அத்தியாயம் 2
இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு முன்..
புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் வாக்கெடுப்புகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருந்தது இந்த முறை யார் வெற்றியடைய போகிறார்கள் என்று ஊர் மக்கள் அனைவரும் பதட்டத்துடனே காத்து கொண்டு இருந்தனர்
அந்த கூட்டத்தில் இரு குழுக்கள் தங்களுக்கு பிடித்தவர் தான் வெற்றி பெற வேண்டும் என்று ஆவல் மற்றும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர்.
தேர்தல் முடிவுகள் வரும் முன்பே பட்டாசுகள் வான வெடிக்கைகள் பூவால் செய்யப்பட கிரீடம் மலர் மாலைகள் மேள தாளங்கள் கரகாட்டம் மயிலாட்டம் என்று அனைத்தும் தயாராக இருந்தது.
அப்போது ஒலிப்பெருக்கியில் இருந்து அறிவிப்பு வர அனைவரின் செவிகளும் ஒலிப்பெருக்கியிடம் சென்றது
“புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட நாகராஜ் 230 வாக்குகள் பெற்றுள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட கருப்பசாமி என்கின்ற கருப்பன் 235 வாக்குகள் அதிகமாக பெற்று ஐந்து ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் வெற்றி பெற்ற கருப்பசாமிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி முடித்தனர்.
கருப்பசாமிக்கு ஆதரவாக இருந்த கூட்டம் உடனே ஆர்ப்பரித்தது மேள தாளங்கள் முழங்கின பட்டாசுகள் சத்தமாக வெடிக்கப்பட்டது அவனின் ஆதரவாளர்களில் ஒருவன் தன் எதிரே இருந்த எதிர் கட்சிக்காரனை பார்த்து ஏளனமாக புன்னகைத்து கொண்டே “கருப்பன் அண்ணன் வாழ்க” என்று கூச்சலிட அவனுடன் சேர்ந்து அனைவரும் ஆரவாரமாக கூச்சலிட்டனர் அடுத்த கணம் நாகராஜனுக்கு ஆதரவாக இருந்த கூட்டத்தில் இருந்து ஒருவன் எதிர் கூட்டத்தில் இருந்தவனை அடிக்க வர பதிலுக்கு இவனும் அவனை அடிக்க வர என்று அங்கே சற்று நேரத்தில் ஒரே அடிதடி ஆகி போக அங்கிருந்த அனைவரும் அவர்களை தடுக்க முயற்சி செய்ய யாராலும் அந்த கூட்டத்தை அடக்க முடியவில்லை.
அந்த கூட்டத்தின் உள்ளே வெள்ளை வேட்டியை மடித்து கட்டி கொண்டு பெரிய மீசையுடன் உள்ளே நுழைந்தான் கருப்பசாமி அவன் பெயருக்கு ஏற்றார் போன்று கார்மேக நிறத்தில் ஆறடிக்கு மேல் சற்று கூடுதலான உயரத்தில் உழைத்து உரமேறிய உடல் வாகுடன் சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் திறந்து கிடக்க பறந்து விரிந்த அகன்ற தோள்கள் பாறையை போன்ற திடமான மார்புடன் கையில் ஆள் உயர அரிவாள் ஒன்றை எடுத்து கொண்டு கூட்டத்தின் உள்ளே வந்தான் அவனை பார்த்த ஒரு சிலர் பயத்துடன் ஒதுங்கி நின்றனர்.
வேறு சிலர் அவனை பார்க்காமல் தங்களுக்குள் அடித்து கொண்டே இருக்க
“என்னலே இங்கே சத்தம்” என்று அவன் தன் கணீர் குரலில் கேட்க அனைவரும் ஒரு கணம் திரும்பி அவனை பார்த்தனர் கருப்பனை பார்த்தவர்கள் அங்கிருந்து தலை தெறிக்க ஓட அதில் முதலாவதாக சண்டையை ஆரம்பித்தவனின் சட்டையை பிடித்தான் கருப்பன்.
கருப்பனின் கையில் மாட்டியவன் “அண்ணா தெரியாம பண்ணிட்டேன்னா என்னை விட்ரு” என்று அவனிடம் பயத்துடனே கெஞ்ச அவன் மீது துளி அளவு கூட இரக்கம் காட்டாமல் அவன் கையை நீட்டி பிடித்தவன் ஓங்கி ஒரே வெட்டாக அருவாளால் வெட்ட ரத்தம் அவன் வெள்ளை நிற சட்டையில் தெறித்தது “எவ்வளவு திமிரு இருந்தா என் கட்சி ஆளையே அடிப்ப டா நீ” என்று ரத்தம் தோய்ந்த கையுடன் மீசையை முறுக்கி கொண்டே கருப்பன் கேட்க ஊரே அவனை வேடிக்கை பார்த்தாலும் அவனை அங்கிருந்த ஒருவர் கூட தடுக்கவில்லை.
ஆனால் அவனிடம் வெட்டு வாங்கியவனோ எதுவும் பேச முடியாமல் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழும் போது தான் கருப்பன் தன் கையில் இருந்த அருவாளை தூக்கி எறிந்தான் அவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தவன் தன் வேட்டியை அவிழ்த்து மீண்டும் மடித்து கட்டிக் கொண்டான்.
“இனிமே உன்னை இங்கே பார்த்தேன் தோலை உருச்சி உப்பு கண்டம் போட்டுருவேன் ராஸ்கல்” என்று விரல் நீட்டி மிரட்டினான்
“இனிமே இந்த மாதிரி எதுவும் பண்ண மாட்டேன் அண்ணா” என்று அவன் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே ஒற்றை கையால் அவன் காலை பிடித்து கெஞ்சினான்.
“எலேய் இங்கே வா டா” என்று கூட்டத்தில் இருந்த ஒருவனை கருப்பன் அழைக்க
“சொல்லுங்க அண்ணா” என்று கருப்பன் முன்னே ஒருவன் ஓடி வந்து நின்றான் “இவனை கூட்டிட்டு போய் தர்மா ஆஸ்பத்திரியில சேரு” என்று கூற
“சரி அண்ணா” என்றவன் அவனை அங்கிருந்து கைத்தாங்கலாக அழைத்து சென்றான்.
அங்கே பாதுகாப்பு பணிகளுக்காக நின்றிருந்த காவல் அதிகாரிகள் கூட அவனை ஒரு வார்த்தை கேட்கவில்லை வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.
“படுபாவி இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இவன் தான் நம்ம ஊரு தலைவரு என்னலாம் பண்ண போறானோ ஜெயிச்ச முதல் நாளே ரத்தம் பார்த்துட்டான்” என்று அங்கிருந்து பெண்கள் தங்களுக்குள் பயத்துடனே பேசிக் கொண்டிருந்தனர்.
கருப்பன் உண்மையிலேயே ஒரு சர்வாதிகாரி தான் இன்னும் ஐந்து வருடம் எப்படி இந்த மக்கள் அவனிடமிருந்து கழிக்க போகிறார்களோ அவன் வாய் பேசும் முன் எப்போதும் அவன் அரிவாள் தான் பேசும்.
ராமசாமி-சிவகாமி தம்பதியரின் ஒற்றை மகன் தான் இந்த கருப்பன் அவனுக்கு முன் உடன்பிறந்த இரு அக்காக்கள் உள்ளனர் பெரிய பொண்ணு சின்ன பொண்ணு அவர்களுக்கும் திருமணமாகி விட்டது சின்னப் பொண்ணுவின் கணவர் இறந்து விட அவர் தன் ஒற்றை மகளோடு தாய் வீட்டோடு வந்துவிட்டார்.
பெரிய பொண்ணுவின் கணவர் பெயர் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர் பெரியப்பொண்ணுவின் கணவர் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் அதே ஊரில் தான் இருக்கிறார்.
ராமசாமியும் அந்த ஊரில் பெரும் தனக்காரர்களில் ஒருவர் தான் சென்ற வருடம் வரை அவர் தான் ஊராட்சி மன்ற தலைவர் இந்த வருடம் அவர் மகன் கருப்பன் அவ்வளவே அரசியல் பலம் ஆள் மலம் பண பலம் என்று அனைத்தும் இந்த குடும்பத்தில் இருந்தது கருப்பனுக்கு வயது 32 ஆகிறது
அவனின் பெரிய அக்காவின் மகளான நந்தினியை தான் திருமணம் செய்து வைக்க போவதாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.
அவள் கல்லூரி முடித்து சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள் அவளின் தங்கை திவ்யா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள்.
கருப்பன் வெற்றி பெற்றதை ஊரே கொண்டாடி கொண்டு இருந்தது
அவன் ஜீப்பில் ஏறி நிற்க அவனின் ஆதாரவாளர்கள் கீழே இருந்து அவனுக்கு மாலைகள் அணிவித்தனர் தலையில் மலர் கிரீடம் என்று அனைத்தும் அணிவிக்கப்பட்டது அவனின் எதிரியான நாகராஜன் அவனை நின்று முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்.
கருப்பன் அவனை பார்த்து கொண்டே வேண்டுமென்றே திமிராக தன் மீசையை முறுக்கிவிட்டு கொண்டான் நாகராஜன் பதிலுக்கு கண்களாலேயே அவனை எரித்து கொண்டு இருந்தான்.
ஜீப் ஊர் முழுக்க நகர்வலம் வர ஊரே கருப்பனை தான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.
அதே நேரம் அவன் வீடே பரபரப்பாக இருந்தது “தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல வரானாம் மா” என்று பெரிய பொண்ணு பட்டு சேலை பளபளக்க கூறிக் கொண்டே வீட்டின் உள்ளே வந்தார் சிவகாமி சமயலறையின் உள்ளே சென்றவர் அங்கே காபி போட்டு கொண்டு இருந்த சின்னபொண்ணுவிடம் “எல்லாரும் வந்துக்கிட்டு இருக்காங்களாம் நீ வெரசா காபியை போடு” என்று வேலை சொல்லிவிட்டு சென்றார்.
சின்னப்பொண்ணு அவர்களுக்கு எதிர்மறையாக பழைய வெளுத்து போன புடவை அணிந்து இருந்தார் அந்த வீட்டில் வேலைக்காரி என்றெல்லாம் யாரையும் தனியாக இல்லை
சின்னப்பொண்ணு தான் வேலைக்காரிக்கு உண்டான பணிகள் அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறார்.
சின்னப்பொண்ணு வீட்டை விட்டு ஓடிச்சென்று தான் தன் கணவரை கரம் பிடித்தார் அவர் இவர்களை விட வசதியில் மிகவும் குறைந்தவர் என்பதால் இவர்களை பெரிதாக அந்த வீட்டில் யாரும் இதுவரை மதித்தது இல்லை.
அவர் கணவர் இறந்து விடவே இன்னும் கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையும் காற்றில் பறந்து போனது அந்த வீட்டில் எப்போதும் பெரிய பொண்ணு மற்றும் அவரின் மகள்களின் ராஜ்ஜியம் தான்
இன்னும் நந்தினிக்கு கருப்பனுடன் திருமணமாகி விட்டால் இருக்கும் சொச்ச மரியாதையும் போய்விடும்.
கருப்பனின் ஜீப் வாசலில் வந்து நிற்க கல்லூரி முடிந்து தோளில் பையை மாட்டி கொண்டு நடந்து வந்தாள் சின்னபொண்ணுவின் மகள் இளமதி
வீட்டின் வெளியே கூட்டமாக இருக்க ஜீப்பில் நின்றிருந்த மாமனை அன்னார்ந்து பார்த்தவள் ஓரமாக ஒதுங்கி நடந்து வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் உள்ளே வருவதை பார்த்த சிவகாமி “ஏன் டி காலேஜ் முடிஞ்சி வர உனக்கு இவ்வளவு நேரமா” என்று கேட்க
“இன்னைக்கு பஸ் லேட்டு பாட்டி” என்றாள்.
“எப்ப பாரு வேலையில இருந்து தப்பிக்க உனக்கு ஒரு காரணம் கிடைச்சிடுமே உள்ளே நிறைய வேலை கிடக்கு சீக்கிரமா போய் பாரு” என்றார் அவளும் தலையை ஆட்டிவிட்டு தன் அறையின் உள்ளே சென்று பையை வைத்தவள்
முகத்தை கழுவிவிட்டு சமயலறையின் உள்ளே வந்தாள் தாவணியின் முந்தானையை எடுத்து இடையில் சொருகி கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அப்போது உள்ளே வந்தாள் பெரியப்பொண்ணுவின் மகள் நந்தினி
“சித்தி எனக்கு ஒரு காபி வேணும் மதி கிட்ட கொடுத்து அனுப்புங்க” என்று கூறிவிட்டு தன் போனில் எதையோ பார்த்து கொண்டே தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“மதி அக்காவுக்கு காபி எடுத்துட்டு போ” என்று சின்னப்பொண்ணு கூற அவளும் பதிலுக்கு தலையை ஆட்டிவிட்டு காபியை எடுத்து கொண்டு சென்றாள்
நந்தினியின் அறையின் உள்ளே செல்ல அவளோ படுத்து கொண்டு போனில் எதையோ பார்த்து சிரித்து கொண்டே இருந்தாள்.
“அக்கா காபி” என்று மதி கூற
“ம்ம் கொடு” என்று கூறிவிட்டு அவள் முகம் பார்க்காமல் போனை பார்த்து கொண்டே கையை நீட்டினாள்
மதி காபி கப்பை கொடுக்க அவள் பிடிக்காமல் கீழே விட காபி கப் கீழே விழுந்து சத்தத்துடன் உடைந்து சிதறியது நந்தினி கோபத்துடன் எழுந்து நின்றவள் “ஏய் அறிவுயில்லை” என்று கத்திக் கொண்டே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள்.
மதி கன்னத்தில் கை வைத்து கொண்டு அழுது கொண்டே நின்றவள் “அக்கா நான் கொடுத்தேன் நீங்க தான் சரியா பிடிக்கலை” என்றாள்.
“அடியேய் என் மகளையே எதிர்த்து பேசுறியா நீ, அவள் இந்த வீட்டு மகாராணி ஜாக்கிரதை போ டி உள்ளே போய் இன்னொரு காபி எடுத்துட்டு வா” என்றார் அங்கே வந்த பெரியப்பொண்ணு.
Pavam ilamadhi
Pavam chinna ponnu