அத்தியாயம் 11
மறுநாள் காலை பொழுது விடிய கருப்பன் நேற்று குடித்ததற்க்கான எந்த வித அடையாளமும் இன்றி வெள்ளை வேட்டி சட்டையுடன் வெளியே கிளம்ப போக அவன் முன் தயக்கத்துடனே வந்து நின்றார் சின்னப்பொண்ணு அவரை பார்த்தவன் ஒரு கணம் தயங்கி நிற்க அவரும் பேச ஆரம்பித்தார்.
“தம்பி.. தம்பி..” என்று தயங்கி கொண்டே ஏதோ பேச வர “எனக்கு நேரமாச்சு என்னன்னு வெரசா சொல்லி முடிங்க சோலி கிடக்கு” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
“அது என் பொண்ணை கை விட்டுற மாட்டியே பா” என்று கலங்கிய கண்களுடன் தயங்கி கொண்டே கேட்க உடனே கருப்பனின் முகம் மாறியது கண்கள் சிவக்க அவரை பார்த்து முறைத்தான் கண்களாலேயே அவன் தன்னை எரிப்பதை போல் பார்த்து வைக்க சின்னப்பொண்ணு
“இல்லை அவள் உலகம் அறியாத புள்ளை கீழ குடியில பிறந்தவள் கடமைக்குன்னு தாலி கட்டலையே” என்று தயங்கி ஒரு வழியாக கேட்டு முடித்து விட.
“அவள் என் பொஞ்சாதி அவளை தொட்டுட்டு விட்டு போவ நான் ஒன்னும் பொட்டை பய இல்லை ஆம்பளை” என்று மீசையை முறுக்கி விட்டு கொண்டே கூற
மீண்டும் சின்னப்பொண்ணு ஏதோ கேட்க வேற அவர் கேட்க வருவதை முன் கூட்டியே புரிந்தவனை போல
“இந்த ஜென்மத்துக்கு அவள் ஒருத்தி மட்டும் தான் எனக்கு பொஞ்சாதி என்னைக்கு அவள் கழுத்துல மூணு முடிச்சு போட்டனோ அன்னையில இருந்து என் மனசுல யாரும் இல்லை சுத்தமா தான் இருக்கேன்” என்றான் நிமிர்வுடன் கையை பின்னால் கட்டிக் கொண்டு “இன்னும் வேற ஏதாவது கேட்க்கனுமா” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க இல்லை என்பது போல் தலையை ஆட்டினார்.
சின்னப்பொண்ணுவுக்கு கருப்பனின் பேச்சில் ஏதோ ஒரு புது வித தேம்பு வந்ததை போல் உணர்ந்தார் கண்களில் வழிந்த கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்து கொண்டு மன நிம்மதியுடன் உள்ளே சென்றார்.
நேற்று இரவில் இருந்தே தன் மகள் வாழ்வு என்ன ஆகுமோ என்று நினைத்து மனம் வருந்தியவருக்கு இப்போ தான் நிம்மதியே பிறந்தது.
அவ்வப்போது நந்தினி அவனை பார்க்க வந்தாள் அவளிடமிருந்து விலகி விலகி செல்ல ஆரம்பித்தான் ஒருத்திக்கு தாலி கட்டிய பின் இன்னொருத்தியை மனதில் நினைக்க அவன் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.
அடுத்து வந்த நாட்களில் கருப்பனுக்கு இளமதியின் நினைவு சற்று அதிகமாகவே வந்தது அவளை நினைக்காதே மனமே என்று அவனுக்கு அவனே கடிவாளமிட்டாலும் அவனால் அவளிடமிருந்து விலக முடியவில்லை தொட்டால் தொடரும் என்று கூறுவது உண்மை தானோ.
அன்றொரு நாள் இரவும் அப்படி தான் கருப்பன் நன்றாக உறங்கி கொண்டு இருக்க அவன் கனவில் மெல்லிய பார்டர் வைத்த சிவப்பு நிற பட்டு புடவை கட்டி தலை நிறைய மல்லிப்பூ வைத்து தேவதையை போல் நடந்து வந்து மதி அவன் பக்கத்தில் படுப்பதை போல் இருந்தது அவனும் இவளை மையலுடனே தாபம் சுமந்த விழிகளுடன் அவளை பார்த்து கொண்டே நெருங்கி அணைக்க “மாமா வேண்டாம்” என்று அவள் அலற கருப்பன் அலறி அடித்து பிடித்து கொண்டு எழுந்தமர்ந்தான்.
அப்போது தான் அவன் உணர்ந்தான் நடந்தவை அனைத்தும் கனவு என்று அதற்க்கு மேல் உறங்க முடியாமல் தவித்தவன் எழுந்து குளியலறையின் உள்ளே சென்று சில்லென்ற தண்ணீரை தன் மீது ஊற்றி குளித்துவிட்டு வந்து படுத்தான் அதன் பிறகு இரவில் குளிப்பதே வாடிக்கையானது இப்படியே நாட்கள் நகர.
