ATM Tamil Romantic Novels

என் இனிய ராட்சஷனே 12

அத்தியாயம் 12

 

கருப்பனுக்கு இப்போதெல்லாம் வீட்டில் இருக்கவே சுத்தமாக பிடிக்கவில்லை முடிந்தளவு வெளி வேலைகளில் தன் நேரத்தை செலவிட ஆரம்பித்தான் ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் அந்த வேலையும் அவன் தலையில் இருக்க மூச்சு விட கூட நேரமில்லாமல் சுற்றிக் கொண்டு இருந்தான். 

 

அன்று அவன் ஆருயிர் தோழன் தீலிப் அவனை பார்க்க வந்திருக்க ரைஸ் மில்லில் இருந்தான் கருப்பன். 

 

தீலிப்பன் அவன் அறையின் உள்ளே வர அவனை பார்த்த கருப்பன் “வா டா” என்று வாய் நிறைய புன்னகையுடன் அழைத்தான் அவன் பக்கத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் தீலிப் அதே புன்னகையுடன். 

 

“என்ன டா இவ்வளவு தூரம் எதாவது முக்கியமான விஷயமா” என்று கேட்க 

“ஆமாம் டா என் மச்சினிச்சியை காலேஜ் சேர்க்கனும் உன் வொய்ப் படிக்கிற காலேஜ்ல தான் கேட்டோம் அட்மிஷன் முடிஞ்சிருச்சுன்னு சொல்றாங்க நீ கொஞ்சம் நேர்ல வந்து சொன்னா அட்மிஷன் கிடைக்கும் மச்சான்” என்றான். 

 

“டேய் நான் இந்த மாதிரி சிபாரிசு எல்லாம் இதுவரை பண்ணினதே இல்லையே டா” என்றான் தயக்கத்துடனே கருப்பன் “டேய் எல்லாம் எனக்கு தெரியும் டா உன்னை விட்டா எனக்கு யாரும் இல்லை டா இப்போதைக்கு நீ தான் கொஞ்சம் ஹேல்ப் பண்ணனும் பிளீஸ் மச்சான்” என்க கருப்பன் ஒரு கணம் யோசனையுடன் அமர்ந்து இருந்தவன் 

“சரி டா நாளைக்கு வரேன்” என்றான். 

 

“தேங்க்ஸ் டா” என்க “ஏய் நமக்குள்ள எதுக்கு இதெல்லாம் நான் வரேன் டா” என்றான். 

 

அன்றைய பொழுது மில்லிலேயே இருந்தவன் மறுநாள் காலை இளமதியின் கல்லூரிக்கு கிளம்பினான் 

எப்போதும் போல் புல்லட்டில் இல்லாமல் காரில் கிளம்பினான் கல்லூரிக்கு வெளியே வளாகத்தில் இருந்த பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு  கல்லூரியை நோக்கி நடந்து வர கல்லூரியே பயங்கர கூட்டமாக இருந்தது மாணவர்கள் அனைவரும் வகுப்பில் இல்லாமல் மைதானத்தில் தான் இருந்தனர் அன்று ஸ்போர்ட்ஸ் டே என்பதால் கல்லூரியே கலை கட்டியது கருப்பனின் கண்கள் தன்னையே அறியாமல் அந்த கூட்டத்தில் இளமதியை தேடியது. 

 

தீலிப் அவனுக்கு முன்பே வந்து காத்திருந்தவன் வாசலுக்கு ஓடி வந்து “வா டா மச்சான்” என்று கருப்பனை அழைத்து சென்றான் அவனும் உள்ளே வர கல்லூரி உரிமையாளரின் அறையின் உள்ளே கருப்பன் நுழைய அவனுக்கு ஏக போக வரவேற்ப்பாக இருந்தது. 

 

“அடடே வாங்க சார் உட்காருங்க” என்று அந்த கல்லூரி உரிமையாளரே தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று அவர் முன் இருந்த இருக்கையை கை காட்டி கருப்பனை வரவேற்றார் அவனும் இருக்கையில் வந்து அமர்ந்தான். 

 

“என்ன சார் இவ்வளவு தூரம்” என்று அவர் கேட்க “இவங்க என்னோட ரிலேட்டிவ்” என்று திலீப்பன் மற்றும் அவனின் மச்சினிச்சியை கை காட்டினான் “அவங்களோட அட்மிஷன் விஷயமா தான் வந்தேன்” என்க

“சார் நீங்க எனக்கு ஒரு கால் பண்ணியிருந்தாலே சார்க்கு நான் எல்லாம் பண்ணிக் கொடுத்துருப்பனே” என்றார். 

 

“இல்லை சார் என்ன தான் இருந்தாலும் நேர்ல வந்து கேட்க்குறது தானே முறை” என்றான் கருப்பன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே. 

 

கல்லூரியின் உரிமையாளர் உடனே தன் எதிரே இருந்த மணியை அழுத்த அவரின் உதவியாளர் உடனே அங்கே ஓடி வந்தார் “பாஸ்கர் இவங்களுக்கு உடனே அட்மிஷன் போட்டு கொடு” என்க

அவனும் திலீப் மற்றும் அவனுடன் இருந்த பெண்ணையும் அழைத்து சென்றான். 

