17
திலோத்தமாவை அழைத்துவிட்டு சென்று வெகு நேரம் ஆகிவிட்டதால் அவள் இன்னும் திரும்பி வராமல் இருக்க என்ன ஆனதோ என்று அவளை அழைத்து வர ஆளை அனுப்பிவிட்டார் தையல்நாயகி…
அங்கு இல்லை என்ற தகவல் வர… எங்க போனா இவள்… வேலைக்கு பயந்துகிட்டு பதுங்கி கிட்டாளா என்ன…?? என ஆவேசமாக கிளம்பி வந்தவர் வாசுகியின் அறையை பார்க்க அவர் மருந்தின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்… அங்கு திலோத்தமா இல்லாத காரணத்தால் வீடு முழுக்க தேடிப் பார்த்தவர்… அங்கும் இல்லை என்றதும் பின்னே சென்று பார்க்க…
அங்கு ஓட்டு வீட்டில் வந்த சிம்னி விளக்கு வெளிச்சத்தை கண்டு அங்கதான் பொருள் எடுக்க போயிருப்பாள்… “இருட்டுல கண்ணு தெரியாம எதையாவது தேடிஇழுத்து மேல கீழ உருட்டி தள்ளி வைக்க போறாள்…!!” என்று இவரும் அவளுக்கு உதவ தான் நினைத்து போனார்…
அருகில் செல்ல செல்ல பெண்ணின் முனகல் சத்தம் மட்டும் வித்யாசமாக வரவே முதலில் பயந்தார் இருட்டில் விஷ பூச்சி எதுவும் கடித்து விட்டதோ என்று… பின் அங்கு சென்ற பின்பு தான் அது வேறு மாதிரி இருக்க புரிய வந்தது… என்ன ஏது என்று புரியாதவர் உள்ளறைக்குள் எட்டிப் பார்க்க திலோத்தம்மாவை யாரோ ஒருவன் பலவந்தம் படுத்திக் கொண்டிருப்பது புரிந்து கொண்டவர்…
எதையும் யோசிக்கவில்லை ஒரு பெண்ணின் மானம் பறிக்கப்படுகிறது என்பது மட்டுமே தெரிந்தவருக்கு அவளைக் காப்பாற்ற நினைத்து அக்கம் பக்கம் சுழல விட்டுத் தேடியவர் அருகில் கிடந்த உலக்கையை எடுத்து அவன் மண்டையில் ஒரே போடாக போட… ஆஆஆஆ என அவன் போட்ட காட்டு கத்தலில்… மற்றொரு அறையில் இருந்து வேகமாக ஒருவன் ஓடி வருவதை கண்டவர்… “என்னது இன்னொருத்தனா அடக்கடவுளே என பயந்து போனவர் திலோத்தம்மாவின் மீது ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தவனை இழுத்து தள்ளி விட்டு திலோத்தமாவை தூக்கி பிடித்து தரதரவென்று வெளியே இழுத்து வந்தவர்… மற்றவனையும் மயங்கி கிடந்தவனையும் அந்த ஓட்டு வீட்டிற்குள்ளே வைத்து பூட்டி விட்டார்…
வெளிச்சம் இல்லாததால் தையல்நாயகி அவர்கள் இருவரின் முகமும் தெளிவாக தெரியவில்லை வரி வடிவத்தை வைத்து வாலிப பசங்கள் என்பது மட்டும் புரிந்தது…அவர் மட்டும் வராமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் நல்ல வேலை சரியான நேரத்தில் வந்து திலோத்தம்மாவை காப்பாற்றி விட்டார்…
“ என்ன தைரியம் இருந்தால் என் வீடு வரைக்கும் வந்து இருப்பானுங்க *** நாய்ங்க …இவனுங்களை இப்படியே விட்டு வைக்க கூடாது…!!” என்று முடிவு செய்தவர் திலோத்தமாவை வேலைக்கார பெண்ணின் பொறுப்பில் விட்டுட்டு வெளியே சென்றவர்… ஊர் மக்களை கூப்பிட்டு நடந்ததை சொல்லி ஆட்களை கூப்பிட… திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்கார ஆண்கள் யாவரும் வெட்டருவா வேல் கம்புவுடன் வந்துவிட…
