ATM Tamil Romantic Novels

மோகமுள் தீண்டாதோ தீரனே -1

மோகமுள் தீண்டாதோ தீரனே !!!

 

மோகம்-1:

 

“முடியாது!! நான் யாரு கழுத்துளையும் தாலி கட்ட முடியாது!!”

 

தன் தொண்டை வலிக்க, கழுத்து நரம்புகள் புடைக்க, ரத்தமென சிவந்த கண்கள் கலங்கி கை முஷ்டிகளை முறுக்கி கொண்டு, வாழ்வே வெறுத்து போன நிலையில், தன் முன்னாள் நின்றிருந்த தாயிடம் ‘திருமணம் செய்ய முடியாது’ என்று தன் கோபத்தை கட்டுப்படுத்தியவாறு கூறினான் தமிழ் நாட்டின் இளம் தொழிலதிபர் ஆதீரன் சக்கிரவர்த்தி.

 

தன் தாயை நெருங்கி அவர் கைகளை பிடித்து கொண்டு “ஏன் ம்மா? ஏன் ம்மா என்கிட்ட மறைச்சீங்க?”.

 

அவர் கைகளை தன் முகத்தோடு அழுத்தி வைத்து கொண்டவன் கண்ணீர் அவர் கைகளை நிறைத்தது.

 

அனைத்தும் கிடைக்க பெற்றவன் தன் தாயிடம் எதற்காக கண்ணீர் விட்டு கதறுகிறான்?.

 

தன் மகனின் சூடான கண்ணீரை தன் கைகளில் உணர்ந்தவர் உள்ளம் பதற, “ஆதி கண்ணா..” குரல் நடுங்க அழைத்தார்.

 

சற்று நேரம் முன்பு நடந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வந்து அவனை உயிரோடு கொன்றது..

 

“எல்லாம் அவ்வளவு தானா?”.

 

‘இனி அனைவரும் என்னை பார்க்கும் கண்ணோட்டம் மாறு படும்..’

 

‘அச்சோ என்று பரிதாபப்படுபவர்கள் சிலர்..’

 

‘ஹாஹா.. என்று அவனை பார்த்து எள்ளலாக சிரிக்க போகிறவர்கள் பலர்..’

 

இத்தனை நாள் இரும்பு கோட்டை போல் எழுப்பிய தன் பிம்பம் மணல் கோட்டை போல் நொடியில் சரிந்ததை நினைத்து உள்ளுக்குள் மறுகினான்.

 

“ம்மா! அவங்க சொல்றது எல்லாம் உண்மையா?” என்றவன் கண்கள் அவரிடம் ‘இல்லைன்னு சொல்லுங்க ம்மா’ என்று பரிதவித்து துடித்தது.

 

“கண்ணா.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. அவங்க ஏதோ உளறுராங்க.. நீ அதையெல்லாம் மனசுல வச்சுக்காத கண்ணா.. வா என்கூட.. இதே மண்டபத்தில் இதே முகூர்த்தத்தில் உனக்கு ஏற்ற பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறேன். எவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்..”

 

தன் கையை பிடித்து அழைத்தவரை “ம்மா.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ம்மா” என்று தன் தாயை வற்புறுத்த அதுவரை தன் தமையனின் மனம் படும் பாட்டை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து போயிருந்தவன் “அண்ணா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. அவங்க யாரு பேச்சை கேட்டுகிட்டு இப்படி பேசினாங்கன்னு தெரியலை..

விடுங்க அண்ணா அவங்க போனால் போகட்டும், நீங்க இப்படி கஷ்ட படுற அளவுக்கு இப்போ எதுவும் நடந்துடல..”

 

“அம்மா சொல்வதை கேளுங்க அண்ணா.. எல்லாம் உங்க நல்லதுக்கு தான்..!” என்றான் அந்த நவீன கால லக்ஷ்மணன்.

 

“ஆசீ..! என்கிட்ட எப்போடா பொய் சொல்ல ஆரம்பிச்ச?” என்ற தன் அண்ணனின் கேள்வியில் கைகளை முறுக்கி கொண்டு தலையை குனிந்து கொண்டான் ஆசீஷ் சக்கரவர்த்தி.