 

“ரொம்ப நன்றி சார் அப்போ நான் கிளம்பவா” என்று கருப்பன் கூற

“இருங்க சார் டீ காபி எதாவது சாப்பிட்டு போகலாம்” என்றார் அவர் 

“பரவாயில்லை சார் நிறைய வேலை இருக்கு” என்று கூறிவிட்டு கருப்பன் கிளம்பினான். 

 

கல்லூரி உரிமையாளரின் பக்கத்தில் இருந்த உதவி பேராசிரியர் ஒருவர் 

“யாரு சார் அவரு நீங்களே எழுந்து நிக்குறிங்க அவ்வளவு பெரிய ஆளா பார்த்தா பட்டிக்காட்டான் மாதிரி இருக்காரு” என்று கேட்க 

“இவரை தெரியாதா இவரு பெயர் கருப்பசாமி இவருக்கு ஆளுங்கட்சியில நிறைய செல்வாக்கு ஊர்ல பெரிய கை 

கட்டபஞ்சாயத்து அப்படி அப்படின்னு நிறைய தொழில் பண்றாரு 

இந்த சுத்துவட்டாரத்துல இவரை பத்தி தெரியாத ஆளே கிடையாது பா நமக்கு கூட அப்பப்போ நிறைய உதவி பண்ணியிருக்காரு” என்றார் அவர் கூறியதை கேட்ட அந்த பேராசிரியரும் ஆச்சரியமாக வெளியே செல்லும் கருப்பனை பார்த்தார். 

 

கருப்பன் வெளியே நடந்து வந்து கொண்டிருக்க ஒரு இடத்தில் மட்டும் பயங்கர சத்தமாக இருந்தது என்னவென்று அங்கே கூட்டத்தின் உள்ளே சென்று பார்க்க இரு அணிகளாக பிரிந்து மாணவிகள் கபடி விளையாடி கொண்டு இருந்தனர் அதை பார்த்துவிட்டு அவன் சாதாரணமாக திரும்பி செல்ல போக அவன் கால்கள் அங்கிருந்த ஒருத்தியை பார்த்துவிட்டு அப்படியே நின்று போனது. 

 

ஆம் அது இளமதி தான் அங்கே இருந்த பெண்களில் ஒருத்தியாக விளையாடி கொண்டு இருந்தாள் எப்போதும் போல் இல்லாமல் இன்று நீல நிற முட்டி அளவு மட்டுமே இருந்த ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்தாள் நீண்ட தலைமுடியை கொண்டையிட்டு இருந்தாள் அடுத்த அணியின் உள்ளே “கபடி கபடி” என்று கூறிக் கொண்டே நுழைந்தாள் இளமதி. 

 

ஒற்றை ஆளாக சிங்கமென உள்ளே நுழைய அவளை பிடிக்க அந்த அணியில் இருந்தவர்கள் முயற்சி செய்ய புள்ளி மானை போல துள்ளி குதித்து அவர்கள் யாரின் கையிலும் பிடிபடாமல் ஓடிக் கொண்டு இருந்தாள் அந்த அணியில் இருந்த ஒருத்தி அவளின் காலை பிடிக்க அவளிடமிருந்து மீனை போல துள்ளிக் குதித்து லாவகமாக தன் அணிக்கு தப்பிச் சென்றாள். 

 

எதிர் அணியை பார்க்கும் போது இளமதியின் கண்களில் தெரிந்த திமிர் அவர்களை பார்த்து சிரிக்கும் போது அவளின் கன்னத்தில் விழுந்த லேசான குழி அத்தனை அழகாக இருந்தது

அவள் ஆடிக் கொண்டே இருக்க அவளின் செழித்த தங்க கட்டிகளும் சேர்ந்து அவளுடன் நடனமாட அவன் கண்கள் அங்கிருந்து விலகவேயில்லை வெகு நாட்களுக்கு பிறகு அவளை இப்படி பார்ப்பது அவனுள் ஏதோ செய்தது அவளின் நெற்றியில் வழிந்த வியர்வை துளிகள் அனைத்தையும் கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான் அவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற உரிமையில் அவன் கண்களாலேயே அவளை கற்பழித்து கொண்டு இருந்தான் ஒரு மாத பிரிவு ஏக்கம் அனைத்தும் அவனை வாட்டி வதைத்திருந்தது அப்போது விளையாட்டின் போது இடைவெளி விட்டனர். 

 

அனைவரும் ஓய்வுக்காக வந்து நிற்க இளமதி கூட்டத்தில் ஒருவனாக உயரமாக நின்றிருந்த தன் மாமனை பார்த்துவிட்டாள் அதுவரை சிங்கப்பெண்ணை போல் சுற்றிக் கொண்டு இருந்தவளின் முகத்தில் அவளே அறியாமல் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது அவன் முகம் பார்க்க முடியாமல் தடுமாறினாள் தன் முன்னே இருந்த அவளின் தோழி ஒருத்தியின் பின்னே ஓடி ஒளிந்து கொண்டு அவனை வெட்கத்துடன் எட்டிப் பார்த்தாள். 

