ATM Tamil Romantic Novels

உயிர் வரை பாயாதே பைங்கிளி

15

 

 கோவெர்மென்ட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா நீ நெனச்ச நேரம் கரண்ட் விட… முந்தாநேத்து பெய்த மழைல மூணு நாளா ஊருக்குள்ள கரண்ட் இல்லை… அவுத்து போட்டு அழுக்கு துணி எல்லாம் அப்படியே நிக்குது… உனக்கு தனியா வேற வந்து சொல்லனுமா எடுத்திட்டு போய் ஆத்தங்கரைல துவைச்சு எடுத்துட்டு வரணும் புரியுதா… இந்தாடி அப்படியே அங்கே நின்னு எவன் கிட்டயும் பல்லை காட்டாம சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு… என திலோவை அனுப்பி விட்டவர் தையல் நாயகி…

 

அங்கு திண்ணையில் பல்லாங்குழி விளையாடி கொண்டு இருக்கும் மேனகையின் தலையில் ஒன்று போட்டு…

 

இங்க வீட்ல புழங்க தண்ணி இல்லைன்னு புலம்பிட்டு இருக்கேன் நீ என்னனா இங்கன உட்கார்ந்து பல்லாங்குழிய நிரப்பிக்கிட்டு இருக்கியா…போடி போய் அந்த தெரு முனையில அடிபம்பு தண்ணி அடிச்சு கொண்டு வந்து இந்த தவலை எல்லாம் நிரப்புர என்று அவளையும் விரட்டி விட்டார் தையல் நாயகி… அவர் கண் பார்வையில் பெண் பிள்ளைகள் சும்மா உக்காந்து இருந்தால் கடித்து குதறி விடுவார்…அப்படியே இன்று இருவரையும் வேலை ஏவி அனுப்பி வைத்தார்…

 

அவர் அனுப்பி விட்டதிலே ஆற்றங்கரை படுகையில் அமர்ந்து துணியை துவைத்ததில் தான் கட்டி இருந்த துணி அழுக்கானதால்… தாவணியை கழற்றி பாவாடையை கட்டி கொண்டு அதையும் துவைத்து தானும் குளித்து முடித்தாள் கவனமாக யாரும் வரும் முன் நான் குளித்து முடித்து விட வேண்டும் என்று அறக்க பறக்க குளித்தவள்… துவைத்த துணியை எல்லாம் காய போட்டுவிட்டு அவள் கொண்டு வந்த மாற்று துணியையும் வெகு ஜாக்கிரதையாக மாற்றும் போது தான்… பேச்சு குரல் கேட்டது வேற யாரு எல்லாம் உருப்படாத இரண்டு உருப்படிகள் ஆன பரத் மற்றும் கிரிதரன்…( இவனுங்க செய்யுற சில்லறைத்தனத்தை பார்த்து இவனுங்கள ஹீரோக்கள் சொல்ல மனசு வரலை மை லார்ட் )

 

அவர்கள் பேச பேச திலோவுக்கு அருவெறுப்பை தந்தது… ஒருவன் அந்தரங்கத்தை அடுத்தவனிடம் பகிர்வது இவளுக்கு அதிர்ச்சி யாக இருந்தது… அவர்கள் கண்ணில் இவள் பட்டு விட்டால் அவ்வளவு தான் ஏற்கனவே இவளுக்கு கிரிதரன் என்றால் பயம்… சிறு வயதில் இருந்தே இவளை கண்டால் ஆகாது… திலோவை படுத்தி எடுத்து விடுவான்… தையல்நாயகியின் மகன் என்ற ஒரே தகுதி போதுமே திலோ ஆட்டி படைப்பதற்கு…   

 

அதில் வேறு அவர்கள் அந்தரங்கத்தை இவள் கேட்டுவிட்டால் என்று தெரிந்தால் அவ்வளவு தான்… எதேர்ச்சியாக நடந்தது என்றாலும் தையல்நாயகியின் மகன் சும்மாவா விடுவான்… எனவே அவர்கள் கண் மறைந்து எப்படியாவது இங்கிருந்து சென்று விட வேண்டும் என தவித்தவளுக்கு அந்த படித் துறையை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை… எனவே துணிகளை எடுத்துக்கொண்டு சிட்டாக ஓடிவிடலாம் என்று நினைத்தவளுக்கு அங்கும் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது… ஏனெனில் அவள் துவைத்து காய வைத்திருந்த அவளின் தாவணி மீதுதான் கிரிதரன் அவனுடைய பிராண்டட் பேண்ட் அழுக்குப்படாமல் இருக்க அதன் மேல் தோரணையாக அமர்ந்திருந்தான்…

 

அதை எப்படி எடுக்க என்று யோசித்த அவளுக்கு படிகளின் பக்கவாட்டில் இருந்த பள்ளம் நினைவுக்கு வர… பதுங்கி பதுங்கி அவன் பக்கவாட்டிற்கு சென்றவள் இழுத்து பார்க்க ம்ஹும் வரவில்லை… அதையும் மீறி வேகமாக இழுத்தால் தாவணி கிழிந்து விடுமோ என்கிற அச்சம் அவளுக்கு… தடியன் என்ன கனமோ…?? 

 

தையல் நாயகி பெரும்பாலும் இவளுக்கும் மேனகைக்கும் சேர்த்து வருடத்திற்கு நான்கு ஐந்து துணிகள் எடுத்து தந்து விடுவார், ஆனால் அதில் இருவருக்கும் வித்தியாசம் இருக்கும் விலையிலும் தரத்திலும்… மேனகையுடையது தரமாகவும் விலை கூடியதாகவும் இருக்கும் இவளது சொல்லவா வேணும் மட்டமானதாகவும் விலை கம்மியாகவும் எடுப்பார்… ஐந்து ஆறு தடவை துவைத்து போட்டாலே கிழிந்து விடும் பிறகு உடுத்த எங்கே போவது… அதற்கும் தையல்நாயகியிடம் போய்க் கேட்டால்… “உங்க அப்பா என்ன கொடுத்து வச்சிருக்கானாடி… என்பார் அதற்கு பயந்தும் தன்மானத்தை காக்க வேண்டியே பல நாள் இவள் அழுக்கு துணியே போட நேரிடும்… 

 

எனவே போன பண்டிகைக்கு நல்ல விலையில் கிடைத்த இந்த தாவணி அவளுக்கு மிகவும் பொக்கிஷமாக தெரிந்தது எனவே அதை பத்திரமாக மீட்டெடுக்க எண்ணினாள்…

 

ஆனால் விதி விடனுமே இவள் கிரிதரன் அடியில் சிக்கியிருந்த தாவணி எடுப்பதை பரத் பார்த்துவிட… அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டான்…அதை கவனித்த கிரிதரன் பின்னால் திரும்பி பார்க்க… 

 

அங்கு குளித்து விட்டு துவைத்த துணிகளை தோளில் போட்டுக்கொண்டு ஈரம் சொட்ட சொட்ட நின்றிருந்த திலோத்தமாவை பார்த்தவன்… சட்டென்று அவளை அங்கு எதிர்பாராத அதிர்ச்சியில் உறைந்தவன் மறு நிமிடமே இவளா…?? என இளக்காரமாக இதழை வளைத்தவன்…

 

“ச்சை இவளுக்கு எல்லாமாடா பயப்புடவ… இவள் எல்லாம் ஒரு ஆளுன்னு… ஏண்டி இங்க என்னடி பண்ணிட்டு இருக்க… நாங்க பேசுனதை எல்லாம் ஒட்டு கேட்டுப் போய் போட்டு கொடுக்க போறியா…?? என பரத்திடமிருந்து திலோத்தமாவிடம் தாவினான்…

 