எப்போதும் போல் அன்று ரைஸ் மில்லுக்கு சென்ற கருப்பன் அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டு இருக்க அவன் முன் வந்து நின்றான் அவனின் பணியாட்களில் ஒருவனான பச்சைக்கிளி.
அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே கருப்பன் தன் கையில் இருந்த நோட்டில் கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டு இருந்தான்
“அண்ணே அண்ணே” என்று மீண்டும் அழைத்தான் பச்சைக்கிளி தலையை சொறிந்து கொண்டே கருப்பன் அவன் இரண்டு மூன்று தடவை அழைத்த பிறகு தான் அவனை நிமிர்ந்தே பார்த்தான் “என்ன டா வேலை நேரத்துல” என்று கேட்டான்.
“அது..அண்ணே..” என்று மீண்டும் தலையை சொறிந்து கொண்டே நிற்க கருப்பனுக்கு இந்த முறை கோபம் தலைக்கு ஏறியது நோட்டை டேபிளின் மீது தூக்கி எறிந்தவன் எழுந்து நின்றவன் “என்னன்னு இப்போ சொல்ல போறியா இல்லையா நீ” என்று கோபத்துடன் கேட்க அங்கு ஓடிக் கொண்டு இருந்த மிஷின் சத்தத்தை விட அவன் சத்தம் அதிகமாக கேட்டது.
பச்சைக்கிளி பயந்தே விட்டான் பயத்துடனே “அண்ணே என் பொஞ்சாதி கூட வெளியே போறேன் செலவுக்கு கொஞ்சம் ரூவாவும் இன்னைக்கு அரை நாள் லீவு வேணும்” என்று படபடவென்று அனைத்தையும் கூறி முடித்தான்.
கருப்பன் இடையில் கை வைத்து கொண்டு அவனை பார்த்து முறைக்க
“அண்ணே கோவப்படாதிக இப்போ தான் கல்யாணம் கட்டி இருக்கேன் வூட்டை விட்டு அவள் வெளியே போனதே இல்லை இன்னைக்கு அரை நாள் லீவு கொடுத்திங்கன்னா அவளுக்கு பூ வாங்கி கொடுத்துட்டு ராத்திரி ஷோவுக்கு அப்படியே நம்ம ஊர் கொட்டாய்க்கு அவளை கூட்டிட்டு போய்ட்டு படம் பார்த்துட்டு வருவேன்” என்றான்.
கருப்பன் அவனை பார்த்து முறைத்தவன் “இங்க எவ்வளவு சோலி கிடக்கு லீவும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது போ டா போய் வேலையை பாரு” என்று அவனை விரட்டிவிட்டான் அவனும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அங்கிருந்து செல்ல கருப்பன் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
ஏனோ அவனே அறியாமல் அவனுள் கோபம் எழுந்தது அப்படியே எந்த வேலையும் பார்க்காமல் அமர்ந்து இருந்தான் அன்று முழுவதும் அங்கிருந்த அனைவரிடமும் எரிந்து விழுந்து கொண்டே இருந்தான்.
மதியம் அனைவரும் சாப்பிட செல்ல கருப்பனும் தன் புல்லட்டை எடுக்க பின்னே சென்றான் அப்போது பச்சைக்கிளிக்கு அவனின் புது மனைவி சாப்பாடு எடுத்து வந்திருந்தாள் இருவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் அவன் மனைவி அவனுக்கு ஊட்டி விட அவனும் பதிலுக்கு அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சி கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
கருப்பன் இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு ஒருவேளை தானும் நல்ல படியாக திருமணம் செய்து இருந்தால் இப்படி தான் இருந்திருப்போமோ என்ற எண்ணம் கூட எழுந்தது அவர்கள் இருவரும் கொஞ்சி கொள்வதை பார்த்து மனதில் எரிச்சல் மூண்டது கோபத்துடன் பொறாமையும் சேர்ந்து தலை தூக்கியது
“டேய் பச்சைக்கிளி” என்று வேண்டுமென்றே கத்தி அழைத்தான்.
அவனும் தன் முதலாளி அழைத்ததால் பாதி சாப்பாட்டிலேயே எழுந்து அவசர அவசரமாக ஓடி வந்து அவன் முன் பணிவுடன் “சொல்லுங்க அண்ணே” என்றான்.
“மில்லு உள்ளே போய் புது மூட்டை எத்தனை வந்துருக்குன்னு கணக்கு கேட்டுட்டு வா போ” என்று அவனை அனுப்பி வைத்தான் அவன் சென்ற பின் பச்சைக்கிளி மனைவியை பார்த்து முறைத்தவன் “இந்த கொஞ்சல் எல்லாம் புருசனும் பொண்டாட்டியும் மில்லுக்கு வெளியே வச்சிக்கங்க நாலு பேரு வந்து போற இடம்” என்றான் கோபத்துடன் அவளை முறைத்து கொண்டே தன் புல்லட்டில் ஏறி வீட்டுக்கு சென்றான்.