 

“சுமதி” என்று கதவை திறந்து கொண்டு வந்த சக்கரவர்த்தியை கண்டவன் “அப்போ யாரும் உண்மையை சொல்ல போறது இல்லை அப்படித்தானே” என்றவன் தன் தம்பி பக்கம் திரும்பினான்.

 

“ஆசீ.. போ, வெளியே போய் முல்லைநாதன் டாக்டரை நான் கூப்பிட்டேன்னு அழைச்சிட்டு வா” என்று கட்டளையிட எப்பொழுதும் எள் என்றால் எண்ணையாக நிற்பவன் இப்பொழுதும் தன் தாய் தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு மருத்துவரை அழைக்க வெளியே சென்றான்.

 

ஆசீ வெளியே சென்றதும் அங்கிருந்த இருக்கையில் சுமதி தொப்பென்று அமர்ந்தார்.

 

அவரை அணைவாக தன்னுடன் சேர்த்து பிடித்து கொண்ட சக்கரவர்த்தி “விடு கவலைப்படாதே நல்லதே நடக்கும்.. எப்படியும் அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சி தானே ஆகணும்” என்று தன் மனைவியிடம் ஆறுதலாக கூறினார்.

 

இதனை கண்ட ஆதி ‘நானும் உங்களை போல எனக்குன்னு வர போராவக்கூட என் கடைசி காலம் வரை வாழனும்னு எவ்வளவு ஆசைகள் எவ்வளவு கனவுகள் எல்லாம் ஒரே நொடியில் போயிடுச்சு..’

 

‘என் மேல அவ்வளவு காதல் இருக்குன்னு சொன்னது நான் இல்லாம இருக்க முடியாதுன்னு சொன்னது எல்லாம் பொய்யா நந்து..’

 

‘ஹிம்ம்.. அவளை சொல்லி குற்றம் இல்லை, குறையை என்கிட்ட வச்சுக்கிட்டு.. ச்சே!’ என்று அருகிலிருந்த சுவற்றில் கை முஷ்டி மடக்கி குத்தினான்.

 

ஆசீ மருத்துவருடன் வரவும் “வாங்க டாக்டர்!” என்று அவரை அமர சொல்லி தானும் அமர்ந்தவன் “இப்போ கொஞ்ச நேரம் முன்பு நடந்ததை நீங்களும் பார்த்துருப்பீங்க..

அவங்க சொன்னது எல்லாம் உண்மையா டாக்டர்?”.

 

அனைவரையும் பார்த்தவர் “எஸ் ஆதி! பட் அவங்க சொன்னது போல் இல்லை.. உங்களுக்கு விபத்து நடந்தப்போ அடிப்பட்டதுல நரம்புகள் லைட்டா டேமேஜ் ஆயிருக்கு.. நீங்க அப்பப்போ பெயின் பீல் பண்ணிருப்பீங்க ரைட்!!” என்று வினவ ‘ஆமாம்’ என்று அவன் தலை அசைந்தது.

 

“இது பயப்படும் படி இல்லை.. பட் நீங்க உடலுறவு வச்சுக்குறது கொஞ்சம் கஷ்டம்..”

 

தெளிவா சொல்லணும் என்றால் “அந்த நேரத்தில் விறைப்பு தன்மை இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு… வாய்ப்பு தான் உண்டுன்னு சொன்னேன் தவிர இதுவே நிரந்தரமென்று சொல்லலை.. இது நிரந்தரமாக இப்படியே இருக்காது.. குணப்படுத்தலாம் என்ன கொஞ்ச நாள் ஆகும்.”

 

“குழந்தை வேண்டும் என்றாலும் இப்பொழுது செயற்கையாக கருத்தரிப்பு முறைகள் இருக்கின்றன.”

 

“சோ உங்களுக்கு எந்த வித மனஉளைச்சலும் வேண்டாம்..

தாராளமாக நீங்க திருமணம் செய்து கொள்ளலாம்” என்றவர் “சியர் அப் யங் மேன்” அவன் தோலை தட்டி கொடுத்து சென்று விட்டார்.