அறைக்குள் அடைத்து வைத்த வாலிபர்களை அடித்து துவைத்து கை கால் கட்டி மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் கொண்டு வந்து போட…
அவர்கள் முகத்தைப் பார்த்த அத்தனை பேரும் திகைத்துப் போயினர் என்றால்… தையல்நாயகி உலகமே தலைகீழாக சுற்றியது… பின்னே அவர் மகனை அல்லவா காவாலி என நினைத்து அவர் பிடித்துக் கொடுத்திருந்தார்… ஐயையோ இருட்டுல முகத்தை சரியா பார்க்காம என்ன காரியத்தை செஞ்சுப்புட்டேன்…
ஐயா ராசா… உனக்கா இந்த நிலைமை எப்படி அடிச்சு போட்டு இருக்காங்க பாவீங்களா நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா உங்க கை கால் வெளங்காம போக… ஐயோ ரத்தம் வருதே… என தையல்நாயகி பதறி துடித்து தன் புடவை முந்தானையை கடித்து மகனுக்கு கட்டு போட போக அவர் கையைத் தட்டி விட்டவன்…
“செய்யறதெல்லாம் செஞ்சிட்டு பாசம் வைக்கிற மாதிரி நடிக்கிறீயா முதல்ல நீ தள்ளிப் போ…!”என்று வாய்க்கிழிந்து ரத்தம் வந்த நிலைமையிலும் அவன் திமிர் அடங்குவதாக இல்லை…
தையல் நாயகி அடுத்து என்ன செய்ய என்று யோசிக்கும் முன்பே அங்கு ஊர் மக்கள் ஒன்று கூடி இருக்க கூடவே ஊர் தலைவர் சற்குணமும் வந்து சேர்ந்தார்…
அவரிடம் நடந்தது அத்தனையும் கூறி விட… “இப்போ இருட்டிப் போச்சு எதுவானாலும் நாளைக்கு காலைல பஞ்சாயத்துல பேசிக்கலாம் அது வரை இவர்களை பத்திரமா கட்டி போட்டு அடைச்சு வைங்க என்று கூறிவிட்டு போய்விட…
செய்வதறியாது திகைத்துப் போனார் தையல் நாயகி… திலோத்தமாவின் கற்பை காப்பாற்ற போய் அவரது மகனை காட்டிக் கொடுத்து விட்டாரே… நாளைக்கு பஞ்சாயத்து வேறு கூடினால் மகனின் வாழ்வு பறிபோகும் என்று அவர் மறுகி நின்ற வேளையிலே…
மேலும் ஒரு இடியாக வந்து விழுந்த செய்தி தான் தம்பி சீராளனின் மனைவி ஓடி சென்று விட்டாள் என்பது… அடி மேல அடி என இடி மேல் இடி என ஒரே நாளில் அத்தனை துன்பங்களும் அவரது குடும்பத்திற்கு வந்து சேர அலமலர்ந்து போனார் தையல் நாயகி…
ஒரு பக்கம் பெற்ற பிள்ளை மறுபக்கம் பெறாத பிள்ளை… இவர்கள் இருவரின் வாழ்வும் கேள்விக்குறியாகி விட்டது… யாருக்கு ஆறுதல் சொல்ல யார் பக்கம் நிற்க என்று தெரியாமல் தடுமாறினார்… தாய் பாசமா ??? சகோதர பாசமா.?? என்று வருகையில்… தராசு தாய் பாசத்திற்கே அதிக கனம் கூடியது… அவர் வயிற்றில் உதித்தவன் முன் கூட பிறந்தவன் குறைந்து தான் போய் விட்டான்…
எதை செய்வது எப்படி செய்வது என்று புரியாதவர் அதற்கும் மகனிடமே போய் நின்றார்…
அவன் தந்த அறிவுரையில் மறுநிமிடமே திலோத்தமாவின் முன்பு நின்றார்… அதுவரை யாரிடமும் கையேந்தி நிற்காதவர் முதல் முறையாக தன் மகனுக்காக திலோத்தம்மாவின் முன்பு நின்றார் தையல்நாயகி ம்ஹும் கிரிதரனின் தாய்…
