீ இன்னைக்கு
ரொம்ப அழகா இருக்க டி” என்றாள்
அனைத்து பிரச்சனைகளையும் மறந்து.
கலையும் பொறுப்பை அழகரிடம் ஒப்படைத்துவிட்டோம் என்பதில் மிகவும் நிம்மதியாக இருந்தாள்.
அவர்களது நிம்மதி கொஞ்ச நாட்கள் கூட நிலைக்கவில்லை கலை அழகரிடம் கூறியதை தூணுக்கு பின் நின்று கேட்டுக்கொண்டிருந்த ராகேஷின் நண்பனோ நேராக சென்று நின்றது என்னவோ அவனின் முன்புதான்.
அவர்கள் எப்போதும் செல்லும் அதே பாரில் அழகரிடம் அடிவாங்கிய கையோடு இங்கு வந்தவன் தான் அப்பொழுதிலிருந்து குடித்துக் கொண்டே இருக்கிறான்.
இவன் வந்து நிற்கவும் அவனுக்கும் ஒரு கிளாஸில் அந்த ஆரஞ்சு நிற திரவத்தை ஊற்றி கொடுக்க அதை வேண்டாம் என்று தள்ளி வைக்கவும் என்ன என்பது போல் நிமிர்ந்து பார்க்க அவனோ
“ இப்போ எனக்கு வேண்டாம் டா நான் காலேஜுக்கு போறேன் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்தேன்” என்றான்.
அதைக் கேட்டவன் “நான் இப்ப எதையும் கேட்கிறேன் மூடுல இல்ல உனக்கு வேண்டாம்னா மரியாதையா இந்த இடத்தை விட்டு வெளியே கிளம்பிடு” என்று அவனிடம் எரிந்து விழுந்தான்.
அதையெல்லாம் சட்டை செய்யாமல் மீண்டும் அவனிடம் பேச முயற்சிக்க
அவன் இப்போழுது இருக்கும் மனநிலமையில் அவனை அங்கு இருந்து அனுப்பினால் போதும் என்ற நிலையில் சொல்லிவிட்டு போ என்ற பார்வை பார்த்தான்.
அதுவே போதும் என்பது போல்
“ அழகரையும் வள்ளியோட பிரண்டு கலையையும் பைக் பார்க்கிங்ல் வைத்து பார்த்தேன் டா சரி என்னதான் பேசுறாங்கன்னு பின்னாடி இருந்து கேட்டேன் உன்ன பத்தி தான் அந்த பொண்ணு அழகர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருந்துச்சு” என்று கூறி முடிக்கும் முன்
அழகர் என்ற பெயரை கேட்டவுடன் மீண்டும் கண்மண் தெரியாத அளவுக்கு கோபம் தலைக்கு ஏற அவன் வைத்து இருந்த கண்ணாடி கிளாஸை கைகளின் இறுக்கத்தினால் உடைத்தே விட்டான்.
அதில் அவனது கைகளில் இருந்து இரத்தம் பீறிட்டு வர அதை பார்த்த அவனது நண்பன் பயந்து விட்டான் உடனே அவனை அழுத்தி “ என்ன பண்ற ராகேஷ் இங்க பாரு உன்னுடைய கை ஃபுல்லா ரத்தம் வந்துகிட்டே இருக்கு” என்று பதறி போய் கூறினான்.
அதை சிறிதும் கண்டு கொள்ளாத ராகேஷ் “நீ மேல சொல்லு வேற என்ன அவங்க பேசியதை கேட்ட” என்று கடின குரலில் கேட்டான்.
இதற்கு மேலும் அதைப் பற்றி பேச வார்த்தை வராமல் பயந்து கொண்டே கலை அழகரிடம் கூறியதையும் அதற்கு அழகர் பதில் கூறியதையும் ஒன்று விடாமல் விலாவாரியாக ஒப்பிக்க ஆரம்பித்தான்.
ஏற்கனவே வள்ளியின் மேல் அளவுக்கு அதிகமான மோகத்தில் உள்ளவன் அது நிறைவேறவிடாமல் அவனது தந்தையே தடுத்துக் கொண்டிருக்க மீண்டும் அழகரிடம் காலேஜில் வைத்து அடி வாங்கியது வேறு அவனை மிருகமாகவே மாற்றிவிட்டது.