கருப்பனுக்கு அவனை தவிர யார் ஜோடியாக சுற்றுவதை பார்த்தாலும் கோபமாக வந்தது காரணமே இல்லாமல் அவர்களுடன் சண்டையிட்டான் திருமணத்திற்க்கு முன்பு கூட அவனுக்கு யாரை பார்த்தும் இப்படியெல்லாம் தோன்றியது இல்லை
அதுமட்டுமல்ல இரவு நேரம் வந்தாலே தன் மனைவியுடன் கழித்த இரவுகள் நினைவுக்கு வந்து அவனை இம்சை செய்து கொல்லாமல் கொன்றது.
அதே நேரம் விடுதிக்கு வந்த இளமதிக்கு முதல் ஒரு வாரம் சாதாரணமாக தான் சென்றது அடுத்த வாரம் காலை விடிந்தும் அவள் உறங்கி கொண்டு இருப்பதை பார்த்த அவளின் அறை தோழி அவள் அருகில் வந்து அவளை எழுப்பினாள்.
“மதி எழுந்துரு காலேஜ்க்கு நேரமாச்சு” என்று அவளை எழுப்ப “மாமா இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்க நைட் எல்லாம் தூங்கலை” என்று மீண்டும் உறங்க போக
‘என்னாச்சு இவளுக்கு’ என்று நினைத்தவள்
“மதி மணி ஒன்பாதச்சு டி எழுந்துரு”அவளை மீண்டும் எழுப்ப முயற்சி செய்ய.
இளமதி கண்களை மூடிக் கொண்டே அவளின் கைகளை தன் அருகில் பிடித்து இழுத்து அவளின் கன்னத்தில் இச் என்று ஒரு முத்தமிட்டு விட்டு “போதுமா மாமா தூங்க விடுங்க” என்று கூறிவிட்டு உறங்க ஆரம்பித்தாள்.
தன் கன்னத்தில் கை வைத்து கொண்டே அவளின் அறை தோழி அவளை வித்தியாசமாக பார்த்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி சென்றாள் அவள் மாலை மீண்டும் வரும் போது இளமதி முன்பே வந்து ஏதோ நோட்டில் எழுதி கொண்டு இருந்தாள்.
அவளை வித்தியாசமாக பார்த்தவள் இளமதியின் அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து “உனக்கு உங்க மாமான்னா ரொம்ப பிடிக்கும் மதி” என்று கேட்டாள்.
இளமதி எழுதி கொண்டே இருந்தவள்
“ஏன் அச்சு” என்று திரும்பாமலேயே கேட்க “இல்லை காலையில உங்க மாமான்னு நினைச்சு எனக்கு முத்தம் கொடுத்தியே அதனால தான் கேட்டேன்” என்று குறும்புடன் அவள் சிரித்து கொண்டே கேட்க
எழுதி கொண்டிருந்த மதியின் கைகள் அப்படியே நின்று போனது லேசாக
கீழ் உதட்டை கடித்து தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தவளின் முகம் லேசாக வெட்கத்தில் சிவந்து போனது அர்ச்சனாவின் முகத்தை ஏறெடுத்து பார்க்க அத்தனை கூச்சமாக இருந்தது முகம் சிவந்து போய் அமர்ந்து இருந்தாள்.
“என்ன டி வவ்வா” என்று கேட்டு கொண்டே அர்ச்சனா அவளின் கைப்பிடிக்க “ச்சீ போ டி” என்று அவளின் கையை தட்டிவிட்டு எழுந்த இளமதி அவளின் முகம் பார்க்க முடியாமல் வெளியே ஓடினாள் தனக்கு தானே சிரித்து கொண்டாள் பேசிக் கொண்டாள்.
இரவு அர்ச்சனா உறங்கிய பின் உள்ளே வந்தவள் தன் பையில் இருந்த தன் மாமனின் புகைப்படம் ஒன்றை தன் கையில் வைத்து பார்த்தாள் அதில் கருப்பன் வெள்ளை வேஷ்டி சட்டையில் ஏதோ ஒரு கோவில் திருவிழாவில் நின்றிருந்தான்.
அதை பார்த்தவளின் முகத்தில் வெட்கம் வந்து அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டது அடுத்து வந்த நாட்களில் தலைவனை நினைத்து அவளும் பசலை நோயால் வாட ஆரம்பித்தாள்.
அவனை நினையாத மனமே என்று நினைத்தாலும் அவளால் அவனை பற்றி நினைக்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை இருவரும் ஒன்று சேரும் நாள் என்றோ.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