உ
அத்தியாயம் – 14
சுற்றி நின்ற அனைவரும் ஒரு மாதிரி பார்க்கும் போதே மனதினுள் வள்ளி நொறுங்கி விட்டாள் இப்போது தனது முன்பே தன்னை கேவலமாக பேசியதில் அங்கேயே மடங்கி கதறி அழுக ஆரம்பித்து விட்டாள்.
கலையரசி கோ அவளை தேற்றவும் முடியாமல் சுற்றி நிற்பவர்கள் பேச்சை நிறுத்தவும் முடியாமல் தவியாக தவித்து விட்டாள் அதுவரை அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவள் சற்றென்று வள்ளியின் அருகில் வந்து அவளை தோளோடு அனைத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் இதை அனைத்தையும் காது கொடுத்து கேட்கும் சூழ்நிலையில் வள்ளி இல்லை மனதும் உடலும் சேர்ந்து ஒரு நிலையில் தான் இங்கு இருக்கவே கூடாது என்ற முடிவுடன் அங்கிருந்து வேகமாக செல்ல முயன்றாள்.
அவளது பின்னையே வேகமாக சென்ற கலையோ அங்கு வார்டனுடன் தகராறில் ஈடுபட்டிருந்த அழகரை சத்தம் போட்டு அழைத்து விட்டு பின் வள்ளியின் பின்னே சென்றாள்.
அதுவரை அங்கே பேசிக் கொண்டிருந்தவன் சற்று என்று கலையரசன் குரலில் திரும்பிப் பார்க்க வள்ளி வேகமாக செல்வதும் அவள் பின்னே கலை துரத்திக் கொண்டு செல்வதும் தான் கண்ணில் பட்டது.
உடனடியாக வேகமாக அவர்களை பின்தொடர்ந்தவன் வள்ளியை கையைப் பிடித்து நிறுத்தினான் ஆனால் அவன் பிடியை உதறிவிட்டு வேகமாக வள்ளி செல்ல முற்பட தன்னோடு இறுக்கி பிடித்தான்.
“என்ன விட்டுருங்க நான் இனிமே இங்க இருக்கவே முடியாது நான் இந்த உலகத்தை விட்டு எங்க அம்மா அப்பா கிட்டயே போயிடுறேன் இதுக்கு மேல இங்க என்னால வாழவே முடியாது என்னோட பேரு மரியாதை எல்லாமே போயிடுச்சு” என்று அழகர் தன்னை பிடிக்கவும் அவனையே பற்றுகளாக பற்றிக் கொண்டு கதறி அழுக ஆரம்பித்து விட்டாள்.
அதுவரை அவள் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் இப்படி கூறவும் சட்டு என்று தனக்கு முன்னே இழுத்து ஓங்கி ஒரு அடி கன்னத்தில் வைத்து விட்டான்.
“ நான்தான் வாடர்ன் கிட்ட பேசிகிட்டு இருந்தேன் இல்ல உனக்கு அதுக்குள்ள என்ன அவசரம் எதுக்கு இப்படி வர அதுவும் சாகப் போறேன்னு வேற சொல்ற உனக்கு என்ன தைரியம் இருக்கணும்” என்று கோபத்தில் கர்ஜித்தான்.
அவள் அப்போதும் தனது அழுகையை நிப்பாட்டாமல் மீண்டும் மீண்டும் கதறி அழ அதுவரை காலேஜ் கேம்பஸ் என்று பார்த்துக் கொண்டிருந்தவன் இதற்கு மேல் முடியாது என்று அவளை தன் மேல் சாய்த்து ஆறுதல் அளித்தான்.
அதற்குள் கலையரசி அங்கே வர அவர்களை ஒரு மாதிரி பார்த்தவள் ‘என்ன நடக்குது இங்க’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வள்ளியை தன் புறம் இழுத்து ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்த அழகரும் வேறு ஏதும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான் சற்று நேரம் அவளை அழவிட்டவள் “யார் யாரோ ஏதேதோ பேசுறாங்க என்றதுக்காக இப்படி நீ ஓடி வருவியா” என்று அவளை பார்த்து கடிந்து கொண்டாள்.
அப்பொழுது வரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன் கலையரசி கூறியதில் அவள் புறம் திரும்பி “என்ன நடந்தது” என்று மிகவும் அழுத்தமாக கேட்டான்.
அவனது குரலில் மறுக்க முடியாமல் கலையரசி கூற ஆரம்பித்தாள் தற்போது பேசியது முதல் நேற்று காலையில் தான் உடல்நிலை சரியில்லாமல் கல்லூரிக்கு வராமல் இருக்கவும் வள்ளி மட்டும் தனியாக காலேஜ் வந்ததும்.
மதியத்திற்கு மேல் அவர்களது ஹாஸ்டலில் அனைவரும் கூடி கூடி பேசவும் என்னவென்று ஒன்றும் புரியாமல் அவர்கள் அருகில் செல்ல வள்ளியின் பெயர் அடிப்படவும் என்னவென்று விசாரித்தாள்.
அப்பொழுது அவர்களது எதிரில் உள்ள ரூமில் உள்ள பெண்
“ என்ன கலையரசி உனக்கு தெரியாத மாதிரியே கேட்கிற உன்னோட பிரண்டு தான் காலேஜ் போகாம இன்னைக்கு கார்ல யார் கூடவா ஓடிப் போயிட்டாலாமே” என்று கூற
“ஏய் என்னடி திமிரா என் ஃப்ரெண்ட் காலேஜ்க்கு தான் போயிருக்கா யாரு கூடவும் ஓடிப்போறதுக்கு முதல்ல அவ என்ன உங்கள மாதிரியா எப்ப யார் கிடைப்பானு அலையுறதுக்கு” என்று சகட்டுமேனிக்கு திட்ட ஆரம்பித்துவிட்டாள்.
“ ஏய் கலை அவள எதுக்கு திட்டற காலையிலிருந்து இந்த டாபிக் தான் போயிட்டு இருக்கு உனக்கு வேணா தெரியாம இருக்கலாம் ஆனா இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும் வள்ளி யார் கூடவோ ஓடிப் போனது” என்று இன்னொரு அறையில் இருந்த பெண் கூற
அவ்வளவுதான் கலைக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை “இதை முதல்ல உன்னிடம் சொன்னது யாரு” என்று கேட்க அவள் கைக் காண்பித்தது எதிர்த்த அறைக்கு பக்கத்தில் இருக்கும் ரூமில் ஒருத்தியை நேராக அங்கு சென்று நின்று விட்டாள்.
“உனக்கு யாரடி சொன்னது வள்ளியார் கூடவோ ஓடி போயிட்டானு”
என்று சட்டமாக கேட்க
“இங்க பாரு கலையரசி நாங்க ஒன்னும் இத சொல்லல என்னோட பாய் ஃப்ரெண்ட் பார்த்துட்டு தான் வள்ளி ஏதோ காரில் ஏறி போனதாக சொன்னான்” என்றாள்.
“அண்ணா கடைசில அவளோட பாய் பிரண்டு யாருன்னு பார்த்தா ராகேஷ் ஓட பிரண்டுனா அவன் கூடவே தான் சுத்திக்கிட்டு இருப்பான் இதுதானா நடந்துச்சு” என்றாள்.
அழகருக்கு அந்த ராகேஷ் மேல் அவ்வளவு கோபம் வந்தது இரண்டு நாட்களாக சுற்றி சுற்றி அவனது பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது அவனுக்கு ஒரு வழி பண்ணியே ஆகணும் என்று மனதில் நினைத்தவன்.
வேறு ஒன்றும் கூறாமல் இருவரையும் பார்த்தான் இப்போது அவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே இருக்கவே
ஒரு முடிவு எடுத்தவனாக இருவரையும் பார்த்தவன் “ ஏம்மா தங்கச்சி நீ ஹாஸ்டலுக்குள்ள போம்மா அப்புறம் உன்னையும் ஏதாவது சொல்ல போறாங்க அவளை நான் பார்த்துக்கிறேன்” என்று உரிமையாக கூறினான்.
அவன் கூறுவதைக் கேட்டு கலையரசி பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள் பின்பு கொஞ்சம் தைரியம் வர பெற்றவளாக “அண்ணா நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல வள்ளியை நீங்க பார்த்து இருக்கீங்களா?” என்று சந்தேகத்துடன் கேட்க
“ஆமாமா இனிமே இவளை இங்க தனியா விட முடியாதே அப்புறம் அந்த ராகேஷ் எப்படி வேணாலும் பிரச்சனை பண்ணுவான் அதனால வலியை நான் என் கூடவே கூட்டிட்டு போகிறேன்” என்றான்.
“அண்ணா நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒன்னு கேட்கவா?” என்றாள்.
“கேளுமா உனக்கு என்ன சந்தேகம் நான் எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்கிறேன்” என்றான்.
“உங்களுக்கு வள்ளியை முதலிலேயே தெரியுமா? திடீர்னு எப்படி அவளை உங்க பொறுப்புள்ள எடுத்துக்கறீங்க நான் கேட்டுக்கிட்டதாலயா அப்படின்னாலும் உங்க கூட எப்படி தனியா அனுப்ப முடியும்” என்று தவிப்புடன் கேட்க
அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த வள்ளிக்கும் மனது உருகி போனது தனது தோழியை நினைத்து அப்படி என்ன நான் செய்துவிட்டேன் என்று என் மேல் இவ்வளவு அன்பாக இருக்கிறாள்.
“ சரிமா நீ இவ்வளவு கேட்கிறனால நான் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் நானும் வள்ளியும் கல்யாணம் பண்ணிக்க போறோம் அதை இப்போதைக்கு நீ யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் இந்த ராகேஷ் க்கு ஒரு முடிவு கட்டினதுக்கு அப்புறம் கட்டாயம் எல்லாருக்கும் விருந்தே கொடுக்கிறேன்” என்றான்.