 

என்ன செய்வது என்று அவளுக்குமே புரியவில்லை அவளின் தடுமாற்றத்தை பார்த்த கருப்பன் தான் இங்கே நின்றிருந்தாள் அவள் சரியாக விளையாட மாட்டாள் என்று புரிந்து போனது அங்கிருந்து நடந்து சென்றுவிட்டான். 

 

அங்கிருந்து கருப்பன் செல்வதை பார்த்த இளமதியின் முகம் வாடிப் போனது ‘எதுக்காக இங்கே வந்தாரு அப்போ என்னை பார்க்க வரலையா இவருக்கு என் மேல பாசமே இல்லை இன்னும் நந்தினி அக்காவை தான் நினைச்சிட்டு இருக்காரா நான் மட்டும் தான் அவரை நினைச்சிட்டு இருக்கேனா’ என்று நினைத்தவளின் கண்கள் கலங்கியது அதற்க்கு மேல் அங்கு விளையாட பிடிக்காமல் அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு நடந்து சென்றாள். 

 

இளமதி அழுது கொண்டே தூரத்தில் நடந்து வருதை காரின் மேல் சாய்ந்து நின்று கொண்டு பார்த்தான் கருப்பன் அவளோ அவனை பார்க்காமலேயே பார்க்கிங் ஏரியாவை தாண்டி செல்ல போக அவளின் கைப்பிடித்து கொண்டான் அவளின் கணவன். 

 

இளமதி திடீரென யாரோ தன் கையை பிடிக்க யாரென்று பயத்துடன் திரும்பி பார்த்தாள் அங்கே நின்றிருந்த கருப்பனை பார்த்தவளுக்கு இன்னும் கோபம் வர அவனின் கையை தட்டிவிட்டு அங்கிருந்து செல்ல போக கருப்பன் வேகமாக அவளின் கைப்பிடித்து இழுத்தான் அவன் வேகத்துக்கு அவனின் நெஞ்சில் அவளின் தலை நச்சென்று மோதியது “என்னாச்சு கண்ணு” என்று கேட்டது தான் தாமதம் தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்து விட்டாள். 

 

அவள் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்க என்னவோ ஏதோ என்று அவனுக்கு பதட்டமாகி விட

“ஏய் இப்போ என்னாச்சுன்னு சொல்ல போறியா இல்லையா டி பசங்க யாராவது பிரச்சனை பண்ணினாங்களா” என்று அவன் கத்த இளமதியின் உடல் ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது அங்கே சுற்றி இருந்த மாணவ மாணவிகள் இவர்களை பார்த்து கொண்டே செல்ல கருப்பன் அவளின் கைப்பிடித்து இழுத்து சென்று அவளை தன் காரின் உள்ளே அமர வைத்தான். 

 

கருப்பனுக்கு அவள் அழுவதை பார்த்து இன்னும் கோபம் வர “என்னாச்சுன்னு இப்போ சொல்ல போறியா இல்லையா நீ” என்று கத்த “எதுக்கு இப்படி மிரட்டுறிங்க” என்றாள் அழுகையுடனே. 

 

“என்ன டி ரொம்ப வாய் பேசுற” என்று அவன் கேட்க அவனின் டி என்ற உரிமையான அழைப்பே அவளுள் ஏதோ செய்தது. 

 

அவள் அழுகையை பொறுக்க முடியாமல் கருப்பன் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருக்க “நீ இப்படியே அழுதுட்டு தான் இருப்பன்னா வெளியே போய் அழு” என்க இளமதி கண்ணை துடைத்து கொண்டு கோபத்துடன் வெளியே செல்ல போக கருப்பன் அவளின் கைப்பிடித்தான் போகாதே என்பதை போல. 

 

இளமதி திரும்ப இருவரின் முகமும் முத்தமிடும் தூரத்தில் இருந்தது இருப்பினும் அவள் கண்கள் இன்னும் கலங்குவதை பார்த்தவன் “என்னாச்சு என்னை பார்த்தா பிடிக்கலையா” என்று கேட்க “பிடிக்காம தான் நீங்க இழுத்த இழுப்புக்கு எல்லாம் வந்துட்டு இருக்கேனா” என்றாள் கோபத்துடன். 

 

அவள் பேசி முடிக்க கருப்பன் அவளின் இதழை தன் கண்களால் வருடியவன் அடுத்த நொடி அவற்றை தன் இதழால் வருடினான் எச்சில் முத்தமிட ஆரம்பித்தான் தேனின் சுவையை விட அவள் இதழ் தரும் சுவை அத்தனை இனிப்பாக இருக்க அவளின் கீழ் உதட்டை கல்வி வாகாக முத்தமிட்டவனின் கைகள் மெல்ல அவளின் டிஷர்ட்டின் உள்ளே நுழைந்தது. 

 

 

 

 

3 thoughts on “என் இனிய ராட்சஷனே 12”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top