நீ எதுவும் செய்ய வேண்டாம்… நாளைக்கு அவள் மட்டும் எனக்கு எதிரா சாட்சி சொல்லாம இருந்தா அதுவே போதும் மத்ததை நான் பாத்துக்குறேன் இன்று மகன் கூறிய வார்த்தைகளை நம்பி இதோ இன்று இவள் முன் கை கூப்பி கெஞ்சி கொண்டிருக்கிறார் தையல்நாயகி…
அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை… முதலில் அவளுக்கு நடந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவராத பொழுது மீண்டும் மீண்டும் அதிர்ச்சியை தந்தால் அவளும் தான் எப்படி தாங்குவாள்…
திலோத்தமா விழித்து நிற்கையிலே சிறு பெண் என்று பாராமல் அவள் காலிலே விழுந்து விட்டார் தையல்நாயகி… “அம்மா தாயே உன்னையும் குலசாமியா நினைச்சு கேட்டுக்குறேன் என் பிள்ளைய மட்டும் காட்டி கொடுத்திடாத உனக்கு புண்ணியமா போகும்… என்றவரை பதறி போய் தூக்கி விட…
அத்தை என்ன நீங்க போய் இப்படி வேணாம் அத்தை… என தடுக்க
தூக்கி விட்ட அவள் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் “இதுவரைக்கும் உன்னையும் ஆத்தாளையும் பார்த்துக்கிட்டதுக்கு கைமாறா இதை செய்டியம்மா… உன்னை கெஞ்சு கேட்டுக்கிறேன் நாளைக்கு பஞ்சாயத்துல பொய் சொல்லலைனா கூட பரவாயில்லை வாயை மட்டும் திறந்து விடாதே…!!” என பல சென்டிமென்ட் பிட்டுக்களை போட்டு திலோத்தம்மாவின் வாயை அடைக்க பார்த்தார் தையல்நாயகி… அவளும் அதில் மயங்கி சம்மதம் சொல்லிவிட ஹப்பா என நிம்மதி பெருமூச்சு விட்டவர் அதை அப்படியே கொண்டு போய் தன் மகனிடம் ஒப்பித்தும் விட… அவன் மனதில் ஆயிரம் கணக்குகள் போட்டு வைத்தான்…
யார் என்ன கணக்கு எப்படி போட்டாலும் கடைசில பாஸ் மார்க் போட வேண்டியது என்னவோ கடவுள்தானே… ஆனால் அவர் போட்டு வைத்த ஸ்கெட்ச் வேறாக அல்லவா இருந்தது…அது கடவுள் போட்ட ஸ்கெட்ச்சா அல்லது கடவுளுக்கே போட்ட ஸ்கெட்ச்சா என்பதை யார் அறிவார்…??
பஞ்சாயத்து சொம்பு மற்றும் இத்தியாதிகளுடன் பஞ்சாயத்து காட்சி அழகாக தொடங்கியது…
கிரிதரனையும் பரத்தையும் பஞ்சாயத்தின் முன்பு குற்றவாளிகளாக நிற்கவைக்கப்பட்டனர்…
அநேக சாட்சிகளை விசாரிக்க ஆரம்பித்தார் தலைவர் சற்குணம்…
கிரிதரன் எதையோ சொல்ல வாய் எடுக்க முன்பாகவே…
அங்கிருந்த காவலர்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண்ணை இழுத்து வந்து அவர்கள் முன்னால் நிறுத்தினர்…
ஐயா நேற்று இந்த ரெண்டு பசங்களை அடித்து வெளியே இழுத்து வந்ததுக்கு அப்புறம் அந்த வீட்டுக்குள்ள இருந்து இந்த பொண்ணு ஓடி தப்பிக்க பார்த்தது… நாங்க கையும் களவுமாக புடிச்சு உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டோம்… என்று பவ்யமாக கூறிவிட்டு பின் வாங்கிட…
