ATM Tamil Romantic Novels

1 மரபே பிழையாம்

1. மரபே பிழையாம்
ஆதித்யன்

தி இராயல் என்கிளேவ் குடியிருப்பின் பேஸ்மென்ட் .. முன்னிரவு நேரம்.. கார்களுக்கு இடையில் வெளிச்சமில்லா பகுதியில்.. ஒரு காதல் ஜோடி.

நம் நாயகி வசுமதியின் பன்னீர் ரோஜா உதடுகள் காதலன் சரத்தின் பல்பட்டு வெல்வெட் ரோஜா சிவப்பானது. வலிய ஆணின் இறுக்கி அணைத்தலில் எலும்பும் நொறுங்குமோ பயத்தில் வசு.

29,25 வயதுகளில் இருந்தாலும் இருவருக்கும் இது முதல் முத்தம் என்பதால் பெரும் பதட்டமிருந்தது. ஸ்வாசங்கள் தாறுமாறாய் எகிறி, தேகங்கள் தேடலுக்கு தயாராகி சூடானது.

கொரியன் சீரியல்கள் போல காதலன் முத்தத்தோடு முற்று புள்ளி வைப்பான் என்று அப்பாவி காதலி சுமி எண்ணியிருக்க, நம்பிக்கை தகர்ந்து போனது. மொத்தமும் பறிபோகும் நிலையிலிருந்தாள். இதழ் முத்தம் மோகக்கதவை திறக்கும் சாவி அல்லவா?! வெறும் படிப்பறிவு கொண்ட வசுவுக்கு தெரில.

சரத்தின் கரங்கள் மேலுக்கும் கீழுக்கும் அலைந்து திரிந்து பெண்மையின் பொக்கிஷங்களை பேராசையோடு களவாட பார்க்க தடுத்து தவித்துப்போனாள் வசு.

உண்மை நிலவரம் சரத் மட்டுமே வசுவிடம் அத்து மீறிக்கொண்டிருந்தான். ஆணின் மோகத்தின் வேகம் அது. விரல் தொட அஞ்சும் அவனின்
இன்றைய மீறலுக்கு காரணம் உண்டு.

இருவீட்டாரும் கலந்து கல்யாணம் பேசி மூன்று முடிச்சிட சுபநாள் குறித்த பின்னே தான் இந்த கலாப தேடல்.

இன்று இருவரும் டேபிள்அதற்கு ட்ரீட் கொண்டாடிவிட்டு உண்டு, அவளை அவளின் பிளாட்டில் விட வந்தவன் தான் காதலன் ஷியாம் சரத் புருஷனாய் மாறிவிட்டான். பயமின்றி உரிமை எடுத்தான்.

இந்த நார்மலான முன் விளையாட்டை ஏற்க பயந்து நிற்கும் வசுவுக்கும் காரணம் உண்டு.

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்று அனுதினமும் போதித்து வளர்க்கப்பட்ட பரம்பரை டீச்சர் குடும்பத்தில் பிறந்த பெண் அவள். கடவுள் பக்தியும் ஓவர் லோடட்.

இன்றைய நவீன யுகம் ஓடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது மனதளவில் இயலாமையால் ஆமை போல குறுக்கிக்கொண்ட மனத்தவள். வெளியில் அல்லி நிறத்தில் சிவந்து லவெண்டர் பூ வாசனையில் தெரிந்தாலும் அகதில் இது “ஒரு சின்ன தம்பி”

சரத் எனும் சோம்பேறி ஊடல்கள் வேண்டாமே?! என்று இத்தனை நாள் விரல் நகம் கூட தொடாது கண்ணியம் காக்க, நமது உலகின் காவியக்காதல் என்று மெச்சிக்கிடந்தவள். அந்த பசும் தோல் போர்த்திய புலியின் இன்றைய காதல் லீலையில் நொந்து போனாள்.

உதட்டோடு உதடு சேர்த்து “ஐ லவ் யூ பொண்டாட்டி” என்று மன்மதனாய் பார்த்த பொழுது வேறு பெண்ணென்றால் வாடா என் ரூமுக்கு என்று ஜலபுலஜங் என்று ஏதாச்சும் பஃண்ணியிருக்கும்.

ஆனால் இதான் லவ்வா?! ச்சீ ச்சீ தூ தூ வானது வசுவிற்கு. கொடுமையோ! கொடுமை!