அவன் ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி எட்டு வைத்து வர இவள் பயத்தில் பின்னால் நகர்ந்து ஆற்றுக்குள் விழ போக ஆஆ…பயத்தில் கண்களை மூடி கொண்டாள்… அவளின் இடையில் அணைத்து பிடித்து கொண்டான் கிரிதரன்…

 

“ஏய் விழலடி பிடிச்சிக் கிட்டேன் கண்ணை திறந்து பாரு!!”என்றவன் தன்பார்வையை அவள் முகத்தை விட்டு விலகாமல் ஆராய்ந்து பார்த்து கொண்டு இருந்தான்… பளிச்சிடும் முகம் அடர்த்தியான புருவங்கள் சீரான முக்கு பவள இதழ்கள் இவைகளை விட வெளிச்சத்தில் வானவில்லாய் மின்னும் அவள் ஒற்றை கல் மூக்குத்தி தான் அவளிடம் அவனை பெரிதும் ஈர்த்தது…

 

 பயத்தில் மெல்ல கண்விழித்தவளுக்கு வெகு அருகில் கிரிதரனை கண்டதும் நடுக்கம் உண்டாகியது நெருங்கி நின்ற ஆணின் ஸ்பரிசத்தில் அவள் மேனி வியர்க்க தொடங்கிட… அவள் பயத்தை ரசித்தப்படி அவளை தூக்கிய நிலையிலே படிக்கட்டின் மேல் சாய்த்தவன்… அவளை விட்டு விலகுவதாக இல்லை…

 

“சொல்லுடி நாங்க பேசினதை ஒட்டு கேட்டியா??? “ குரல் தான் கோவத்தை காட்டியது கண்களோ அப்பட்டமாக அவள் அழகை ரசித்தது… சற்று முன் பரத்தின் அனுபவத்தால் கிளர்ந்தவனின் வேட்கையை பெண்ணவளின் பொன் மேனியின் உரசலில் உள்ளே தீப்பற்றி குளிர் சாரல் அடிக்க இதமாக இருந்தது… முதல் முறை அவள் முகம் தாண்டி அவள் அங்கம் பார்த்தான்… பார்த்தவன் பார்த்த மாத்திரத்திலே விழுந்தான்…

 

இறுகி பிடித்த ஆடைக்குள் அடங்காமல் அடைக்க பட்ட வெள்ளை புறாக்களை கண்டு உச்சி முடி நட்டுக் கொண்டது மோகத்தில் கிரிதரனுக்கு…

 

அவன் பார்வை செல்லும் இடத்தை கண்டவளுக்கு உள்ளூர பயந்து வெம்பி போனாள்… அவள் போட்டிருந்த ஆடை அவளது அளவுக்கு சற்றும் பொருந்தாமல் போனது அவளுடைய தப்பா இல்லை… கடமைக்கு என்று எடுத்துக் கொடுத்த தையல் நாயகியின் தப்பா…

 

ஒருநாள் இவள் பரண்மேல் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது கையை தூக்கி எதையோ எடுக்கும் போது அவள் ஆடை கிழிந்து விட அதை மற்றவர் கண் மறைத்து மறைத்து வேலை செய்ததை கண்டு மேனகைக்கு இவள்மீது இரக்கம் சுரந்தது… எனவே அவள் ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்திய துணிகளை இவளுக்கு தந்தாள்… மேனகை இவளை விட வயதில் சிறியவள் அவள் உயரமும் உருவ அமைப்பும் இவளை விட கம்மி என்பதாலும் அவளது உடைகள் இவளது அளவுக்கு சற்றும் பொருந்தவே இல்லை… அதை கவனித்த மேனகை இவளுக்காகவே தன் ஆடைகளை ஒரு சுற்று பெரியதாக எடுத்து அதற்காக சர்க்கஸ் கூடாரம் வந்துட்டாடி என்று அடைமொழிகளையும் கேலிகளையும் அவள் பெற்றிருக்கிறாள் என்பது வேறு கதை…

 