முக்காடு போட்டிருந்தவளின் முகத்தை விலக்கிப் பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அது அவள் வயிற்று பிழைப்புக்காக பணத்திற்காக உடம்பை விற்று பிழைக்கும் பெண் என்பது அந்த ஊருக்கே தெரியும்…
அவளை அங்க வைத்துப் பார்த்ததும் விளங்கிவிட்டது பயலுக எதற்கு அந்த ஓட்டு வீட்டிற்கு சென்றார்கள் என்று…
என்னடா கன்றாவி இது என்றவருக்கு தெரியாமல் இல்லை அங்கிருக்கும் பாதி ஆண்களுக்கு மேல் யாரும் உத்தமர்கள் இல்லை என்பது… பகலில் உத்தமன் வேஷம் போட்டு விட்டு இரவில் முக்காடு போட்டு கொண்டு அவள் வீட்டிற்கு செல்லாதவர் இங்கு வெகு சிலரே… அதையெல்லாம் விட அவருக்கு பெரியதாக பாதித்தது… இந்த சிறு வயதில் இவர்கள் இப்படி கெட்டொழிந்து போய் நிற்கின்றனரே என்பது தான் அவருக்கும் அவர்கள் வயதில் ஒரு மகன் இருக்கிறானே அவருக்கும் தெரியுமல்லவா பெற்றவர்களின் வேதனையும் வலியும்…
“ என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல… உங்கள பெத்தவங்களுக்கு ஒரு மரியாதை இருக்கு ஊருக்குள்ள… அதையெல்லாம் குழி தோண்டி புதைச்சு புட்டிங்களேடா… ஏண்டா இப்படி சல்லித்தனமா செஞ்சிட்டு திரிய உங்களுக்கு வெக்கமா இல்ல …!!” என அவர் தந்தை ஸ்தானத்திலிருந்து அதட்டிட…
“தலைவரே இவனுங்க கிட்ட என்ன பேச்சு கிடக்கு… செய்யறதெல்லாம் செஞ்சிட்டு நிக்கிற தோரணையை பாருங்க… நெஞ்சில கொஞ்சம் கூட பயமோ மரியாதையோ இல்லை… இவனுங்க கிட்ட எல்லாம் போய் பேசிக்கிட்டு… இவங்கள எல்லாம் மரத்தில் கட்டி வச்சு தோலை உரிச்சா தான் சரி வரும்… சட்டுனு என்ன ஏதுன்னு விசாரிச்சு ஒரு தண்டனை கொடுத்து விடுங்க… அவன் அவனுக்கு ஆயிரத்தி எட்டு ஜோலி கிடக்கு…!!” என கூட்டத்தில் பெரும்பான்மையானவரின் கருத்து அதுவாகவே இருக்க அவர்களும் ஆமோதித்தனர்…
எனவே வேறு வழியின்றி சற்குணம் முதலில் திலோத்தமாவை விசாரிக்க ஆரம்பித்தார்…
ஏன் ஆத்தா அந்த நேரத்துல நீ எதுக்கு இந்த சல்லிபயலுக இருக்கிற இடத்துக்கு போன… நீயா போனியா இல்ல இவனுக்கு உன்னை தூக்கிட்டு போனானுங்களா??? என்ன நடந்துச்சுனு பயப்படாம சொல்லுத்தா… நான் இருக்கேன்… என ஊக்க…
அவளோ பதில் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள்… தையல்நாயகி தான் சொல்லி இருக்கிறாரே அவர் சொன்னபடியே நடந்து கொண்டாள்…
அவள் எதுவும் பதில் சொல்வாள் என்று வாயை பார்த்திருந்த ஊர் மக்களோ…
என்னடி அமைதியா இருக்க அதான் ஐயா கேக்குறாரு இல்லை வாயை தொறந்து பதில் சொல்லுடி என ஆள் ஆளுக்கு அவளை வற்புறுத்த… அப்பொழுதும் அமைதியாகவே நின்றிருந்தாள் திலோத்தமா…
“ஏன்மா நீ அமைதியா இருக்குறத பாத்தா என்னனு எடுத்துக்க… விரும்பி தான் அவங்க கூட போனியா… என்றதும்…
வெடுக்கென்று தலையை தூக்கி பார்த்தவள்… வாயை திறக்க போக இதிலிருந்து தையல்நாயகி மீண்டும் கையெடுத்து கும்பிட… அவரை கண்டதும் வாயை இறுக மூடி கொண்டாள்…