ஐய! ச்சீ! இப்படித்தான் ஆண்கள் செய்வார்கள் என்றால் எனக்கு இந்த கல்யாணமே வேணாம்.. சரத்தின் எச்சிலின் கவுச்சியும் உடலின் வேர்வை வாசத்தோடு கூடிய சென்ட் மணமும் ஒவுட்டியது. இதற்கு மேல் என்றால் எனக்கு ஒப்பாதுபா.. அருவெறுத்தாள்.

அவளின் இனியன் இன்பன் அமுதன் அழகன் அன்பன் சரத் ஒரே நாளில் அந்நியனானான்.

கீழே சரத்தை எப்படியோ பல சாரிகள் கேட்டு தள்ளிவிட்டு தன்னறைக்கு வந்தவளுக்கு தலை சுற்றி போனது. கல்யாண வாழ்க்கை இப்படித்தான் போவுமா? காதல் என்றால் என்ன? இதானா? குழம்பி போனாள். யோசித்து யோசித்து தூக்கம் தூரப் போனது தான் மிச்சம் கன்னிக்கு.

அந்நேரம் செல்லில் கிளிங் என்ற சப்தம் வர.. சரத் தான்.

பலான வீடியோ ஒன்று அனுப்பி.. நாளைக்கு உன் பிளாட் வரவா? செய்திடலாமா? குறும்பாய் கேட்டு கண்ணடிக்கும் பொம்மை போட்டு அனுப்பி இருந்தான்.

இன்று வசுவை தொட்டு முத்தமிட்டு, மன்மத மேடுகளை உடையினிலேயே உருட்டிவிட்டு வந்தவனுக்கும் தூக்கம் வரல. வானம் நோக்கி நின்றதை சமாதானம் பண்ண முடில.. இந்த உணர்வு போதை தர பாதி கண் மூடி சுகத்தில் கிடந்தான்.

தேவதை அழகில் படிப்பில் பணத்தில் அந்தஸ்தில் இராயலான பெண் வசுமதி இவனுக்கே இவனுக்காய் என்று பெரியவர்கள் கொடுத்து விட்டால், தூக்கம் எப்படி வரும்?!!

பின் திரிந்து பேசி பழகிய நாட்கள் கொண்ட கடந்த காலம் போதும்..

வசுமதி மனைவியாக வந்துவிட்டால் தனி குடித்தனம் தான். மொத்த சம்பளத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு “என்னை அன்பா பார்த்துக்கோடி” காலில் விழுந்துட்டா வருங்காலம் சிறப்பு தான். நிகழ்காலமான இப்பொழுது
எப்படிலாம் அவளை அந்தரங்கமாய் ஆளலாம்?! இதுவரை கண்ட இன்ப கனவுகள் யாவையும் நிஜமாக்கிக்கொள்ள துடித்தான்.

நேத்து பிறந்ததே 5கேர்ள் பிரண்ட்ஸ் வச்சி சுத்தும் போது இவன் கொஞ்சம் சோம்பேறி தான். தோதான பெண் வசுமதி கண்டதும் காதல் கொண்டான். மெல்ல பேசி வசீகரித்தான். தன் குடும்பத்தில் நேரம் பார்த்து சொல்லி சொந்தம் கொண்ட அறிவாளி சரத்.

கிளுகிளு காணொளி லேசாய் பார்த்ததில் அரண்டு போனாள். அடப்பாவிகளா! வலிக்காதா?

ஒன்றும் புரில. இதான் லவ்வா?

உறவு கொள்வது தான் கல்யாணத்தின் பலனா? பேசணும்! பழகணும்! உருகணும்ல.. எனக்கு நீ! உனக்கு நான்! சொல்லி உச்சி முத்தம் தரணும் தானே! நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்?! நீ என் உயிரின் பாதி அல்லவா?!

பச்ச பிள்ளையாய் பனைமரத்துக்கு அடியில் நின்று பால் குடிக்க ஆசைப்பட்டாள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் கிறுக்கு. வசுமதிக்கு பிடிச்சிருக்கு இந்த கிறுக்கு..

காலம் பதில் தருமா?

கில்மா நினைவில் சுற்றும் சரத் தருவானா?!!

ஆமாம் காதல்ன்னா என்ன?!! நீங்களும் சொல்லுங்களேன்.. கேப்போம்..

2 thoughts on “1 மரபே பிழையாம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top