இதை இப்படியே விடக்கூடாது என்று மனதில் யோசித்துக் கொண்டிருந்தது கண்களில் பிரதிபலிக்கும் விதமாக அவனது கண்கள் வன்மத்தில் மின்னியது.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த அவனது நண்பனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல்
“ வேண்டாம் ராகேஷ் வள்ளி இல்லைனா வேற பொண்ணை பார்த்துக்கலாம் இப்ப அழகர் அண்ணண் வேற இந்த பிரச்சனையில் இருக்காங்க நாம இதில் தலையிட வேண்டாம்” என்றான்.
அவன் கூறுவதை கேட்டுக்கொண்டு இருந்தவன் இப்படி பேசவும் ஓங்கி அவனது கன்னத்திலேயே அடித்து விட்டான்
“ ஏன்டா நான் டேஸ்ட் பார்த்து விட்டு விட்டுட்டு போறவளை என்னோட எச்சியை சாப்பிடுறவன் நீ என்னையவே பேசுறியா உனக்கு என்னடா அவ்வளவு தைரியம் நான் தப்பிக்க விட்ட ஒரே பொண்ணு அந்த வள்ளி தான் அதிலும் அவளே ஒரு அநாதை அவ எப்படி என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறானு நானும் பார்க்கிறேன்” என்று பழி வெறியில் உறுமினால்.
அவனது சொற்களைக் கேட்ட அவன் நண்பனுக்கோ மிகவும் அவமானமாக போய்விட்டது செய்யும்போது தவறாக தெரியாதது அடுத்தவர் நம்மை அதையே பேசி காண்பிக்கும் போது மிகவும் மோசமாக அவனை தாக்கியது.
அத்துடன் அவனை அங்கேயே விட்டுவிட்டு அவனது தோழன் சென்று விட்டான்.
அவன் செல்வதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவனது பக்கத்தில் இருவர் இன்னும் ஒரு வாரத்தில் நடக்க இருக்கும் திருவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டே குடித்துக் கொண்டிருந்தவன்.
சட்டென்று தனது மனதில் உதித்த யோசனையான தன்னை அடித்த அழகரையும் வள்ளியையும் ஒரே நேரத்தில் பழிவாங்கும் முயற்சியாக ஒரு உறுதியான முடிவை எடுத்துக் கொண்டு அங்கிருந்த கிளம்பினான்.
போதையுடன் தனது இன்னோரு பங்களாவிற்கு சென்றவன் அங்கேயே இருந்து அவனது பிளானை ஆரம்பித்து விட்டான்.
அதன்படி அவனது அப்பாவின் ஆட்களை வைத்து திருவிழாவின் கும்பலை பயன்படுத்தி அங்கேயே அழகரை வெட்டிவிடும் முடிவை எடுத்துக் கொண்டவன் அதை செயல்படுத்தும் அதே நேரத்தில் வள்ளியையும் கடத்தி கொடைக்கானலில் இருக்கும் தனது எஸ்டேட்டில் வைத்து வள்ளியை தனது ஆசை தீரும்வரை அவளை அனுபவிக்கும் முடிவை எடுத்தவன் அதன்படி செயல்பட ஆரம்பித்து விட்டான்.
அவன் பிளான் செய்தபடியே அன்றைய நாள் அதிர்ஷ்டம் அவன் பக்கங்கள் இருக்க காலையிலேயே கலைக்கு கொஞ்சம் அதிக வயிற்றுவலியால் “காலேஜுக்கு வரவில்லை என்றும் இன்னைக்கு நான் லீவு எடுத்துக்கிறேன் நீ மட்டும் போயிட்டு வந்துரு” என்று கூறி வள்ளியை அனுப்பி வைத்தாள்.
தானும் லீவு எடுத்துக் கொண்டு அவளை கவனித்துக் கொள்வதாக கூறி வள்ளி ஹாஸ்டல் இல்லையே இருந்து கொள்வதாக கூறினாள்.