அழகர் கூறியதை கேட்டு கலையரசிக்கு அதிர்ச்சியில் கண்கள் இரண்டும் விரிந்து கொண்டது தான் கேட்டது நிஜமா என்று தனது காதுகளை தானே வேகமாக தேய்த்துக் கொண்டாள்.
அவளது முகபாவணையை பார்த்துக் கொண்டிருந்த வள்ளிக்கு அழகருக்கும் தனக்கும் கல்யாணத்தை பற்றி கூறிய செய்தியில் தான் முதலில் அதிர்ச்சி அடைந்ததைப் போலவே இவளும் அப்படியே அதிர்ச்சி அடைந்து நிற்பதைக் கண்டவள்.
அந்த ஒரு சூழ்நிலையிலும் அவளால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை சற்றென்று சிரித்து விட இருவரும் திரும்பி அவளை முறைத்து பார்த்தனர்.
பின் கலையோ “அண்ணா நீங்க சொல்றது நிஜமா என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க அதுவும் அவ படிக்கிற பொண்ணு இதனால அவளோட படிப்பு பாதிக்கப்படுமே” என்றாள்.
“ நீ ஒன்றும் கவலைப்படாதம்மா அவளுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு படிக்கட்டும். என்னால அவளோட படிப்பு எந்த விதத்திலும் தொந்தரவு வராதுமா அதுக்கு நான் கேரன்ட்டி தரேன்” என்றான்.
“ஐயோ என்ன அண்ணா கேரன்டி அதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க அவளுக்கு இப்ப தேவை பாதுகாப்பான சூழ்நிலை தான் நான் தானே அதை பத்தி உங்களுக்கு சொன்னது அதனால நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கிறிங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்” என்றாள்.
அவளது மனநிலை சந்தோஷமாகவும் இருந்தது அதே நேரம் ஒரு மாதிரி புரியாத குழப்பமாகவும் இருந்தது எப்படி இருவருக்குள்ளும் கல்யாணம் வரை பெரிய முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று
இருந்தாலும் அழகரின் மேல் உள்ள நம்பிக்கையும் வள்ளியும் அவ்வளவு சீக்கிரம் இதற்கு ஒத்துக் கொண்டிருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையும் இருக்கவே செய்தது.
இது அனைத்தும் அவளுக்கு கடவுள் வள்ளிக்கு செய்த வரமாகவே பட்டது அவள் பட்ட அனைத்து கஷ்டத்திற்கும் தீர்வாக அவர்களது கல்யாணம் இருக்கும் என்று நம்பினாள்.
அதனால் தானோ என்னவோ அவர்கள் இருவரும் மிகவும் பொருத்தமான ஜோடியாகவே அவளது கண்களுக்கு தெரிந்தனர்.
அதே நம்பிக்கையுடன் அவர்களை பார்த்தவள் “ எப்போ அண்ணா கல்யாணம் என்று கேட்க”
“நாளைக்கு காலைல மீனாட்சி திருக்கல்யாணத்தோட எங்க கல்யாணமும் நடக்க போகுதுமா அதனால நீ கண்டிப்பா வரணும்” என்றான்.
“ என்ன சொல்றீங்க” என்று வேறு வேறு குரலில் ஒரே வார்த்தையாக வர அதை கேட்ட அழகர் தான் இப்பொழுது திகைப்பாக பார்த்தான்.
வள்ளி உடனே அவனை பார்த்து
“ இரண்டு வருஷம் கழிச்சு தானே கல்யாணம் என்று சொன்னிங்க இப்போ என்ன நாளைக்கே கல்யாணம்னு சொல்றிங்க” என்றாள்.
அதையே பார்வையால் கலை கேட்க இருவரையும் பார்த்தவன் “இன்னைக்கு வள்ளியோட நிலைமை என்னவென்று உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்று கூறியவன்.
“இன்னைக்கு ஒருநாள் நைட்டு சமாளிச்சா தான் நாளைக்கு கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியும் ராகேஷ் எந்த நேரம் என்ன பண்ணுவான்னு தெரியாது” என்று கூறினான்.
இருவரும் புரிகிறது என்பது போல் தலை அசைக்க அதைப் பார்த்தவன் முகத்தில் சிறு புன்னகையுடன்
“ நாளைக்கு காலைல கல்யாணத்திற்கு வந்துருமா” என்று அழைப்பு விடுக்க
“ தப்பா நினைக்காதிங்க அண்ணா நாளைக்கு என்னால வர முடியாத சூழ்நிலை இல்லைனா முதல் ஆளாக நான் தான் அங்கு இருப்பேன்” என்று சங்கடமாக கூறினாள்.
அவளது சங்கடத்தை முகத்தில் பார்த்தவன் வேறு ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை பள்ளிக்கும் சூழ்நிலை தெரியும் என்பதால் அமைதியாக இருந்து கொண்டாள்.
பின் அவளை ஹாஸ்டலிற்குள் அனுப்பிவிட்டு இருவரும் கிளம்பி சென்றனர்.
கமெண்ட் பீளீஸ் நட்புகளே
super sis next epi sis…..
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