 

‘ஒரு ஆண்மை இல்லாதவனை போய் நான் எப்படி கல்யாணம் பண்ணுவேன்’ என்று காதில் அவள் சொன்ன வார்த்தைகளும் அவள் தன்னை பார்த்த பார்வையும் அவனை வதைக்க தன் காதுகளை பொத்தி கொண்டு “நோ!!” என்று அந்த அறை அதிர கத்தினான்.

 

“கண்ணா..!” என்று தன் மகனை அணைத்து கொண்டவர் “உன் உடம்புக்கு ஏதும் இல்லை.. பாரு இப்போ கூட டாக்டர் சொன்னதை கேட்ட தானே..

குணப்படுத்திடலாம் கண்ணா..” என்று அவன் தலை கோத “முடியாது ம்மா! குணப்படுத்த முடியாது..” என்று கத்தியவன் “ஏன் ம்மா இதை முன்னாடியே சொல்லல? முன்னாடியே சொல்லி இருந்தால் இந்த கல்யாணம் இதுவரைக்கும் வந்துருக்காதே.. நானும் இத்தனை பேரு முன்னாடி அவமான பட்டிருக்க மாட்டேனே!!.

அய்யோ!! ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க பார்த்தேனே!!”

 

“எப்படிம்மா உங்களுக்கு மனசு வந்துச்சு?”

 

“முடியாது ம்மா.. என்னால் முடியாது, இதுக்கு மேல இங்க இருக்க முடியாது நான் போறேன்” என்று கிளம்பியவனை தடுத்து நிறுத்தியவர் அடுத்து அவர் கூறிய வார்த்தைகளில் அப்படியே நின்று விட்டான்.

 

“இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் என் உயிர் போயிடும் கண்ணா..

நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் இதுக்கு அப்பறம் உன் இஷ்டம்” என்றவர் அவன் கையை உதறி விட்டு சட்டமாக அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டார்.

 

அவர் கூறிய வார்த்தைகளில் மூவரும் ஆடி போய் நிற்க அவரோ சாவகாசமாக கால் மேல் கால்களை போட்டு ஆட்டியவாறு மூவரையும் பார்த்தவர் “நான் சொன்னால் சொன்னதை செய்வேன்னு உங்களுக்கு தெரியும்.. எனக்கு என் பிள்ளை வாழ்க்கை முக்கியம்..

அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.. இதுக்கு மேல முடிவு உன் கையில..

பொண்ணு ரெடியா இருக்கா நீ வந்து தாலி மட்டும் தான் கட்டணும் அதுக்கப்பறம் எல்லாம் தானா நடக்கும்” என்றவர் தன் கணவனை பார்த்து கண்ணடித்தார்.

 

“நீங்க எப்போ ம்மா இவ்ளோ சுயநலவாதியா மாறுனீங்க..

உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு..

ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க எப்படி மனசு வந்துச்சு..

என்னோட அம்மா இப்படி சுயநலமா யோசிக்க மாட்டாங்க.”

 

“நான் சுயநலவாதியாவே இருந்துட்டு போறேன்ப்பா.. என் பிள்ளை வாழ்க்கை எனக்கு முக்கியம் அதுக்காக எதையும் சந்திக்க நான் தயார்” என்று தான் முடிவில் மாறாமல் நிற்க

 

“ம்மா என்னை மாதிரி இந்த குறையோட இருக்கிறவனை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க ம்மா..

அப்படியே ஒத்துக்கிட்டாலும் ஒன்னு நீங்க வற்புறுதிருக்கணும் இல்லை வேற ஏதோ காரணம் இருக்கணும்” என்று கூற

“கரெக்டா கண்டு பிடிக்குறான் பாரு.. என் பிள்ளையாச்சே!! நான் ஏன் டா வற்புறுத்த போறேன் நீ சொன்னது போல வேற காரணம் தான் நீயே அவ கூட வாழ்ந்து அந்த காரணத்தை கண்டுபிடி” என்று தன் மனதிற்குள் சொல்லி கொண்டவர்..