அன்னையா??? மானமா??? என்ற கேள்விக்கே இடம் இல்லை அன்னை தான் என்று அவள் அமைதியாக இருக்க… விதியோ விட்டேனா பாரு என்று விளையாட ஆரம்பித்தது மக்கள் என்ற ரூபத்தில்…
“என்னடி இவள் எல்லாத்துக்கும் அமைதியா இருக்குறா…??” இவள் ஊமையா நிக்கிறத பார்த்தா இவளும் சம்மதிச்சு தான் போயிருப்பா போல… கருமம் அவள் வக்கத்து போய் காசுக்கு போறாள்னு பார்த்தா… இது இந்த வயசுலே ஆம்பளய தேடி இப்படி அலையுறா… ஒருத்தனுக்குஇரண்டு பேரா… ச்சை ****… இவள் ஆத்தாக்காரி கட்டின புருஷன் நினைப்பிலே கிடந்து நடப்புனமா ஆயிட்டா… அவளுக்கு இப்படி ஒரு மகளா… கேட்க ஆள் இல்லன்னு தெனவெடுத்து அலையுறா… இவளை எல்லாம் ஊருக்குள்ள விட்டு வச்சா நம்ம வீட்டு பொண்ணுங்களும் இவளை பார்த்து கெட்டுப் போகாதுன்னு என்ன நிச்சயம்…!!” என என்ன நடந்தது என்று தெரியாமல் நாக்கை சாட்டையாக சுழட்டி வீச துடித் துடித்து போனாள் திலோத்தமா…
நாக்கில் நரம்பில்லாமல் பேச ஆரம்பித்ததும் கிரிதரன் கையை முறுக்கிக் கொண்டு எகிற நினைத்த சமயம் அவன் கையை பிடித்து தடுத்து விட்டார் தையல் நாயகி…
அந்த வயதில் கேட்க கூடாத பேச்சும்… வாங்க கூடாத ஏச்சும் கேட்டு மனதளவில் மரித்து போனாள்… போதும் போதும் என அவள் உள் மனம் அலற வெடித்து விட்டாள்…
இல்லைஏஏ… நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை… சத்தியமா நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல நம்புங்க… என கதறி கண்ணீர் விட்டு தன் மேல் விழுந்த கரையை போக்க துடித்தாள் பாவை…
அப்படிப்பட்ட பொண்ணு இல்லன்னா எதுக்கு அங்க போன அந்த நேரத்துல உனக்கு அங்க என்ன வேலை…??? குரல் சற்று கடுமையாகவே வந்தது…
“இல்ல நானா போகல அ.. அத்தை தான் ஜாமான் எடுக்க சொல்லி அனுப்பினாங்க… நானும் சாமான் எடுக்கத்தான் அங்க போனேன்… அப்போ அப்போ…அங்க…!!” அங்க அவள் கண்டது அவள் வாயால் சொல்ல கூசி போனாள் பேதை பெண்ணவள்…
அப்போ சொல்லு அங்க என்ன பார்த்த என கிண்டி கிளறி கேட்க…
பதில் சொல்லாவிட்டால் தன்னை நம்ப மாட்டார்களோ என்ற அஞ்சி… அங்க ரூம்க்குள்ள இவரும் இவங்களும் அ..அசிங்கமா இருந்தாங்க என பரத்தையும் அந்த ஆட்டக்காரியையும் அவள் கைகாட்டி விட ஊர் மத்தியில் பெருத்த அவமானம் பட்டு போனான் பரத்…
பாத்ததும் பயத்துல கத்த போனேனா… அப்போ அப்போ இவர் என கிரிதரனை கைகாட்டியவள்…
என் வாயை பொத்தி ரூம்குள்ள தூக்கி போய் என் ட்ரெஸ்ஸ கிழிச்சி என அதற்கு மேல் சொல்ல முடியாதவள் கைகளில் முகத்தை புதைத்து கொண்டு வெடித்து கதறி குலுங்கி குலுங்கி அழத் தொடங்கவும்… அங்கிருந்தவர்களுக்கு அவள் மேல் கழிவிரக்கம் தோன்றியது… கூடவே அவள் சொன்னதை வைத்து அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது…