ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

18

 

 திலோவின் வாக்குமூலத்தை கேட்டு  ஊரே “அடப்பாவி இப்படி பண்ணிட்டியே…!” என காரி துப்பாத குறையாக  பரத்தையும் கிரிதரனையும் பார்த்தது… 

 

“குடிய கெடுத்திட்டுடியேடி பாவீ…!” என தையல்நாயகி  தாவி வந்து திலோவை அடிக்க பாய்ந்து விட்டார்…

 

“ படிச்சு படிச்சு சொன்னேனே வாயை திறக்காதடின்னு சொன்னேனே உன் கால்ல கூட விழுந்தேனே **** மவளே இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்திட்டியேடி… நீ நல்லா இருப்பியா நாசமா  போவ… உருப்புடாம போக…!!” என அவளை வாறி தூற்றுகிறேன் என்கிற பெயரில் அவரே உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார்… சில பேருக்கு நாக்குல சனி சில பேருக்கு வாக்குல சனி ஆனா இந்த அம்மாக்கு மட்டும் மண்டை பூரா சனிப் போல…

 

இதற்கு மேல் அங்கு விசாரிக்க என்ன இருக்கிறது அதுதான் தையல் நாயகியின் வாயாலே உண்மைகளை கொட்டி விட்டாரே…

 

“ஏன்டா உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட அறிவே கிடையாதாடா… என்ன காரியம்டா பண்ணி வச்சு இருக்கீங்க… அதுவே பாவம் அப்பனை இழந்துட்டு ஆறுதலுக்கு ஆத்தா கூட இல்லாம ஒத்தப் புள்ளையா வீட்டு வேலை செஞ்சு வயித்த கழுவி கிட்டு கிடக்கு அது கிட்ட போய் ச்சை இவனுங்கள எல்லாம் என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க…என பெற்றவர்களையும் மக்களையும் பார்த்து கேட்க…

 

வெட்கி தலைக் குனிந்து போனார் பஞ்சாட்சரம் பல மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் இன்று அவரது மகனால் அவமானப் பட்டு போனார்…

 

“ ஊருக்கே பாடம்  சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் அவர் புள்ள இப்படி  பொம்பள பொறுக்கியா இருக்கான்… இவர் வீட்டு பிள்ளையவே இவரால அடக்கி வைக்க முடியல இவர் எங்க இந்த ஊர் பிள்ளைங்களை திருத்துவார்… அதுவும் சரித்தான்…!”

 

 ஊரான்  வீட்டு பஞ்சாயத்துனா ஊருக்கு முன்ன போய் நின்னு வாய் கிழிய வியாக்கியானம் பேசுவாளே இந்த தையல் நாயகி… இப்ப அவள் புள்ள செஞ்ச காரியத்துக்கு எங்க கொண்டு போய் மூஞ்ச வைப்பாளாம்…!!”என ஆளாளுக்கு கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்பென  தங்கள் மனதில் உள்ள ஆதங்கம் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தனர்… 

 தான்  கெட்ட குரங்கு பத்தாதுன்னு வானத்தையும் சேர்த்து கெடுத்துச்சாம்… அந்த மாதிரி அந்த பரத் பையனையும் சேர்த்து கெடுத்து வச்சி இருக்கானே அந்த உருப்புடாத பையன்…என யாரையுமே பாரபட்சம் பார்க்காமல் அவல் இடித்து மென்று தின்றனர்… “இவனுங்களையெல்லாம் ஊருக்குள்ள விட்டா  பொம்பள புள்ளைய பெத்து வச்சு இருக்கவங்க எந்நேரமும் வைத்துல நெருப்பு கட்டிட்டு அலைய வேண்டியிருக்கும்… இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்… இல்லாட்டி ஊருக்குள்ள பொம்பள புள்ளைங்க நிம்மதியா நடமாட முடியாது…!!”என அவர்களுக்குள்ளவே கூடி பேசிக்கொள்ள… 

“ ஏப்பா இப்படி ஆளாளுக்கு நீங்களே பேசிக்கிறதுக்கு பஞ்சாயத்துக்கு எதுக்கு கூடி இருக்கு… கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா… அவனுங்க கிட்டயும் நாலு வார்த்தை கேட்டு வைப்போம்…!!” 

 

 “அட என்னங்க ஐயா நீங்க வேற இதுக்கு மேல அவனுங்க கிட்ட என்னத்த விசாரிக்க… இவனுங்க பண்ண  வேலைக்கு போலீஸ் கிட்ட புடிச்சு குடுத்துட்டு   அடுத்த வேலைய பார்க்க போவீங்களா… அத விட்டுட்டு வளவளன்னு இழுத்துகிட்டு இருக்கீங்க…!!” எனக் கூட்டத்திலிருந்து ஒரு அவசர குடுக்க அடிக்கடி அட்டன்டன்ஸ் போட…  

 

“அட செத்த சும்மா இரு வேலா… அவ்வளவு அவசரம்னா நீ போய் உன் ஜோலிய பாரு… இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ பாட்டுக்கு அவசரப்பட்டா எப்படி… செத்த பொறுமையா இருப்பா… எல்லாத்தையும் யோசிச்சு  பொறுமையா தான் முடிவு எடுக்கணும்… இன்னைக்கு அவசரப்பட்டு தீர்ப்ப சொல்லிட்டு  நாளைக்கு விசாரிக்கலைன்னு நம்ம மேல ஒரு சொல் வரக்கூடாது… ஒரு தலைபட்சமா தீர்ப்பு வழங்கிட்டாங்கன்னு… யாரும் பின்னாடி போய் பேசுற கூடாது பாரு… அதுக்கு தான் சொல்றேன் அவனுங்க கிட்டயும் ரெண்டு வார்த்தை கேட்டு விடுவோம்…!!”என தலைவர் சற்குணம் நடுநிலை தவறாமல் நிற்க…  அது அவரது பண்பட்ட மாண்பை எடுத்துரைத்தது…

 

“எப்பா தம்பிகளா… அந்தப் பிள்ளை சொன்னதெல்லாம் உண்மைனு ஒத்துக்குறீங்களா…?? இல்லையா…?? ஒத்துக்கிட்டீங்கனா உங்களுக்கு நல்லது இல்லன்னு மறுத்தீங்கன்னா நான் உங்கள போலீஸ் கிட்ட ஒப்படச்சிடுவேன்  மத்ததெல்லாம் அவங்க பாத்துக்குவாங்க… அவங்க விசாரிச்சாங்கன்னா எது உண்மை எது பொய்யின்னு தன்னால தெரிஞ்சிடும்… குற்றம் உறுதி ஆயிடுச்சின்னா சின்னப் பொண்ணை பலவந்தம்   பண்ணதற்காக உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து பத்து வருடத்திற்கு குறையாமல் ஜெயில் தண்டனை கிடைக்கும்…  எப்படி உங்களுக்கு வசதி…!!” எனத் தலைவர் உண்மையை போட்டு வாங்க நினைக்க…

 

 பரத் முகத்தில் பேய் அறைந்தது போல் பேரதிர்ச்சியில் நின்று இருக்க… கிரிதரனோ நீ என்ன வேணா பேசிக்கோ உன் வாய் உன் உருட்டு என்னும் ரேஞ்சில் அவன் நிற்க… இவனுங்கள என்னதான் பண்றது என்று அவருக்கும் தெரியவில்லை…

 

“என்ன பஞ்சா  ஆதி உங்களுக்கு நம்ம பஞ்சாயத்து கட்டுப்பாடு எல்லாம்நல்லா தெரியும் இல்ல… மத்த எந்த விஷயம் ஆனாலும் நம்ம பார்த்துக்கலாம் இது பொம்பள புள்ள சங்கதியா இருக்கு… போலீஸ்க்கு போனா  புள்ளைங்க வாழ்க்கை என்ன ஆகும்னு அவனுங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம் உங்களுக்கு தெரியும் இல்ல… எதுவும் ஆக கூடாதுன்னா அவனுங்களை வாயைத் திறந்து உண்மையை சொல்லச் சொல்லு எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசி முடிவு பண்ணிக்கலாம்…!!”என இளைவர்களிடம் பேசுவது வேஸ்ட் என்று ஆதியையும் பஞ்சாட்சரத்தையும் பார்த்து   பேச…

 

 “ஐயோ அப்படியெல்லாம் பண்ணி விடாதீங்க…!!” என பதறி துடித்தனர் பெற்ற மனங்கள்.. 

 

“ போலீஸ் கேசுனு போயிட்டீங்கன்னா புள்ளைங்க வாழ்க்கையும் வீணா போயிடும்… எங்க குடும்ப கவுரவம் நாசமா போய்டும்…தயவு செஞ்சு போலீஸ் கிட்ட வேணாம்…!!”என ஆதி கேசவ் எஞ்சிய மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள துடித்தார்…

 

“ ஏன்யா பெரிய மனுஷா உன் புள்ளை வாழ்க்கை பத்தி மட்டும் யோசிக்கிற அந்த பொண்ணு வாழ்க்கை என்னாவுரது அதை பத்தி கொஞ்சம் யோசிச்சியா…??” தலைவர் 

 

 “அதுக்கும் சேர்த்து தாங்க தலைவரே பேசுறேன் வாழ வேண்டிய பொண்ணு நாளைக்கு அதுக்கு ஒரு கல்யாணம் காட்சி  நடக்க வேண்டாமா… போலீசுக்கு போனா பாதிக்கப்பட போடுறது அதோட வாழ்க்கையும் தானுங்களே…!!” என்றார் ஆதி கேசவ் நயமாக…

 

 பஞ்சாட்சரத்துக்கு தன் மகனால் ஏற்பட்ட அவமானத்தால்…  அவரால் வாயைத் திறந்து பேச முடியவில்லை அதனால் அவருக்கும் சேர்த்து ஆதிக்கேசவ் வாதிட்டார்…

 

 “அப்போ சரி நீயே ஒரு பொண்ண பெத்த அப்பனா இருந்து  இந்த பசங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு சொல்லு…!!” என நேக்காக அவரிடமே தீர்ப்பை திருப்பி விட்டார்   சற்குணம்…

 

 “என்ன சொல்லுவார் ஆதி கேசவ்… அந்த பக்கம் இருப்பது அவரின் பையனாயிற்றே… அவனுக்கு எதிராக அவரால் தீர்ப்பை சொல்ல முடியுமா என்ன??”

 

 “ஐயா தீர்ப்ப சொல்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய மனுஷன் கிடையாதுங்க… நான் வேணும்னா அவனுங்க ரெண்டு பேரு கிட்டையும் பேசி அந்த பொண்ணு  கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்றேன்… மத்தபடி அந்த பொண்ணோட எல்லா செலவையும் நாங்களே ஏத்துக்கிறோம்… பையன் செஞ்ச தப்புக்கு தண்டனையா என்னால இதை மட்டும் தான் செய்ய முடியும்…!!” என ஆதிகேசவ் சாமர்த்தியமாக கத்தரித்துக்கொள்ள..

 

“அப்போ பையன் செஞ்ச தப்புக்கு அந்த பொண்ணு கிட்ட காசு கொடுத்து சரி பண்ணிடலாம்னு நினைக்கிற… அப்படித்தானே…?? “சற்குணம் ஒரு மாதிரியாக கேக்க…

 

“ மன்னிக்கணும் என் பையன் தப்பு பண்ணவன் தான் ஆனா அந்த பொண்ணு கிட்ட தப்பு பண்ணது என் பையன் தான்னு உறுதியாகவே இல்லையே… சம்பந்தப்பட்ட அந்த பொண்ணே கூட இருந்தவன கையை காட்டுது…அப்புறம் எப்படி என் பிள்ளைய குற்றவாளியாக சொல்லலாம் …!!”என ஆதி வாதம் பிடிக்க…

 

 “பாயிண்டா தான் பேசுற ஆதி கேசவா… அது சின்ன பொண்ணு பயத்துல பேசுதுனு வை… நாளைக்கே போலீஸ் கேஸ் ஆகி அவங்க வந்து உன் பையனும் சேர்ந்து தான் தப்பு பண்ணான்னு சொன்னா  என்ன பண்ணுவ…!!” என கிடுக்கு பிடியாக கேள்வி இருக்க சற்றே தயங்கினார் ஆதி கேசவன்… 

 

 “சொல்லுப்பா ஆதி கேசவா என்ன பண்ணுவ…!!” ஆதியே விட்டாலும் சற்குணம் விடுவதாக இல்லை…

 

“என்னையா விட்டா  நீங்களே அப்படி சொல்ல வைப்பிங்க போல… சரி என் பையன் தப்பு பண்ணிட்டான் இப்ப நான் அதுக்கு என்னதான் பண்ணனும் சொல்ல வரீங்க சொல்லுங்க…  இவன பெத்த பாவத்துக்கு அதையும் செஞ்சி தொலைக்கிறேன்…!!” என ஆதி கேசவ் வேறு வழியில்லாமல் தன் மகனுக்காக இறங்கி வந்தார்…

 

“ உன்  பையன் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா அந்த பொண்ணோட எல்லா செலவும் ஏத்துக்கிறேன் சொன்னேன்ல அதுக்கு பதிலா அந்த பொண்ணு கழுத்துல உன் பையன விட்டு தாலி கட்டனும்னு சொன்னா என்ன பண்ணுவ…!!”என சற்குணம் மடக்கி பிடித்து விட…

 

“என்னது அந்த பொண்ணு கழுத்துல என் பையன் தாலி கட்டணுமா… என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல ஒரு வேலைக்கார பொண்ணை போய் என் பையனுக்கு கட்டணுமா…!!” என ஆதி கேசவ் அதிர்ந்து சண்டைக்கு இறங்கும் வேளையிலே…

 

“நான் தான் செஞ்சேன்… !!!என கணீர் குரல் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்க்க…

 

 குரல் வந்த திசையை திரும்பிப் பார்க்க கிரிதரன் இரண்டடி  முன்னால் வந்து… “நான் தான் தப்பு செஞ்சேன்… எல்லாத்துக்குமே நான் மட்டும் தான் காரணம்…இப்போ அதுக்கு என்ன பண்ணனும்…!!” என பிசுறு தட்டாமல் சொன்னவன் குரலில் குற்ற உணர்வோ,  தடுமாற்றமோ சிறிதும் இல்லை அவ்வளவு தெளிவாக சொன்னான்…

 

 அவன் அப்படி சொன்னது தான் தாமதம் பஞ்சாட்சரம் அவனை அடிக்க பாய்ந்து விட்டார்…

 

 சுற்றி யார் தடுத்தும் மசியாமல்… மகனை அடித்து விலாசி விட்டார்… “நாயே…!! நாயே!! ஏன்டா இப்படி பண்ண ஏன் பண்ண… இப்படி திமிரா பேசுவியா செய்யுறத செஞ்சுட்டு திமிரா வேற பேசுற பொறுக்கி உன்னை எல்லாம் கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் தீராதுடா…!!” என்று புரட்டி எடுக்க ஏற்கனவே ஊரார் இடம் அடி வாங்கியவன் பஞ்சாட்சரத்தின் கையால் சருகாகிய  பூமாலை ஆனான்… உரித்து எடுத்து விட்டார்… உடல் முழுக்க ரத்தம் கொட்ட குத்துயிராக கிடந்தவனை காப்பாற்றி மீட்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது அக்கூட்டத்திற்கு…

 

“ ஏன் நிறுத்திட்ட வாத்தி அடி  இன்னும் நல்லா அடி… விடுங்க என்னை… நான் இப்படி ஆனதுக்கு காரணமே நீ தான்யா… கண்டிச்சு வளக்குறேன்னு என்னை அடிச்சி அடிச்சி வளர்த்தியே அது தப்புன்னு புரிய வைக்க உன்னை எங்க கொண்டு வந்து நிக்க வச்சேன் பார்த்தியா… நீர் என்ன பெரிய மனுஷன்…அங்க பாரு பெத்த புள்ள  தப்பே செஞ்சாலும் காப்பாத்த நினைக்கிறார் அவர் அப்பனா?? நீ அப்பனா??? என்ன கோவம் வருதா??? என்னையும் இப்படி தான மத்தவங்க கூட சேர்த்து வச்சி  மட்டம் தட்டின அப்போ எனக்கு எப்படி இருந்து இருக்கும்… என்னை எப்படி எல்லாம் அடுத்தவங்க முன்னாடி அவமானப் படுத்தின… இன்னைக்கு உன்ன மத்தவங்க அவமானப் படுத்துவது எப்படி இருக்கு… என்ன எரியுதா நெஞ்சு எல்லாம் திகு திகுன்னு எரியுதா… எனக்குள் அப்போ அப்படி தான இருந்து இருக்கும்…  உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா… முறைக்காத நீ பெத்த அப்பா மாதிரி நடந்துக்கிட்டா நான் ஏன்யா இப்படி ஆக போறேன்… உருப்பட மாட்டேன்… வெளங்க மாட்டேன்… தேற மாட்டேன்… சொல்லி சொல்லியே  வளர்த்த இல்லை அதான் உன் சொல்ல காப்பாத்தணும்னு   இப்படி நிக்கிறேன்… என்ன நீ சொன்ன மாதிரியே இருக்கேனா… அப்பா சொல் தட்டாத பிள்ளை இல்லைனு ஒத்துக்கிறியா… இதோ இன்னைக்கு என்கூட சேர்ந்து இவன் இப்படி  நிக்கிறான்னா அதுக்கும் முழுக்க முழுக்க நீ மட்டும் தான்யா காரணம்… என்ன பாக்குற புரியலையா… இவன் கூட ஒப்பிட்டு வச்சு தானே…  பரத் மாதிரி நடந்துக்கோ பரத் மாதிரி படி பரத் மாதிரி  அது  செய் இது செய்ன்னு சொன்ன… அவன் செய்யுறது எல்லாம் எனக்கு வராது   அதான் அவனை என்னை மாதிரி மாத்திட்டேன் புரியல… அவன் இப்படி கெட்டு  நிக்க  இல்லை  உன் பாஷைல  சொல்லனும்னா  உருப்படாதவனா ஆக்கினதே  உன்னை பழி வாங்க தான்… அவன் கூடவே இருந்து உருப்பட விடாம பார்த்துகிட்டேன்… அது மட்டும் இல்ல அவனுக்கு எல்லாம் கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொடுத்தது நான் தான்… அன்னைக்கு அந்த *** பொண்ண கூட்டிட்டு வந்ததும்  நான் தான்…இவளை கெடுக்க பார்த்தது நான்தான்…!!” என்றான் குரூரமாக உதடு கிழிந்து வாயில் ஒழுகிய ரத்ததை துப்பியப் படியே…

 

 வாயடைத்து போய்விட்டார் பஞ்சாட்சரம்… அவரை அந்த நிலைமையில் வைத்து பார்த்ததில் கிரிதரனுக்கு பரம திருப்தி… அவரை இந்த நிலைமையில் வைக்க தானே அவனின் வாழ் நாளின் இலட்சியம் வெறி எல்லாம்…அது ஈடேறிய சந்தோஷத்தில் அவன் இருக்க…

 

துரோகி என்று எட்டி உதைத்து இருந்தான் பரத்… அதுவரை தன் நண்பனை காட்டிக் கொடுக்கக் கூடாது விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அத்தனை அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்தவனால்…  உயிர் நண்பன் என்று நினைத்தவனால் தனக்கு துரோகம் இழைக்க பட்டு விட்டதை இன்னும் நம்ப முடியவில்லை அவனால்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top