 

“நானெல்லாம் யாரையும் வற்புறுத்தல எல்லாத்தையும் சொன்னேன் அந்த பெண்ணுக்கு ஓகேன்னு சொல்லுச்சு.”

 

“நீ வந்து தாலியை மட்டும் கட்டு..”

 

“ம்மா ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்காதீங்கம்மா..

அந்த பொண்ணு பணத்திற்க்காக கூட கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிருக்கலாம்.”

 

“அப்படியெல்லாம் இல்லை.. அந்த பெண்ணை பற்றி எனக்கு நல்லா தெரியும்..”

 

“ம்மா என் கூட இருந்தா அந்த பொண்ணுக்கு கல்யாண வாழ்க்கை நரகமா தான் இருக்கும்..”

 

“அதை பற்றி எனக்கு தெரியலை கண்ணா.. ஆனால் அவள் கூட என் பிள்ளை இருந்தால் அவனுக்கு தினமும் சொர்க்கம் தான் அது எனக்கு நிச்சயமாக தெரியும்..”

 

“ம்மா ஒரு பொண்ணு வாழ்க்கை சீரழிய நீங்களே காரணமா இருக்க போறீங்களா?” என்று எப்படியாவது இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த என்னென்னவோ சொல்லி பார்க்க “உனக்கு இன்னும் பத்து நிமிஷம் தான் டைம்.. வெளிய வா பொண்ணு வெயிட்டிங்.”

 

“ஆசீ.. அண்ணனை முகம் கழுவி கூட்டிட்டு வா பிள்ளை முகம் வாடி போயிருக்கு..”

 

ஒன்றுமே நடக்காதது போல் “கண்ணா! சோம்பி தெரியுற பாரு.. நல்லா பிரஷ் ஆயிட்டு வா.. அப்போதான் போட்டோஸ் நல்லா வரும்” என்று விட்டு வெளியில் சென்று விட்டார்.

 

இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..

 

“ஆஹ்!! ஆசீ ஏதாவது ஹெல்ப் பண்ணு டா” என்கவும் “அண்ணா.. அம்மா உன் நல்லதுக்கு..” என்று ஆரம்பிக்கவுமே தெரிந்து விட்டது இந்த விஷயத்தில் தம்பி தன் பக்கம் இல்லையென்று..

 

ஆசியை முறைத்தவன் அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

 

இங்கு சக்கரவர்த்தி சுமதியிடம் “ஆனாலும் நீ இப்படியெல்லாம் பேசியிருக்க கூடாது சுமதி” என்று கோவித்து கொண்டார்.

 

“அப்படி சொல்லலை என்றால் உங்க பிள்ளையை வழிக்கு கொண்டு வர முடியாது.

அதான் அப்படி சொன்னேன்.

அந்த பொண்ணு மட்டும் ஒத்துகலைன்னா இந்நேரம் என் பிள்ளையோட வாழ்க்கை என்ன ஆயிருக்கும்..”

 

“விஷயம் தெரிஞ்ச கொஞ்ச நேரத்திலேயே என் பிள்ளை எவ்வளவு கஷ்ட பட்டுட்டான்..

இப்படியே அவனை விட்டால் அவ்வளவுதான் அவனும் நிம்மதியா இருக்க மாட்டான் நாமும் நிம்மதியா இருக்க முடியாது..”

 

“இப்போ இந்த பொண்ணு எப்படி ஒத்துகிச்சுன்னு அந்த குழப்பத்தில் இருப்பான்.

அப்படியே இருக்கட்டும் நீங்க வாங்க ஆக வேண்டிய வேலையை பார்ப்போம்..”

 

அவர் சொன்னது போலவே தான் இங்கு ஆதி யோசித்து கொண்டிருந்தான்.

 

“எப்படி அந்த பொண்ணு என்னை கல்யாணம் பண்ண ஒத்துகிச்சு?”

 

“யாரு அந்த பொண்ணு?”

 

மோகமுள் தீண்டும்..

 

3 thoughts on “மோகமுள் தீண்டாதோ தீரனே -1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top