ஆனால் அதற்கு மறுத்து “ நான் இப்ப டேப்லெட் எடுத்துட்டு தூங்கிடுவேன் நீ இங்க சும்மா உக்காந்து என்ன பண்ணுவ அதுக்கு கிளாஸ்ல போய் நோட்ஸ் ஆவது எடுத்துட்டு வா” என்று வற்புறுத்தி அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்.
ஒரு மாதிரி மனது சரியில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த வள்ளியை அப்படியே மயக்க மருந்து கொடுத்து காரில் கடத்திச் சென்றுவிட்டான் ராகேஷ்.
அவளை கடத்திச் சென்றது கூட தெரியாத அளவிற்கு அமைதியாக இருந்தது அந்த இடம் அதனால் வள்ளி கடத்தப்பட்ட விஷயம் வேறு யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
தனது காரில் வள்ளியை கடத்தினால் அனைவருக்கும் தெரிந்து விடும் என்று வேறொரு நண்பனின் காரில் அவளை கூட்டி சென்றவன் போகும் வழியிலேயே அவனது ஆட்களிடம் இருந்து அழைப்பு வர “ சொல்லு டா அவன் என்ன பண்ணுறான்” என்று கேட்க
அப்பொழுதுதான் திருவிழாவிற்கு அன்னதானம் போடுவதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மார்க்கெட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தவன் கோவிலில் வைத்து இறக்கி முக்கியஸ்தர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.
ராகேஷ் அவர்களிடம் சொல்லும் போதே அழகரை நெருங்கும் போது எனக்கு கால் பண்ணிடு லைன்ல நான் இருக்கேன் அவனை அப்படியே போட்டுருங்க என்று கூறியே அனுப்பி வைத்திருந்தான்.
அதனால் அழகரின் கிட்ட நெருங்கும் போது ராகேஷ் இருக்கு அவனது ஆட்கள் அழைத்து விட்டனர்.
அதன்படி ராகேஷை லைனில் வைத்துக் கொண்டு அழகரின் புறம் நெருங்கியவர்கள் அவன் அனைவரிடமும் பேசிவிட்டு விடைபெற்று திரும்பும் முன் திடீரென்று அவனது அருகில் வந்து முகவரி கேட்பது போல் தங்களது கையில் இருந்த கட்டையால் அவனது தலையில் அடித்து விட்டனர்.
சட்டென்று ஒரு நொடியில் நடந்துவிட்ட நிகழ்வால் தலையில் வலியும் இரத்தத்துடன் அவர்களை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் அவர்கள் அடிக்க வரவும் அவர்களை பிடித்து தள்ளிவிட்டு வேகமாக வெளியேற முயன்றவனை அனைவரும் இறுக்கிப்பிடித்தனர்.
உடனே சுதாரித்தவன் அவர்களை அடிக்க ஆரம்பிக்க அவர்கள் அடி வாங்குவதை போனில் லைனில் இருந்தவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
அழகரை இப்போதே ஏதாவது செய்தால்தான் உண்டு அவனை தப்பிக்க விட்டாள் இனிமேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிக்கொண்டு உடனே காரில் இருந்து இறங்கிய ராகேஷ் அழகரை நோக்கி வேகமாக வர தொடங்கினான்.
அதற்குள் அழகர் அவனை அடிக்க வந்தவர்களை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டான் அவன் போகவும் ராகேஷ் அங்கே வரவும் நேரம் சரியாக இருந்தது.
அங்கு அடி வாங்கி கிடந்தவர்களை தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெட்ட வார்த்தைகளால் திட்டியவன் அழகரை தேடிக்கொண்டு மீண்டும் சென்றான்.
அதற்குள் அழகர் அங்கு இருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த காரை பார்க்க அதில் சாவி இருக்கவும் சற்றென்று அதில் ஏறினான். கும்பலில் அனைவரையும் நகர்த்தி விட்டு வந்து பார்க்க தான் விட்டுட்டு வந்திருந்த காரியிலேயே ஏறி அமர்ந்து அழகர்
அங்கிருந்து செல்வதை தான் கண்டான்.
அவனை பின் தொடர்ந்து செல்ல முயன்றவனை அங்கிருந்த மக்கள் கும்பல் நகரவிடாமல் மாட்டிக் கொண்டான்.
super
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