இன்று இவன் முன்பு இப்படி ஒரு ஆடையில் நிற்பதை நினைத்து தீயிலிட்டது போல் துடித்தாள் பேதை…

 

இ. இல்லை மா…மாமா நான் எதுவும் கேக்கல… துவைச்ச துணிய எடுக்க தான் வந்தேன் இதை அவன் நெருக்கத்தில் நின்று சொல்லி முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது…

 

அடிங்க யாருடி உனக்கு மாமா…வேலைக்கார கழுதை கொழுப்பு கூடி போச்சா…என மிரட்டியவனின் பார்வையில் மிரண்டாள் திலோ…

 

“எங்க அப்பாவும் மாமா நானும் உனக்கு மாமாவா மரியாதை இனிமே அத்தான்னு கூப்பிடுற என்ன புரியுதா…?? “ என உத்தரவிட்டவனை கலங்கிய கண்களுடன் ஏறிட்டாள்… அவன் மிரட்டியதை விட வேலைக்கார கழுதை என்கிற சொல் அவளை பெரிதும் காயப் படுத்தியது…

 

 சிறுவயதில் இருந்தே திலோவை அழ வைக்க வேண்டும் என்றால் கிரிதரன் பயன்படுத்தும் கடும் சொற்களில் இதுவும் ஒன்று… 

 

 அவள் கண்ணீரைக் கண்டு இறங்கியவனோ… இங்க பார்த்ததையும் கேட்டதையும் யார்கிட்டயும் சொல்லக்கூடாது போ… சொன்னாத் தொலைச்சிடுவேன்… என்று மிரட்டி அவளை அனுப்பி விட… 

அவளும் விட்டால் போதும் என்று தன் தாவணியை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தாள்…

 

“என்னடா ரொம்ப தான் ஒரசுற என்ன லவ்வா… நம்ம சைட் அடிக்கிறதுக்கு கூட தகுதி இருக்கனும் மச்சான்…!!”என கண்டிப்பாக சொல்லிய படி அவள் அருகில் வந்தான் பரத்… அவன் சொன்ன வார்த்தைகள் ஓடிச் சென்ற திலோத்தமாவின் காதில் தெளிவாக விழுந்தது…

 

“ச்சை நம்ம உயரம் என்ன அவள் தரம் என்ன… போயும் போயும் வேலைக்காரி கிட்ட வா லூசாடா நீ…? ஆமாம் என்கிட்ட பேசிட்டு உன் கண்ணு என்ன அந்த ஆட்டக்காரியை பார்த்துட்டு இருக்கு… மடங்கிடுச்சா மச்சான்.. சொல்லு சோதனை பண்ணி பார்க்க ஆள் வேணும்னு கேட்டியே…நான் வேணுனா பேசி பார்க்கவா… என நளினமாக நடந்து சென்ற பெண்ணை காட்டி கிரிதரன் கண்ணடித்து கேட்க…வெட்கம் கொண்டான் பரத்…

 

 சற்று முன் பரத் சொன்ன அந்த தகுதி இப்போது காற்றில் பறந்தோடி போனது…

 

 அந்த சம்பவத்துக்குப் பிறகு பரத்தும் கிரிதரனும் தனியாக கூடி கூடி பேசிக்கொள்ள… அதைக் கண்ட பஞ்சாட்சரத்துக்கு இது சரி இல்லையே கூட்டு களவாணிகள் ஒன்று கூடிட்டானுங்களா… இப்ப எங்க கொண்டு போய் நிறுத்த போறாங்களோ… என யோசித்தார்…

 

  இவனுங்க செஞ்ச காரியத்துக்கு அவார்டா குடுப்பாங்க எல்லாம் பஞ்சாயத்து தான்… ஆனால் இதில் சிறப்பம்சமே இவர்கள் இருவரையும் பிடித்துக் கொடுத்ததே தையல்நாயகி தான் என்றால்… ஒத்துக் கொள்வீர்களா…??

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top